Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் Questions and Answers, Notes.
TN Board 7th Science Solutions Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்
7th Science Guide விசையும் இயக்கமும் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி
அ) சுழி
ஆ) r
இ) 2r
ஈ) \(\frac{r}{2}\)
விடை:
இ) 2r
Question 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள திசைவேகம் காலம் வரைபடத்திலிருந்து அப்பொருளானது
அ) சீரான இயக்கத்தில் உள்ளது.
ஆ) ஓய்வு நிலையில் உள்ளது.
இ) சீரற்ற இயக்கத்தில் உள்ளது.
ஈ) சீரான முடுக்கத்தில் பொருள் இயங்குகிறது.
விடை:
ஈ) சீரான முடுக்கத்தில் பொருள் இயங்குகிறது.
Question 3.
கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினைக் குறிக்கிறது.
விடை:
Question 4.
ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது
அ) சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்.
ஆ) சிறுவனின் இயக்கம் முடுக்கப்படாத இயக்கமாகும்.
இ) சிறுவனின் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்.
ஈ) சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்.
விடை:
அ) சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்
Question 5.
ஒரு பொருளின் சமநிலையை நாம் எவ்வாறு அதிகரிக்கலாம்?
அ) ஈர்ப்பு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்.
ஆ) ஈர்ப்பு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்.
இ) பொருளின் உயரத்தினை அதிகரித்தல்.
ஈ) பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்.
விடை:
அ) ஈர்ப்பு மையத்தின் உயரத்தினை குறைத்தல்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த தூரம் ___________ எனப்படும்.
விடை:
இடப்பெயர்ச்சி
Question 2.
திசைவேகம் மாறுபடும் வீதம் ___________ ஆகும்.
விடை:
முடுக்கம்
Question 3.
ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்தால் அப்பொருள் ______________ முடுக்கத்தினைப் பெற்றிருக்கிறது என்கிறோம்.
விடை:
நேர் முடுக்கம்
Question 4.
வேகம் – காலம் வரைபடத்தின் சாய்வு ____________ மதிப்பனைத் தருகிறது.
விடை:
முடுக்கம்
Question 5.
ஒரு பொருள் நகர்த்தப்படும்போது ______________ சமநிலையில் அதன் ஈர்ப்பு மையத்தின் நிலை மாறுவதில்லை.
விடை:
நடுநிலை
III.பொருத்துக
விடை:
IV. ஒப்புமை தருக
Question 1.
திசைவேகம் : மீட்டர்/விநாடி :: முடுக்கம் : ____________
விடை:
மீட்டர்/விநாடி
Question 2.
அளவுகோலின் நீளம் : மீட்டர் :: வானூர்தியின் வேகம் : ___________
விடை:
நாட்
Question 3.
இடப்பெயர்ச்சி/காலம் : திசைவேகம் :: தொலைவு/காலம் : ___________
விடை:
வேகம்
V. மிகச் சுருக்கமாக விடையளி
Question 1.
சீரான இயக்கத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் சீரான திசைவேகத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்று ஆசேர் கூறுகிறான். காரணம் தருக.
விடை:
………….
………….
…………
Question 2.
சஃபைரா மாறாத திசையில் மாறாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறாள். அவளது இயக்கத்தை தொடர்புபடுத்தி எழுதவும்.
விடை:
அவள் சீரான திசைவேகத்தில் சென்று கொண்டிருக்கிறாள்.
Question 3.
முடுக்கமானது ஒரு பொருளின் நிலை எவ்வளவு வேகத்தில் மாறுகிறது என்பதனைப் பற்றிய தகவலை நமக்கு அளிக்கிறது என்று உன் நண்பன் கூறுகின்றான். இவ்வாக்கியத்தில் உள்ள பிழையினைக் கண்டறிந்து மாற்றுக.
விடை:
முடுக்கமானது ஒரு பொருளின் நிலை எவ்வளவு “திசை வேகம் மாறுகிறது.
. “திசைவேகம்” ஒரு பொருளின் நிலை எவ்வளவு வேகம் மாறுகிறது என்பதனைப் பற்றிய கவலை நமக்கு அளிக்கிறது.
VI. சுருக்கமாக விடையளி
Question 1.
பின்வரும் நிகழ்வுகளுக்கு தொலைவு – காலம் வரைபடத்தினை வரையவும்.
அ) மாறாத திசைவேகத்தில் இயங்கும் பேருந்து
ஆ) சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் மகிழுந்து
விடை:
அ) மாறாத திசைவேகத்தில் இயங்கும் பேருந்து ஒன்று சமமான கால இடைவெளியில் சம அளவு தொலைவைக் கடந்துள்ளது என்பதை கீழ்வரும் தொலைவு – காலம் வரைபடம் விளக்குகிறது.
ஆ) சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் மகிழுந்தின் மாறாத தொலைவை பொருத்து அதன் நேரமானது அதிகரிக்கும் இதனை பின்வரும் படத்தின் – (தொலைவு – காலம்) மூலம் அறியலாம்.
Question 2.
வேகம் மற்றும் திசைவேகம் இவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டினைக் கூறுக.
விடை:
Question 3.
சீரான முடுக்கம் என்பது பற்றி நீவிர் கருதுவது யாது?
விடை:
ஒரு பொருளில் சீரான கால இடைவெளியில் காலத்தினைப் பொருத்து திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் (அதிகரித்தல் அல்லது குறைத்தல்) சீரானதாக இருப்பின் அம்முடுக்கம் சீரான முடுக்கம் எனப்படும்.
Question 4.
ஈர்ப்பு மையம் என்றால் என்ன?
விடை:
ஈர்ப்பு மையம்- எப்புள்ளியில் ஒரு பொருளின் எடை முழுவதும் செயல்படுவது போல் தோன்றுகிறதோ அப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம் எனப்படும்.
VII. விரிவாக விடையளி
Question 1.
சமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
விடை:
சமநிலை மூன்று வகைப்படும்
அ) உறுதிச் சமநிலை:
- கூம்பானது மிக அதிக கோணத்திற்குச் சாய்க்கப்பட்டுப், பின்னர் விடப்பட்டாலும் கவிழ்ந்து விடாமல் மீண்டும் பழைய நிலையை அடையும்.
- கூம்பு சாய்க்கப்படும் போது அதன் ஈர்ப்பு மையம் உயர்கிறது.
- ஈர்ப்பு மையத்தின் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது சாய்க்கப்பட்ட நிலையிலும் அதன் அடிப்பரப்பிற்கு உள்ளேயே விழுகிறது.
- எனவே அதனால் மீண்டும் தனது பழைய நிலையை அடைய முடிகிறது.
ஆ) உறுதியற்ற சமநிலை:
- கூம்பானது சிறிது சாய்க்கப்பட்டாலும் கவிழ்ந்து விடும்.
- கூம்பினைச் சாய்க்கும் போது ஈர்ப்பு மையம் அதன் நிலையிலிருந்து உயர்கிறது.
- ஈர்ப்பு மையம் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது அதன் அடிப்பரப்பிற்கு வெளியே விழுகிறது எனவே கூம்பானது கீழே கவிழ்கிறது.
இ) நடுநிலை சமநிலை:
- கூம்பானது உருள்கிறது.
- ஆனால் அது கீழே கவிழ்க்கப்படுவதில்லை .
- கூம்பினை நகர்த்தும் போது அதன் மையத்தின் உயரம் மாறுவதில்லை
- கூம்பினை எவ்வாறு நகர்த்தினாலும் அதே நிலையிலேயே நீடித்து இருக்கிறது.
Question 2.
ஒழுங்கற்ற ஒரு தகட்டின் ஈர்ப்பு மையத்தினைக் காணும் சோதனையை விவரி.
விடை:
- தேவையான பொருள்கள்: ஒழுங்கற்ற வடிவமுடைய அட்டை நூல், ஊசல் குண்டு, தாங்கி
- ஒழுங்கற்ற வடிவமுடைய அட்டையில் மூன்று துளைகளை இடவும்.
- படத்தில் காட்டியவாறு ஒரு துளையினைத் தாங்கியில் பொருத்தி அட்டையினைத் தொங்க விடவும்.
- தாங்கியில் இருந்து அட்டையின் மேற்புறமாக அமையுமாறு குண்டு நூலினை தொங்க விடவும்.
- அட்டையின் மேல் குண்டு நூலின் நிலையினை ஒரு கோடாக வரைந்து கொள்ளவும்.
- மேற்கூறியவாறு மற்ற இருதுளைகளையும் தாங்கியில் இருந்து தொங்கவிட்டுக் கோடுகள் வரைந்து கொள்ளவும்.
- மூன்று கோடுகளும் வெட்டும் புள்ளியின் நிலையினை X எனக் குறித்துக் கொள்ளவும்.
- X. என்ற பள்ளியே ஒழுங்கற்ற வடிவமுடைய அட்டையின் ஈர்ப்பு மையம் ஆகும்.
- மீட்டர் அளவு கோலின் ஈர்ப்பு மையம்: அளவு கோலானது ஒரு தாங்கியின் மீது அதன் ஈர்ப்பு மையத்தில் நிறுத்தம்படும் போது சமநிலையில் நிற்கிறது.
- ஒழுங்கான வடிவமுடைய பொருளான அளவுகோல் போன்ற பொருள்களுக்கு அதன் வடிவியல் மையமே ஈர்ப்பு மையம் ஆகும்.
- ஈர்ப்பு மையம் தவிர வேறு புள்ளியில் தாங்கியின் மீது வைக்கப்படும் போது அளவுகோலானது கவிழ்ந்துவிடுகிறது.
VIII. கணக்கீடுகள்
Question 1.
கீதா தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு மிதிவண்டியில் 15 நிமிடங்களில் சென்றடைகிறாள். சென்றடைகிற மிதிவண்டியின் வேகம் 2மீ/வி எனில் அவளது வீட்டிற்கும் பள்ளிக்கும் உள்ள தொலைவினைக் காண்க.
விடை:
கொடுக்கப்பட்டவை :
மிதிவண்டியின் வேகம் : 2 மீ/வி
கீதா தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு அடைய
எடுத்துக் கொண்ட நேரம் : 15 நிமிடம்
தீர்வு:
நிமிடம் = 15 × 60M = 900வி
தொலைவு = வேகம் × காலம்
= 2மீ/வி × 900வி = 1800மீ
= 1.8 கிலோ மீட்டர்
கீதாவின் வீட்டிற்கும் பள்ளிக்கும் இடைப்பட்ட தொலைவு
= 1.8 கி. மீட்டர்
Question 2.
ஒரு மகிழுந்து ஓய்வு நிலையிலிருந்து 10 விநாடிகளில் 20 மீட்டர்/விநாடி என்ற வேகத்தில் பயணம் செய்யத் தொடங்குகிறது. மகிழுந்தின் முடுக்கம் யாது?
விடை:
கொடுக்கப்பட்டவை :
திசைவேகம் = 20 மீட்டர்/விநாடி
காலம் = 10 விநாடி
தீர்வு :
தொடக்க திசைவேகம் μ = மீ/விநாடி
= முடிவு திசைவேகம் (v) = 20மீ/வி
= எடுத்துக் கொண்ட காலம் =10 விநாடி
= முடுக்கம் (a) = (v – μ)/t
= (20 – 0)/10
= 2மீ/விநாடி2
Question 3.
ஒரு பேருந்தின் முடுக்கம் 1மீ/வி2 எனில் அப்பேருந்தானது 50 கிமீ/வி என்ற வேகத்தில் இருந்து 100 கிமீ /வி
என்ற வேகத்தினை அடைய எடுத்துக் கொள்ளும் காலத்தினைக் கணக்கிடுக.
விடை:
a = 1 மீ/வி2
V = 100)
μ = 50
\(\mathrm{a}=\frac{\mathrm{v}-\mu}{\mathrm{t}}\)
\(1=\frac{100-50}{t}\)
t = 50 விநாடி
ஃபேருந்து 50கிமீ/வி என்ற வேகத்தில் இருந்து 100கிமீ/வி என்ற வேகத்தினை அடைய எடுத்துக் கொண்ட காலம்
t = 50 விநாடி
IX. பின்வரும் அட்டவணையை நிரப்புக
விடை:
7th Science Guide விசையும் இயக்கமும் Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
Question 1.
தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி இவற்றின் SI அலகு.
அ) மீட்டர்/விநாடி
ஆ) மீட்டர்
இ) மீட்டர்/விநாடி
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஆ) மீட்டர்
Question 2.
ஒரு நாட்டிக்கல் மைல் என்பது ___________ ஆகும்
அ) 1.952 கி.மீ
ஆ) 1.752 கி.மீ
இ) 1.852 கி.மீ
ஈ) 1.652 கி.மீ
விடை:
இ) 1.852 கி.மீ
Question 3.
இரயில் நிலையத்திற்கு வரும் தொடர்வண்டியின் இயக்கம்
அ) சீரான திசைவேகம்
ஆ) சீரான வேகம்
இ) சீரற்ற திசைவேகம்
ஈ) சீரற்ற வேகம்
விடை:
இ) சீரற்ற திசைவேகம்
Question 4.
கூம்பினை எவ்வாறு நகர்த்தினாலும் அதே நிலையிலேயே நீடித்து இருப்பது
அ) உறுதியற்ற சமநிலை
ஆ) நடுநிலை சமநிலை
இ) உறுதிச் சமநிலை
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஆ) நடுநிலை சமநிலை
Question 5.
உசைன் போல்ட் 100 மீ தூரத்தினை _____________ எவ்வளவு விநாடிகளில் கடந்தார்.
அ) 8.58 விநாடி
ஆ) 9.58 விநாடி
இ) 9.78 விநாடி
ஈ) 10.78 விநாடி
விடை:
ஆ) 9.58 விநாடி
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
Question 1.
இரு புள்ளிகளுக்கிடையேயான ___________ பாதையில் மிகக் குறைந்த தொலைவு அமைகிறது.
விடை:
நேர்கோட்டுப்
Question 2.
வான் மற்றும் கடல் வழி போக்குவரத்துகளில் தொலைவினை அளக்கப் பயன்படுத்தப்படும் அலகு ____________ ஆகும்.
விடை:
நாட்டிக்கல் மைல்
Question 3.
இடப்பெயர்ச்சியில் ஏற்படும் மாறுபடும் வீதத்திற்கு ___________ என்று பெயர்.
விடை:
திசைவேகம்
Question 4.
ஒழுங்கான வடிவம் கொண்ட பொருள்களின் ஈர்ப்பு மையமானது பொதுவாக அதன் ____________ அமைகிறது.
விடை:
வடிவியல் மையத்தில்
Question 5.
பொம்மையின் ___________ அதன் மொத்த எடையும் பொம்மையின் மிகக் கீழான அடிப்பகுதியில் அமைந்து இதன் காரணமாகப் பொம்மையானது மிக மெல்லிய அலைவுடன் நடனம் போன்ற தொடர்ச்சியான இயக்கத்தினைத் தோற்றுவிக்கிறது.
விடை:
ஈர்ப்பு மையம்
III. சரியா? தவறா? தவறெனில் சரி செய்து எழுதுக
Question 1.
ஒரு நாட் என்பது ஒரு மணி நேரத்தில் ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவு கடக்கத் தேவைப்படும் வேகம் ஆகும்.
விடை:
சரி
Question 2.
ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவினைக் கடந்தால் அப்பொருள் சீரான வேகத்தில் செல்கிறது.
விடை:
சரி
Question 3.
இடப்பெயர்ச்சி மாறுபடும் வீதம் வேகம் எனப்படும்.
விடை:
தவறு – காரணம்: தொலைவு மாறுபடும் வீதம் வேகம் எனப்படும்
Question 4.
ஒரு பொருள் ஒவ்வொரு விநாடிக்கும் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் மாறுபாடு அடைவது இல்லை இதற்கு சீரற்ற முடுக்கம் ஆகும்.
விடை:
தவறு காரணம்: ஒரு பொருள் ஒவ்வொரு விநாடிக்கும் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் மாறுபடுகின்றன இதற்கு சீரற்ற முடுக்கம் ஆகும்.
Question 5.
அளவு கோலானது ஒரு தாங்கியின் மீது அதன் ஈர்ப்பு மையத்தில் நிறுத்தப்படும் போது சமநிலையில் நிற்கிறது.
விடை:
சரி
IV. பொருத்துக
V. சரியான வார்த்தைகளை வரிசைப்படுத்துக.
Question 1.
20-20, 60-20, 100-20, 40-20, 80-20
விடை:
100-20, 80-20, 60-20, 40-20, 20-20
Question 2.
விழும் மழைத்துளியின் வேகம். பந்து எறியும் வேகம், சிறுத்தையின் வேகம், மனிதர்களின் நடையின் வேகம் .
விடை:
மனிதர்களின் நடையின் வேகம் → விழும் மழைத்துளியின் வேகம் → சிறுத்தையின் வேகம் → பந்து எறியும் வேகம்.
VI. ஒப்புமை தருக
Question 1.
சராசரி வேகம்; கடந்த மொத்தத் தொலைவு / எடுத்துக் கொண்ட மொத்தக் காலம் சராசரி திசைவேகம் ; ____________
விடை:
மொத்த இடப்பெயர்ச்சி/எடுத்துக் கொண்ட காலம்.
Question 2.
மகிழுந்து ஓய்வு நிலையில் இருத்தல், ஒவ்வொரு விநாடி காலத்திற்கும் தொலைவானது
மாறாமல் உள்ளது.
மகிழுந்து சீரான வேகத்தில் செல்லும்; ____________
விடை:
‘ஒவ்வொரு விநாடி காலத்திற்கும் 10 மீட்டர் அளவில் உள்ளது.
VII. காரணம் மற்றும் கூற்று கேள்விகள்
Question 1.
கூற்று : ஒரு பேருந்தானது தஞ்சையிலிருந்து திருச்சியை நோக்கி செல்கிறது.
காரணம் : வேகம் மற்றும் காலத்தின் மதிப்புகள் அட்டவணைப்படுத்தப்பட்டு வரைப்படமானது வரையப்படுகிறது.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
Question 2.
கூற்று : ஒவ்வொரு விநாடிக்கும் பஸ்ஸின் வேகமானது கணக்கிடப்படுவதில்லை.
காரணம் : பந்தயக் கார்கள் உயரம் குறைவாகவும் அகலமானதாகவும் தயாரிக்கப்படுவதால் அதன் சமநிலை அதிகரிக்கப்படுகிறது.
விடை:
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
VIII. மிகக் குறுகிய விடையளி
Question 1.
ஒரு பொருளானது சூழி இடப்பெயர்ச்சியுடன் குறிப்பிட்டத் தொலைவில் நகர இயலுமா?
விடை:
முடியமெனில் உனது பதிலை உதாரணத்துடன் எழுதுக.
- ஆம் ஒரு பொருளானது சூழி இடப்பெயர்ச்சியுடன் குறிப்பிட்ட தொலைவில் நகர இயலும்.
- எ.கா ஒரு பொருளானது A என்ற புள்ளியில் புறப்பட்டு மீண்டும் அதே A என்ற புள்ளியை அடையும் எனில் அதன் இடப்பெயர்ச்சி சூழி ஆகும்.
Question 2.
சீரான இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருளின் பாதை எவ்வாறு அமைந்து இருக்கும்?
விடை:
சீரான இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருளின் பாதை ஒரு நேரான பாதையாக அமையும்.
Question 3.
சீரான மற்றும் சீரற்ற இயக்கத்திலுள்ள ஒரு பொருளின் தொலைவு காலம் வரைபடத்தின் தன்மை என்ன?
விடை:
- சீரான இயக்கத்திலுள்ள ஒரு பொருளின் தொலைவு – காலம் வரைபடமானது “நேரான பாதையைக் கொண்ட ஒரு மாறாத சாய்வு ஆகும்.
- சீரற்ற இயக்கத்திலுள்ள ஒரு பொருளின் தொலைவு – காலம் வரைபடமானது அதிகரித்தோ (அ) குறைந்துக் கொண்டோ செல்லும் சாய்வைக் கொண்ட ஒரு வளைவு பாதை ஆகும்.
IX. குறுகிய விடையளி
Question 1.
தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி இவற்றிக்கிடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
விடை:
Question 2.
முக்கோணத்தின் பயன்களை எழுதுக.
விடை:
முக்கோணமானது முறையானது திசைவேகம் (V), இடப்பெயர்ச்சி (d), மற்றும் காலம் (t) இவற்றுக்கிடையே உள்ள தொடர்பினை எளிதாகப் புரிந்துக் கொள்ள உதவுகிறது.
v = d/t, t = d/v, d = vxt = கட்டம்.
Question 3.
எதிர்முடுக்கம் என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து குறைந்து வந்தால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் எதிர் முடுக்கம் எனப்படும்.
Question 4.
தொலைவு – காலம், வேகம் – காலம், இரண்டு வரைபடத்தையும் ஒப்பிடுக.
விடை:
தொலைவு – காலம் வரைபடமும் வேகம் – காலம் வரைபடமும் ஒன்றுபோல் காணப்பட்டாலும் அவை நமக்குப் பொருளின் பயணம் பற்றிய வெவ்வேறு தகவல்களை அளிக்கின்றன.
Question 5.
சம நிலை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளின் ஆரம்பநிலையினைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனே அப்பொருளின் சமநிலை எனப்படும்.
X. விரிவான விடையளி
Question 1.
திசைவேகம் மற்றும் அதன் வகைகளை சரியான உதாரணத்துடன் விளக்குக.
விடை:
- இடப்பெயர்ச்சி மாறுபடும் வீதம் திசைவேகம் எனப்படும்.
- சைவேகம்
- திசைவேகத்தின் SI அலகு மீட்டர்/வினாடி
- வகைகள்: –
- சீரான திசைவேகம்
- சீரற்ற திசைவேகம்.
1) சீரான திசைவேகம்
- ஒரு பொருளானது தன் இயக்கத்தின் போது தனது திசையினை மாற்றாமல் சீரான கால இடைவெளியில் சீரான இடப்பெயர்ச்சினை மேற்கொண்டால் அது சீரான திசைவேகத்தில்
- இயங்குகிறது எனப்படும். – எ.கா. : வெற்றிடத்தில் பயணம் செய்யும் ஒளி.
2) சீரற்ற திசைவேகம்.
- ஒரு பொருளானது தனது திசையையோ அல்லது வேகத்தினையோ மாற்றிக் கொண்டால் அப்பொருள் சீரற்ற திசைவேகத்தில் உள்ளது எனப்படும்.
- எ.கா. : இரயில் நிலையத்திற்கு வரும் தொடர் வண்டியின் இயக்கம்.
Question 2.
முடுக்கத்தின் வகைகளை பற்றி எழுதுக?
விடை:
1) சீரான முடுக்கம் :
ஒரு பொருளில் சீரான கால இடைவெளியில் காலத்தினை பொருத்து திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் (அதிகரித்தல் (அ) குறைத்தல்) சீரானதாக இருப்பின் அம்முடுக்கம் சீரான முடுக்கம் எனப்படும்.
2) சீரற்ற முடுக்கம் :
ஒரு பொருளின் திசைவேகத்தில் காலத்தைப் பொருத்து ஏற்படும் மாற்றமானது சீரற்றதாக இருந்தால் அம்முடுக்கமானது சீரற்ற முடுக்கம் எனப்படும்.
உதாரணம்
இங்கு ஒவ்வொரு நொடிக்கும் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் மாறுபடுவதைக் காணலாம். எனவே இம்முடுக்கம் சீரற்ற முடுக்கம் எனப்படும்.
மன வரைபடம்