Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 1 Chapter 1 அளவீட்டியல் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 1 Chapter 1 அளவீட்டியல்

7th Science Guide அளவீட்டியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
பின்வருவனவற்றுள் எது வழி அளவு?
அ) நிறை
ஆ) நேரம்
இ) பரப்பு
ஈ) நீளம்
விடை:
இ) பரப்பு

Question 2.
பின்வருவனவற்றுள் எது சரி?
அ) 1L = 1cc
ஆ) 1L = 10cc
இ) 1L = 100cc
ஈ) 1L = 1000cc
விடை:
ஈ) 1L = 1000cc

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 3.
அடர்த்தியின் SI அலகு
அ) கிகி/மீ2
ஆ) கிகி/மீ3
இ) கிகி/மீ
ஈ) கி/மீ3
விடை:
ஆ) கிகி/மீ3

Question 4.
சம நிறையுள்ள இரு கோளங்களின் கன அளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்
அ) 1:2
ஆ) 2:1
இ) 4:1
ஈ) 1:4
விடை:
அ) 1:2

Question 5.
ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?
அ) தொலைவு
ஆ) நேரம்
இ) அடர்த்தி
ஈ) நீளம் மற்றும் நேரம்
விடை:
அ) தொலைவு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பருமனை அளக்க___________ விதி பயன்படுகிறது.
விடை:
நீர் இடப்பெயர்ச்சி

Question 2.
ஒரு கன மீட்டர் என்பது ___________ கன சென்டிமீட்டர்
விடை:
1,000,000 cm3 (or) (100 cm3)

Question 3.
பாதரசத்தின் அடர்த்தி ____________
விடை:
13.6 gkm3 (or) 13.600 kg/m3

Question 4.
ஒரு வானியல் அலகு என்பது ____________.
விடை:
1.496 × 1011m

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 5.
ஓர் இலையின் பரப்பை ____________ பயன்படுத்தி கணக்கிடலாம்.
விடை:
வரைபடத் தாள்

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக

Question 1.
ஒரு பொருளின் எல்லை அடைத்துக் கொள்ளும் இடமே அப்பொருளின் பரப்பளவு ஆகும்.
விடை:
தவறு – காரணம் : ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் பரப்பளவு எனப்படும்

Question 2.
திரவங்களின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
விடை:
சரி

Question 3.
நீர் மண்ணெண்ணெயை விட அதிக அடர்த்தி கொண்டது.
விடை:
சரி

Question 4.
இரும்புக் குண்டு பாதரசத்தில் மிதக்கும்.
விடை:
சரி

Question 5.
ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்த்தி அதிகமுடைய பொருள் எனப்படும்.
விடை:
தவறு – காரணம் : ஓரலகு பருமனின் குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்வு குறைவுடைய பொருள் எனப்படும்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 2

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 3
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 4

V. பின்வருவனவற்றை சரியான வரிசையில் எழுதவும்

Question 1.
1L, 100cc, 10 L, 10 cc
விடை:
10cc, 100cc, 11, 10L

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 2.
தாமிரம், அலுமினியம், தங்கம், இரும்பு
விடை:
அலுமினியம், இரும்பு, தாமிரம், தங்கம்.

VI. ஒப்புமையைக் கொண்டு நிரப்புக.

Question 1.
பரப்பு: மீ : கன அளவு:
விடை:
மீ3

Question 2.
திரவம்: லிட்டர்: திடப்பொருள் :
விடை:
கிலோகிராம்

Question 3.
நீர்:: மண்ணெண்ணெய்:: : அலுமினியம்.
விடை:
இரும்பு

VII. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து, சரியான ஒன்றைத் தேர்வு செய்க

Question 1.
கூற்று : கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
காரணம் : கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

Question 2.
கூற்று : மரக்கட்டை நீரில் மிதக்கும்.
காரணம் : நீர் ஒரு ஒளி ஊடுருவும் திரவம்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 3.
கூற்று : ஓர் இரும்புக் குண்டு நீரில் மூழ்கும்.
காரணம் : நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
விடை:
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.

VIII. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
ஒருசில வழி அளவுகளைக் கூறுக.
விடை:

  • பரப்பு
  • கன அளவு (அ) பருமன்
  • வேகம்
  • மின்னூட்டம்
  • அடர்த்தி

Question 2.
ஓர் ஒளி ஆண்டின் மதிப்பைத் தருக.
விடை:
ஒரு ஒளி ஆண்டு = 9.46 × 1015மீ.

Question 3.
ஓர் உருளையின் கன அளவைக் காண. உதவும் சூத்திரத்தை எழுதுக.
விடை:
ஓர் உருளையின் கன அளவை கண்டறிய
பயன்படும் சூத்திரம்
= π × r2 × h
(h என்பது உயரம்)
= πr2h

Question 4.
பொருள்களின் அடர்த்தியைக் காண்பதற்கான வாய்ப்பாட்டைத் தருக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 5

Question 5.
எந்தத் திரவத்தில் இரும்பு மூழ்கும்?
விடை:
நீரில் இரும்பு குண்டு மூழ்கும்.

Question 6.
வானியல் பொருள்களின் கொலைவைக் காண உதவும் அலகுகளைக் கூறுக.
விடை:

  • வானியல் அலகு
  • ஒளி ஆண்டு

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 7.
தங்கத்தின் அடர்த்தி எவ்வளவு?
விடை:
தங்கத்தின் அடர்த்தி : 19,300கிகி/மீ3.

IX. சுருக்கமாக விடையளி காம்

Question 1.
வழி அளவுகள் என்றால் என்ன?
விடை:

  • அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் வழி அளவுகள் எனப்படும்.
  • எ.கா : பரப்பு, கன அளவு
  • வழி அளவுகளை அளவிடப் பயன்படும் அலகுகள் வழி அலகுகள் எனப்படும்.

Question 2.
ஒரு திரவத்தின் கன அளவையும் ஒரு கலனின் கொள்ளளவையும் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 6

Question 3.
பொருள்களின் அடர்த்தியை வரையறு.
விடை:

  • ஒரு பொருளின் அடர்த்தி என்பது அதன் ஓரலகு பருமனில் (1மீ3) அப்பொருள் பெற்றுள்ள நிறைக்குச் சமம் ஆகும்.
  • SI அலகு கிகி/மீ3

Question 4.
ஓர் ஒளி ஆண்டு என்றால் என்ன?
விடை:

  • ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவே ஆகும்.
  • ஒளி ஆண்டு = 9.46 × 1015m.

Question 5.
ஒரு வானியல் அலகு – வரையறு.
விடை:

  • ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு ஆகும்.
  • வானியல் அலகு = 149.6 × 106 கிமீ ‘
    =1.496 × 1011மீ.

X. விரிவாக விடையளி

Question 1.
ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத்தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரிபாப்
விடை:

  • உன் வீட்டின் அருகில் உள்ள ஏதேனும் ஒரு மரத்திலிருந்து ஓர் இலையை எடுத்துக் கொள்க.
  • அந்த இலையை ஒரு வரைபடத் தாளின் மீது வைத்து அதன் எல்லைக் கோடுகளை ஒரு பென்சில்லைக் கொண்டு வரைந்து கொள்க.
  • இலையை நீக்கினால் அதன் எல்லைக் கோட்டை வரைபடத்தாளின் மீது காணலாம்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருளின் பரப்பு :

  • இப்போது இலையின் எல்லைக் கோட்டுக்குள் அமைந்த முழு சதுரங்களை எண்ணிக் கொள்க. இந்த எண்ணிக்கைளை M எனக்
  • பிறகு பாதி அளவு பரப்பிற்கு மேல் உள்ள சதுரங்களை எண்ணிக் கொள்க. இந்த எண்ணிக்கையை N எனக் கொள்க.
  • அடுத்து பாதி அளவு பரப்புள்ள சதுரங்களை எண்ணிக் கொள்க. இந்த எண்ணிக்கையை A எனக் கொள்க.
  • இறுதியாக பாதி அளவு பரப்பிற்குக் கீழ் உள்ள சதுரங்களை எண்ணிக் கொள்க. இந்த எண்ணிக்கையை Q எனக் கொள்க
  • M = 51செ.மீ
    N = 11 செ.மீ
    P = 8 செ.மீ
    Q =  9 செ.மீ.
  • இலையின் தோரயமான பரப்பு
    = M+(\(\frac{3}{4}\)) N + (\(\frac{1}{2}\)) P+ (\(\frac{1}{4}\)) Q சதுர. செ.மீ.
    = 51 + (0.75) 11 + (0.5) 8 + (0.25) 9
    = 51 + 8.25 + 4 + 2.25
    = 65.5மீ2
    இலையின் பரப்பு = 65.5மீ2

Question 2.
ஒரு கல்லின் அடர்த்தியை ஒரு அளவிடும் முகவை மூலம் எவ்வாறு கண்டறிவாய்?
விடை:

  • ஒரு அளவிடும் குவளையை எடுத்து அதில் சிறிது நீரை ஊற்றவும்.
  • நீரின் கன அளவினை அளவிடும் குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ளவும் அதனை V எனக்குறிக்கவும்.
  • இப்போது ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொண்டு அதை ஒரு நூலினால் கட்டவும்.
  • நூலைப் பிடித்துக் கொண்டு கல்லை நீரினுள் மூழ்கச் செய்யும். இவ்வாறு மூழ்கச் செய்யும் போது கல் குவளையின் சுவர்களில் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தற்போது குவளையில் நீரின் மட்டம் : உயர்ந்து இருக்கும்.

  • நீரின் கன அளவினை அளவிடும் குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ளவும்.
  • அதனை V2 எனக் குறிக்கவும்.
  • கல்லின் கனஅளவு அதிகரித்துள்ள நீரின் கன அளவிற்குச் சமம்.
  •  V1 = 30மீ’, V2 = 40 மீ3
    கல்லின் கனஅளவு = V2 – V1
    = 40 – 30 = 10 மீ3
    Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 7

XI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
கீழே காட்டப்பட்டுள்ளவாறு மூன்று கோளங்கள் உள்ளன.
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 8
கோளங்கள் ‘A’ மற்றும் ‘B’ ஒரே பொருளால் செய்யப்பட்டவை. கோளம் – ‘A’ வேறு ஒரு பொருளால் செய்யப்பட்டது. கோளங்கள் ‘A’ மற்றும் ‘C’ ஒரே ஆரம் கொண்டவை. கோளம் – B’-இன் ஆரம் கோளம் ‘A’-ன் ஆரத்தில் பாதியாக இருக்கும். கோளம் கோளங்கள் ‘A’ மற்றும் B’ ஒரே Aன் அடர்த்தி கோளம் -ஐ விட இரு மடங்காக உள்ளது. இப்போது, பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
1. கோளங்கள் ‘A’ மற்றும் ‘B’ இன் நிறைகளின் விகிதத்தைக் காண்க.
2. கோளங்கள் ‘A’ மற்றும் ‘B’ இன் கன அளவுகளின் விகிதத்தைக் காண்க.
3. கோளங்கள் ‘A’ மற்றும் ‘C’ இன் நிறைகளின் விகிதத்தைக் காண்க.
விடை:
‘A’ மற்றும் ‘B’ சமம்
RA = RC
RB = \(\frac{1}{2}\) RA
ρA = 2ρC
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 9
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 10
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 11

XII. கணக்கிடுக

Question 1.
ஒரு வட்ட வடிவத் தட்டின் ஆரம் 10 செ.மீ எனில், அதன் பரப்பை சதுர மீட்டரில் காண்க (π = \(\frac{22}{7}\) எனக் கொள்க).
விடை:

  • கொடுக்கப்பட்டுள்ள ஆரம் = 10 செ.மீ (அ) 0.1 மீ
  • தீர்வு
  • தட்டின் பரப்பு = πr2
    = 3.14 × 0.1 × 0.1
    = 0.0314 மீ2

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 2.
ஒரு பள்ளியின் விளையாட்டுத் திடலின் பரிமாணம் 800மீ × 500 மீ அத்திடலின் பரப்பைக் காண்க.
விடை:

  • கொடுக்கப்பட்டவை l = 800 மீ : b = 500மீ
  • அத்திடலின் பரப்பு = l × b
    = 800 × 500
    = 4000 மீ2

Question 3.
ஒரே அளவுடைய இரு கோளங்கள் தாமிரம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் நிறைகளின் விகிதத்தைக் காண்க (தாமிரம் மற்றும் இரும்பின் அடர்த்தி முறையே 8900 கிகி/மீ3 மற்றும் 7800 கிகி/மீ3).
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 12
\(\mathrm{d}_{1}=\frac{\mathrm{M}_{1}}{\mathrm{~V}}\)
\(\frac{\mathrm{M}_{\mathrm{C}}}{\mathrm{M}_{1}}=\frac{\mathrm{d}_{\mathrm{C}}}{\mathrm{d}_{1}}=\frac{8900}{7800}\)
= \(=\frac{1.14}{1}\)
M<sub<C : M1 = 1 : 1

Question 4.
250கி நிறையுள்ள ஒரு திரவம் 1000 கன செ.மீ இடத்தை நிரப்புகிறது. திரவத்தின் அடர்த்தியைக் காண்க.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 13

Question 5.
1 செமீ ஆரமுள்ள ஒரு கோளம் வெள்ளியினால் செய்யப்படுகிறது. அக்கோளத்தின் நிறை 33 கி எனில், வெள்ளியின் அடர்த்தியைக் காண்க (π = \(\frac{22}{7}\) எனக் கொள்க)
விடை:
நிறை = 33கி
1கிகி = 1000
33 × 10-3
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 14

XIII . குறுக்கெழுத்துப் புதிர்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 15
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 16
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 17

7th Science Guide அளவீட்டியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு அதன் ஆகும்.
அ) அடிப்படை அளவுகள்
ஆ) வழி அளவுகள்
இ) பரப்பளவு
ஈ) கன அளவு
விடை:
இ) பரப்பளவு

Question 2.
கன அளவின் SI அலகு
அ) கன மீட்டர்
ஆ) சதுர மீட்டர்
இ) கூலும்
ஈ) கிகி மீ-3
விடை:
அ) கன மீட்டர்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 3.
தாமிரத்தின் அடர்த்தி எவ்வளவு
அ) 7800 கிகி/மீ3
ஆ) 8900 கிகி/மீ3
இ) 10.500 கிகி/மீ3
ஈ) 2700 கிகி/மீ3
விடை:
ஆ) 8900 கிகி/மீ3

Question 4.
சமையல் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் போன்றவை பார்ப்பதற்கு அடர்த்தி மிகுந்தவைகளாக இருந்தாலும் அதை விட அதிக அடர்த்தி உடையது எது.
அ) மண்ணெண்ணெய்,
ஆ) நீர்
இ) மெர்குரி
ஈ) இரும்பு
விடை:
ஆ) நீர்

Question 5.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தொலைவு எவ்வளவு?
அ) 145.1 மில்லியன் கிலோமீட்டர்
ஆ) 143.1 மில்லியன் கிலோமீட்டர்
இ) 147.1 டமில்லியன் கிலோமீட்டர்
ஈ) 148.1 மில்லியன் கிலோமீட்டர்
விடை:
இ) 147.1 மில்லியன் கிலோமீட்டர்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
அளந்தறிய எண் மதிப்புகளும். அலகுகளும் பயன்படுகின்றன.
விடை:
இயற்பியல் அளவுகள்

Question 2.
ஒரு சதுர மீட்டர் என்பது _____________ பக்க அளவு கொண்ட சதுரம் ஒன்றினுள் அடைப்படும் பரப்பு ஆகும்.
விடை:
ஒரு மீட்டர்

Question 3.
குறைந்த அடர்த்தியைக் கொண்ட பொருள் ___________ எனப்படும்
விடை:
தளர்வான பொருள்

Question 4.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு ____________ ஆகும்.
விடை:
149.6 மில்லியன் கிலோமீட்டர்

Question 5.
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் ____________ என்பதை நாம்
விடை:
3 × 108 மீ/வி அறிவோம்.

III.சரியா, தவறா என்பதை கண்டறிக

Question 1.
அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் வழி அளவுகள் ஆகும்.
விடை:
சரி

Question 2.
இரண்டு லிட்டர் (1) என்பது 1000 CC ஆகும்.
விடை:
தவறு – காரணம் : ஒரு லிட்டர் என்பது 1000 cc ஆகும்

Question 3.
கல்லின் கன அளவு குறைந்துள்ள நீரின் கன அளவிற்குச் சமம்.
விடை:
தவறு – காரணம்: அதிகரித்துள்ள நீரின் கனஅளவிற்குச் சமம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 4.
அடர்த்தியின் SI அலகு கிகி/மி3 அதன் CG3 அலகு கி/செ.மீ3
விடை:
சரி

Question 5.
விளக்கெண்ணெயின் அடர்த்தி 961கிகி/மீ2.
விடை:
தவறு – காரணம் : விளக்கெண்ணெயின் அடர்த்தி 961கிகி/மீ3

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 18
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 19

V. ஒப்புமை தருக

Question 1.
நேரம் ; வினாடி (வி) : : வெப்பநிலை; ____________
விடை:
கெல்வின் (k)

Question 2.
பொருளின் அளவு, மோல் : : ஒளிச் செறிவு; ____________
விடை:
கேண்டிலா

VI. கூற்று மற்றும் காரணம்.

Question 1.
கூற்று : வீட்டு மனை ஒன்றின் பரப்பளவை காண அதன் நீளம் மற்றும் அகலத்தை பெருக்க வேண்டும்.
காரணம் : பரப்பளவின் அலகு : அடிப்பரப்பு X உயரம்
விடை:
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு .

Question 2.
கூற்று : நெப்டியூன் சூரியனிலிருந்து 40 வானியல் அலகு தொலைவில் உள்ளது. காரணம் : ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு ஆகும்.
விடை:
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

VII. வாக்கியத்தை சரியாக வரிசைப்படுத்துக

Question 1.
மண்ணெண்ணெய், மரம், மெர்குரி, நீர்
விடை:
மரம், மண்ணெண்ணெய், நீர் மெர்குரி
காரணம் : அடர்த்தி, மரம் 770, மண்ணெண்ணெய் 800, நீர் 1000, மெர்குரி 13600.

Question 2.
1000 மிலி, 250 மிலி, 100 மிலி, 500 மிலி
விடை:
100 மிலி, 250 மிலி, 500 மிலி, 1000 மிலி

VIII. ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
சில இயற்பியல் அளவுகளின் பெயர்களை எழுதுக.
விடை:

  • நிறை
  • எடை
  • தொலைவு
  • வெப்பநிலை
  • கன அளவு

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 2.
திரவங்களின் பருமனை அளக்க பயன்படும் வேறு சில அலகுகள் யாவை?
விடை:

  • கேலன் [1 கேலன் = 3785மிலி]
  • அவுன்ஸ் [1 அவுன்ஸ் = 30IL]
  • குவார்ட் (1 குவார்ட் = 1L]

Question 3.
அடர்வுமிகு பொருள் என்பது?
விடை:
அதிக அடர்த்தியைக் கொண்ட பொருள்களுக்கு அடர்வான (அ) அடர்வுமிகு பொருள் என்று பெயர்.

Question 4.
அடர்த்தி, நிறை, மற்றும் கன அளவு ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகளை எழுதுக.
விடை:

  • அடர்த்தி= நிறை/கன அளவு
  • நிறை = அடர்த்தி × கன அளவு
  • கன அளவு = நிறை/அடர்த்தி

IX. ஒரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
அடிப்படை அளவுகள் என்பது யாது?
விடை:

  • வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட இயலாத இயற்பியல் அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும்.
  • எ.கா: நீளம், நிறை

Question 2.
ஒழுங்கான வடிவமுள்ள பொருள்களின் கன அளவு பெயர்களை எழுதுக
விடை:

  • கன சதுரம் (a × a × a = a3)
  • கன செவ்வ கம் (l × b × h)
  • கோளம் (\(\frac{4}{3}\) × π × r3)
  • உருளை (πr2h)

Question 3.
கொள்ளவு என்றால் என்ன?
விடை:
ஒரு கொள்கலனில் ஊற்றக்கூடிய அதிகபட்ச திரவத்தின் பருமனே கலனின் கொள்ளவு எனப்படும்.

Question 4.
அடர்த்தி வரையறு? சூத்திரம் தருக?
விடை:

  • ஒரு பொருளின் அடர்த்தி என்பது அதன் ஓரலகு பருமனில் (1மீ) அப்பொருள் பெற்றுள்ள நிறைக்குச் சமம் ஆகும்.
  • சூத்திரம்
    Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 20

Question 5.
எடை மிகுந்த பொருள் நீரில் மூழ்கும், மற்றும் எடை குறைந்த பொருட்கள் நீரில் மிதக்கும் என்பதை காரணத்துடன் கூறுக.
விடை:

  • ஒரு திடப்பொருளின் அடர்த்தி ஒரு திரவத்தின் அடர்த்தியை விட அதிகமானால் அது திரவத்தில் மூழ்கும்.
  • ஒரு திடப்பொருளின் அடர்த்தி ஒரு திரவத்தின் அடர்த்தியை விட குறைவானால் அப்பொருள் அத்திரவத்தில் மிதக்கும்.

X. விரிவான வினாக்களுக்கு விடையளி

Question 1.
இயற்பியல் அளவுகள் மற்றும் அதன் வகைகளை விளக்குக.
விடை:

  • நிறை, எடை, தொலைவு, வெப்பநிலை போன்ற அளவுகள் இயற்பியல் அளவுகள் எனப்படும்.
  • இயற்பியல் அளவுகள் இரண்டு வகைப்படும்
    1. அடிப்படை அளவுகள்
    2. வழி அளவுகள்

அடிப்படை அளவுகள் :

  • வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட இயலாத – இயற்பியல் அளவுகள். எ.கா : நீளம், நிறை
  • அடிப்படை அளவுகளை அளந்தறியப் பயன்படும் அளவுகள் அடிப்படை அலகுகள் எனப்படும்.

வழி அளவுகள் :

  • அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் வழி அளவுகள் எனப்படும். எ.கா. பரப்பு, கன அளவு
  • வழி அளவுகளை அளவிடப் பயன்படும் அலகுகள் வழி அலகுகள் எனப்படும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 2.
வானியல் அலகு பற்றி விளக்குக?
விடை:

  1. பூமியானது சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றுகிறது.
  2. பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தொலைவு ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும்.
  3. பூமி அதன் அண்மை நிலையில் உள்ள போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தொலைவு சுமார் 147.1 மில்லியன் கிலோமீட்டர்.
  4. பூமியானது சூரியனிலிருந்து மிக அதிக தொலைவில் உள்ள போது (இது சேய்மை நிலை) அவற்றிக்கிடையேயான தொலைவு சுமார் 152.1 மில்லியன் கிலோமீட்டர்.
  5. பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு 149.6 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும் இத்தொலைவே வானியல் அலகு எனப்படுகிறது.
  6. நெப்டியூன் சூரியனிலிருந்து 30 வானியல் அலகு தொலைவில் உள்ளது.
  7. அதாவது நெப்டியூன் சூரியனிடலிருந்து பூமி இருக்கும் தொலைவில் 30 மடங்கு தொலைவில் உள்ளது.
  8. ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு ஆகும்.
  9. 1 வானியல் அலகு 149.6 மில்லியன் கிமீ
    = 149.6 × 106 கிமீ = 1.496 × 1011 மீ.
    Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 21

மனவரைபடம்
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 22