Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

6th Science Guide விசையும் இயக்கமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
வேகத்தின் அலகு _____அமீ
அ) மீ
ஆ) விநாடி
இ) கிலோகிராம்
ஈ) மீ/வி
விடை:
ஈ) மீ/வி

Question 2.
கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?
அ) பூமி தன் அச்சைப் பற்றிச் சுழலுதல்
ஆ) நிலவு பூமியைச் சுற்றி வருதல்
இ) அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
இ)அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 3.
கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு
அ) வேகம்=தொலைவு × காலம்
ஆ) வேகம்= தொலைவு / காலம்
இ) வேகம் = காலம் /தொலைவு
ஈ) வேகம் = 1/ (தொலைவு × காலம்)
விடை:
ஆ) வேகம் தொலைவு / காலம்

Question 4.
கீதா தன் தந்தையின் வண்டியினை எடுத்துக் கொண்டு அவளுடைய வீட்டிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள மாமா வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு செல்வதற்கு 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள்.
கூற்று 1 : கீதாவின் வேகம் 1 கி.மீ/ நிமிடம்
கூற்று 2: கீதாவின் வேகம் 1 கி.மீ/மணி
அ) கூற்று 1 மட்டும் சரி
ஆ) கூற்று 2 மட்டும் சரி
இ) இரண்டு கூற்றுமே சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
அ)கூற்று 1 மட்டும் சரி

II. கீழ்க்க ண்ட கூற்றுகள் சரியா/தவறா எனக் கூறு.தவறு எனில் சரியான விடைகள் விடையை எழுதுக.

Question 1.
மையப் புள்ளியைப் பொறுத்து முன்னும் பின்னும் இயங்கும் இயக்கம் அலைவு இயக்கம் ஆகும்.
விடை:
சரி

Question 2.
அதிர்வு இயக்கமும், சுழற்சி இயக்கமும் கால ஒழுங்கு இயக்கமாகும்.
விடை:
சரி

Question 3.
மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனத்தின் இயக்கம் ஒரு சீரான இயக்கமாகும்.
சரியான விடை : இது சீரற்ற இயக்கம்
விடை:
தவறு

Question 4.
வருங்காலத்தில் மனிதர்களின் பதிலியாக ரோபாட்டுகள் செயல்படும். அக உணர்வு நிலையில் இருக்காது
விடை:
தவறு

III. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
சாலையில் நேராகச் செல்லும் ஒரு வண்டியின் இயக்கம் _____
விடை:
நேர்க்கோட்டு இயக்கம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 2.
புவிஈர்ப்பு விசை _____ விசையாகும்.
விடை:
தொடா விசை

Question 3.
மண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம் ______ இயக்கமாகும்.
விடை:
தற்சுழற்சி இயக்கம்

Question 4.
ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்குமானால், அப்பொருளின் இயக்கம் ______
விடை:
சீரான இயக்கம்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 51
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 52

V. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக.

Question 1.
பந்தை உதைத்தல் : தொடு விசை :: இலை கீழே விழுதல்: _____
விடை:
தொடா விசை

Question 2.
தொலைவு : மீட்டர் :: வேகம் : _____?
விடை:
மீ/வி

Question 3.
சுழற்சி இயக்கம்: பம்பரம் சுற்றுதல் :: அலைவு இயக்கம் : ___?
விடை:
தனிஊசல்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

VI. சீரான வேகத்தில் காட்டினுள் செல்லும் ஒருயானை கடக்கும் தொலைவு, காலத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. சீரான வேகத்தின் அடிப்படையில் கீழ்கண்ட அட்டவணையை பூர்த்தி செய்க.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 60
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 60.1

VII. வலை அட்டவனையைப் பூர்த்தி செய்க:

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 61

VIII. ஒரு வார்த்தையில் விடையை எழுதுக.

Question 1.
தொடுதல் நிகழ்வின்றி ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் பெயர் ___
விடை:
தொடா விசை

Question 2.
காலத்தைப் பொறுத்து ஒரு பொருளின் நிலை மாறுபடுவது _____
விடை:
இயக்கம்

Question 3.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், திரும்பத் திரும்ப நிகழும் இயக்கம் _____ எனப்படும்.
விடை:
அலைவு இயக்கம்

Question 4.
சம கால இடைவெளியில், சமதொலைவை கடக்கும் பொருளின் இயக்கம் _____
விடை:
சீரான இயக்கம்

Question 5.
நுணுக்கமான அல்லது கடினமான வேலைகளைச் செய்யுமாறு கணினி நிரல்களால் வடிவமைக்கப்பட்ட இயந்திரம் _____
விடை:
செயற்கை நுண்ணறிவு

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

IX. ஒரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
விசை – வரையறு.
விடை:
விசை என்பது பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே விசை என அழைக்கப்படுகிறது.

Question 2.
பொருள் நகரும் பாதையைப் பொறுத்து இயக்கங்களை எவ்வாறு வகைப் படுத்தலாம்?
விடை:

  1. நேர்க்கோட்டு இயக்கம்
  2. வளைவுப்பாதை இயக்கம்
  3. வட்டப்பாதை இயக்கம்
  4. தற்சுழற்சி இயக்கம்
  5. அலைவு இயக்கம்
  6. ஒழுங்கற்ற இயக்கம்

Question 3.
நீ இயங்கும் மகிழுந்தினுள் உட்கார்ந்திருக்கும் போது உன்னருகில் அமர்ந்திருக்கும் உன் நண்பனைப்பொறுத்து நீ என்ன நிலையில் உள்ளாய்?
விடை:
இயங்கும் மகிழுந்தினுள் நானும் என் நண்பனும் உட்கார்ந்திருக்கும் போது, என் நண்பனும், நானும் ஓய்வு நிலையில் இருப்போம் என கருதுகிறேன்.

Question 4.
பூமியின் சுழற்சி கால ஒழுங்கு இயக்கமாகும் – விவரி
விடை:
ஒரு குறிப்பிட்டட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கங்களை கால ஒழுங்கு இயக்கம் என்கிறோம். எனவே, புவியின் சுழற்சி கால ஒழுங்கு இயக்கமாகும்.

Question 5.
சுழற்சி இயக்கம், வளைவுப்பாதை இயக்கம் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 65

X. கணக்கிடுக.

Question 1.
ஒரு வண்டியானது 5 மணி நேரத்தில் 400கி.மீ தூரத்தைக் கடந்தால் வண்டியின் சராசரி வேகம் என்ன?
தீர்வு :
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 66
விடை:
80 கிலோ மீட்டர்/ மணி

XI. விரிவான விடையளி.

Question 1.
இயக்கம் என்றால் என்ன?
விடை:
இயக்கம்:

  • இயக்கம் என்பது காலத்தைப் பொறுத்து ஒரு பொருள் தனது நிலையை மாற்றிக் கொள்வதை இயக்கம் என்கிறோம்.
  • இயங்கும் பாதையின் அடிப்படையில் இயக்கத்தை வகைப்படுத்தலாம்:
  1. நேர்க்கோட்டு இயக்கம்
    பொருளானது நேர்க்கோட்டுப் பாதையில் இயங்கும். (உம்) நேர்க்கோட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதன். தானாகக் கீழே விழும் பொருள்.
  2. வளைவுப்பாதை இயக்கம்
    பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும்.(உ.ம்) பந்தினை வீசுதல்
  3. வட்டப்பாதை இயக்கம்
    ஒரு பொருள் வட்டப்பாதையில் இயங்கும் (உம்) கயிற்றின் ஒரு முனையில் கல்லினைக் கட்டிச் சுற்றுதல்.
  4. தற்சுழற்சி இயக்கம்
    ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல் (உம்): பம்பரத்தின் இயக்கம்.
  5. அலைவு இயக்கம்
    ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி நகர்தல் – (உ.ம்) தனிஊசல்.
  6. ஒழுங்கற்ற இயக்கம் ஒரு ஈயின் இயக்கம் அல்லது மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம்.

Question 2.
பொருளின் இயக்கத்தினை எவற்றின் அடிப்படையில் நாம் வகைப்படுத்தலாம்?
விடை:
எடுத்துக்காட்டுடன் விளக்குக. பொருளின் இயக்கத்தை நாம் காலம் மற்றும் வேகத்தைப் பொறுத்து வகைப் படுத்தலாம். கால இடைவெளி அடிப்படையில்:
1. கால ஒழுங்கு இயக்கம்
2. கால ஒழுங்கற்ற இயக்கம்

1. கால ஒழுங்கு இயக்கம்
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கங்களை நாம் கால ஒழுங்கு இயக்கம் என்கிறோம். (எ.கா) புவியை சுற்றிய நிலவின் இயக்கம்.

2. கால ஒழுங்கற்ற இயக்கம்
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக நடைபெறாது. இவ்வியக்கம் கால ஒழுங்கற்ற இயக்கம். சீரான வேகத்தின் அடிப்படையில்
1. சீரான இயக்கம்
2. சீரற்ற இயக்கம்

1. சீரான இயக்கம்.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான வேகத்தில் இயங்கும் பொருளின் இயக்கத்தினை சீரான இயக்கம் என்கிறோம். (எ.கா) தொடர்வண்டியின் இயக்கம்.
2. சீரற்ற இயக்கம்.
மாறுபட்ட வேகங்களில் இயங்கும் பொருளின் இயக்கத்தினை நாம் சீரற்ற இயக்கம் என்கிறோம். (எ.கா) வாகன இயக்கம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

XII. எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 80
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 81

6th Science Guide விசையும் இயக்கமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
பூமி சுழல்வது
அ) மேற்கிலிருந்து கிழக்காக
ஆ) கிழக்கிலிருந்து மேற்காக
இ) வடக்கிலிருந்து தெற்காக
ஈ) தெற்கிலிருந்து வடக்காக
விடை:
அ) மேற்கிலிருந்து கிழக்காக

Question 2.
ஓர் அறையில் அங்கும் இங்குமாக நகரும் ‘ஈ’ -யின் பாதை
அ) கால ஒழுங்கு இயக்கம்
ஆ) கால ஒழுங்கற்ற இயக்கம்
இ) வளைவுப் பாதை இயக்கம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) கால ஒழுங்கற்ற இயக்கம்

Question 3.
சராசரி வேகத்திற்கான SI அலகு.
அ) மீட்டர்/வினாடி
ஆ) கிலோமீட்டர்/வினாடி
இ) கிலோமீட்டர் / நேரம்
ஈ) மீட்டர்/நேரம்
விடை:
அ) மீட்டர்/வினாடி

Question 4.
தரையில் வாழும் விலங்குகளில் சிறுத்தையானது சராசரியாக ____ வேகத்தில் ஒடும் மிக வேகமான விலங்காகும்.
அ) 100 கி.மீ/மணி
ஆ) 200 கி.மீ/மணி
இ) 112கி.மீ/மணி
ஈ) 10கி.மீ/மணி
விடை:
இ 112கி.மீ/மணி

Question 5.
புவியைச் சுற்றிய நிலவின் இயக்கம் _____
அ) அலைவு இயக்கம்
ஆ) கால ஒழுங்கு இயக்கம்
இ) வளைவு இயக்கம்
ஈ) ஆ மற்றும் இ
விடை:
ஆ) கால ஒழுங்கு இயக்கம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

II. சரியா?தவறா? என எழுதுக தவறு எனில் சரியான விடையை எழுதுக.

Question 1.
காலத்தைப் பொறுத்து ஒரு பொருள் தனது நிலையை மாற்றிக்கொள்வது இயக்கம் ஆகும்.
விடை:
சரி

Question 2.
கயிற்றின் ஒரு முனையில் கல்லினைக் கட்டிச் சுற்றுதல் தற்சுழற்சி இயக்கம் ஆகும்.
சரியான விடை : வட்டப்பாதை இயக்கமாகும்
விடை:
தவறு.

Question 3.
ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் குழந்தையின் இயக்கம் கால ஒழுங்கு இயக்கம் ஆகும்.
விடை:
சரி

Question 4.
அலைவு இயக்கம் அனைத்தும் கால ஒழுங்கு இயக்கமாகும்.
விடை:
சரி

Question 5.
தொலைவின் SI அலகு கிலோமீட்டர்
தவறு சரியான விடை : தொலைவின் SI அலகு மீட்டர் (அ)
விடை:
தவறு

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
கூட்டம் மிகுந்த கடைத்தெருவில் மக்களின் இயக்கம் _____
விடை:
ஒழுங்கற்ற இயக்கம்

Question 2.
மாறுபட்ட வேகங்களில் இயங்கும் பொருளின் இயக்கம் ____
விடை:
சீரற்ற இயக்கம்

Question 3.
பிரியா தனது மிதிவண்டியில் 2 மணி நேரத்தில் 40 கி.மீ தூரம் பயணம் செய்தால் அவளுடைய சராரரி வேகம் _____
விடை:
20 கிலோமீட்டர்/மணி

Question 4.
இயக்கம் _____ வகைப்படும்.
விடை:
நான்கு

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 5.
ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல் _____
விடை:
தற்சுழற்சி இயக்கம்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 81.1

V. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக.

Question 1.
தொடர் வண்டியின் இயக்கம் : சீரான இயக்கம் வாகனங்களின் இயக்கம் : _____
விடை:
சீரற்ற இயக்கம்

Question 2.
கால ஒழுங்கு இயக்கம் : புவியைச் சுற்றிய நிலவின் இயக்கம் அலைவு இயக்கம் : _____
விடை:
தனி ஊசலின் இயக்கம்

VI. விடுபட்ட இடங்களை நிரப்புக.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 85

VII. எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 86

VIII. குறுகிய விடையளி.

Question 1.
ஓய்வு நிலை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருள் காலத்தைப் பொறுத்து தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் ஒரே இடத்தில் இருப்பதை ஓய்வு நிலை என்கிறோம்.

Question 2.
விசையின் இரண்டு வகைகள் யாவை?
விடை:

  1. தொடு விசை
  2. தொடா விசை

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 3.
தொடு விசை என்றால் என்ன?
விடை:
விசையானது பொருளினைத் தொடுவதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய விசை தொடுவிசை என அழைக்கப்படுகிறது.

Question 4.
சராசரி வேகம் என்றால் என்ன?
விடை:
ஓரலகு காலத்தில் ஒரு பொருள் எவ்வளவு தூரம் கடந்தது என்று கூறுவதே சராசரி வேகமாகும்.

Question 5.
ஒருபேருந்தானது மணிக்கு 40 கி.மீவேகத்தில் பயணம் செய்து 200கி.மீ தொலைவினைக் கடந்தால் அப்பேருந்து பயணம் செய்ய எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு?
விடை:
காலம் (t) = கடந்த தொலைவு (d) / சராசரி வேகம்
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 86.2
= 5 மணி.

IX. விரிவான விடையளி.

Question 1.
விசை என்றால் என்ன ? விசையின் வகைகளை விளக்குக.
விடை:
விசை: பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே விசை என அழைக்கப்படுகிறது. விசையின் வகைகள் :

1. தொடு விசை
2. தொடா விசை

தொடு விசை: விசையானது பொருளினைத் தொடுவதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய விசை தொடுவிசை என அழைக்கப்படுகிறது. எ.கா. கால்பந்தை உதைத்தல்.
தொடா விசை: விசையானது பொருளினைத் தொடாமல் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய விசைகள் தொடா விசைகள் என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 95

பொருளின் மீது செயல்படுத்தப்படும் விசையானது

  • பொருளை ஓய்வு நிலையிலிருந்து இயக்க நிலைக்கோ அல்லது இயக்க நிலையிலிருந்து ஓய்வு நிலைக்கோ மாற்றும்.
  • இயங்கும் பொருளின் வேகத்தினையோ அல்லது திசையையோ அல்லது இரண்டையுமோ மாற்றும்.
  • பொருளின் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 96