Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 2 மின்னியல் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 2 மின்னியல்

6th Science Guide மின்னியல் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்
அ) மின் விசிறி
ஆ) சூரிய மின்கலன்
இ) மின்கலன்
ஈ) தொலைக்காட்சி
விடை:
இ) மின்கலன்

Question 2.
மின்சாரம் தயாரிக்கப்படும் இடம் _____
அ) மின்மாற்றி
ஆ) மின்உற்பத்தி நிலையம்
இ) மின்சாரக்கம்பி
ஈ) தொலைக்காட்சி
விடை:
ஆ) மின்உற்பத்தி நிலையம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Question 3.
மின்கல அடுக்கின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு.
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 20
விடை:
அ) Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 21

Question 4.
கீழ்க்கண்ட மின்சுற்றுகளில் எதில் மின்விளக்கு ஒளிரும்?
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 12
விடை:
ஈ) Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 13

Question 5.
கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?
அ) வெள்ளி
ஆ) மரம்
இ) அழிப்பான்
ஈ) நெகிழி
விடை:
அ) வெள்ளி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
____ பொருள்கள் தன் வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றன.
விடை:
மின்கடத்தி

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Question 2.
ஒரு மூடிய மின்சுற்றினுள் பாயும் மின்சாரம் ____ எனப்படும்.
விடை:
மின்னோட்டம்

Question 3.
_____ என்பது மின்சுற்றை திறக்க அல்லது மூட உதவும் சாதனமாகும்.
விடை:
தாவி

Question 4.
மின்கலனின் குறியீட்டில் பெரிய செங்குத்து கோடு _____ முனையைக் குறிக்கும் _____
விடை:
நேர்

Question 5.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு ஆகும் _____
விடை:
மின்கல அடுக்கு

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
பக்க இணைப்பு மின்சுற்றில், ஒன்றுக்கு மேற்பட்ட மின்னோட்டப் பாதைகள் உண்டு.
விடை:
சரி.

Question 2.
இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் எதிர்முனையை மற்றொரு மின் கலத்தின் எதிர்முனையோடு இணைக்க வேண்டும்.
விடை:
தவறு. – இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் நேர்முனையை மற்றொரு மின் கலத்தின் எதிர்முனையோடு இணைக்க வேண்டும்.

Question 3.
சாவி என்பது மின்சுற்றினைத் திறக்க அல்லது மூடப் பயன்படும் மின்சாதனம் ஆகும்.
விடை:
சரி.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Question 4.
தூய நீர் என்பது ஒரு நற்கடத்தியாகும்.
விடை:
தவறு – தூய நீர் என்பது ஒரு மின்கடத்தாப்பொருள் ஆகும்.

Question 5.
துணை மின்கலன்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
விடை:
தவறு – துணை மின்கலன்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.

IV. பொருத்துக. 

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 50
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 51

V. பின்வரும் சொற்களைக் கொண்டு ஒரு முழுமையான வாக்கியத்தை உருவாக்குக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 55
விடை:
வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் மின்கலன் ஆகும்.

VI. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் மின்விளக்கு A மட்டும் ஒளிர வேண்டும் எனில் எந்தெந்த சாவி(கள்) மூடப்பட வேண்டும்.
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 56
விடை:
மின்விளக்கு A மட்டும் ஒளிர K1 மற்றும் K2 சாவிகள் மட்டும் இணைக்கப்பட வேண்டும்.

Question 2.
கூற்று (A) : நமது உடலானது மின் அதிர்வை வெகு எளிதில் ஏற்றுக்கொள்கிறது.
காரணம் (R) : மனித உடலானது ஒரு நல்ல மின்கடத்தியாகும்.
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
ஆ) A சரி, ஆனால் R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
இ) A-தவறு ஆனால் R சரி.
ஈ) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.

Question 3.
எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்னோட்டத்தை உருவாக்க முடியுமா?
விடை:
முடியும். எலுமிச்சம் பழத்தை மின்பகுளியாகவும் தாமிரக்கம்பி மற்றும் குண்டூசியை எலுமிச்சை பழத்திற்குள் செலுத்தி நேர் மற்றும் எதிர்மின்வாய்களாகக் கொண்டு மின்னோட்டத்தை உருவாக்க முடியும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Question 4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து மின்கடத்தியைக் கண்டுபிடித்து எழுதுக. இரும்புச் சங்கிலி ஒரு மின்கடத்தி ஆகும்.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 25

Question 5.
டார்ச் விளக்கில் எவ்வகையான மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது?
விடை:
டார்ச் விளக்கில் எளிய மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது.

Question 6.
பொருந்தாததை வட்டமிடுக. அதற்கான காரணம் தருக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 40
மின்னியற்றி மின் மூலமாகும். மற்றவை மின்சுற்றின் பாகங்களாகும்.

VII. குறுகிய விடையளி :

Question 1.
தொடரிணைப்பு ஒன்றிற்கு மின்சுற்றுப் படம் வரையவும்.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 44

Question 2.
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின் அதிர்வு ஏற்படுமா? விளக்கம் தருக.
விடை:
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின் அதிர்வு ஏற்படாது. ஏனெனில் கடிகார மின்கலனின் மின்னழுத்தம் மிக மிகக் குறைவு. (1.5V)

Question 3.
வெள்ளி உலோகம் மிகச் சிறந்த மின் கடத்தியாகும். ஆனால் அது மின் கம்பி உருவாக்கப் பயன்படுத்தப்படுவதில்லை ? ஏன்?
விடை:
வெள்ளி விலை உயர்ந்த உலோகம். எனவே பொருளாதார ரீதியாக மின்கம்பி உருவாக்க பயன்படுத்துவதில்லை.

VIII. விரிவான விடையளி:

Question 1.
மின்மூலங்கள் என்றால் என்ன? இந்தியாவில் உள்ள பல்வேறு மின் நிலையங்கள் பற்றி விளக்குக.
விடை:
மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் மின்மூலங்கள் எனப்படும். அனல் மின் நிலையங்கள் :

  1. அனல் மின்நிலையங்களில் நிலக்கரி, டீசல் (அ) வாயுக்களை எரித்து உருவாக்கப்படும் நீராவியால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
  2. இங்கு வெப்ப ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
    நீர் மின் நிலையங்கள் ;

    1. அணைக்கட்டில் பாயும் நீரால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
    2. இங்கு இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

அறிவியல் அணுமின் நிலையம் :

  1. அணுக்கரு ஆற்றலைக் கொண்டு நீர் கொதிக்க வைக்கப்பட்டு டர்பைன் இயக்கப்படுகிறது.
  2. இங்கு அணுக்கரு ஆற்றல் இயக்க ஆற்றலாக பின் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது. காற்றாலை :
    1. காற்றின் ஆற்றலால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
    2. இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Question 2.
மின்சுற்றுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 50.2

Question 3.
மின்கடத்திகள் மற்றும் அரிதிற்கடத்திகள் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
மின்கடத்திகள் :

  1. மின்னூட்டங்களை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பொருட்கள் மின்கடத்திகள் எனப்படும்.
  2. (எ.கா.) உலோகங்கள் (தாமிரம், இரும்பு) மாசுப்பட்ட நீர் மற்றும் புவி

போன்றவை. அரிதிற் கடத்திகள் (மின்கடத்தாப் பொருள்கள்):

  1. மின்னூட்டங்களை தன் வழியே செல்ல அனுமதிக்காத பொருட்கள் அரிதிற்கடத்திகள் (அ) மின்கடத்தாப் பொருட்கள் எனப்படும்.
  2. (எ.கா.) பிளாஸ்டிக், கண்ணாடி, மரம், ரப்பர், பீங்கான், எபோனைட் போன்றவை.

IX. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி

Question 1.
ராகுல் ஒரு மின்சுற்றை அமைக்க விரும்பினான். அவனிடம் ஒரு மின்விளக்கு, குண்டூசி, இரு இணைப்புக் கம்பிகள் மற்றும் ஒரு தாமிரக் கம்பி ஆகியவை மட்டுமே உள்ளன. அவனிடம் மின்கலனோ , மின்கல அடுக்கோ இல்லை. எனினும் திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. எலுமிச்சம்பழத்தைப் பயன்படுத்தி மின்கல அடுக்கினை உருவாக்கினால் என்ன என்று ஒரு யோசனை தோன்றியது. அந்த மின்விளக்கு ஒளிருமா?
விடை:

  1. மின்விளக்கு ஒளிரும்.
  2. எலுமிச்சம் பழத்தின் ஒரு புறத்தில் தாமிரக் கம்பியையும் மற்றொரு புறம் குண்டூசியை செருக வேண்டும்.
  3. இரண்டையும் இணைப்புக்கம்பியுடன் இணைத்து மின் விளக் கோடு இணைத்தால் மின்சாரம் உருவாகி மின்விளக்கு எரியும்.
  4. எலுமிச்சை – மின்பகுளியாகவும், தாமிரம் – நேர்மின்வாயாகவும், குண்டூசி – எதிர்மின்வாயாகவும் செயல்பட்டு மின்சாரம் உருவாகி மின்விளக்கு எரியும்.
    Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 55.2

X. கீழ்க்காணும் கட்டத்திலிருந்து மின்கடத்திகள் மற்றும் அரிதிற் கடத்திகளை கண்டறிந்து அட்டவணையில் நிரப்புக.
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 56.2
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 56.3

6th Science Guide மின்னியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
இங்கு வெப்ப ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
அ) நீர்மின் நிலையம்
ஆ) அணுமின்நிலையம்
இ) அனல்மின் நிலையம்
ஈ) காற்றாலை
விடை:
இ) அனல்மின்நிலையம்

Question 2.
மின்காந்தங்களுக்கிடையே கம்பிச்சுருள் சுழல்வதால் ஏற்படுகிறது.
அ) வெப்பம்
ஆ) மின்காந்தத் தூண்டல்
இ) இயக்க ஆற்றல்
ஈ) ஏதுமில்லை
விடை:
ஆ) மின்காந்தத்தூண்டல்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Question 3.
கீழ்க்கண்டவைகளில் எதில் துணை மின்கலன்கள் பயன்படுகிறது?
அ) கைக்கடிகாரம்
ஆ) ரோபோ பொம்மை
இ) மடிக்கணினி
ஈ) இவை ஏதுமில்லை
விடை:
இ) மடிக்கணினி

Question 4.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்று முறை ____
அ) பக்க இணைப்பு
ஆ) தொடரிணைப்பு
இ) எளிய மின்சுற்று
ஈ) ஏதுமில்லை
விடை:
அ) பக்க இணைப்பு

Question 5.
மின்சாரத்தை உருவாக்கும் மீன் வகை _____
அ) கெண்டை
ஆ) ஈல்
இ) கட்லா
ஈ) சாலமன் மீன்
விடை:
ஆ) ஈல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் _______ எனப்படும்
விடை:
மின்மூலங்கள்

Question 2.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை அதிகமுள்ள இடம் _____ ஆகும்.
விடை:
ஆரல்வாய்மொழி

Question 3.
மின்நிலையங்களில் அதிகக்காலம் இயங்கக்கூடிய மற்றும் சிக்கனமானவை _____
விடை:
நீர்மின் நிலையங்கள்

Question 4.
நேர் மற்றும் எதிர் அயனிகளைத் தரக்கூடிய வேதிக்கரைசல் ____ ஆகும்.
விடை:
மின்பகுளி

Question 5.
மின்விளக்கைக் கண்டுபிடித்தவர் ______
விடை:
தாமஸ் ஆல்வா எடிசன்

III. கூற்றும் காரணமும்.

Question 1.
கூற்று (A) : மின்சாரம் தொடர்பான சோதனைகளை டார்ச் விளக்கு (அ) வானொலியில் பயன்படும் மின்கலன்களைக் கொண்டே செய்ய வேண்டும்.
காரணம்(R): வீட்டில் (அ) பள்ளியில் உள்ள மின்சாரத்தில் மின்னழுத்தம் அதிகம் மற்றும் ஆபத்தானது
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
ஆ) A சரி ஆனால் R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
இ) A தவறு ஆனால் R சரி.
ஈ) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.

Question 2.
கூற்று (A) : முதன்மை மின்கலன்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது. காரணம்(R): வாகனங்களில் உள்ள மின்கலன் முதன்மை மின்கலன் ஆகும்.
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான உதாரணம்.
ஆ) A சரி ஆனால் R தவறு.
இ) A மற்றும் R சரி, ஆனால் R என்பது A க்கு உதாரணம் அல்ல.
ஈ) A தவறு ஆனால் R சரி.
விடை:
ஆ) A சரி ஆனால் R தவறு

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

IV. மிகக்குறுகிய விடையளி.

Question 1.
ஒரு மின்கல அடுக்கை உருவாக்க எத்தனை மின்கலன்கள் தேவை?
விடை:

  1. மின்கலன் உருவாக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்கள் தேவை.
  2. மின்கல அடுக்கு பல மின்கலன்களின் தொகுப்பாகும்.

Question 2.
ஒரு மின்சுற்றை உருவாக்க தேவையானவை யாவை?
விடை:
ஒரு சாவி, இணைப்புக்கம்பி, மின்கலன் மற்றும் மின்விளக்கு ஆகியவை தேவை.

Question 3.
ஒரு டார்ச் விளக்கினுள் மின்கலன்களை எவ்வாறு இணைத்தால் மின்விளக்கு எரியும்?
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 60
ஒரு மின்கலனின் நேர்முனை மற்றதன் எதிர்முனையில் படுமாறு இணைக்க வேண்டும். அப்போது தான் மின்விளக்கு எரியும்.

Question 4.
மின்சுற்றின் மூன்று வகைகளை எழுதுக.
விடை:

  1. எளிய மின்சுற்று
  2. தொடரிணைப்பு
  3. பக்க இணைப்பு

Question 5.
மின்னோட்டம் என்றால் என்ன?
விடை:
கடத்தியில் மின்னூட்டங்கள் பாயும் வீதம் மின்னோட்டம் எனப்படும்.

V. விரிவான விடையளி.

Question 1.
மின்கலன் என்றால் என்ன? மின்கலனின் வகைகள் யாவை?
விடை:

  1. மின்கலன் என்பது வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் ஆகும்.
  2. மின்கலன் இருவகைப்படும் அவை முதன்மை மின்கலன்கள் மற்றும் துணை மின்கலன்கள் ஆகும்.

முதன்மை மின்கலன்கள் :

  1. இவற்றை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது.
  2. ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
  3. சிறிய உருவளவில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
  4. எ.கா. கைக்கடிகாரம், சுவர்க்கடிகாரம், ரோபோ பொம்மைகளில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள்

துணை மின்கலன்கள் :

  1. இவற்றை பல முறை மின்னேற்றம் செய்து மீண்டும் மீண்டும்பயன்படுத்தலாம்.
  2. இதன் உருவளவு பயன்பாட்டை பொருத்து சிறிதாக (அ) பெரிதாக இருக்கும்.
  3. எ.கா. கைப்பேசி, மடிக்கணினி, அவசர கால விளக்கு மற்றும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள்.

Question 2.
ஒருவருக்கு மின் அதிர்ச்சி ஏற்பட்டால் அவரைக் காப்பாற்ற செய்ய வேண்டியவை யாவை?
விடை:

  1. மின்னதிர்வு ஏற்படக் காரணமான மின்இணைப்பை அணைக்கவேண்டும்.
  2. சாவியிலிருந்து இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
  3. மின்கடத்தாப் பொருளைக் கொண்டு மின்கம்பியின் தொடர்பில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும்.
  4. முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 90

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 1 வெப்பம் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 1 வெப்பம்

6th Science Guide வெப்பம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்
அ) வேகமாக நகரத் தொடங்கும்
ஆ) ஆற்றலை இழக்கும்
இ) கடினமாக மாறும்
ஈ) லேசாக மாறும்
விடை:
அ) வேகமாக நகரத் தொடங்கும்

Question 2.
வெப்பத்தின் அலகு …………
அ) நியூட்டன்
ஆ) ஜில்
இ) வோல்ட்
ஈ) செல்சியஸ்
விடை:
ஆ) ஜூல்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 3.
30° C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 50° C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை.
அ) 80° C
ஆ) 50° Cக்கு மேல் 80Cக்குள்
இ) 20° C
ஈ) ஏறக்குறைய 40° C
விடை:
ஈ) ஏறக்குறைய 40°

Question 4.
50° C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக்குண்டினை, 50° C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும் பொழுது, வெப்பமானது.
அ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்
ஆ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அ) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.
இ) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்
ஈ) இரண்டின் வெப்பநிலையும் உயரும்
விடை:
ஆ). இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அ) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்கோ மாறாது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
வெப்பம் பொருளிலிருந்து ……. பொருளுக்கு பரவும்.
விடை:
வெப்பநிலை
அதிகமான, குறைவான

Question 2.
பொருளின் சூடான நிலையானது ……… கொண்டு கணக்கிடப்படுகிறது.
விடை:
வெப்பநிலை

Question 3.
வெப்பநிலையின் SI அலகு ………..
விடை:
கெல்வின்

Question 4.
வெப்பப்படுத்தும் பொழுது திடப்பொருள் ………… மற்றும் குளிர்விக்கும் பொழுது ………..
விடை:
விரிவடையும், சுருங்கும்

Question 5.
இரண்டு பொருட்களுக்குக்கிடையே வெப்பப்பரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும் ………. நிலையில் உள்ளன.
விடை:
வெப்பச் சமநிலையில்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

III. சரியா (அ) தவறா என கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
வெப்பம் என்பது ஒருவகை ஆற்றல். இது வெப்பநிலை அதிகமான பொருளிலிருந்து வெப்பநிலை குறைவான பொருளிற்கு பரவும்.
விடை:
சரி.

Question 2.
நீரிலிருந்து வெப்பம் வெளியேறும் பொழுது, நீராவி உருவாகும். தவறு.
சரியான விடை : வெப்பம் உட்கவரும் போது நீராவி உருவாகும்.
விடை:
தவறு.

Question 3.
வெப்பவிரிவு என்பது. பொதுவாக தீங்கானது.
சரியான விடை : வெப்ப விரிவு என்பது பொதுவாக தீங்கானது அல்ல.
விடை:
தவறு.

Question 4.
போரோசிலிகேட் கண்ணாடியானது வெப்பப்படுத்தும்பொழுது அதிகம் விரிவடையாது.
விடை:
சரி.

Question 5.
வெப்பம் மற்றும் வெப்பநிலை இரண்டும் ஒரே அலகினைப் பெற்றுள்ளன.
சரியான விடை : இரண்டும் வெவ்வேறு அலகினைப் பெற்றுள்ளன.
விடை:
தவறு.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

IV. கீழ்க்கண்டவற்றிற்கு காரணம் தருக.

Question 1.
கொதிக்கவைத்த நீரை சாதாரண கண்ணாடி முகவையில் ஊற்றும் பொழுது, விரிசல் ஏற்படுகிறது. ஆனால் போரோசில் கண்ணாடி முகவையில் ஊற்றும் பொழுது விரிசல் ஏற்படுவதில்லை.
விடை:
போரோசில் கண்ணாடி வெப்பத்திற்கு மிகக் குறைவாகவே விரிவடையும். எனவே விரிசல் ஏற்படுவதில்லை.

Question 2.
மின்கம்பங்களில் உள்ள மின்சாரக்கம்பியானது கோடைக்காலங்களில் தொய்வாகவும், குளிர்காலங்களில் நேராகவும் இருக்கும்.
விடை:
உலோகங்கள் (மின்சாரக்கம்பி) கோடைக்காலத்தில் வெப்பத்தால் விரிவடையும் எனவே தொய்வாகவும், குளிர்காலத்தில் சுருங்குகின்றன எனவே நேராகவும் இருக்கும்.

Question 3.
இரு உலோகத் தகடுகளைப் பிணைப்பதற்காக அறையப்படும் முன் கடையாணி வெப்பப்படுத்தப்படுகிறது.
விடை:

  • கடையாணி வெப்பப்படுத்தப்படுவதால் விரிவடைகிறது.
  • ஆணியின் அடிப்பக்கத்தை வெப்பமாக உள்ள போது சுத்தியலால் அடித்து மறுபுறமும் புதிய தலைப்பகுதி உருவாக்கப்படும்.
  • குளிரும் போது சுருங்குவதால் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளும்.

V. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 30

VI. ஒப்புமை தருக.

Question 1.
வெப்பம் : ஜில் :: வெப்பநிலை : ______
விடை:
கெல்வின்

Question 2.
பனிக்கட்டி : 0° C :: கொதி நீர் : _____
விடை:
100° C

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 3.
மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றல் : வெப்பம் :: சராசரி இயக்க ஆற்றல் : _____
விடை:
வெப்பநிலை

VII. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
வீட்டில் எந்தெந்த மின்சார சாதனங்களிலிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம் எனப் பட்டியலிடுக.
விடை:

  1. மின் இஸ்திரிப் பெட்டி
  2. மின் வெப்பக்கலன்
  3. மின் நீர் சூடேற்றி

Question 2.
வெப்ப நிலை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருள் எவ்வளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதை அளவிடும் அளவு வெப்பநிலை எனப்படும்.

Question 3.
வெப்பவிரிவு என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது அது விரிவடைவது அப்பொருளின் வெப்பவிரிவு எனப்படும்.

Question 4.
வெப்பச்சமநிலை பற்றி நீ அறிந்ததைக் கூறுக.
விடை:

  1. வெப்பத் தொடர்பில் உள்ள இரு பொருள்களின் வெப்பநிலை சமமாக இருந்தால் அவை வெப்பச்சமநிலையில் உள்ளன எனலாம்.
  2. வெப்பச்சமநிலையில் ஒன்றின் வெப்பநிலை மற்றொன்றை பாதிப்பதில்லை.

VIII. குறுகிய விடையளி:

Question 1.
வெப்பத்தினால் திடப்பொருட்களின் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை விவரி.
விடை:

  1. வெப்பத்தினால் திடப்பொருட்களின் மூலக்கூறுகளில் இடைவெளி அதிகரிக்கிறது.
  2. மூலக்கூறுகளின் அதிர்வும் இயக்கமும் அதிகரிக்கின்றன.
  3. வெப்பநிலை அதிகரிக்கும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 2.
வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 85

IX. விரிவான விடையளி:

Question 1.
வெப்பவிரிவைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
விடை:
ஒரு பொருள் வெப்பப்படுத்தப்படும் போது அது விரிவடைகிறது. இது வெப்ப விரிவு எனப்படும்.
உதாரணங்கள் :

  1. இரயில் தண்டவாளம் அமைக்கும் போது அதன் இரு இரும்புப் பாளங்களுக்கிடையே இடைவெளி விடப்படுகிறது. காரணம் வெயில் காலத்தில் அது விரிவடையும்.
  2. மேம்பாலங்களில் கற்காரைப் பாளங்களுக்கிடையே இடைவெளி விடப்படுகிறது. ஏனெனில் கோடைக்காலத்தில் வெப்பத்தால் அவை விரிவடையும்.
  3. மின்கம்பங்களுக்கிடையே மின்சாரக்கம்பி கோடைக்காலங் களில் தொய்வாகவும், குளிர்காலங்களில் நேராகவும் இருக்கும். காரணம் வெப்பம் அதிகம் உள்ள போது உலோகங்கள் விரிவடைகின்றன. குளிர்காலங்களில் சுருங்குகின்றன.
  4. இரு உலோகத் தகடுகளை இணைக்க சூடான கடையாணியை துளைகளில் பொருத்தி சுத்தியலால் அடித்து புதிய தலைப்பகுதி உருவாக்கப்படும். கடையாணி குளிரும் போது சுருங்குவதால் தகடுகளை இறுக்கமாக பிடித்துக் கொள்கிறது.

X. உயர் சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி

Question 1.
குளிர்கால இரவில் நீ உனது படுக்கை அறையில் படுத்துள்ளாய். அப்போது அறையின் ஜன்னல் கதவு தற்செயலாக திறந்துவிட்டால் குளிரினால் நீ உறக்கம் கலைந்து சிரமமாக உணர்கிறாய். இதற்கு என்ன காரணம்? அறையில் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படுவதால் அல்லது வெளியே உள்ள குளிர்ச்சி அறைக் குள்ளே கடத்தப்படுவதால் இரண்டில் உனது விடைக்கான காரணத்தினைத் தருக.
விடை:

  1. அறையினுள் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படுவதால் குளிராக உணர்வேன்.
  2. குளிர்கால இரவில் வெளியே காற்றின் வெப்பநிலை குறைவு. அறையினுள் அதிகம்.
  3. ஜன்னல் திறக்கும் போது வெப்பமானது அதிக வெப்ப நிலையுள்ள பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள பொருளுக்கு கடத்தப்படும்.
  4. அறையினுள் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படும். எனவே அறையினுள் வெப்பநிலை குறைந்து நமக்கு குளிர் ஏற்படும்.

Question 2.
ஒருவேளை நமது உடல் வெப்பநிலை தனது இயல்பான வெப்ப நிலையை விடக் குறைந்து விடுவதாகக் கருதுவோம். அப்பொழுது நமது உடலானது சுற்றுச்சூழலை முன்பிருந்ததை விட எவ்வாறு உணரும்?
விடை:

  1. நமது உடல் சுற்றுச்சூழலை முன்பிருந்ததை விட வெப்பமாக உணரும்.
  2. ஏனெனில் வெப்பமானது அதிக வெப்பநிலை உள்ள சுற்றுச் சூழலிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள நம் உடலுக்குச் செல்லும். ஆகவே நாம் வெப்பமாக உணர்வோம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 3.
துளையுள்ள வட்டத்தகட்டினை வெப்பப்படுத்தும் பொழுது, தகட்டின் துளையின் விட்டத்தில் என்ன மாற்றம் எதிர்பார்க்கிறாய்? வெப்பத்தின் விளைவால் துகள்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்க.
விடை:
தகடானது வெப்பத்தால் விரிவடையும். எனவே தகட்டின் துளையின் விட்டம் அதிகரிக்கும்.

6th Science Guide வெப்பம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியே பாயும் போது ________ ஆற்றல் உருவாகிறது.
அ) மின்னாற்றல்
ஆ) வெப்ப ஆற்றல்
இ) வேதி ஆற்றல்
ஈ) இயக்க ஆற்றல்
விடை:
ஆ) வெப்ப ஆற்றல்

Question 2.
வெப்பநிலையின் SI அலகு.
அ) கலோரி
ஆ) ஜில்
இ) செல்சியஸ்
ஈ) கெல்வின்
விடை:
ஈ) கெல்வின்

Question 3.
நீர் கொதித்து ஆவியாக மாறும் வெப்பநிலை ______ °C
அ) 0°C
ஆ) 32°C
இ) 100°C
ஈ) 110°C
விடை:
இ) 100°C

Question 4.
A, B என்ற இரு டம்ளர்களில் 50°C வெப்பநிலையில் நீர் உள்ளன. அவை இரண்டையும் C என்ற டம்ளரில் ஊற்றினால் C ல் உள்ள நீரின் வெப்பநிலை _____ °C
அ) 100°C
ஆ) 0°C
இ) 50°C
ஈ) 0° க்கும் 100°C க்கும் இடையே
விடை:
இ) 50°C

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 5.
திரவத்தை குளிர்விக்கும் போது – ஆக மாறுகிறது.
அ) வாயு
ஆ) திண்மம்
இ) நீராவி
ஈ) இவை ஏதுமில்லை
விடை:
ஆ) திண்மம்

II. பின்வரும் கூற்று சரியா தவறா எனக்காண்.

Question 1.
வெப்பம் செல்சியஸ் (அ) சென்டிகிரேடில் அளக்கப்படுகின்றது.
விடை:
தவறு

Question 2.
வெப்பநிலை என்பது ஒருவகை ஆற்றல்.
விடை:
தவறு

Question 3.
நமது உடலின் சராசரி வெப்பநிலை 37°C.
விடை:
சரி

Question 4.
இரண்டு பொருட்களும் ஒரே வெப்பநிலைக்கு வரும் வரை வெப்பம் தொடர்ந்து பரிமாற்றம் நடைபெறும்.
விடை:
சரி

Question 5.
அதிர்வுகள் ஒரு மூலக்கூறிலிருந்து அடுத்த மூலக்கூறிற்கு பாய்வதால் வெப்பம் பரவுகிறது.
விடை:
சரி

III. பொருத்துக.
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 85.1

IV. ஒப்புமை தருக.

Question 1.
வெயில் காலம் : விரிவடைதல் :: குளிர்காலம்: _____
விடை:
சுருங்குதல்

Question 2.
ஆவியாதல் : 100° C :: உறைதல் : _____
விடை:
0° C

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

V. காரணம் கூறுக.

1. மேம்பாலங்களில் கற்காரைப் பாலங்களுக்கிடையே சிறு இடைவெளி விடப்படுகிறது
கோடைக்காலத்தில் வெப்பத்தால் விரிவடையும்.
2. 80°C வெப்பநிலையிலுள்ள இரும்பு குண்டினை 80°C வெப்பநிலை உள்ள நீரில் போடும் போது அது சுருங்குவதில்லை.
ஏனெனில் இரண்டும் வெப்பச் சமநிலையில் உள்ளன.

VI. மிகக்குறுகிய விடையளி

Question 1.
வெப்ப மூலங்கள் யாவை?
விடை:

  1. முதன்மை வெப்ப ஆற்றல் மூலம் சூரியன் ஆகும்.
  2. எரிதல், உராய்வு மற்றும் மின்சாரம் மூலமும் வெப்ப ஆற்றலை பெறலாம்.

Question 2.
வெப்பம் என்றால் என்ன? அலகு யாது?
விடை:

  1. ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் வெப்பம் எனப்படும்.
  2. SI அலகு ஜூல். மேலும் கலோரி என்ற அலகும் பயன்படுத்தப் படுகிறது.

Question 3.
இரு பொருட்கள் வெப்பச் சமநிலையிலுள்ளன என எவ்வாறு அறியலாம்?
விடை:
வெப்பத் தொடர்பில் உள்ள இருபொருட்களின் வெப்பநிலையும் சமமாக இருந்தால் அவை வெப்பச்சமநிலையில் உள்ளன என அறியலாம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 4.
ஒரு கலோரி வரையறு.
விடை:
ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்த்த தேவைப்படும் வெப்ப அளவு ஒரு கலோரி எனப்படும்.

Question 5.
இரு பொருட்களுக்கிடையே வெப்ப ஆற்றல் பாயும் திசையை தீர்மானிப்பது எது?
விடை:
பொருட்களின் வெப்பநிலையே வெப்ப ஆற்றல் பாயும் திசையை தீர்மானிக்கின்றன.

VII. விரிவான விடையளி

Question 1.
வெப்பத்தால் பொருளின் நீளத்தில் விரிவடைகிறது என்பதை ஓர் ஆய்வின் மூலம் விளக்குக.
விடை:

  1. வெப்பத்தால் பொருளின் நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு வெப்ப நீள்விரிவு எனப்படும்.
  2. ஒரு சைக்கிள் கம்பியின் ஒரு முனையை இணைப்புக் கம்பியோடும் தொடர்ந்து மின்கலன் மற்றும் மின்விளக்கோடும் இணைக்க வேண்டும்.
  3. விளக்கின் மறுமுனையை வேறு இணைப்புக்கம்பியோடு இணைத்து இணைப்புக்கம்பியை ஒரு நாணயத்தில் இணைத்து வைக்க வேண்டும்.
  4. நாணயத்தை சைக்கிள் கம்பியில் மோதாதவாறு சிறு இடைவெளியில் மரக்கட்டை மீது வைக்க வேண்டும்.
  5. இப்போது மின்சுற்று திறந்த சுற்றாக உள்ளது மின்விளக்கு எரியாது.
  6. சைக்கிள் கம்பியை வெப்பப்படுத்தினால் நீளம் அதிகரிக்கும் எனவே நாணயத்தில் மோதி மின்சுற்று மூடிய மின்சுற்றாகி விடும்.
  7. எனவே மின்விளக்கு எரியும்.
  8. இந்த ஆய்வின் மூலம் வெப்பத்தால் நீளம் விரிவடைவதை அறியலாம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 90

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 91

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை

7th Science Guide வெப்பம் மற்றும் வெப்பநிலை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
வெப்பநிலையினை அளப்பதற்கான S.I அலகுமுறை ……………..
அ) கெல்வின்
ஆ) பாரன்ஹீட்
இ) செல்சியஸ்
ஈ) ஜூல்
விடை:
அ) கெல்வின்

Question 2.
வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்
அ) விரிவடைகிறது
ஆ) சுருங்குகிறது
இ) அதே நிலையில் உள்ளது
ஈ) மேற்கூறிய ஏதுமில்லை
விடை:
அ) விரிவடைகிறது

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை

Question 3.
மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை
அ) 0°C
ஆ) 37°C
இ) 98°C
ஈ) 100°C
விடை:
ஆ) 37°C

Question 4.
ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது ……………………
அ) பாதுகாப்பான திரவம்
ஆ) தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது
இ) ஒரே சீராக விரிவடையக்கூடியது
ஈ) விலை மலிவானது
விடை:
இ) ஒரே சீராக விரிவடையக்கூடியது

Question 5.
கீழே உள்ளவற்றில் எந்த இணை தவறானது K (கெல்வின்) = °C (செல்சியஸ்) + 273.15
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை 1
விடை:
இ ) +127 + 400.15

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மருத்துவர்கள் ………………….. வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி மனிதனின் உடல் ‘ வெப்பநிலையினை அளவிடுகின்றனர்.
விடை:
மருத்துவ

Question 2.
அறைவெப்ப நிலையில் பாதரசம் …………………… நிலையில் காணப்படுகிறது.
விடை:
திரவ

Question 3.
வெப்ப ஆற்றலானது ……………………. பொருளில் இருந்து …………………… பொருளுக்கு மாறுகிறது.
விடை:
உயர் வெப்பநிலையில் உள்ள, குறைந்த வெப்பநிலையிலுள்ள

Question 4.
-7°C வெப்பநிலையானது 0°C வெப்பநிலையினை விட …………………..
விடை:
குறைவு

Question 5.
பொதுவாக பயன்படுத்தப்படும் ஆய்வக வெப்பநிலைமானி …………… வெப்பநிலைமானி ஆகும்.
விடை:
திரவ கண்ணாடி (அ) பைமெட்டாலிக் துண்டு

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை 2
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை 3

IV. மிகக் குறுகிய விடையளி

Question 1.
ஸ்ரீநகரின் (ஜம்மு&காஷ்மீர்) வெப்பநிலை -4°Cமேலும் கொடைக்கானலின் வெப்பநிலை 3’C இவற்றில் எப்பகுதியின் வெப்பநிலை அதிகமாகும். அப்பகுதிகளுக்கிடையே காணப்படும் வெப்பநிலை வேறுபாடு எவ்வளவு?
விடை:

  • கொடைக்கானலின் வெப்பநிலை அதிகம் ஆகும்
  • இருப்பகுதிகளுக்கும் இடையேக் காணப்படும் வெப்பநிலை வேறுபாடு
    7°C (3°C – (-4°C) = 3 + 4) ஆகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை

Question 2.
ஜோதி சூடான நீரின் வெப்பநிலையினை மருத்துவ வெப்பநிலைமானியினை பயன்படுத்தி அளக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். இச்செயல் சரியானதா அல்லது தவறானதா? ஏன்?
விடை:

  • தவறு
  • ஏனெனில் மருத்துவ வெப்பநிலைமானியைக் கொண்டு உடலின் வெப்பநிலையை மட்டுமே அளவிட முடியும்.
  • ஆய்வக வெப்பநிலைமானியை பயன்படுத்தி சூடான நீரின் வெப்பநிலையினைக் கண்டறியலாம்.

Question 3.
நம்மால் ஏன் மருத்துவ வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி காற்றின் வெப்பநிலையினை அளக்க இயலாது?
விடை:
மருத்துவ வெப்பநிலைமானியைக் கொண்டு ஒருவரின் உடல் வெப்பநிலையை மட்டுமே அளவிட முடியும். எனவே காற்றின் வெப்பநிலையினை அளக்க முடியாது.

மருத்துவ வெப்பநிலைமானியை காற்றில் வைக்கும் போது அதனுடைய வெப்பநிலையானது உயரவோ அல்லது குறையவோ கூடும். மேலும் அப்படியே பயன்படுத்தும் போது நோயாளியின் உடல் வெப்பநிலையினை தவறாகக் காட்ட நேரிடும்.

பாதரசத்தின் அதிகமான விரிவினால் உருவாகும் அழுத்தத்தின் காரணமாக வெப்பநிலைமானியானது உடைந்துவிடக்கூடும்.

Question 4.
மருத்துவ வெப்பநிலைமானியில் காணப்படும் சிறிய வளைவின் பயன்பாடு யாது?
விடை:

  • குறுகிய வளைவானது வெப்பநிலைமானியை நோயாளியின் வாயிலிருந்து எடுத்தவுடன் பாதரசமானது மீண்டும் குமிழுக்குள் செல்வதைத் தடுக்கிறது.
  • இதனால் நோயாளியின் வெப்பநிலையை சரியாக குறித்துக்கொள்ள இயலும்.

Question 5.
மருத்துவ வெப்பநிலைமானியினை உடலின் வெப்பநிலையினை பரிசோதிக்க பயன்படுத்தும் முன் அதனை உதறுவதற்கான காரணம் யாது?
விடை:

  • வெப்பநிலைமானியை உதறும்போது அதிலுள்ள பாதரசமானது கீழ்மட்டத்திற்கு இறங்கும்.
  • பாதரச மட்டமானது 35°C[95°F] கீழ் உள்ளதா என உறுதி செய்தபின் வெப்பநிலையினைக் கண்டறியவும்.

V. குறுகிய விடையளி

Question 1.
வெப்பநிலைமானியில் நாம் ஏன் பாதரசத்தினை பயன்படுத்துகிறோம்? பாதரசத்திற்கு பதிலாக நீரினைப் பயன்படுத்த இயலுமா? அவ்வாறு பயன்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
விடை:

  • அறை வெப்ப நிலையில் திரவ நிலையிலுள்ள ஒரே உலோகம் பாதரசமாகும்.
  • மேலும் வெப்பதால் எளிதில் விரிவடையக்கூடியது.
  • பாதரசத்திற்கு பதிலாக நீரினைப் பயன்படுத்த இயலாது.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை

Question 2.
சுவாதி ஆய்வக வெப்பநிலைமானியினை சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பின்பு வெப்பநிலைமானியினை வெளியே எடுத்து நீரின் வெப்பநிலையினை குறித்துக்கொண்டாள். இதனைக் கண்ட ரமணி இது வெப்பநிலையினை குறிப்பதற்கான சரியான வழிமுறை அல்ல என்று கூறினாள். நீங்கள் ரமணி கூறுவதினை ஏற்றுக்கொள்கிறீர்களா? காரணத்தினைக் கூறவும்.
விடை:
ரமணியின் கூற்று சரியானது ஆகும்.

ஆய்வக வெப்பநிலைமானியில், கீழ்ப்பகுதியில் கிங்க் எனப்படும் வளைவான பகுதி எனவே சுவாதி ஆய்வக வெப்பநிலை மானியை சூடான நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் வெப்பநிலைமானியின் அளவீடானது கீழே சென்று குறைய நேரிடும்.

எனவே ஆய்வக வெப்பநிலைமானியை பயன்படுத்தும் போது சூடான நீரின் உள்ளே வைத்து அளவினை குறிக்க வேண்டும் கண்டிப்பாக வெப்பநிலைமானியை வெளியே எடுக்கக் கூடாது.

Question 3.
இராமுவின் உடல் வெப்பநிலை 99°F. அவர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? ஏன்?
விடை:

  1. 99°F என்பதை காய்ச்சலாக கருத முடியாது என்பதால் இராமு காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை.
  2. பொதுவாக மனிதரில் காணப்படும் சாதாரண உடல் வெப்பநிலையானது 97°F முதல் 949°F ஆகும்.
  3. மேலும் குழந்தைக்கு சற்று கூடுதலாக வெப்பநிலையானது 97°.9°F முதல் 100.4°F வரை இருக்கும்.

VI. விரிவான விடையளி

Question 1.
மருத்துவ வெப்பநிலைமானியின் படம் வரைந்து அதன் பாகங்களை குறிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை 4

Question 2.
ஆய்வக வெப்பநிலைமானிக்கும், மருத்துவ வெப்பநிலைமானிக்கும் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் யாவை?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை 5

VII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
செல்சியஸ் மதிப்பினை போன்று இரு மடங்கு மதிப்பு கொண்ட பாரன்ஹீட் வெப்பநிலையின் மதிப்பு யாது?
விடை:
வெப்பநிலை என்பது 320°
தீர்வு:
பாரன்ஹீ ட் F= 2C ———- (1)
செல்சியஸ் C = C ————(2)
F = \(\frac{9}{5}\)C + 32
2C = \(\frac{9}{5}\) C + 32
2C – \(\frac{9}{5}\) C = 32
\(\frac{10 \mathrm{c}-9 \mathrm{c}}{5}\) = 32
C = 160°
F = 2C = 2 × 160 = 320°

Question 2.
கால்நடை மருத்துவரை சந்தித்து வீட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் சராசரி உடல் வெப்பநிலையினை கண்டறியவும்.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை 6

7th Science Guide வெப்பம் மற்றும் வெப்பநிலை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
சிறிய அளவில் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகள் அத்திரவங்களின் ……………………. மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
அ) நீளம் மட்டும்
ஆ) அகலம்
இ) பரப்பளவு
ஈ) கன அளவு
விடை:
ஈ) கன அளவு

Question 2.
நீரின் கொதிநிலை எவ்வளவு ………………….
அ) 273.15k
ஆ) 373.15k
இ) 473.15k
ஈ) 573.15k
விடை:
ஆ) 373.15k

Question 3.
பாரன்ஹீட் அளவீட்டு முறையினை பயன்படுத்துபவர்களுக்கு தனிச் சுழி அளவீட்டு முறை தேவைப்பட்டால் ………………… என்ற வாய்ப்பாட்டினை பயன்படுத்தி ரான்கீன் முறைக்கு மதிப்பினை மாற்றிக் கொள்ளலாம்.
அ) F + 495.67
ஆ) F + 594.67
இ) F + 945.67
ஈ) F+ 459.67
விடை:
ஈ) F + 459.67

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை

Question 4.
45°C என்ற வெப்பநிலையை பாரன்ஹீட்டாக மாற்றினால் ஏற்படும் வெப்பநிலை.
அ) 93°F
ஆ) 73°F
இ) 113°F
ஈ) 133°F
விடை:
ஈ) 133°F

Question 5.
வெப்பநிலையை கண்டறியும் செல்சியஸ் அளவீட்டு முறையை கண்டறிந்தவர்.
அ) வில்லியம் லார்டு
ஆ) டேனியல் கேப்ரியல்
இ) ஆண்ட்ரஸ் செல்சியஸ்
ஈ) ரான்கீன்
விடை:
இ) ஆண்ட்ரஸ் செல்சியஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவீடு …………… என அழைக்கப்படுகிறது.
விடை:
வெப்பநிலை

Question 2.
வெப்பநிலையினை அளக்க பொதுவாக பயன்படுத்தப்படும் கருவி …………………. ஆகும்.
விடை:
வெப்பநிலைமானி

Question 3.
ஆய்வக வெப்பநிலைமானியானது ………………. வரையிலான செல்சியஸ் அளவுகோலினைக் கொண்டுள்ளது.
விடை:
-10°C முதல் 110°C

Question 4.
மெர்குரி இல்லாமல் தற்போது பயன்படுத்தப்படும் வெப்பநிலைமனி………………….
விடை:
டிஜிட்டல் வெப்பநிலை மானி

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை

Question 5.
கெல்வின் அளவீட்டு முறையை கண்டறிந்தவர் ……………….
விடை:
வில்லியம்லார்டு கெல்வின்

III. சரியா? தவறா? தவறெனில், சரியான விடையினைக் கூறவும்

Question 1.
ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் அதன் வெப்பநிலையாகும்.
விடை:
சரி

Question 2.
பெரும்பாலும் பாசரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் வெப்பநிலை மானிகளில் பயன்படுத்தவில்லை .
விடை:
தவறு – காரணம் : பெரும்பாலும் பாதரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் வெப்பநிலை மானிகளில் பயன்படுகின்றன.

Question 3.
ஆல்கஹால் – 100°C க்கும் குறைவான உறைநிலையை கொண்டுள்ளது.
விடை:
சரி

Question 4.
ஆய்வக வெப்பநிலைமானியானது உடல் வெப்பநிலை அளக்க பயன்படுகிறது
விடை:
தவறு
காரணம் .: ஆய்வக வெப்பநிலைமானியானது அறிவியல் ஆய்வுகளுக்கான வெப்பநிலை அளக்க பயன்படுகிறது.

Question 5.
டிஜிட்டல் வெப்பநிலைமானி முக்கியமாக உடலின் வெப்பநிலை அளக்க பயன்படுகிறது
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை 7

V. ஒப்புமை தருக

Question 1.
ஆற்றல் : ஜீல்; வெப்பநிலை; ……………….
விடை:
கெல்வின்

Question 2.
மருத்துவ வெப்பநிலைமனி : 35° C to 42° C : ஆய்வக வெப்பநிலைமனி : …………..
விடை:
-10° C to 110° C

Question 3.
வெப்பத்தின் போது திரவம் ; விரிவடையும் : குளிர்ச்சியின் போது திரவம் …………..
விடை:
சுருங்கும்

VI. கூற்றும் காரணமும்

Question 1.
கூற்று (A) : பாதரசம் ஒரு நச்சும் பொருள் மற்றும் ஒரு வெப்பமணி உடைந்தால் அப்புறப்படுத்துவது மிகவும் கடினம்.
காரணம் (R) : டிஜிட்டல் வெப்பநிலைமனியில் மெர்குரி பயன்படுத்தவில்லை.
விடை:
A மற்றும் R இரண்டும் சரி ஆனால் A என்பது R சரியான விளக்கம் இல்லை.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை

Question 2.
கூற்று (A) : பாரன்ஹீட் அளவீட்டு முறையினை தனிச்சுழி (கெல்வின்) அளவீட்டு முறைக்கு மாற்றுவது எளிமையானது.
காரணம் (R) : ரான்கீன் தனிச்சுழி அளவீட்டு முறையை கண்டபிடிக்கவில்லை.
விடை:
A மற்றும் R இரண்டும் தவறு.

VII. ஓரிரு வரிகளில் விடையளி

Question 1.
பொதுவாக பயன்படுத்தப்படும் வெப்பநிலை மானிகளை எழுதுக.
விடை:

  • மருத்துவ வெப்பநிலைமானி
  • ஆய்வக வெப்பநிலைமானி

Question 2.
வெப்பநிலையை அளக்க பயன்படும் அலகுகளின் பெயர் எழுதுக.
விடை:

  • செல்சியஸ் (உதா) 20° C
  • பாரன்ஹீட் (உதா) 25° F
  • கெல்வின் (உதா) 100 k

Question 3.
பாரன்ஹீட், கெல்வின் மற்றும் செல்சியஸ் அளவீடுகளுக்கு இடையே உள்ள தொடர்பு எழுதுக.
விடை:
\(\frac{(\mathrm{F}-32)}{9}=\frac{\mathrm{C}}{5}\)
K = 273.15 + C

VIII . குறுகிய விடையளி

Question 1.
ஆய்வக வெப்பநிலைமானியினை பயன் படுத்தும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எழுதுக.
விடை:

  • வெப்பநிலையினை அளவீடும் போது வெப்பநிலை மானியினை சாய்க்காமல் நேராக வைக்க வேண்டும்.
  • எப்பொருளின் வெப்பநிலையினை அளக்க வேண்டுமோ அப்பொருளானது முழுவதும் வெப்பநிலைமானியின் குமிழினை அனைத்து பக்கங்களில் சூழ்ந்து உள்ள போது மட்டுமே அளவீட்டினை எடுக்க வேண்டும்.’

Question 2.
மருத்துவ வெப்பநிலைமானியை வெளிச்சத்தில் படும்படி அல்லது எரியும் பொருள்களுக்கு அருகிலே வைக்க கூடாது ஏன்?
விடை:

  • மருத்துவ வெப்பநிலைமானி குறைந்த அளவு வெப்பநிலை எற்க கூடியது.
  • பாதரசத்தின் அதிகமான விரிவினால் உருவாகும் அழுத்தத்தின் காரணமாக வெப்பநிலைமானியானது உடைந்துவிடக் கூடும்.

Question 3.
பெரும, சிறும வெப்பநிலைமானி என்றால் என்ன?
விடை:
ஒரு நாளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையினை அளக்கப் பயன்படும் வெப்பநிலை மானியானது பெரும், சிறும வெப்பநிலைமானி என அழைக்கப்படுகிறது.

Question 4.
வெப்பநிலை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவீடு வெப்பநிலை என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை

Question 5.
பாதரசம் அல்லது ஆல்கஹால் வெப்பநிலைமானிகளில் ஏன் பயன்படுத்தப்படுகின்றன?
விடை:

  • பெரும்பாலும் பாதரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
  • ஏனெனில் அவற்றின் வெப்பநிலைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் அவை திரவ நிலையிலேயே தொடர்ந்து காணப்படுகின்றன.

IX. விரிவான விடையளி

Question 1.
பாதரசம் மற்றும் ஆல்கஹால் பண்புகளை பற்றி எழுதுக.
விடை:
பாதரசத்தின் பண்புகள் :

  • பாதரசம் சீராக விரிவடைகிறது.
  • இது ஒளி ஊடுருவாதது மற்றும் பளபளப்பானது.
  • இது கண்ணாடி குழாயின் சுவர்களில் ஒட்டாது.
  • இது வெப்பத்தினை நன்கு கடத்தக்கூடியது.
  • இது அதிக கொதிநிலையும் (357°C) குறைந்த உறைநிலையும் (-39°C) கொண்டது.
  • திக நெடுக்கத்தினாலான வெப்பநிலைகளை அளக்க பாதரசம் பயன்படுகிறது.

ஆல்கஹாலின் பண்புகள் :

  • ஆல்கஹால் -100°C க்கும் குறைவான உறைநிலை கொண்டுள்ளது.
  • எனவே மிகக் குறைந்த வெப்பநிலைகளை அளக்க பயன்படுகிறது.
  • ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்விற்கு இதன் விரிவடையும் தன்மை அதிகமாகும்.
  • அதிக அளவிற்கு வண்ண மூட்ட முடியும்.
  • ஆதலால் கண்ணாடி குழாய்க்குள் இத்திரவத்தினை தெளிவாக காண இயலும்.

Question 2.
மருத்துவ வெப்பநிலை மானியினை பயன்படுத்தும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி எழுதுக.
விடை:

  • வெப்பநிலைமானியினால் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் கிருமி நாசினி திரவத்தினால் நன்கு கழுவ வேண்டும்.
  • பாதரச மட்டத்தினை கீழே கொண்டு வருவதற்காக வெப்பநிலைமானியை ஒரு சில முறை உதற வேண்டும்.
  • அளவிடத் தொடங்கும் முன் பாதரச மட்டமானது 35°C அல்லது 94°F கீழ் இருக்க வேண்டும்.
  • வெப்பநிலைமானியின் குமிழ் பகுதியில் வெப்பநிலைமானியை பிடிக்கக் கூடாது.
  • உங்கள் கண்ணிற்கு நேராக பாதரச மட்டத்தினை வைத்து பிறகு அளவீட்டினை எடுக்க வேண்டும்.
  • வெப்பநிலைமானியினைக் கவனமாக கையாள வேண்டும்.
  • கடினமான பரப்பில் வெப்பநிலைமானி மோதினால் அது உடைந்து விடக்கூடும்.
  • வெப்பநிலைமானியினை எரியக்கூடிய பொருள்களுக்கு அருகிலோ அல்லது நேரடியாக சூரிய ஒளியின் கீழோ வைக்கக் கூடாது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை 8

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு

7th Science Guide காட்சித் தொடர்பு Text Book Back Questions and Answers

I. சரியானதை தேர்வு செய்

Question 1.
அசைவூட்டம் எதற்கு உதாரணம்?
அ) ஒலித் தொடர்பு
ஆ) காட்சித் தொடர்பு
இ) வெக்டர் தொடர்பு
ஈ) ராஸ்டர் தொடர்பு
விடை:
ஆ) காட்சித் தொடர்பு

Question 2.
போட்டோஷாப் மென்பொருளை அதிகம் பயன்படுத்துபவர்கள் யார்?
அ) ஆசிரியர்கள்
ஆ) மருத்துவர்கள்
இ) வண்ணம் அடிப்பவர்கள்
ஈ) புகைப்படக் கலைஞர்கள்
விடை:
ஈ) புகைப்படக் கலைஞர்கள்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு

Question 3.
மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரியில் நமது படங்களைப் பதிவேற்ற பயன்படுத்தப்படும் தெரிவு எது?
அ) BEGIN A STORY
ஆ) IMPORT PICTURES
இ) SETTINGS
ஈ) VIEW YOUR STORY
விடை:
ஆ) IMPORT PICTURES

Question 4.
கீழ்க்காண்பவற்றுள் கணிணியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல் காட்டுவது எது?
அ) இங்க்ஸ்கேப்
ஆ) போட்டோ ஸ்டோரி
இ) மெய்நிகர் தொழில்நுட்பம்
ஈ) அடோபி இல்லுஸ்ட்ரேட்டர்
விடை:
இ) மெய்நிகர் தொழில்நுட்பம்

Question 5.
படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை எவை?
அ) ராஸ்டர்
ஆ) வெக்டர்
இ) இரண்டும்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஆ) வெக்டர்

Question 6.
சின்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?
அ) போட்டோஷாப்
ஆ) இல்லுஸ்ட்ரேட்டர்
இ) வெக்டார் வரைகலை
ஈ) போட்டோ ஸ்டோரி
விடை:
இ) வெக்டார் வரைகலை

II. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு 2
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு 3

III. சுருக்கமாக விடையளி

Question 1.
ராஸ்டர் வரைகலைப் படங்கள் என்றால் என்ன?
விடை:

  • ஒரு ராஸ்டர் ஒரு காட்சி இடத்தில் ஒரு X மற்றும் Y ஒருங்கிணைப்பின் ஒரு கட்டம் ஆகும்.
  • ராஸ்டர் படக்கோப்பு வகைகளின் எடுத்துக்காட்டுகள்: BMP, TIFF,GIFமற்றும் JPEGகோப்புகள்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு

Question 2.
இருபரிமாண மற்றும் முப்பரிமாணப் படங்கள் பற்றி எழுதுக.
விடை:

  • இரு பரிமாண 2D படங்கள் நீளம் மற்றும் அகலம் ஆகிய இரு பரிமாணங்களை மட்டும் கொண்டிருக்கும்.
  • ஆனால் முப்பரிமாணப் படங்கள் நீளம், அகலம் மற்றும் உயரத்தையும் கொண்டிருக்கும். இரு பரிமாண படங்களை விட முப்பரிமாணப் படங்கள் நம் கண்முன்னே நம் நிகழ் உலகில் தோன்றுவது போல் இருக்கும்.

Question 3.
ராஸ்டர் மற்றும் வெக்டர் வரைகலை படங்களை வேறுப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு 4

Question 4.
மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி மூலம் படக்கதை காணொளி ஒன்றை எவ்வாறு உருவாக்குவாய்?
விடை:
படி 1 : மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி செயல்பாட்டைத் திறந்து அதில் BEGIN A NEW STORY என்பதைத் தேர்வு செய்து NEXT என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 2 : அடுத்ததாகத் தோன்றும் திரையில் IMPORT PICTURE என்பதைக் கிளிக் செய்தால் நம் கணினியில் உள்ள கோப்புகள் தோன்றும். அதில் ஏற்கனவே காணொளிக்காகச் சேமித்த புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்கவும். படங்களில் திருத்தங்களைச் செய்யவும் அதில் வசதிகள் உண்டு. தேவையெனில் திருத்தங்களை மேற்கொண்டு NEXT என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 3 : இப்பொது ஒவ்வொரு படத்திற்கும், பொருத்தமான சிறு சிறு உரைகளை உள்ளிடலாம். பின்னர் NEXT என்பதைக் கிளிக் செய்து, திரையில் உள்ள படங்களுக்கு அசைவூட்டம் கொடுக்கவும். கதையினை ஒளிப்பதிவு செய்யவும் வசதி உள்ளது. அதனை முடித்தபின் NEXT என்பதை கிளிக் செய்யவும்.

படி 4 : கதைக்குப் பின்னணி இசையை இணைக்க SELECT MUSIC மூலம் இசைக் கோப்பைத் தேர்ந்தெடுத்த பின்னர் NEXT என்பதை கிளிக் செய்யவும்.

படி 5 : அடுத்தபடியாக நமது கதைக்கான பெயரையும், அது சேமிக்கப்பட வேண்டிய இடத்தையும் தேர்வு செய்து, பின்னர் SETTINGS மூலம் காணொளியின் தரத்தினை மாற்றிக் கொள்ளலாம்.

படி 6: இதோ நமது காணொளி தயாராகிவிட்டது. தோன்றும் திரையில் VIEW YOUR STORY என்பதைக் கிளிக் செய்தால் நமது காணொளியைக் காணலாம்

7th Science Guide உடல் நலமும், சுகாதாரமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
கணினியை நாம் நாடுவதற்கான காரணம்
அ) வேகம்
ஆ) சேமிப்புத்திறன்
இ) அ மற்றும் ஆ
விடை:
இ) அ மற்றும் ஆ

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு

Question 2.
கோப்புத் தொகுப்பு என்பது ____________ உள்ளடக்கியது
அ) அளவான கோப்புகள்
ஆ) பல கோப்புகளை
இ) Word Document
விடை:
ஆ) பல கோப்புகளை

Question 3.
இவற்றுள் எது ராஸ்டர் கோப்பு வகை
அ) .ai
ஆ) .pdf
இ).png
விடை:
இ) .pne

Question 4.
இவற்றுள் எது வெக்டர் கோப்பு வகை
அ) .png
ஆ) .jpg
இ) .pdf
விடை:
இ) .pdf

Question 5.
மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி எதற்கு பயன்படுகிறது.
அ) காணொளி உருவாக்க
ஆ) கோப்புகளை உருவாக்க
இ) அசைவூட்டம் உருவாக்க
விடை:
அ) காணொளி உருவாக்க

II. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு 5

III. விடையளிக்க .

Question 1.
கோப்புத் தொகுப்பு என்றால் என்ன?
விடை:
கோப்புத் தொகுப்பு என்பது பல கோப்புகளை உள்ளடக்கிய பெட்டகம் போன்றது ஆகும்.

Question 2.
கோப்புகளை உருவாக்குவது எப்படி?
விடை:
உதாரணத்திற்கு விண்டோஸ் இயங்குதளம் உள்ள கணினிகளில் நம் குறிப்புகளைச் சேகரித்து வைக்க Notepad செயலியையும், படங்கள் வரைய Paint என்னும் செயலியையும் பயன்படுத்தலாம்.

Question 3.
மெய் நிகர் (Virtual Reality) என்றால் என்ன ?
விடை:
முப்பரிமாணத்தின் அடுத்தக்கட்டமாக மெய்நிகர் என்னும் தொழில் நுட்பம் வந்துள்ளது, மெய்நிகர் என்பது கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல காட்டுவதாகும். இதன் மூலம் விளையாடப்படும் விளையாட்டுகள், உண்மையாக நாம் மைதானத்தில் விளையாடுவது போல தோன்றும். தற்போது திறன்பேசிகளிலும் மெய்நிகர் செயலிகள் வந்து விட்டன.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு

Question 4.
வெக்டர் கோப்பின் வகைகள் யாவை?
விடை:

  • .eps
  • .ai
  • .pdf
  • .svg
  • .sketch

Question 5.
வெக்டர் வரைகலைப் படங்கள் எதற்கு பயன்படுகிறது?
விடை:
படங்கள் வரைவதற்கும், சின்னங்கள் உருவாக்கவும் இதுவே சிறந்தது. மேலும் ராஸ்டர் படங்களை விட அளவில் மிகக் குறைந்தது வெக்டர் படங்கள்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு 6

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

7th Science Guide உடல் நலமும், சுகாதாரமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான். இது எதைக் குறிக்கிறது.
அ) சுகாதாரம்
ஆ) உடல்நலம்
இ) சுத்தம்
ஈ) செல்வம்
விடை:
ஆ) உடல்நலம்

Question 2.
தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் சிறந்தது.
அ) மகிழ்ச்சி
ஆ) ஓய்வு
இ) மனம்
ஈ) சுற்றுச்சூழல
விடை:
இ) மனம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 3.
நாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்
அ) திறந்த
ஆ) மூடியது
இ) சுத்தமான
ஈ) அசுத்தமான
விடை:
இ)சுத்தமான

Question 4.
புகையிலையை மெல்லுவதால் ஏற்படுவது
அ) இரத்த சோகை
ஆ) பற்குழிகள்
இ) காசநோய்
ஈ) நிமோனியா
விடை:
ஆ) பற்குழிகள்

Question 5.
முதலுதவி என்பதன் நோக்கம்
அ) பணத்தைச் சேமித்தல்
ஆ) வடுக்களைத் தடுத்தல்
இ) மருத்துவப் பராமரிப்பு தடுத்தல்
ஈ) வலி நிவாரணம்
விடை:
ஈ) வலி நிவாரணம்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1
ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும் மக்களை ______________ என அழைக்கிறோம்.
விடை:
சமூகம்

Question 2.
நான் பச்சை நிறத்தில் குப்பைகளோடு இருக்கக்கூடிய பெட்டி நான் _____________.
விடை:
குப்பைத் தொட்டி

Question 3.
கண்கள் உலகிலனக் காணப் பயன்படும் ____________ கருதப்படுகின்றன
விடை:
சாளரங்களாக

Question 4.
முடியை மென்மையாக வைத்திருக்க மயிர்க்கால்கள் ____________ உற்பத்தி செய்கின்றன.
விடை:
எண்ணெயை

Question 5.
காசநோய் என்பது ______________ பாக்டீரியாவால் ஏற்படுகிறது
விடை:
மைக்கோபாக்டீரியம் டியூப்ரகுலே

III. சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறெனில் சரிசெய்து எழுதுக

Question 1.
அனைத்து உணவுகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்
விடை:
சரி

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 2.
சின்னம்மை லுகோடெர்மா என்றும் அழைக்கப்டுகிறது.
விடை:
தவறு – வாரி செல்லா என்றும் அழைக்கப்படுகிறது.

Question 3.
வயிற்றுப்புண் ஒரு தொற்றாநோய்.
விடை:
சரி

Question 4.
ரேபிஸ் நோய் இறப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு அபாயகரமான நோயாகும்.
விடை:
சரி

Question 5.
முதல்நிலை தீக்காயத்தில் முழுத்தோல் பகுதியும் சேதமடைகிறது.
விடை:
தவறு – மேல் புறத்தோல் சேதமடைகிறது.

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 2

V. ஒப்புமை தருக

Question 1.
முதல்நிலைத் தீக்காயம் : மேற்புறத்தோல் ::
இரண்டாம் நிலைத் தீக்காயம் : ____________
விடை:
மேல் புறத்தோல் மற்றும் டெர்மிஸ்

Question 2.
டைபாய்டு : பாக்டீரியா :: ஹெபடைடிஸ் : ____________
விடை:
வைரஸ்

Question 3.
காசநோய் : காற்று :: காலரா : _____________
விடை:
மாசுபட்ட உணவு மற்றும் நீர்

VI. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து, சரியான ஒன்றைத் தேர்வு செய்க

Question 1.
கூற்று : வாய்ச் சுகாதாரம் நல்லது.
காரணம் : நல்ல பற்கள் ஆரோக்கியமான திசுக்களைக் கொண்ட ஈறுகளால் சூழப்பட்டுள்ளன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி. ஆனால். காரணம் தவறு. .
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 2.
கூற்று : சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.
காரணம் : உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல் மற்றும் அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கிருமிகள் தோற்றுவிக்கின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி. ஆனால். காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

VII. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
சுகாதாரம் என்றால் என்ன?
விடை:
சுகாதாரம் என்பது நோய்களைத் தடுக்கவும், நல்ல ஆரோக்கியத்தைக் தக்க வைத்துக் கொள்ளவும். குறிப்பாகத் தூய்மை பாதுகாப்பான குடிநீர் உட்கொள்ளல் மற்றும் சரியான முறையில் கழிவு அகற்றுதல் போன்ற நல்ல செயல்களைக் குறிப்பதாகும்.

Question 2.
கண்களைப் பாதுகாக்கும் முறைகள் பற்றி எழுது.
விடை:

  • கண்களைக் தசக்குதல் கூடாது.
  • நீண்ட நேரமாகத் தொலைக்காட்சி பார்த்தல் மற்றும் கணினி பயன்பாட்டை குறைத்தல் வேண்டும்.

Question 3.
உனது முடியை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணுவது எவ்வாறு?
விடை:

  • உச்சந்தலையை நன்றாகத் தேய்த்துக் குளிக்கும் போது இறந்த சருமச் செல்கள், அதிக எண்ணெய் மற்றும் தூசி ஆகியவற்றை அகற்றலாம்.
  • சுத்தமான தண்ணீரில் குளித்தல், நல்ல தரமான சீப்புகளைப் பயன்படுத்துதல் முடி பராமரிப்புக்கு மிக அவசியமாகக் கருதப்படுகிறது.

Question 4.
தனது கைபேசியில் சோபி அடிக்கடி விளையாடுகிறார். கண் எரிச்சலிலிருந்து அவரது கண்களைப் பாதுகாக்க உனது பரிந்துரை என்ன?
விடை:

  • கண்களை அவ்வப்போது திறந்து மூடுதல் வேண்டும்.
  • கைபேசியில் உள்ள தொடுதிரையின் பிரகாசம் மிக அதிகமாகவோ, மிக குறைவாகவோ இருக்கக் கூடாது.
  • தொடுதிரை சுத்தமாக இருக்க வேண்டும்.
  • கையேசியை கண்களுக்கு மிக அருகில் வைத்து பயன்படுத்தத் கூடாது.

Question 5.
மழைக்காலத்தில் உங்கள் பகுதியில் பரவும் இரண்டு தொற்று நோய்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • காலரா
  • டைபாய்டு காய்ச்சல்

Question 6.
காயங்களுக்கு என்ன முதலுதவி வழங்க வேண்டும்?
விடை:

  • பாதிக்கப்பட்ட பகுதியைச் சுத்தமான குளிர்ந்த நீரால் கழுவிய பின் ஒரு கிருமி நாசினித் திரவத்தால் சுத்தம் செய்ய வேண்டும்.
  • பிறகு கிருமி நாசினிக் களிம்பு இடவேண்டும்.
  • தொற்று நோயைத் தடுக்கும் வண்ணம் காயம்பட்ட இடத்தைச் சுற்றிக் கட்டுத் துணியால் கட்டப்பட வேண்டும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 7.
கங்காவிற்குச் சிறிய தீக்காயம் ஏற்பட்டதால், நான் தண்ணீரால் புண்ணைக் கழுவினேன்” என்று ரவி கூறினான். அவனது கூற்றினை ஏற்றுக் கொள்கிறாயா, இல்லையா? ஏன் என்பதை விவரி?
விடை:

  • அவருடைய கூற்று ஏற்றுக் கொள்ளப்படதக்கது.
  • ஏனெனில் சிறிய தீக்காயத்திற்கு, பாதிப்படைந்த பகுதியை குளிர்ந்த நீரால் கழுவி பின் கிருமி நாசினி களிம்பை அந்த இடத்தில் இட வேண்டும்.

VIII. சுருக்கமாக விடையளி

Question 1.
முதலுதவியின் அவசியம் என்ன?
விடை:

  • உயிரைப் பாதுகாக்க. > நோயாளியின் இரத்தக் கசிவைத் தடுக்க மற்றும் நிலையை உறுதிப்படுத்த > வலி நிவாரணம் அளிக்க
  • ஆரம்ப நிலைக்கான ஒரு அவசர மருத்துவச் சேவை.

Question 2.
இந்தப்படம் எதை விளக்குகிறது?
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 3
விடை:

  • குப்பையை கண்ட இடத்தில் போடக்கூடாது.
  • பொது இடத்தை தூய்மையாக வைப்பது நமது கடமை.

Question 3.
தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்களை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 4

Question 4.
உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?
விடை:

  • ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குதல் மூலம் பற்களிலும், ஈறுகளில் பற்கரை மற்றும் கருவண்ணம் உருவாவதைத் தடுக்கிறது.
  • ஃப்ளோசிங் செய்யும் போது உணவுத் துகள்கள், பற்கரை மற்றும் பாக்டீரியாக்கள் நீக்கப்படுகின்றன.

Question 5.
தொற்று நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?
விடை:
அசுத்தமான காற்று. நீர் உணவு அல்லது வெக்டார்கள் என்று அழைக்கப்படும். நோய் கடத்திகளான பூச்சிகள் மற்றும் பிற விலங்குகள் மூலமாகவும் தொற்று நோய்கள் பரவுகின்றன.

Question 6.
மெல்லிய, சிதறிய முடி மற்றும் முடி உதிர்தல் போன்ற குறைபாட்டை குறைக்க கூறும் ஆலோசனை யாது?
விடை:

  • மெல்லிய, சிதறிய முடி மற்றும் முடி உதிர்தல் ஆகியவை முடியின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறிக்கின்றன.
  • பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • புரதச் சத்து மிகுந்த உணவினையும் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.

IX. விரிவாக விடையளி

Question 1.
ஏதேனும் மூன்று தொற்று நோய்களைப் பற்றி விரிவாக எழுதுக.
விடை:
காசநோய்
காசநோய் மைக்ரோபாக்ரியம் டியூபர்குலேயெ என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

பரவும்முறை
நோயாளியிடமிருந்து வரும் சளி, எச்சில் மற்றும் உடமைகள் மூலம் பரவுகின்றன.

அறிகுறிகள்
எடை இழப்பு, காய்ச்சல், தொடர்ந்து இருமல், சளியுடன் இரத்தம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

தடுப்பு மற்றும் சிகிச்சை

  • BCG தடுப்பூசி போடுதல்
  • நோயாளிக்கு சிறப்பு கவனம் செலுத்துதல்
  • DOT போன்ற தொடர்ச்சியாக அளிக்கப்படும் மருந்துகளைப் பயன்படுத்துதல்

காலரா
விப்ரயோ காலரே என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

பரவும்முறை
அசுத்தமான உணவு, அல்லது நீர் மூலம் பரவக்கூடியது.

அறிகுறிகள்
வயிற்றுப் போக்கு, தலைவலி மற்றும் வாந்தி

தடுப்பு மற்றும் சிகிச்சை

  • சாப்பிடும் முன் கைகளை கழுவுதல்
  • தெருக்களில் விற்கப்படும் திறந்த வெளி உணவுகளை தவிர்த்தல்
  • காலராவிற்கு எதிராக தடுப்பூசி போடுதல்.

டைப்பாய்டு
சால்மோனெல்லா டைபி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

பரவும்முறை
அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் பரவுகிறது.

அறிகுறிகள்
பசியின்மை , தீவிரத் தலைவலி, அடி வயிற்றில் புண், அல்லது தடிப்புகள் மற்றும் தீவிரக் காய்ச்சல் (104°F) வரை காய்ச்ச ல்

தடுப்பு மற்றும் சிகிச்சை

  • கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரை உட்கொள்ளுதல்,
  • முறையாக கழிவுநீர் அகற்றுதல்
  • தடுப்பூசி போடுதல்

Question 2.
ஒரு நபருக்குத் தோலில் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வாய்? முதலுதவிக்கான — பல்வேறு சூழ்நிலைகளையும் கூறுக.
விடை:

  • சிறிய தீக்காயங்களைக் குளிர்ந்த நீரில் கழுவி கிருமிநாசினிக் களிம்பு இடவேண்டும்.
  • கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டு கொப்புளங்கள் இருந்தால் நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • காயம்பட்ட இடத்தைச் சுற்றி சுத்தமான ஒட்டக் கூடிய தன்மையற்ற துணி அல்லது கட்டுத் துணிகளால் சுற்ற வேண்டும்.
  • பெரிய தீக்காயங்களுக்கு மருத்துவரின் சிகிச்சையை நாட வேண்டும்.

முதலுதவிக்கான பல்வேறு சூழ்நிலைகள் :

  • உயிரைப் பாதுகாக்க
  • நோயாளியின் இரத்தக்கசிவைத் தடுக்க மற்றும் நிலையை உறுதிப்படுத்த
  • வலி நிவாரணம் அளிக்க
  • ஆரம்ப நிலைக்கான ஒரு அவசர சிகிச்சை.

Question 3.
ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எவ்வாறு நோய் பரவுகிறது?
விடை:

  • மாசுபட்ட காற்று, அசுத்தமான உணவு மற்றும் நீர் வெக்டார்கள் எனப்படும் நோய்க் கடத்திகளாலும் நோய் பரவுகிறது.
  • சளி மற்றும் காய்ச்சல் பொதுவான தொற்று நோய்கள்
  • இது பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலம் பரவுகிறது.
  • நாசியிலிருந்து வெளியேறும் சளியில் பாக்டீரியா அல்லது வைரஸ் காணப்படலாம்.
  • அப்போது நோயாளி நாசியைத் தொட்டபின் வேறு பொருளையோ அல்லது வேறு நபரையோ தொடும் போது வைரஸ் இடம் பெயர்கிறது.
  • நோயாளியின் தும்மல் மற்றும் இரும்மலின் போது வெளியேறும் துளிகளில் வைரஸ் இருந்தால், அது காற்றில் பரவும்.
  • எனவே சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் கைக்குட்டையைப் பயன்படுத்தி நாசியைச் சிந்துவதும் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற செயல்களால் வைரஸை பரவாமல் செய்ய முடியும்.

X. உயர் சிந்தனை வினா

Question 1.
ஒரு நபர் அலுவலகத்தில் அல்லது வகுப்பறையில் பகல் நேரத்தில் தூங்குவது ஏன்? இத்தகைய சூழ்நிலையை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? விவரி.
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 5
விடை:

  • இரவு நேரப் பணி அல்லது அதிக நேரம் கண் விழித்து படித்தல்.
  • ஒரு மனிதனுக்கு சராசரியாக 7-8 மணி நேரத் தூக்கம் மிக அவசியம்.
  • இந்த தூக்க நேரத்தில் குறைவு ஏற்பட்டால் அது பல உடல் பிரச்சனைகளை உருவாக்கும்.
  • சில நேரங்களில் சுவாசக் கோளாறு காரணமாக சரியான தூக்கம் இல்லையென்றாலும் பகல் நேரத்தில் தூக்கம் வரும்.
  • கவனக்குறைவு, ஒருமுகப்படுத்தி படித்தலில் குறைபாடு, ஞாபக மறதி போன்ற காரணங்களாலும் படிக்கும் குழந்தைகள் வகுப்பறையில் தூங்குகின்றனர்.

7th Science Guide உடல் நலமும், சுகாதாரமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறி ________________
அ) ஈறுகளில் இரத்தக் கசிவு
ஆ) பற்சிதைவு
இ) இரத்தத் தட்டகளின் எண்ணிக்கை குறைவு
ஈ) எடை இழப்பு
விடை:
இ) இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறைவு

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 2.
வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகும் நோய் ______________
அ) வண்ணக்குருடு
ஆ) இரவு குருட்டுத் தன்மை
இ) இளம் சிவப்புக் கண் நோய்
ஈ) பெலாக்ரா
விடை:
இ) இளம் சிவப்புக் கண் நோய்

Question 3.
தீவிர இரத்த சோகையினால் இளம் குழந்தைகளுக்கு _____________ தொற்று நாள்பட்ட வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.
அ) பாக்டீரியா
ஆ) வைரஸ்
இ) புரோட்டோசோவா
ஈ) கொக்கிப் புழு
விடை:
ஆ) கொக்கிப் புழு

Question 4.
______________ ஆம் ஆண்டு உலகிலேமே முதன்முதலில் பென்சிலின் கண்டறியப்பட்டது.
அ) 1928
ஆ) 1938
இ) 1948
ஈ) 1926
விடை:
அ) 1928

Question 5.
சத்தை ஊசியாக எடுக்காமல் மாத்திரைகளாக வாய் வழியாக உட்கொள்ளலாம்.
அ) கால்சியம்
ஆ) மெக்னீசியம்
இ) இரும்பு
ஈ) சோடியம்
விடை:
இ) இரும்பு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மருந்துகளின் இராணி என அழைக்கப்படுவது ___________
விடை:
பென்சிலின்

Question 2.
__________ தோலில் சில பகுதி அல்லது மொத்தப் பகுதியில் நிறமி இழப்புகளால் ஏற்படும் ஒரு தொற்றா நோயாகும்.
விடை:
லுகோடெர்மா

Question 3.
தட்டம்மையின் முக்கிய அறிகுறி ____________ ஆகும்.
விடை:
அம்மை கொப்புளங்கள்

Question 4.
பசியின்மையை _____________ என்றும் அழைக்கலாம்
விடை:
அனோரெக்ஸியா

Question 5.
______________ உடல் அமைப்பு ஒரு மகத்தான அதிசயம்
விடை:
மனித

III. சரியா? தவறா (தவறெனில் தவறை சரி செய்)

Question 1.
பற்கள் உணவை அரைக்கும் போது ஊக்குவிக்கப்பட்ட உமிழ்நீர் மற்றும் செரிமானச் சுரப்புகள் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 2.
மஞ்சள் காமாலை ஒரு உயிர்க் கொல்லி நோய்.
விடை:
சரி

Question 3.
முதல்நிலை தீக்காயம் என்பது மேல்புறத் தோல் மற்றும் உட்தோல் தீயால் பாதிக்கப்படுவது
விடை:
தவறு. சரியான விடை : முதல் நிலை தீக்காயம் மேல்புறத் தோலை மட்டும் பாதிக்கிறது.

Question 4.
டைபாய்டு, சால்மோனெல்லா டைபி எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
விடை:
சரி

Question 5.
வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் வாந்தி ஆகியவை காலராவின் அறிகுறிகளாகும்.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 6

V. வாக்கியத்திற்கேற்ற சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

(இளம் சிவப்புக் கண்நோய், கழுத்துக் கழலை, இரவு குருட்டுத் தன்மை, ஏடிஸ் எஜிப்டி )
Question 1.
மிகவும் தொற்று, இருமல் மற்றும் தும்மல் மூலம் பரவுகிறது.
விடை:
இளம் சிவப்புக்கண் நோய்

Question 2.
ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுவது.
விடை:
கழுத்துக் கழலை

Question 3.
இது இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை குறைக்கிறது.
விடை:
ஏடிஸ் எஜிப்டி

Question 4.
இது விழித்திரை செல்களின் குறைபாடு
விடை:
இரவு குருட்டுத் தன்மை

(லுகோடெர்மா, HIV,MMR,ஆஸ்துமா)
Question 1.
தீங்கு விளைவிக்கக் கூடிய வெளிப்புறக் காரணிகள் உடலில் ஏற்படுத்தும் சிக்கல்.
விடை:
ஆஸ்துமா

Question 2.
நோய் எதிர்ப்பு சக்தி முழுவதுமாக குறைவது.
விடை:
HIV

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 3.
சிகிச்சை இல்லா ஒரு நோய் இது தொடுதல் மூலம் பரவாது.
விடை:
லுகோடெர்மா

Question 4.
குழந்தைப் பருவத்திலேயே கொடுக்கப்பட்ட வேண்டிய தடுப்பூசி
விடை:
MMR

VI. ஒப்புமை வினா

Question 1.
பற்சிதைவு: பாக்டீரியா: மஞ்சள் காமாலை: ___________
விடை:
வைரஸ்

Question 2.
ரேபிஸ்: வெறிநாய்கடி; தட்டம்மை : ___________
விடை:
வாரி செல்லா

VII. கூற்றும் காரணமும்

Question 1.
உறுதிப்படுத்துதல் :
கூற்று A : அரைக்கும் மற்றும் ருசிக்கும் செயல் மாஸ்டிகேசன்’ என்று அழைக்கப்படுகிறது.
காரணம் R : உணவை அரைக்கும் போது உமிழ்நீர் மற்றும் செரிமானச் சுரப்புகள் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.

அ) A மற்றும் R இரண்டும் சரி
ஆ) A மற்றும் R இரண்டும் தவறு
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
விடை:
அ) Aமற்றும் R இரண்டும் சரி

Question 2.
உறுதிப்படுத்துதல் :
கூற்று A : மண் சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்குப் பொதுவாக இரத்தச் சோகை இருக்கும்.
காரணம் R : அன்றாட உணவில் புரதச்சத்து குறைபாட்டினால் இரத்த சோகை ஏற்படுகிறது.

அ) A மற்றும் R இரண்டும் சரி
ஆ) A மற்றும் R இரண்டும் தவறு
இ ) A. சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
விடை:
அ) A சரி ஆனால் R தவறு

VIII. மிகக் குறுகிய விடை தருக

Question 1.
சிறிய தீக்காயங்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி யாது?
விடை:
சிறிய தீக்காயப் பகுதிகளை குளிர்ந்த நீரில் கழுவி கிருமி நாசினிக் களிம்பு இட வேண்டும்.

Question 2.
பாக்டீரியாவினால் ஏற்படச் கூடிய நோய்கள் எழுதுக.
விடை:
காசநோய், காலரா, டைபாய்டு என்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 3.
அடிப்படை சமூக சுகாதாரத்தை எவ்வாறு பராமரிக்கலாம்?
விடை:

  • நாம் வாழும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல்.
  • வடிகால் சரியான முறையில் மூடப்பட்டிருத்தல்.
  • வீட்டுக் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுதல்.

IX. குறுகிய விடை தருக

Question 1.
மஞ்சள் காமாலை நோயின் அறிகுறிகள் யாவை?
விடை:
த பசியின்மை , வாந்தி, மஞ்சள் நிறமுடைய சிறுநீர் கண்களில் மஞ்சள் நிறம்.

Question 2.
பற்களைப் பராமரிக்கும் இரண்டு வழிகளைக் கூறுக.
விடை:

  • ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குதல் மூலம் பற்களிலும், ஈறுகளில் பற்காரை மற்றும் கருவண்ணம் உருவாவதைத் தடுக்கிறது.
  • ஃப்ளோசிங் செய்யும் போது உணவுத் துகள்கள், பற்காரை மற்றும் பாக்டீரியாக்கள் நீக்கப்டுகின்றன.

Question 3.
ஒரு நபர்க்கு நோய் ஏற்படுவதற்கான காரணங்களை எழுது.
விடை:

  • நுண் கிருமிகளின் தொற்று
  • சமச்சீர் உணவு உட்கொள்ளாதது.
  • தவறான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள்
  • ஒன்று அல்லது பல உடல்பாகங்கள் அல்லது உறுப்புகளின் செயலிழப்பு

Question 4.
வெறி நாய்கடியின் தடுப்பு மற்றும் சிகிச்சை முறையை எழுதுக
விடை:

  • விலங்கு கடித்தவுடன் முதலுதவி செய்ய வேண்டும்.
  • பின் மருத்துவரை அணுகுதல் நலம்.
  • இரண்டு முதல் 12 வாரங்கள் அல்லது இரண்டு வருடங்கள் கழிந்த பின் கூட நோயின் அறிகுறிகள் தென்படலாம்.
  • அறிகுறிகள் ஏற்படும் முன் தடுப்பூசி போடுவது அவசியம்.

Question 5.
தடுப்பூசி போடுவதன் நோக்கமென்ன?
விடை:
ஒரு குறிப்பிட்ட வியாதிக்கெதிராக நோய்த் தடுப்பாற்றலை உருவாக்கி அந்நோய்க்கெதிராகப் போராட நம் உடலை தயார் செய்தலே தடுப்பூசி போடுவதன் நோக்கமாகும்.

X. விரிவான விடை தருக

Question 1.
தீக்காயம் என்றால் என்ன? அதன் மூன்று வகைகளை விவரி.
விடை:
வெப்பம், வேதிப்பொருட்கள், மின்சாரம், சூரிய ஒளி அல்லது அணுக்கதிர் வீச்சினால் ஏற்படும் திசுச் சேதங்கள் தீக்காயங்கள் எனப்படும்.

முதல் நிலை தீக்காயங்கள்
இது தோல் வெளிப்புற அடுக்கு மட்டும் பாதிப்படைவதாகும்.

இரண்டாம் நிலை தீக்காயங்கள்
மேல்புறத் தோல் மற்றும் அதற்குக் கீழ் உள்ள உட்தோலும் தீயால் பாதிக்கப்படுவது இரண்டாம் நிலை தீக்காயமாகும்.

மூன்றாம் நிலை தீக்காயங்கள்

  1. இங்கு தோலின் முழு ஆழத்திற்குத் தோலினை அழித்தும் மற்றும் அடிப்படைத்திசுக்களையும் சிதைக்கும் நிலை ஆகும்.
  2. இத்தகைய தீக்கதிர்களால் பாதிக்கப்பட்டோருக்கு பெரும்பாலும் தோல் ஒட்டுதல் தேவைப்படுகிறது.
  3. சேதமடைந்த இரத்தக் குழாய்களிலிருந்து திரவ இழப்பு ஏற்படுவதால், தீப்பட்ட இடத்தில் வீக்கம் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 2.
பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்களின் அறிகுறிகள் அதன் தடுப்பு மற்றும் சிகிச்சை முறையினை அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 7

மனவரைபடம்
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 8

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

10th Science Guide இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையைப் பின்பற்றுவார்?
அ) போத்துத் தேர்வு முறை
ஆ) கூட்டுத் தேர்வு முறை
இ) தூய வரிசைத் தேர்வு முறை
ஈ) கலப்பினமாக்கம்
விடை:
ஆ) கூட்டுத் தேர்வு முறை

Question 2.
பூசா கோமல் என்பது ____________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
அ) கரும்பு
ஆ) நெல்
இ) தட்டைப்பயிறு
ஈ) மக்காச் சோளம்
விடை:
இ) தட்டைப்பயிறு

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 3.
கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது _____________ இன் ரகமாகும்.
அ) மிளகாய்
ஆ) மக்காச்சோளம்
இ) கரும்பு
ஈ) கோதுமை
விடை:
ஈ) கோதுமை

Question 4.
தன்னுடைய 50வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி ____________ ஆகும்.
அ) TR 8
ஆ) IR 24
இ) அட்டாமிட்டா 2
ஈ) பொன்னி
விடை:
அ) IR8

Question 5.
உயிர்த்தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்கு பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?
அ) உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட நொதி
ஆ) வாழும் உயிரினங்கள்
இ) வைட்டமின்கள்
ஈ) (அ) மற்றும் (ஆ)
விடை:
ஈ) (அ) மற்றும் (ஆ)

Question 6.
DNA வை வெட்டப் பயன்படும் நொதி [PTA-2, Sep.20]
அ) கத்திரிக்கோல்
ஆ) ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ்
இ கத்தி
ஈ) RNA நொதிகள்
விடை:
ஆ) ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ்)

Question 7.
rDNA என்பது ____________
அ) ஊர்தி DNA
ஆ) வட்ட வடிவ DNA
இ) ஊர்தி DNA மற்றும் விரும்பத்தக்க DNA-வின் சேர்க்கை .
ஈ) சாட்டிலைட் DNA
விடை:
இ) ஊர்தி DNA மற்றும் விரும்பத்தக்க DNA-வின் சேர்க்கை

Question 8.
DNA விரல்ரேகை தொழில்நுட்பம் _______ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.
அ) ஓரிழை
ஆ) திடீர்மாற்றமுற்ற
இ) பல்லுருத்தோற்ற
ஈ) மீண்டும் மீண்டும் வரும் தொடர்
விடை:
ஈ) மீண்டும் மீண்டும் வரும் தொடர்

Question 9.
மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் ____________ என அழைக்கப்படுகின்றன.
அ) அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்
ஆ) மரபுப் பண்பு மாற்றம் செய்யப்பட்டவை
இ) திடீர் மாற்றம் அடைந்தவை
ஈ) (அ) மற்றும் (ஆ)
விடை:
ஈ) (அ) மற்றும் (ஆ)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 10.
ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n=6x=42) ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி (x) குரோமோசோம் எண்ணிக்கை முறையே ஆகும்.
அ) n = 7 மற்றும் x = 27
ஆ) n = 21 மற்றும் x = 21
இ) n = 7 மற்றும் x = 7
ஈ) n = 21 மற்றும் x = 7
விடை:
ஈ) n = 21 மற்றும் x = 7

II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
______________ என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த தரமுடைய தாவரங்களை உற்பத்திச் செய்யும் கலை ஆகும்.
விடை:
தாவர பயிர்ப் பெருக்கம்

Question 2.
புரதம் செறிந்த கோதுமை ரகம் _____________ ஆகும்.
விடை:
அட்லஸ் 66

Question 3.
______________ என்பது குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் ஆகும்.
விடை:
கால்ச்சிசின்

Question 4.
விரும்பத்தக்க ஊட்டச்சத்து நிறைந்த பயிர்த் தாவரங்களை உற்பத்திச் செய்யும் அறிவியல் முறை _____________ எனப்படும்.
விடை:
உயிரூட்டச் சத்தேற்றம்

Question 5.
நெல் பொதுவாக வண்டல் மண்ணில் செழித்து வளர்கிறது. ஆனால் சடுதிமாற்றத்தின் மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட ___________ என்ற நெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து வளரும்.
விடை:
அட்டாமிட்டா 2

Question 6.
______________ தொழில் நுட்பம் மரபியல் ரீதியாக உயிரினங்களை உற்பத்தி செய்ய வழிவகை செய்துள்ளது.
விடை:
ஜீன் குளோனிங்

Question 7.
ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் நொதியானது DNA மூலக்கூறை _____________ என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட இடங்களில் துண்டாக்குகிறது.
விடை:
கார வரிசை (பேலின்ட்ரோம் வரிசை)

Question 8.
ஒத்த DNA விரல் ரேகை அமைப்பு ____________ இடையே காணப்படும்.
விடை:
ஒற்றைக் கரு இரட்டையர்கள்

Question 9.
வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு _____________ ஆகும்.
விடை:
குருத்தணுக்கள்

Question 10.
ஜீன் குளோனிங் முறையில் விரும்பிய DNA, _________ உடன் ஒருங்கிணைக்கப்படுகிறது.
விடை:
பிளாஸ்மிட் .

III. சரியா அல்லது தவறா என கூறுக. தவறாயின் சரியான கூற்றை எழுதுக.

Question 1.
கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா என்பது மனிதன் உருவாக்கிய ஒரு அல்லோடெட்ராபிளாய்டு ஆகும்.
விடை:
சரி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 2.
இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை சடுதிமாற்றம் எனப்படும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை பன்மய பயிர்ப்பெருக்கம் எனப்படும்.

Question 3.
உடல் இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே தூய வரிசை எனப்படும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: உடல் இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே குளோன்கள் எனப்படும்.

Question 4.
இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம் பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் புரதத் தரத்தை தீர்மானிக்கிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம் பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் இரும்புச் சத்தின் தரத்தை தீர்மானிக்கிறது.

Question 5.
கோல்டன் ரைஸ் ஒரு கலப்புயிரி.
விடை:
தவறு.
சரியான கூற்று: கோல்டன் ரைஸ் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி.

Question 6.
பாக்டீரியாவின் Bt ஜீன், பூச்சிகளைக் கொல்லக் கூடியது.
விடை:
சரி.

Question 7.
செயற்கைக் கருவுறுதல் என்பது உடலுக்குள் நடைபெறும் கருவுறுதலாகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: செயற்கை கருவுறுதல் என்பது உடலுக்கு வெளியே (ஆய்வுக்கூடத்தில் நடைபெறும் கருவுறுதலாகும்.

Question 8.
DNA விரல் ரேகை தொழில் நுட்பம் அலெக் ஜெஃப்ரே என்பவரால் உருவாக்கப்பட்டது.
விடை:
சரி.

Question 9.
மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது DNA லைகேஸைக் குறிக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது ரெஸ்ட்ரிக்சன் நொதிகளைக் குறிக்கும்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 1
விடை:
1 – இ
2 – உ
3 – ஆ
4 – அ
5 – ஈ
6 – ஏ
7 – ஊ
8 – எ

V. கூற்று மற்றும் காரணம் வகை கேள்விகள்.

பின்வரும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாக குறிக்கவும்.
அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

Question 1.
கூற்று: கலப்புயிரி இரு பெற்றோரையும் விட மேம்பட்டதாக இருக்கும்.
காரணம்: கலப்பின வீரியம் தற்கலப்பில் இழக்கப்படுகிறது.
விடை:
இ கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 2.
கூற்று: கால்ச்சிசின் குரோமோசோம் எண்ணிக்கையைக் குறைக்கிறது. [PTA-2]
காரணம்: சகோதரி குரோமோட்டிடுகள் எதிரெதிர்த் துருவங்களை நோக்கி நகர்வதை அது ஊக்குவிக்கிறது.
விடை:
ஈ) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு.

Question 3.
கூற்று: rDNA தொழில் நுட்பம் கலப்பினமாக்கலை விட மேலானது. [PTA-4]
காரணம்: இலக்கு உயிரினத்தில் விரும்பத்தகாத ஜீன்களை நுழைக்காமல் விரும்பத்தக்க ஜீன்கள் மட்டும் நுழைக்கப்படுகின்றன.
விடை:
இ கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.

VI. ஒரே வாக்கியத்தில் விடையளி.

Question 1.
அதிக நார்ச்சத்தும் புரதமும் நிறைந்த கோதுமை ரகத்தின் பெயரை எழுதுக.
விடை:
டிரிட்டிக் கேல் (6n).

Question 2.
நெல்லில் அரைக் குள்ள வகைகள் அறிமுகம் செய்யப்படுள்ளன. இது நெல்லில் காணப்படும் குள்ள மரபணுவால் (ஜீனால்) சாத்தியமானது. இந்த குள்ள மரபணுவின் (ஜீன்) பெயரை எழுதுக.
விடை:
டீ-ஜியோ -வூ-ஜென் (DGWG) என்ற குள்ள நெல் வகையின் ஜீன், sd1(semi-dwarf).

Question 3.
மரபுப் பொறியியல் – வரையறு.
விடை:
ஜீன்களை நாம் விரும்பியபடி கையாள்வதும் புதிய உயிர்களை உருவாக்க ஜீன்களை ஒரு உயிரியிலிருந்து மற்றொரு உயிருக்கு இடம் மாற்றுதலும் மரபுப் பொறியியல் எனப்படும்.

Question 4.
குருத்தணுக்களின் வகைகளை எழுதுக. [PTA-2]
விடை:

  1. கருநிலைக் குருத்தணுக்கள்,
  2. முதிர் குருத்தணுக்கள் (அ) உடலக் குருத்தணுக்கள்.

Question 5.
அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் என்றால் என்ன? [PTA-6]
விடை:
மரபுப் பண்பு மாற்றம் என்பது rDNA தொழில்நுட்பம் மூலம் உயிரினங்களில் விரும்பிய பண்புகளை ஏற்படுத்த ஜீனில் மாற்றத்தை ஏற்படுத்துவது, அல்லது ஜீன்களை விரும்பியபடி கையாள்வது ஆகும். புதிதாக உள் நுழைக்கப்படும் ஜீன் ‘அயல் ஜீன்’ எனப்படும்.

இம்முறையில் மாற்றப்பட்ட ஜீன் அல்லது புதிய ஜீனைப் பெற்ற தாவர, விலங்குகள் மரபுப் பண்பு மாற்றப்பட்ட உயிரிகள் எனப்படும்.

VII. சுருக்கமாக விடையளி :

Question 1.
நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர் பெருக்கம் பற்றி விவரி. [PTA-6]
விடை:

  1. வைரஸ்கள், பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகள் போன்ற நோய் உயிரிகளால் தாவரங்களில் நோய்கள் ஏற்படுகின்றன.
  2. இது பயிர்களின் மகசூலைப் பாதிக்கிறது. எனவே பூஞ்சைக் கொல்லிகள், பாக்டீரியக் கொல்லிகளைக் குறைவாக பயன்படுத்தி, மகசூலை அதிகமாக்கி அதே வேளையில் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற பயிர் வகைகளை உற்பத்திச் செய்வது அவசியமாகிறது.
  3. பயிர்ப்பெருக்கத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற சில ரகங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 2

Question 2.
இந்தியா உணவு உற்பத்தியில் சாதிக்க உதவிய கோதுமையின் மூன்று மேம்பாடு அடைந்த பண்புகளை எழுதுக. [PTA-4]
விடை:

  1. ஹிம்கிரி: இலை மற்றும் பட்டைத்துரு நோய், ஹில்பண்ட் நோய்களுக்கெதிரான எதிர்ப்புத் தன்மை பெற்றது.
  2. அட்லஸ் 66: புரதம் செறிந்த கோதுமை ரகம்.
  3. சோனாலிகா மற்றும் கல்யாண் சோனா: அதிக மகசூல் தருகிற மற்றும் அரைக் குள்ள உயரமுடைய ரகம்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 3.
லைசின் அமினோ அமிலம் செறிந்த இரண்டு மக்காச்சோள கலப்புயிரி வகைகளின் பெயரை எழுதுக. [GMQP-2019]
விடை:
லைசின் என்ற அமினோ அமிலம் செறிந்த கலப்பின மக்காச் சோள ரகங்கள்:

  1. புரோட்டினா
  2. சக்தி மற்றும்
  3. ரத்னா .

Question 4.
வேறுபடுத்துக. [PTA-1]
அ) உடல செல் ஜீன் சிகிச்சை மற்றும் இன செல் ஜீன் சிகிச்சை
ஆ) மாறுபாடு அடையாத செல்கள் மற்றும் மாறுபட்ட செல்கள்
விடை:
அ)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 3

ஆ)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 4

Question 5.
DNA விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாடுகளை எழுதுக. [PTA-3; Sep.20]
விடை:
டி.என்.ஏ. விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறைப் பயன்பாடுகள் :

  • டி.என்.ஏ. விரல் ரேகைத் தொழில்நுட்பமானது தடயவியல் பயன்பாடுகளில் குற்றவாளிகளை அடையாளம் காணப் பயன்படுகிறது.
  • இது ஒரு குழந்தையின் தந்தையை அடையாளம் காண்பதில் ஏற்படும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணவும் பயன்படுகிறது.
  • இது உயிரினத் தொகையின் மரபியல் வேறுபாடுகள் பரிணாமம் மற்றும் இனமாதல் ஆகியவற்றை அறிய உதவுகிறது.

Question 6.
குருத்தணுக்கள் எவ்வாறு புதுப்பித்தல் செயல்பாட்டிற்கு பயன்படுகின்றன?
விடை:

  1. சில நேரங்களில் நமது உடலின் செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகள் ஜீன் கோளாறுகளினாலோ, நோய்களாலோ அல்லது விபத்தினாலோ நிரந்தரமான சேதமடையலாம்.
  2. இந்த சூழ்நிலைகளில் மேற்கண்ட குறைபாடுகளை சரிசெய்ய குருத்தணு சிகிச்சை பயன்படும்.
  3. பார்க்கின்சன் நோய் மற்றும் அல்சீமர் நோய் போன்ற நரம்புச் சிதைவு குறைபாடுகளை குணப்படுத்த நரம்புக் குருத்தணுக்கள் பயன்படுத்தப்பட்டு சிதைவடைந்த அல்லது இழந்த நியூரான்களுக்கு பதிலாக பதிலீடு செய்யப்படுகின்றன.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 7.
உட்கலப்பு மற்றும் வெளிக் கலப்பு – வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 5

VIII. விரிவாக விடையளி

Question 1.
விலங்குகளில் கலப்பின வீரியத்தின் விளைவுகள் யாவை? [PTA-1 & 5]
விடை:
கலப்பின சேர்க்கை மூலம் உயர்தரப் பண்புகளை உடைய கலப்பினங்களை உற்பத்தி செய்வது ஹெட்டிரோசிஸ் அல்லது கலப்பின வீரியம் எனப்படும்.

விலங்குப் பெருக்கத்தில் கலப்பின வீரியத்தின் விளைவுகள் :

  1. கால்நடைகளில் பால் உற்பத்தியை அதிகரித்தல்.
  2. கோழிகளில் முட்டை உற்பத்தியை அதிகரித்தல்
  3. உயர் தர இறைச்சியை உற்பத்திச் செய்தல்
  4. வீட்டு விலங்குகளின் வளர் வீதத்தை அதிகப்படுத்துதல்.

Question 2.
சடுதிமாற்றத்தை எடுத்துக்காட்டுடன் விவரி.
விடை:
ஒரு உயிரினத்தின் DNA-வின் நியூக்ளியோடைடு வரிசையில் திடீரென ஏற்படும், பாரம்பரியத்துக்கு உட்படும் மாற்றமே சடுதிமாற்றம் எனப்படும். இது மரபியல் வேறுபாடுகளை உண்டாக்குவதன் மூ லமாக, உயிரினங்களில் மாற்றங்கனை ஏற்படுத்தும் செயல் ஆகும். சடுதிமாற்றத்துக்கு உட்படும் உயிரினம் “சடுதிமாற்றமுற்ற உயிரினம்” எனப்படும்.

சடுதிமாற்றத்தைத் தூண்டும் காரணிகள் “மியூடாஜென்கள்” அல்லது “சடுதிமாற்றத் தூண்டிகள்” எனப்படும். சடுதி மாற்றத் தூண்டிகள் இரு வகைப்படும். அவை இயற்பியல் சடுதிமாற்றத் தூண்டிகள் மற்றும் வேதியியல் சடுதிமாற்றத் தூண்டிகள் ஆகும்.
1. இயற்பியல் சடுதிமாற்றத் தூண்டிகள்
சடுதிமாற்றத்தைத் தூண்டும் கதிர் வீச்சுகளான X-கதிர்கள் a, B மற்றும் / கதிர்கள், புறஊதாக் கதிர்கள் மற்றும் வெப்பநிலை போன்றவை இயற்பியல் சடுதிமாற்றத் தூண்டிகள் எனப்படும்.

2. வேதியியல் சடுதிமாற்றத் தூண்டிகள்
சடுதிமாற்றத்தைத் தூண்டும் வேதிப்பொருட்கள் வேதியியல்
சடுதிமாற்றத் தூண்டிகள் எனப்படும். எ.கா. கடுகு வாயு மற்றும் நைட்ரஸ் அமிலம். பயிர் மேம்பாட்டிற்கு தூண்டப்பட்ட சடுதிமாற்றத்தைப் பயன்படுத்துவதே “சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கம்” எனப்படும்.

சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கத்தின் சாதனைகள்

  • ஸொனாரா – 64 என்ற கோதுமை ரகத்தில் இருந்து காமாக்கதிர்களைப் பயன்படுத்தி சர்பதி ஸொனாரா என்ற கோதுமை ரகம் உருவாக்கப்பட்டது.
  • உவர் தன்மையைத் தாங்கும் திறன் மற்றும் தீங்குயிரி எதிர்ப்புத் தன்மை பெற்ற அட்டாமிட்டா 2 அரிசி ரகம்.
  • கடினமான கனி உறை கொண்ட நிலக்கடலை ரகம்.

Question 3.
உயிரூட்டச் சத்தேற்றம் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
விரும்பத் தக்க ஊட்டச் சத்துக்களான வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த பயிர் தாவரங்களை உற்பத்திச் செய்யப் பயன்படுத்தப்படும் அறிவியல் முறையே உயிரூட்டச் சத்தேற்றம் எனப்படும். இதன் மூலம் உருவாக்கப்பட்ட சில பயிர் ரகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. லைசின் என்ற அமினோ அமிலம் செறிந்த கலப்பின மக்காச்சோள ரகங்களான புரோட்டினா, சக்தி மற்றும் ரத்னா (இந்தியாவில் உருவாக்கப்பட்டவை).
  2. புரதம் செறிந்த கோதுமை ரகமான அட்லஸ் 66.
  3. இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம்.
  4. வைட்டமின் A செறிந்த கேரட், பூசணி மற்றும் கீரை ரகங்கள்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 4.
ஜீன் குளோனிங் தொழில்நுட்பத்தைப் படத்துடன் விவரி.
விடை:
குளோன் என்பது ஒரு உயிரினத்தின் நகல் ஆகும். குளோனிங் என்பது மரபொத்த உயிரிகளை பிரதிகளாக உற்பத்தி செய்யும் முறையாகும்.

ஜீன் குளோனிங் முறையில், ஒரு ஜீன் அல்லது டி.என்.ஏ துண்டானது பாக்டீரிய செல்லினுள் செலுத்தப்பட்டு, பாக்டீரிய செல் பகுப்படையும் போது அதனுடன், உட்செலுத்தப்பட்ட டி.என்.ஏ துண்டு நகல் பெருக்கம் அடைவதாகும்.

ஜீன் குளோனிங் செயல் நுட்பத்தின் அடிப்படை நிகழ்வுகளாவன.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 6

 

  • ரெஸ்ட்ரிக்ஸன் நொதியைப் பயன்படுத்தி விரும்பிய டி.என்.ஏ துண்டைப் பிரித்தெடுத்தல்.
  • டி.என்.ஏ. துண்டைத் தகுந்த கடத்தியினுள் (பிளாஸ்மிட்) நுழைத்து மறுசேர்க்கை டி.என்.ஏக்களை’ (rDNA) உருவாக்குதல்.
  • விருந்தோம்பி பாக்டீரிய செல்லின் உள்ளே மறுசேர்க்கை டி.என்.ஏ வை உட்புகுத்துதல் உருமாற்றம்).
  • உருமாற்றமடைந்த விரும்தோம்பி செல்களைத் தேர்ந்தெடுத்து மறுசேர்க்கை டி.என்.ஏ (rDNA) வை பாக்டீரிய செல் பெருக்கம் மூலம் நகல் பெருக்கம் செய்தல்.
  • விருந்தோம்பியின் செல்லில் புதிய ஜீன் தனது பண்புகளை வெளிப்படுத்துதல்.

இம்முறையின் மூலம் பல நொதிகள் ஹார்மோன்கள் மற்றும் மருந்துகளை தயாரிக்கலாம்.

Question 5.
மருத்துவ துறையில் உயிர்தொழில்நுட்பவியலின் முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:
மரபுப் பொறியியல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த மதிப்பு மிக்க புரதங்கள் அல்லது பாலிபெப்டைடுகள் உருவாக்கப்படுகின்றன. இவை பல நோய் தீர்க்கும் மருந்துப் பொருட்களை வணிக ரீதியாக உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

rDNA தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவப் பொருட்கள்

  1. இரத்த சர்க்கரை நோய் சிகிச்சைக்கான இன்சுலின்
  2. வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின் குறைபாட்டினை நீக்கும் மனித வளர்ச்சி ஹார்மோன்
  3. ஹீமோஃபிலியா என்ற இரத்த உறைதல் குறைபாட்டு நோய்க் கட்டுப்பாட்டிற்கான ‘இரத்த உறைதல் காரணிகள்’.
  4. திசு பிளாஸ்மினோஜன் தூண்டி, (இரத்தம் உறைதலைத் தடுக்கும் காரணி) இரத்தக் கட்டிகளைக் கரைத்து இதய அடைப்பைத் தவிர்க்க உதவுகின்றது.
  5. ஹெப்பாடிடிஸ் B மற்றும் வெளி நாய்க்கடி (ரேபிஸ்) நோயைத் தடுக்கும் தடுப்பூசிகள்.

IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்

Question 1.
பயிர் ரகங்களை பெருக்குபவர் ஒருவர் விரும்பத் தக்க பண்புகளை தாவரப் பயிரில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் இணைத்துக் கொள்ளும் பண்புகளின் பட்டியலைத் தயார் செய்.
விடை:
அதிக மகசூல் தரும் பயிர் ரகங்களை உற்பத்திச் செய்யும் பயிர்ப்பெருக்க முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. புதிய வகைத் தாவரங்களின் அறிமுகம்
  2. தேர்வு செய்தல்
  3. பன்மய பயிர்ப்பெருக்கம்
  4. சடுதிமாற்றப் பயிர்ப்பெருக்கம்
  5. கலப்பினமாக்கம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 2.
‘இயற்கை விவசாயம் பசுமைப்புரட்சியை விட சிறந்தது.’ காரணங்கள் கூறு.
விடை:
வளரும் நாடுகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளிலும் அதிக மகசூல் தரும் பயிர் வகைகள் மற்றும் நவீன விவசாய நுட்பங்கள் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் செயல்முறையே பசுமைப்புரட்சி ஆகும்.

மேலும் நோய் எதிர்ப்பு பூச்சிகள் மற்றும் தீங்குயில்லா மேம்பட்ட ஊட்டச்சத்து போன்றவற்றின் மூலம் பசுமைப்புரட்சி செய்து அதிக மகசூல் தரும் தாவரங்களை உருவாக்கினர். இதனால் சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. அவை

  • சில நிலங்களில் ஒரே வகையான தாவரங்களையே பயிரிடுகின்றனர்.
  • பூச்சிக் கொல்லிகள் வேதியியல் சேர்மங்களால் தயாரிக்கப்பட்ட உரங்களை பயன்படுத்துகின்றனர்.
  • அதிக விவசாயிகளுக்கு பணம் செலவிட முடியவில்லை
  • சில வகையான தாவரங்களை பயிரிடுவதால் மண்ணின் தரம் பாதிக்கப்படுவதாக சூழ்நிலையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இயற்கை விவசாயம் பசுமைப்புரட்சியை விட சிறந்தது.

  1. இவை பசுந்தாள் உரம், மண்புழு உரம், வீட்டுக் கழிவுகளிலிருந்து பெறப்பட்ட உரம், போன்றவற்றை பயன்படுத்துவதால் சூழ்நிலையையும் மண் வளத்தையும் பாதிப்படையச் செய்ய போவதில்லை.
  2. தாவரங்களின் வேறுபட்ட சிற்றினங்களை வளர்ப்பதால் நோய்த் தடுப்பாற்றல் ஏற்படுகிறது.
  3. மேலும் ஊடுபயிர் பயிரிடுதல் போன்றவற்றினால் பல்லுயிர் நன்மை பெறுகிறது. எனவே இயற்கை விவசாயம் சிறந்தது.

Question 3.
பன்மயம் இராட்சதத் தன்மையை பண்பாகக் கொண்டது. இக்கூற்றை சரியான காரணத்துடன் விவரி.
விடை:

  1. இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினம் பன்மயம் எனப்படும். ஜீன்கள் அதிகமாகின்றன. எனவே காய்கறிகளும் பழங்களும் அளவில் பெரிதாக கிடைக்கிறது.
  2. மேலும் பழங்களும் காய்கறிகளும் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
  3. மேலும் அவற்றில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. எனவே பன்மயம் இராட்சச தன்மையை பண்புகளால் கொண்டது எனலாம்.

Question 4.
P என்ற ஜீன் வைட்டமின் A உற்பத்திக்குத் தேவைப்படுகிறது. இது ‘R’ என்ற மரபுப்பண்பு மாற்றப்பட்ட தாவரத்தை உற்பத்திச் செய்ய ‘Q’ வின் ஜீனோமுடன் இணைக்கப்படுகிறது.
அ) P,Q மற்றும் R என்பன யாவை?
ஆ) இந்தியாவில் Rன் முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:
அ) P என்பது பீட்டா கரோட்டின் ஜீன்
Q என்பது சாதாரண அரிசி
R என்பது ‘கோல்டன் ரைஸ்’

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

ஆ) இந்தியாவில் R-ன் முக்கியத்துவம்:

  • மரபணு மாற்றம் செய்யப்பட்ட ‘கோல்டன் ரைஸ்’ பீட்டா கரோட்டினை உற்பத்திச் செய்யும்.
  • வைட்டமின் A குறைபாட்டைத் தவிர்க்கும்.

அரசு தேர்வு வினா-விடை 
4 மதிப்பெண்கள்

Question 1.
ஜீன் சிகிச்சை முறை பற்றி விளக்குக. [Sep.20]
விடை:
ஜீன் சிகிச்சை முறை :
(i) மனிதனில் குறைபாடுள்ள ஜீன்களுக்கு பதிலாக திருத்தப்பட்ட, செயல்படும் ஜீன்களை இடம் மாற்றி மரபு நோய்களையும், குறைபாடுகளையும் சரிசெய்வது ஜீன் சிகிச்சை எனப்படும்.

(ii) குறைபாடு / நோய் உள்ள மனிதரின் ஜீன்கள் மறுசேர்க்கை டி.என்.ஏ தொழில்நுட்பத்திற்கு உட்படுத்தப்பட்டு திருத்தப்படுகின்றன.

(iii) இம்முறை 1990 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

(iv) உடல் செல்களில் திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் உடல் செல் ஜீன் சிகிச்சை எனப்படும்.

(v) கருநிலை அல்லது இனப்பெருக்க செல்களில் விந்து மற்றும் அண்ட செல்) திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் இன செல் அல்லது கருநிலை செல் ஜீன் சிகிச்சை எனப்படும்.

(vi) இது நாள் வரை இனப்பெருக்க செல்கள் அல்லாத உடல செல்களில் மட்டும் ஜீன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(vii) உடல செல்களில் செய்யப்படும் ஜீன் திருத்தம் அந்த திருத்தம் செய்யப்படும் நோயாளிக்கு மட்டுமே நன்மை பயக்கும். அத்திருத்தம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படுவதில்லை.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

6th Science Guide விலங்குகள் வாழும் உலகம் Text Book Back Questions and Answers

I. தகுந்த வார்த்தைகளைக் கொண்டு கீழ்க்கண்டவற்றை நிரப்புக

Question 1.
நீர் நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை ……. என்று அழைக்கலாம்.
விடை:
வாழிடம்

Question 2.
செல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகளை மற்றும்……… என வகைப்படுத்தலாம்.
விடை:
ஒரு செல் மற்றும் பல
செல் உயிரினம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 3.
பறவைகளின் வால் திசை திருப்புக் கட்டையாக செயல்பட்டு ……… பறக்கும் திசையை உதவுகிறது.
விடை:
கட்டுப்படுத்த

Question 4.
அமீபா உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது,
விடை:
பொய்க்கால்கள்

II. சரியா அல்லது தவறா? தவறாக இருப்பின் சரி செய்து எழுதுக

Question 1.
ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது இருக்கக் கூடிய இடம் வாழிடம் எனப்படும்.
விடை:
சரி

Question 2.
புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
விடை:
தவறு.
புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது.

Question 3.
ஒரு செல் உயிரியான அமீபா, பொய்க்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.
விடை:
சரி

Question 4.
பறவைகளால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும்.
விடை:
சரி

Question 5.
பாரமீசியம் ஒரு பலசெல் உயிரி.
விடை:
தவறு.
பார்மீசியம் ஒரு ஒருசெல் உயிரி .

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

III. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
வெப்பமண்டல மழைக் காடுகள். புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை …… என்று அழைக்கிறோம்.
விடை:
வாழிடம்

Question 2.
ஒரு செல்லால் ஆன உயிரினங்கள் …….. என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
ஒரு செல் உயிரினம்

Question 3.
மீனின் சுவாச உறுப்பு ………… ஆகும்
விடை:
செவுள்கள்

Question 4.
கால்களில் உள்ள வளை நகங்களின் மூலம் பல்லிகள் தரைகளில் ………
விடை:
நடக்கின்றன

Question 5.
ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் ……… சேமிக்கின்றன.
விடை:
கொழுப்பு

IV. குறு வினாக்கள்

Question 1.
பறவைகள் தங்கள் இரைகளை எவ்வாறு பிழக்கின்றன?
விடை:
பறவைகளின் உணவு பிடிக்கும் விதம் அதன் இனத்தை பொறுத்தது.

  • நீரில் வாழும் பறவைகள் தலைகீழாகப் பாய்ந்து அதன் அலகு மூலம் நீரில் உள்ள மீன்களைப் பிடிக்கிறது.
  • வயல்வெளிகளில் வாழும் பறவைகள், புல் மற்றும் வயல்களில் பறக்கும் சிறிய பூச்சிகளை தன் அலகு மூலம் பிடிக்கிறது.
  • வானத்தில் பறக்கும் பறவைகள் தரையில் உள்ள விலங்குகளை அதனுடைய காலிலுள்ள கூர்மையான நகங்கள் மூலம் பிடிக்கிறது.

Question 2.
இந்தியாவில் ஒட்டகங்களை நாம் எங்கு காண முடியும்
விடை:
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகங்களைக் காணலாம்
ஒட்டகம் வாழும் இடங்கள்

  • ஜோத்பூர்
  • பஸ்கர்
  • பிக்கானர்
  • ஜாஸ்சால்மர்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 3.
அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு எது?
விடை:
அமீபா இடப்பெயர்ச்சியின் போது விரல் போன்ற போலி கால்களை உருவாக்குகிறது. இக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.

Question 4.
பாம்புகளின் உடல் பகுதிகள் யாவை?
விடை:
பாம்பின் உடலை மூன்று பிரிவாக பிரிக்கலாம். அவை தலை, உடல், வால். தலையில் உள்ள உறுப்புகள் – இருகண்கள், இரு நாசித்துளைகள், வாய்.

Question 5.
பறவைகள் காற்றில் பறக்கும் போது எந்த உடலமைப்பைப் பயன்படுத்தி பறக்கும் திசையை மாற்றிக் கொள்கின்றன.
விடை:
பறவைகள் பறக்கும் போது அதன் வாலைப் பயன்படுத்தி திசையை மாற்றிக் கொள்கிறது.

V. சிறு வினாக்கள்

Question 1.
ஒரு செல் உயிரிகளை பல செல் உயிரிகளிடமிருந்து வேறுபடுத்துக்
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 80
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 81

Question 2.
துருவக் கரடிகள் மற்றும் பென்குயின்களில் காணப்படும் தகவமைப்புகளை எழுதுக.
விடை:
துருவக்கரடிகள் :

  1. குட்டையான கால்களைப் பெற்றுள்ளது.
  2. வெப்பத்தை குறைப்பதற்கு குறைந்த உடல் பரப்பை பெற்றுள்ளது.
  3. தடித்த தோலைப் பெற்றுள்ளது.
  4. உடல் முழுவதும் மென்மையான அதிகமான ரோமங்களை பெற்றுள்ளது.
  5. தோலுக்கடியில் தடித்த கொழுப்பு திட்டுகளை பெற்றுள்ளது.
  6. கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவையே உண்ணுகிறது.

பென்குயின் :

  1. படகு போன்ற உடல் அமைப்பை பெற்றுள்ளது.
  2. இதன் இறகுகள் சூரிய ஒளியை ஈர்க்கும் தன்மை கொண்டது.
  3. கடினமான தோலை பெற்றுள்ளது.
  4. இதன் அடித்தோல் அதிக கொழுப்பு திட்டுகளைக் கொண்டது.
  5. இது நீருக்குள் பறப்பதற்கு குட்டையான இறகுகளை (துடுப்புகள்) பெற்றுள்ளது.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 3.
பறவைகளின் எவ்வகையான உடலமைப்பு காற்றில் பறக்க உதவி செய்கிறது?
விடை:

  1. பறவைகளின் படகு போன்ற உடலமைப்பு.
  2. பறவைகளின் முன்னங்கால்கள் இறக்கையாக மாறுபாடு அடைந்திருத்தல்.
  3. உள்ளீடற்ற, வெற்றிடத்தினால் ஆன இலேசான எலும்புகளைப் பெற்றிருத்தல்.
  4. பறவைகளின் உடல் இறகுகளால் மூடப்பட்டிருத்தல்.

Question 4.
முதுகெலும்பற்ற விலங்குகளின் வகைகள் யாவை?
விடை:

  1. புரோட்டோசோவா (ஓரு செல் உயிரிகள்)
  2. பொரிஃபெரா (துளையுடலிகள்)
  3. சீலென்டிரேட்டா (குழியுடலிகள்)
  4. பிளாட்டிஹெல்மின்திஸ் (தட்டைபுழு இனம்)
  5. நிமட்டோடா (உருளைப்புழு இனம்)
  6. ஆர்த்ரோபோடா (கணுக்காலிகள்)
  7. மொலஸ்கா (மெல்லுடலிகள்)
  8. எக்கினோ டெர்மேட்டா (முட்தொலிகள்)

VI. விரிவான விடையளி

Question 1.
பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களில் காணப்படும் தகவமைப்புகளை விவரி.
விடை:

  1. பாலைவனத்தில் சூடான மணலிருந்து தனது உடலை பாதுகாக்க நீண்ட கால்களைப் பெற்றுள்ளது.
  2. நீர் கிடைக்கும் போது அதிக நீரை அருந்தி தன் உடலில் நீரை சேர்த்து வைக்கிறது.
  3. தன் உடலில் உள்ள நீர் இழப்பை குறைக்க குறைந்த அளவு சிறுநீரை வெளியேற்றுகிறது. மேலும் வியர்வை வெளியேற்றுவதில்லை.
  4. அதன் திமிலில் கொழுப்பை சேமித்து வைக்கிறது. சக்தி தேவைப்படும் போது கொழுப்பை சிதைத்து ஊட்டம் பெறுகிறது.
  5. பாலைவன மிருதுவான மணலில் நடக்க பெரிய தட்டையான திண்டுகால்களைப் பெற்றுள்ளது.
  6. நீண்ட கண் இமைகள் மற்றும் நீண்ட தோல் கண்கள் மற்றும் காதுகளை புழுதிப்புயலிலிருந்து பாதுகாக்கிறது.
  7. நாசி துவாரங்கள் தூசிகள் உள்ளே செல்வதை தடுக்க மூடிய நிலையில் உள்ளது.

6th Science Guide விலங்குகள் வாழும் உலகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கீழ் உள்ளவையில் எது ஒரு செல் உயிரி
அ. மீன்
ஆ. தவளை
இ. யூக்ளினா
ஈ. பல்லி
விடை:
இ. யூக்ளினா

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 2.
அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு
அ. போலிக் கால்கள்
ஆ. சிலியா
இ. கசையிழை
ஈ.ஏதுமில்லை
விடை:
அ. போலிக் கால்கள்

Question 3.
நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரி
அ. தவளை
ஆ. மீன்
இ. புறா
ஈ. ஒட்டகம்
விடை:
அ. தவளை

Question 4.
எப்போதும் நீர் அருந்தாத விலங்கு
அ. எலி
ஆ. பூனை
இ. நாய்
ஈ. பசு
விடை:
அ. எலி

Question 5.
வேடந்தாங்கல் ____ சரணாலயம்
அ. பறவைகள் சரணாலயம்
ஆ. புலிகள் சரணாலயம்
இ. யானை சரணாலயம்
ஈ. மான்கள் சரணாலயம்
விடை:
அ. பறவைகள் சரணாலயம்

II. சரியா அல்லது தவறா ? தவறாக இருப்பின் சரி செய்து எழுதுக

Question 1.
ஒரு செல் உயிரிகளில் செல் பிரிதல் மூலம் வளர்ச்சியடைகிறது.
விடை:
தவறு
ஒரு செல் உயிரிகளில் செல்களின் அளவு அதிகரிப்பின் மூலம் வளர்ச்சி அடைகிறது.

Question 2.
மீனின் படகு போன்ற உடலமைப்பு நீரில் எளிதாக நீந்த உதவுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 3.
மீனின் வால், திசையை திருப்பவும் நீரில் அதன் உடல் சமநிலை பெறவும் உதவுகிறது.
விடை:
சரி

Question 4.
பறவையின் பின்னங்கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளன.
விடை:
தவறு
பறவையின் முன்னங்கால்கள் இறக்கையாக மாறியுள்ளது.

Question 5.
பறவையின் வால் பறக்கும் திசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
விடை:
சரி

III. படத்தில் பாகம் குறி

Question 1.
கீழ் உள்ள அமீபா படத்தில் A மற்றும் B எதைக் குறிக்கிறது.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 30
விடை:
A போலிக்கால்கள்
B உட்கரு

Question 2.
கீழ் உள்ள பரமேசிய படத்தில் A மற்றும் B பாகங்களைக் குறி
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 31
விடை:
A குறுயிழை
B சுருங்கும் நுண் குமிழ்

Question 3.
கீழ் உள்ள யூக்ளினா ) படத்தில் A மற்றும் B எப்பாகத்தைக் குறிக்கிறது.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 32
விடை:
A- கசையிழை
B உட்கரு

IV. குறுவிடை எழுதுக

Question 1.
ஒரு செல் உயிரிகளின் இடப்பெயர்ச்சி உறுப்புக்களை கூறு
விடை:
அ. புரோட்டோ சோவா – போலிக்கால்கள்
ஆ. பாரமீசியம் – குறு இழைகள்
இ. யூக்ளினா – கசையிழை

Question 2.
வலசை போதல் என்றால் என்ன?
Answer;
ஒரு விலங்கு பருவ மாறுபாட்டின் காரணமாக ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு செல்லுதல்.

Question 3.
கோடை உறக்கம் என்றால் என்ன ?
விடை:
சில விலங்குகள் அதிகப்படியான வெப்பத்தை தவிர்க்க அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி உறக்கத்தில் ஈடுபடும். எ.கா – நத்தை

Question 4.
குளிர்கால உறக்கம் என்றால் என்ன?
விடை:
சில விலங்குகள் அதிகப்படியான குளிரை தவிர்க்க அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி உறக்கத்தில் ஈடுபடும். எ.கா- ஆமை

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 5.
இருமைப்பார்வை என்றால் என்ன?
விடை:
பறவைகள் ஒரே சமயத்தில் இரு கண்கள் மூலம் வெவ்வேறு பொருள்களை காண முடியும் இதற்கு இருமைப்பார்வை என்று பெயர்.

Question 6.
பாலைவனக்கப்பல் என எதை ஏன் அழைக்கின்றோம்.
விடை:

  • ஒட்டகம் பாலைவன கப்பல் என அழைக்கப்படுகிறது.
  • ஒட்டகம் பெரிய தட்டையான திண்டு கால்களை பெற்றுள்ளது.
  • இக்கால்களின் உதவியால் பாலைவன மிருதுவான மணலில் நன்றாக நடக்கிறது.

V. விரிவான விடையளி

Question 1.
பறவைகள் பெற்றுள்ள தகவமைப்புகளைக் கூறு
விடை:

  1. பறவைகள் இறகுகளால் மூடப்பட்ட உடலைப் பெற்றுள்ளதால் குறைந்த எடையுடன் பறக்க உதவுகிறது.
  2. பறவைகளின் வாய்கள் அலகுகளாக மாறியுள்ளது.
  3. நுரையீரல் மூலம் சுவாசிக்கிறது.
  4. முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளது
  5. வெற்றிடத்தாலான எலும்புகளைப் பெற்றுள்ளது
  6. பறவைகளின் கால்கள் கூர்மையான நகங்களைப் பெற்றுள்ளதால், நடக்கவும், மரங்களின் கிளைகளை பற்றிக் கொள்ளவும் உதவுகிறது.
  7. பறவையின் வால் பறக்கும் திசையை மாற்ற உதவுகிறது.
  8. பறவையின் கண்கள் ஒரே நேரத்தில் இரு வெவ்வேறு பொருள்களை பார்க்க உதவுகிறது.

விலங்குகள் வாழும் உலகம் – மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 90

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 1 Chapter 4 அணு அமைப்பு Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 1 Chapter 4 அணு அமைப்பு

7th Science Guide அணு அமைப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பருப்பொருளின் அடிப்படை அலகு ______________ ஆகும்.
அ) தனிமம்
ஆ) அணு
இ) மூலக்கூறு
ஈ) எலக்ட்ரான்
விடை:
ஆ) அணு

Question 2.
அணுக்கருவைச் சுற்றி வரும் அடிப்படை அணுத்துகள் ____________ ஆகும்.
அ) அணு
ஆ) நியூட்ரான்
இ) எலக்ட்ரான்
ஈ) புரோட்டான்
விடை:
இ) எலக்ட்ரான்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு

Question 3.
_____________ நேர் மின்சுமையுடையது.
அ) புரோட்டான்
ஆ) எலக்ட்ரான்
இ) மூலக்கூறு
ஈ) நியூட்ரான்
விடை:
அ) புரோட்டான்

Question 4.
ஓர் அணுவின் அணு எண் என்பது அதிலுள்ள ____________ ஆகும்.
அ) நியூட்ரான்களின் எண்ணிக்கை
ஆ) புரோட்டான்களின் எண்ணிக்கை
இ) புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை
ஈ) அணுக்களின் எண்ணிக்கை
விடை:
ஆ) புரோட்டான்களின் எண்ணிக்கை

Question 5.
நியூக்ளியான்கள் என்பது _____________ குறிக்கும்.
அ) புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்
ஆ) நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்
இ) புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்
ஈ) நியூட்ரான்கள் மற்றும் பாஸிட்ரான்களைக்
விடை:
இ) புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ஒரு அணுவில் காணப்படும் மிகச்சிறிய துகள் ______________
விடை:
அணுக்கூறுகள்

Question 2.
அணுவின் உட்கருவில் __________ மற்றும் _________ இருக்கும்.
விடை:
புரோட்டான்கள், நியூட்ரான்கள்

Question 3.
அணுவின் உட்கருவை _____________ சுற்றி வரும்
விடை:
எலக்ட்ரான்கள்

Question 4.
கார்பனின் இணைதிறன் 4 மற்றும் ஹைட்ரஜனின் இணைத்திறன் 1 ஆக உள்ளது எனில், மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு _____________
விடை:
CH4

Question 5.
மெக்னீசியம் அணுவின் வெளிவட்டப் பாதையானது இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கிறது எனில் மெக்னீசியம் அணுவின் இணைதிறன் _____________
விடை:
இரண்டு

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு 2

IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக

Question 1.
ஒரு தனிமத்தின் அடிப்படை அலகு மூலக்கூறு ஆகும்.
விடை:
தவறு. ஒரு தனிமத்தின் அடிப்படை அலகு அணு ஆகும்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு

Question 2.
எலெக்ட்ரான்கள் நேர்மின்சுமை கொண்டவை
விடை:
தவறு. எலெக்ட்ரான்கள் எதிர்மின்சுமை கொண்டவை

Question 3.
ஓர் அணு மின்சுமையற்ற நடுநிலைத் தன்மையை கொண்டது.
விடை:
சரி

Question 4.
அணுவின் உட்கருவைச் சுற்றி புரோட்டான்கள் காணப்படுகின்றன.
விடை:
தவறு. அணுவின் உட்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் காணப்படுகின்றன.

V. ஒப்புமை தருக

Question 1.
சூரியன் : உட்கரு :: கோள்கள் : _____________
விடை:
எலக்ட்ரான்கள்

Question 2.
அணு எண் : ____________ :: நிறை எண் : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை.
விடை:
புரோட்டான்கள் (அ) எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

Question 3.
K : பொட்டாசியம் :: C : _________
விடை:
கார்பன்

VI. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து, சரியான ஒன்றைத் தேர்வு செய்க

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி

Question 1.
கூற்று : ஓர் அணு மின்சுமையற்றது, நடுநிலையானது
காரணம் : அணுக்கள் சம எண்ணிக்கையிலான புரோட்டான்களையும் எலக்ட்ரான்களையும் கொண்டவை.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Question 2.
கூற்று : ஓர் அணுவின் நிறை என்பது அதன் உட்கருவின் நிறையாகும்.
காரணம் : உட்கரு மையத்தில் அமைந்துள்ளது.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
சரியான விளக்கம் : அணுவின் நிறை என்பது புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல்.

Question 3.
கூற்று : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை அணு எண்ணாகும்.
காரணம் : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை நிறை எண்ணாகும்.
விடை:
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
சரியான விளக்கம் : புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அணு எண்ணாகும்.

VII. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
அணு – வரையறு.
விடை:
பருப்பொருள்களை உருவாக்கும் மிகச் சிறிய துகள்களே அணுக்கள் எனப்படும்.

Question 2.
அணுவின் அடிப்படைத் துகள்களைக் குறிப்பிடவும்.
விடை:
புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்கள்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு

Question 3.
அணு எண் என்றால் என்ன?
விடை:
ஓர் அணுவில் உள்ள புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கையே அணு எண் எனப்படும்.

Question 4.
புரோட்டானின் பண்புகள் யாவை?
விடை:

  • புரோட்டான் அணுவின் மிகச்சிறிய அணுக்கூறு ஆகும்.
  • புரோட்டான்கள் அணுக்கருவினுள் அமைந்துள்ளன.
  • புரோட்டான்கள் நேர்மின்னூட்டம் பெற்ற துகள்கள் ஆகும்.
  • புரோட்டான்கள் நேர்மின்னூட்டத்தின் மதிப்பு எலக்ட்ரான் பெற்றுள்ள எதிர் மின்னூட்டத்தின் மதிப்பிற்குச் சமமாகும்.

Question 5.
நியூட்ரான்கள் ஏன் மின்சுமையற்ற துகள்கள் என அழைக்கப்படுகின்றன?
விடை:

  • நியூட்ரான்கள் எவ்வித மின்சுமையும் கொண்டிருக்கவில்லை.
  • எனவே நியூட்ரான்கள் மின்சுமையற்ற துகள்கள் என அழைக்கப்படுகின்றன.

VIII. சுருக்கமாக விடையளி

Question 1.
ஐசோடோப்புகள், ஐசோபார்கள் – வேறுபடுத்தவும்.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு 3

Question 2.
ஐசோடோப்புகள் என்றால் என்ன? ஓர் உதாரணம் தருக.
விடை:

  • ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு எண்ணிக்கையுள்ள நியூட்ரான்களை பெற்றிருக்கலாம்.
  • அத்தகைய அணுக்கள் ஒரே அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்களையும் பெற்றுள்ளன. அவை ஐசோடோப்புகள் என அழைக்கப்படுகின்றன.
  • உதாரணம் : புரோட்டியம் (1H1), டியூட்ரியம் (1H2), மரிட்டியம் (1H3)

Question 3.
நிறை எண் மற்றும் அணு எண் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு 4

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு

Question 4.
ஒரு தனிமத்தின் அணு எண் 9 மற்றும் அத்தனிமம் 10 நியூட்ரான்களை கொண்டுள்ளது எனில், தனிம ஆவர்த்தன அட்டவணையினைக் கொண்டு அது எத்தனிமம் எனக் கண்டறிக. அதன் நிறை எண் யாது?
விடை:
தனிமம் ஃப்ளூரின் ஆகும். 9F19 நிறை எண்
A = புரோட்டான் எண்ணிக்கை + நியூட்ரான் எண்ணிக்கை
= அணு எண் + நியூட்ரான் எண்ணிக்கை
= 9 + 10 = 19

IX. விரிவாக விடையளி

Question 1.
அணு அமைப்பின் படம் வரைந்து அதன் அடிப்படைத் துகள்களின் நிலையினை விளக்குக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு 5

  • அணு கோள வடிவமானது.
  • நடுவில் உட்கரு அமைந்துள்ளது.
  • உட்கருவில் புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் உள்ளன.
  • எலக்ட்ரான்கள் உட்கருவை வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.

Question 2.
ஒரு தனிமத்தின் அணு எண் மற்றும் நிறை எண் முறையே 26 மற்றும் 56. அந்த அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. அதன் அணு அமைப்பினை வரையவும்.
விடை:
ராட்டான்களின்
அணு எண் (Z) = புரோட்டான்களின் எண்ணிக்கை = எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 26
நிறை எண் (A) = புரோட்டான்களின் எண்ணிக்கை + நியூட்ரான்களின் எண்ணிக்கை (N)
A = Z ± N
N = A – Z
= 56 – 26 = 30
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு 6
எலக்ட்ரான் அமைப்பு : 2, 8, 14, 2

Question 3.
நியூக்ளியான்கள் என்றால் என்ன? அவை ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
விடை:
நியூக்ளியான்களின் பண்புகளை எழுதவும்.

  • புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் ஆகியன நியூக்ளியான்கள் ஆகும்.
  • அணுவின் உட்கருவினுள் இவைகாணப்படுவதால் நியூக்ளியான்கள் என அழைக்கப்படுகின்றன.
  • புரோட்டான்கள் நேர்மின்னூட்டம் பெற்ற துகள்கள் ஆகும்.
  • நியூட்ரான்கள் எவ்வித மின்சுமையும் பெற்றிருக்கவில்லை.
  • புரோட்டான் மற்றும் நியூட்ரான் ஆகியன ஒத்த நிறையை பெற்றுள்ளன.

Question 4.
இணைதிறனை வரையறு. அணு எண் 8 கொண்ட ஒரு தனிமத்தின் இணைதிறன் மதிப்பு என்ன? அத்தனிமம் ஹைட்ரஜனுடன் இணைந்து உருவாக்கும் சேர்மம் யாது?
விடை:

  1. ஓர் அணு பிற அணுவுடன் இணையக்கூடிய திறனிற்கு இணை திறன் என்று பெயர்.
  2. ஓர் அணுவின் இணைதிறன் அது எத்தனை ஹைட்ரஜன் அணுக்களை பிணைத்து வைத்திருக்க இயலும் என்பதனை கொண்டு அளவிடப்படுகிறது.
  3. அணு எண் 8 கொண்ட தனிமம் ஆக்சிஜன் ஆகும்.
  4. ஆக்சிஜனின் இணைதிறன் இரண்டு.
  5. ஒரு ஆக்சிஜன் அணு இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்து ஒரு மூலக்கூறு நீரினை உருவாக்குகிறது.
  6. நீர் மூலக்கூறின் வாய்பாடு H2O

X. உயர் சிந்தனைத் திறன்கள் அடிப்படையிலான வினாக்கள்

Question 1.
ஒரு தனிமத்தின் அணுவில் எலக்ட்ரான் இல்லை எனில் அந்த அணுவிற்கு நிறை உண்டா இல்லையா? ஒரு அணு எலக்ட்ரான் இன்றி இருக்குமா? அவ்வாறு இருந்தால், எடுத்துக்காட்டு தருக.
விடை:

  • ஒரு அணு எலக்ட்ரான் இன்றி இருக்காது..
  • ஒரு அணு நடுநிலைத் தன்மையுடன் விளங்க சம எண்ணிக்கையில் புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • எலக்ட்ரான் இல்லாத அணு நேர்மின் அயனியாக இருக்கும்.
  • நேர்மின் அயனியில் புரோட்டான் மற்றும் நியூட்ரான்கள் உள்ளதால் அதற்கு நிறை உண்டு.
  • எ.கா. H+ அயனியில் ஒரு புரோட்டான் மட்டுமே உள்ளது. நியூட்ரான்கள் இல்லை எனவே
  • H+ அயனியின் நிறை புரோட்டானின் நிறைக்கு சமம்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு

Question 2.
சாதாரண உப்பு என்பது யாது? அதிலுள்ள தனிமங்கள் யாவை? சாதாரண உப்பின் மூலக்கூறு வாய்ப்பாட்டினை எழுதுக. அத்தனிமங்களின் அணு எண் மற்றும் நிறை எண் மதிப்பு என்ன? அந்த சேர்மத்திலுள்ள அயனிகளை எழுதவும்.
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு 7

XI. செயல்திட்டம் (மாணவர்களுக்கானது)

Question 1.
அணுக்கள் எவ்வாறு இருக்கும் என்பதை அறிய மாணவர்களை ஒரு மாதிரியினை உருவாக்கச் செய்யலாம். எலக்ட்ரான் வட்டங்களை உருவாக்க குழாயைச் சுத்தம் செய்யும் மெல்லிய உலோகக் கம்பிகளையும், புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் குறிப்பிட வெவ்வேறு நிறங்களில் உள்ள பந்துகளையும் எலக்ட்ரான்களைக் குறிப்பிட மணிகளையும் கொடுக்கலாம். மாணவர்கள் அப்பொருள்களைக் கொண்டு அணு மாதிரியை உருவாக்கி வகுப்பறையின் சுவர்களில் தொங்கவிடும் போது மகிழ்ச்சியடைவர்.

7th Science Guide அணு அமைப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
பின்வருவனவற்றுள் மிகச் சிறிய துகள் எது?
அ) சிவப்பு இரத்த அணு
ஆ) வைரஸ்
இ) அணு
ஈ) தூசி துகள்கள்
விடை:
இ) அணு

Question 2.
அணுவின் வடிவம்?
அ) சதுரம்
ஆ) கோளம்
இ) வட்டம்
ஈ) கனசதுரம்
விடை:
ஆ) கோளம்

Question 3.
எது நியூக்ளியான் அல்ல?
அ) புரோட்டான்
ஆ) நியூட்ரான்
இ) எலக்ட்ரான்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
இ) எலக்ட்ரான்

Question 4.
ஹைட்ரஜன், டியூட்டீரியம் மற்றும் டிரிட்டியம் ஆகியவற்றில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை முறையே?
அ) 0, 1, 2
ஆ) 1, 0, 2
இ) 1, 2, 0
ஈ) 2, 1, 0
விடை:
அ) 0, 1, 2

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு

Question 5.
கால்சியம் குளோரைடின் மூலக்கூறு வாய்பாடு CaCl, எனில் கால்சியத்தின் இணைதிறன் ?
அ)1
ஆ) 2
இ) 3
ஈ) 4
விடை:
ஆ) 2

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
ஒரு அணு மனிதனின் ______________ காட்டிலும் ஆயிரம் மடங்கு சிறியது.
விடை:
தடிமனான முடியைக்

Question 2.
ஒரு நானோ மீட்டர் என்பது ______________ .
விடை:
1 × 10-9 மீ

Question 3.
அணுவின் மொத்த நிறையும் அதன் ______________ அமைந்துள்ளது.
விடை:
அணுக் கருவினுள்

Question 4.
4Be9 என்ற அணுவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை ___________
விடை:
5

Question 5.
சோடியத்தின் இணைதிறன் ஒன்று மற்றும் ஆக்சிஜனின் இணைதிறன் இரண்டு எனில் சோடியம் ஆக்சைடின் மூலக்கூறு வாய்பாடு ______________
விடை:
Na2O

III. சரியா? தவறா? தவறெனில் சரி செய்து எழுதுக

Question 1.
அணு என்பது மிகச்சிறிய பிரிக்க இயலும் துகள் என்ற அணுக்கொள்கையை ஜான் டால்டன் வெளியிட்டார்.
விடை:
தவறு. அணு என்பது மிகச்சிறிய பிரிக்க இயலாத துகள் என்ற அணுக் கொள்கையை ஜான் டால்டன் வெளியிட்டார்

Question 2.
ரூதர்போர்டு தடிமனான தங்கத் தகட்டின் மீது எதிர்மின்னூட்டம் கொண்ட ஆல்பா கதிர்களை மோதச் செய்து சோதனையை மேற்கொண்டார்
விடை:
தவறு. ரூதர்போர்டு மெல்லிய தங்கத் தகட்டின் மீது நேர்மின்னூட்டம் கொண்ட ஆல்பா கதிர்களை மோதச் செய்து சோதனையை மேற்கொண்டார்

Question 3.
அணுவின் அளவவோடு ஒப்பிடும் போது அணுக்கருவானது அளவில் மிக மிகச் சிறியதாகும்.
விடை:
சரி

Question 4.
ஒரு அணுவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை சமம்.
விடை:
சரி

Question 5.
மீத்தேனின் வாய்பாடு CH4, ஏனெனில் ஹைட்ரஜனின் இணைதிறன் 4 ஆகும்.
விடை:
தவறு. மீத்தேனின் வாய்பாடு CH4, ஏனெனில் கார்பனின் இணைதிறன் 4 ஆகும்

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு 8

V. வாக்கியத்தை சரியான வடிவத்தில் எழுதவும்

Question 1.
ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்களையும் கொண்டது ஐசோடோப்புகள் மற்றும் ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டது ஐசோபார்கள் எனப்படும்.
விடை:
சரியான கூற்று :
ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டது ஐசோபார்கள் மற்றும் ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டது ஐசோடோப்புகள் எனப்படும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு

Question 2.
உட்கருவானது எதிர்மின் சுமையுடைய எலக்ட்ரான்களை குறிப்பிட்ட வட்ட பாதையில் சுற்றி வருகின்றது.
விடை:
சரியான கூற்று :
எதிர்மின் சுமையுடைய எலக்ட்ரான்கள் உட்கருவினை குறிப்பிட்ட வட்டபாதையில் சுற்றி வருகின்றன.

VI. கொடுக்கப்பட்டுள்ள ஒப்புமையை முடிக்கவும்

Question 1.
புரோட்டான் : நேர்மின்னூட்டம் பெற்ற துகள் :: ___________ : எதிர்மின்னூட்டம் பெற்ற துகள்.
விடை:
எலக்ட்ரான்

Question 2.
6C12 & 6C14 : ஐசோடோப்புகள் :: 18Ar40 & 20Ca40 : _________
விடை:
ஐசோபார்கள்

VII. சரியான கூற்றை தேர்வு செய்யவும்

Question 1.
கூற்று (A): ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டது ஐசோடோப்புகள் ஆகும்.
காரணம் (R): ஐசோடோப்புகள் வேறுபட்ட நியூட்ரான் எண்ணிக்கையை பெற்றுள்ளன.

அ) கூற்றும் (A) காரணமும் (R) சரி. மேலும் காரணம் (R) கூற்றுக்கான (A) சரியான விளக்கம்
ஆ) கூற்றும் (A) காரணமும் (R) சரி. மேலும் காரணம் (R) கூற்றுக்கான (A) சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி
ஈ) கூற்று (A), காரணம் (R) இரண்டுமே தவறு
விடை:
அ) கூற்றும் (A) காரணமும் (R) சரி.
மேலும் காரணம் (R) கூற்றுக்கான (A) சரியான விளக்கம்

Question 2.
கூற்று (A): அணுவின் மொத்த நிறையும் அதன் அணுக்கருவினுள் அமையவில்லை
காரணம் (R): அணுக்கருவினுள் புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் உள்ளன.

அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. மேலும் காரணம் (R) கூற்றுக்கான (A) சரியான விளக்கம்
ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. மேலும் காரணம் (R) கூற்றுக்கான (A) சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி
ஈ) கூற்று (A), காரணம் (R) இரண்டுமே தவறு
விடை:
இ) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி
சரியான கூற்று : அணுவின் மொத்த நிறையும் அதன் அணுக்கருவினுள் அமைந்துள்ளது.

VIII. மிகக் குறுகிய விடையளி

Question 1.
அணுவின் அடிப்படைத் துகள்கள் என்றால் என்ன?
விடை:

  • அணுவினை உருவாக்கும் துகள்கள் அணுவின் அடிப்படைத் துகள்கள் எனப்படும்.
  • அவை புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் ஆகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு

Question 2.
நிறை எண் – வரையறு.
விடை:
நிறை எண் (A) என்பது அணுக்கருவினுள் உள்ள மொத்த புரோட்டான்கள் (P) மற்றும் நியூட்ரான்களின் (N) எண்ணிக்கையின் கூடுதலுக்கு சமமாகும். A = P + N

Question 3.
ஒரு அணுவில் உள்ள புரோட்டான்கள், எலக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரான்களை கணக்கிடும் வாய்பாடுகளைத் தருக.
விடை:

  • புரோட்டான்களின் எண்ணிக்கை = எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = அணு எண்
  • நியூட்ரான்களின் எண்ணிக்கை (N) = நிறை எண் (A) – புரோட்டான்களின் எண்ணிக்கை (P) (N = A – P)

IX. குறுகிய விடையளி

Question 1.
டால்டனின் அணுக் கொள்கை பற்றி எழுதுக.
விடை:

  • பருப்பொருள்கள் அணுக்கள் எனும் மிகச் சிறிய துகள்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
  • அணு என்பது மிகச்சிறிய பிரிக்க இயலாத துகள்.
  • அணு கோள வடிவில் உள்ளது.

Question 2.
தாம்சனின் அணுக் கொள்கை பற்றி எழுதுக.
விடை:

  1. J.J. தாம்சன் கொள்கைப்படி தர்பூசணியில் சிகப்பு பகுதி காணப்படுவது போல் அணுவில் நேர் மின்னூட்டம் காணப்படுகிறது.
  2. தர்பூசணியில் விதை பதிந்து காணப்படுவது போல் எதிர் மின்னூட்டம் நேர் மின்னூட்டத்தில் பதிந்து காணப்படுகிறது.
  3. அணுவின் நேர் மற்றும் எதிர் மின்னூட்டங்கள் சம எண்ணிக்கையில் காணப்படுவதால், அணுவில் எவ்வித மின்சுமையும் இல்லை.

Question 3.
அணுவின் அடிப்படைத் துகள்களின் மின்சுமை மற்றும் நிறை பற்றி எழுதுக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு 9

Question 4.
பின்வரும் தனிமங்களின் இணைதிறன்கள் முறையே ஹைட்ரஜன் 1, ஆக்சிஜன் 2, சோடியம் 1 மற்றும் குளோரின் 1 எனில் (i) நீர் (ii) ஹைட்ரஜன் குளோரைடு (iii) சோடியம் ஆக்சைடு (iv) சோடியம் குளோரைடு ஆகியவற்றின் வாய்பாட்டினை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு 10

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு

Question 5.
பின்வரும் அணுக்களின் அமைப்பினை வரைக., 1H1, 2He4 மற்றும் 8O16
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு 11

X. விரிவான விடையளி

Question 1.
ரூதர்போர்டின் சிதறல் சோதனையை விவரி.
விடை:

  • ரூதர்போர்டு ஒரு மெல்லிய தங்கத் தகட்டினை நேர்மின்னூட்டம் கொண்ட ஆல்பா கதிர்களைக் கொண்டு மோதச் செய்தார்.
  • அதிக திசை வேகம் கொண்ட பெரும்பான்மையான ஆல்பா கதிர்கள் எவ்வித தடைப்பொருள்களின் மீதும் மோதாமல் தங்கத் தகட்டினை ஊடுருவிச் சென்றது.
  • மிகச் சில ஆல்பா கதிர்கள் தங்கத்தகட்டின் மீது மோதி பின்னோக்கி வந்தது.
  • இச்சோதனையின் அடிப்படையில் ரூதர்போர்டு பின்வரும் அணுக் கொள்கையை வெளியிட்டார்.
  • அதிக அளவிலான ஆல்பா கதிர்கள் தங்கத் தகட்டினை ஊடுருவிச் சென்றதால் அணுவானது பெரும்பான்மையான வெற்றிடத்தைக் கொண்டிருக்கிறது.
  • மிகச் சில ஆல்பா கதிர்கள் பின்னோக்கி வந்ததால் நேர்மின் சுமையுடைய அணுக்கருவானது அணுவுடன் ஒப்பிடும் போது மிகமிகச் சிறியதாகும்.

Question 2.
ரூதர்போர்டு அணுக்கொள்கையை விவரி.
விடை:
ஆல்பா கதிர் சிதறல் சோதனையின் அடிப்படையில் ரூதர்போர்டு வெளிட்ட அணுக்கொள்கை.

  • அணுவின் மையமான அணுக்கருவானது நேர்மின் தன்மை உடையது. அணுவின் பெரும்பான்மை நிறையானது அதன் மையத்தில் அமைந்துள்ளது.
  • எதிர்மின்தன்மை கொண்ட எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட வட்டபாதையில் அணுக்கருவினைச் சுற்றி வருகின்றன.
  • அணுவுடன் ஒப்பிடும்போது அணுக்கருவானது அளவில் மிகமிகச் சிறியதாகும்.

முயற்சி செய்க :1
Question 1.
கார்பனின் அணு எண் z = 6 எனில் அந்த அணுவானது அதன் சுற்றுப்பாதைகளில் எத்தனை எலெக்ட்ரான்களைக் கொண்டுள்ளன?
விடை:
6 எலக்ட்ரான்கள்

முயற்சி செய்க : 2
Question 1.
ஏன் அனைத்து அணுக்களின் அணு எண் மற்றும் நிறை எண் ஆகியவை எப்போது முழு எண்ணாகவே காணப்படுகின்றன?
விடை:

  • அணு எண் என்பது புரோட்டான்களின் அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஆகும்.
  • நிறை எண் என்பது புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கையின் கூடுதல்.
  • ஒரு அணுவில் உள்ள புரோட்டான்கள், எலக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை முழு எண் ஆகும். ஆதலால் அணு எண் மற்றும் நிறை எண் ஆகியவை எப்போதும் முழு எண்ணாகவே காணப்படுகின்றன.

Question 2.
ஒரு சல்பர் அணுவானது 16 புரோட்டான்களையும் 16 நியூட்ரான்களையும் கொண்டுள்ளது. அதன் அணு எண் மற்றும் நிறை எண்ணின் மதிப்பினை தருக.
விடை:
அணு எண் = புரோட்டன்களின் எண்ணிக்கை = 16
நிறை எண் = புரோட்டன்களின் எண்ணிக்கை + நியூட்ரான்களின் எண்ணிக்கை. = 16 + 16 = 32 ஃ சல்பர் அணு 16S32

செயல்பாடு:1

நமக்கு தெரிந்த சில பொருள்களின் படங்களும் அவற்றின் துகள்களும் கீழே உள்ள படங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

Question 1.
பொருள்களின் பெயர்களையும் அவை எத்துகள்களால் உருவானது என்பதனையும் எழுதுக
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு 12
விடை:
1. சுத்தியல் – இரும்பு
2. வளையல் – தங்கம்
3. குடிநீர்க்குழாய் – துருப்பிடிக்காத எஃகு
4. பாத்திரங்கள் – தாமிரம், – துருப்பிடிக்காத எஃகு

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு

செயல்பாடு : 2

பின்வரும் செயல்பாட்டின் மூலம் நாம் அணுவின் பண்புகளை பட்டியல் இடுவோமா? படத்தில் – அணுவின் பாகங்களை குறித்து பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு 13

Question 1.
________________ நேர்மின் சுமை கொண்ட துகளாகும்.
விடை:
புரோட்டான்

Question 2.
____________ எதிர்மின்சுமை கொண்ட துகளாகும்.
விடை:
எலக்ட்ரான்

Question 3.
______________ மின்சுமை அற்றது.
விடை:
நியூட்ரான்

செயல்பாடு :3

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு 14

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையினை உற்றுநோக்கி பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Question 1.
நான் சுவாசித்தலுக்குப் பயன்படுவேன். நான் இல்லாமல் உங்களால் உயிர் வாழ முடியாது. என்னை உங்களுக்குத் தெரிகிறதா? எனது பெயரையும், குறியீட்டையும் எழுதுக.
விடை:
ஆக்சிஜன், 0

Question 2.
இது பலூன்களை நிரப்ப பயன்படுகிறது. இது ஒரு வாயுவாகும். இதனை அடையாளம் காண்க. இதன் நிறை எண் என்ன?
விடை:
ஹீலியம், 4

Question 3.
வாழைப்பழத்தில் உள்ள தனிமத்தின் பெயரைக் குறிப்பிடுக. அதன் அணு எண் மதிப்பு யாது?
விடை:
பொட்டாசியம், 19

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு

Question 4.
‘நான் பட்டாசுகளில் காணப்படுவேன். நான் எத்தனைபுரோட்டான்களை கொண்டுள்ளேன்?
விடை:
சல்பர், 16

Question 5.
நான் உயர்ந்த மதிப்புமிக்க தனிமம். நான் யாரென்று கண்டுபிடி? என்னுடைய நிறை என்ணைக் கூற முடியுமா?
விடை:
தங்கம், 197

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு 15
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 4 அணு அமைப்பு 16

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

7th Science Guide நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
கீழ்க்கண்டவற்றுள் உலோகம் எது?
அ) இரும்பு
ஆ) ஆக்சிஜன்
இ) ஹீலியம்
ஈ) தண்ணீ ர்
விடை:
அ) இரும்பு

Question 2.
ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றுள் எதற்கான உதாரணம்?
அ) உலோகம்
ஆ) அலோகம்
இ) உலோகப்போலிகள்
ஈ) மந்த வாயுக்கள்
விடை:
ஆ) அலோகம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 3.
கீழ்க்கண்டவற்றுள் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறைக் குறிக்கக்கூடிய எளிய மற்றும் அறிவியல் பூர்வமான முறை.
அ) கணித வாய்ப்பாடு
ஆ) வேதியியல் வாய்ப்பாடு
இ) கணிதக் குறியீடு
ஈ) வேதியியல் குறியீடு
விடை:
ஆ) வேதியியல் வாய்ப்பாடு

Question 4.
அறை வெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம் எது?
அ) குளோரின்
ஆ) சல்பர்
இ) பாதரசம்
ஈ) வெள்ளி
விடை:
இ) பாதரசம்

Question 5.
எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய, ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?
அ) அலோகம்
ஆ) உலோகம்
இ) உலோகப்போலிகள்
ஈ) வாயுக்கள்
விடை:
ஆ) உலோகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ஒரு பருப்பொருளின் தனித்துக் காணப்படக்கூடிய மிகச் சிறிய துகள்
விடை:
அணு

Question 2.
ஒரு கார்பன் அணு மற்றும் இரண்டு ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட __________ சேர்மம்
விடை:
கார்பன் டை ஆக்சைடு

Question 3.
_____________ மின்சாரத்தைக் கடத்தும் ஒரே அலோகம்.
விடை:
கிராஃபைட்

Question 4.
தனிமங்கள் _____________ வகையான அணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
விடை:
ஒரே

Question 5.
சில தனிமங்களின் _______________ லத்தீன் அல்லது கிரேக்கப் பெயர்களிலிருந்து பெறப்படுகின்றன.
விடை:
குறியீடுகள்

Question 6.
இதுவரை அறியப்பட்ட தனிமங்களின் எண்ணிக்கை __________.
விடை:
118

Question 7.
தனிமங்கள் தூய பொருள்களின் ____________ வடிவம்.
விடை:
எளிமையான

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 8.
தனிமங்களின் பெயரை எழுதும்போது முதல் எழுத்தை எப்போதுமே _____________ எழுத்தால் எழுத வேண்டும்.
விடை:
பெரிய

Question 9.
மூன்றுக்கும் மேற்பட்ட அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகளை _____________ மூலக்கூறுகள் என்று அழைக்கலாம்.
விடை:
பல அணு

Question 10.
_____________ வளிமண்டலத்தில் அதிகளவு காணப்படும் வாயு.
விடை:
நைட்ரஜன்

III. ஒப்புமை தருக

Question 1.
பாதரசம் : அறை வெப்பநிலையில் திரவம் :: ஆக்சிஜன் : ____________
விடை:
அறை வெப்பநிலையில் வாய

Question 2.
மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் : _____________ :: மின்சாரத்தைக் கடத்தும் உலோகம் : தாமிரம்.
விடை:
கிராஃபைட்

Question 3.
தனிமங்கள் : இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றன :: சேர்மங்கள் : ______________
விடை:
சிதைந்து தனிமங்களை உருவாக்குகின்றது

Question 4.
அணுக்கள் : ஒரு தனிமத்தின் அடிப்படைத் துகள் :: ______________ : ஒரு சேர்மத்தின் அடிப்படைத் துகள்.
விடை:
மூலக்கூறுகள்

IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக

Question 1.
இரண்டு வேறுபட்ட தனிமங்களில் ஒரே விதமான அணுக்களைக் கொண்டிருக்கலாம்.
விடை:
தவறு. இரண்டு வேறுபட்ட தனிமங்களில் வெவ்வேறு விதமான அணுக்கள் இருக்கும்

Question 2.
தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் தூய பொருள்களாகும்.
விடை :
சரி

Question 3.
அணுக்கள் தனித்து இருக்க முடியாது; அவை மூலக்கூறுகள் எனப்படும் குழுக்களாகவே உள்ளன.
விடை:
தவறு. அணுக்கள் தன்னிச்சையாக இருக்க முடியும்

Question 4.
NaCl என்பது ஒரு சோடியம் குளோரைடு மூலக்கூறைக் குறிக்கிறது.
விடை:
த்வறு. சோடியம் குளோரைடில் (NaCl)ல் ஒரு சோடியம் அணு மட்டுமே உள்ளது)

Question 5.
ஆர்கான் வாயு ஓரணு வாயுவாகும்
விடை:
சரி

V. சுருக்கமாக விடையளி

Question 1.
கீழ்க்காணும் சேர்மங்களின் வேதியியல்வாய்ப்பாட்டையும், அதில் அடங்கியுள்ள தனிமங்களின் பெயர்களை எழுதவும்.
அ) சோடியம் குளோரைடு
ஆ) பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
இ) கார்பன் டை ஆக்சைடு
ஈ) கால்சியம் ஆக்சைடு
உ) சல்பர் டை ஆக்சைடு
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 1

Question 2.
கீழ்க்கண்ட மூலக்கூறுகளைத் தனிமங்கள் மற்றும் சேர்மங்களின் மூலக்கூறுகளாக வகைப்படுத்தவும்.
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 2
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 3
1. தனிமத்தின் மூலக்கூறு
2. சேர்மத்தின் மூலக்கூறு
3. தனிமத்தின் மூலக்கூறு
4. சேர்மத்தின் மூலக்கூறு

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 3.
ஒரு சேர்மத்தின் வேதியியல் வாய்ப்பாடு என்றால் என்ன? இதன் முக்கியத்துவம் என்ன ?
விடை:

  • வேதியியல் வாய்ப்பாடு என்பது ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் ஒரு மூலக்கூறினை சுருக்கமாக குறிப்பிடக்கூடிய முறையாகும்.
  • வேதியியல் வாய்ப்பாடு ஒரு மூலக்கூறில் உள்ள தனிமங்கள் மற்றும் அவற்றின் அணுக்களின் எண்ணிக்கையை குறிக்கும்.

Question 4.
கீழ்க்காண்பவற்றை தக்க உதாரணத்துடன் வரையறு.
அ) தனிமம்
ஆ) சேர்மம்
இ) உலோகம்
ஈ) அலோகம்
உ) உலோகப் போலிகள்
விடை:
அ) தனிமம்:
பருப்பொருளின் எளிமையான வடிவம் தனிமம் எனப்படும். எ.கா. ஹைட்ரஜன் (H)

ஆ) சேர்மம்:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வேதி பிணைப்பின் மூலம் இணைந்து கிடைக்கும் தூய பொருள் சேர்மம் ஆகும். எ.கா. நீர் (H2O)

இ) உலோகம்:
பளபளப்பான, கடினமான, சிறந்த கடத்திகளாக, தகடாக மாற்றக்கூடிய பல்வேறு வடிவங்களைப் பெறத்தக்க வகையில் அமைந்துள்ள தனிமங்கள் உலோகங்கள் எனப்படும். எ.கா. தாமிரம் (Cu)

ஈ) அலோகம்:
பளபளப்பற்ற, மிருதுவான, கடத்தும் தன்மையற்ற, தகடாக மாற்ற இயலாத, பல்வேறு வடிவங்களை பெற இயலாத வகையில் அமைந்துள்ள தனிமங்கள் அலோகங்கள் எனப்படும். எ.கா. கார்பன் (C)

உ) உலோகப் போலிகள்:
உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை வெளிப்படுத்தும் தனிமங்கள் உலோகப் போலிகள் எனப்படும். எ.கா. சிலிக்கன் (Si)

Question 5.
கீழ்க்காணும் தனிமங்களின் குறியீடுகளை எழுதி அவற்றை திண்மம், திரவம் மற்றும் வாயு அடிப்படையில் வகைப்படுத்தவும். அலுமினியம், கார்பன், குளோரின், பாதரசம், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 4

Question 6.
கீழ்க்காணும் தனிமங்களை உலோகம், அலோகம் மற்றும் உலோகப் போலிகள் என வகைப்படுத்துக. சோடியம், பிஸ்மத் வெள்ளி, நைட்ரஜன், சிலிக்கான், கார்பன், குளோரின், இரும்பு மற்றும் தாமிரம்,
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 5

Question 7.
கீழ்க்காண்பவற்றை தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் என வகைப்படுத்துக. தண்ணீர், சாதாரண உப்பு, சர்க்கரை, கார்பன் டை ஆக்சைடு, அயோடின் மற்றும் அலுமினியம்.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 6

Question 8.
கீழ்க்காணும் தனிமங்களின் வேதியியல் குறியீட்டை எழுதுக.
அ) ஹைட்ரஜன்
ஆ) நைட்ரஜன்
இ) ஓசோன்
ஈ) சல்பர் மூலக்கூறு
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 7

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 9.
தனிமங்கள் என்றால் என்ன? அவை எவற்றால் ஆனவை? இரண்டு உதாரணம் தருக.
விடை:

  • பருப்பொருள்களின் எளிமையான வடிவம் தனிமங்கள் எனப்படும்.
  • தனிமங்கள் ஒரே வகையான அணுக்களால் உருவானது
  • எ.கா. ஹைட்ரஜன், ஆக்சிஜன்

Question 10.
மூலக்கூறு – வரையறு.
விடை:
இரண்டு அல்லது அதற்குமேற்பட்ட அணுக்கள் ஒரு குறிப்பிட்டவிகிதத்தில் வேதிப்பிணைப்பின் மூலம் இணைந்து கிடைக்கும் தூய பொருள் மூலக்கூறு ஆகும். எ.கா. H2, HCl

Question 11.
சேர்மங்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக.
விடை:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வேதிபிணைப்பின் மூலம் இணைந்து கிடைக்கும் தூய பொருள் சேர்மங்கள் எனப்படும்.
எ.கா. HCl, NH3

Question 12.
லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட தனிமங்களின் பெயர்களை எழுதுக.
விடை:

  • காப்பர் – குறியீடு ‘Cu’ அதன் லத்தீன் பெயரான “குப்ரம்” என்பதிலிருந்து பெறப்பட்டது.
  • தங்கம் – குறியீடு ‘ Au’ அதன் லத்தீன் பெயரான “ஆரும்” என்பதிலிருந்து பெறப்பட்டது.

Question 3.
ஒரு தனிமத்தின் அணுக்கட்டு எண் என்றால் என்ன?
விடை:
அணுக்கட்டு எண் என்பது ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் ஒரு மூலக்கூறில் அடங்கியுள்ள ஒட்டு மொத்த அணுக்களின் எண்ணிக்கை ஆகும்.

Question 4.
கந்தக அமிலத்தின் (H2SO4) அணுக்கட்டு எண்ணைக் கணக்கிடுக.
விடை:

  • (H2SO4) மூலக்கூறில் 2 ஹைட்ரஜன் அணுக்கள், 1 சல்பர் அணு மற்றும் 4 ஆக்சிஜன் அணுக்கள் உள்ளன.
  • எனவே அதன் அணுக்கட்டு எண் = 2 + 1 + 4 = 7

VI. விரிவாக விடையளி

Question 1.
உலோகங்கள் மற்றும் அலோகங்களை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 8

Question 2.
சேர்மங்களின் பண்புகளை விவரிக்கவும்.
விடை:

  • தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இணைவதால் சேர்மங்கள் உருவாகின்றன.
  • சேர்மத்தின் பண்புகள் அதிலுள்ள தனிமங்களின் பண்புகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன.
  • சேர்மங்களை இயற்பியல் முறையில் அதன் உறுப்புக் கூறுகளாக பிரிக்க இயலாது.
  • சேர்மங்களை வேதியியல் முறையில் மட்டுமே அதன் உறுப்புக் கூறுகளாக பிரிக்க இயலும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 3.
தனிமங்களின் குறியீடுகளை எழுதக்கூடிய பல்வேறு வழிமுறைகளை விவரி.
விடை:
பொருத்தமான உதாரணம் தருக.

  • தனிமங்களின் குறியீட்டில் ஒன்று அல்லது இரண்டு எழுத்துகள் மட்டுமே இடம் பெற வேண்டும்.
  • பெரும்பாலான தனிமங்களின் குறியீடுகள் அவற்றின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்து கொண்டு குறிக்கப்படுகிறது.
  • எ.கா.
    • ஹைட்ரஜனுக்கு ‘H’, – ஆக்சிஜனுக்கு ‘O’
    • ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்களின் பெயர்கள் ஒரே எழுத்தில்
    • ஆரம்பிக்கும்போது, அப்பெயர்களின் முதல் இரண்டு எழுத்துகளை
    • குறியீடாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு எழுதும்போது
    • முதல் எழுத்தை பெரிய எழுத்திலும், இரண்டாவது எழுத்தைச் சிறிய எழுத்திலும் எழுத வேண்டும்.
  • எ.கா.
    • கார்பனுக்கு ‘C’
    • கால்சியத்துக்கு ‘ Ca’
    • குளோரினுக்கு ‘CI’
    • குரோமியத்துக்கு ‘Cr’
  • சில தனிமங்களின் குறியீடுகள் அவற்றின் லத்தீன் பெயர்களிடமிருந்து பெறப்பட்டவை.
  • எ.கா.:
    • காப்பருக்கு அதன் லத்தீன் பெயர் “குப்ரம்” என்பதிலிருந்து ‘Cu’
    • தங்கத்திற்கு அதன் லத்தீன் பெயர் “ஆரும்” என்பதிலிருந்து ‘ Au’

Question 4.
தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 9

Question 5.
சேர்மங்களின் பண்புகளுள் ஏதேனும் ஐந்தை எழுதுக.
விடை:

  • தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இணைந்து சேர்மங்கள் உருவாகின்றன.
  • சேர்மத்தின் பண்புகள் அதனை உருவாக்கிய தனிமங்களின் பண்புகளில் இருந்து முற்றிலும் மாறுபடுகின்றன.
  • சேர்மங்களை இயற்பியல் முறையில் பிரிக்க இயலாது.
  • ஏனெனில் சேர்மங்களில் உள்ள தனிமங்கள் வேதிபிணைப்பில் பிணைக்கப்பட்டுள்ளன.
  • ‘சேர்மங்களை வேதியியல் முறையில் மட்டுமே அதன் உறுப்புக் கூறுகளாகப் பிரிக்க இயலும்.

Question 6.
உலோகம் மற்றும் அலோகத்தின் பண்புகளை ஒப்பிட்டு, ஒவ்வொன்றிற்கும் மூன்று உதாரணங்கள் தருக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 10
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 11

Question 7.
உலோகப் போலிகளின் பண்புகளை எழுதவும்.
விடை:

  • உலோகப் போலிகள் திண்மங்கள்
  • உலோகப் போலிகள் பளபளப்பானவை
  • உலோகப் போலிகள் உடையும் தன்மை கொண்டவை
  • உலோகப் போலிகள் மின்சாரத்தை சிறிதளவு கடத்தும் திறன் கொண்டவை

VII. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை சரியான வடிவத்தில் எழுதவும்

Question 1.
தனிமங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களைக் கொண்டவை. சேர்மங்கள் ஒரே வகையான அணுக்களை மட்டும் கொண்டவை.
விடை:
தனிமங்கள் ஒரே வகையான அணுக்களை மட்டும் கொண்டது. சேர்மங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களைக் கொண்டது.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
உனது வீடு மற்றும் பள்ளியில் நீ பயன்படுத்தக்கூடிய உலோகம், அலோகம் மற்றும் உலோகப்போலிகளைப் பட்டியலிடவும். அவற்றின் பண்புகளை ஒப்பிடவும்.
விடை:

  1. உலோகங்கள்:
    • காப்பர் (தாமிரம்) – பாத்திரங்கள், மின்கம்பிகள்
    • வெள்ளி, தங்கம் – அணிகலன்கள்
    • இரும்பு – ஜன்னல்கள், கதவுகள்
  2. பண்புகள்:
    • உலோகங்கள் பளபளப்பான, கடினமான திண்மங்கள்.
    • வெப்பம் மற்றும் மின்சாரத்தை நன்கு கடத்தும் திறன் கொண்டவை.
      அலோகங்கள்:
    • நீர்: ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் என்ற இரு அலோகங்களால் ஆனது.
    • காற்று: நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் ஒரு அலோகம்
    • பிளீச்சிங் பவுடரிலிருந்து வெளிப்படும், நீரை சுத்திகரிக்க பயன்படும் குளோரின் வாயு ஒரு அலோகம்.
  3. பண்புகள்:
    • அலோகங்கள் பளபளப்புத் தன்மையற்ற, மிருதுவான திண்மங்கள், திரவங்கள் அல்லது வாயுக்கள்.
    • வெப்பம் மற்றும் மின்சாரத்தை அரிதிற் கடத்தும் தன்மை கொண்டவை.
  4. உலோகப் போலிகள்:
    • கணினியின் பகுதிப்பொருட்களை தயாரிக்கப் பயன்படும் சிலிக்கன் ஒரு உலோகப்போலி.
  5. பண்புகள்:
    • உலோகப்போலிகள் உலோகம் மற்றும் அலோகங்களின் பண்புகளைக் கொண்டவை.
    • சிலிக்கன் மின்சாரத்தை பகுதியளவு கடத்தும் ஒரு திண்மம்.

Question 2.
ஆகாஷ் பகல் நேரங்களில் அவனுடைய வீட்டின் நுழைவு வாயிலில் உள்ள உலோகத் தாழ்ப்பாளைத் திறக்கச் சிரமமாக உள்ளது என்பதைக் கவனித்தான். ஆனால், அதே தாழ்பாளை இரவு நேரங்களில் திறக்க எளிமையாக உள்ளது என்பதையும் கவனித்தான். தாழ்ப்பாளும், நுழைவுவாயிலும் பகல் நேரத்தில் வெயிலில் இருப்பதை ஆகாஷ் உற்று நோக்கினான்.
அ) வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு கருதுகோளை உருவாக்கு.
ஆ) நீங்கள் கூறும் கருதுகோளை எவ்வாறு சோதிக்கலாம் என்பதை சுருக்கமாகக் கூறுக.
விடை:
அ) ஒரு திண்மத்தை வெப்பப்படுத்தும் போது, அதன் பருமன் அதிகரிக்கின்றது. இந்நிகழ்விற்கு விரிவடைதல் என்று பெயர்.
ஆ)
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 12
(i) ஒரு வளையத்தின் வழியே சரியாக நுழையக் கூடிய அளவில் ஒரு இரும்பு குண்டினை எடுத்துக் கொள்ளவும்.

(ii) இரும்பு குண்டினை நன்கு வெப்பப்படுத்தவும். உலோகம் என்பதால் நன்கு வெப்பமேறிய இரும்பு குண்டு விரிவடைகிறது. எனவே வளையத்தின் வழியாக இரும்பு குண்டினால் நுழைய இயலவில்லை.

Question 3.
வெப்பப்படுத்தும் போது துகள்களின் இயக்கம் மற்றும் அமைப்பில் எவ்வாறு மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை விவரிக்கவும்.
விடை:

  1. திண்மத்தை வெப்பப்படுத்தும்போது அதன் துகள்கள் ஆற்றலைப் பெற்று தீவிரமாக அதிர்வுறுகின்றன.
  2. இதனால் துகள்கள் ஒன்றையொன்று சற்றுப் பிரிந்து செல்கின்றன.
  3. இதன் காரணமாக பருப்பொருளின் பருமன் அதிகரிக்கின்றது. இந்நிகழ்விற்கு விரிவடைதல் என்று பெயர்.
  4. துகள்களுக்கிடையே உள்ள இடைவெளி அதிகரிக்கின்றது. எனவே பருமன் அதிகரிக்கின்றது.
  5. ஆனால் துகள்களின் பரிமாணத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே அளவில் இருக்கின்றன.
  6. பருப்பொருளின் நிறையில் மாற்றம் ஏற்படுவதில்லை.

Question 4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டம், சதுரம், முக்கோணம் போன்றவை வெவ்வேறு தனிமத்தின் அணுக்களைக் குறிக்கின்றன.
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 13
மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்திலிருந்து, கீழ்க்கண்டவற்றைக் கண்டுபிடிக்கவும்.
அ) சேர்மங்களின் மூலக்கூறுகள்
ஆ) இரண்டு அணுக்களைக் கொண்ட தனிமங்களின் மூலக்கூறுகள்
இ) மூன்று அணுக்களைக் கொண்ட தனிமங்களின் மூலக்கூறுகள்.
விடை:
அ) சேர்மங்களின் மூலக்கூறுகள் Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 14
ஆ) இரண்டு அணுக்களைக் கொண்ட தனிமங்களின் மூலக்கூறுகள் Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 15
இ) மூன்று அணுக்களைக் கொண்ட தனிமங்களின் மூலக்கூறுகள். Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 16

IX. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து, சரியான ஒன்றைத் தேர்வு செய்க

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி

Question 1.
கூற்று : ஆக்சிஜன் ஒரு சேர்மம்.
காரணம் : ஆக்சிஜனை எளிய வகையில் உடைக்க முடியாது.
விடை:
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி

Question 2.
கூற்று : ஹைட்ரஜன் ஒரு தனிமம்.
காரணம் : ஹைட்ரஜனை எளிய வகையில் உடைக்க முடியாது.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

Question 3.
கூற்று : காற்று ஒரு சேர்மம் ஆகும்.
காரணம் : காற்றில் கரியமில வாயு உள்ளது.
விடை:
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 4.
கூற்று : காற்று தனிமங்களின் கலவை.
காரணம் : நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் நியான் போன்றவை காற்றில் உள்ளன.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Question 5.
கூற்று : பாதரசம் அறை வெப்பநிலையில் ஒரு திண்மம்.
காரணம் : பாதரசம் ஒரு அலோகம்.
விடை:
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி

7th Science Guide நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
பின்வரும் எப்பொருள் அணுக்களால் ஆனது?
அ) நீர்
ஆ) அரிசி
இ) காற்று
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Question 2.
பின்வருவனவற்றுள் எது பல அணு மூலக்கூறு?
அ) ஆக்சிஜன்
ஆ) ஹீலியம்
இ) சல்பர்
ஈ) ஓசோன்
விடை:
இ) சல்பர் (S8)

Question 3.
இயற்கையாக கிடைக்கும் தனிமங்களின் எண்ணிக்கை யாது?
அ) 118
ஆ) 94
இ) 24
ஈ) 18
விடை:
ஆ) 94

Question 4.
மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் எது?
அ) காப்பர்
ஆ) வெள்ளி
இ) கிராஃபைட்
ஈ) அலுமினியம்
விடை:
இ) கிராஃபைட்

Question 5.
பின்வருவனவற்றுள் எது சேர்மம் அல்ல?
அ) நீர்
ஆ) ஆக்சிஜன்
இ) சர்க்கரை
ஈ) உப்பு
விடை:
ஆ) ஆக்சிஜன்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
இடத்தை அடைத்துக் கொள்வதும், நிறையை கொண்டதுமான எப்பொருளும் ____________ எனப்படும்.
விடை:
பருப்பொருள்

Question 2.
பேரண்டத்தில் முதன்மையாகக் காணப்படுவது ____________ அணுவாகும்.
விடை:
ஹைட்ரஜன்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 3.
காற்றில் உள்ள ஓர் உயிர் கொடுக்கும் தனிமம் _____________ ஆகும்.
விடை:
ஆக்சிஜன்

Question 4.
உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை வெளிப்படுத்தும் தனிமங்கள் _______________ எனப்படும்.
விடை:
உலோகப் போலிகள்

Question 5.
சேர்மங்களை _____________ முறையில் மட்டுமே அதன் உறுப்புக் கூறுகளாகப் பிரிக்க முடியும்.
விடை:
வேதியியல்

III. சரியா? தவறா? தவறெனில் சரி செய்து எழுதுக

Question 1.
மிகச் சிறந்த ஒளியியல் நுண்ணோக்கியினைக் கொண்டு நம்மால் அணுக்களைக் காண இயலும்.
விடை:
தவறு. மிகச் சிறந்த ஒளியியல் நுண்ணோக்கியினைக் கொண்டும் நம்மால் அணுக்களைக் காண இயலாது

Question 2.
நைட்ரிக் ஆக்சைடு ஒரு ஈரணு மூலக்கூறு
விடை:
சரி

Question 3.
பூமியில் கிடைக்கக்கூடிய வைரம் கடினமான, பளபளப்பான உலோகம் ஆகும்.
விடை:
தவறு. பூமியில் கிடைக்கக்கூடிய வைரம் கடினமான, பளபளப்பான அலோகம் ஆகும்

Question 4.
சோடியம் குளோரைடை வடிகட்டுதல் போன்ற இயற்பியல் முறையால் சோடியம் மற்றும் குளோரினாக பிரிக்க இயலாது.
விடை:
சரி

Question 5.
திண்மத்தை வெப்பப்படுத்தும் போது அதன் துகள்கள் ஆற்றலை இழந்து தீவிரமாக அதிர்வுறுகின்றன.
விடை:
தவறு. திண்மத்தை வெப்பப்படுத்தும் போது அதன் துகள்கள் ஆற்றலைப் பெற்று தீவிரமாக அதிர்வுறுகின்றன.

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 17

V. வாக்கியத்தை சரியான வடிவத்தில் எழுதவும்

Question 1.
ஒரு மூலக்கூறு நீரில் ஒரு ஹைட்ரஜன் அணுவும், இரண்டு ஆக்சிஜன் அணுக்களும் உள்ளன.
விடை:
ஒரு மூலக்கூறு நீரில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்சிஜன் அணுவும் உள்ளன.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 2.
தனிமங்களின் குறியீட்டை எழுதும்போது முதல் எழுத்தை சிறிய எழுத்திலும், இரண்டாவது எழுத்தை பெரிய எழுத்திலும் எழுத வேண்டும்.
விடை:
தனிமங்களின் குறியீட்டை எழுதும்போது முதல் எழுத்தை பெரிய எழுத்திலும், இரண்டாவது எழுத்தை சிறிய எழுத்திலும் எழுத வேண்டும்.

VI. கொடுக்கப்பட்டுள்ள ஒப்புமையை முடிக்கவும்

Question 1.
ஆக்சிஜன் : ஒரே வகையான அணுக்களால் ஆன மூலக்கூறு :: நீர் : _____________
விடை:
வேறுவகையான அணுக்களால் ஆன மூலக்கூறு

Question 2.
மெர்க்குரி : அறை வெப்ப நிலையில் திரவ நிலையில் உள்ள ஒரே உலோகம் :: புரோமின் : ______________
விடை:
அறை வெப்ப நிலையில் திரவ நிலையில் உள்ள ஒரே அலோகம்.

VII. காரணம் மற்றும் கூற்று கேள்விகள்

Question 1.
வழிமுறை: பின்வரும் வழிமுறைகளைப் பார்க்கவும்.
விடை:
அ) இரண்டு கூற்றுகளும் சரி மற்றும் இரண்டாவது கூற்று முதல் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) இரண்டு கூற்றுகளும் சரி மற்றும் இரண்டாவது கூற்று முதலாம் கூற்றிற்குச் சரியான விளக்கமல்ல.
இ) முதல் கூற்று தவறானது இரண்டாம் கூற்று சரியானது
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறானது
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 18

VIII. குறுகிய விடையளி

Question 1.
பின்வருவனவற்றை உலோகம், அலோகம், உலோகப்போலி என வகைப்படுத்துக. ஹைட்ரஜன், சிலிக்கன், லெட் குளோரின், ஆர்சனிக், துத்தநாகம்
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 19

Question 2.
அணுக்கட்டு எண்ணைப் பொறுத்து பின்வருவனவற்றை வகைப்படுத்துக. (N2, He, HCL, NH3, O3, S8)
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 20

Question 3.
பின்வரும் சேர்மங்களின் வேதிவாய்ப்பாட்டையும் அதிலுள்ள தனிமங்களையும் எழுதுக.
அ) சலவை சோடா (சோடியம் கார்பனேட்)
ஆ) சமையல் சோடா (சோடியம் பைகார்பனேட்)
இ) எரிசோடா (சோடியம் ஹைட்ராக்சைடு)
ஈ) எரி பொட்டாஷ் (பொட்டாசியம் ஹைட்ராக்சைடு)
உ) நீற்றிய சுண்ணாம்பு (கால்சியம் ஹைட்ராக்சைடு)
ஊ) சுட்ட சுண்ணாம்பு (கால்சியம் ஆக்சைடு)
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 21

IX. சுருக்கமாக விடையளி

Question 1.
அணு – வரையறு.
விடை:
ஒரு தனிமத்தின் அனைத்துப் பண்புகளையும் வெளிப்படுத்தக்கூடிய அத்தனிமத்தின் மிக நுண்ணிய துகளே அத்தனிமத்தின் அணு என வரையறுக்கப்படுகிறது.

Question 2.
உலோகப் போலிகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை:

  • உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை வெளிப்படுத்தும் தனிமங்கள் உலோகப்போலிகள் எனப்படும்.
  • எ.கா. சிலிக்கன், ஆர்சனிக், ஆண்டிமனி, போரான்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 3.
பருப்பொருள்கள் என்றால் என்ன? அதை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:

  • இடத்தை அடைத்துக் கொள்வதும், நிறையை கொண்டதுமான பொருள்களே பருப்பொருள்கள் எனப்படும்.
  • பருப்பொருள்கள் இருவகைப்படும். அ) தூய பொருள்கள்ஆ) கலவைகள்
  • தூய பொருள்கள் தனிமங்கள், சேர்மங்கள் என இருவகைப்படும்.

Question 4.
மனித உடலில் உள்ள தனிமங்கள் பற்றி எழுதுக.
விடை:
மனித உடலின் நிறையில் ஏறத்தாழ 99% நிறையானது ஆறு வேதியியல் தனிமங்களால் மட்டும் ஆனதாகும். அவை ஆக்சிஜன், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்.

மிகக் குறைந்த சதவீத அளவில் காணப்படும் மற்ற ஐந்து தனிமங்கள் – பொட்டாசியம், சல்பர், சோடியம், குளோரின் மற்றும் மக்னீசியம்.

Question 5.
காற்றில் உள்ள தனிமங்கள் பற்றி எழுதுக.
விடை:

  • காற்றானது வாயுக்களின் கலவையாகும்.
  • காற்றில் 99% நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகள் காணப்படுகின்றன.
  • இவைத் தவிர சிறிய அளவில் ஆர்கான் மற்றும் கரியமில வாயு காணப்படுகிறது.
  • மிகக்குறைந்த அளவில் நியான், ஹீலியம் மற்றும் மீத்தேன் காணப்படுகிறது.

X. விரிவான விடையளி

Question 1.
மூலக்கூறுகளை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:

  • ஒரே ஒரு அணுவைக் கொண்ட மூலக்கூறுகள் ஓரணு மூலக்கூறுகள் எனப்படும்.
    (எ.கா. மந்த வாயுக்கள்)
  • இரண்டு அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகள் ஈரணு மூலக்கூறுகள் எனப்படும்.
    (எ.கா. ஆக்சிஜன், நைட்ரிக் ஆக்சைடு)
  • மூன்று அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகள் மூவணு மூலக்கூறுகள் எனப்படும்.
    (எ.கா. ஓசோன், கார்பன் டை ஆக்சைடு)
  • மூன்றுக்கும் மேற்பட்ட அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகள் பல அணு மூலக்கூறுகள் எனப்படும்.
    (எ.கா. சல்பர், அம்மோனியா)

Question 2.
பருப்பொருளைச் சூடேற்றும் போது என்ன நிகழ்கின்றது?
விடை:

  1. திண்மத்தை வெப்பப்படுத்தும்போது, அதன் துகள்கள் ஆற்றலைப் பெற்று தீவிரமாக அதிர்வுறுகின்றன.
  2. இதனால் துகள்கள் ஒன்றைவிட்டு ஒன்று சற்றுப் பிரிந்து செல்கின்றன.
  3. இதனால் அப்பருப்பொருளின் பருமன் அதிகரிக்கின்றது. இந்நிகழ்விற்கு விரிவடைதல் என்று பெயர்.
  4. துகள்களுக்கிடையே உள்ள இடைவெளி அதிகரிப்பதால் பருமன் அதிகரிக்கின்றது.
  5. உதுகள்களின் பரிமாணத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே அளவில் இருக்கின்றன.
  6. துகள்களின் நிறை மற்றும் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுவதில்லை.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 22

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

6th Science Guide தாவரங்கள் வாழும் உலகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
குளம் வாழிடத்திற்கு உதாரணம்
அ) கடல்
ஆ) நன்னீர் வாழிடம்
இ) பாலைவனம்
ஈ) மலைகள்
விடை:
ஆ) நன்னீர் வாழிடம்

Question 2.
இலைத் துளையின் முக்கிய வேலை ______
அ) நீரைக் கடத்துதல்
ஆ) நீராவிப்போக்கு
இ ஒளிச் சேர்க்கை
ஈ) உறிஞ்சுதல்.
விடை:
இ) ஒளிச் சேர்க்கை

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

Question 3.
நீரை உறிஞ்சும் பகுதி ____ ஆகும்
அ) வேர்
ஆ) தண்டு
இ) இலை
ஈ) பூ
விடை:
அ) வேர்

Question 4.
நீர் வாழ் தாவரங்களின் வாழிடம்
அ) நீர்
ஆ) நிலம்
இ) பாலைவனம்
ஈ) மலை
விடை:
அ) நீர்

II. சரியா, தவறா – தவறு எனில் சரியான விடையை எழுதுக

Question 1.
தாவரங்கள் நீர் இன்றி வாழ முடியும்
விடை:
தவறு
பல்வேறு வளர்சிதை மாற்றங்களைச் செய்வதற்கு தாவரங்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.

Question 2.
தாவரங்கள் அனைத்திலும் பச்சையம் காணப்படும்.
விடை:
தவறு
பசுமையான பாகங்களில் மட்டும் பச்சையம் காணப்படுகிறது.

Question 3.
தாவரங்களின் மூன்று பாகங்கள் – வேர், தண்டு, இலைகள்.
விடை:
சரி

Question 4.
மலைகள் நன்னீர் வாழிடத்திற்கு ஓர் உதாரணம்
விடை:
தவறு
மலைகள் நில வாழிடத்திற்கு உதாரணமாகும்.

Question 5.
வேர் முட்களாக மாற்றுரு அடைந்துள்ளது.
விடை:
தவறு
முட்கள் பொதுவாக இலையின் மாறுபாடு ஆகும்.

Question 6.
பசுந் தாவரங்களுக்கு சூரிய ஒளி தேவை.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

III. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
புவி பரப்பில் நீரின் அளவு ………
விடை:
1.70

Question 2.
பூமியில் மிகவும் வறண்ட பகுதி ……..
விடை:
பாலைவனங்கள்

Question 3.
ஊன்றுதல், உறிஞ்சுதல் இரண்டும் …….. வேலை
விடை:
வேரின்

Question 4.
ஒளிச் சேர்க்கை நடைபெறும் முதன்மை பகுதி ………
விடை:
இலைகள்

Question 5.
ஆணிவேர்த் தொகுப்பு …… தாவரங்களில் காணப்படுகிறது.
விடை:
இருவித்திலைத்

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 40

V. தாவரங்களின் பாகங்கள் மற்றும் பணிகளில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக.

Question 1.
இலைகள் – தண்டு – வேர் – மலர்கள்
விடை:
வேர் – தண்டு – இலைகள் – மலர்கள்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

Question 2.
நீராவிப்போக்கு – கடத்துதல் – உறிஞ்சுதல் – ஊன்றுதல்
விடை:
ஊன்றுதல் – உறிஞ்சுதல் – கடத்துதல் – நீராவிப்போக்கு

VI. மிகக் குறுகிய வினா.

Question 1.
வாழிடத்தை அடிப்படையாகக் கொண்டு தாவரங்களை வகைப்படுத்துக.
விடை:
நில வாழிடம் – நீர் வாழிடம் என வகைப்படும்.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 80

Question 2.
பாலைவனத் தாவரங்களை அடையாளம் காண்க.
விடை:
சப்பாத்திக்கள்ளி, ஹைடிரில்லா, மா, ரோஜா.
சப்பாத்திக்கள்ளி தாவரங்கள் பாலைவனத்தில் காணப்படுகின்றன. அவை தண்டுகளில் நீரைச் சேமிக்கின்றன.

Question 3.
வாழிடம் என்பதை வரையறு.
விடை:
ஒவ்வொரு உயிரினமும், உயிர்வாழவும், இனப்பெருக்கம் செய்யவும், தேவைப்படும் இடமானது அதன் வாழிடம் ஆகும்.
(உ.ம்) நன்னீர் வாழிடம் – ஆறுகள், குளங்கள், குட்டைகள்.

Question 4.
இலைக்கும், ஒளிச்சேர்க்கைக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
விடை:
இலைகள் பசுமையாக உள்ளன. அவற்றில் பசுங்கணிகங்கள் காணப்படுகிறது. இவை ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன.

VII. குறுகிய வினா.

Question 1.
மல்லிகைக் கொடி ஏன் பின்னுகொடி என அழைக்கப்படுகிறது?
விடை:
நலிந்த, மெலிந்த தண்டுடைய தாவரங்கள் தாமாக நிலைநிற்க இயலாது. எனவே அவை ஆதாரத்தைச் சுற்றிக்கொண்டு ஏறுகின்றன. உம்) பட்டாணி.

Question 2.
ஆணிவேர் மற்றும் சல்லிவேர் தொகுப்புகளை ஒப்பீடு செய்க.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 85

Question 3.
நிலவாழிடம் மற்றும் நீர் வாழிடத்தை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 86

Question 4.
உங்களுடைய பள்ளித் தோட்டத்தில் உள்ள தாவரங்களை பட்டியலிடுக.
விடை:
செம்பருத்தி, பெரணிகள், குரோட்டன்கள், ரோஜா, லில்லி, சப்பாத்திக் கள்ளி (கள்ளி வகைகள்), தென்னை மரங்கள், ராயல்பனை, கிளிட்டோரியா, சைகஸ், தங்க அரளி, ஹெலிகோனியா, தக்காளி, கத்தரி, வெண்டை, முதலானவை மாடித் தோட்டத்தில் உள்ளன.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

VIII. விரிவான வினா.

Question 1.
வேர் மற்றும் தண்டு ஆகியவற்றின் பணிகளைத் தருக.
விடை:

  1. ஊன்றுதல் – தாவரத்தை பூமியில் நிலை நிறுத்துகிறது.
  2. உறிஞ்சுதல் – மண்ணிலுள்ள நீரையும், கனிமச் சத்துக்களையும் உறிஞ்சி பிற பாகங்களுக்குக் கடத்துகிறது.
  3. சேமிப்பு – சில தாவரங்கள் வேர்களில் உணவைச் சேமிக்கிறது. (எ.கா) கேரட்.

தண்டின் பணிகள்

  • தாங்குதல் – கிளைகளையும், இலைகளையும், மலர்களையும், கனிகளையும் தாங்குகிறது.
  • கடத்தல் – நீரையும் தாது உப்புகளையும் வேர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு மேல் நோக்கிக் கடத்துகிறது.
  • இலைகள் தயாரித்த உணவை மற்ற பகுதிகளுக்குக் கடத்துகிறது.
  • சேமித்தல் – கரும்பு போன்ற சில வகை தண்டுகள் உணவைச் சேமிக்கின்றன.

Question 2.
கொடுக்கப்பட்டுள்ள கருத்துப் படத்தில் அதன் தொடர்ச்சி கருத்துகளை விடுபட்ட இடங்களில் பூர்த்தி செய்க.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 90
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 91

6th Science Guide தாவரங்கள் வாழும் உலகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தோர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
மக்காச் சோளத்தில் காணப்படுவது,
அ) ஆணிவேர்
ஆ) சல்லிவேர்
இ) வேற்றிடவேர்
ஈ) கொத்துவேர்கள்
விடை:
ஆ) சல்லிவேர்

Question 2.
தண்டில் இலை உருவாகும் பகுதி,
அ) கணு
ஆ) கணுவிடை
இ) நுனிமொட்டு
ஈ) பக்கமொட்டு
விடை:
அ) கணு

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

Question 3.
இலையின் காம்பு
அ) மஞ்சரிக்காம்பு
ஆ) கூட்டிலைக்காம்பு
இ) பூக்காம்பு,
ஈ) இலைக்காம்பு
விடை:
ஈ) இலைக்காம்பு

Question 4.
இலை பச்சையாகக் காணப்படுவதற்கான காரணம்
அ) குளோரன்கைமா
ஆ) பச்சையம்
இ) இலைத்தாள்
ஈ) இலைத்துளை
விடை:
ஆ) பச்சையம்

Question 5.
விக்டோரியா அமேஸானிக்கா இலையின் விட்டம் அல்லது குறுக்களவு
அ) 2 மீட்டர்
ஆ) 2.5 மீட்டர்
இ) 3 மீட்டர்
ஈ) 1 மீட்டர்
விடை:
இ) 3 மீட்டர்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
தாங்கள் வாழிடங்களுக்கேற்ப தாவரங்கள் சில சிறப்புப்பண்புகளைப் பெற்றுக் காணப்படுகின்றன இதற்கு …… என்று பெயர்
விடை:
தகவமைப்புகள்

Question 2.
இந்திய துணைக் கண்டத்தில் காணப்படும், மிகப் பெரிய மணல் குன்றுகளாலான பாலைவன …….. எனப்படும்.
விடை:
தார் பாலைவனம்

Question 3.
இலையின் மையத்தில் காணப்படும் நரம்புக்கு……. என்று பெயர்.
விடை:
நடு நரம்பு

Question 4.
ஒரு உயிரினத்தில் அதன் சூழலுக்கேற்ப காணப்படும் மாற்றத்திற்கு ………. என்று பெயர்.
விடை:
மாறுபாடு

Question 5.
காகிதப்பூ ……என்று அழைக்கப்படுகிறது
விடை:
போகன் வில்லா

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

III. சரியாக வரிசைப்படுத்துக

Question 1.
கடல், ஏரி, ஆறு, குளம்
விடை:
குளம், ஏரி, ஆறு, கடல்

Question 2.
கணுவிடை-கணு- கோணமொட்டு-நுனிமொட்டு
விடை:
நுனிமொட்டு – கோணமொட்டு-கணு- கணுவிடை

IV. மிகக் குறுகிய வினா

Question 1.
இலையின் புற அமைப்பைப் படம் வரைக – பாகங்களைக் குறிக்க
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 95

Question 2.
பூக்களின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்து
விடை:
பூக்களின் அடிப்படையில் தாவரங்கள் இருவகையாகப் பிரிக்கலாம்

  • பூக்கும் தாவரங்கள் எ.கா. ரிக்ஸியா
  • பூவாத தாவரங்கள் எ.கா. மா ம்

Question 3.
ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களை வேறுபடுத்து
விடை:

  • ஜிம்னோஸ்பெர்ம்கள் – பூவாத தாவரங்கள் ஆனால் விதைகளை உருவாக்கும் (எ.கா) பைனஸ், சைகஸ்
  • ஆஞ்சியோஸ்பெர்ம்கள் : பூக்கும் தாவரங்கள் விதைகளை உருவாக்கும். (எ.கா) மா- ரோஜா

Question 4.
காக்டஸ்- தாவரம்-குறிப்பு வரைக
விடை:

  • இது ஒரு பாலைவன வாழ் தாவரம் (இங்கு மழை அளவு குறைவு (அ) காணப்படாது)
  • ‘தண்டு – நீரை சேமிக்கும்.
  • இலைகள் – முட்களாக மாறுபாடடைந்து காணப்படும்.
  • வேர்கள் – நன்கு வளர்ச்சியடைந்து மண்ணின் மிக ஆழத்திற்குச் சென்று நீரை உறிஞ்சுகின்றன.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

Question 5.
முட்கள் என்றால் என்ன?
விடை:
சில தாவரங்களில் இலைகள் அல்லது பாகங்கள் முட்களாக மாறுபாடடைந்துள்ளன. இவை நீராவிப் போக்கினால் ஏற்படும் நீரிழப்பைக் குறைக்கின்றன.
(எ.கா) அகேவ் (இலை நுனி மற்றும் விளிம்பு முட்களாக மாறுபாடடைந்துள்ளது)

V. விரிவான விடையளி

Question 1.
பற்றுக்கம்பிக் கொடி-விவரி
விடை:

  • பற்றுக்கம்பி என்பது சில மெலிந்த தண்டுடைய தாவரங்களில், காணப்படுகிறது.
  • இது ஆதாரத்தைச் சுற்றிக் கொண்டு அத்தாவரங்கள் மேலே ஏறுவதற்கு ஏதுவாக உள்ளது.
    1. இனிப்புப்பட்டாணி – இதில் சிற்றிலைகள் பற்றுக் கம்பிகளாக மாறியுள்ளன.
    2. பாகற்காய் – இதில் கோணமொட்டு பற்றுக்கம்பிகளாக மாற்றம் அடைந்து மேலே ஏறுவதற்கு உதவுகின்றன.

Question 2.
பாலைவன வாழிடம் குறித்தெழுது
விடை:

  • பூமியின் மிக வறண்ட பகுதி.
  • மழை அளவு சராசரி 25 செ.மீக்கும் குறைவாக உள்ளது.
  • பூமியில் சுமார் 20% பாலைவனமாக உள்ளது.
  • தாவரங்கள் – கடுமையான வறட்சியைத் தாங்கும் தகவமைப்புடையவை.
  • தடிமனான இலைகள் நீரையும் கனிம உப்புக்களையும் சேமித்து வைக்கின்றன.
  • தண்டுகள் – நீரை சேமிக்கின்றன. எ.கா. காக்டஸ் (கள்ளி வகைகள்)
  • இலைகள் – முட்களாக மாறுபாடடைந்துள்ளன. எ.கா. ஒபன்ஷியா.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 98