Samacheer Kalvi 8th Science Guide Chapter 17 தாவர உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 17 தாவர உலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 17 தாவர உலகம்

8th Science Guide தாவர உலகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
தூதுவளையின் இருசொற்பெயர் சொலானம் ட்ரைலொபேட்டம் ஆகும். இதில் “சொலானம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?
அ) சிற்றினம்
ஆ) பேரினம்
இ) வகுப்பு
ஈ) துறைகள்
விடை:
ஆ) பேரினம்

Question 2.
புளோரிடியன் ஸ்டார்ச் சேமிப்புப் பொருளாகக் காணப்படும் பிரிவு.
அ) குளோரோஃபைசி
ஆ) பியோஃபைசி
இ) ரோடோஃபைசி
ஈ) சயனோஃபைசி
விடை:
இ) ரோடோஃபைசி

Question 3.
கூட்டமைப்பாகக் காணப்படும் பாசி
அ) ஆசில்லடோரியா
ஆ) நாஸ்டாக்
இ) வால்வாக்ஸ்
ஈ) குளோரல்லா
விடை:
இ) வால்வாக்ஸ்

Question 4.
உண்ணத் தகுந்த காளான்
அ) பாலிபோரஸ்
ஆ) அகாரிகஸ்
இ) பெனிசிலியம்
ஈ)அஸ்பர்ஜில்லஸ்
விடை:
ஆ) அகாரிகஸ்

Question 5.
மண் அரிப்பைத் தடுக்கும் தாவரங்கள்.
அ) பாசிகள்
ஆ) பூஞ்சைகள்
இ) பிரையோஃபைட்டுகள்
ஈ) டெரிடோஃபைட்டுகள்
விடை:
இ) பிரையோஃபைட்டுகள்

Question 6.
முதலாவது நிலத் தாவரங்கள்.
அ) பிரையோஃபைட்டுகள்
ஆ) டெரிடோஃபைட்டுகள்
இ) ஜிம்னோஸ்பெர்ம்கள்
ஈ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
விடை:
ஆ) டெரிடோஃபைட்டுகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 7.
நன்கு வளர்ச்சியடைந்தவாஸ்குலார்திசுக்களைக் கொண்ட தாவர உடலம் காணப்படுவது.
அ) பிரையோஃபைட்டுகள்
ஆ) டெரிடோஃபைட்டுகள்
இ) ஜிம்னோஸ்பெர்ம்கள்
ஈ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
விடை:
ஆ) டெரிடோஃபைட்டுகள்

Question 8.
இருசொற்பெயரிடு முறை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1970
ஆ) 1975
இ) 1978
ஈ) 1623
விடை:
ஈ) 1623

Question 9.
பெனிசிலின் ஒரு உயிர் எதிர்பொருள். இது எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?
அ) பாசிகள்
ஆ) பூஞ்சைகள்
இ) பிரையோஃபைட்டுகள்
ஈ) டெரிடோஃபைட்டுகள்
விடை:
ஆ) பூஞ்சைகள்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
“வகைப்பாட்டியல்” என்ற சொல் ………………………. மொழியிலிருந்து பெறப்பட்டது.
விடை:
கிரேக்கச்

Question 2.
இரு சொற்பெயரிடு முறை முதன்முதலில் ……………………….. என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
காஸ்பர்டு பாகின்

Question 3.
“ஜெனிரா பிளாண்டாரம்” என்ற நூலை வெளியிட்டவர்கள் ………………………….. மற்றும் ……………………..
விடை:
பெந்தம் மற்றும் ஹீக்கர்

Question 4.
ஒரு விதையிலைத் தாவரங்கள் …………………………………… விதையிலையினை மட்டுமே கொண்டுள்ளன.
விடை:
ஒரு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 5.
பழுப்பு பாசி …………………… வகுப்பைச் சார்ந்தது.
விடை:
ஃபேயோபைசியே

Question 6.
அகார் அகார் ………………………… என்ற பாசியிலிருந்து பெறப்படுகிறது.
விடை:
ஜெலீடியம்

Question 7.
பூஞ்சைகளின் சேமிப்புப் பொருள்கள் …………………… மற்றும் ……………………….. ஆகும்.
விடை:
கிளைக்கோஜன் எண்ணெய்

Question 8.
முதலாவது உண்மையான நிலத்தாவரம்.
விடை:
டெரிடோஃபைட்டு

Question 9.
………………………… தாவரங்களில் சைலம் மற்றும் ஃபுளோயம் காணப்படுவதில்லை.
விடை:
பிரையோஃபைட்டு

Question 10.
…………………………. தாவரங்களில் வலைப்பின்னல் நரம்பமைவு காணப்படுகிறது.
விடை:
இரு விதையிலைத்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

III. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறான வாக்கியத்தைத் திருத்தி எழுதுக.

Question 1.
பாலிபெட்டலே துணை வகுப்பில் அல்லி இதழ்கள் தனித்தவை.
விடை:
சரி

Question 2.
இரு சொல்பெயர் இரண்டுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கும்.
விடை:
தவறு

Question 3.
செயற்கை முறை வகைப்பாடானது தாவரத்தின் ஒரு சில புறத்தோற்றப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.
விடை:
சரி

Question 4.
பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டினால் ஆனது.
விடை:
சரி

Question 5.
பைனஸ் ஒரு மூடிய விதைத் தாவரம்
விடை:
தவறு

Question 6.
பிரையோஃபைட்டா தாவரங்கள் அனைத்தும் நீர் வாழ்த் தாவரங்களாகும்.
விடை:
தவறு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 7.
இரு விதையிலைத் தாவரங்கள் ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களை விட நன்கு வளர்ச்சியடைந்த பண்புகளை கொண்டுள்ளன.
விடை:
சரி

Question 8.
பிரையோஃபைட்டுகளில் மாஸ்கள் நன்கு வளர்ச்சியடைந்த தாவரங்களாகும்.
விடை:
சரி

Question 9.
பிரையோஃபைட்டுகளில் ஸ்போரோபைட் தாவர நிலை ஓங்கியது.
விடை:
தவறு

Question 10.
டெரிடோஃபைட்டுகளில் ஸ்போரோபைட் நிலை ஓங்கியது.
விடை:
சரி

VI. பொருத்துக

V. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
தாலஸ் – வரையறு.
விடை:

  • பாசிகளின் தாவர உடலானது தாலஸ் (தாள் போன்றது) என அழைக்கப்படுகிறது.
  • இந்த தாவர உடலை வேர், தண்டு, இலை என வேறுபடுத்த இயலாது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 2.
இருசொற் பெயரிடு முறை என்பது என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை:

  • ஓர் உயிரினத்தை இரண்டு சொற்களால் பெயரிட்டு அழைப்பது இரு சொல் பெயரிடுதல் எனப்படும்.
  • மாஞ்சிஃபெரா இன்டிகா என்பது மாமரத்தின் தாவரவியல் பெயராகும்.

Question 3.
இரு விதையிலைத் தாவரங்களின் இரு பண்புகளை எழுதுக.
விடை:

  • விதைகள் இரண்டு விதையிலைகளைக் கொண்டிருக்கும்.
  • மலர்கள் 4 அல்லது 5 அங்கங்களைக் கொண்டிருக்கும்.

Question 4.
ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களின் விதைகள் திறந்தவை ஏன்?
விடை:
ஜிம்னோஸ்பெர்ம் திறந்த விதைத் தாவரங்கள், ஏனெனில் அவற்றின் சூலானது சூற்பையால் சூழப்பட்டிருப்பதில்லை.

Question 5.
பூஞ்சைகளின் ஏதேனும் இரு பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:

  • ஆஸ்பியா கோஸ்பீ மற்றும் எரிமோதீசியம் ஆஸ்பியீ போன்ற பூஞ்சைகள் வைட்டமின் B, வை உருவாக்குகின்றன.
  • ஈஸ்ட்டில் உள்ள இன்வர்டேஸ், சைமேஸ் போன்ற நொதிகள் சர்க்கரைக் கழிவிலிருந்து நொதித்தல் மூலம் ஆல்கஹாலை உருவாக்குகிறது.

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
இயற்கை வகைப்பாட்டு முறை பற்றி சுருக்கமாக எழுதுக.
விடை:

  • பெந்தம் மற்றும் ஹீக்கள் ஆகியோர் இயற்கை வகைப்பாட்டு முறையைத் தங்கள் ஜெனிரா பிளான்டாரம் என்ற 3 தொகுதிகள் கொண்ட புத்தகத்தில் விளக்கியுள்ளனர்.
  • விதைத் தாவரங்கள் 3 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகுப்பு 1: இருவிதையிலைத் தாவரம்:

  • இரண்டு விதையிலைகள் இருக்கும்.
  • இலைகளில் வலைப்பின்னல் நரம்பமைவு உள்ளது.
  • ஆணி வேர் இருக்கும்.

வகுப்பு 2 – ஜிம்னோஸ்பெர்ம்:

  • இதில் கனிகள் உருவாவதில்லை
  • 3 குடும்பங்களை உள்ளடக்கியது
  • சைக்கடேசி
  • கோனிஃபேரே
  • நீட்டேசி

வகுப்பு 3 – ஒரு விதையிலைத் தாவரம்:

  • ஒரு விதையிலையைக் கொண்டுள்ளன.
  • இலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு உள்ளன.
  • சல்லி வேர்கள் உள்ளன.
  • மலர்கள் 3 அங்கங்களைக் கொண்டிருக்கும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 2.
பாசிகளின் ஏதேனும் மூன்று பொருளாதார முக்கியத்துவங்களை எழுதுக.
விடை:

  • வேளாண்மை: சில நீல பச்சைப்பாசிகள் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகின்றன. இவை மண்ணின் வளத்தை அதிகரிக்கின்றன. எ.கா. நாஸ்டாக், அன்பீனா.
  • அயோடின் : பழுப்புப் பாசிகளிலிருந்து அயோடின் பெறப்படுகிறது. எ.கா. லேமினேரியா
  • தனிசெல் புரதம்: சில செல் பாசிகள் மற்றும் நீலப்பச்சை பாசிகள் புரதத்தை உற்பத்தி செய்கின்றன. எ.கா. குளோரெல்லா

Question 3.
பாசிகளுக்கும், பூஞ்சைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
விடை:
பாசிகள்
1. பாசிகளில் நிறமிகள் உண்டு.
2. எனவே இவை தற்சார்பு உயிரிகள் எனப்படும்.
3. சேமிப்புப் பொருள் ஸ்டார்ச்
4. இதன் தாவர உடலம் தாலஸ் (தாள் போன்றது) என அழைக்கப்படுகிறது.
5. சில பாசிகள் புரோகேரியாட்டிக் செல் அமைப்பைக் கொண்டுள்ளது. எ.கா. சயனோ பாக்டீரியா

புஞ்சைகள்
– புஞ்சைகளில் நிறமிகள் இல்லை
– இவை பிறச்சார்பு உயிரிகள் எனப்படும்.
– சேமிப்புப் பொருள் கிளைக்கோஜன் மற்றும் எண்ணெய்
– இதன் தாவர உடலம் பூஞ்சை இழைகளால் (ஹைபா) ஆனது.
– அனைத்தும் யூகேரியாட்டிக் செல் அமைப்பைக்கொண்டுள்ளன. எ.கா. அகாரிகஸ்.

Question 4.
பிரையோஃபைட்டுகளில் எத்தனை வகுப்புகள் உள்ளன? அவை யாவை?
விடை:
பிரையோஃபைட்டுகளில் மூன்று வகுப்புகள் உள்ளது. அவை

  • ஹிப்பாட்டிக்கே (ரிக்ஸியா)
  • ஆந்தோசெரட்டே (ஆந்தோசெரஸ்)
  • மாசஸ் (பியூனேரியா)

Question 5.
டெரிடோஃபைட்டுகளின் ஏதேனும் நான்கு பண்புகளை எழுதுக.
விடை:

  • இவை முதன் முதலில் தோன்றிய உண்மையான நிலத் தாவரங்கள்.
  • கடத்துத் திசுக்களான சைலம் மற்றும் ஃபுளோயம் உள்ளன. எனவே டெரிடோஃபைட்டுகளை கடத்துத் திசு பூவாத் தாவரம் என அழைக்கிறோம்.
  • தாவர உடலமான ஸ்போரோஃபைட் ஸ்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
  • ஸ்போர் முளைத்து புரோதாலஸ் எனப்படும் கேமிட்டோஃபைட் சந்ததியை உருவாக்குகிறது.
    இது தன்னிச்சையாகக் குறுகிய நாள் வாழக் கூடியது.

VII. விரிவாக விடையளி

Question 1.
பெந்தம் ஹீக்கர் வகைப்பாட்டின் சுருக்க அட்டவணையை வரைக.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 17 தாவர உலகம் 2

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 2.
இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலைத் தாவரங்களுக்கு இடையே உள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளை எழுதுக.
விடை:
ஒரு விதையிலைத் தாவரம்
1. விதை, ஒரு விதையிலையைக் கொண்டுள்ளது.
2 இத்தாவரங்கள் சல்லிவேர்த் தொகுப்புடன் உள்ளன.
3 இலைகள் இணைப்போக்கு நரம்பமைவுடன் காணப்படுகின்றன.
4 மலர்கள் மூன்று அடுக்கு உடையவை
5 மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் காற்றின் மூலம் நடைபெறும். எ.கா. புல்.

இரு விதையிலைத் தாவரம்
– விதை இரண்டு விதையிலைகளைக்கொண்டுள்ளது.
– இவை ஆணி வேர்த் தொகுப்புடன் உள்ளன.
– இலைகள் வலைப்பின்னல் நரம்பமைவுடன் காணப்படுகின்றன.
– மலர்கள் நான்கு அல்லது ஐந்து அங்கங்களைக் கொண்டிருக்கும்.
– மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் பூச்சிகள் மூலம் நடைபெறும். எ.கா. அவரை.

Question 3.
ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களுக்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக.
விடை:
ஜிம்னோஸ்பெர்ம்
1. சைலம் டிரக்கீடுகளை மட்டும் கொண்டுள்ளது.
2. துணை செல்கள் புளோடத்தில் கிடையாது. ஆனால். உணவைக் கடத்த சல்லடை செல்கள் பயன்படுகிறது.
3. ஸ்போர்கள் கூம்பு வடிவ விந்தகத்தினுள் உருவாகிறது.
4. இவை திறந்தவிதைத்தாவரங்கள். சூலானது சூற்பையால் சூழப்பட்டிருப்பதில்லை.
5. சூற்பை இல்லாததால் கனிகள் உருவாவதில்லை.

ஆஞ்சியோஸ்பெர்ம்
– சைலமானது சைலக் குழாய்கள் டிரக்கீடு, சைலம் பாரன்கைமா மற்றும் சைலம் நார்கள் என நான்கு வகைச் செல்களைக்கொண்டுள்ளது.
– துணை செல்கள், கல்லடைக் குழாய் புளோயம் பாரன்கைமா, புளோயம் நார்கள் என நான்க வகை செல்கள் புளோயத்தில் உள்ளது.
– ஸ்போர்கள் பூக்களில் இருந்து உருவாகிறது.
– ஆஞ்சியோஸ்பெர்மில் விதைகள் மூடப்பட்டிருக்கும்.
– கருவுறுதலுக்கும் பின் சூற்பை கனியாக மாறும்.

Question 4.
ஜிம்னோஸ்பெர்ம்களின் பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:

  • ஊசியிலைத் தாவரங்களின் மரக்கட்டையானது தாள் தொழிற்சாலைகளில் தாள் உற்பத்திக்கும் பயன்படுகிறது. எ.கா. பைனஸ்.
  • ஊசியிலைத் தாவரங்களின் மென்கட்டைகள் கட்டுமானத் தொழிலுக்கும், பொருள்களைப் பொதிவதற்கும் மற்றும் ஒட்டுப் பலகைத் தயாரிப்பிற்கம் பயன்படுகிறது. எ.கா. செட்ரஸ், அகாதிஸ்.
  • பைனஸ் தாவரத்தின் பசையிலிருந்து பெறப்படும் டர்பன்டைன், வண்ணப்பூச்சு தயாரிப்பிற்குப் பயன்படுகிறது. மேலும் இது மூட்டுவலி மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.
  • பைனஸ் ஜெரார்டியானா என்னும் தாவரத்தின் விதைகள் உண்பதற்குப் பயன்படும்.
  • எஃபிடிரின் என்னும் அல்கலாய்டு எஃபிட்ரா எனும் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இது சுவாசக் கோளாறு மற்றும் ஆஸ்துமாவிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
  • அராவ்கேரியா பிட்வில்லீ என்னும் தாவரம் அழகுத் தாவரமாகப் பயன்படுகிறது

Question 5.
மருத்துவத் தாவரங்களின் பெயர்களை எழுதி அவற்றின் பயன்களை விவரிக்கவும்.
அகாலிஃபா இன்டிகா (குப்பைமேனி):
விடை:

  • இலையை அரைத்துப் பெறப்படும் பசை தோலில் உள்ள கொப்புளங்களை ஆற்றுகிறது.
  • இலைச் சாற்றை எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள உருளைப்புழுக்கள் அழியும்.

ஏகில் மார்மிலோஸ் (வில்வம்):

  • இதன் காயானது செரிமானத்தைச் சரிசெய்கிறது.
  • இது தீராத வயிற்றுப்போக்கு, சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

ஃபில்லாந்தல் அமாரஸ் (கீழாநெல்லி )

  • முழுத் தாவரமும் மஞ்சள் காமாலை நோய்க்க மருந்தாகப் பயன்படுகிறது.
  • இது கல்லீரலுக்கு வலிமையை கொடுத்து கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

சொலானம் டிரைலொபேட்டம் (தூதுவளை):
இதன் இலை, கனி, இருமல், சளி, காசநோய், ஆஸ்துமாவுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

அலோவெரா (சோற்றுக் கற்றாழை):
இதன் இலைகள் மூலநோய் மற்றும் தோலில் தோன்றும் அழற்சியை குணப்படுத்துகிறது. இது வயிற்றுப் புண்ணுக்குரிய மருந்தாகவும் பயன்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

8th Science Guide தாவர உலகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ஏறத்தாழ ……………………….. மில்லியன் உயிரினங்கள் இந்த உலகத்தில் உள்ளன.
அ) 10
ஆ) 20
இ) 8.7
ஈ) 5
விடை:
இ) 8.7

Question 2.
மிகவும் பழமையான வகைப்பாட்டுமுறை …………………………
அ) செயற்கை வகைப்பாட்டுமுறை
ஆ) இயற்கை வகைப்பாட்டுமுறை
இ) மரபுவழி வகைப்பாட்டுமுறை
ஈ) நவீன வகைப்பாட்டுமுறை
விடை:
அ) செயற்கை வகைப்பாட்டுமுறை

Question 3.
பெரிய இலைகள் கொண்ட பாசி …………………………
அ) மேக்ரோசிஸ்டிஸ்
ஆ) வால்வாக்ஸ்
இ) ஸ்பைரோகைரா
ஈ) குளோரெல்லா
விடை:
அ) மேக்ரோசிஸ்டிஸ்

Question 4.
………………………. பாசி வீட்டு விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன.
அ) ஜெலிடியம்
ஆ) லேமினேரியா
இ) குளோரல்லா
ஈ) ஸ்பைருலினா
விடை:
ஆ) லேமினேரியா

Question 5.
செர்க்கோஸ்போரா பெர்சொனேட்டா ஏற்படுத்துவது
அ) டிக்கா நோய்
ஆ) அழுகல் நோய்
இ) வாடல் நோய்
ஈ) வெண்புள்ளி நோய்
விடை:
அ) டிக்கா நோய்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
இளைஞர்களிடத்தில் மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் பூஞ்சை ………………………
விடை:
கிளாவிசெப்ஸ் பர்பூரியா

Question 2.
பெனிசிலின் …………………. பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
விடை:
பெனிசிலியம் நொட்டேட்டம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 3.
ஸ்பேக்னம் எனும் தாவரத்திலிருந்து கிடைக்கும் நிலக்கரியைப் போன்ற எரிப்பொருள் …………………………….
விடை:
பீட்

Question 4.
வயிற்றுப் புண்ணுக்குரிய மருந்தாகப் பயன்படுவது ……………………….
விடை:
அலோவெரா

Question 5.
சில பூஞ்சைகள் கூட்டுயிரிகளாக உயர் தாவரங்களின் வேர்களுடன் இணைந்து வளர்வது ………………………
விடை:
வேர்ப் பூஞ்சைகள்

III. சரியா? தவறா?

Question 1.
ஜிம்னோஸ்பெர்ம் திறந்த விதைத் தாவரங்கள்
விடை:
சரி

Question 2.
அலோவெரா, சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
விடை:
தவறு
சரியான விடை:
லில்லியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.

Question 3.
கோனிஃபெரேல்ஸ்க்கு எடுத்துக்காட்டு பைனஸ்
விடை:
சரி

Question 4.
லைக்கோபோடியம் குதிரைவால் என அழைக்கப்படுகிறது.
விடை:
தவறு
சரியான விடை: லைக்கோபோடியம் கிளப் பாசி எனப்படும் அல்லது ஈக்விசிட்டம் குதிரைவால் எனப்படும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 5.
ஸ்பேக்னம் நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும்.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 17 தாவர உலகம் 3

V. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று (A) : சில பாசிகள் குழுவாகச் சேர்ந்து வாழும் தன்மை கொண்டவை.
காரணம் (R) : பாசிகள் உடலமானது ஒரு செல் அல்லது பல செல்களால் ஆனது
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று சரி. காரணம் தவறு
இ) கூற்று தவறு. காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

Question 2.
கூற்று (A) : ஜிம்னோஸ்பெர்மில் நன்கு வளர்ச்சி அடைந்த கடத்தும் திசுக்கள் உள்ளன.
காரணம் (R) : நீரைக் கடத்தக்கூடிய திசு ட்ராக்கீடுகளாகும். உணவைக் கடத்தக் கூடியது சல்லடை செல்லாகும்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

VI. ஓரிரு வரிகளில் விடையளி

Question 1.
தாவரங்களின் 4 வகையான வகைப்பாட்டு முறைகளை எழுதுக.
விடை:

  • செயற்கை வகைப்பாட்டுமுறை
  • இயற்கை வகைப்பாட்டுமுறை
  • மரபு வழி வகைப்பாட்டுமுறை
  • நவீன வகைப்பாட்டுமுறை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 2.
தனிசெல் புரதம் (SCP) என்றால் என்ன?
விடை:

  • சில ஒரு செல் பாசிகள் மற்றும் நீலப் பச்சைப் பாசிகள் புரதத்தை உற்பத்தி செய்கின்றன.
  • எ.கா. குளோரெல்லா

Question 3.
ஸீனோசைட்டிக் மைசீலியம் என்றால் என்ன?
விடை:
குறுக்குச் சுவரற்ற பூஞ்சை இழைகளில் உட்கருக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதை ஸீனோசைட்டிக் மைசீலியம் எனப்படும்.

Question 4.
தாவர உலகத்தின் இருவாழ்விகள் என்பது எது?
விடை:
பிரையோஃபைட்டுகளின் வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக் கொள்வதற்கு நீர் மிக முக்கியம், எனவே இவை தாவர உலகின் இருவாழ்விகள் எனப்படும்.

Question 5.
பூஞ்சையால் மனிதர்களுக்கு உண்டாகும் நோய்கள் யாவை?
விடை:
படர் தாமரை, பொடுகு, சேற்றுப்புண்

VII. சுருக்கமாக விடையளி

Question 1.
ஒட்டுண்ணிகள் என்றால் என்ன?
விடை:

  • ஒட்டுண்ணிகள் உறிஞ்சி உறுப்புகள் மூலம் உயிருள்ள பொருள்களிலிருந்து உணவைப் பெறுகின்றன.
  • எ.கா. செர்க்கோஸ்போரா பெர்சனேட்டா. இது வேர்க்கடலைச் செடியில் டிக்கா நோயை உருவாக்குகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 2.
கிளாவிசெப்ஸ் பர்பூரியா என்பது என்ன?
விடை:

  • இரு ஒரு பூஞ்சை. இந்த பூஞ்சை இளந்தலைமுறையினரை அதிக அளவு பாதிப்படைய செய்கிறது.
  • ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

Question 3.
பிரையோஃபைட்டின் பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:

  • இவை மண்ணரிப்பைத் தடுக்கின்றன.
  • ஸ்பேக்னம் எனும் பூஞ்சை நீரை உறிஞ்சுவதால் இது நாற்றங்கால்களில் பயன்படுகிறது.
  • பீட் எனும் நிலக்கரியைப் போல் விலைமதிப்புள்ள எரிபொருள் ஸ்பேக்னம் எனும் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.

Question 4.
ஒரு விதையிலைத் தாவரங்களின் பொதுப் பண்புகளை எழுதுக.
விடை:

  • விதை, ஒரு விதையிலையைக் கொண்டுள்ளது.
  • சல்லிவேர்த் தொகுப்பும், இலைகள் இணைப்போக்கு நரம்பமைவுடன் உள்ளன.
  • மலர்கள் மூன்று அடுக்கு உடையவை.
  • சல்லி மற்றும் புல்லி இதழ்கள் பிரியாமல் ஒரே வட்டத்தில் இருக்கும்.
  • மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் காற்று மூலம் நடைபெறும்.

Question 5.
வகைப்பாட்டியல் – வரையறு.
விடை:
உயிரினங்களை அடையாளம் காணுதல், வகைப்படுத்துதல், அவற்றைப் பற்றி விளக்குதல், பெயரிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது வகைப்பாட்டியல் ஆகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

VIII. விரிவாக விடையளி

Question 1.
பூஞ்சைகளின் உடல் அமைப்பை விவரி.
விடை:

  • பூஞ்சைகளின் தாவர உடலம் வேர், தண்டு, இலை என பிரிக்கப்பட்டிருப்பதில்லை.
  • இதன் உடலம் பூஞ்சை இழைகளால் ஆனது.
  • ஒன்றிக்கும் மேற்பட்ட பூஞ்சை இழைப் பின்னைல (மைசீலியம்) உருவாக்குகிறது
  • செல்களுக்கு இடையே குறுக்குச்சுவர் இருந்தால் குறுக்குச்சுவர் பூஞ்சை எனவும், குறுக்குச்சுவர் இல்லையெனில் குறுக்குச்சுவரற்ற பூஞ்சை எனவும் அழைக்கப்படும்.
  • குறுக்குச் சுவரற்ற பூஞ்சைகளில் உட்கருக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதை ஸினோசைட்டிக் மைசீலியம் என்கிறோம்.
  • சில பூஞ்சைகள் ஒரு செல்லால் ஆனதும் வேறு சில பூஞ்சைகள் பல செல்களால் ஆன யூகேரியாட் செல் அமைப்பைக் கொண்டவை.
  • செல் சுவர் கைட்டின் எனும் வேதிப் பொருளால் ஆனது.
  • பூஞ்சையின் உணவுப் பொருள் கிளைக்கோஜன் மற்றும் எண்ணெயாக சேமிக்கப்படுகிறது.
  • பூஞ்சைகளில் பச்சையம் கிடையாது.

Question 2.
பிரையோஃபைட்டோ மற்றும் டெரிடோஃபைட்டா வேறுபடுத்துக.
விடை:
பிரையோஃபைட்டா
– தாவர உடலமானது வேர், தண்டு, இலை எனப் பிரிக்க இயலாது.
– இவை இருவாழ்விகள்.
– கடத்தும் திசுக்கள் காணப்படாது.
– தாவர உடலின் ஓங்கு நிலையானது கேமீட்டோஃபைட்.
– ஸ்போரோஃபைட் தலைமுறை யானது கேமீட்டோஃபைட் தலைமுறையைச்சார்ந்துள்ளது. எ.கா. ரிக்சியா.

டெரிடோஃபைட்டா
– தாவர உடலானது வேர், தண்டு, இலை எனப்பிரிக்கப்படும்
– இவை நிலத் தாவரங்கள்.
– கடத்தும் திசுக்கள் காணப்படும்.
– தாவர உடலின் ஓங்கு நிலையானது ஸ்போரோபைட்
– கேமீட்டோஃபைட் தலைமுறை ஸ்போரோஃபைட் தலைமுறையை சார்ந்திருப்பதில்லை. எ.கா. செலாஜினெல்லா.

Question 3.
நிறமிகளின் அடிப்படையில் பாசிகளை எவ்வாறு வகைப்படுத்துவாய்?
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 17 தாவர உலகம் 4
Samacheer Kalvi 8th Science Guide Chapter 17 தாவர உலகம் 5

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

8th Science Guide நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்படும் திரவ உலோகம்
அ) தாமிரம்
ஆ) பாதரசம்
இ) வெள்ளி
ஈ) தங்கம்
விடை :
ஆ) பாரதரசம்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 2.
இரசவாதிகள் நீரைக் குறிப்பதற்குப் பயன்படுத்திய படக்குறியீடு
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 1
விடை :
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 2

Question 3.
எந்தத் தனிமத்தின் பெயர் கோள்களின் பெயரிலிருந்து பெறப்படவில்லை ?
அ) புளூட்டோனியம்
ஆ) நெப்டியூனியம்
இ) யுரேனியம்
ஈ) பாதரசம்
விடை:
ஈ) பாதரசம்

Question 4.
பாதரசத்தின் குறியீடு
அ) Ag
ஆ) Hg
இ) Au
ஈ) Pb
விடை :
ஆ) Hg

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 5.
கம்பியாக நீளும் தன்மையைப் பெற்றுள்ள அலோகம் எது?
அ) நைட்ரஜன்
ஆ) ஆக்ஸிஜன்
இ) குளோரின்
ஈ) கார்பன்
விடை:
ஈ) கார்பன்

Question 6.
உலோகங்களை அவற்றின் தகடுகளாக மாற்ற உதவும் பண்பு எது?
அ) கம்பியாக நீளும் பண்பு
ஆ) தகடாக விரியும் பண்பு
இ) தகடாக விரியும் பண்பு
ஈ) பளபளப்புத் தன்மை
விடை:
ஆ) தகடாக விரியும் பண்பு

Question 7.
மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்
அ) கார்பன்
ஆ) ஆக்ஸிஜன்
இ) அலுமினியம் ஈ) சல்ஃபர்
விடை:
அ) கார்பன்

Question 8.
கரிக்கோலின் (பென்சிலின்) நடுத்தண்டில் இருப்பது
அ) கிராஃபைட்
ஆ) வைரம்
இ) அலுமினியம்
ஈ) கந்தகம்
விடை:
அ) கிராஃபைட்

Question 9.
மூலக்கூறுகளின் அமைப்பைக் கொண்டு பின்வரும் பொருள்களின் இயற்பியல் நிலைகளைக் அடையாளம் காண்க.
அ) A – வாயு, B – திண்ம ம், C – திரவம்
ஆ) A – திரவம், B -திண்ம ம், C- வாயு
இ) A – வாயு, B – திண்ம ம், C – திரவம் A
ஈ) A – திரவம், B – வாயு, C – திண்ம ம்
விடை:
அ) A – வாயு, B – திண்மம், C – திரவம்
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 3

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உலோகங்களின் பண்புகளையும் அலோகங்களின் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் – என அழைக்கப்படுகின்றன.
விடை:
உலோகப்போலிகள்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 2.
டங்ஸ்ட னின் குறியீடு
விடை:
W

Question 3.
பெரும்பான்மையான உலோகங்களின் உருகுநிலை அலோகங்களின் உருகு நிலையைவிட
விடை:
அதிகம்

Question 4.
நீரில் உள்ள தனிமங்கள் ……………… மற்றும் ………………….
விடை:
ஹைட்ரஜன், ஆக்சிஜன்

Question 5.
……………….. குறை கடத்தியாகப் பயன்படுகிறது.
விடை:
சிலிக்கன் அல்லது ஜெர்மானியம்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 4

IV. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
கம்பியாக நீளும் தன்மை என்றால் என்ன?
விடை:
உலோகங்களை இழுத்து மெல்லிய கம்பியாக மாற்றும் பண்பிற்கு கம்பியாக நீளும் தன்மை என்று பெயர்.

Question 2.
பின்வரும் சேர்மங்களில் உள்ள தனிமங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் எழுதுக.
அ) கார்பன் மோனாக்சைடு
ஆ) சலவை சோடா
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 5

Question 3.
பின்வரும் தனிமங்களின் குறியீடுகளை எழுதுக.
அ) ஆக்ஸிஜன்
ஆ) தங்கம்
இ) கால்சியம்
ஈ) காட்மியம்
உ) இரும்பு
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 6

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 4.
நாம் உயிர் வாழ்வதற்கு மிக அவசியமானதும், அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கும் போது உள்ளிழுத்துக் கொள்வதுமான அலோகம் எது?
விடை:
நாம் உயிர்வாழ்வதற்கு மிக அவசியமானதும், அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கும் போது உள்ளிழுத்துக்கொள்வதுமான அலோகம் ஆக்சிஜன் ஆகும்.

Question 5.
ஏன் ஆலய மணிகள் உலோகங்களால் செய்யப்படுகின்றன?
விடை:
உலோகங்கள் தட்டப்படும்போது தனித்துவமான ஒலி எழுப்பும் பண்பைப் பெற்றுள்ளதால், ஆலய மணிகள் செய்ய பயன்படுகின்றன.

Question 6.
வேதிக்குறியீடுகள் தரும் தகவல்கள் யாவை?
விடை:
வேதிக்குறியிடுகள் தனிமங்களின் பெயர்களை சுருக்க வடிவில் குறிக்கின்றன.

Question 7.
உலோகப் போலிகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
உலோகப் போலிகள் : > சிலிக்கன் – போரான்

Question 8.
திரவ நிலையில் உள்ள ஏதேனும் மூன்று சேர்மங்களைக் குறிப்பிடுக.
விடை:
திரவ நிலையில் உள்ள மூன்று சேர்மங்கள்

  • நீர்
  • கந்தக அமிலம்
  • அசிட்டிக் அமிலம் (வினிகர்)

Question 9.
உலோகப் போலிகளின் ஏதேனும் மூன்றைக் குறிப்பிடுக.
விடை:
உலோகப் போலிகளின் பண்புகள்:

  • அறை வெப்பநிலையில் உலோகப் போலிகள் அனைத்தும் திண்மங்கள்.
  • உலோகப் போலிகளின் இயற்பியல் பண்புகள் உலோகங்களை ஒத்திருக்கின்றன.
  • உலோகப்போலிகளின் வேதியியல் பண்புகள் அலோகங்களை ஒத்திருக்கின்றன.
  • உலோகப்போலிகள், உலோகங்களுடன் சேர்ந்து உலோகக் கலவைகளை ஏற்படுத்துகின்றன.

V. சுருக்கமாக விடையளி

Question 1.
ஊறுகாயை அலுமினியப் பாத்திரத்தில் வைக்கலாமா? காரணம் கூறுக.
விடை:

  • ஊறுகாயை அலுமினியப் பாத்திரத்தில் வைக்கக்கூடாது.
  • ஏனெனில் ஊறுகாயில் உள்ள அமிலங்கள், உலோக அலுமினியத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளிப்படுத்தும்.
  • இதனால் ஊறுகாய் கெட்டுப் போய்விடும்.

Question 2.
உலோகங்களுக்கும் அலோகங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் ஏதேனும்
நான்கினை அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 7

Question 3.
சமையல் பாத்திரங்கள் ஏன் அலுமினியம் மற்றும் பித்தளையில் செய்யப்படுகின்றன?
விடை:

  • அலுமினியம் மற்றும் பித்தளை சிறந்த வெப்பக் கடத்திகள்.
  • அலுமினியம் மற்றும் பித்தளை பாத்திரங்களின் உட்பகுதியில் வெள்ளீயம் பூசப்படுவதால், உணவுப் பொருட்களுடன் அவ் உலோகங்கள் வினைபுரிவது தடுக்கப்படுகிறது.
  • எனவே சமையல் பாத்திரங்கள் அலுமினியம் மற்றும் பித்தளையில் செய்யப்படுகின்றன.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 4.
இரசவாதம் வரையறு.
விடை:
குறைந்த மதிப்புடைய உலோகங்களை தங்கமாக மாற்றும் செயலுக்கு இரசவாதம் என்று பெயர்.

Question 5.
பின்வரும் குறியீடுகளால் குறிக்கப் பெறும் தனிமங்களின் பெயர்களை எழுதுக.
அ) Na
ஆ) Ba
இ) W
ஈ) Al
உ) U
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 8

Question 6.
ஏதேனும் ஆறு அலோகங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் எழுதுக.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 9

Question 7.
ஏதேனும் நான்கு சேர்மங்களையும் அவற்றின் பயன்களையும் எழுதுக.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 10

Question 8.
அலங்கார நகை தயாரிப்பில் பயன்படும் உலோகங்களைக் குறிப்பிடுக.
விடை:
அலங்கார நகைத் தயாரிப்பில் பயன்படும் உலோகங்கள்

  • தங்கம்
  • வெள்ளி
  • பிளாட்டினம்
  • தாமிரம்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 9.
பின்வரும் சேர்மங்களின் பயன்களைக் குறிப்பிடுக.
அ. ரொட்டிசோடா
ஆ. சலவைத்தூள்
இ. சுட்ட சுண்ணாம்பு
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 11

VI. காரணம் கூறுக

Question 1.
பின்வருவனவற்றிற்கான காரணங்களை எழுதுக.
அ) உணவுப் பொருள்களை உறையீடு செய்வதற்கு அலுமினியத் தகடுகள் பயன்படுகின்றன.

  • அலுமினியம் உலோகமாதலால் மெல்லிய தகடாக அடித்து உணவுப் பொருள்களை கட்ட உதவும் உறைகள் செய்யப் பயன்படுகின்றன.
  • மேலும் அலுமினியம் பொதுவாக உணவுப்பொருள்களுடன் வினை புரியாது.

ஆ) திரவங்களை சூடுபடுத்துவதற்கான மூழ்குத் தண்டுகள் உலோகங்களால் செய்யப்படுகின்றன.

  • உலோகங்கள் சிறந்த வெப்பக் கடத்திகள், எனவே திரவங்களை சூடுபடுத்துவதற்கான மூழ்குத் தண்டுகள் செய்யப் பயன்படுகின்றன.

இ) சோடியம், பொட்டாசியம் ஆகிய இரண்டும் மண்ணெண்ணெயின் உள்ளே வைக்கப்படுகின்றன.

சோடியம் மற்றும் பொட்டாசியம் காற்றுடன் வினைபுரிந்து ஆக்சைடு மற்றும் கார்பனேட் படலங்களை உருவாக்குவதால் அவற்றின் நிறம் மங்குகிறது. எனவே காற்றுடன் வினைபுரிவதை தடுக்க சோடியமும், பொட்டாசியமும் மண்ணெண்ணெயினுள் வைக்கப்படுகிறது. நீருடன் இவை வினைபுரிவதால் நீரினுள் வைக்க இயலாது.

ஈ) வெப்பநிலைமானிகளில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.
வெப்பநிலைமானிகளில் பாதரசம் பயன்படுத்த காரணம்

  • அதன் அதிக அடர்த்தி
  • வெப்பத்தினால் சீராக விரிவடையும் அதன் தன்மை

Question 2.
கல் அல்லது மரம் போன்ற பொருள்களில் இருந்து கம்பிகளைத் தயாரிக்க முடியவில்லை , ஏன்?
Answer:
கல் அல்லது மரம் போன்ற பொருள்கள் இழுக்கப்படும் போது மெல்லிய கம்பியாக நீளும் பண்பினை பெறவில்லை. எனவே கல் அல்லது மரம் போன்ற பொருள்களில் இருந்து கம்பிகளை தயாரிக்க முடியவில்லை.

8th Science Guide நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ஒரு தனிமத்தில் உள்ள மிகச் சிறிய துகள்
அ) அணு
ஆ) மூலக்கூறு
இ) சேர்மம்
ஈ) கலவை
விடை:
அ) அணு

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 2.
பின்வரும் எத்தனிமத்தின் பெயர் அறிவியல் அறிஞரின் பெயரிலிருந்து பெறப்பட்டது?
அ) அமெர்சியம்
ஆ) மெர்க்குரி
இ) நொபிலியம்
ஈ) நெப்டியூனியம்
விடை:
இ) நொபிலியம்

Question 3.
பின்வருவனவற்றுள் எது உலோக பளபளப்பு அற்றது?
அ) தாமிரம்
ஆ) கால்சியம்
இ) அலுமினியம்
ஈ) தங்கம
விடை:
ஆ) கால்சியம்

Question 4.
தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து கிடைக்கும் சேர்மங்கள்
அ) கனிமச் சேர்மங்கள்
ஆ) கரிமச் சேர்மங்கள்
இ) தொகுப்பு சேர்மங்கள்
ஈ) செயற்கை சேர்மங்கள்
விடை:
ஆ) கரிமச் சேர்மங்கள்

Question 5.
குடிநீர் சுத்திகரிப்பில் பயன்படும் சேர்மம்
அ) ரொட்டிச் சோடா
ஆ) சலவைச் சோடா
இ) சுட்ட சுண்ணாம்பு
ஈ) சலவைத் தூள்
விடை:
ஈ) சலவைத் தூள்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு குறிப்பிட்ட கன அளவு கொண்டு, ஒரு குறிப்பிட்ட வடிவமற்ற பொருள் …………… என அழைக்கப்படுகிறது
விடை:
திரவம்

Question 2.
சர்க்கரையின் வேதிப் பெயர் ………………
விடை:
சுக்ரோஸ்

Question 3.
துப்பாக்கித் தூள் தயாரிக்க மற்றும் ரப்பரை கெட்டிப்படுத்த (வல்கனைஸ் செய்ய) பயன்படும் அலோகம்
விடை:
கந்தகம்

Question 4.
………………………… கண்ணாடியில் சிராய்ப்பு ஏற்படுத்தும் அளவிற்கு மிகவும் கடினமாகது.
விடை:
ஆஸ்மியம்

Question 5.
இயற்கையில் கிடைக்கும் பொருள்களில் மிகவும் கடினமானது.
விடை:
வைரம்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 12

IV. காரணம் மற்றும் கூற்று

அ) A மற்றும் R சரி, R ஆனால் A ஐ விளக்குகிறது.
ஆ) A சரி ஆனால் R தவறு ]
இ) A தவறு ஆனால் R சரி
ஈ) A மற்றும் R சரி, R ஆனது A ஐ விளக்கவில்லை

Question 1.
கூற்று A : சிலிக்கான், ஜெர்மானியம் ஆகியன குறைகடத்திகள் என அழைக்கப்படுகின்றன்.
காரணம் R : சிலிக்கான், ஜெர்மானியம் ஆகியன குறிப்பிட்ட சூழ்நிலையில் மின்சாரத்தை கடத்துகின்றன.
விடை:
அ) Aமற்றும் R சரி, R ஆனால் A ஐ விளக்குகிறது..

Question 2.
கூற்று A : கார்போஹைட்ரேட்கள் கனிமச் சேர்மங்களாகும்.
காரணம் R : தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது கார்போஹைட்ரேட்களை தயாரிக்கின்றன.
விடை:
இ) A தவறு ஆனால் R சரி
சரியான கூற்று : கார்போஹைட்ரேட்கள் கரிமச் சேர்மங்களாகும்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

V. மிகக் குறுகிய விடைத் தருக.

Question 1.
பருப் பொருள் என்றால் என்ன?
விடை:
இடத்தை அடைத்துக் கொள்ளும் பண்பும், நிறையையும் கொண்ட எந்த ஒன்றும் பருப்பொருள்
எனப்படும்.

Question 2.
ஒரு தனிமத்தின் குறியீடு என்றால் என்ன?
விடை:
ஒரு தனிமத்தின் பெயரை குறிப்பிடும் சுருக்க வடிவமே அதன் குறியீடு எனப்படும்.

Question 3.
உலோகங்கள் என்றால் என்ன?
விடை:
பளபளப்புத் தன்மை, கடினத் தன்மை, வெப்பம் மற்றும் மின்சாரத்தை நன்கு கடத்தும் தன்மை கொண்ட தனிமங்கள் உலோகங்கள் எனப்படும்.

Question 4.
அலோகங்கள் என்றால் என்ன?
விடை:
பளபளபற்ற, அதிக கடின தன்மையோ, அதிக மென்மைத் தன்மையோ அற்ற, அரிதிற்கடத்தும் தன்மையுடைய தனிமங்கள் அலோகங்கள் எனப்படும்.

Question 5.
உலோகப் போலிகள் என்றால் என்ன?
விடை:
உலோகப் பண்புகளையும், அலோகப் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் உலோகப் போலிகள் எனப்படும்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

VI. குறுகிய விடைத் தருக.

Question 1.
சேர்மம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை:

  • ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் வேதிச் சேர்க்கையின் மூ லம் இணைந்து உருவாகும் தூய பொருள் சேர்மம் எனப்படும்.
  • எ.கா CO2, H2O

Question 2.
குறை கடத்திகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை:

  • குறிப்பிட்ட சூழ்நிலையில் மின்சாரத்தைக் கடத்தும் உலோகப் போலிகள் குறை கடத்திகள் – எனப்படும்.
  • எ.கா சிலிக்கான், ஜெர்மானியம்.

Question 3.
கனிமச் சேர்மங்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை:

  • பாறைகள், தாதுக்கள் போன்ற உயிரற்ற பொருள்களிலிருந்து கிடைக்கும் சேர்மங்கள் கனிமச் சேர்மங்கள் எனப்படும்.
  • (எ.கா) சுண்ணக் கட்டி, ரொட்டி சோடா.

Question 4.
உலோக பளபளப்பு என்றால் என்ன?
விடை:
கால்சியம் நீங்கலாக அனைத்து உலோகங்களும் ஒளியை எதிரொளிக்கும் பளபளப்பு தன்மை கொண்டவை. இப்பளபளப்பு உலோக பளபளப்பு எனப்படும்.

Question 5.
தகடாக விரியும் பண்பு என்றால் என்ன?
விடை:
உலோகங்களை சுத்தியால் அடித்து மிகவும் மெலிதான தகடாக மாற்றும் தன்மை தகடாக விரியும் பண்பு எனப்படுகிறது.

Question 6.
உலோகப் போலிகளின் பயன்கள் யாது?
விடை:

  • சிலிக்கான் மின்னணுக் கருவிகளில் பயன்படுகிறது.
  • போரான் பட்டாசுத் தொழிற்சாலையில் பயன்படுகிறது.
  • போரான் ராக்கெட் எரிபொருளை பற்றவைக்கும் பொருளாக பயன்படுகிறது.

VII. விரிவான விடையளி

Question 1.
உலோகங்களின் இயற்பியல் பண்புகளை விவரி.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 13
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 14

Question 2.
சில அலோகங்களின் பயன்களைத் தருக.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 15

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 3.
சில சேர்மங்களின் வேதிப்பெயர், பகுதிப்பொருள்கள் பயன்களை கூறு.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 16 Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 17

Samacheer Kalvi 8th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

8th Science Guide உயிரினங்களின் ஒருங்கமைவு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
…………………… என்பது உறுதியான தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கிறது.
அ) ஸ்கிளிரா
ஆ) கண்ஜங்டிவா
இ) கார்னியா
ஈ) ஐரிஸ்
விடை:
அ) ஸ்கிளிரா

Question 2.
……………………. செல்கள் சிறப்பு வாய்ந்த செல்களாகும். இவை உடலின் எந்த ஒரு செல்லாகவும் மாற இயலும்.
அ) நரம்பு
ஆ) மூல
இ) இதய
ஈ) எலும்பு
விடை:
ஆ) மூல

Question 3.
உடலின் உள் சூழ்நிலையை சீராகப் பராமரித்தல் ………………………….. எனப்படும்.
அ) தன்னிலை காத்தல்
ஆ) ஹோமியோபைட்ஸ்
இ) ஹோமியோஹைனசிஸ்
ஈ) ஹோமியோவிலிக்ஸ்
விடை:
அ) ஹோமியோஸ்டாசிஸ்

Question 4.
காற்றில்லா அல்லது ஆக்ஸிஜனற்ற சூழலில் குளுக்கோஸ் சிதைவடைந்து ……………………….. க்கொடுக்கும்.
அ) லாக்டிக் அமிலம்
ஆ) சிட்ரிக் அமிலம்
இ) அசிட்டிக் அமிலம்
ஈ) நைட்ரிக் அமிலம்
விடை:
அ) லாக்டிக் அமிலம்

Question 5.
நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு ……………………….. என்று பெயர்.
அ) உட்சுவாசம்
ஆ) வெளிச்சுவாசம்
இ) சுவாசம்
ஈ) ஏதுமில்லை
விடை:
இ) சுவாசம்

Question 6.
சவ்வூடு பரவலின் மூலம் கரைசலின் இடப்பெயர்ச்சி ………………………….
அ) செறிவுமிக்க கரைசலிலிருந்து செறிவு குறைவான கரைசலுக்குச் செல்லும்.
ஆ) செறிவு குறைவான கரைசலிலிருந்து செறிவு மிக்க கரைசலுக்குச் செல்லும்.
இ) இரு நிகழ்வும் நடைபெறும்.
ஈ) இவற்றில் ஏதுமில்லை .
விடை:
அ) செறிவுமிக்க கரைசலிலிருந்து செறிவு குறைவான கரைசலுக்குச் செல்லும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

Question 7.
சைட்டோபிளாசத்தை விட குறைந்த கரைபொருள் செறிவும், அதிக நீர்ச் செறிவும் உள்ள …………………………… கரைசலில் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.
அ) குறை செறிவு கரைசல்
ஆ) மிகை செறிவு கரைசல்
இ) நடுநிலைக்கரைசல்
ஈ) அமிலக் கரைசல்
விடை:
அ) குறை செறிவு கரைசல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…………………………… என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.
விடை:
செல்

Question 2.
மிகப்பெரிய செல் ………………………… இன் முட்டை ஆகும்.
விடை:
நெருப்புக் கோழி

Question 3.
………………………….. என்பது காற்றில்லா சுவாசத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
விடை:
ஈஸ்ட்

Question 4.
கண்களின் இறுதியில் விழித்திரையின் பின்புறம் ……………………… நரம்பு அமைந்துள்ளது.
விடை:
பார்வை

Question 5.
செல்லானது ………………….. என்ற அலகால் அளக்கப்படுகிறது.
விடை:
மைக்ரான்

III. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக.

Question 1.
குறை செறிவுக் கரைசலில், செல்லிற்கு உள்ளே உள்ள கரைசலின் செறிவும் செல்லிற்கு வெளியே உள்ள கரைசலில் செறிவும் சமம்.
விடை :
தவறு –
குறை செறிவு கரைசலில் செல்லிற்கு உள்ளே உள்ள கரைசலின் செறிவு செல்லிற்கு வெளியே உள்ள கரைசலின் செறிவை விட அதிகம்.

Question 2.
குறைந்த செறிவுடைய மூலக்கூறுகள் அதிக செறிவுடைய மூலக்கூறுகள் உள்ள பகுதிக்கு இடம்பெயர்வது பரவல் எனப்படும்.
விடை:
தவறு –
மூலக்கூறுகள் அதிக செறிவுடைய பகுதியிலிருந்து குறைந்த செறிவுடைய பகுதிக்கு இடம்பெயர்வது பரவல் எனப்படும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

Question 3.
மனிதன் ஒரு வெப்ப இரத்தப் பிராணி
விடை:
சரி

Question 4.
தசை மடிப்புக்களாலான குரல்வளையானது காற்று நுழையும் போது அதிர்வடைந்து ஒலியை எழுப்புகிறது.
விடை:
சரி

Question 5.
முன் கண்ணறை திரவம் கண்ணின் வடிவத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
விடை:
தவறு –
விட்ரியஸ் திரவம் கண் வடிவத்தைப் பராமரிக்கிறது.

IV. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு 1

V. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
செல் மாறுபாடு அடைதல் என்றால் என்ன?
விடை:

  • கருமுட்டையானது தொடர்ச்சியான பல மைட்டாசிஸ் பிளவுறுதல்களை அடைந்து வெவ்வேறு அளவு, மற்றும் உட்பொருள்களைக் கொண்ட திரள் செல்களாலான கருவை உருவாக்குகிறது.
  • கருச் செல்கள் படிப்படியாக அவற்றின் அமைப்பிலும், பணியிலும், மாற்றங்கள் அடைகின்றன. இந்நிகழ்விற்கு செல் மாறுபாடடைதல் என்று பெயர்.

Question 2.
வெவ்வேறு வகையான திசுக்களை வகைப்படுத்துக.
விடை:
எபிதீலியல் திசு, தசை திசு, இணைப்புத் திசு, நரம்புத் திசு.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

Question 3.
காற்று நுண்ணறைகளின் பணிகளைக் கூறுக.
விடை:

  • காற்று நுண்ணறைகள் காற்றை உள்ளிழுக்கும் போது ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு உடலை இயங்கச் செய்கின்றன.
  • காற்று நுண்ணறைகள் ஆக்ஸிஜன் மற்றும் CO2 வாயுப் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன.

Question 4.
நுரையீரலில் காற்றானது உள்ளிழுக்கப்படும் மற்றும் வெளியேற்றப்படும் நிகழ்வின்
பெயரைக் குறிப்பிடு.
விடை:
உட்சுவாசம் – வெளி சுவாசம்

Question 5.
ஊடுகலப்பு ஒத்தமைவான்கள் மற்றும் ஊடுகலப்பு ஒழுங்கமைவான்களை வேறுபடுத்துக.
விடை:

ஊடுகலப்பு ஒத்தமைவான்கள்ஊடுகலப்பு ஒழுங்கமைவான்கள்
இத்தகைய உயிரினங்கள் சுற்றுச்சூழலுக்கேற்ப தங்கள் உடலின் ஊடுகலப்பு அடர்த்தியை மாற்றிக்கொள்வன ஆகும். எ.டு: கடல் வாழ் உயிரினங்கள்இத்தகைய உயிரினங்கள் புறச்சூழலின் தன்மை எப்படி இருந்தாலும் உடல் செயலியல் நிகழ்வுகள் மூலம் தங்களது ஊடுபரவல் செறிவு தமது உட்புற ஊடுகலப்பு அடர்த்தியை நிலையான அளவுடன் பராமரித்துக் கொள்கின்றன.

Question 6.
வளர்சிதை மாற்றம் – வரையறு.
விடை:
வளர்சிதை மாற்றம் என்பது உணவுப் பொருட்களை உடைத்து ஆற்றலாக மாற்றும் நிகழ்ச்சி என்பதாகும். இது வளர் மாற்றம் மற்றும் சிதை மாற்றம் என்ற இரு நிகழ்ச்சிகளைக் கொண்டது.

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
புரோகேரியாடிக் செல் – வரையறு.
விடை:
பாக்டீரியா, சயனோ பாக்டீரியா மற்றும் மைக்கோபிளாஸ்மா போன்ற உயிரினங்களில் உட்கரு காணப்படுவதில்லை. எனவே இவை புரோகேடியாடிக் செல் எனப்படும்.

Question 2.
காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசத்திற்கு இடையே உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.
விடை:

காற்றுள்ள சுவாசம்காற்றில்லா சுவாசம்
1. ஆக்ஸிஜன் உள்ள சூழலில் நடைபெறுகிறது.ஆக்ஸிஜன் இல்லாத சூழலில் நடைபெறுகிறது.
2. CO2 மற்றும் நீர் ஆகியவை விளை பொருட்களாக கிடைக்கின்றனCO2 எத்தனால் அல்லது லாக்டிக் அமிலம் விளை பொருட்களாக கிடைக்கின்றன.
3. அனைத்து உயர்நிலை தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நடைபெறுகறது.சில நுண்ணியிரிகள் மற்றும் மனித தசைச்செல்களில் நடைபெறுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

Question 3.
கண்ணை ஏன் புகைப்படக் கருவியுடன் ஒப்பிடுகிறோம்?
விடை:
மனிதக் கண்ணானது ஒளியை ஒருங்கிணைத்தல், குவித்தல் மற்றும் பொருளின் பிம்பத்தை உருவாக்குவதற்காக ஒளியை லென்சு வழியே செலுத்துதல் ஆகிய பணிகளைச் செய்வதன் மூலம் புகைப்படக் கருவியுடன் ஒப்பிடப்படுகிறது.

Question 4.
தன்னிலை காத்தலை ஒழுங்குபடுத்த உதவும் உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் யாவை?
விடை:
கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மூளை (ஹைபோதலாமஸ்) தானியங்கு நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லாச் சுரப்பி மண்டலங்கள் சீரான உடல்நிலையை ஒழுங்குபடுத்த உதவுகின்றன.

VII. விரிவான விடையளி.

Question 1.
மனிதக் கண்ணின் உள்ளமைப்பின் படம் வரைந்து பாகங்களைக் குறி.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு 2

Question 2.
சவ்வூடு பரவலை உதாரணத்துடன் விளக்குக.
விடை:

  • நீர்த்த கரைசலில் இருந்து செறிவு மிக்க கரைசலுக்கு கரைப்பானின் மூலக்கூறுகள் அரை கடத்தி அல்லது தேர்வு கடத்து சவ்வின் வழியே இடப்பெயர்ச்சி அடையும் நிகழ்ச்சி சவ்வூடு பரவல் எனப்படும்.
  • சவ்வின் இருபுறமும் செறிவு சமநிலையை அடையும் வரை இவ்வாறு கரைப்பானின் மூலக்கூறுகள் செறிவு குறைந்த கரைசலில் இருந்து செறிவு மிக்க கரைசலுக்கு நகர்கின்றன.
  • செல்லிற்கு உள்ளேயும், வெளியேயும் மூலக்கூறுகள் இடம்பெயர்வது செல்களைச் சூழ்ந்துள்ள கரைசலின் செறிவைப் பொறுத்ததாகும்.
  • இதைப் பொறுத்து சவ்வூடு பரவலின் நிலையை மூன்றாக வகைப்படுத்தலாம்.

1) ஒத்த செறிவு கரைசல்:
இங்கு செல்லின் உட்புறக் கரைசலின் செறிவும் வெளிப்புறக் கரைசலின் செறிவும் ஒரே மாதிரியாக இருக்கும்.

2) குறை செறிவு கரைசல்:
இங்கு செல்லின் வெளியே உள்ள கரைசலின் செறிவு உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட குறைவு அதனால் வெளியிலிருந்து நீரானது செல்லின் உள்ளே செல்கிறது.

3) மிகை செறிவு கரைசல்:
இங்கு செல்லின் வெளியில் உள்ள கரைசலின் செறிவு உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட அதிகம். இதனால் நீரானது செல்லை விட்டு வெளியேறுகிறது.

Question 3.
உட்சுவாசத்திற்கும், வெளிச்சுவாசத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
விடை:

உட்சுவாசம்வெளிச்சுவாசம்
1. உதரவிதானத் தசைகள் சுருங்குகின்றன.உதரவிதானத் தசைகள் மீட்சியடைகின்றன.
2. உதரவிதானம் கீழ்நோக்கி நகர்கிறதுஉதரவிதானம் மேல்நோக்கி நகர்கிறது
3. விலா எலும்புகள் மேல் நோக்கியும் வெளிப்புறமும் நகர்கின்றன.விலா எலும்புகள் கீழ்நோக்கி நகர்கின்றன.
4. மார்பறையின் கொள்ளளவு அதிகரிக்கிறது.மார்பறையின் கொள்ளளவு குறைகிறது.
5. காற்று மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் நுழைகிறது.காற்று மூக்கின் வழியாக நுரையீரலிலிருந்து வெளியேறுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

Question 4.
வளர்சிதை மாற்றத்தின் வகைகளை உதாரணத்துடன் விளக்குக.
விடை:

  • வளர்சிதை மாற்றம் என்பது உணவுப் பொருட்களை உடைத்து ஆற்றலாக மாற்றும் நிகழ்ச்சி என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
  • இது வளர் மாற்றம் மற்றும் சிதை மாற்றம் என்ற நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.

வளர் மாற்றம்:

  • இது உருவாக்குதல் மற்றும் சேமித்தலைக் குறிக்கிறது.
  • வளர் மாற்றம் புதிய செல்களின் வளர்ச்சி, உடற்திசுக்களை பராமரித்தல் மற்றும் எதிர்காலத்தேவைக்காக ஆற்றலை சேமித்தல் ஆகியவற்றிற்கு காரணமாகிறது.
  • வளர் மாற்றத்தின் போது கார்போ ஹைட்ரேட் புரதம் மற்றும் கொழுப்பின் எளிய மூலக்கூறுகள் பெரிய சிக்கலான மூலக்கூறுகளாக மாற்றப்படுகின்றன.

எ.டு. குளுக்கோள் → கிளைக்கோஜன் பிற சர்க்கரைகள்
அமினோ அமிலம் → நொதிகள், ஹார்மோன்கள் புரதங்கள்
கொழுப்பு அமிலம் → கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள்

சிதை மாற்றம்:

  • சிதை மாற்றம் என்பது செல்லின் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்கும் நிகழ்ச்சி ஆகும்.
  • இந்த ஆற்றல் வளர்மாற்றத்திற்கான எரிபொருளாகவும், உடலை வெப்பப்படுத்தவும் தசை சுருக்கத்திற்கும், மற்றும் உடல் இயக்கத்திற்கும் பயன்படுகிறது.
  • சிக்கலான வேதி மூலக்கூறுகள் சிதைக்கப்படுவதால் கழிவுப் பொருட்கள் உருவாகி தோல், சிறுநீரகங்கள், நுரையீரல் வழியாக வெளியேற்றப்படுகின்றன.

எ.டு: கார்போ ஹைட்ரேட் → குளுக்கோஸ்
குளூக்கோஸ் → CO, + நீர் + வெப்பம்
புரதம் → அமினோ அமிலம்

  • தொடர்ச்சியான வளர்சிதை மாற்ற வினைகள் உயிரியின் தன்னிலை காத்தல் நிலையை தக்க வைக்கின்றன.
  • மேலும் உடலின் அயனிச் சமநிலையைப் பராமரிக்கவும், மனித உடலின் இயக்கம், வளர்ச்சி, செல்கள், திசுக்களின் பராமரிப்பு மற்றும் சரி செய்தலுக்கு காரணமாகிறது.

Question 5.
சுவாச செயலியல் நிகழ்வுகளை விளக்குக.
விடை:
உட்சுவாசம்:

  • காற்றை நுரையீரல்களினுள் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு உட்சுவாசம் எனப்படும்.
  • உட்சுவாசத்தின் போது மார்பெலும்பு மேல் நோக்கியும், வெளி நோக்கியும் தள்ளப்படுவதோடு உதரவிதானம் கீழ் நோக்கியும் இழுக்கப்படுகிறது.
  • இதனால் மார்பறையின் கொள்ளளவு அதிகரித்து அழுத்தம் குறைகிறது.
  • நுரையீரல்களினுள் அழுத்தம் குறைந்து வெளிக்காற்றானது நுரையீரலில் நுழைகிறது.
  • இங்கு காற்றுக்கும், இரத்தத்திற்கும் இடையே வாயுப் பரிமாற்றம் நிகழ்கிறது.

வெளி சுவாசம்:

  • நுரையீரல்களிலிருந்து காற்றை வெளியேற்றும் நிகழ்வு வெளிச் சுவாசம் எனப்படும்.
  • வெளிச் சுவாசத்தின் போது நுரையீரல்கள் காற்றை அதிக விசையுடன் வெளித் தள்ளுகின்றன.
  • விலா எலும்பிடைத் தசைகள் மீட்சியடைந்து, மார்பறையின் சுவர் அதன் பழைய நிலைக்குத் திரும்புகிறது.
  • உதரவிதானமும் மீட்சியடைந்து மார்பறையில் மேல் நோக்கி நகர்கிறது.
  • இதனால் மார்பறையின் அழுத்தம் புறச் சூழலை ஒப்பிடும் போது அதிகரிக்கிறது.
  • மார்பறைக்கும் வளி மண்டலத்திற்கும் இடையே காணப்படும். அழுத்த வேறுபாட்டால் காற்றானது விசையுடன் வெளியேறுகிறது.

காற்று நுண்ணறைகளினுள் வாயுப் பரிமாற்றம்:

  • காற்று நுண்ணறைகளினுள் உள்ளிழுக்கப்படும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு அங்குள்ள இரத்தக் குழல்களினுள் உள்ள ஆக்ஸிஜனின் அளவை விட அதிகம்.
  • இதனால் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் ஆக்ஸிஜனுடன் இணைந்து ஆக்ஸிஹ மோகுளோபின் ஆக மாறுகிறது.
  • ஆக்ஸிஹீமோகுளோபின் இரத்தக் குழல்கள் வழியே இதயத்தை அடைகிறது.
  • இதயம் சுருங்கி ஆக்ஸிஜன் உள்ள இரத்தத்தை உடல் திசுக்களுக்கு அனுப்புகிறது.
  • திசுக்கள் வெளியேற்றும் CO2. இரத்தம் வழியாக காற்று நுண்ணறைகளுக்கு எடுத்து வரப்படுகிறது.
  • பரவல் முறையில் CO2 காற்று நுண்ணறையிலிருந்து வெளிச் சுவாசம் மூலம் உடலை விட்டு வெளியேற்றப்படுகிறது.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
நமக்கு ஏன் உடனடியாக ஆற்றல் தேவைப்படுகிறது? குளுக்கோஸ் அந்த ஆற்றலை வழங்கமுடியுமா? விளக்குக.
விடை:

  • செல்லில் நடக்கக்கூடிய அனைத்து பணிகளுக்கும் ஆற்றல் தேவைப்படுகிறது.
  • சிதை மாற்றத்தின் போது இந்த ஆற்றல் வெளிப்படுகிறது.
  • இந்த ஆற்றலானது வளர் மாற்றத்திற்கான எரிபொருளாகவும், உடலை வெப்பப்படுத்தவும், தசை சுருக்கத்திற்கும் மற்றும் உடல் இயக்கத்திற்கும் பயன்படுகிறது.
  • குளுக்கோஸால் அந்த ஆற்றலை நமக்கு வழங்க முடியும்.
  • உயிரினங்கள் குளுக்கோஸைப் பயன்படுத்தி ஆற்றலாக மாற்றும் செயலே செல் சுவாசம் எனப்படும்.
  • செல் சுவாசம் சைட்டோபிளாசம் அல்லது மைட்டோகாண்டிரியாவில் நடைபெறுகிறது.
  • இச்சுவாசத்தின் போது உணவுப் பொருள்கள் ஆக்ஸிகரணம் அடைந்து நீர் மற்றும் CO2 ஆக மாற்றப்பட்டு ஆற்றல் வெளிப்படுகிறது.
  • இதில் அதிக அளவு ஆற்றல் வெளியாகிறது.
    குளூக்கோஸ் + ஆக்ஸிஜன் → CO2 + நீர் +ஆற்றல்

Question 2.
ஊறுகாய் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதில் எந்தெந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன?
விடை:

  • ஊறுகாய் என்பது கெட்டுப் போகக் கூடிய உணவினை பதப்படுத்தும் முறையாகும்.
  • தேவையான காய் அல்லது பழங்களை உப்பு அல்லது வினிகரில் பதப்படுத்துதல் வேண்டும்.
  • காய் அல்லது பழங்களை சிறு துண்டுகளாக வெட்டி, தேவையான எண்ணெய், வத்தல், கடுகு, வெந்தயம் பொடியோடு சேர்க்க வேண்டும்.
  • ஊறுகாயில் சேர்க்கக்கூடிய உப்பு காய் அல்லது பழங்களிலுள்ள நீர்ச் சத்தை உறிஞ்சி நொதித்தலை ஆரம்பிக்கிறது.
  • காற்றில்லா நொதித்தல் முறை ஊறுகாய் பதப்படுத்தலில் நடைபெறுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

IX. மதிப்புசார் வினாக்கள்

Question 1.
மருத்துவர் உஷா என்பவர் நுரையீரல் நிபுணர், ஒரு நாள் அர்ஜூன் என்ற மாணவனை
அவர் சந்தித்தார். அவனுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டிருந்தது. அவனைப் பரிசோதித்த பின்பு, அவனை தினமும் விளையாட்டுத் திடலுக்குச் சென்று கால்பந்து அல்லது கூடைப்பந்து விளையாடுமாறு அறிவுரை கூறினார். மேலும் தினமும் காலையில் மூச்சுப் பயிற்சி செய்யுமாறும் அறிவுரை வழங்கினார்.
அ. மருத்துவர் ஏன் அந்த மாணவனை தினமும் விளையாட்டு மைதானத்திற்கு செல்ல அறிவுரை வழங்கினார்?
ஆ. மூச்சுப் பயிற்சி செய்வதன் பயன்கள் யாவை?
விடை:

  • அர்ஜூனுக்கு நுரையீரல் தொற்று இருந்ததால் அவனால் சரியாக சுவாசிக்க முடிய வில்லை.
  • சிறிய அளவில் செய்யப்படும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளால் சுவாசக் கோளாரை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
  • விளையாடும் போது அதிகமான அளவு ஆக்ஸிஜன் நுரையீரல் உள்ளே செல்வதால் அர்ஜூனால் எளிதாக சுவாசிக்க முடியும்.
  • அதனால் மருத்துவர் அவனை விளையாடுமாறு அறிவுரை கூறினார்.

மூச்சுப் பயிற்சி செய்வதன் பயன்கள்:

  • நமது இரத்த ஓட்டத்தை சீரமைக்கிறது.
  • சுவாசக் கோளாறை (ஆஸ்துமா) சரி செய்கிறது.
  • இதயம் சம்பந்தமான நோய்களை ஓரளவு கட்டுக்குள் வைக்கிறது.
  • மேலும் அது நம் தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

Question 2.
நாம் மூடிய அறை அல்லது கூட்டம் அதிகமாக உள்ள பகுதிக்குச் சென்றால் மூச்சு விடுதலில் ஏன் சிரமம் ஏற்படுகிறது என்பதை விளக்குக.
விடை:

  • நாம் மூடிய அறை அல்லது கூட்டம் அதிகமாக உள்ள பகுதிக்குச் சென்றால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படுகிறது.
  • ‘கிளாஸ்ரோபோபியா’ என்ற ஒரு நிலை நமக்கு வருகிறது.
  • கிளாஸ்ரோபோபியா என்றால் மூடிய அறை அல்லது கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் இருப்போரிடத்தில் ஒரு வித பய உணர்வு உண்டாவது.

இதன் அறிகுறிகள் என்ன வென்றால்

  • வியர்த்துக் கொட்டுதல்
  • இரத்த அழுத்தம் அதிகமாவதால், இதயத் துடிப்பு சீராக இருக்காது.
  • உலர் தன்மையான வாய் மற்றும் மயக்கம்.

Question 3.
சைலேஷ் என்பவன் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன். அவனுக்கு அலைபேசியில்
காணொலி விளையாட்டு விளையாடுவதில் அதீத ஆர்வம் கொண்டிருந்தான். சில மாதங்களுக்குப் பிறகு அவனது கண்கள் சிவந்து, வலியை உணர்ந்தான். அவனது அறிவியல் ஆசிரியர் அதற்கான காரணங்களைக் கேட்டறிந்து அவனது பெற்றோரை அழைத்து கண் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுமாறு கூறினார்.
அ. அதிக அளவு அலைபேசியைப் பயன்படுத்துவது எவ்வாறு நமது கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது?
ஆ. ஆசிரியர் வெளிக்காட்டிய பண்புகளைக் கூறு.
விடை:
அதிக அளவு அலைபேசியை பயன்படுத்தினால் நமது கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் கண் வலி, மங்கலான பார்வை, உலர் தன்மையுள்ள கண்கள், தலைவலி, கண் சிவந்திருத்தல், கவனக்குறைவு, தூக்கமின்மை.

ஆசிரியரிடமிருந்து பெற்ற பண்புகள்

  • உடல் நலமில்லாதவர்களை புறக்கணித்தல் கூடாது.
  • பிறர் நலனில் அக்கறை காட்டுதல்
  • உடல் நலமில்லாதவர்களைச் சரியான முறையில் வழி நடத்துதல்
  • அனைத்திற்கும் மேலாக மனித நேயம்.

8th Science Guide உயிரினங்களின் ஒருங்கமைவு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பல திசுக்கள் ஒன்று சேர்ந்து உருவாவது ………………………..
அ) செல்
ஆ) உறுப்பு
இ) உறுப்பு மண்டலம்
ஈ) இவை ஏதுவுமில்லை
விடை:
ஆ) உறுப்பு

Question 2.
……………………………. உயிரினங்களின் அமைப்பு அலகுகள் எனப்படுகின்றன.
அ) செல்
ஆ) நியூக்ளியஸ்
இ) நுண்ணுறுப்புகள்
ஈ) திசுக்கள்
விடை:
அ) செல்

Question 3.
………………………….. திசுக்கள் நரம்புத் தூண்டல்களை கடத்துகிறது.
அ) இணைப்பு
ஆ) எபிதீலியத்
இ) நரம்பு
ஈ) தசைத்
விடை:
இ) நரம்பு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

Question 4.
……………………….. விழிவெளிப் படலம் முழுவதும் மூடியுள்ள மெல்லிய ஒளி ஊடுறுவும் சவ்வாகும்.
அ) கண்ஜங்டிவா
ஆ) கார்னியா
இ) ஐரிஸ்
ஈ) விழித் திரை
விடை:
அ) கண்ஜங்டிவா

Question 5.
………………………….. மில்லியன் காற்று நுண்ணறைகள் சராசரியாக நமது நுரையீரலில் காணப்படுகின்றன.
அ) 400
ஆ) 300
இ) 480
ஈ) 500
விடை:
அ) 400

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
குரல்வளை என அழைக்கப்படுவது …………………………..
விடை:
லாரிங்ஸ்

Question 2.
ஆற்றலானது …………………….. வடிவில் செல்களால் பயன்படுத்தப்படுகிறது.
விடை:
ATP

Question 3.
………………………….. என்பது செல்லின் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்கும் நிகழ்ச்சி ஆகும்.
விடை:
சிதை மாற்றம்

Question 4.
நுரையீரலை சுற்றியிருக்கும் உறை ………………………….
விடை:
புளூரல் சவ்வு

Question 5.
……………………… மற்றும் ………………………….. ஊடுகலப்பு ஒத்தமைவான்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
விடை:
முதுகு நாணற்றவை, கடல் வாழ் உயிரினங்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

III. சரியா? தவறா?

Question 1.
செல் என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.
விடை:
சரி

Question 2.
பல செல் விலங்குகளில் மிகப்பெரிய செல் நெருப்புக் கோழியின் முட்டை ஆகும்.
விடை:
சரி.

Question 3.
விழித்திரை உறுதியான தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப்
பாதுகாக்கிறது.
விடை:
தவறு – ஸ்கிளிரா உறுதியான தடித்த வெண்ணிற உறையாகும்.

Question 4.
அக்குவஸ் திரவம் லென்சுக்கும், விழிவெண் படலத்துக்கும் ஊட்டமளிக்கிறது.
விடை:
சரி

Question 5.
காற்றுள்ள சுவாசத்தில் CO2 மற்றும் எத்தனால் விளைபொருட்களாக கிடைக்கின்றன.
விடை:
தவறு – காற்றில்லா சுவாசத்தில் CO2 மற்றும் எத்தனால் விளை பொருட்களாக கிடைக்கிறது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு 3

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

V. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்துக.

Question 1.
(எளிய திசு, கூட்டுத் திசு , இணைப்புத் திசு , தசைத் திசு)
a) உடலின் பல்வேறு அமைப்புகளை இணைப்பது.
விடை:
இணைப்புத் திசு

b) ஒரே வகையான செல்களால் ஆனவை.
விடை:
எளிய திசு

c) அசைவு மற்றும் இடப்பெயர்ச்சிக்கு உதவுவது
விடை:
தசைத் திசு

d) பன்மயத் தன்மை கொண்டது.
விடை:
கூட்டுத் திசு

VI. இரண்டு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
செல் – வரையறு
விடை:
செல் என்பது உயிரினங்களில் குறிப்பிட்ட செயலைத் செய்யத் தகுந்த மிகச் சிறிய அமைப்பு
மற்றும் செயல் அலகு ஆகும்.

Question 2.
அக்குவஸ் திரவம் – விட்ரியஸ் திரவம் வேறுபடுத்துக.
விடை:

அக்குவஸ் திரவம்விட்ரியஸ் திரவம்
1. இது லென்சுக்கும், விழி வெண்படலத்துக்கும் இடையே நிரம்பியுள்ள நீர்ம திரவமாகும்.இது லென்சுக்கும் விழித்திரைக்கு இடையே உள்ள அரைத் திண்ம ஒளி ஊடுறுவும் கொழ
கொழிப்பான பொருளாகும்.
2. இது லென்சுக்கும், விழிவெண்படலத்துக்கும் ஊட்டமளிக்கிறது.விட்ரியஸ் திரவம் கண்ணின் வடிவத்தைப் பராமரிக்கிறது.

Question 3.
தன்னிலை காத்தல் என்றால் என்ன?
விடை:
உயிர் வாழ்வதற்கு ஏதுவாக மனித உடலியல் மண்டலம் சுயமாகத் தன்னைத் தானே ஒழுங்கு படுத்திக் கொண்டு சமநிலையைப் பராமரிப்பது தன்னிலை காத்தலின் முக்கியப் பண்பாகும்.

Question 4.
சீரான உடல் நிலையை ஒழுங்குப்படுத்த உதவும் உறுப்புகள் யாவை?
விடை:
கல்லீரல், சிறுநீரகம், மூளை (ஹைபோதலாமஸ்) தானியங்கு நரம்பு மண்டலம், மற்றும் நாளமில்லா சுரப்பி மண்டலங்கள்.

Question 5.
ஊடுபரவல் ஒழுங்குபாடு என்றால் என்ன?
விடை:
ஒரு உயிரியானது அதன் உடலின் நீர்ச் சமநிலையை ஒழுங்குபடுத்தி அதன் தன்நிலை காத்தலைப் பராமரிக்கும் செயலே ஊடுபரவல் ஒழுங்குபாடு எனப்படும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

VII. மூன்று மதிப்பெண் வினாக்கள்

Question 1.
சுவாசித்தல் என்றால் என்ன?
விடை:
சுவாசித்தல் என்பது உணவுப் பொருள் ஆக்ஸிகரணம் அடைந்து ஆற்றலை வெளிப்படுத்தும் நிகழ்வு
ஆகும். இது உட்சுவாசம், வெளிச் சுவாசம் மற்றும் செல் சுவாசம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

Question 2.
பரவலுக்கு சில எடுத்துக் காட்டு தருக.
விடை:

  • எரியும் ஊதுபத்தியின் மணம் அறை முழுவதும் பரவுதல்.
  • நீரில் ஒரு சொட்டு சிவப்பு மை விடுதல்.
  • தேநீர் பையானது சூடான நீரில் வைக்கப்படுதல்

Question 3.
கண்ஜங்டிவாவின் முக்கிய பணி என்ன?
விடை:
இச்சவ்வு சிறிய அளவில் கோழை மற்றும் கண்ணீரைச் சுரந்து கண்ணை ஈரமாகவும், தெளிவாகவும் வைத்துக் கொள்கிறது.

Question 4.
உறுப்பு – வரையறு.
விடை:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திசுக்களால் ஆக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யக் கூடிய அமைப்பே உறுப்பு எனப்படும். எ.டு: மூளை, இதயம், நுரையீரல்

Question 5.
மூல செல்லின் முக்கியத்துவம் என்ன?
விடை:
மூல செல் என்பது ஒரு அடிப்படை செல் ஆகும். இது தோல் செல், நரம்பு செல் போன்ற எந்த வகை செல்லாகவும் மாறும் தன்மை உடையது. உடலின் பாதிப்படைந்த திசுக்களை குணப்படுத்த அல்லது மாற்றி அமைக்க உதவுகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

VIII. ஐந்து மதிப்பெண் வினாக்கள்

Question 1.
மனிதக் கண்ணின் புற அமைப்பை விவரி.
விடை:
ஸ்கிளிரா:
இது உறுதியான தடித்த வெண் உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கிறது.

கண்ஜங்டிவா:

  • இது விழி வெளிப்படலம் முழவதும் மூடியுள்ள மெல்லிய ஒளி ஊடுறுவும் சவ்வாகும்.
  • இச்சவ்வு சிறிய அளவில் கோழை மற்றும் கண்ணீரைச் சுரந்து கண்ணை ஈரமாகவும், தெளிவாகவும் வைத்துக் கொள்கிறது.

கார்னியா:

  • இது கண் பார்வை மற்றும் கருவிழியின் மீது படர்ந்துள்ள ஒளி ஊடுறுவும் தோல்படலம் ஆகும்.
  • கண்ணுக்குள் நுழையும் ஒளியை விலகலடையச் செய்வதே இதன் பணியாகும்.

ஐரிஸ்:

  • இது கண்ணின் நிறமுள்ள பகுதியை உருவாக்கும் நிறமிகளாலான திசுப்படலம் ஆகும்.
  • கண்ணில் நுழையும் ஒளியின் அளவுக்கேற்ப கண் பார்வையின் அளவைக்கட்டுப்படுத்துவதாகும்.

கண்பார்வை:
இது கருவிழியின் மையத்திலமைந்த சிறுதுளையாகும். இது ஒளியை கண்ணின் உள்ளே அனுப்புகிறது.

Question 2.
நுரையீரலின் அமைப்பை விவரி.
விடை:

  • நுரையீரல்கள் மார்பறையின் ஒவ்வொரு புறமும் காணப்படும் பஞ்சு போன்ற மீளும் பைகளாகும்.
  • மார்பறையானது முதுகுப்புறத்தில் முதுகெலும்பாலும் வயிற்றுப்புறத்தில் மார்பெலும்பாலும், பக்கவாட்டில் விலா எலும்பாலும் அடிப்புறத்தில் குவிந்த உதரவிதானத்தாலும் சூழப்பட்டுள்ளது.
  • நுரையீரல்கள் மார்பறையின் இருபுறமும் அமைந்து மார்பறையின் உட்பகுதியை நிரப்புகின்றன.
  • இடது நுரையீரலானது இதயத்திற்கு இடமளிக்கும் வகையில் வலது நுரையீரலை விட சற்று சிறியதாக உள்ளது.

காற்று நுண்ணறைகள்:

  • இவை மிகவும் நுண்ணியவையாக இருந்த போதிலும் நமது சுவாச மண்டலத்தின் செயல்மிகு அமைப்புகளாக உள்ளன.
  • 480 மில்லியன் காற்று நுண்ணறைகள் சராசரியாக நமது நுரையீரலில் காணப்படுகின்றன.
  • நுரையீரல்களினுள் காணப்படும் காற்று நுண்ணறைகளின் மொத்தப்பரப்பு 2000 சதுர அடிக்கு மேல் அல்லது நமது உடற்பரப்பை போல 100 மடங்கு அதிகமாக இருக்கும்.
  • காற்று நுண்ணறைகள் O2 மற்றும் CO2 வாயுப் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு 4

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

Question 3.
ஒரு விலங்கு செல்லின் அமைப்பை படத்துடன் விவரி.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு 5

  • செல் என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.
  • செல்கள் பொதுவாக உயிரினங்களின் கட்டுமானக் கற்கள் எனப்படுகின்றன.
  • செல்கள் சவ்வினால் சூழப்பட்ட சைட்டோபிளாசத்தைக் கொண்டுள்ளன.
  • இந்த சைட்டோபிளாசமானது புரதங்கள், உட்கரு அமிலங்கள் போன்ற பல உயிரியல் மூலக்கூறுகளைப் பெற்றுள்ளன.
  • செல்லின் புரோட்டோ பிளாசம் என்பது மையத்திலமைந்த கோள வடிவ உட்கருவையும் சைட்டோபிளாசத்தில் அமைந்த அகப்பிளாச வலை, மைட்டோகாண்டிரியா, தோல் கை உடல்கள் சென்ட்ரியோல்கள், ரிபோசோம்கள் போன்ற பல செல் நுண்ணுறுப்புகளை உள்ளடக்கியது.
  • ஒவ்வொரு செல் நுண்ணுறுப்பும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 8 அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 8 அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 8 அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்

8th Science Guide அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
பின்வருவனவற்றுள் எது வான்பொருள்?
அ) சூரியன்
ஆ) சந்திரன்
இ) விண்மீன்கள்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 8 அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்

Question 2.
மங்கள்யான் …………………..க்கு அனுப்பப்பட்டது.
அ) சந்திரன்
ஆ) செவ்வாய்
இ) வெள்ளி
ஈ) புதன்
விடை:
ஆ) செவ்வாய்

Question 3.
சந்திரயான் – I விண்ணில் செலுத்தப்பட்ட நாள்
அ) 2008 அக்டோபர் 22
ஆ) 2008 நவம்பர் 8
இ) 2019 ஜூலை 22
ஈ) 2019 அக்டோபர் 22
விடை:
அ) 2008 அக்டோபர் 22

Question 4.
சிவப்புக் கோள் என்று அழைக்கப்படுவது ………………..
அ) புதன்
ஆ) வெள்ளி
இ) பூமி
ஈ) செவ்வாய்
விடை:
ஈ) செவ்வாய்

Question 5.
ராக்கெட்டில் பயன்படும் தத்துவம் ……………………….
அ) நியூட்டனின் முதல் விதி
ஆ) நியூட்டனின் இரண்டாம் விதி
இ) நியூட்டனின் மூன்றாம் விதி
ஈ) இவை அனைத்தும்
விடை:
இ) நியூட்டனின் மூன்றாம் விதி

Question 6.
கிரியோஜெனிக் எரிபொருள் ………. எவ்வெப்பநிலையில் சேகரித்து வைக்கப்படும்?
அ) அறை
ஆ) குறைந்த
இ) மிகக்குறைந்த
ஈ) மிக அதிக
விடை:
இ) மிகக்குறைந்த

Samacheer Kalvi 8th Science Guide Chapter 8 அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்

Question 7.
நாசாவின் ……….. திட்டம் முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது.
அ) அப்போலோ – 5
ஆ) அப்போலோ – 8
இ) அப்போலோ – 10
ஈ) அப்போலோ – 11
விடை:
ஆ) அப்போலோ – 8

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
விண்மீன்களைப் பற்றியும், கோள்களைப் பற்றியும் படிக்கும் அறிவியல் பிரிவு …….
விடை:
வானியல்

Question 2.
சூரியன் ……….. விண்மீ ன் திரளைச் சார்ந்தது.
விடை:
பால்வெளி

Question 3.
செவ்வாய்க்கோள் …….. நாட்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வருகிறது.
விடை:
687

Question 4.
பிற கோள்களுக்கு விண்கலனை அனுப்பிய முதல் இந்திய விண்வெளித் திட்டம்
விடை:
மங்கள்யான்

Question 5.
நிலவின் மேற்பரப்பில் நடந்த முதல் மனிதர் ………….. ஆவார்.
விடை:
நீல் ஆம்ஸ்ட்ராங்

III. சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக

Question 1.
சூரியன் மற்றும் இதர வான்பொருள்கள் சேர்ந்து சூரியக் குடும்பத்தை உருவாக்குகின்றன.
விடை :
சரி

Question 2.
சந்திராயன் – I ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Science Guide Chapter 8 அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்

Question 3.
செவ்வாய்க் கோள் சூரியக் குடும்பத்தில் உள்ள மிகச் சிறிய கோள் ஆகும்.
விடை:
தவறு
சரியான விடை : செவ்வாய்க் கோள் சூரிய குடும்பத்தில் உள்ள இரண்டாவது சிறிய கோள் ஆகும்.

Question 4.
PSLV மற்றும் GSLV ஆகியவை இந்தியாவின் புகழ்பெற்ற செயற்கைக் கோள்கள் ஆகும்.
விடை:
சரி

Question 5.
ராக்கெட்டின் இயக்கு பொருள்கள் திண்மநிலையில் மட்டுமே காணப்படும்.
விடை:
தவறு சரியான விடை :
ராக்கெட்டின் இயக்கு பொருள்கள் திண்ம, நீர்ம மற்றும் திரவநிலை வாயுக்களாக காணப்படுகின்றன.

IV. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 8 அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல் 1

V. சுருக்கமாக விடையளி

Question 1.
வான்பொருள்கள் என்றால் என்ன?
விடை:
வானத்தில் உள்ள விண்மீன்கள், கோள்கள், சந்திரன் மற்றும் விண்கற்கள், வால்மீன்கள்
போன்ற பிற பொருட்கள் ஆகியவை வான்பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 2.
விண்மீ ன் திரள் – வரையறு.
விடை:
தங்களுக்கு இடையே உள்ள கவர்ச்சி விசையினால் பிணைக்கப்பட்ட லட்சக்கணக்கான விண்மீன்களைக் கொண்ட தொகுப்பு விண்மீன் திரள் எனப்படும்.

Question 3.
சந்திரயான் – 1 திட்டத்தின் நோக்கங்கள் யாவை?
விடை:

  • சந்திரனில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறித.
  • சந்திரனில் உள்ள தனிமங்களை கண்டறிதல்.
  • சந்திரனில் ஹீலியம் – 3 இருப்பதை ஆராய்தல்.
  • சந்திரனின் முப்பரிமான வரைபடத்தை உருவாக்குதல்.
  • சூரியக் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியை ஆராய்தல்.

Question 4.
மங்கள்யான் திட்டத்தின் நோக்கங்களை வரிசைப்படுத்துக.
விடை:

  • கோள்களுக்கு இடையேயான விண்வெளித் திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்குதல்.
  • செவ்வாயின் மேற்பரப்பை ஆராய்தல்.
  • செவ்வாயின் வளிமண்டலத்தில் உள்ள பகுதிப் பொருள்களை அறிதல்.
  • எதிர்காலத்தில் செவ்வாய்க் கோளில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளையும். கடந்த காலங்களில் உயிரினங்கள் இருந்தனவா என்பது பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ளுதல்.

Question 5.
கிரையோஜெனிக் எரிபொருள் என்றால் என்ன?
விடை:

  • இந்த வகை இயக்கு பொருள்களின் எரிபொருள் அல்லது ஆக்ஸிகரணி அல்லது இரண்டும் திரவநிலை வாயுக்களாக இருக்கும்.
  • இவை மிகக்குறைந்த வெப்பநிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
  • இவ்வகை இயக்கு பொருள்களை எரியூட்ட தனியான அமைப்புகள் தேவை இல்லை.
  • இவற்றை ஒன்றாகச் சேர்த்து கலக்கும்போது, அவை ஒன்றோடொன்று வினைபுரிந்து எரியத் தொடங்குகின்றன.

Question 6.
நாசாவில் பணியாற்றிய சில இந்தியர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • கல்பனா சாவ்லா
  • சுனிதா வில்லியம்ஸ்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 8 அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்

VI. விரிவாக விடையளி

Question 1.
சந்திரயான் – 1ன் சாதனைகள் யாவை?
விடை:

  • சந்திரனின் மணற்பரப்பில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்தது.
  • சந்திரன் முற்காலத்தில் உருகிய நிலையில் இருப்பதை உறுதி செய்தது.
  • அமெரிக்காவின் விண்கலங்கள் அப்போலோ – 15 மற்றும் அப்போலோ – 11 ஆகியவை தரையிறங்கிய இடங்களின் படங்களை பதிவு செய்தது.
  • சந்திரனின் கனிம வளம் பற்றிய தகவல்கள் உயர்திறன் கொண்ட நிறமாலைமானி மூலம் பெறப்பட்டன.
  • X-கதிர் படக்கருவியின் மூலம் சந்திரனில் அலுமினியம், மெக்னீசியம் மற்றும் சிலிக்கான் இருப்பது கண்டறியப்பட்டது.
  • சந்திராயன் – I புகைப்படக் கருவியின் மூலம் 75 நாட்களில் எடுக்கப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் பூமிக்கு அனுப்பப்பட்டன.
  • நிலவில் உள்ள மேடுகள் மற்றும் பள்ளங்களைக் கொண்ட படங்களிலிருந்து சந்திரனின் மேற்பரப்பு கிண்ணக்குழிகளைக் கொண்டது என கண்டறியப்பட்டது.
  • சந்திரயான் – I பூமியின் முழு வடிவத்தையும் முதன் முதலாக பதிவு செய்து அனுப்பியது.
  • சந்திரயான் – I நிலவின் பரப்பில் மனிதர்களுக்கு உறைவிடமாகப் பயன்படும் பல குகைகளை கண்டறிந்தது.

Question 2.
ராக்கெட்டின் பகுதிகளை விளக்குக.
விடை:
I- கட்டமைப்பு அமைப்பு :

  • இவை ராக்கெட்டை உள்ளடக்கிய சட்டம் ஆகும்.
  • இவை மிகவும் வலிமையான, ஆனால் எடை குறைந்த டைட்டானியம் அல்லது அலுமினியம் போன்ற பொருட்களால் உருவாக்கப்படுகின்றன.
  • ராக்கெட் பறக்கும் போது அதற்கு நிலைப்புத் தன்மை ஏற்படுத்துவதற்காக, சில ராக்கெட் சட்டத்தின் அடிப்பகுதியில் துடுப்புகள் இணைக்கப்படுகின்றன.

II – பணிச்சுமை அமைப்பு:

  • சுற்று வட்டப்பாதையில் விடப்படுவதற்காக ராக்கெட்டினால் சுமந்து செல்லப்படும் செயற்கைக் கோள்கள் பணிச்சுமை ஆகும். இவை திட்டப்பணிகளை சார்ந்தது.
  • இவை தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு, உளவு பார்த்தல், கோள்களை ஆராய்தல் மற்றும் கண்காணிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு ஏற்றவாறு அமைக்கப்படுகின்றன.

III – வழிகாட்டு அமைப்பு :

  • இவ்வமைப்பானது, ராக்கெட் செல்ல வேண்டிய பாதை குறித்து வழிகாட்டுகிறது.
  • இவை உணர்விகள், கணினிகள், ரேடார் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது.

IV – உந்துவிசை அமைப்பு :

  • இது எரிபொருள் தொட்டிகள், இறைப்பான்கள் மற்றும் எரியூட்டும் அறை ஆகியவற்றை கொண்டுள்ளது.
  • i) திரவ உந்துவிசை அமைப்பு மற்றும் ii) திட உந்து விசை அமைப்பு என இரண்டு முக்கியமான உந்துவிசை அமைப்புகள் உள்ளன.

Question 3.
நாசாவின் அப்போலோ திட்டங்கள் குறித்து குறிப்பு வரைக.
விடை:

  • அப்போலோ விண்வெளி திட்டங்கள் நாசாவின் மிகப்புகழ்பெற்ற திட்டங்கள் ஆகும்.
  • இவற்றின் மூலம், அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்கினர்.
  • இது ஒட்டுமொத்தமாக 17 திட்டங்களைக் கொண்டது. இதில் அப்போலோ – 8 மற்றும் அப்போலோ – 11 ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.
  • அப்போலா – 8 என்பது முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய திட்டமாகும். இதில் விண்கலம் நிலவைச் சுற்றிய பின் மீண்டும் பூமிக்கு வந்தடைந்தது.
  • அப்போலா – 11 திட்டமானது முதன்முதலில் மனிதனை நிலவில் தரையிரங்க செய்த திட்டம் ஆகும். இவ்விண்கலமானது 1969 ஆம் ஆண்டு ஜூலை 20ம் நாள் நிலவில் தரையிறங்கியது. அப்போலா – 11ல் பயணித்த நீல் ஆம்ஸ்ட்ராங் முதன் முதலில் நிலவின் மேற்பரப்பில் காலடி வைத்தார்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 8 அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்

VII. உயர்சிந்தனை வினாக்கள்

Question 1.
நாம் எப்போதும் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. ஏன்?
விடை:

  • நிலவானது பூமியை ஒரு குறிப்பிட்ட பாதையில் சுற்றி வருகிறது.
  • இதனால் ஏற்படும் ஒத்திசைவின் காரணமாகவே நம்மால் நிலவின் ஒரு பகுதியை மட்டும் காண முடிகிறது.

8th Science Guide அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

சீனாவின் சுமார் ………… ஆண்டுகளுக்கு முன்பாகவே ராக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அ) 700 ஆண்டுகள்
ஆ) 900 ஆண்டுகள்
இ) 800 ஆண்டுகள்
ஈ) 600 ஆண்டுகள்
விடை:
இ) 800 ஆண்டுகள்

Question 2.
இந்தியா தனது முதல் செயற்கைக் கோளான ஆரியபட்டாவை ………….. ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.
அ) 1875
ஆ) 1975
இ) 1675
ஈ) 1985
விடை :
ஆ) 1975

Question 3.
…………….. திட்டமானது 312 நாட்கள் செயல்பட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் 95% முடிக்கப்பட்டது.
அ) சந்திராயன் -I
ஆ) சந்திராயன் – II
இ) மங்கள்யான்
ஈ) இவை அனைத்தும்
விடை:
அ) சந்திராயன் -I

Question 4.
செவ்வாய் தன் அச்சில் …………….. தன்னைத்தானே சுற்றி வருகிறது.
அ) 30 மணி 30 நிமிடம்
ஆ) 37 மணி 24 நிமிடம்
இ) 27 மணி 27 நிமிடம்
ஈ) 24 மணி 37 நிமிடம்
விடை:
ஈ) 24 மணி 37 நிமிடம்

Question 5.
……………………………… விண்வெளியில் பூமியின் 252 சுற்றுவட்டப் பாதையில் 10.4 மில்லியன் மைல்கள் பயணம் செய்துள்ளனர்.
அ) சுனிதா வில்லியம்ஸ்
ஆ) கல்பனா சாவ்லா
இ) நீல் ஆம்ஸ்ட்ராங்
ஈ) ராகேஷ் சர்மா
விடை:
ஆ) கல்பனா சாவ்லா

Samacheer Kalvi 8th Science Guide Chapter 8 அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
இயற்கையில் பூமிக்கென உள்ள ஒரே துணைக்கோள் ……ஆகும்.
விடை:
சந்திரன்

Question 2.
தொடக்கத்தில் மரக்குழாய்களில் ……… நிரப்பப்பட்டு ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்டன.
விடை:
வெடிமருந்து

Question 3.
கட்டமைப்பு அமைப்பில் எடை குறைந்த ………… போன்ற பொருட்களால் ராக்கெட் உருவாக்கப்படுகின்றன.
விடை:
டைட்டானியம்
(அ) அலுமினியம்

Question 4.
……………. என்பது 64 கிராம் மட்டுமே எடை கொண்ட உலகின் மிகச் சிறிய செயற்கைக் கோள் ஆகும்.
விடை:
கலாம்சாட்

Question 5.
சந்திராயன் – 1 புகைப்படக் கருவி மூலம் ………. எடுக்கப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் பூமிக்கு அனுப்பப்பட்டன.
விடை:
75 நாட்கள்

III. சரியா / தவறா என கண்டுபிடி. (தவறாக இருப்பின் சரியான விளக்கத்தை எழுதுக)

Question 1.
விண்வெளி திட்டத்தின்போது ஒற்றை ராக்கெட்டின் மூலம் 108 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது. இவரின் திறமைக்கு மிகச் சிறந்த உதாரணம் தருக.
விடை:
தவறு சரியான விடை:
ஒருவிண்வெளி திட்டத்தின்போது ஒற்றை ராக்கெட்டின் மூலம் 104 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது. இவரின் திறமைக்கு மிகச் சிறந்த உதாரணம் ஆகும்.

Question 2.
Dr. மயில்சாமி அண்ணாதுரை சந்திராயன்-1, சந்திராயன்-2 மற்றும் மங்கள்யான் திட்டங்களில் திட்ட இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
விடை:
சரி

Question 3.
சந்திராயன் – 2 என்ற தொடர் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் 2019ம் ஆண்டு ஜுலை 22ம் நாள் செயல்படுத்தியது.
விடை :
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 8 அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல் 2

V. சுருக்கமான விடையளி

Question 1.
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற ராக்கெட்டின் பெயர்களை எழுதுக.
விடை:

  • PSLV – துருவத் துணைக்கோள் செலுத்தும் வாகனம்
  • GSLV – புவிநிலைத் துணைக்கோள் செலுத்து வாகனம்

Question 2.
இந்திய நாடு செவ்வாய்க் கோளை அடைந்த பிறகு மீண்டும் செவ்வாய் கோளை அடைந்த பிற நிறுவனங்கள் யாவை?
விடை:

  • சோவியத் விண்வெளி ஆய்வு நிறுவனம்
  • நாசா
  • ஐரோப்பிய விண்வெளி முகாம்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 8 அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்

Question 3.
பிரக்யான் என்பது யாது?
விடை:

  • இது பிரக்யான் என்னும் பெயர் கொண்ட ஆறு சக்கரங்களை உடைய ரோபோ வாகனம் ஆகும்.
  • இதன் பொருள் அறிவு என்பதாகும்.

Question 4.
சந்திரனில் தரையிறங்கிய விண்கலத்தில் பயணித்த விண்வெளி வீரர்களின் பெயர்களை எழுதுக.
விடை:

  • நீல் ஆம்ஸ்ட்ராங்
  • புஷ் ஆல்டிரின்
  • மைக்கல் காலின்ஸ் குழுவினர்.

Question 5.
இயக்கும் பொருட்கள் என்பது யாது?
விடை:

  • இயக்கு பொருள் என்பது ஒரு வேதிப்பொருள் ஆகும்.
  • இப்பொருள் எரியும் போது உருவாகும் அழுத்தப்பட்ட வாயுக்களின் ஆற்றலைப் பயன்படுத்தி ராக்கெட்டானது புவியீர்ப்பு விசைக்கு எதிராக உயர்த்தப்படுகிறது.

VI. விரிவான விடையளி

Question 1.
சந்திரனை பற்றி விரிவாக எழுதுக?
விடை:

  • இயற்கையில் பூமிக்கென உள்ள ஒரே துணைக்கோள் சந்திரன் ஆகும்.
  • இது பூமியிலிருந்து சுமார் 3,84,400 கி.மீ தொலைவில் உள்ளது.
  • இதன் விட்டம் 3474 கி.மீ. ஆகும்.
  • சந்திரன் தாமாக ஒளிர்வது இல்லை .
  • சந்திரனில் வளிமண்டலம் இல்லை .
  • இது சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்களையே எதிரொளிக்கிறது.
  • இது தன்னைத்தானே சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நேரமும், இது பூமியைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரமும் சமமாக இருப்பதால் நாம் எப்போதும் சந்திரனின் ஒரு பகுதியையே பார்த்து வருகிறோம்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 8 அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்

Question 2.
செவ்வாய் கோளை பற்றி விரிவாக எழுதுக
விடை:

  • சூரியனிலிருந்து நான்காவதாக அமைந்துள்ள கோள் செவ்வாய் ஆகும்.
  • இது சூரியக் குடும்பத்தில் உள்ள இரண்டாவது சிறிய கோளாகும்.
  • இதன் சிவந்த நிறத்தின் காரணமாக இது சிவப்புகோள் என்று அழைக்கப்படுகிறது.
  • இக்கோளின் மேற்பரப்பில் உள்ள இரும்பு ஆக்சைடு மற்றும் அதன் வளிமண்டலத்தில் உள்ள தூசுகள் அதற்கு சிவப்பு நிறத்தைத் தருகிறது.
  • இது தன் அச்சில் 24 மணி 37 நிமிடங்களில் தன்னைத்தானே சுற்றி வருகிறது.
  • மேலும் 687 நாட்களுக்கு ஒரு முறை சூரியனையும் சுற்றி வருகிறது.
  • இதன்சுற்றுக்காலம்மற்றும் காலநிலை ஆகியவை பூமியை ஒத்தியிருப்பதால் வானியலாளர்கள் செவ்வாய்க் கோள் பற்றிய ஆய்வுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
  • அவர்கள் செவ்வாயின் மேற்பரப்பு, காலநிலை மற்றும் புவியியல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பல்வேறு மனிதர் அற்ற விண்கலன்களை அனுப்பி வருகின்றனர்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 7 காந்தவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 7 காந்தவியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 7 காந்தவியல்

8th Science Guide காந்தவியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
பின்வருவனவற்றுள் காந்தத்தால் கவரப்படும் பொருள் …………………..
அ) மரப்பொருள்கள்
ஆ) ஏதேனும் ஓர் உலோகம்
இ) தாமிரம்
ஈ) இரும்பு மற்றும் எஃகு
விடை:
ஈ) இரும்பு மற்றும் எஃகு

Samacheer Kalvi 8th Science Guide Chapter 7 காந்தவியல்

Question 2.
கீழ்க்காணும் ஒன்று நிலைத்த காந்தத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
அ) மின்காந்தம்
ஆ) முமெட்டல்
இ) தேனிரும்பு
ஈ) நியோடிமியம்
விடை:
ஈ) நியோடிமியம்

Question 3.
ஒரு சட்டக் காந்தத்தின் தென்முனையும், U வடிவ காந்தத்தின் வடமுனையும் ……………
அ) ஒன்றையொன்று கவரும்
ஆ) ஒன்றையொன்று விலக்கும்
இ) ஒன்றையொன்று கவரவோ விலக்கவோ செய்யாது
ஈ) மேற்கண்டவற்றுள் எதுவுமில்லை
விடை:
அ) ஒன்றையொன்று கவரும்

Question 4.
கற்பனையான புவிக் காந்தப்புலம் எந்த வடிவத்தினைப் போன்றது? –
அ) U வடிவ காந்தம்
ஆ) மின்னோட்டத்தைக் கடத்தும் நேர்க்கடத்தி
இ) வரிசுருள்
ஈ) சட்டக் காந்தம்
விடை:
ஈ) சட்டக் காந்தம்

Question 5.
MRI என்பதன் விரிவாக்கம் ……………
அ) Magnetic Resonance Imaging
ஆ) Magnetic Running Image
இ) Magnetic Radio Imaging
ஈ) Magnetic Radar Imaging
விடை :
அ) Magnetic Resonance Imaging

Samacheer Kalvi 8th Science Guide Chapter 7 காந்தவியல்

Question 6.
காந்த ஊசி ………. பயன்படுகிறது.
அ) காந்தவிசைக் கோடுகளை வரைய
ஆ) காந்தப்புலத்தின் திசையை அறிய
இ) கடல் பயணத்திற்கு
ஈ) மேற்காண் அனைத்தும்
விடை:
ஈ) மேற்காண் அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
காந்தத்தின் வலிமை அதன் முனைகளில் ……………..
விடை:
அதிகம்

Question 2.
ஒரு காந்தம் ……………… முனைகளைக் கொண்டது.
விடை:
இரு (வட, தென்)

Question 3.
மின்சார உற்பத்திக்குப் பயன்படும் காந்தங்கள் ……….
விடை:
டைனமோ

Question 4.
கனமான இரும்புப் பொருள்களை உயர்த்தப் பயன்படுவது …………
விடை:
மின்காந்தங்கள்

Question 5.
தடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதும் …………….. வட, தென் முனைகளை நோக்கி இருக்கும்.
விடை:
புவியின்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 7 காந்தவியல்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 7 காந்தவியல் 1

IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தேர்வு செய்

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறு

Question 1.
கூற்று : இரும்புத் துருவல்களின் செறிவு காந்தத் துருவப் பகுதிகளில் அதிகம்.
காரணம் : காந்தங்கள் மிகவும் கூர்மையானவை
விடை :
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு

Question 2.
கூற்று : புவியின் காந்தப்புலம் அதன் உள்ளகத்தில் உள்ள இரும்பினால் உருவாகிறது.
காரணம் : உயர் வெப்பநிலையில் ஒரு காந்தமானது அதன் காந்தப்பண்பினை இழக்கும்
விடை :
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி.
ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல

Samacheer Kalvi 8th Science Guide Chapter 7 காந்தவியல்

V. சுருக்கமாக விடையளி

Question 1.
காந்தப்புலம் – வரையறு.
விடை :

  • காந்தப்புலம் என்பது காந்ததத்தினைச் சுற்றி காந்த விளைவு அல்லது காந்த விசை உணரும் பகுதி ஆகும்.
  • அலகு – டெஸ்லா அல்லது காஸ் (1 டெஸ்லா = 10,000 காஸ்)

Question 2.
செயற்கைக் காந்தம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை :

  • ஆய்வகம் மற்றும் தொழிற்சாலைகளில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காந்தங்களே செயற்கைக் காந்தங்கள் ஆகும்.
  • (எ.கா.) சட்டக் காந்தங்கள், U-வடிவக்காந்தங்கள், குதிரை லாட வடிவகாந்தங்கள், வளைய வடிவகாந்தங்கள், மின்காந்தங்கள்.

Question 3.
இயற்கை மற்றும் செயற்கைக் காந்தங்களை வேறுபடுத்துக.
விடை :

இயற்கைக் காந்தங்கள் :

  1. இயற்கையில் காணப்படும் ஒழங்கற்ற வடிவங்களும், பரிமாணங்களும் கொண்ட காந்தங்கள்.
  2. இவை மாற்ற முயைாத நன்கு திடமான வலிமை கொண்ட காந்தமாகும்.
  3. இவை நீண்ட காலம் காந்தப் பண்புகளை இழக்காதவை.
  4. மிகக் குறைந்த பயன்பாடு உடையவை.

செயற்கைக் காந்தங்கள் :

  1.  மனிதர்களால் உருவாக்கப்பட்ட காந்தங்கள் வெவ்வேறு வடிவங்களிலும், பரிமாணங்களிலும் உருவாக்கிட முடியும்.
  2. தேவையான குறிப்பிட்ட வலிமை கொண்ட செயற்கைக் காந்தங்களை உருவாக்க முடியும்.
  3. இவற்றின் பண்புகள் குறிப்பிட்ட கால அளவு உடையது.
  4. அன்றாட வாழ்வில் பெரும் அளவில் பயன்படக்கூடியது.

Question 4.
புவியானது மிகப்பெரிய சட்டக் காந்தமாகும். ஏன்? காரணம் தருக.
விடை :

  • பூமி ஒரு சட்டக் காந்தம் போல செயல்படுகிறது.
  • இது ஒரு நிரந்தர காந்தம் அல்ல. ஆனால் ஒரு மின் காந்தம்.
  • பூமியில் ஆழமான பகுதிகளில் காணப்படும் உலோமானது அதிக வெப்பத்தின் காரணமாக உருகிய நிலையில் காணப்படுகிறது. இதன் காரணமாக பூமியானது ஒரு காந்தத்தைப் போல செயல்படுகிறது.

Question 5.
காந்தத் தன்மையற்ற பொருள்களை எவ்வாறு அடையாளம் காண்பாய்? காந்தத் தன்மையற்ற பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
விடை :

  • காந்தத்தால் கவரப்படாத பொருட்களை காந்தத் தன்மையற்ற பொருள்கள் என்கிறோம்.
  • (எ.கா.) கண்ணாடி, மரம், நெகிழி, ரப்பர் போன்றன.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 7 காந்தவியல்

VI. விரிவாக விடையளி

Question 1.
காந்தத்தின் அன்றாட வாழ்வியல் பயன்களைப் பட்டியலிடுக.
விடை :

  • பழங்காலத்தில் கடலில் பயணம் செய்வோருக்கு திசையினை அறிவதற்கான ‘திசைக்காட்டும் கல்லாக’ காந்தம் உதவி இருக்கிறது.
  • மின்சார மணிகளிலும், மின் மோட்டார்களிலும், ஒலிப் பெருக்கிகளிலும், நுண்பேசிகளிலும் காந்தங்கள் பயன்படுகின்றன.
  • வங்கிகளில் கணினிகளைக் கொண்டு காசோலையில் அச்சடிக்கப்பட்ட MICR எண்களை அறிந்துக்கொள்ள பயன்படுகிறது.
  • தொழிற்சாலைகளில் காந்தப்பொருள்களோடு கலந்திருக்கும் காந்தம் அல்லாத கழிவுக் கூளப் பொருள்களைப் பிரித்தெடுக்கும் காந்த கடத்தும் பட்டையாகப் பயன்படுகிறது.
  • மருத்தவ மனைகளில் வலிமையான மின்காந்தங்களைப் பயன்படுத்தி MRI (காந்த ஒத்ததிர்வு நிழலுரு படம்) மூலம் குறிப்பிட்ட உள்ளுறுப்பின் நிழலுருக்களை உருவாக்கிட உதவுகிறது.

Question 2.
ஓர் ஆணியை எவ்வாறு தற்காலிக காந்தமாக மாற்றுவாய்?
விடை :
Samacheer Kalvi 8th Science Guide Chapter 7 காந்தவியல் 2

  1. குண்டூசிகளை மரத்தாலான பலகையினில் பரப்பிவைத்து அதனருகே இரும்பு ஆணியினைக் கொண்டு செல்லவும். அவை கவரப்படுவது இல்லை.
  2. சட்டக்காந்தத்தின் ஒரு முனையினால் ஆணியின் ஒரு முனையினைத் தொடவும்.
  3. மெதுவாக ஆணியின் மீது ஒரே திசையில் மறுமுனைவரை நகர்த்தவும்.
  4. படத்தில் காட்டியவாறு மீண்டும் இதே போன்று 20 அல்லது 30 முறை செய்யவேண்டும்.
  5. ஆணியின் மீது முன்னும் பின்னும் நகர்த்தாமல் ஒரே திசையில் நகர்த்த வேண்டும்.
  6. தற்போது குண்டூசிகளுக்கருகில் இரும்பு ஆணியினைக் கொண்டு செல்லவும்.
  7. இரும்பு ஆணி தற்காலிக காந்தமாக மாறுவதால் குண்டூசிகள் ஆணியின் மீது ஒட்டிக்கொள்கின்றன.

Question 3.
புவிக்காந்தம் பற்றி குறிப்பெழுதுக.
விடை :
Samacheer Kalvi 8th Science Guide Chapter 7 காந்தவியல் 3

  • புவியானது மிகப்பெரிய காந்த இருமுனையினைக் கொண்டதாக அறிவியல் அறிஞர்கள் கற்பனை செய்திருந்தனர்.
  • புவியின் உட்பகுதியில் உள்ள கற்பனையான காந்தத்தின் தென்முனையானது, புவியில் வடமுனைக்கருகிலும், புவிக்காந்தத்தில் வட முனையானது, புவியில் தென்முனைக்கருகிலும் அமைந்துள்ளது. இதே காந்தங்களின் துருவங்களை இணைக்கும் நேர்க்கோடானது காந்த அச்சு என்று அழைக்கப்படுகிறது.
  • காந்தத்தின் அச்சானது புவியில் வடமுனையினை சந்திக்கும் புள்ளியானது புவிகாந்த முனை அல்லது காந்த வடமுனை என்றழைக்கப்படுகிறது.
  • காந்தத்தின் அச்சானது புவியில் தென்முனையினை தென்முனை காந்தத் தென்முனை சந்திக்கும் புள்ளியானது புவிக்காந்த முனை அல்லது காந்த தென்முனை என்றழைக்கப்படுகிறது.
  • காந்த அச்சு மற்றும் புவியின் அச்சு ஒன்றுக்கொன்றாக இணையாக இருப்பதில்லை. புவியின் அச்சிற்கு 10° முதல் 15° வரை காந்த அச்சிற்கு சாய்வாக உள்ளது.
  • புவியின் காந்தத் தன்மைக்கு காரணங்கள்,
    • புவியில் உள்ள காந்தப்பொருட்களின் நிறை
    • சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சுகள்
    • நிலவின் செயல்திறன்.
  • புவியின் ஆரம் 6400 கிலோமீட்டருடன் ஒப்பிடும்போது, புவியின் உட்பரப்பில் சுமார் 3500 கி.மீ. வரை உள்ளகப் பகுதியில் உருகிய நிலையில் உலோகப் பாய்பொருள்கள் இருப்பதால் புவிகாந்தப்புலம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 7 காந்தவியல் 4

Samacheer Kalvi 8th Science Guide Chapter 7 காந்தவியல்

VII. உயர்சிந்தனை வினாக்கள்

Question 1.
பூமி மிகப்பெரிய காந்தம் போன்று செயல்பட்டாலும் பிற காந்தப்பொருள்களை பூமியால் கவரமுடியவில்லை ஏன்?
விடை :

  • புவியில் காந்தபுல மதிப்பு ஏறத்தாழ 2 x 10-5 டெஸ்லா ஆகும்.
  • இம்மதிப்பு மிகக் குறைவு என்பதால், பிற காந்தப் பொருள்களை பூமியால் கவரமுடியவில்லை

Question 2.
ஒரு இரும்புத் துண்டினை ஒரு காந்தத்தினைக் கொண்டு காந்தமாக்கும்போது முன்னும் பின்னும் நகர்த்த அறிவுறுத்தப்படுவதில்லை . ஏன்?
விடை :

  • ஒரு பொருளை (இரும்புத்துண்டு) காந்தமாக்க காந்தத்துடன் உரசினால் போதுமானது. அதை முன்னும் பின்னும் நகர்த்த தேவை இல்லை.
  • இரும்புத்துண்டினை, காந்தத்திற்கு அருகில் கொண்டு சென்று முன்னும் பின்னும் நகர்த்தினால், அதனோடு தொடர்புடைய காந்தப்பாயம் மாறுபட்டு மின்னியக்கு விசையானது தூண்டப்படும்.

Question 3.
தமிழ்தாரகா மற்றும் சங்கமித்திரை ஆகிய இருவரும் சட்டக் காந்தத்தினைக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது காந்தமானது கீழே விழுந்து நான்கு துண்டுகளானது. அவற்றில் எத்தனை காந்தத் துருவங்கள் கிடைக்கும்?
விடை :

  • எட்டு துருவங்கள் காணப்படும்.
  • ஒரு காந்தத்திற்கு இரு (வட-தென்) துருவங்கள் காணப்படும். எனவே நான்கு துண்டுகளுக்கு (காந்தம்) (4 x 2 = 8) எட்டு துருவங்கள் காணப்படும்.
    Samacheer Kalvi 8th Science Guide Chapter 7 காந்தவியல் 5

8th Science Guide காந்தவியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
எளிதாக சுழலும் வகையில் கிடைமட்டத் தளத்தில் மிகச்சிறிய காந்தம் ஒன்று அதன் மையத்தில் உள்ள தை …………………. என அழைக்கிறோம்.
அ) காந்த திசைகாட்டி
ஆ) காந்த ஊசி
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் ஒன்றுமில்லை
விடை:
இ) அ மற்றும் ஆ

Samacheer Kalvi 8th Science Guide Chapter 7 காந்தவியல்

Question 2.
பின்வருவனவற்றுள் எந்த காந்தங்கள் பூமியில் காணப்படும் வலிமையான திறன் மிகுந்த காந்தங்களாகும்.
அ) நியோடிமியம்
ஆ) சமாரியம்
இ) அல்நிக்கோ
ஈ) இவை அனைத்தும்
விடை:
அ) நியோடிமியம்

Question 3.
காந்தப் புல வலிமையின் எண்மதிப்பானது புவிப்பரப்பின் நெடுக்கத்தில் ………. இருக்கும்.
அ) 75 – 65 மைக்ரோ டெஸ்லா
ஆ) 50 – 75 மைக்ரோ டெஸ்லா
இ) 1 – 25 மைக்ரோ டெஸ்லா
ஈ) 25 – 65 மைக்ரோ டெஸ்லா
விடை:
ஈ) 25 – 65 மைக்ரோ டெஸ்லா

Question 4.
குளிர்பதனி காந்தமானது புவி காந்தத்தை விட ………… மடங்கு திறன் கொண்டதாகும்.
அ) 30
ஆ) 40
இ) 20
ஈ) 10
விடை :
இ) 20

Question 5.
ஒவ்வொரு துகளும் ஒரு அங்குல நீளத்தில் ……….. ஒரு பங்கு கொண்ட சிறிய சட்ட காந்தமாகும்.
அ) 30 மில்லியனில்
ஆ) 40 மில்லியனில்
இ) 20 மில்லியனில்
ஈ) 80 மில்லியனில்
விடை:
இ) 20 மில்லியனில்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
காந்தப் பண்புகளை விவரிக்கும் இயற்பியலின் பிரிவுக்கு …………….. என்று அழைக்கப்படுகிறது
விடை:
காந்தவியல்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 7 காந்தவியல்

Question 2.
சீனர்கள் காந்தத்தினை …………….. பயன்படுத்தி, எளிமையாக நீண்ட தூர கடல் பயணத்தினை செய்துள்ளனர்.
விடை:
திசைகாட்டியாக

Question 3.
மெக்லிவ் தொடர் வண்டியின் வேகம் தோராயமாக ……………… என்பதனை எட்டியுள்ளது.
விடை:
500 கிமீ./மணி

Question 4.
காந்தப் புலத்தினை ……………. உதவியுடன் வரைய முடியும்.
விடை:
காந்த ஊசி

Question 5.
மாக்ஸ்ட்ரைப் என்பது ………. துகள்களால் ஆன மெல்லிய நெகிழிப் படலம் ஆகும்.
விடை:
இரும்புக் காந்தத்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 7 காந்தவியல் 6

IV. கூற்று மற்றும் காரணம்

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி

Question 1.
கூற்று : மேக்னடைட் இருப்பின் ஒரு ஆக்ஸைடு தாது, அதன் வாய்ப்பாடு Fe3O4
காரணம் : மேக்னடைட் அதிகமான காந்தப் பண்பினைப் பெற்றுருக்கவில்லை.
விடை :
இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் தவறு

Samacheer Kalvi 8th Science Guide Chapter 7 காந்தவியல்

Question 2.
கூற்று : பொதுவாக இரும்பு அல்லது எஃகு உலோகக் கலவைகளை மின் முறையில் காந்தமாக்கி தயாரிக்கப்படுகின்றன.
காரணம் : மேலும் மேக்னடைட் அல்லது செயற்கைக் காந்தங்கள் கொண்டு காந்தப் பொருளை அடிக்கும்போது இவ்வகை காந்தங்கள் உருவாகின்றன.
விடை :
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி,
மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

V. சுருக்கமான விடையளி

Question 1.
செயற்கைக் காந்தங்களை உருவாக்கும் முறைகளில் ஒன்றினை எழுதுக.
விடை :

  • புறக்காந்தப்புலத்தால் ஒரு பொருளினை நிலையான அல்லது தற்காலிக காந்தமாக உருவாக்கும் முறையே காந்தமாக்கம் ஆகும்.
  • இது செயற்கைக் காந்தங்களை உருவாக்கும் முறைகளில் ஒன்றாகும்.

Question 2.
அல்நிக்கோ காந்தத்தின் பயன்களை எழுதுக.
விடை :

  • புல் மேயும்போது எடுத்துக்கொண்ட கூர்மையான இரும்புக்கம்பி மற்றும் பிற இரும்புப் பொருள்கள் செரிமானப் பகுதியில் சேதத்தினை உண்டாக்கும்.
  • அல்நிக்கோ எனப்படும் பசுக்காந்தம் இவற்றைக் கவர்ந்திழுத்து பாதுகாக்க பயன்படுகிறது.

Question 3.
காந்த ஏற்கும் பண்பு என்று எதை அழைக்கின்றன?
விடை :

  • புறாக்களுக்கு அசாதரணமான நீண்ட தூரம் பயணித்து திரும்பும் திறன் இருக்கிறது.
  • இதுவரை பார்க்காத பகுதிகளில் கொண்டு விட்டாலும் புவியின் காந்தப்புலத்தினை அறிந்திடும் மேக்னடைட் என்னும் காந்தப்பண்பு போதுமான அளவிற்கு அவற்றின் அலகுகளில் இருப்பதால் புவியின் காந்தப்புலத்தை அறியும் ஆற்றலைப் பெற்றுள்ளது.
  • அத்தகைய காந்த உணர்வினை காந்த ஏற்கும் பண்பு என்று அழைக்கப்படுகிறது.

Question 4.
காந்தம் அல்லாத பொருள்கள் என்று எதனை அழைக்கின்றனர். உதாரணம் தருக.
விடை :

  • காந்தத்தால் கவரப்படாத பொருள்களை காந்தம் அல்லாத பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • உதாரணம்: 1. மரங்கள் 2. பிளாஸ்டிக் 3. இரப்பர்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 7 காந்தவியல்

Question 5.
காந்தப்புலத்தில் வைக்கப்படும்போது அவை வெளிப்படுத்தும் பண்புகளை வைத்து அதன் வகைகளை எழுதுக.
விடை :

  • டயா காந்தப் பொருள்
  • பாரா காந்தப் பொருள்
  • ஃபெர்ரே காந்தப் பொருள்

VI. விரிவான விடையளி

Question 1.
டயா காந்தப் பொருள்கள் மற்றும் பாரா காந்தப் பொருட்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
விடை :
டயா காந்தப் பொருள் –

  1. சீரான காந்தப்புலத்தில் தொங்கவிடப்படும் போது அவை காந்தப்புலத்திற்கு செங்குத்தாக தங்களை சீரமைத்து வந்து நிற்கும்.
  2. இவை காந்தப்புலத்திற்கு எதிரான திசையில் காந்தமாகும்
  3. சீரற்ற காந்தப்புலத்தில் தொங்க விடப்படும் போது புலத்தை விட்டு விலகிச் செல்லும் அதாவது வலிமை மிகுந்த பகுதியிலிருந்து வலிமை குறைந்த பகுதியை நோக்கி செல்லும்.
  4. பிஸ்மத், தாமிரம், பாதரசம், தங்கம், நீர்
  5. வெப்பத்தினால் இவ்வகைப் பொருள்களின் காந்தப் பண்புகள் மாற்றமடைவதில்லை.

பாரா காந்தப் பொருள் –

  1. அவை காந்தப்புலத்திற்கு இணையாக தங்களை சீரமைத்து வந்து நிற்கும்
  2. இவை காந்தப்புலத்தில் திசையில் காந்தமாகும்
  3. சீரற்ற காந்தப்புலத்தில் தொங்கவிடப்படும் வலிமை குறைந்த பகுதியிலிருந்து வலிமை மிகுந்த பகுதியை நோக்கி நகரும்.
  4. அலுமினியம், பிளாட்டினம், குரோமியம்
  5. வெப்பத்தினால் இவ்வகைப் பொருள்களின் காந்தப் பண்புகள் மாற்றமடைகின்றன.

Question 2.
ஃபெர்ரோ காந்தப்பொருள்களின் பண்புகள் பற்றி விளக்குக.
விடை :

  • சீரான புறக் காந்தப்புலத்தில் தொங்கவிடப்படும் போது அவை காந்தப்புலத்திற்கு இணையாக தங்களை சீரமைத்து வந்து நிற்கும்.
  • சீரற்ற காந்தப்புலத்தில் தொங்கவிடப்படும் வலிமை குறைந்த பகுதியிலிருந்து வலிமை மிகுந்த பகுதியை நோக்கி விரைவாக நகரும்.
  • இவை காந்தப்புலத்தின் திசையில் வலிமையான காந்தமாகும்.
  • வெப்பத்தினால் இவ்வகை பொருள்களின் காந்தப் பண்புகள் மாற்றமடையும், மேலும் இவற்றை வெப்பப்படுத்தும் போது பாரா காந்தப் பொருள்களாக மாற்றமடையும்.
  • உதாரணம் : இரும்பு, கோபால்ட், நிக்கல், எஃகு மற்றும் அவற்றின் உலோகக் கலவை.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 19 விலங்குகளின் இயக்கம் Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 19 விலங்குகளின் இயக்கம்

8th Science Guide விலங்குகளின் இயக்கம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நமது உடலின் பின்வரும் பாகங்களுள் எவை இயக்கத்திற்கு உதவுகின்றன?
(i) எலும்புகள்
(ii) தோல்
(iii) தசைகள்
(iv) உறுப்புகள்
கீழே உள்ளவற்றிலிருந்து சரியான பதிலைத் தேர்வு செய்க.
அ) (i) மற்றும் (iii)
ஆ) (ii) மற்றும் (iv)
இ) (i) மற்றும் (iv)
ஈ) (iii) மற்றும் (ii)
விடை:
அ) (i) மற்றும் (iii)

Question 2.
பின்வரும் உயிரினங்களுள் எதில் இயக்கத்திற்குத் தேவையான தசைகள் மற்றும் எலும்புகள் காணப்படுவதில்லை?
அ) நாய்
ஆ) நத்தை
இ) மண்புழு
ஈ) மனிதர்
விடை:
இ) மண்புழு

Question 3.
………………………. மூட்டுகள் அசையாதவை.
அ) தோள்பட்டை மற்றும் கை
ஆ) முழங்கால் மற்றும் மூட்டு
இ) மேல் தாடை மற்றும் மண்டை ஓடு
ஈ) கீழ் தாடை மற்றும் மேல் தாடை
விடை:
இ) மேல் தாடை மற்றும் மண்டை ஓடு

Question 4.
நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்?
அ) தண்ணீ ரில் எளிதாக நீந்த
ஆ) ஒரு மீன் போல காணப்பட
இ) நீரின் மேற்பரப்பில் நடக்க
ஈ) கடலின் அடிப்பகுதியில் நடக்க (கடல் படுக்கை )
விடை:
அ) தண்ணீ ரில் எளிதாக நீந்த

Question 5.
உங்கள் வெளிப்புறக் காதினைத் (பின்னா ) தாங்குவது எது?
அ) எலும்பு
ஆ) குருத்தெலும்பு
இ) தசைநார்
ஈ) காப்ஸ்யூல்
விடை:
ஆ) குருத்தெலும்பு

Question 6.
கரப்பான் பூச்சி எதன் உதவியுடன் நகர்கிறது?
அ) கால்
ஆ) எலும்பு
இ) தசைக்கால்
ஈ) முழு உடல்
விடை:
அ) கால்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம்

Question 7.
முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?
அ) கழுத்தெலும்பு – 7
ஆ) மார்பெலும்பு – 10
இ) இடுப்பு எலும்பு – 4
ஈ) வால் எலும்பு – 4
விடை:
அ) கழுத்தெலும்பு – 7

Question 8.
…………………… என்பது சுருங்கி விரியும் திசுக்கற்றை
அ) எலும்பு
ஆ) எலும்புக்கூடு
இ) தசை
ஈ) மூட்டுகள்
விடை:
இ) தசை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உயிரினங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது ………………………….. எனப்படும்.
விடை:
இடம்பெயர்தல்

…………………………….. என்பது ஒரு உயிரினத்தின் உடல் பகுதியின் நிலையிலுள்ள மாற்றத்தைக் குறிக்கிறது.
விடை:
இயக்கம்

Question 3.
உடலுக்கு வலிமையான கட்டமைப்பை வழங்கும் அமைப்பு ………………………… எனப்படும்.
விடை:
எலும்பு மண்டலம்

Question 4.
மனிதனின் அச்சு எலும்புக்கூடு ………………………,………………………….,………………………… மற்றும் …………………………….. ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
விடை:
மண்டை ஓடு, முக எலும்புகள், ஸ்டெர்னம், முதுகெலும்புத் தொடர்

Question 5.
மனிதனின் இணைப்பு எலும்புக்கூடு …………………………… மற்றும் ………………………….. ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
விடை:
தோள்பட்டை எலும்புகள், விலா எலும்புகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம்

Question 6.
இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம் ………………………….. என அழைக்கப்படுகிறது.
விடை:
மூட்டு

Question 7.
அசையாத மூட்டு …………………………….. ல் காணப்படும்.
விடை:
மண்டை ஓடு

Question 8.
இரத்த நாளங்கள், கருவிழி, மூச்சுக்குழாய் மற்றும் தோல் போன்ற உடலின் மென்மையான பாகங்களுடன் ……………………….. இணைக்கப்பட்டுள்ளது
விடை:
மென்மையான
(அ) வரியற்ற தசைகள்

Question 9.
……………………….. தசை கண்பாவையை அகலமாக்குகிறது.
விடை:
ரேடியல்

III. சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறான கூற்றைத் திருத்துக

Question 1.
மனிதர்களின் மண்டை ஓடு 22 எலும்புகளைக் கொண்டுள்ளது.
விடை:
சரி

Question 2.
மனித முதுகுத்தண்டில் 30 முதுகெலும்புகள் உள்ளன.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம்

Question 3.
மனித உடலில் 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன.
விடை:
சரி

Question 4.
இடுப்பு என்பது அச்சு எலும்புக்கூட்டின் ஒரு பகுதியாகும்.
விடை:
தவறு.
இடுப்பு என்பது இணையுறுப்பு எலும்புக்கூட்டின் ஒரு பகுதியாகும்

Question 5.
கீல் மூட்டு சற்று நகரக்கூடிய மூட்டு.
விடை:
தவறு.
கீழ் மூட்டு என்பது அசையும் மூட்டிற்கு எடுத்துக்காட்டாகும்.

Question 6.
இதயத் தசை ஒரு இயக்கு தசை.
விடை:
தவறு.
இதயத் தசைகள் ஒரு தன்னிச்சையற்ற இயக்குத்தசையாகும்

Question 7.
கையில் காணப்படும் வளைதசைகளும் நீள்தசைகளும் எதிரெதிர் தசைகளாகும்.
விடை:
சரி

IV. மிகச்சுருக்கமாக விடையளி

Question 1.
எலும்புக்கூடு என்றால் என்ன?
விடை:

  • எலும்பு மண்டலம் மனித உடலுக்கு கடினத்தன்மை அல்லது கட்டமைப்பை வழங்குகிறது.
  • இது மனித உடலைத் தாங்கி அதற்கு பாதுகாப்பளிக்கிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம்

Question 2.
கிரானியம் என்றால் என்ன?
விடை:

  • மண்டையோட்டின் ஒரு சிறிய பகுதி மூளையை பாதுகாக்கிறது. இது கிரானியம் எனப்படும்.
  • இவை மண்டையோட்டின் 8 எலும்புகள் இணைவதால் உருவாகிறது.

Question 3.
நமது முதுகெலும்பு ஏன் சற்று நகரக்கூடியது?
விடை:
இவ்வகை எலும்புகளில், இரண்டு எலும்புகளுக்கு இடையில் மிகக்குறைந்த இயக்கம் மட்டுமே நிகழ்கிறது. எனவே இவை சற்று நகரக்கூடிய மூட்டிற்கு எடுத்துக்காட்டாகும்.

Question 4.
அச்சு மற்றும் இணைப்பு எலும்புக்கூட்டை வேறுபடுத்துக.
விடை:

அச்சு எலும்புக்கூடுஇணையுறுப்பு எலும்புக்கூடு
1. மனித உடலின் அச்சு அல்லது மையக்கோட்டில் அமைந்துள்ளது.இவை உடலின் இணையுறுப்புகளிலுள்ள எலும்புகளையும் இணை உறுப்புகளை அச்சு எலும்பு கூட்டுடன் இணைக்கிறது.
2. இவை மண்டையோடு, முக எலும்புகள், ஸ்டெர்னம், விலா எலும்புகள் மற்றும் முதுகெலும்புத் தொடர் ஆகியவற்றைக்கொண்டுள்ளன.இவை தோள்பட்டை எலும்பு, கை, மணிக்கட்டு, கை எலும்புகள், இடுப்பு, கால், கணுக்கால் மற்றும் கால் எலும்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Question 5.
தசைநார் என்றால் என்ன?
விடை:
திசுக்களை எலும்புடன் இணைக்கக்கூடிய, விரைப்புத்தன்மையுடைய நார் போன்ற கடினமான பட்டைத்திசு.

Question 6.
தசை – வரையறு.
விடை:

  • அனைத்து இயக்கங்களுக்கும் உடலில் உள்ள தசைகள் வழிவகை செய்கின்றன.
  • இவை எலும்பு மண்டலத்தை மூடியிருப்பதோடு உடலுக்கு வடிவத்தையும் தருகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம்

Question 7.
தசைநாண் மற்றும் தசைநார் ஆகியவற்றை வேறுபடுத்துக.
விடை:

தசைநாண்தசைநார்
1. மூட்டுகளின் இயக்கத்திற்கு உதவும் வகையில் அவற்றைச் சுற்றியுள்ள கடினமான, பட்டை போன்ற திசுக்கள்.திசுக்களை எலும்புடன் இணைக்கக் கூடிய விரைப்புத்தன்மை கொண்ட திசு.
2. மீள்தன்மை கொண்டது.மீள்தன்மையற்றது.

V. சுருக்கமாக விடையளி

Question 1.
பின்வருவனவற்றினை வேறுபடுத்துக.
அ) இயக்கம் மற்றும் இடம்பெயர்தல்.
விடை:

இயக்கம்இடம்பெயர்தல்
1.  உடலின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளால் இடம் அல்லது நிலையை மாற்றும் செயல்.ஓர் உயிரினம் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது ஆகும்.
2.  இது தன்னிச்சையானதாகவோ அல்லது தன்னிச்சையற்றதாகவோ இருக்கலாம்.தன்னிச்சையாக நடைபெறக்கூடியது.

ஆ) புற எலும்பு மண்டலம் மற்றும் அக எலும்பு மண்டலம்
விடை:

புற எலும்பு மண்டலம்அக எலும்பு மண்டலம்
1. இது உடலின் வெளிப்புற அடுக்கில் காணப்படும் எலும்புக்கூடு ஆகும்.இது மனித உடலுக்குள் காணப்படும் எலும்புக்கூடு ஆகும்.
2. வளரும் கருவின் புறப்படை மற்றும் இடைப்படை அடுக்கிலிருந்து இது உருவாகிறது.இது இடைப்படையிலிருந்து உருவாகிறது.

இ) தோள்பட்டை வளையம் மற்றும் இடுப்பு வளையம்
விடை:

தோள்பட்டை வளையம்இடுப்பு வளையம்
1. இது பெக்டோரல் வளையம் என்று அழைக்கப்படுகிறது.இது பெல்விக் வளையம் என்று அழைக்கப்படுகிறது.
2. முன்பக்கத்தில் காலர் எலும்பாலும் பின்புறத்தில் தோள்பட்டை சுத்தியாலும் உருவானது.இது பின்புறத்தில் ஐந்து இணைந்த முதுகெலும்புகளால் ஆனது.

ஈ) பந்து கிண்ண மூட்டு மற்றும் கீல் மூட்டு
விடை:

பந்து கிண்ண மூட்டுகீல் மூட்டு
1. பந்து முனை போன்ற எலும்பின் தலைப்பகுதி அருகிலுள்ள கிண்ணம் போன்ற எலும்புடன் இணைந்து காணப்படும்.உருளை வடிவ எலும்பின் புடைப்பு அருகிலுள்ள எலும்பின் குழிப்பகுதியில் இணைந்துள்ளது.
2. எ.கா. தோள்பட்டை , இடுப்புஎ.கா. முழங்கை , முழங்கால், கணுக்கால்

உ) தன்னிச்சையான மற்றும் தன்னிச்சையற்ற தசை
விடை:

தன்னிச்சையான தசைதன்னிச்சையற்ற தசை
1. கிளைகளற்றவை, பல உட்கருக்களைக் கொண்டது.கிளைகளற்றது, ஒற்றை மையக்கரு கொண்டது.
2. கைகள், கால்கள், கழுத்து ஆகிய இடங்களில் காணப்படுகிறது.இரத்த நாளங்கள், கருவிழி, மூச்சுக்குழாய் மற்றும் தோல் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம்

Question 2.
எதிரெதிர் தசைகள் என்றால் என்ன? ஒரு உதாரணம் கொடு.
விடை:

  • தசைகள் பெரும்பாலும் ஜோடியாக ஒன்றுக்கொன்று எதிராக வேலை செய்கின்றன. இவை எதிரெதிர் ஜோடிகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • மேல் கையில், இருதலைத்தசை மற்றும் முத்தலைத்தசை எனப்படும் இரண்டு தசைகள் ஒன்றுக்கொன்று எதிராக செயல்படுகின்றன.
  • இருதலைத்தசை சுருங்கும்போது கையின் கீழ்பகுதி உயர்ந்து, கை வளைகிறது.
  • இந்த நிலையில் முத்தலைத்தசை தளர்த்தப்படுகிறது.
  • கை நேராவதற்கு, இச்செயல் தலை கீழாக நடைபெறுகிறது.
  • முத்தலைத்தசை சுருங்கி கையை நேராக்குகிறது. அதே நேரத்தில் இருதலைத்தசை தளர்த்தப்படுகிறது.

Question 3.
பறவையின் எலும்புக்கூடு எவ்வாறு பறப்பதற்கு ஏற்றதாக உள்ளது?
விடை:

  • பறவைகளில் சீரான உடல் அமைப்பு காணப்படுகிறது.
  • இதன் எலும்புகள் எடை குறைந்தும், வலுவுடனும் காணப்படுகிறது.
  • எலும்புகள் உள்ளீடற்றும், காற்று இடைவெளிகளைக் கொண்டும் காணப்படுகின்றன.
  • இறக்கைகளை மேலும் கீழும் அசைப்பதற்கு உதவக்கூடிய பெரிய தசைகளைக் கொண்டிருக்கும் வகையில், மார்பெலும்புகள் மாற்றமடைந்துள்ளன.

Question 4.
மனித உடலில் எலும்புக்கூட்டின் செயல்பாடுகள் யாவை?
விடை:
எலும்புக்கூட்டின் செயல்பாடுகள்:
எலும்பு மண்டலம் மனித உடலில் ஐந்து முக்கியப் பணிகளைப் புரிகிறது.

  • இது உடலுக்கு அமைப்பு மற்றும் வடிவத்தை வழங்குகிறது.
  • உடலின் உள்ளுறுப்புகளைத் தாங்கி அவற்றைச் சூழ்ந்து காணப்படுகிறது.
  • உடலைச் சீரமைக்கும் செயல்பாடுகளுக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய இரண்டு முக்கியமான தாதுக்கள் எலும்புகளுக்குள் சேமிக்கப்படுகின்றன.
  • எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகின்றன.
  • எலும்பு மண்டலத்தின் எலும்புகள் தசைகளின் செயல்பாட்டிற்கு நெம்புகோல் போல் செயல்படுகின்றன.

VI. விரிவாக விடையளி

Question 1.
மூட்டுகளின் வகைகளைக் கூறுக. ஒவ்வொரு வகைக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.
விடை:
இரண்டு தனித்தனி எலும்புகள் சந்திக்கும் இடம் மூட்டு என்று அழைக்கப்படுகிறது. அசைக்கக்கூடிய தன்மையின் அடிப்படையில் மூட்டுக்களில் மூன்று வகைகள் உள்ளன. அவையாவன: நிலையானவை, சற்று நகரக்கூடியவை மற்றும் நகரக்கூடியவை.

நிலையான, அசையாத மூட்டுகள்:
இந்த வகை மூட்டுகளில் இரண்டு எலும்புகளுக்கு இடையில் எந்த ஒரு இயக்கமும் காணப்படாது. மண்டையோட்டின் எலும்புகளுக்கு இடையிலான கட்டமைப்புகள் அசையாத மூட்டுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

சற்று நகரக்கூடிய மூட்டுகள்:
இவ்வகை மூட்டுகளில், இரண்டு எலும்புகளுக்கு இடையில் மிகக் குறைந்த (பகுதி) இயக்கம் மட்டுமே நிகழ்கிறது. ஒரு விலா எலும்புக்கும் மார்பக எலும்புக்கும் இடையில் அல்லது முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள மூட்டு, சற்று நகரக் கூடிய மூட்டிற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

நகரக்கூடிய மூட்டுகள்:
இரண்டு எலும்புகள் இணைந்து மூட்டுகளை உருவாக்கும். இந்த வகையில், பல்வேறு வகையான அசைவுகள் நடைபெறுகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம்

Question 2.
மனித அச்சு எலும்புக்கூட்டைப் பற்றி எழுதுக. அதன் படம் வரைந்து பாகங்களைக் குறி.
விடை:
அச்சு எலும்புக்கூடு :
மனித உடலின் அச்சு அல்லது மையக்கோட்டில் அமைந்துள்ள எலும்புகளை அச்சு எலும்புக்கூடு கொண்டுள்ளது. அச்சு எலும்புக்கூட்டில் மண்டை ஓடு, முக எலும்புகள், ஸ்டெர்னம் (மார்பக எலும்பு), விலா எலும்புகள் மற்றும் முதுகெலும்புத் தொடர் ஆகியவை உள்ளன.

அ. மண்டை ஓடு:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம் 1

  • மண்டை ஓடு என்பது சிறிய எலும்புகளால் ஆன கடினமான அமைப்பு ஆகும்.
  • இது 22 எலும்புகளால் ஆனது.
  • அதில் 8 எலும்புகள் ஒன்றாக இணைவதால் கிரேனியம் உருவாகிறது.
  • மேலும் 14 எலும்புகள் இணைந்து முகத்தினை உருவாக்குகின்றன.
  • அசையும் மூட்டு கொண்ட ஒரே எலும்பு கீழ்த்தாடை எலும்பாகும்.
  • இந்த நகரக்கூடிய மூட்டு, தசைகள் மற்றும் தசைநார்களால் தாங்கப்படுகிறது.
  • முதுகெலும்பின் மேற்புறத்தில் வைக்கப்பட்டுள்ள மண்டை ஓட்டை மேலும், கீழும் மற்றும் பக்கவாட்டிலும் நகர்த்தலாம்.

ஆ. முள்ளெலும்புத் தொடர்:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம் 2

  • உடலின் பின்புறத்தில் நீண்டிருக்கும் முள்ளெலும்புத் தொடர் முதுகுத்தண்டு அல்லது முதுகெலும்பு என்று அழைக்கப்படுகிறது.
  • உடலின் மேல் பகுதியினைத் தாங்குகின்ற தண்டுப் பகுதியாக இது உள்ளது.
  • முள்ளெலும்புத் தொடர் முதுகு எலும்புகள் எனப்படும் தனிப்பட்ட எலும்புகளால் ஆனது.
  • முள்ளெலும்புத் தொடரில் 7 கழுத்து எலும்புகள், 12 மார்பு எலும்புகள், 5 இடுப்பு எலும்புகள், 3 வால் மற்றும் திருகெலும்புகள் ஆகிய எலும்புகள் அடங்கியுள்ளன.
  • முள்ளெலும்புத் தொடர் மண்டை ஓட்டின் அடிப்பகுதியிலிருந்து இடுப்பு எலும்பு வரை சென்று திருவெலும்பு ஒரு குழாய் போன்ற அமைப்பை உருவாக்குகிறது.
  • இந்த குழாயின் உள்ளே முதுகுத்தண்டு செல்கிறது.
  • முள்ளெலும்புகள் வழுக்கு மூட்டுக்களால் இணைக்கப்பட்டுள்ளன.
  • அவை உடலை முன்னும், பின்னும் மற்றும் பக்கவாட்டிலும் வளைக்க உதவுகின்றன.

இ. மார்பெலும்பு அல்லது விலா எலும்பு:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம் 3

  • விலா எலும்பு மார்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
  • இது 12 ஜோடி விலா எலும்புகளைக் கொண்ட கூம்பு வடிவ அமைப்பாகக் காணப்படுகின்றது.
  • விலா எலும்புகள் பின்புறத்தில் உள்ள முதுகெலும்புகளுடன் இணைக்கப்பட்டு ஒரு கூண்டு போன்ற அமைப்பாகக் காணப்படுகின்றன.
  • முன்புறத்தில் 10 ஜோடி விலா எலும்புகள் மார்பக எலும்புடன் இணைக்கப்பட்டுள்ளன.
  • 2 ஜோடி விலா எலும்புகள் தனித்துக் காணப்படுகின்றன.

Question 3.
முதுகெலும்புகளின் கட்டமைப்பை விவரிக்கவும்
விடை:

  • ஓர் முள்ளெலும்பின் முக்கிய, எடைதாங்கும் பகுதி சென்டிரம் (centrum) எனும் மையப்பகுதியாகும்.
  • அடுத்தடுத்த இரு முள்ளெலும்புகளின் மையப்பகுதியின் இடையில் குருத்தெலும்பு இடைத்தட்டுகள் உண்டு.
  • ஓர் முள் எலும்பின் மையப்பகுதியின் மேல்புறத்தில் ஓர் முள்ளெலும்பு வளைவு உண்டு.
  • இவ்வளவு ஓர் நரம்புக் கால்வாயைச் சூழ்ந்துள்ளது.
  • இக்கால்வாயில் தண்டுவடம் உள்ளது.
  • முள்ளெலும்பு வளைவில் பல எலும்பு நீட்சிகள் உண்டு.
  • மையப்பகுதியின் இருபுறங்களிலும் இருபக்க நீட்சிகள் உள்ளன.
  • மேல் புறத்தில் ஓர் நீயூரல் முள் உண்டு.
  • இந்நீட்சிகள் தசைகள் இணைவதற்கு இடமளிக்கின்றன.
  • மேலும் முன், பின் முள்ளெலும்புகளுடன் பொருந்தும் வகையில் இருமேல், இருகீழ் நீட்சிகளுள்ளன.

Question 4.
கூர்மையான உடல் என்றால் என்ன? தண்ணீரில் பறக்கும் அல்லது நீந்தக்கூடிய விலங்குகளின் இயக்கத்திற்கு இது எவ்வாறு உதவுகிறது?
விடை:
மீன்கள் கூர்மையான உடல் அமைப்பைப் பெற்றுள்ளன. எனவே, அவற்றால் நீரின் ஓட்டத்துடன் சீராகச் செல்ல முடிகிறது. உடல் மற்றும் வாலில் உள்ள தசைகள் மற்றும் செதில்கள் சமநிலையைப் பேணுவதற்கு அவற்றிற்கு உதவுகின்றன.

மிதந்து ஊர்தல்:
மிதந்து ஊர்தலின் போது பறவையின் இறக்கைகள் மற்றும் வால் விரிந்து காணப்படுகிறது. இந்த அசைவில், காற்றின் உதவியுடன் பறவைகள் மேலும் கீழும் செல்கின்றன.

மீன்:

  • மீன்கள் துடுப்புகளின் உதவியுடன் நீந்துகின்றன.
  • இவை இரண்டு இணையான துடுப்புகளையும், ஒரு இணையற்ற துடுப்பையும் கொண்டுள்ளன.
  • நீரில் தடையின்றி நீந்தும் வகையில் இதன் உடல் நீண்டு, படகு போல் கூர்மையாகக் காணப்படுகின்றது.
  • வலுவான தசைகள் நீந்த உதவுகின்றன.
  • மீன்கள் நீந்தும்போது அதன் முன்பகுதி ஒரு புறம் வளைந்தும், வால்பகுதி அதற்கு எதிர்த்திசையிலும் காணப்படும்.
  • அடுத்த நகர்வில் முன்பகுதி எதிர்ப்பக்கமாக வளைகிறது.
  • வால்பகுதியும் வேறொரு திசையை நோக்கி நகர்கிறது. ‘காடல்’ வால் துடுப்பு திசையை மாற்ற உதவுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம்

Question 5.
உயிரினங்களில் காணப்படும் பல்வேறு வகையான இயக்கங்களைப் பற்றி எழுதுக.
விடை:
மண்புழு:

  • மண்புழுவின் உடல், ஒன்றுடன் ஒன்று இணக்கப்பட்ட பல வளையங்களால் ஆனது.
  • நீள்வதற்கும் சுருங்குவதற்கும் தேவையான தசைகளை இது கொண்டுள்ளது.
  • அதன் உடலின் அடிப்பகுதியில், தசைகளுடன் இணைக்கப்பட்ட சீட்டே எனப்படும் ஏராளமான நீட்சிகள் உள்ளன.
  • இந்த நீட்சிகள் தரையைப் பற்றிக்கொள்ள உதவுகின்றன.
  • இயக்கத்தின் போது மண்புழு முதலில் உடலின் முன்பகுதியை விரிவடையச் செய்து, பின்பகுதியை தரையில் நிலை பெறச்செய்கிறது.
  • அதன்பிறகு முன்பகுதியை நிலை பெறச்செய்து பின்பகுதியை தளர்வடையச் செய்கிறது.
  • பின்னர் உடலின் நீளத்தைக் குறைத்து பின்பகுதியை முன்னோக்கி இழுக்கிறது. இவ்வாறு சிறுசிறு தூரம் முன்னோக்கிச் செல்கிறது.
  • இத்தகைய தசைச் சுருக்கம் மற்றும் தளர்வுகளை மீண்டும் மீண்டும் நிகழ்த்தி மண்புழு மண்ணின் மீது நகர்ந்து செல்கிறது.
  • உடலில் சுரக்கும் ஒரு பிசுபிசுப்பான திரவம் இந்த இயக்கத்திற்கு உதவுகிறது.

கரப்பான் பூச்சி:

  • கரப்பான் பூச்சியில் மூன்று ஜோடி இணைந்த கால்கள் உள்ளன. அவை நடக்கவும், ஓடவும் மற்றும் மேலே ஏறவும் உதவுகின்றன.
  • இது பறப்பதற்கு இரண்டு ஜோடி இறக்கைகளைக் கொண்டுள்ளது.
  • கால்களின் இயக்கத்திற்கு பெரிய மற்றும் வலுவான தசைகள் உதவுகின்றன.
  • கைட்டின் எனப்படும் ஒளிப் பாதுகாப்புப் பொருளால் உடல் முழுவதும் மூடப்பட்டுள்ளது.
  • உடலின் சீரான வளர்ச்சிக்கு உதவும் வகையில், கைட்டின் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உரிகின்றது.

பறவைகள்:

  • பறவைகளால் தரையில் நடக்கவும், பறக்கவும் முடியும். சில பறவைகளால் நீரில் நீந்தவும் முடியும்.
  • பறவைகளில் சீரான உடல் அமைப்பு காணப்படுகிறது.
  • இதன் எலும்புகள் எடை குறைந்தும், வலுவுடனும் காணப்படுகின்றன.
  • எலும்புகள் உள்ளீடற்றும், காற்று இடைவெளிகளைக் கொண்டும் காணப்படுகின்றன.
  • பறவைகளின் பின்னங்கால்கள் நகங்களாக மாறியுள்ளன.
  • அவை பறவைகள் நடக்கவும் அமரவும் பயன்படுகின்றன.
  • இறக்கைகளை மேலும் கீழும் அசைப்பதற்கு உதவக்கூடிய பெரிய தசைகளைக் கொண்டிருக்கும் வகையில், மார்பெலும்புகள் மாற்றமடைந்துள்ளன.
  • பறவைகள் பறப்பதற்கேற்ற சிறப்பான தசைகளைக் கொண்டுள்ளன.
  • மேலும், முன்னங்கால்கள் சிறகுகளாக மாற்றமடைந்துள்ளன.
  • பறப்பதற்கு உதவக்கூடிய நீண்ட இறகுகளை வால் மற்றும் செட்டைகள் கொண்டுள்ளன.

Question 6.
பல்வேறு வகையான தசைகள் குறித்து சிறு குறிப்பு எழுதுக.
விடை:
தசைகளின் வகைகள்:
1. வரித்தசை அல்லது எலும்புத்தசை அல்லது தன்னிச்சையான தசைகள்.
2. வரியற்ற அல்லது மென்மையான அல்லது தன்னிச்சையற்ற தசைகள்
3. இதயத் தசைகள்
Samacheer Kalvi 8th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம் 4
மனித உடலில் காணப்படும் வெவ்வேறு வகையான தசைகள்

தசைஅமைவிடம்பண்புகள்
வரித்தசை, எலும்புத்தசைஎலும்புகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.பல உட்கருக்களைக் கொண்டுள்ளது.
தன்னிச்சையான தசைகைகள், கால்கள், கழுத்து ஆகிய இடங்களில் காணப்படுகிறது.கிளைகளற்றவை, தன்னிச்சையானவை.
வரியற்ற/ மென்மையான/ தன்னிச்சையற்ற தசைஇரத்த நாளங்கள், கருவிழி, மூச்சுக்குழாய் மற்றும் தோல் போன்ற உடலின் மென்மையான பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.ஒற்றை மையக்கரு,தன்னிச்சையற்றது
இதயத் தசைஇதயம்கிளைகளுடையது. 1-3 மைய உட்கரு, தன்னிச்சையற்றது.

8th Science Guide விலங்குகளின் இயக்கம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
கரப்பான் பூச்சியின் வெளிப்பகுதி எதனால் சூழப்பட்டுள்ளது?
அ) கைட்டின்
ஆ) லெசிதின்
இ) பெக்டின்
ஈ) மான்டில்
விடை:
அ) கைட்டின்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம்

Question 2.
புறத்தோலில் உள்ள ரோமம் போன்ற நீட்சிகளால் ஏற்படும் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ) சிலியரி இயக்கம்
ஆ) தசைகளின் இயக்கம்
இ) அமீபாய்டு இயக்கம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
அ) சிலியரி இயக்கம்

Question 3.
மனித எலும்புக் கூட்டின் மிக நீளமான மற்றும் வலிமையான எலும்பு எது?
அ) டிபியா
ஆ) ஃபிபுலா
இ) பீமர்
ஈ) அல்னா
விடை:
இ) பீமர்

Question 4.
கால் மூட்டின் தொப்பி போன்ற அமைப்பு போல் காணப்படும் எலும்பு எது?
அ) டிபியா
ஆ) பட்டெல்லா
இ) ஃபிபுலா
ஈ) டார்சல்கள்
விடை:
ஆ) பட்டெல்லா

Question 5.
எலும்புடன் தசையை இணைக்கும் திசுக்களின் இழை நாண்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) டெண்டான்
ஆ) கேப்சுயூல்
இ) குறுத்தெலும்பு
ஈ) லிகமெண்ட்
விடை:
ஈ) லிகமெண்ட்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
பறவைகளில் …………………………. சிறகுகளாக மாற்றமடைந்துள்ளன.
விடை:
முன்னங்கால்கள்

Question 2.
மீன்களில் ………………………… திசையை மாற்ற உதவுகிறது.
விடை:
காடல் வால்துடுப்பு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம்

Question 3.
பாம்பு நகரும்போது அதன் பக்கங்களில் பல வளைவுகளை உருவாக்குகிறது. இது ………………….. இயக்கம் என்றழைக்கப்படுகிறது.
விடை:
சறுக்கு

Question 4.
………………………… என்பது பொதுவாக குறுத்தெலும்பில் ஏற்படும் உராய்வின் காரணமாகவோ அல்லது மூட்டுகளில் சினோவியல் திரவம் இல்லாததாலோ ஏற்படுகிறது.
விடை:
மூட்டுகளின் அழற்சி

Question 5.
……………………… படிகங்கள் படிவதால் மூட்டுவீக்கம் ஏற்படுகிறது.
விடை:
யூரிக் அமில

III. சரியா? அல்லது தவறா? தவறு எனில் சரியான விடையைத் தருக

Question 1.
நடத்தல் என்பது ஒரு தன்னிச்சையற்ற இயக்கமாகும். மேலும் சுவாசித்தல் என்பது தன்னிச்சையான இயக்கமாகும்.
விடை:
தவறு.
நடத்தல் என்பது ஒரு தன்னிச்சையான இயக்கமாகும். மேலும் சுவாசித்தல் என்பது ஒரு தன்னிச்சையற்ற இயக்கமாகும்.

Question 2.
பாம்புகளுக்கு கால்கள் கிடையாது. நகர்வதற்கு அவை தங்களது தசை மற்றும் செதில்களை பயன்படுத்துகின்றன.
விடை:
சரி

Question 3.
நிணநீர் மண்டலத்திலுள்ள செல்கள் அமீபாய்டு இயக்கத்தினைக் கொண்டது ஆகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம்

Question 4.
வெளிப்புற காது மற்றும் மூக்கின் நுனிப்பகுதி ஆகியவை குறுத்தெலும்பால் ஆனவை.
விடை:
சரி

Question 5.
வழுக்கு மூட்டுகளில் மூன்று கோணங்களில் அசைவு நடைபெறுகிறது.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம் 5

V. மிகச்சுருக்கமாக விடையளி

Question 1.
விலங்குகளில் காணப்படும் பல்வேறு இடப்பெயர்ச்சி உறுப்புகளின் பெயர்களைத் தருக.
விடை:

  • கை – கால்கள்
  • இறக்கைகள்
  • ஃபிளாஜெல்லா மற்றும் சிலியாக்கள்

Question 2.
பறவைகளில் காணப்படும் இரண்டு வகை அசைவு எது?
விடை:

  1. மிதந்து ஊர்தல்
  2. கீழ்நோக்கிய அசைவு

Question 3.
மனித உடலில் காணப்படும் பல்வேறு இயக்கங்கள் யாவை?
விடை:

  • கண் இமைகளின் இயக்கம்
  • இதயத் தசைகளின் இயக்கம்
  • பற்கள் மற்றும் தாடைகளின் இயக்கம்
  • கைகள் மற்றும் கால்களின் இயக்கம்
  • தலையின் இயக்கம்
  • கழுத்தின் இயக்கம்

Question 4.
அமீபாய்டு இயக்கம் என்றால் என்ன?
விடை:

  • இவ்வகை இயக்கம் போலிக்கால்களால் நடைபெறுகிறது.
  • செல்லில் உள்ள புரோட்டாபிளாசம் நகரும்போது இவையும் சேர்ந்து இயக்கத்தை ஏற்படுத்துகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம்

Question 5.
அசையும் மூட்டுகளின் பெயர்களை வரிசைப்படுத்துக.
விடை:

  • பந்துக் கிண்ண மூட்டு
  • கீழ் மூட்டு
  • முளை அச்சு மூட்டு அல்லது சுழலச்சு மூட்டு
  • முண்டணையா மூட்டு
  • வழுக்கு மூட்டு
  • சேண மூட்டு

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
மீன் நீந்துவதற்கு அவற்றின் தசைகள் எவ்வாறு உதவுகின்றன என்பதனை கூறுக.
விடை:

  • மீன்கள் துடுப்புகளின் உதவியுடன் நீந்துகின்றன.
  • இவை இரண்டு இணையான துடுப்புகளையும், ஒரு இணையற்ற துடுப்பையும் கொண்டுள்ளன.
  • நீரில் தடையின்றி நீந்தும் வகையில் இதன் உடல் நீண்டு, படகு போல் கூர்மையாகக் காணப்படுகின்றது.
  • வலுவான தசைகள் நீந்த உதவுகின்றன. மீன்கள் நீந்தும்போது அதன் முன்பகுதி ஒரு புறம் வளைந்தும், வால்பகுதி அதற்கு எதிர்த்திசையிலும் காணப்படும்.
  • அடுத்த நகர்வில் முன்பகுதி எதிர்ப்பக்கமாக வளைகிறது.
  • வால்பகுதியும் வேறொரு திசையை நோக்கி நகர்கிறது.
  • ‘காடல்’ வால் துடுப்பு திசையை மாற்ற உதவுகிறது.

Question 2.
சினோவியல் மூட்டின் அமைப்பை படம் வரைந்து பாகங்களை குறி.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம் 6

Question 3.
மனித எலும்புக்கூட்டின் வகைகளின் அட்டவணையை வரைக
விடை:

Question 4.
சிலியரி இயக்கம் மற்றும் தசைகளின் இயக்கத்தினை வேறுபடுத்துக.
விடை:

சிலியரி இயக்கம்தசைகளின் இயக்கம்
1. புறத்தோலில் உள்ள ரோமம் போன்ற நீட்சிகளாகிய சிலியாக்கள் எனப்படும் இணை உறுப்புகள் மூலம் நடைபெறுகிறது.இது, எலும்புத்தசை மண்டலத்தைக் கொண்டு நடைபெறுகிறது.
2. இது நிணநீர் மண்டல செல்களில் நடைபெறுகின்றன.இது மேம்பாடடைந்த பாலூட்டிகளில் சாதாரணமாக காணப்படுகிறது.
3. பாராமீசியகத்தின் இடப்பெயர்ச்சி.மனிதர்களில் நடைபெறும் சுவாசம், நடத்தல், எழுதுதல் போன்றவை.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம்

Question 5.
மனித முள்ளெலும்புத் தொடரின் செயல்பாடுகளை எழுதுக.
விடை:

  • தண்டுவடத்தைப் பாதுகாக்கிறது.
  • தலைப் பகுதியைத் தாங்குகிறது.
  • விலா எலும்புகளுக்கான இணைப்பாக செயல்படுகிறது.
  • மார்பு மற்றும் இடுப்பு வளையங்கள் இணையும் இடமாகச் செயல்பட்டு அவற்றிற்கு உறுதியளிக்கிறது.
  • மனித எலும்புக்கூட்டிற்கு அசைவை அளிக்கிறது.
  • நடக்கவும், சரியான தோரணையில் நிமிர்ந்து நிற்கவும் உதவுகிறது.

VII. விரிவாக விடையளி

Question 1.
அசையும் மூட்டுகளின் வகைகள், எடுத்துக்காட்டுகள், விளக்கம் மற்றும் அவற்றின் அசையும் தன்மையை அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம் 8
Samacheer Kalvi 8th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம் 9

Question 2.
தோள்பட்டை எலும்பு மற்றும் இடுப்பு எலும்பினைப் பற்றி விளக்குக.
விடை:
அ) தோள்பட்டை எலும்பு / பெக்டோரல் எலும்பு:

  • தோள்பட்டை எலும்பு முன்பக்கத்தில் காலர் எலும்பாலும், பின்புறத்தில் தோள்பட்டை சுத்தியாலும் உருவானது.
  • காலர் எலும்பினை ஒரு முனையில் மார்பக எலும்பும், மறுமுனையில் தோள்பட்டை சுத்தியும் தாங்குகின்றன.
  • தோள்பட்டை எலும்பு, குழி போன்ற ஒரு சாக்கெட்டை உள்ளடக்கியுள்ளது.
  • அது மேல் கையின் பந்துப்பகுதியை இணைக்கிறது.
  • இது பந்து மற்றும் சாக்கெட் கூட்டை உருவாக்குகிறது.
  • இந்த வளையம் பெக்டோரல் வளையம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆ) இடுப்பு எலும்பு:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம் 10

  • இடுப்பு எலும்பு பெல்விக் வளையம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது உடலின் முழு எடையையும் தாங்குவதற்கேற்ற வலுவான எலும்புகளால் ஆனது.
  • இது பின்புறத்தில் ஐந்து இணைந்த முதுகெலும்புகளால் ஆனது.
  • மேலும் இதன் மேற்பகுதியில் குழி போன்ற அமைப்பு காணப்படுகிறது.
  • தொடை எலும்புகள் ஒரு பந்து மற்றும் சாக்கெட் மூட்டுடன் இடுப்பின் இருபுறமும் இணைக்கப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம்

Question 3.
சிறு குறிப்பு தருக.
அ) கை எலும்பு,
ஆ) கால் எலும்பு
விடை:
அ) கை எலும்பு:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம் 11

  • கை எலும்பு என்பது ஹீமரஸ், ஆரம், அல்னா, கார்பல்கள், மெட்டாகார்பல்கள் மற்றும் ஃபாலாங்க்கள் ஆகியவற்றால் ஆன மேல் கை ஆகும்.
  • இந்த எலும்புகள் அனைத்தும் கீழ் மூட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன.
  • இவை ஒரே திசையில் மட்டுமே செயல்படக்கூடியவை.
  • ஹீமரஸ் மேல் கையை உருவாக்குகிறது. முன் கையானது ஆரம் மற்றும் அல்னாவால் ஆனது.
  • மணிக்கட்டு கார்பல்களால் ஆனது. உள்ளங்கை மெட்டாகார்பல்களால் ஆனது. விரல்கள் ஃபாலாங்க்களால் ஆனவை.

ஆ) கால் எலும்பு:

  • கால் எலும்பு என்பது தொடை எலும்பு, டிபியா, ஃபிபுலா, டார்சல்கள், மெட்டா டார்சல்கள் மற்றும் ஃபாலாங்க்கள் ஆகியவற்றால் ஆன காலின் கீழ்பகுதி ஆகும்.
  • இந்த எலும்புகள் அனைத்தும் கீழ் மூட்டுகளால் இணைக்கப்படுகின்றன.
  • இவை ஒரே திசையில் மட்டுமே செயல்படக்கூடியவை.
  • முழங்கால் பட்டெல்லா அல்லது முழங்கால் தொப்பி எனப்படும் தொப்பி போன்ற அமைப்பால் இது மூடப்பட்டிருக்கும்.
  • பீமர் தொடை எலும்பை உருவாக்குகிறது.
  • கால் டிபியா மற்றும் ஃபிபுலாவால் ஆனது.
  • கணுக்கால் டார்சல்களால் ஆனது.
  • கால் மெட்டாடார்சல்களால் ஆனது. கால் விரல்கள் ஃபாலாங்க்களால் ஆனவை.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 19 விலங்குகளின் இயக்கம் 12

Samacheer Kalvi 8th Science Guide Chapter 6 ஒலியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 6 ஒலியியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 6 ஒலியியல்

8th Science Guide ஒலியியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
ஒலி அலைகள் எதில் மிக வேகமாகப் பரவுகின்றன?
அ) காற்று
ஆ) உலோகங்கள்
இ) வெற்றிடம்
ஈ) திரவங்கள்
விடை:
ஆ) உலோகங்கள்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 6 ஒலியியல்

Question 2.
பின்வருவனவற்றுள் அதிர்வுகளின் பண்புகள் எவை?
i) அதிர்வெண்
ii) கால அளவு
iii) சுருதி
iv) உரப்பு
அ) i மற்றும் ii
ஆ) ii மற்றும் iii
இ) iii மற்றும் iv
ஈ) i மற்றும் iv
விடை:
அ) i மற்றும் ii

Question 3.
ஒலி அலைகளின் வீச்சு இதைத் தீர்மானிக்கிறது.
அ) வேகம்
ஆ) சுருதி
இ) உரப்பு
ஈ) அதிர்வெண்
விடை:
இ) உரப்பு

Question 4.
சித்தார் எந்த வகையான இசைக்கருவி?
அ) கம்பிக்கருவி
ஆ) தாள வாத்தியம்
இ) காற்றுக் கருவி
ஈ) இவை எதுவும் இல்லை
விடை:
அ) கம்பிக்கருவி

Samacheer Kalvi 8th Science Guide Chapter 6 ஒலியியல்

Question 5.
பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி.
அ) ஹார்மோனியம்
ஆ) புல்லாங்குழல்
இ) நாதஸ்வரம்
ஈ) வயலின்
விடை:
ஈ) வயலின்

Question 6.
இரைச்சலை ஏற்படுத்துவது.
அ) அதிக அதிர்வெண் கொண்ட அதிர்வுகள்
ஆ) வழக்கமான அதிர்வுகள்
இ) ஒழங்கான மற்றும் சீரான அதிர்வுகள்
ஈ) ஒழங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்
விடை:
ஈ) ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்

Question 7.
மனித காதுக்குக் கேட்கக்கூடிய அதிர்வெண் வரம்பு
அ) 2Hz முதல் 2000Hz வரை
ஆ) 20Hz முதல் 2000Hz வரை
இ) 20Hz முதல் 20000Hz வரை
ஈ) 200Hz முதல் 20000Hz வரை
விடை:
இ) 20Hz முதல் 20000Hz வரை

Question 8.
ஒலி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் அதிகரிக்கும்போது, பின்வருவனவற்றுள் எது உண்மையாக இருக்கும்?
அ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்.
ஆ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி மாறாது.
இ) சத்தம் அதிகரிக்கிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்.
ஈ) உரப்பு குறைகிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்.
விடை :
அ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 6 ஒலியியல்

Question 9.
இரைச்சலால் ஏற்படுவது எது?
அ) எரிச்சல்
ஆ) மன அழுத்தம்
இ) பதட்டம்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
ஒலி …………….. ஆல் உருவாக்கப்படுகிறது.
விடை:
அதிர்வுகளால்

Question 2.
தனி ஊசலின் அதிர்வுகள் ……………… என்றும் அழைக்கப்படுகின்றன.
விடை:
அலைவுகள்

Question 3.
ஒலி ……………… வடிவத்தில் பயணிக்கிறது.
விடை:
இயந்திர அலை

Question 4.
உங்களால் கேட்க முடியாத உயர் அதிர்வெண் கொண்ட ஒலிகள் . ….. மீயொலி
விடை:
எனப்படுகின்றன.

Question 5.
ஒலியின் சுருதி அதிர்வுகளின் …………. ஐச் சார்ந்த து.
விடை:
வீச்சை

Samacheer Kalvi 8th Science Guide Chapter 6 ஒலியியல்

Question 6.
அதிர்வுறும் கம்பியின் தடிமன் அதிகரித்தால், அதன் சுருதி
விடை:
குறையும்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 6 ஒலியியல் 1

IV. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தேர்வு செய்

அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ. கூற்று சரி ஆனால் காரணம் தவறு. ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
உ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

Question 1.
கூற்று : மின்னல் தாக்கும் போது மின்னலைப் பார்த்த சிறிது நேரம் கழித்து ஒலி கேட்கப்படுகிறது.
காரணம் : ஒலியின் வேகத்தைவிட ஒளியின் வேகம் அதிகம்
விடை :
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்

Question 2.
கூற்று : சந்திரனின் மமற்பரப்பில் இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் பேச முடியாது.
காரணம் : சந்திரனில் வளிமண்டலம் இல்லை
விடை :
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 6 ஒலியியல்

V. சுருக்கமான விடையளி

Question 1.
அதிர்வுகள் என்றால் என்ன?
விடை :

  • அதிர்வு என்பது ஒரு பொருளின் முன்னும் பின்னுமான இயக்கம் ஆகும்.
  • இவ்வியக்கமானது அதிர்வுகளை உண்டாக்கும்

Question 2.
ஒளி, ஒலியை விட வேகமாகப் பயணிக்கிறது என்பதை நிரூபிக்க ஒரு உதாரணம் தருக?
விடை :

  • இடி ஓசை கேட்கும் முன் மின்னலை நாம் காண்கிறோம்.
  • ஃபோகார்ன் ஓசை கேட்கும் முன் கலங்கரை விளக்கத்திலிருந்து வெளிச்சம் வருவதை காண்கிறோம்.

Question 3.
ஒலியின் உரப்பை நான்கு மடங்கு அதிகரிக்க, அதிர்வுகளின் வீச்சு எவ்வளவு மாற்றப்பட வேண்டும்?
விடை :

  • ஒலியின் உரப்பு & (அதிர்வுகளின் வீச்சு)-2
  • எனவே ஒலியின் உரப்பை நான்கு மடங்கு அதிகரிக்க, அதிர்வுகளின் வீச்சை ‘இருமடங்காக மாற்றப்பட வேண்டும்.

Question 4.
மீயொலி என்றால் என்ன?
விடை :

  • 20000Hz விட அதிக அதிர்வெண் கொண்ட ஒலி மீயொலி என அழைக்கப்படுகிறது.
  • வௌவால்கள், நாய்கள், டால்பின்கள் போன்ற விலங்குகள் சில மீயொலிகளை கேட்க முடிகிறது.

Question 5.
இசைக்கும் இரைச்சலுக்கும் இடையிலான இரண்டு வேறுபாடுகளைத் தருக.
Answer:
இசை

  1.  இசை நம் காதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
  2. சீரான அதிர்வுகளால் இவை உருவாக்கப்படுகிறது.
  3. வயலின், கிட்டார், புல்லாங்குழல் போன்றவற்றிலிருந்து தோன்றும் ஒலி

இரைச்சல்

  1. இரைச்சல் எப்போதும் ஒரு விரும்பத்தகாத ஒலி ஆகும்.
  2.  சீரற்ற அதிர்வுகளால் இவை உருவாக்கப்படுகிறது.
  3.  வாகனங்கள் எழும்பும் ஒலி பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் ஒலி

Question 6.
ஒலி மாசுபாட்டின் விளைவுகள் யாவை?
விடை :

  • இரைச்சலானது எரிச்சல், மன அழுத்தம், பதட்டம் மற்றும் தலைவலி ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும்.
  • இரைச்சல் நீண்ட காலத்திற்கு கேட்கும் கோது ஒரு நபரின் தூக்க முறை மாறுபடும்.
  • இரைச்சல் தொடர்ந்து கேட்கும்போது செவிப்புலன் திறனை பாதிக்கலாம். சில நேரங்களில் இது செவிப்புலன் இழப்புக்கு வழிவகுக்கிறது.
  • திடீரென ஏற்படும் இரைச்சல் மாரடைப்பு மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
  • இது ஒருவரின் வேலையில் கவனமின்மையை ஏற்படுத்து . கா. ம்பு ஒலி பெருக்கிகள், ஒலி பெருக்கிகள் போன்றவற்றின் சத்தம், கவனமின்மையை ஏற்படுத்துகிறது.
  • ஒலி மாசுபாடு ஒருவரின் மன அமைதியை பாதிக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் அல்லது சட்டென கோபப்படுதல் போன்ற நோயை ஏற்படுத்துகிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 6 ஒலியியல்

Question 7.
ஒலி மாசுபாட்டினைக் குறைக்க எடுக்க வேண்டிய இரண்டு நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
விடை :

  • வாகனம் ஓட்டும் போது அதிகப்படியாக (ஹார்ன்) ஒலி எழுப்பும் கருவிகளைத் தவிர்க்க மக்களை ஊக்குவிக்க வேண்டும்.
  • தொழிற்துறை இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

Question 8.
பின்வரும் சொற்களை வரையறுக்கவும்: அ) வீச்சு, ஆ) உரப்பு
விடை :
அ) வீச்சு:

  • அலையின் வீச்சு என்பது மையப்புள்ளியில் இருந்து துகளின் அதி பட்ச இடப்பெயர்ச்சி ஆகும்.
  • இவை’A’ என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது. வீச்சின் அலகு மீட்டர்’ (m).

ஆ) உரப்பு:

  • மெல்லிய அல்லது பலவீனமான ஒலியை உரத்த ஒலியிலிருந்து வேறுபடுத்துவதற்கு உதவும் ஒலியின் சிறப்பியல்பே ‘உரப்பு’ ஆகும்.
  • இதன் அலகு ‘டெசிபல்’ (dB).

Question 9.
மரங்களை நடுவது எவ்வாறு ஒலி மாசுபாட்டைக் குறைக்க உதவுகிறது?
விடை :

  • மரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடு (CO2) மட்டும் உறிஞ்சுவதில்லை . இவை நிழல், மண் அரிப்பு தடுப்பு போன்றவற்றிற்கும் உதவுகிறது. மேலும் மரங்கள் ஒலி மாசுபாட்டைக் குறைக்கவும் உதவுகிறது.
  • ஒலி மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு வழிமுறை ஒலி உறிஞ்சப்படுதல் (மரத்தினால்) ஆகும்.
  • மரத்தின் பகுதிகளான இலைகள், கிளைகள் மற்றும் கட்டைகள் போன்றவை ஒலியை அதிகப்படியாக உறிஞ்சுகின்றன. இதனால் ஒலி மாசுபாட்டை குறைக்கப்படுகிறது.

VI. விரிவான விடையளி.

Question 1.
ஒலி வெற்றிடத்தின் வழியாகப் பரவ முடியாது என்பதைக் காட்ட ஒரு சோதனையை விவரி.
விடை :
Samacheer Kalvi 8th Science Guide Chapter 6 ஒலியியல் 2

  • மணி ஜாடி மற்றும் அலைபேசியை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அலை பேசியில் இசையை இசைக்க செய்து ஜாடியில் வைக்கவும்.
  • இப்போது ஒரு வெற்றிட பம்பைப் பயன்படுத்தி மணி
    வெற்றிட பம்பு ஜாடியிலிருந்து காற்றை வெளியேற்றவும்.
  • ஜாடியிலிருந்து மேலும் காற்று அகற்றப்படுவதால்
    அலைபேசியிலிருந்து வரும் ஒலி குறைந்து கொண்டே வந்து இறுதியில் நின்று விடுகிறது.
  • இந்த சோதனையிலிருந்து ஒலி வெற்றிடத்தில் பரவ முடியாது என்பது தெளிவாகிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 6 ஒலியியல்

Question 2.
அலையின் பண்புகள் யாவை?
விடை :

  • அலை இயக்கத்தில் ஆற்றல் மட்டுமே கடத்தப்படுகிறது துகள்கள் அல்ல.
  • இவ்வியக்கத்தின் வேகம் அதிர்வும் துகளின் திசைவேகத்திலிருந்து வேறுபட்டது.
  • ஒரு இயந்திர அலையின் பரவலுக்கு நிலைமம், சீரான அடர்த்தி, மீட்சி தன்மை , துகள்களுக்கிடையே குறைந்த உராய்வு போன்ற பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

Question 3.
ஒலி மாசுபாட்டின் விளைவுகளைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
விடை :

  • சமூக, மத மற்றும் அரசியல் விழாக்களில் ஒலிபெருக்கிகளைக் பயன்படுத்துவதற்கு கடுமையான வழிகாட்டுதல்கள் அமைக்கப்பட வேண்டும்.
  • அனைத்து வாகனங்களும் குறைவான ஒலியெழுப்பும் சைலன்சர் கொண்டிருக்க வேண்டும்.
  • அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் குறைந்த ஒலியில் இயக்கப்பட வேண்டும்.
  • குடியிருப்பு பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும்.
  • இரைச்சலான தொழிற்சாலைகளில் பணிபுரியும் மக்கள் காது பாதுகாப்பான்களை அணிய வேண்டும்.
  • மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி தொழிற்சாலைகளைச் சுற்றி பசுமை தாழ்வாரங்கள் அமைக்கப்பட வேண்டும்.

Question 4.
மனித காதின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை விவரி?
Samacheer Kalvi 8th Science Guide Chapter 6 ஒலியியல் 3
விடை :

  • மனித காதுகளின் வெளிப் புறம் மற்றும் புலப்படும் பகுதி பின்னா ‘ (வளைந்த வடிவத்தில்) என்று அழைக்கப் படுகிறது.
  • இது சுற்றுப்புறத்தில் இருந்து ஒலியை சேகரிக்கும்படி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பின்னர் அது காது கால்வாய் வழியாக காது டிரம்பை டிம்பானிக் சவ்வு) அடையும்.
  • உள் காதிலிருந்து அதிர்வுகள் சிக்னல்கள் வடிவில் மூளைக்கு அனுப்பப்படுகின்றன. மூளை அவற்றை ஒலிகளாக உணர்கிறது.

VII. கணக்கீடுகள்

Question 1.
துப்பாக்கியால் சுடப்பட்ட ஒலியை ருத்விக் மற்றும் ருகா ஆகிய இருவரும் 2 வினாடிக்குப்
பிறகு கேட்கிறார்கள். துப்பாக்கி சுடப்பட்ட தொலைவிலிருந்து எவ்வளவு தொலைவில் அவர்கள் இருக்கிறார்கள்? (காற்றில் ஒலியின் வேகம் 331ms-1)
தீர்வு:
துப்பாக்கியால் சுடப்பட்ட பின் கேட்கும் கால அளவு = 2 வினாடிகள்.
காற்றில் ஒலியின் வேகம் 331ms-1
வேகம் = தொலைவு / நேரம்
330 = தொலைவு /2
தொலைவு = 2 × 331 = 662
துப்பாக்கியிலிருந்து 662 m தொலைவில் உள்ளார்

Question 2.
ஒரு ஒலி அலை 8 வினாடிகளில் 2000மீ
பயணிக்கிறது எனில் ஒலியின் வேகம்
என்ன ?
தொலைவு d = மீ
காலம் t = 8s
வேகம் v = ?
தீர்வு:
V = d/t
= 2000/8
v = 250 m/s)

Samacheer Kalvi 8th Science Guide Chapter 6 ஒலியியல்

Question 3.
500 ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட ஒரு ஒலி அலை 200 மீ/வி வேகத்தில் பரவுகிறது அதன் அலைநீளம் என்ன?
அதிர்வெண் n = 500 Hz (or) s
திசைவேகம் V = 200 m/s
அலைநீளம் λ = ?
தீர்வு:
v = nλ ; λ = v/n
λ = \(\frac{200}{500} \frac{\mathrm{m} / \mathrm{s}}{1 / \mathrm{s}}\)
= \(\)[\frac{2}{5} \frac{\mathrm{m}}{\mathrm{s}} \times s/latex] = 2/5m
A = 500 1/s| _ 2 m xg = 2/5m * 5 s
λ = 0.4 m

8th Science Guide ஒலியியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
அதிர்வுறும் துகள்களால் ……………… உருவாகிறது.
அ) ஒளி
ஆ) ஒலி
இ) வெப்பம்
ஈ) இவற்றில் ஒன்றுமில்லை
விடை:
ஆ) ஒலி

Question 2.
தாமஸ் ஆல்வா எடிசன் 1877ஆம் ஆண்டில் …………. சாதனத்தைக் கண்டுபிடித்தார்.
அ) ரேடியோ
ஆ) தொலைக்காட்சி
இ) தொலைபேசி
ஈ) ஒலிப்பதிவு
விடை:
ஈ) ஒலிப்பதிவு

Question 3.
பொதுவாக ஒரு பெண்ணின் குரல் ஆணின் குரலைவிட ……. கொண்டதாக இருக்கும்.
அ) குறைந்த சுருதி
ஆ) சமமான சுருதி
ஈ) இவை அனைத்தும்
விடை:
இ) உயர்ந்த சுருதி

Question 4.
அலை வீச்சின் அலகு …………….. ஆகும்.
அ) செகன்ட்
ஆ) நீளம்
இ) மீட்டர்
ஈ) உயரம்
விடை :
இ) மீட்டர்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 6 ஒலியியல்

Question 5.
…………… காதுகள் நீரில் அதிக அதிர்வெண் அதிர்வுகளை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அ) நீர்வாழ் விலங்குகள்
ஆ) நிலவாழ் விலங்குகள்
இ) மனிதன்
ஈ) இவை அனைத்தும்
விடை:
அ) நீர்வாழ் விலங்குகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ஒலி சுற்றுப்புறத்திற்கு கடத்தப்படும் அதிர்வுகள் எந்த பொருளின் வழியே கடத்தப்படுகின்றதோ அது ………….. என அழைக்கப்படுகிறது.
விடை:
ஊடகம்

Question 2.
ஒரு அதிர்வெண்ணின் அலகு …………..
விடை:
ஹெர்ட்ஸ்

Question 3.
காற்றில் உள்ள நீரின் அளவு …………… என்று அழைக்கப்படுகிறது.
விடை:
ஈரப்பதம்

Question 4.
குறுக்கலைகள் …………….. மட்டுமே உருவாகும்.
விடை:
திட மற்றும்
திரவங்களில்

Question 5.
ஒலியின் உரப்பு அதன் …………… பொறுத்தது.
விடை:
வீச்சு

Samacheer Kalvi 8th Science Guide Chapter 6 ஒலியியல்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 6 ஒலியியல் 4

IV. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று : ஒலியின் வேகம் திரவத்தை விட திடமானது மற்றும் இது வாயுக்களில் மிகக் குறைவு.
காரணம் : அதிர்வுறும் தட்டு தண்ணீரில் அலைகளை உருவாக்கவில்லை.
விடை :
கூற்று சரி ஆனால் காரணம் தவறு

Question 2.
கூற்று : தொண்டையில் குரல் நாண்கள் எனப்படும் இரண்டு தசைநார்கள் அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.
காரணம் : டிரம் மற்றும் தபேலா போன்ற தாள வாத்தியங்கள் தோல் சவ்வைக் கொண்டிருக்கின்றன.
விடை :
கூற்று தவறு ஆனால் காரணம் சரி

V. சுருக்கமான விடையளி

Question 1.
நம் அன்றாட வாழ்க்கையில் கேட்கும் பலவிதமான ஒலிகளின் பெயர்களை எழுதுக.
விடை :

  • இடி ஓசை
  • பறவைகளின் ஒலி
  • விலங்குகளின் ஒலி
  • இலைகளின் சலசலப்பு
  • வானொலி மற்றும் தொலைக்காட்சி
  • வாகனங்களின் சத்தம்

Question 2.
அதிர்வெண் என்றால் என்ன?
விடை :

  • அதிர்வெண் என்பது ஒரு நொடியில் ஏற்படும் அதிர்வுகளின் எண்ணிக்கை ஆகும்.
  • அதிர்வெண் அலகு ஹெர்ட்ஸ் ஆகும்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 6 ஒலியியல்

Question 3.
நில அதிர்வு இயல் என்பது யாது?
விடை :
நில அதிர்வு இயல் என்பது நில அதிர்வு அலைகளின் ஆய்வைக் கையாளும் அறிவியலின் பிரிவு ஆகும்.

Question 4.
ஒலியை அதிர்வெண் அடிப்படையில் எத்தனை வகைப்படும்?
விடை :

  • கேட்பொலி
  • குற்றொலி
  • மீயொலி

Question 5.
ஏதேனும் இரண்டு குற்றொலியின் பயன்களை எழுதுக.
விடை :

  • இது பூமி கண்காணிப்பு அமைப்பில் பயன்படுத்தப்படுகிறது.
  • மனித இதயத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்விலும் பயன்படுத்தப் படுகிறது.

Question 6.
இசைக்கருவிகளை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
விடை :

  • காற்றுக் கருவிகள்
  • நாணல் கருவிகள்
  • கம்பிக் கருவிகள்
  • தாள வாத்தியங்கள்

VI. விரிவான விடையளி

Question 1.
காது கேளாமையின் அறிகுறிகள் மற்றும் காது கேளாமைக்கான காரணங்கள் பற்றி விளக்குக.
விடை :
அறிகுறிகள் :

  • காது வலி
  • காதில் மெழுகு அல்லது திரவம் இருப்பது போன்ற உணர்வு
  • காதுகளில் தொடர்ந்து ஒலிப்பது போன்ற உணர்வு.

காது கேளாமைக்கான காரணங்கள்:-

  • வயது முதிர்வு
  • சிகிச்சையளிக்கப்படாத காது தொற்றுநோய்
  • சில மருந்துகள் – மரபணு கோளாறுகள்
  • தலையில் பலத்த அடி – இரைச்சல்

Question 2.
மீயொலியின் பயன்கள் பற்றி விரிவாக எழுதுக.
விடை :

  • இது சோனாகிராம் போன்ற மருத்துவ பயன்பாடுகளில் விரிவாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • இது சோனார் அமைப்பில் கடலின் ஆழத்தைக் கண்டறியவும் நீர் மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியவும் பயன்படுகிறது.
  • இது பாத்திரம் கழுவும் இயந்திரங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
  • மீயொலியின் மற்றொரு முக்கியமான பயன்பாடு கால்டனின் விசில் ஆகும்.
  • இந்த விசில் மனித காதுக்கு செவிக்கு புலப்படாது.
  • ஆனால் அதை நாய்களால் கேட்க முடியும். இது நாய்களுக்கு புலனாய்வு பயிற்சி அளிக்க பயன்படுகிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 6 ஒலியியல்

Question 3.
குறுக்கலை மற்றும் நெட்டலைகளை வேறுபடுத்துக.
விடை :
குறுக்கலை

  1. குறுக்கலையில் துகள்கள் அதிர்வுறும் திசையானது, அலை பரவலின் திசைக்கு செங்குத்தாக இருக்கம்
  2. எ.கா. கம்பிகளில் அலைகள், ஒலி அலைகள்
  3. குறுக்கலைகள் திட மற்றும் திரவங்களில் மட்டுமே உருவாகும்.

நெட்டலை :

  1. நெட்டலையில் துகள்கள் அலை பரவும் திசைக்கு இணையாக அதிர்வுறுகின்றன.
  2. எ.கா. நீரூற்றுகளின் அலைகள்
  3. நெட்டலை திடப் பொருட்களிலும், திரவங்களிலும், வாயுக்களிலும் உருவாகின்றன.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 5 மின்னியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 5 மின்னியல்

8th Science Guide மின்னியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?
அ) எதிர் மின்னூட்டம்
ஆ) நேர்மின்னூட்டம்
இ) பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம்
ஈ) எதுவுமில்லை
விடை :
ஆ) நேர்மின்னூட்டம்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல்

Question 2.
இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?
அ) நியூட்ரான்கள்
ஆ) புரோட்டான்கள்
இ) எலக்ட்ரான்கள்
ஈ) புரோட்டான்களும் எலக்ட்ரான்களும்
விடை:
இ) எலக்ட்ரான்கள்

Question 3.
ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவையான மின் கூறுகள் எவை?
அ) ஆற்றல் மூலம், மின்கலம், மின்தடை
ஆ) ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி
இ) ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி
ஈ) மின்கலம், மின் கம்பி, சாவி
விடை:
ஈ) மின்கலம், மின்கம்பி, சாவி

Question 4.
ஒரு நிலைமின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலை மின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?
அ) நேர் மின்னூட்டம்
ஆ) எதிர் மின்னூட்டம்
இ) அ மற்றும் ஆ
ஈ) எதுவும் இல்லை
விடை:
ஆ) எதிர் மின்னூட்டம்

Question 5.
மின் உருகி என்பது ஒரு
அ) சாவி
ஆ) குறைந்த மின்தடை கொண்ட ஒரு மின் கம்பி
இ) அதிக மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி
ஈ) மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி
விடை:
ஈ) மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
பொருட்களை ஒன்றுடனொன்று தேய்க்கும் போது நடைபெறுகிறது.
விடை:
மின்னூட்டத்தின் இடமாற்றம்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல்

Question 2.
ஒரு பொருள் எலக்ட்ரானை இழந்து ………………. ஆகிறது.
விடை:
நேர்மின்னோட்டம்

Question 3.
மின்னல் தாக்குதலில் இருந்து கட்டடங்களைப் பாதுகாக்கும் சாதனம் …………………….
விடை:
மின்னல் கடத்தி

Question 4.
அதிகமான அளவு மின்னோட்டம் மின்சாதனங்கள் வழியாகப் பாயும் போது அவை பாதிக்கப்படாமல் இருக்க …………… அவற்றுடன் இணைக்கப்படுகின்றன.
விடை:
மின் உருகி

Question 5.
மூன்று மின்விளக்குகள் ஒரே சுற்றில் மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மின்சுற்று ……………………… எனப்படும்.
விடை:
தொடரிணைப்பு

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக

Question 1.
எபோனைட் தண்டினை கம்பளித் துணி ஒன்றுடன் தேய்க்கும்போது எபோனைட் தண்டு எதிர் மின்னூட்டங்களைப் பெற்றுக்கொள்கிறது.
விடை:
சரி

Question 2.
மின்னூட்டம் பெற்ற பொருள் ஒன்றை மின்னூட்டம் பெறாத பொருளின் அருகே கொண்டு செல்லும் போது மின்னூட்டம் பெற்ற பொருளுக்கு எதிரான மின்னூட்டம் அதில் தூண்டப்படும்.
விடை:
சரி

Question 3.
தூண்டல் முறையில் மின்னேற்றம் செய்யப் பயன்படும் ஒரு கருவி நிலைமின்காட்டி.
விடை:
தவறு. இருப்பதை கண்டறியும்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல்

Question 4.
நீர் மின்சாரத்தைக் கடத்தும்.
விடை :
சரி

Question 5.
பக்க இணைப்பில் அனைத்துக் கூறுகளிலும் மின்னோட்டம் மாறிலியாக இருக்கும்.
விடை:
தவறு. மின்னழுத்தம்

IV. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல் 1

V. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளுக்கு காரணம் கூறுக

Question 1.
ஒரு கண்ணாடித் தண்டினை பட்டுத் துணியில் தேய்க்கும்போது இரண்டும் மின்னூட்டமடையும்.
விடை:
ஒரு கண்ணாடித் தண்டினை பட்டுத்துணியில் தேய்க்கும்போது, எலக்ட்ரான்கள் கண்ணாடித் தண்டிலிருந்து இடம்பெயர்ந்து பட்டுத்துணிக்கு செல்லும் எனவே, கண்ணாடித் தண்டு நேர்மின்னூட்டம் பெறும். பட்டுத்துணி எதிர் மின்னூட்டம் பெறும்.

Question 2.
உலர்ந்த தலை முடியில் சீப்பைத் தேய்த்து விட்டு சிறிய காகிதத் துண்டின் அருகில் கொண்டு சென்றால் அவை ஒட்டிக்கொள்ளும்.
விடை:
உலர்ந்த தலைமுடியில் சீப்பைத் தேய்க்கும்போது, எலக்ட்ரான்கள் தலைமுடியிலிருந்து சீப்பிற்குச் செல்லும். சீப்பு எதிர்மின்னூட்டத்தை பெறுவதால், நேர்மின்னூட்டம் உள்ள சிறிய காகிதத் துண்டினை அருகில் கொண்டு சென்றால் ஒட்டிக் கொள்கிறது.

Question 3.
ஒரு மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் நிலைமின்காட்டியின் உலோகக் குமிழைத் தொடும்போது உலோக இலைகள் விலகலடைகின்றன.
விடை:
ஒரு மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் நிலை மின்காட்டியின் உலோகக் குமிழைத் தொடும்போது, எலக்ட்ரான்கள் உலோக இலைகளுக்கு இடமாற்றமடைகின்றன. எனவே, உலோக இலைகள் விலகலடைகின்றன.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல்

Question 4.
ஒரு நிலைமின்காட்டியில் பயன்படுத்தப்படும் தண்டும் இலையும் உலோகத்தினால் ஆனவை.
விடை:
ஒரு நிலைமின்ாகாட்டியில் பயன்படுத்தப்படும் தண்டும் இலையும் உலோகத்தினால் ஆனவை. ஏனென்றால் உலோகம் மின்னூட்டத்தைக் கடத்தும் தன்மையுடையவை.

Question 5.
இடி, மின்னலின் போது திறந்த வெளியில் செல்லும் ஒருவர் குடையைப் பயன்படுத்தக்
கூடாது.
விடை:

  • குடையானது, மின்சாரத்தைக் கடத்தக்கூடிய சிறந்த கடத்தியான உலோகத் தண்டினால் உருவாக்கப்பட்டது.
  • மின்னல் என்பது மின்சாரத்தன்மை கொண்ட மின்னூட்டங்களினால் உருவானது. எனவே மின்னல் அந்த உலோகத் தண்டினால் ஈர்க்கப்படுகிறது.
  • எனவே, இடி மின்னலின் போது திறந்த வெளியில் செல்லும் ஒருவர் குடையைப் பயன்படுத்தக்கூடாது.

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
உராய்வு மூலம் மின்னூட்டங்களை எவ்வாறு உருவாக்க முடியும்?
Answer:

  • இரு பொருள்கள் உராய்வதன் மூலம் மின்துகள்கள் ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளிற்கு இடமாற்றமடைகின்றன.
  • இவ்வாறு உராய்வு மூலம் மின்னூட்டங்களை உருவாக்க முடியும்.

Question 2.
புவித்தொடுப்பு என்றால் என்ன?
விடை:
மின்னிறக்கம் அடையும் மின்னாற்றலை குறைந்த மின்தடை கொண்ட கம்பியின் மூலம் புவிக்கு இடமாற்றம் செய்யும் முறை.

Question 3.
மின்சுற்று என்றால் என்ன?
விடை:
மின்மூலம் ஒன்றின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு எலக்ட்ரான்கள் பாயும் பாதை.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல்

Question 4.
மின்முலாம் பூசுதல் என்றால் என்ன?
விடை:
மின்னோட்டத்தைப் பாயச் செய்வதன் மூலம் ஒரு உலோகத்தின் படலத்தை மற்றொரு உலோகத்தின் மேற்பரப்பில் படிய வைக்கும் நிகழ்வு.

Question 5.
மின்முலாம் பூசுதலுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:

  • இரும்பின் மீது அரிமானம் மற்றும் துருப்பிடித்தலைத் தவிர்ப்பதற்காக அதன்மீது துத்தநாகப்படலம் பூசப்படுகிறது.
  • குரோமியம் பளபளப்புத் தன்மையுடையது. எனவே, வாகனங்களின் உதிரி பாகங்கள், குழாய்கள் ஆகியவற்றில் குரோமியம் மேற்பூச்சாக பூசப்படுகிறது.

VII. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல
ஈ) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரியானது

Question 1.
கூற்று : மின்னலினால் பாதிக்கப்படும் நபர்கள் கடுமையான மின்னதிர்ச்சியை உணர்வார்கள்.
காரணம் : மின்னல் அதிக மின்னழுத்தத்தைக் கொண்டிருக்கும்.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி.
மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Question 2.
கூற்று : மின்னலின் போது உயரமான மரத்தினடியில் நிற்பது நல்லது.
காரணம் : அது உங்களை மின்னலுக்கான இலக்காக மாற்றும்.
விடை:
ஈ) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரியானது

VIII. விரிவாக விடையளி

Question 1.
மின்துகள்களை இடமாற்றம் செய்யும் மூன்று முறைகளை விளக்குக.
விடை:
உராய்வு மூலம் இடமாற்றம்:

  • சில வகை பொருள்களை ஒன்றையொன்று தேய்க்கும்போது மின்துகள்கள் இடமாற்றமடைந்து அந்தப் பொருள்களின் மேற்பகுதியில் தங்கி விடுகின்றன.
  • ஒரு கண்ணாடித் தண்டினை பட்டுத் துணியினால் தேய்க்கும்போது, கண்ணாடித் தண்டிலிருக்கும் கட்டுறா எலக்ட்ரான்கள் பட்டுத் துணிக்கு இடமாற்றமடைகின்றன.
  • எனவே, கண்ணாடித் தண்டு நேர் மின்னூட்டம் பெறுகிறது. பட்டுத்துணி எதிர் மின்னூட்டம் பெறுகிறது.

கடத்துதல் மூலம் இடமாற்றம்:

  • தொடுதல் மூலம் ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மின்துகள்களை இடமாற்றம் செய்யும் முறை.
  • எபோனைட் தண்டினை கம்பளியில் தேய்க்கும்போது, கம்பளியில் இருக்கும் எலக்ட்ரான்கள் எபோனைட் தண்டிற்கு இடமாற்றம் அடைகின்றன.

மின்தூண்டல் மூலம் இடமாற்றம்:

  • மின்னூட்டம் பெற்ற ஒரு பொருளை மின்னூட்டம் பெறாத பொருளின் அருகே கொண்டு சென்று தொடுதல் இன்றி அதனை மின்னூட்டமடையச் செய்யும் நிகழ்வு.
  • மின்னூட்டம் பெற்ற பொருளுக்கு அருகில் இருக்கும் முனையில் அதற்கு எதிரான மின்னூட்டமும் மறுமுனையில் ஒத்த மின்னூட்டமும் தூண்டப்படுகின்றன.

Question 2.
நிலைமின்காட்டி என்றால் என்ன? அது செயல்படும் முறையை விளக்குக.
விடை:

  • பொருளொன்றில் மின்துகள்கள் இருப்பதைக் கண்டறியப் பயன்படும் அறிவியல் கருவி.
  • மின்சாரத்தைக் கடத்தும் பொருள்களைப் பயன்படுத்தி நிலைமின்காட்டி வடிவமைக்கப்படுகிறது.
  • ஓரின மின்துகள்கள் ஒன்றையொன்று விலக்கிக்கொள்கின்றன என்ற தத்துவத்தின்படி செயல்படுகிறது.
  • ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும் இரண்டும் உலோகத் தகடுகள் ஒரு உலோகத் தண்டிலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கின்றன.
  • மேல் நோக்கி நீடிக்கும் உலோகத்தண்டின் மறுமுனை நிலைமின்காட்டியின் மூடியில் இருக்கும் குமிழோடு இணைக்கப்பட்டிருக்கின்றது.
  • எதிர் மின்னூட்டமடைந்த ஒரு பொருளை குமிழுக்கு அருகில் கொண்டு வரும்போது, குமிழில் நேர்மின்னூட்டமும் அதன் மறுமுனையில் இருக்கும் உலோக இலைகளில் எதிர்மின்னூட்டமும் தூண்டப்படுகின்றன.
  • இரண்டு உலோக இலைகளிலும் எதிரெதிர் மின்னூட்டம் இருப்பதால் அவை ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன.
  • நேர் மின்னூட்டமடைந்த பொருள் ஒன்றினை உலோகக் குமிழுக்கு அருகில் கொண்டு வரும்போது உலோக இலைகளில் உள்ள எதிர் மின்னூட்டங்கள் மேல் நோக்கி நகர்கின்றன.
  • இரண்டு உலோக இலைகளும் நேர்மின்னூட்டம் பெற்று ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்லும்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல் 2

Question 3.
தொடர் மற்றும் பக்க இணைப்புச் சுற்றை விளக்குக.
விடை:
தொடரிணைப்பு:

  • ஒன்றுக்கும் மேற்பட்ட மின்தடைகளையும், மின்னோட்டம் பாய்வதற்கு ஒரே ஒரு பாதையையும் கொண்டிருக்கும்.
  • மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் மதிப்பு மின்சுற்று முழுவதும் மாறாமல் இருக்கும். மின்னழுத்தத்தின் மதிப்பானது மின்சுற்றிலுள்ள மின்தடைகளில் பிரிந்து காணப்படுகிறது.
    I – சுற்றின் வழியாக பாயும் மின்னோட்டம்.
    V1, V2, V3, மின்மூலத்திலிருந்து கொடுக்கப்படும் மின்னழுத்தம் மின்னழுத்தத்தின் கூடுதல், V = V1 + V2 + V3

Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல் 3

பக்க இணைப்பு:

  • பக்க இணைப்பில், ஒன்றுக்கு மேற்பட்ட மின்தடைகள் ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகளைக் கொண்ட மின்சுற்றில் இணைக்கப்படும்.
  • ஒவ்வொரு மின்தடைகளுக்கிடையே சமமான மின்னழுத்தம் V உள்ளது.
  • ஒவ்வொரு மின்விளக்குகளிலும் I1, I2, I3, என்ற மின்னோட்டங்கள் பாய்கிறது. V – மின்னழுத்தம். I1, I2, I3, – மின்னோட்டம். மின்னோட்டத்தின் கூடுதல், I = I1 + I2 + I3

Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல் 4

Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல்

Question 4.
மின்னல் எவ்வாறு தோன்றுகிறது?
விடை:

  • மேகங்களில் நடைபெறும் மின்னிறக்கத்திற்கு ஒரு உதாரணம் மின்னல் ஆகும்.
  • மேகங்களுக்கிடையிலோ அல்லது மேகங்களுக்கும் புவிக்கும் இடையிலோ மின்னிறக்கம் நடைபெறுவதால் மின்னல் உருவாகிறது.
  • இடியுடன் கூடிய மழை பெய்யும் போது காற்று மேல் நோக்கி வேகமாக நகர்கிறது. இது மிகச்சிறிய பனிப்படிகங்களை மேல் நோக்கி இழுத்துச் செல்கிறது.
  • சிறிய நீர்த்துளிகள் மேலிருந்து கீழ்நோக்கி நகர்கின்றன.
  • ஒன்றுடன் ஒன்று மோதும் போது பனிப்படிகங்கள் நேர் மின்னூட்டமடைந்து மேல் நோக்கி நகர்கின்றன.
  • இதனால் மேகங்களின் மேற்பகுதி நேர்மின்னூட்டமுடைய துகள்களாலும். கீழ்பகுதி எதிர்மின்னூட்டமுடைய துகள்களாலும் நிறைந்திருக்கும்.
  • இரண்டும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து, நீர்த் துளிகளில் உள்ள எலக்ட்ரான்களை பனிப்படிகத்தில் உள்ள நேர்மின் துகள்களை ஈர்க்கின்றன.
  • இதனால், மின்சாரம் உருவாகி மின்னல் தோன்றுகிறது.

Question 5.
மின்முலாம் பூசுதல் என்றால் என்ன? அது மின்னழுத்த எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குக.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல் 5

  • மின்னோட்டத்தைப் பாயச் செய்வதன் மூலம், ஒரு உலோகத்தின் படலத்தை மற்றொரு உலோகத்தின் மேற்பரப்பில் படியவைக்கும் நிகழ்வு.
  • ஒரு கண்ணாடி முகவையில் சிறிது தாமிர சல்பேட் கரைசலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு சிறிய தாமிர உலோகத் தகட்டை மின்கலத்தின் நேர்மின்வாயில் இணைக்க வேண்டும்.
  • எதிர்மின்வாயில் இரும்பினால் செய்யப்பட்ட கரண்டியினைப் பொருத்த வேண்டும்.
  • இவற்றினை தாமிர சல்பேட் கரைசலினுள் அமிழ்த்தவும்.
  • தாமிர சல்பேட் கரைசலில் மின்னோட்டத்தைச் செலுத்தும்போது இரும்புக் கரண்டியின் மேற்பரப்பில் தாமிரத்தின் மெல்லிய படலம் படர்ந்திருக்கும்.
  • அதே அளவு தாமிரத்தை தாமிரத்தகடு இழந்திருக்கும்.

8th Science Guide மின்னியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
……………………. உட்கருவினைச் சுற்றி பல்வேறு வட்டப் பாதைகளில் சுற்றி வருகின்றன.
அ) புரோட்டான்கள்
ஆ) எலக்ட்ரான்கள்
இ) நியூட்ரான்கள்
ஈ) அ மற்றும் இ இரண்டும்
விடை:
ஆ) எலக்ட்ரான்கள்

Question 2.
சிறும மின்னூட்டத்தின் மதிப்பு …………………………….
அ) 1.602 x 10-19 கூலூம்
ஆ) 1.602 x 10-19 கூலூம்
இ) 1.062 x 10-19 கூலூம்
ஈ) 1.062 x 10-19 கூலூம்
விடை :
அ) 1.602 x 10-19 கூலூம்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல்

Question 3.
எலக்ட்ரான்களைப் பெற்றுக் கொண்ட பொருள் ……………………மின்னூட்டத்தைப் பெறும்.
அ) எதிர்
ஆ) நடுநிலை
இ) நேர்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை :
அ) எதிர்

Question 4.
பெரும்பாலும் மின்னிறக்கம் நடைபெறுகிறது.
அ) திடப்பொருள்களில்
ஆ) திரவங்களில்
இ) திட மற்றும் திரவங்களில்
ஈ) வாயுக்களில்
விடை:
ஈ) வாயுக்களில்

Question 5.
……………………….. மற்றும் ……………………. கலந்த உலோகக் கலவையினால் தயாரிக்கப்பட்ட துண்டுக் கம்பியே மின் உருகி ஆகும்.
அ) காரீயம் மற்றும் செம்பு
ஆ) வெள்ளீயம் மற்றும் செம்பு
இ) காரீயம் மற்றும் வெள்ளீயம்
ஈ) காரீயம் மற்றும் அலுமினியம்
விடை:
இ) காரீயம் மற்றும் வெள்ளீயம்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
வேறின மின்துகள்கள் ஒன்றையொன்று ………………………. ஓரின மின்துகள்கள் ஒன்றையொன்று …………………..
விடை:
கவரும், விலகும்

Question 2.
ஒரு கம்பியில் ஏற்படும் வெப்பமானது அதன் – சார்ந்தது.
விடை:
மின்தடையை

Question 3.
………………….. என்ற ஒரு வகையான மீன் 650 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உருவாக்கி மின்னதிர்ச்சியை ஏற்படுத்தும்.
விடை:
ஈல் (Eel)

Question 4.
மின்னியல் விசையின் அலகு …………………..
விடை:
வோல்ட்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல்

Question 5.
அணுவானது புரோட்டான், எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான் ஆகியவை ……………………….. என அழைக்கப்படுகிறது.
விடை:
அணுக்கூறுகள்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல் 6

IV. சரியா? தவறா? எனக் கூறுக. தவறெனில் திருத்துக

Question 1.
சமையல் பாத்திரங்களில் வெப்பத்தை கடத்துவது வெப்பச்சலனம் ஆகும்.
விடை:
தவறு. வெப்பக்கடத்தல்

Question 2.
ஒரு அணுவில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும், புரோட்டான்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும்.
விடை:
சரி

Question 3.
மரபு மின்னோட்டம் குறைந்த மின்னழுத்தத்திலிருந்து உயர் மின்னழுத்தத்தை நோக்கிப் பாய்கிறது.
விடை:
தவறு. உயர், குறைந்த

Question 4.
ஒருபொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மின்துகள்களை இடமாற்றம் செய்வது மின்னிறக்கம் எனப்படும்.
விடை:
தவறு. மின்னேற்றம்

Question 5.
ஒளியின் திசைவேகம் ஒலியின் திசைவேகத்தைவிட மிகவும் அதிகம்.
விடை:
சரி

V. பின்வரும் வினாக்களுக்கு கீழ்க்கண்ட குறிப்புகள் மூலம் விடையளிக்க

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல
ஈ) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரியானது

Question 1.
கூற்று : மின் உருகி அதிக மின்தடையையும், குறைந்த உருகுநிலையும் கொண்டது.
காரணம் : மின் உருகி குறைந்த மின்னோட்டம் மட்டும் பாய பயன்படுகிறது.
விடை:
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல

Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல்

Question 2.
கூற்று : நிக்ரோம் கம்பி அதிக மின்தடையைக் கொண்டது. காரணம் : செம்பு கம்பி குறைந்த மின்தடையைக் கொண்டது
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
மின்னழுத்த வேறுபாடு என்றால் என்ன?
விடை:
எலக்ட்ரான்கள் குறைந்த மின்னழுத்தமுள்ள பகுதியிலிருந்து அதிக மின்னழுத்தமுள்ள பகுதியை நோக்கி பாயும். இரண்டிற்கும் இடையேயான வேறுபாடு மின்னழுத்த வேறுபாடு எனப்படும்.

Question 2.
மின்னாற்பகுத்தல் என்றால் என்ன?
விடை:
கரைசலின் வழியாக மின்னோட்டத்தைச் செலுத்தும்போது கரைசலில் இருக்கும் மூலக்கூறுகள் நேர் மற்றும் எதிர் மின் அயனிகளாக வேதிச் சிதைவடைவது மின்னாற்பகுத்தல்
எனப்படும்.

Question 3.
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு என்றால் என்ன?
விடை:
கடத்தியின் வழியாக மின்னோட்டம் பாயும் போது, மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. இந்நிகழ்வு வெப்ப விளைவு எனப்படும்.

Question 4.
இடிச் சத்தம் கேட்பதற்கு முன்னரே மின்னல் நம் கண்களுக்குத் தெரிகிறது. ஏன்?
விடை:

  • புவிப் பரப்பிற்கும் மேகங்களுக்கும் இடையே உள்ள தூரம் அதிகமாக இருக்கும்.
  • ஒளியின் திசைவேகம் ஒலியின் திசைவேகத்தைவிட மிகவும் அதிகம்.
  • எனவே, இடிச்சத்தம் கேட்பதற்கு முன்னரே மின்னல் நம் கண்களுக்குத் தெரிகிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல்

Question 5.
மின் சாதனங்களில் பயன்படுத்தப்படும் மூன்று வகையான கம்பிகளை கூறுக.
விடை:

  • மின்னோட்டக் கம்பி
  • நடுநிலைக் கம்பி
  • புவித்தொடுப்புக் கம்பி

VII. விரிவான விடையளி

Question 1.
தங்க இலை மின்காட்டியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தை விவரி.
விடை:
அமைப்பு:

  • தங்க இலை மின்காட்டியானது தங்கம், வெள்ளி ஆகிய மிகச்சிறந்த மின்கடத்தியினால் உருவாக்கப்பட்டது.
  • இது ஒரு கண்ணாடி ஜாடியை கொண்டது.
  • பித்தளை கம்பி ஒன்று, ஒரு தக்கை வழியாக செங்குத்தாக பொருத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • பித்தளை கம்பியின் வெளிமுனை பித்தளையினால் ஆன ஒரு குமிழோடு இணைக்கப்பட்டுள்ளது.
  • மறுமுனை ஜாடியினுள்ளே இருக்கும் இரண்டு தங்க இலைகளோடு பொருத்தப்பட்டுள்ளது.

செயல்படும் விதம்:

  • மின்னூட்டம் பெற்ற பொருளொன்றினைக் கொண்டு பித்தளைக் குமிழினைத் தொடும்போது அதிலிருக்கும் மின்னூட்டம் பித்தளைக் குமிழ் வழியாக தங்க இலைகளுக்கு இடமாற்றமடைகிறது.
  • இரு இலைகளும் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன.
  • ஏனெனில் இரண்டு இலைகளும் ஒரே மின்னூட்டத்தைப் பெற்றிருக்கும்.

மின்னேற்றம்:

  • ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மின்துகள்களை இடமாற்றம் செய்தல்.
  • தங்க இலை நிலைமின்காட்டியில் பித்தளைக் குமிழ் வழியாக மின்னூட்டங்கள் இடமாற்றம் செய்கின்றன.

மின்னிறக்கம்:

  • ஒரே வகையான மின்னூட்டம் பெற்ற தங்க இலைகள் மின்னூட்டங்களை இழந்து விடுவதால் சிறிது நேரம் கழித்து மீண்டும் அருகே வரும். இது மின்னிறக்கம் ஆகும்.
  • பித்தளைக் குமிழை ஒருவர் தன் கையினால் தொடும்போது, இலைகளில் இருந்த மின்னோட்டம் கைகள் வழியாக புவிக்குள் பாய்கிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல் 7

Samacheer Kalvi 8th Science Guide Chapter 5 மின்னியல்

Question 2.
மின்னோட்டத்தின் வெப்ப விளைவின் பயன்கள் யாவை?
விடை:
மின் உருகி:

  • குறைவான உருகுநிலை கொண்ட வெள்ளீயம் மற்றும் காரீயம் கலந்த உலோகக் கலவையினால் தயாரிக்கப்பட்டது.
  • அதிகளவு மின்னோட்டம் பாயும்போது, சூடாகி உருகி, மின்சுற்று திறந்த சுற்றாகிவிடும்.
  • இதனால் மின் சாதனங்கள் பழுதாவது தவிர்க்கப்படும்.

மின் சமையற்கலன்:

  • கம்பிச் சுருளில் மின்னோட்டம் பாயும்போது சூடாவதால், சமையற்கலனும் சூடாகிறது.
  • வெளிப்படும் வெப்ப ஆற்றலை, வெப்பக் கடத்தல் மூலமாக சமையற்கலன் பெறுகிறது.

மின் கொதிகலன் :

  • கொதிகலனின் அடிப்பகுதியில் வெப்பமேற்றும் சாதனம் வைக்கப்பட்டிருக்கும்.
  • அந்த வெப்பம் திரவம் முழுவதும் வெப்பச்சலனம் மூலம் பரவுகிறது.

மின் இஸ்திரிப்பெட்டி:

  • வெப்பமேற்றும் சாதனத்தின் வழியாக மின்னோட்டம் பாயும் போது வெப்பம் உருவாகிறது.
  • அந்த வெப்பம், அடிப்பகுதியிலுள்ள கனமான உலோகப் பட்டைக்குக் கடத்தப்பட்டு, வெப்பநிலை அதிகரிக்கும்.
  • இந்த வெப்ப ஆற்றல் ஆடைகளைத் தேய்க்க உதவுகிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 20 வளரிளம் பருவமடைதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 20 வளரிளம் பருவமடைதல் Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 20 வளரிளம்

பருவமடைதல்

8th Science Guide வளரிளம் பருவமடைதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
………………………….. வயதிற்கு இடைப்பட்ட காலம் வளரிளம் பருவம் எனப்படும்.
அ) 10 முதல் 16
ஆ) 11 முதல் 17
இ) 11 முதல் 19
ஈ) 11 முதல் 20
விடை:
இ) 11 முதல் 19

Question 2.
உயிரினங்கள் பாலின முதிர்ச்சியடையும் காலம் ………………………. என்று அழைக்கப்படுகிறது.
அ) பருவமடைதல்
ஆ) வளரிளம் பருவம்
இ) வளர்ச்சி
ஈ) முதிர்ச்சி
விடை:
அ) பருவமடைதல்

Question 3.
பருவமடைதலின்போது, இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதி ஆனது ……………………………. ல் அகன்று காணப்படுகிறது.
அ) ஆண்கள்
ஆ) பெண்கள்
இ) அ மற்றும் ஆ
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) பெண்கள்

Question 4.
ஆடம்ஸ் ஆப்பிள் என்பது இதன் வளர்ச்சியைக் குறிக்கிறது.
அ) தொண்டைக்குழி
ஆ) தைராய்டு
இ) குரல்வளை
ஈ) பாரா தைராய்டு
விடை:
இ) குரல்வளை

Question 5.
வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் ………………………………. சுரப்பியின் சுரப்பினால் உண்டாகின்றன.
அ) வியர்வை
ஆ) எண்ணெய்
இ) வியர்வை மற்றும் எண்ணெய்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) எண்ணெய்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 வளரிளம் பருவமடைதல்

Question 6.
விந்து செல்லானது …………………………… ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது
அ) ஆண்குறி
ஆ) அண்டகம்
இ) கருப்பை
ஈ) விந்தகங்கள்
விடை:
ஈ) விந்தகங்கள்

Question 7.
நாளமில்லா சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப் பொருள்கள் ………………………………… எனப்படும்.
அ) ஹார்மோன்கள்
ஆ) நொதிகள்
இ) புரதங்கள்
ஈ) கொழுப்பு அமிலங்கள்
விடை:
அ) ஹார்மோன்கள்

Question 8.
ஆன்ட்ரோஜன் உற்பத்தி ………………………….. ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
அ) GH ஹார்மோன்
ஆ) LH ஹார்மோன்
இ) TSH ஹார்மோன்
ஈ) ACTH ஹார்மோன்
விடை:
ஆ) LH ஹார்மோன்

Question 9.
மாதவிடாயின் போது புரோஜெஸ்டிரானின் அளவு ………………………………
அ) குறைகிறது
ஆ) அதிகரிக்கிறது
இ) நின்று விடுகிறது
ஈ) இயல்பாக உள்ளது
விடை:
இ) நின்று விடுகிறது

Question 10.
நமது வாழ்வின் பிந்தைய பகுதியில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க ……………………………… எடுத்துக்
கொள்வது அவசியமாகும்.
அ) பொட்டாசியம்
ஆ) பாஸ்பரஸ்
இ) இரும்பு
ஈ) கால்சியம்
விடை:
ஈ) கால்சியம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 வளரிளம் பருவமடைதல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பெண்களில் அண்டகத்தால் ……………………………. உற்பத்தி செய்யப்படுகிறது.
விடை:
ஈஸ்ட்ரோஜன்

Question 2.
இனப்பெருக்க உறுப்புகளால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் …………………………… ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.
விடை:
லூட்டினைசிங் ஹார்மோன்

Question 3.
பாலூட்டுதலின் போது பால் உற்பத்தியானது ……………………………….. ஹார்மோனால் புரோலாக்டின் கட்டுப்படுத்தப்படுகிறது.
விடை:
புரோலாக்டின்

Question 4.
ஆண் மற்றும் பெண் இனச் செல்கள் இணைந்து …………………………… ஐ உருவாக்குகின்றன.
விடை:
கரு

Question 5.
பருவமடைதலின் போது ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சி ………………………….. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
பூப்படைதல்

Question 6.
பொதுவாக அண்டம் விடுபட்ட 14 நாட்களுக்குப் பின் ………………………………….. ஏற்படுகிறது.
விடை:
மாதவிடாய்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 வளரிளம் பருவமடைதல்

Question 7.
……………………….. என்பது புரதங்கள், கார்போ ஹைட்ரேட்டுகள், கொழுப்பு மற்றும் உயிர்ச்சத்துக்களை குறிப்பிட்ட அளவில் உள்ளடக்கியதாகும்.
விடை:
சரிவிகித உணவு

Question 8.
தைராய்டு சுரப்பி தொடர்புடைய நோய்களைத் தடுப்பதில் …………………………. உதவுகிறது.
விடை:
அயோடின்

Question 9.
இரும்புச் சத்துப் பற்றாக்குறை …………………….. க்கு வழிவகுக்கிறது.
விடை:
இரத்த சோகை

Question 10.
பெண்களில் கருவுறுதல் ……………………………….. ல் நிகழ்கிறது.
விடை:
பெலோப்பியன் நாளத்தி

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்துக

Question 1.
ஆண்கள் மற்றும் பெண்களில் பருவமடைதலின் போது, திடீரென உயரம் அதிகரிக்கின்றது.
விடை:
சரி

Question 2.
கருப்பையிலிருந்து அண்டம் வெளியேறுதல் அண்டம் விடுபடுதல் என அழைக்கப்படுகிறது.
விடை:
தவறு. அண்டகத்திலிருந்து அண்டம் வெளியேறுதல் அண்டம் விடுபடுதல் என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 வளரிளம் பருவமடைதல்

Question 3.
கர்ப்பத்தின் போது, கார்பஸ்லூட்டியம் தொடர்ந்து வளர்ந்து அதிக அளவில் ஈஸ்ட்ரோஜன்
மற்றும் புரோஜெஸ்டிரானை உற்பத்தி செய்கிறது.
விடை:
தவறு. கர்ப்பத்தின் போது கார்பஸ்லூட்டியம் தொடர்ந்து வளர்ந்து அதிக அளவில் புரோஜெஸ்டிரானை உற்பத்தி செய்கிறது.

Question 4.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நாப்கின்கள் அல்லது டாம்பூன்களைப் பயன்படுத்துதல் நோய்த் தொற்றிற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றது.
விடை:
தவறு. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நாப்கின்கள் அல்லது
டாம்பூன்களைப் பயன்படுத்துதல் நோய்த் தொற்றிற்கான வாய்ப்பை குறைக்கிறது.

Question 5.
சுத்தமான கழிவறைகளை மலம் கழிக்கப் பயன்படுத்துதல் ஒரு நல்ல பழக்கமாகும்.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 20 வளரிளம் பருவமடைதல் 1

V. சுருக்கமாக விடையளி

Question 1.
வளரிளம் பருவம் என்றால் என்ன?
விடை:

  • வளரிளம் பருவம் என்ற சொல்லானது ‘அடோலசர்’ என்ற இலத்தீன் மொழி வார்த்தையிலிருந்து வந்ததாகும்.
  • இதன் பொருள் வளர்வதற்க்கு’ அல்லது முதிர்ச்சிக்கான வளர்ச்சி’ எனப் பொருளாகும்.
  • இது குழந்தைப் பருவத்திலிருந்து வயது வந்தோர் நிலைக்கு மாறும் காலம் எனப்படும்.

Question 2.
பருவமடைதலின் போது ஏற்படும் மாற்றங்களைப் பட்டியலிடுக.
விடை:

  1. உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள்
  2. உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்
  3. முதல்நிலை பால் பண்புகளின் வளர்ச்சி
  4. இரண்டாம்நிலை பால் பண்புகளின் வளர்ச்சி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 வளரிளம் பருவமடைதல்

Question 3.
இரண்டாம்நிலை பால் பண்புகள் என்றால் என்ன?
விடை:

  • இரண்டாம்நிலை பால் பண்புகள் ஆண்கள் மற்றும் பெண்களிடையே உடல் அமைப்பில் வேறுபாட்டை ஏற்படுத்துகின்றன.
  • இவை ஆண்களில் விந்தகங்களால் சுரக்கப்படும் டெஸ்ட்டோஸ்டீரான் அல்லது ஆண்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோனாலும். பெண்களில் அண்டகங்களால் சுரக்கப்படும் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோனாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

Question 4.
கருவுறுதல் என்றால் என்ன?
விடை:
ஆண் இனச்செல்லான விந்துச் செல்லும், பெண் இனச்செல்லான அண்டமும் இணைந்து கருவினை தோற்றுவிக்கும் நிகழ்ச்சி கருவுறுதல்.

Question 5.
பூப்படைதல் – குறிப்பு வரைக.
விடை:

  • பருவமடைதலின் போது முதன் முதலில் தோன்றும் மாதவிடாய் சுழற்சி பூப்படைதல் எனப்படுகிறது.
  • பருவமடைதலின் தொடக்க நிலையில் அண்டம் முதிர்ச்சியடைகிறது. இதுவே வளரிளம் பருவத்தின் தொடக்கமாகும்.
  • இப்பருவத்தில், மனம் மற்றும் உணர்வில் முதிர்ச்சி ஏற்படுகின்றது.
  • மேலும், உடல் வளர்ச்சி ஏறக்குறைய முடிவடைகிறது.

Question 6.
கருவுறுதல் நிகழ்வை விளக்குக.
விடை:

  • அண்டகத்திலிருந்து விடுபட்ட அண்டம் பெலோப்பியன் நாளத்தை அடைந்தவுடன் விந்தணுவினை சந்திக்கும் பொழுது கருவுறுதல் நடைபெறுகிறது.
  • கருவுற்ற முட்டை வளர்ச்சியடைந்தவுடன், அது கருப்பையில் பதிய வைக்கப்படுகிறது.
  • கார்பஸ்லூட்டியத்திலிருந்து அதிக புரோஜெஸ்ட்டிரான் உற்பத்தி செய்யப்படுகிறது. இது கர்ப்பத்தைத் தோற்றுவிக்கிறது.
  • பொதுவாக இது 280 நாட்கள் நீடிக்கும், இதன் முடிவில் குழந்தைப் பிறப்பு உண்டாகிறது.

Question 7.
பெண்களில், மாதவிடாய் சுழற்சியின் போது தூய்மையின் முக்கியத்துவம் பற்றிக் கூறுக.
விடை:

  • மாதவிடாய் சுழற்சியின் போது பெண்கள் தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டும்.
  • துணிகளை விட சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டும்.
  • ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நாப்கின்கள் அல்லது டாம்பூன்களைப் பயன்படுத்துதல் நோய் தொற்றிற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
  • மாதவிடாயின் அளவைப் பொறுத்து அவை அடிக்கடி மாற்றப்பட வேண்டும்

Question 8.
வளரிளம் பருவம் குழந்தைப் பருவத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
விடை:

குழந்தைப் பருவம்வளரிளம் பருவம்
1. இது குழந்தை பிறப்புக்கும் 11 வயது வரைக்குமுள்ள காலத்தை குறிப்பதாகும்.இது 11 வயது முதல் 19 வயது வரைக்கும் உள்ள காலத்தினை குறிப்பதாகும்.
2. பால்பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் தோன்றுகிறது.முதல் நிலை பால் பண்புகளின் வளர்ச்சி மற்றும் இரண்டாம் நிலைப் பால் பண்புகள் தோன்ற ஆரம்பிக்கின்றது.
3. குழந்தைகளின் மூளை 70% வரைக்கும் வளர்ச்சியடைகிறது.உயரம், எடை, பால் உறுப்புகள், தசை தொகுப்பு, மூளையின் அமைப்பு மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 வளரிளம் பருவமடைதல்

VI. விரிவாக விடையளி

Question 1.
வளரிளம் பருவத்தில் ஆண்கள் மற்றும் பெண்களில் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள் யாவை?
விடை:
பருவமடையும் போது ஏற்படும் நான்கு முக்கிய மாற்றங்கள் குழந்தைப் பருவ உடல் அமைப்பினை வயது வந்தோரின் உடல் அமைப்பாக மாற்றுகின்றன. இந்த மாற்றங்களாவன:
1. உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள்
2. உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்
3. முதல்நிலை பால் பண்புகளின் வளர்ச்சி
4. இரண்டாம்நிலை பால் பண்புகளின் வளர்ச்சி

1. உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள்:

  • பருவமடையும் நேரத்தில் ஏற்படும் முதல் பெரிய மாற்றம் வளர்ச்சியாகும்.
  • இது உடலின் உயரம் மற்றும் எடையில் ஏற்படும் அதிகரிப்பாகும்.
  • வழக்கமாக பெண்களில் இது 10 முதல் 12 வயதில் துவங்கி 17 முதல் 19 வயதில் முடிவடைகின்றது.
  • ஆண்களில் 12 முதல் 13 வயதில் துவங்கி 19 முதல் 20 வயதில் முடிவடைகின்றது.
  • வளரிளம் பருவத்தில் ஆண்களின் உயரத்தில் சராசரியாக 23 செ .மீ. அதிகரிப்பும், பெண்களின் உயரத்தில் சராசரியாக 26 செ.மீ. அதிகரிப்பும் ஏற்படுகின்றது.
  • உயரத்துடன் அவர்களின் உடல் எடையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கின்றது.
  • ஆனால் எடை அதிகரிப்பானது, உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகிறது.
  • இந்தக் காலகட்டத்தில் சராசரி எடை அதிகரிப்பானது பெண்களில் 17 கிலோகிராமாகவும், ஆண்களில் 19 கிலோகிராமாகவும் உள்ளது.
  • இந்தக் காலகட்டத்தில் ஆண்களில் தசை வளர்ச்சியும், பெண்களில் கொழுப்பின் அளவும் அதிகரிக்கிறது.

2. உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்:

  • குழந்தைகளாக இருந்தபோது சிறியதாகக் காணப்பட்ட சில குறிப்பிட்ட உடல் பாகங்கள் படிப்படியாக அளவில் பெரிதாகி முதிர்ச்சியடைகின்றன. இதனை நாம் கைகள் மற்றும் கால்களில் காணலாம்.
  • குழந்தைப் பருவத்தில் உடல் பகுதியை விட கால்கள் அதிகமாக வளர்ச்சியுறுகின்றன. ஆனால், பருவமடைதலின் போது உடல் பகுதியும் வளர்ச்சியுறுகின்றது.
  • மேலும், உடல் பகுதியில் இடுப்பு மற்றும் தோள்பட்டை ஆகியவை விரிவடைந்து உடலானது
    வயது வந்தோரின் தோற்றத்தைப் பெறுகிறது.

3. முதல்நிலை பால் பண்புகளின் வளர்ச்சி:

  • பருவமடைதலின் போது ஆண்கள் மற்றும் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் முழுமையாக செயல்படுகின்றன.
  • ஆண்களில், விந்தகங்கள் பெரிதாக வளர்ச்சியடைவதைத் தொடர்ந்து இனப்பெருக்க உறுப்பின் நீளம் மற்றும் அதன் அளவு அதிகரிக்கின்றது.
  • இதேபோல், பெண்களின் இனப்பெருக்க உறுப்பும் பருவமடைதலின் போது வளர்ச்சி அடைகின்றது. இதனால், கருப்பையின் அளவு மற்றும் அண்டகங்களின் எடை ஆகியவை இப்பருவத்தில் அதிகரிக்கின்றன

Question 2.
இனப்பெருக்கத்தில் ஹார்மோன்களின் பங்கினை விளக்குக.
விடை:

  • ஆண்கள் மற்றும் பெண்களில் இனப்பெருக்கம் மற்றும் இனப்பெருக்க நடத்தைகள் முக்கியமாக LH (லூட்டினைசிங் ஹார்மோன்) மற்றும் FSH (பாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன்) ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
  • LH-ன் தூண்டுதலால் ஆண் இனப்பெருக்க ஹார்மோனான ஆண்ட்ரோஜன் விந்தகங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • பின்னர் விந்தணுக்கள் தீவிரமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • மனிதரில் பருவமடைதலில் தொடங்கும் விந்து செல் உற்பத்தியானது வாழ்நாள் முழுவதும் தொடரலாம்.

பாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன் (FSH):

  • பெண்களில் FSH எனும் ஹார்மோன் கிராஃபியன் பாலிக்கிள்களின் வளர்ச்சியைத் தூண்டி ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்கிறது.
  • ஆண்களில் விந்து நாளங்களின் வளர்ச்சி மற்றும் விந்தணுவாக்கத்திற்கு இது அவசியமாகிறது.

லூட்டினைசிங் ஹார்மோன் (LH):
பெண்களில் அண்டம் விடுபடுதல், கார்பஸ்லூட்டியம் உருவாக்கம் மற்றும் லூட்டியல் ஹார்மோனான புரோஜெஸ்ட்டிரான் உற்பத்தி, கிராஃபியன் பாலிக்கிள்களின் இறுதி முதிர்வுநிலை ஆகியவற்றிற்கு இந்த ஹார்மோன் தேவைப்படுகிறது.

ஆண்களில் விந்தகங்களில் காணப்படும் இடையீட்டுச் (லீடிக்) செல்களைத் தூண்டி டெஸ்டோஸ்டீரானை உற்பத்தி செய்வதால், இது இடையீட்டுச் செல்களைத் தூண்டும் ஹார்மோன் எனப்படுகிறது (ICSH).

புரோலாக்டின் (PRL) அல்லது லாக்டோஜெனிக் ஹார்மோன்:
பாலூட்டுதலின் போது பாலை உற்பத்தி செய்வது இதன் பணியாகும்.

ஆக்சிடோசின் ஹார்மோன்:

  • ஆக்சிடோசின்ஹார்மோன் மார்பகங்களிலிருந்து பால் வெளியேறுதலுக்குக் காரணமாகிறது.
  • மேலும், குழந்தைப் பிறப்பின் போது தசைகளை சுருங்கச் செய்து குழந்தைப் பிறப்பை எளிதாக்குகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 வளரிளம் பருவமடைதல்

Question 3.
மாதவிடாய் சுழற்சியினைப் பற்றி சுருக்கமாக விவரி.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 20 வளரிளம் பருவமடைதல் 2

  • பெண்களில் மாதவிடாய் சுழற்சியின் தொடக்கமானது பருவமடைதலில் துவங்குகிறது.
  • மாதவிடாய் சுழற்சி கருப்பையின் எண்டோமெட்ரியல் சுவர் உரிதல் மற்றும் இரத்தப்போக்குடன் தொடங்குகிறது.
  • எண்டோமெட்ரியல் சுவர் உரிதலானது, குறிப்பிட்ட கால இடைவெளியில் கருப்பையை கர்ப்பத்திற்குத் தயாராவதைக் குறிக்கிறது.
  • ஒரு பெண்ணின் அண்டகத்திலிருந்து வெளியாகும் கருமுட்டையானது அண்டவிடுப்பின்
    போது விந்தணுக்களால் கருத்தரிக்காவிட்டால் மாதவிடாய் ஏற்படுகிறது.

1. ஒரு பெண் சுமார் 10 முதல் 20 வயதில் பருவ வயதை அடையும் போது, அவளது இரத்தத்தில் வெளியாகும் பாலியல் ஹார்மோன்கள் அவளது அண்டகத்தில் உள்ள சில அண்டத்தை முதிர்ச்சியடையச்செய்கின்றன.

2. பொதுவாக ஒரு அண்டகத்திலிருந்து ஒரு முதிர்ச்சியடைந்த அண்டமானது, 28 நாட்களுக்கு ஒருமுறை அண்டநாளத்தை வந்தடைகிறது. இது அண்டம் விடுபடுதல் என்றழைக்கப்படுகிறது.

3. அண்டம் விடுபடுதலுக்கு முன், கருப்பையின் சுவரானது தடித்து, மென்மையானதாகவும், முழுவதும் சிறிய இரத்தக் குழாய்களைக் கொண்டும் காணப்படுகிறது. இது கருவுற்ற முட்டையை ஏற்க தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது.

4. அண்டமானது கருவுறவில்லையெனில், தடித்த மென்மையான கருப்பைச் சுவர் தேவைப்படாது. எனவே, அது சிதைந்து விடுகிறது. அதனால், தடித்த, மென்மையான கருப்பைச் சுவர் இரத்தக் குழாயுடன் சேர்ந்து சிதைந்த அண்டத்துடன் கலவிக் கால்வாயின் வழியாக இரத்தமாக வெளியேறுகிறது. இதுவே மாதவிடாய் எனப்படுகிறது.

5. அண்டம் விடுபடுதலிலிருந்து 14 ஆவது நாள் தோன்றும் மாதவிடாய் 3 முதல் 4 நாட்கள் வரை காணப்படுகிறது.

6. மாதவிடாய் முடிந்ததும், அடுத்த கருமுட்டையைப் பெற கருப்பையின் உட்புறப் பகுதி தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது.

7. இந்த நிகழ்வின்போதும் அண்டமானது கருவுறவில்லையெனில், மறுபடியும் மாதவிடாய் நடைபெறுகிறது. பெண்களில் 28 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும்.

Question 4.
வளரிளம் பருவத்தினருக்கான ஊட்டச்சத்துத் தேவைகள் பற்றி சுருக்கமாக விளக்குக.
விடை:

  • வளரிளம் பருவம் என்பது விரைவான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான ஒரு நிலையாகும்.
  • எனவே, முறையான வளர்ச்சி மற்றும் உடல் செயல்பாடுகளுக்கு சரியான ஆற்றல் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு தேவைப்படுகிறது.
  • வளரிளம் பருவத்தில் சரிவிகித உணவு மிகவும் முக்கியமானதாகும்.
  • சரிவிகித உணவில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் தேவையான விகிதத்தில் அடங்கியுள்ளன.
  • இந்தியாவில் சரிவிகித உணவு என்பது ரொட்டி, சோறு, பருப்பு (பருப்பு வகைகள்), பால், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 20 வளரிளம் பருவமடைதல் 3

  • இப்பருவத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் உடல் வளர்ச்சியைத் தடுப்பது மட்டுமல்லாமல், அறிவு வளர்ச்சியையும் பாதிக்கின்றன.
  • மேலும் இது பாலியல் முதிர்ச்சியையும் தாமதப்படுத்துகிறது.
  • இந்த வளர்ச்சிக் காலத்தில் புரதங்கள் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வது அவசியமானதாகும்.
  • இவைதவிர, வளரிளம் பருவத்தினருக்கு பின்வரும் சத்துக்கள் உணவில் தேவைப்படுகின்றன.

கனிமங்கள்:
வளரிளம் பருவத்தில் எலும்பின் எடை மற்றும் இரத்தத்தின் கனஅளவு அதிகரிப்பதால், – உடலுக்கு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற கனிமங்கள் தேவைப்படுகின்றன.

கால்சியம்:

  • நமது வாழ்வின் பிந்தைய பகுதியில் உண்டாகும் ஆஸ்டியோபோரோ சிஸைத் (எலும்பு உடையும் தன்மை) தடுக்க கால்சியத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
  • இது பால் மற்றும் பால் பொருள்களில் காணப்படுகிறது. பால் ஒரு சரிவிகித உணவாகும்.
  • மேலும் தாய்ப்பால் சரியான ஊட்டச்சத்தினை வழங்குகிறது.

அயோடின்:
தைராய்டு சுரப்பி தொடர்பான நோய்களைத் தடுக்க இது உதவுகிறது.

இரும்பு:

  • இரத்தத்தை உருவாக்குவதில் இரும்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான பச்சை இலை காய்கறிகள், வெல்லம், இறைச்சி, சிட்ரஸ் பழங்கள், நெல்லிக்காய் மற்றும் முழு பருப்பு வகைகள் ஆகியவை வளரிளம் பருவத்தினருக்கு உகந்தவையாகும்.
  • உணவில் உள்ள இரும்புச் சத்துக் குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்துகிறது.
  • எனவே, வளரிளம் பருவத்தினருக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவு அவசியமாகும்.
  • ஆண்களில் தசைகளின் வளர்ச்சி அதிகளவு ஏற்படுவதால் இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது.
  • மாறாக, பெண்களில் இது தசை வளர்ச்சி மற்றும் மாதவிடாயின் காரணமாக ஏற்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 வளரிளம் பருவமடைதல்

VII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
தங்களைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உன் வகுப்பு நண்பர்களுக்கு நீ என்ன பரிந்துரை செய்வாய்?
விடை:
ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிக்க வேண்டும். அடிவயிறு, இடுப்புப்பகுதி மற்றும் பிறப்புறுப்புகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி நன்றாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

உள்ளாடைகளை தினந்தோறும் மாற்ற வேண்டும். பருத்தியால் ஆன உள்ளாடைகளையே, சுத்தமாக துவைத்துப் பயன்படுத்த வேண்டும்.

பதின்ம வயதில் (Teenage) உள்ளவர்களுக்கு வியர்வைச் சுரப்பியின் அதிகப்படியான செயல்பாட்டினால் சில நேரங்களில் உடலில் துர்நாற்றம் ஏற்படும். உடலை சுத்தமாகப் பராமரிக்கவில்லையெனில், பூஞ்சை, பாக்டீரியா மற்றும் தேவையற்ற பிற நோய்த் தொற்று
உண்டாக வாய்ப்பு உள்ளது.

Question 2.
வளரிளம் பருவமானது ஆற்றல்மிக்க பருவம். இப்பருவத்தில் எந்த மாதிரியான ஆரோக்கியம் மற்றும் நல்ல பழக்கங்களை நீங்கள் உருவாக்க விரும்புகிறீர்கள்?
விடை:

  • வளரிளம் பருவம் என்பது விரைவான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான ஒரு நிலையாகும்.
  • எனவே, முறையான வளர்ச்சி மற்றும் உடல் செயல்பாடுகளுக்கு சரியான ஆற்றல் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு தேவைப்படுகிறது.
  • வளரிளம் பருவத்தில் சரிவிகித உணவு மிகவும் முக்கியமானதாகும்.
  • சரிவிகித உணவில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் தேவையான விகிதத்தில் அடங்கியுள்ளன.
  • வளரிளம் பருவத்தில், வளரும் குழந்தைகள் உணவு, உடற்பயிற்சி மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
  • தனிப்பட்ட சுகாதாரம் என்பது ஒரு மனிதனின் ஆளுமையினைக் குறிக்கும் தெளிவான குறியீடாகும்.

8th Science Guide வளரிளம் பருவமடைதல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
‘அடோலசர்’ என்ற இலத்தீன் மொழியின் பொருள் என்ன?
அ) கட்டுவது
ஆ) வளர்வதற்கு
இ) பெரிதாவது
ஈ) உடலமைப்பு
விடை:
ஆ) வளர்வதற்கு

Question 2.
ஒரு ஆண் பருவமடையும் சாரசரி வயது என்ன?
அ) 9 – 11
ஆ) 14 – 15
இ) 16 – 17
ஈ) 12 – 13
விடை:
ஈ) 12 – 13

Question 3.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது எண்ணெய் சுரப்பி
அ) வியர்வைச் சுரப்பி
ஆ) கண்ணீர் சுரப்பி
இ) செபேசியஸ் சுரப்பி
ஈ) கோப்பர்ஸ் சுரப்பி
விடை:
இ) செபேசியஸ் சுரப்பி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 வளரிளம் பருவமடைதல்

Question 4.
எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் முதல்நிலை பாலுறுப்பு ஆகும்.
அ) அண்டகம்
ஆ) விந்தகம்
இ) பெலோப்பியன் நாளம்
ஈ) கருப்பை
விடை:
அ) அண்டகம்

Question 5.
ஆண்களின் விந்தகங்களில் காணப்படும் எந்த செல் டெஸ்டோஸ்டீரானை உற்பத்தி செய்கிறது.
அ) செர்டோலை செல்கள்
ஆ) லீடிக் செல்கள்
இ) கோப்பை வடிவச் செல்கள்
ஈ) ஆக்ஸின்டிக் செல்கள்
விடை:
ஆ) லீடிக் செல்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஆண்களில் வளர்ந்து பெரிதாகி வெளியே துருத்திக் கொண்டிருக்கும் குரல் ஒலிப்பெட்டகமானது …………………………. எனப்படுகிறது.
விடை:
ஆடம்ஸ் ஆப்பிள்

Question 2.
பருவமடைதலில் ……………………… முக்கியப் பங்கு வகிக்கின்றன.
விடை:
ஹார்மோன்கள்

Question 3.
…………………………… எனப்படும் ஹார்மோனால் பெண்களில் இரண்டாம் நிலைப்பால் பண்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
விடை:
ஈஸ்ட்ரோஜன்

Question 4.
பெண்களில் மாதவிடாய் பொதுவாக ………………………. நாட்கள் வரை காணப்படும்.
விடை:
3 முதல் 5

Question 5.
…………………………… காலத்தில் மனநலம் சார்ந்த பிரச்சனைகளான கவலை, எரிச்சல், சோர்வு மற்றும் கவனக்குறைவு ஆகியவை ஏற்படலாம்.
விடை:
மாதவிடைவுக்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 வளரிளம் பருவமடைதல்

III. சரியா? அல்லது தவறா? தவறு எனில் சரியான விடையை குறிப்பிடவும்

Question 1.
உயிரியல் ரீதியாக கூறினால், பருவமடைதலின் போது ஒவ்வொருவரின் உடலிலும் தோன்றும் உடல் ரீதியான மாற்றங்கள் உடல் வளர்ச்சியில் முடிவடைகின்றன.
விடை:
சரி

Question 2.
ஆண்களில் விந்தகமும், பெண்களில் அண்டகமும் இரண்டாம் நிலை பால் பண்புகள் ஆகும்.
விடை:
தவறு.
ஆண்களில் விந்தகமும், பெண்களில் அண்டகமும் முதல்நிலை பால் பண்புகள் ஆகும்.

Question 3.
வளரிளம் பருவத்தில் எண்ணெய் சுரப்பிகளின் அதிகப்படியான சுரப்பியின் காரணமாக பல ஆண்கள் மற்றும் பெண்கள் முகத்தில் பருக்கள் தோன்றுகின்றன.
விடை:
சரி

Question 4.
ஒரு சராசரி ஆணின் இனப்பெருக்க காலமானது 13 வயதில் தொடங்கி 50 வயதில் முடிவடைகின்றது.
விடை:
தவறு.
ஒரு சராசரி ஆணின் இனப்பெருக்க காலமானது 13 வயதில் தொடங்கி வாழ்நாள் முழுவதும் நீடிக்கின்றது.

Question 5.
அண்டமானது கருவுறவில்லையெனில் தடித்த மென்மையான கருப்பை சுவர் தேவைப்படாது. எனவே அது சிதைந்து விடுகிறது.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 20 வளரிளம் பருவமடைதல் 4

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 வளரிளம் பருவமடைதல்

V. சுருக்கமாக விடையளி

Question 1.
பருவமடைதலை பாதிக்கின்ற பல்வேறு காரணிகள் யாவை?
விடை:

  • மரபணு மற்றும் உயிரியல் தாக்கங்கள்
  • வாழ்க்கை நிகழ்வுகள்
  • சமூக பொருளாதார நிலை
  • ஊட்டச்சத்து
  • உணவு மற்றும் உடல் கொழுப்பின் அளவு

Question 2.
ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க ஹார்மோன்களின் பெயர்களைத் தருக.
விடை:

  • ஆண் இனப்பெருக்க ஹார்மோன்: டெஸ்டோஸ்டீரான் (ஆண்ட்ரோஜன்)
  • பெண் இனப்பெருக்க ஹார்மோன்: ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரான்

Question 3.
இனப்பெருக்க ஆரோக்கியத்தினை வரையறு.
விடை:
உலக சுகாதார அமைப்பு (WHO) இனப்பெருக்க ஆரோக்கியத்தை வளரிளம் பருவத்தின் நடத்தை, உணர்ச்சி, உடல் மற்றும் சமூக அம்சங்களின் மொத்தக்கூறாக வரையறுத்துள்ளது.

Question 4.
ஆண் மற்றும் பெண்களில் வளரிளம் பருவத்தில் இரும்புச்சத்து குறைவதற்கான காரணத்தை தருக.
விடை:
ஆண்களில் தசைவளர்ச்சி அதிகளவு ஏற்படுவதாலும், பெண்களில் தசை வளர்ச்சி மற்றும் மாதவிடாய் காரணமாகவும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.

Question 5.
சமீப காலங்களில் பெண்கள் மிகச்சிறிய வயதிலேயே பருவமடைகின்றனர். காரணம் தருக.
விடை:

  • இது உணவுப் பழக்கத்தினால் ஏற்படுகிறது.
  • அதிகளவில் சத்தற்ற நொறுக்குத்தீனி உணவை உண்ணும் போது உடல் வளர்ச்சி அதிகரித்து பெரியவர்களைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 வளரிளம் பருவமடைதல்

VI. விரிவாக விடையளி

Question 1.
ஆண் மற்றும் பெண்களில் காணப்படும் இரண்டாம் நிலை பால் பண்புகளை வேறுபடுத்துக.
விடை:

பெண்கள்ஆண்கள்
1 உயரம் மற்றும் எடை அதிகரிக்கின்றன.உயரம் மற்றும் எடை அதிகரிக்கின்றன.
2 கொழுப்பு மற்றும் தோலுக்கடியில் திசுக்கள் உருவாகின்றன.தசைகள் உருவாகின்றன.
3. இடுப்புப் பகுதி விரிவடைகின்றது.தோள்பட்டை விரிவடைகின்றது.
4. அக்குள் மற்றும் பெண் குறிப்பகுதியில் உரோமம் வளர்கிறது.அக்குள், ஆண்குறிப் பகுதி மற்றும் முகத்தில் உரோமம் வளர்கிறது.
5. குரலானது உரத்த மற்றும் கீச்சிடும் ஒலியாகின்றது.குரலொலிப் பெட்டகத்தின் நீட்சியினாலும், குரல்வளை பெரிதாவதாலும் குரல் ஒலி தடைபடுகின்றது.

Question 2.
சிறு குறிப்பு தருக.
அ) அண்டம் விடுபடுதல்,
ஆ) மாதவிடாய்
விடை:
அ) அண்டம் விடுபடுதல்:

  • அடுத்த அண்ட சுழற்சி தொடங்குவதற்கு சுமார் 14 நாட்களுக்கு முன்பு அண்டவிடுவிப்பு ஏற்படுகிறது.
  • இதனால் 28 நாட்கள் கொண்ட மாதவிடாய் சுழற்சியில் அண்டமானது 14ஆம் நாள் விடுபடுகின்றது.
  • கிட்டத்தட்ட 28 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை அண்டகத்திலிருந்து முதிர்ச்சியடைந்த அண்டமானது வெளியேறுகிறது.
  • இவ்வாறு அண்டமானது அண்டகத்திலிருந்து வெளியேறுவது அண்டம் விடுபடுதல் என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த காலகட்டத்தில் கருவுற்ற முட்டையைப் பெற கருப்பையின் சுவர் தடிமனாகிறது. இது கருவுறுதலைத் தோற்றுவிக்கிறது.

ஆ) மாதவிடாய்:

  • அண்டமானது கருவுறவில்லை எனில், கார்பஸ்லூட்டியம் சிதைவடையத் தொடங்குகிறது.
  • புரோஜெஸ்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் உற்பத்தி நின்று விடுகிறது.
  • கருவுறாத முட்டை, கருப்பையின் தடித்த சுவர் மற்றும் அதன் இரத்த நாளங்கள் சிதைவடைகின்றன.
  • இதனால் பெண்களின் இனப்பெருக்கக் குழாயில் இரத்தப்போக்கு ஏற்படும். இதுவே மாதவிடாய் என அழைக்கப்படுகிறது.
  • மாதவிடாய் சுமார் 28 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுகிறது.
  • இது 3 முதல் 5 நாட்கள் வரை காணப்படும்.
  • ஆரம்பத்தில், சிலருக்கு மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்றதாக இருக்கலாம். இது வழக்கமான நிகழ்வாக மாற சிறிது காலம் தேவைப்படுகிறது.
  • இது ஒரு வருடத்திற்கும் மேலாக ஒழுங்கற்றதாகவே காணப்பட்டால், அவசியம் மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 வளரிளம் பருவமடைதல்

3. சிறு குறிப்பு தருக.
அ) மாதவிடைவு,
ஆ) உடற்பயிற்சியின் முக்கியத்துவம்
விடை:
அ) மாதவிடைவு:

  • பெண்களின் வாழ்க்கையில், இனப்பெருக்க நிகழ்வின் இறுதிநிலையைக் குறிப்பது மாதவிடாய் நிறுத்தம் எனப்படும்.
  • மாதவிடாய் சுழற்சி 45 முதல் 50 வயதில் நின்றுவிடுகிறது. இவ்வாறு மாதவிடாய் நின்றுவிடுவது மாதவிடைவு என்று அழைக்கப்படுகிறது.
  • மாதவிடைவுக் காலத்தில் மனநலம் சார்ந்த பிரச்சனைகளான கவலை, எரிச்சல், சோர்வு மற்றும் கவனக்குறைவு ஆகியவை ஏற்படலாம்.
  • அண்டகங்கள் அகற்றப்படுதல் அல்லது இடுப்புப்பகுதியானது கதிர்வீச்சு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுதல் போன்றவற்றினாலும் மாதவிடைவு உண்டாகிறது.

ஆ) உடற்பயிற்சி:

  • தூய்மையான காற்றில் நடைப்பயிற்சி மேற்கொள்வதும், விளையாடுவதும் உடலைக்கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
  • இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் வெளிஅரங்கு விளையாட்டுகள் போன்றவற்றை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.
  • உடல் செயல்பாடானது சிறந்த ஆரோக்கியம், நல்ல தூக்கம் மற்றும் மன அமைதி ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.
  • மனஅமைதி நாளுக்கு நாள் மகிழ்ச்சியை ஊக்குவிக்கிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 4 வெப்பம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 4 வெப்பம் Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 4 வெப்பம்

8th Science Guide வெப்பம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
வெப்பம் என்பது ஒரு வகையான ……………………
அ) மின்னாற்றல்
ஆ) ஈர்ப்பு ஆற்றல்
இ) வெப்ப ஆற்றல்
ஈ) எதுமில்லை
விடை:
இ) வெப்ப ஆற்றல்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 4 வெப்பம்

Question 2.
ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும்போது பின்வருவனவற்றுள் எது / எவை நிகழ முடியும்?
அ) விரிவடைதல்
ஆ) வெப்பநிலை உயர்வு
இ) நிலைமாற்றம்
ஈ) அனைத்தும்
விடை:
ஈ) அனைத்தும்

Question 3.
பின்வரும் பொருள்களில் எது அதிக வெப்ப ஆற்றலை உட்கவர்கிறது?
அ) திடப்பொருள்
ஆ) திரவப்பொருள்
இ) வாயுப்பொருள்
ஈ) அனைத்தும்
விடை:
அ) திடப்பொருள்

Question 4.
திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும் போது, எது அதிக விரிவுக்கு உட்படும்? அ) திடப்பொருள்
ஆ) திரவப்பொருள்
இ) வாயுப்பொருள்
ஈ) அனைத்தும்
விடை:
இ) வாயுப்பொருள்

Question 5.
திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு …………………. என்று பெயர்.
அ) பதங்கமாதல்
ஆ) குளிர்வித்தல்
இ) உறைதல்
ஈ) படிதல்
விடை:
இ) உறைதல்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 4 வெப்பம்

Question 6.
வெப்பக்கடத்தல் முறையில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம் …………………….. ல் நடைபெறும்.
அ) திடப்பொருள்
ஆ) திரவப்பொருள்
இ) வாயுப்பொருள்
ஈ) அனைத்தும்
விடை:
அ) திடப்பொருள்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
கலோரிமீட்டர் என்ற சாதனம்_ ஐ அளக்கப் பயன்படுகிறது.
விடை:
ஏற்கப்பட்ட அல்லது
இழக்கப்பட்ட
வெப்பத்தினை

Question 2.
ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்ப நிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ………………. எனப்படும்.
விடை:
1 கலோரி

Question 3.
வெப்பக் கட்டுப்படுத்தி என்பது ………………..ஐ மாறாமல் வைத்திருக்கிறது.
விடை:
வெப்பநிலை

Question 4.
வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு ஒரு பொருள் மாறும் நிகழ்விற்கு ……………………. என்று பெயர்.
விடை:
குளிர்தல்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 4 வெப்பம்

Question 5.
ஒரு அமைப்பிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது, அதன் வெப்பநிலை ……………..
விடை:
அதிகரிக்கும்

Question 6.
ஒரு கலனிலுள்ள திரவத்தின் வெப்பநிலையை உயர்த்தும் போது அணுக்களுக்கிடையேயான தொலைவு ………….
விடை:
குறையும்

III. சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக

Question 1.
ஒரு பொருளுக்கு அளிக்கப்படும் வெப்ப ஆற்றல், அப்பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது.
விடை:
சரி

Question 2.
ஒரு பொருளின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது அப்பொருளின் பரிமாணத்தின் மதிப்பு அதிகரிக்கும்.
விடை:
சரி

Question 3.
ஒரு பொருளானது திடநிலையிலிருந்து வாயுநிலைக்கு மாறும் நிகழ்விற்கு குளிர்வித்தல் என்று பெயர்.
விடை:
தவறு. பதங்கமாதல்

Question 4.
திடப்பொருளில் வெப்பப் பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு வெப்பக் கடத்தல் என்று பெயர்.
விடை:
சரி

Question 5.
ஒரு பொருள் ஏற்கும் வெப்பத்தின் அளவானது அதன் நிறையையும் உள்ளுறை வெப்பத்தையும் பெருக்கிக் கிடைக்கும் மதிப்பாகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Science Guide Chapter 4 வெப்பம்

Question 6.
வெப்பக் குடுவையில், சில்வர் சுவர்கள் வெப்பத்தை வெளிப்புறத்தில் எதிரொளிக்கின்றன.
விடை:
தவறு. உட்புறத்தில்

IV. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 4 வெப்பம் 1

V. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து சரியான ஒன்றை தேர்வு செய்க

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

Question 1.
கூற்று : வெற்றிடத்தில் வெப்ப ஆற்றல் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர்.
காரணம் : அணுக்களின் இயக்கமின்றி ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வெப்பம் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர்.
விடை:
ஆ) கூற்று சரி, காரணம் தவறு

Question 2.
கூற்று : ஓர் அமைப்பினை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்ற முடியும்.
காரணம் : ஒரு அமைப்பின் வெப்பநிலை மாறாமல் இருக்கும்போது இது நிகழ்கிறது.
விடை:
i) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
அன்றாட வாழ்வில், வெப்பக்கடத்தல் நிகழ்விற்கு இரண்டு உதாரணம் தருக.
விடை:

  • துணியை சலவை செய்யும் போது, வெப்ப ஆற்றலானது சலவைப் பெட்டியிலிருந்து துணிக்குப் பரவுகிறது.
  • சமையல் பாத்திரத்தை வெப்பப்படுத்தும்போது, வெப்ப ஆற்றலானது பாத்திரத்திலிருந்து உணவுப் பொருளுக்குக் கடத்தப்படுகிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 4 வெப்பம்

Question 2.
வெப்ப ஆற்றலின் விளைவுகள் யாவை?
விடை:
வெப்ப ஆற்றலானது மூன்று முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும். அவை

  • விரிவடைதல்
  • வெப்பநிலை உயர்வு
  • நிலை மாற்றம்

Question 3.
வெப்பம் கடத்தப்படும் முறைகள் யாவை?
விடை:
வெப்பம் கடத்தப்படும் மூன்று முறைகள்:

  • வெப்பக் கடத்தல்
  • வெப்பச் சலனம்
  • வெப்பக் கதிர்வீச்சு

Question 4.
வெப்பக் கடத்தல் என்றால் என்ன?
விடை:
திடப்பொருள்களில் அதிக வெப்பநிலையிலுள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலையிலுள்ள பகுதிக்கு அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் இயக்கம் இல்லாமல் வெப்ப ஆற்றல் பரவும் நிகழ்வு.

Question 5.
வெப்பச் சலனம் பற்றி குறிப்பு எழுதுக
விடை:

  • ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது, உயர் வெப்பநிலையிலுள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலையிலுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் இயக்கத்தினால் வெப்பம் கடத்தப்படும்.
  • வெப்பச்சலனம் திரவங்கள் மற்றும் வாயுக்களில் நடைபெறுகிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 4 வெப்பம்

Question 6.
தன் வெப்ப ஏற்புத்திறன் – வரையறு.
விடை:

  • 1 கிலோ கிராம் நிறையுள்ள பொருள் ஒன்றின் வெப்பநிலையை 1°C அல்லது 1K அளவு உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு. “C” என்ற எழுத்தால் குறிப்பிடப்படும்.
  • தன் வெப்ப ஏற்புத்திறன், C = \(\frac{\mathrm{Q}}{\mathrm{m} \times \Delta \mathrm{T}}\)

Question 7.
ஒரு கலோரி – வரையறு.
விடை:
1 கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு. 1 கலோரி = 4.186J

VII. விரிவாக விடையளி

Question 1.
கலோரிமீட்டர் வேலை செய்யும் விதத்தை தெளிவான படத்துடன் விவரி.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 4 வெப்பம் 2

  • பொருள் ஒன்றினால் ஏற்கப்பட்ட அல்லது இழக்கப்பட்ட வெப்பத்தினை அளவிடப் பயன்படுத்தப்படும் உபகரணம் கலோரிமீட்டர்.
  • இது தாமிரம் அல்லது அலுமினியத்தால் ஆன பாத்திரத்தைக் கொண்டுள்ளது.
  • வெப்ப இழப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக இது வெப்பத்தைக் கடத்தாத ஒரு கலனில் வைக்கப்பட்டுள்ளது.
  • கலனின் மூடியில் ஒரு துளையின் வழியாக பொருளின் வெப்பநிலையை அளவிடுவதற்கு வெப்பநிலைமானி உள்ளது.
  • மற்றொரு துளையின் வழியே ஒரு கலக்கியும் வைக்கப்பட்டுள்ளன. இது பொருளைக் கலக்கப் பயன்படும்.
  • பாத்திரத்தில் திரவம் நிரப்பப்பட்டுள்ளது.
  • மின்கம்பியினுள் மின்சாரத்தைக் கடத்துவதன் மூலம் இத்திரவமானது வெப்பமடைகிறது.
  • இதன் மூலம் ஒரு திரவத்தின் வெப்ப ஏற்புத்திறனின் மதிப்பினைக் கணக்கிடலாம்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 4 வெப்பம்

Question 2.
வெப்பக் கட்டுப்படுத்தி பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • ‘தெர்மோஸ்டாட்’ என்ற சொல், இரண்டு கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது. இதில் ‘தெர்மோ’ எனும் சொல் வெப்பம் என்றும் “ஸ்டாட்’ எனும் சொல் அதே நிலையில் இருப்பது என்றும் பொருள்படும்.
  • இது ஒரு பொருள் அல்லது இடத்தின் வெப்பநிலையை மாறாமல் வைப்பதற்காக பயன்படுத்தப்படும் சாதனம்.
  • வெப்பமடையும் அல்லது குளிர்ச்சியடையும் உபகரணங்களில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு
    குறிப்பிட்ட வெப்ப நிலையை அடைவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
  • ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்தவுடன், அந்த உபகரணத்தை செயல்பட வைக்கும்
    அல்லது நிறுத்திவிடும்.
  • இது வெப்பக்கடத்தி உணர்வியாகவும், வெப்பநிலை அமைவுகளைக் கட்டுப்படுத்தும் கட்டுப்படுத்தியாகவும் செயல்படுகிறது.
  • எ.கா:
    i) காற்றுப்பதனாக்கி ii) நீர் சூடேற்றி iii) நுண்ண லை அடுப்பு iv) குளிர்பதனி v) அறைகளின் மைய சூடேற்றி
  • Question 3.
    வெப்பக் குடுவை வேலை செய்யும் விதத்தினை விளக்குக.
    விடை:
    Samacheer Kalvi 8th Science Guide Chapter 4 வெப்பம் 3
  • வெப்பக் குடுவை இரண்டு சுவர்களைக் கொண்ட ஒரு கலன்.
  • உள்புறமானது சில்வரால் ஆனது.
  • இரண்டு சுவர்களுக்கும் இடையே வெற்றிடம் உள்ளது.
  • இது, வெப்பச்சலனம் மற்றும் வெப்பக்கடத்தல் ஆகிய நிகழ்வுகளால் வெப்ப ஆற்றல் பரவாமல் இருக்க உதவுகிறது.
  • சுவர்களுக்கு இடையே சிறிதளவு காற்று இருப்பதால், வெளிப்புறத்திலிருந்து உள்புறத்திற்கும், உள்புறத்திலிருந்து வெளிப்புறத்திற்கும் வெப்பம் கடத்தப்படுவதில்லை.
  • குடுவையின் மேற்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும் இரண்டு சுவர்களும் இணைகின்ற இடத்தில் வெப்பத்தைக் கடத்தமுடியும்.
  • குடுவையிலுள்ள சில்வர் சுவர், வெப்பக்கதிர் வீச்சினை மீண்டும் குடுவையிலுள்ள திரவத்திற்கு அனுப்பி, நீண்ட நேரம் சூடாக இருக்க உதவும்.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
குளிர் காலங்களில் ஏரிகளின் மேற்பரப்பு உறைந்திருந்தாலும், அதன் கீழ்பகுதி உறையாமல் இருப்பது ஏன்?
விடை:

  • ஏரியின் மேற்பரப்பு, குளிர்ந்த வளிமண்டலத்துடன் தொடர்புடையதால், அது உறைந்திருக்கும்.
  • தண்ணீரை விட குறைவான அடர்த்தி கொண்டதால் உறைந்த மேற்பரப்பு மூழ்காது.
  • இந்த உறைந்த மேற்பரப்பு கடத்தாப் பொருளாக செயல்படுவதால், ஏரியின் அடிப்பகுதி சூடாக இருக்கும்.
  • எனவே, குளிர் காலங்களில் ஏரிகளின் மேற்பரப்பு உறைந்திருந்தாலும், அதன் கீழ்பகுதி உறையாமல் இருக்கிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 4 வெப்பம்

Question 2.
வெப்பக் கடத்தல் பற்றிய கீழ்காணும் கூற்றுகளுள் எது சரி?
அ) எஃகு > மரம் > நீர்
ஆ) எஃகு > நீர் > மரம்
இ) நீர் > எஃகு > மரம்
ஈ) நீர் > மரம் > எஃகு
விடை:
ஆ) எஃகு > நீர் > மரம் என்பது சரியான கூற்று.
ஏனெனில், எஃகு நன்றாக கடத்தும் தன்மை கொண்டது. ஆனால் நீர், மரம் கடத்தாப் பொருட்கள் ஆகும். எஃகு வெப்பத்தை கடத்தக்கூடியதாகும். மரத்தின் வெப்பக் கடத்தல் மிக மிக குறைவு.
வெப்பக்கடத்துத்திறன் : எஃகு – 50.2 (w/mk), நீர் – 0.6 (w/m k), மரம் – 0.12 – 0.04 (w/m k)

IX. கணக்கீடுகள்

Question 1.
ஒரு இரும்புப் பந்தின் வெப்பநிலையை 20°C உயர்த்த 1000 ) ஆற்றல் தேவைப்படுகிறது. அப்பந்தின் வெப்ப ஏற்புத் திறனைக் கணக்கிடுக
விடை:
Q = 1000 J
ΔT = 20°C – 0°C = 20°C = 20°K
வெப்ப ஏற்புத்திறன், C’ = \(\frac{\mathrm{Q}}{\Delta \mathrm{T}}\)
C’ = \(\frac{1000}{20}\)
C’ = 50JK-1

Question 2.
100 கி.கி எடையுள்ள பாத்திரத்தின் வெப்ப ஏற்புத்திறன் 8000 J/ K அதன் தன் வெப்ப ஏற்புத்திறனைக் கணக்கிடுக.
விடை:
m = 100 Kg; Q = 8000 J/ °C
C’ = \(\frac{Q}{m \Delta T}\) ;
C’ = \(\frac{8000}{100 \times 1}\)
C’ = 80 J Kg-1/°C

8th Science Guide வெப்பம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
ஒரு பொருள் சூடாக உள்ளதா அல்லது குளிர்ச்சியாக உள்ளதா என்பதை அறிய உதவும் இயற்பியல் அளவு ……………….. ஆகும்.
அ) வெப்பக்கடத்தல்
ஆ) வெப்பநிலை
இ) வெப்பச்சலனம்
ஈ) வெப்ப கதிர்வீச்சு
விடை :
ஆ) வெப்பநிலை

Question 2.
வெப்ப ஏற்புத்திறனின் அலகு ……………………
அ) JK
ஆ) JK-1
இ) J-1K
ஈ) J-1K-1
விடை :
ஆ) JK-1

Samacheer Kalvi 8th Science Guide Chapter 4 வெப்பம்

Question 3.
திரவம் வாயுவாக மாறுவது எனப்படும்.
அ) உருகுதல்
ஆ) உறைதல்
இ) படிதல்
ஈ) ஆவியாதல்
விடை:
ஈ) ஆவியாதல்

Question 4.
வெப்பத்தை அளவிட பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு …………………… ஆகும்.
அ) கலோரி
ஆ) கெல்வின்
இ) செல்சியஸ்
ஈ) ஜீல்
விடை:
அ) கலோரி

Question 5.
……………. வெப்பக் கடத்தல் ஏற்படுகிறது.
அ) திரவங்களில்
ஆ) வாயுக்களில்
இ) திரவம் மற்றும் வாயுக்களில்
ஈ) திடப்பொருள்களில்
விடை:
ஈ) திடப்பொருள்களில்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
இயற்கையாகவே பூமியின் மீது திண்மம், திரவம், வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் காணப்படும் ஒரே பருப்பொருள் ………………………. ஆகும்.
விடை:
நீர்

Question 2.
………………. என்பது வெப்ப ஆற்றல் பரவும் மூன்றாவது விதம் ஆகும்.
விடை:
வெப்பக் கதிர்வீச்சு

Question 3.
நிலக்காற்று மற்றும் கடல்காற்று ஆகிய நிகழ்வுகள் உருவாவதற்கு ………………………. காரணம் ஆகும்.
விடை:
வெப்பச்சலனம்

Question 4.
தன் வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு …………………
விடை:
JKg-1K-1

Question 5.
உணவுப் பொருள்களில் உள்ள ஆற்றலின் அளவு …………………….. எனும் அலகால் குறிப்பிடப்படுகிறது.
விடை:
கிலோ கலோரி

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறு எனில் கூற்றைத் திருத்துக

Question 1.
பனி வெப்பத்தை கடத்தும் சிறந்த வெப்பக் கடத்தி ஆகும்.
விடை:
தவறு. மிகவும் அரிதான

Samacheer Kalvi 8th Science Guide Chapter 4 வெப்பம்

Question 2.
வேதியியல் மற்றும் இயற்பியல் நிகழ்வுகளால் பொருள் ஒன்றினால் ஏற்கப்பட்ட அல்லது இழக்கப்பட்ட வெப்பத்தினை அளவிடப் பயன்படுத்தப்படும் உபகரணம், கலோரி மீட்டர் ஆகும்.
விடை:
சரி

Question 3.
வெப்பச் சலனம் வாயும் ளில் ஏற்படுகிறது.
விடை:
தவறு. திரவம் மற்றும் வாயுக்களில்

Question 4.
வெப்ப ஆற்றலால் மூலக்கூறுகளிலுள்ள இயக்க ஆற்றல் குறையும்.
விடை:
தவறு. அதிகரிக்கும்.

Question 5.
வாயு திரவமாக மாறுதல் குளிர்தல் எனப்படும்.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 4 வெப்பம் 1

V. பின்வரும் வினாக்களுக்கு கீழ்க்கண்ட குறிப்புகள் மூலம் விடையளிக்க

i) கூற்றும், காரணமும் சரி, காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது.
ii) கூற்று சரி, காரணம் தவறு
iii) கூற்று தவறு, காரணம் சரி
iv) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

Question 1.
கூற்று : பனிக்கட்டியை விட பனியானது சிறந்த காப்பான்.
காரணம் : பனியானது, காற்றுப் பைகளை கொண்டது மற்றும் காற்று என்பது சிறந்த வெப்ப காப்பான் ஆகும்.
விடை:
i) கூற்றும், காரணமும் சரி, காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது.

Question 2.
கூற்று : நெருப்பின் இரு பக்கங்களிலுள்ள சம தூரத்தின் வெப்பத்தை விட, நெருப்பின் மேலே உள்ள அதே தூரம் சூடாக இருக்கிறது.
காரணம் : நெருப்பை சுற்றியுள்ள காற்று, அதிக வெப்பத்தை மேல்நோக்கி கடத்துகிறது.
விடை:
iii) கூற்று தவறு, காரணம் சரி

VI. சுருக்கமான விடையளி

Question 1.
வெப்பக் கதிர்வீச்சு என்றால் என்ன?
விடை:
வெப்ப ஆற்றலானது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின்காந்த அலைகளாகப் பரவும் முறை வெப்பக் கதிர்வீச்சு எனப்படும்.

Question 2.
வெப்ப ஏற்புத்திறன் வரையறு.
விடை:

  • ஒரு பொருளின் வெப்பநிலையை 1°C அல்லது 1K உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு.
  • இது “C” என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகிறது. C = \(\frac{\mathrm{Q}}{\Delta \mathrm{T}}\)
  • வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு JK-1 ஆகும்.

Question 3.
பொருள் ஒன்று ஏற்கும் அல்லது இழக்கும் வெப்பத்தின் அளவினை நிர்ணயிக்கும் மூன்று காரணிகள் யாவை?
விடை:

  • பொருளின் நிறை
  • பொருளின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம்
  • பொருளின் தன்மை

Samacheer Kalvi 8th Science Guide Chapter 4 வெப்பம்

Question 4.
வெப்பநிலையை அளவிடப் பயன்படும் மூன்று விதமான அளவுகோல்கள் யாவை?
விடை:

  • செல்சியஸ் அளவுகோல்
  • ஃபாரன்ஹீட் அளவுகோல்
  • கெல்வின் அளவுகோல்

Question 5.
வெப்பக்குடுவை என்றால் என்ன? அதன் பயன்களை எழுதுக.
விடை:

  • > வெப்பத்தைக் கடத்தாத சேமிப்புக் கலனாகும்.
  • ஒரு பொருளின் வெப்பநிலையை அதன் சுற்றுப்புறத்தின் வெப்பநிலையை விட அதிகரிக்காமலோ அல்லது குறையாமலோ நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடியது.
  • இதனுள் வைக்கப்படும் திரவத்தின் வெப்பநிலையை நீண்ட நேரம் மாறாமல் காக்கும்.
  • சுவையில் மாற்றம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

VII. விரிவாக விடையளி

Question 1.
நிலை மாற்றத்தை விவரி.
விடை:

  • பனிக்கட்டியில் உள்ள நீர் மூலக்கூறுகளுக்கு இடையேயான கவர்ச்சி விசை அதிகமாக உள்ளது.
  • பனிக்கட்டியை வெப்பப்படுத்தும்போது, அதிலுள்ள நீர் மூலக்கூறுகளுக்கிடையேயான
    கவர்ச்சி விசை குறைந்து பனிக்கட்டி உருகி நீராக வருகிறது.
  • நீரை வெப்பப்படுத்தும்போது நீர் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசை குறைவதால் நீராவியாக மாறுகிறது.
  • நீராவியானது சுற்றுப்புறத்திற்குச் செல்வதால் நீரின் அளவு குறைகிறது.
  • ஒரு பொருளிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது அப்பொருளின் நிலையில் மாற்றம்
    ஏற்படுகிறது.
  • வெப்ப ஆற்றலை நீக்கும் போது, எதிர்த்திசையில் மாற்றம் ஏற்படுகிறது.
  • வெப்ப ஆற்றல் காரணமாக கீழ்க்காணும் மாற்றங்களுள் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படும்.
    – திடப்பொருள் திரவமாக மாறுதல் (உருகுதல்)
    – திரவம் வாயுவாக மாறுதல் (ஆவியாதல்)
    – திடப்பொருள் வாயுவாக மாறுதல் (பதங்கமாதல்)
    – வாயு திரவமாக மாறுதல் (குளிர்தல்)
    – திரவம் திடப்பொருளாக மாறுதல் (உறைதல்)
    – வாயு திடப்பொருளாக மாறுதல் (படிதல்)

Samacheer Kalvi 8th Science Guide Chapter 4 வெப்பம் 4

Samacheer Kalvi 8th Science Guide Chapter 4 வெப்பம்

Question 2.
வெப்பக் கதிர்வீச்சு மூலம் அன்றாட வாழ்வின் பயன்கள் யாவை?
விடை:

  • சூரியனிடமிருந்து வெப்ப ஆற்றல் பூமியை வந்தடைகிறது.
  • நெருப்பிற்கு அருகில் நிற்கும்போது, வெப்பத்தினை உணர்கிறோம்.
  • கருப்பு மேற்பரப்புடைய பொருள்கள் வெப்பக் கதிர்வீச்சுக்களை ஏற்கும் தன்மையுடையவை.
  • எனவே, சமையல் பாத்திரத்தின் அடிப்பகுதியில் கருப்பு நிற வண்ணம் பூசப்படுகிறது.
  • வெண்மை நிறம் வெப்பக் கதிர்வீச்சினை எதிரொளிக்கின்றது.

Question 3.
வெப்பச்சலனம் என்றால் என்ன? அவற்றின் மூலம் அன்றாட வாழ்வில் ஏற்படும் பயன்கள் யாவை?
விடை:
உயர் வெப்பநிலையிலுள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலையிலுள்ள பகுதிக்கு
மூலக்கூறுகளின் இயக்கத்தினால் வெப்பம் கடத்தப்படும்.

பயன்கள்:

  • நிலக்காற்று மற்றும் கடல் காற்று ஆகிய நிகழ்வுகள் உருவாகும்.
  • காற்றானது ஒரு பகுதியிலிருந்து மற்றாரு பகுதிக்கு இடம்பெயர்கிறது.
    வெப்பக்காற்று பலூன்களில் வெப்பச்சலனம் மூலம் வெப்பம் கடத்தப்படுவதால் பலூன் மேலே உயர்கிறது.
  • குளிர்சாதனப் பெட்டியில், குளிர்ந்த காற்று கீழ்நோக்கி இடம்பெயர்ந்து சூடான காற்றை வெப்பச்சலனம் மூலம் இடமாற்றம் செய்கிறது.