Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

7th Science Guide உடல் நலமும், சுகாதாரமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான். இது எதைக் குறிக்கிறது.
அ) சுகாதாரம்
ஆ) உடல்நலம்
இ) சுத்தம்
ஈ) செல்வம்
விடை:
ஆ) உடல்நலம்

Question 2.
தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் சிறந்தது.
அ) மகிழ்ச்சி
ஆ) ஓய்வு
இ) மனம்
ஈ) சுற்றுச்சூழல
விடை:
இ) மனம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 3.
நாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்
அ) திறந்த
ஆ) மூடியது
இ) சுத்தமான
ஈ) அசுத்தமான
விடை:
இ)சுத்தமான

Question 4.
புகையிலையை மெல்லுவதால் ஏற்படுவது
அ) இரத்த சோகை
ஆ) பற்குழிகள்
இ) காசநோய்
ஈ) நிமோனியா
விடை:
ஆ) பற்குழிகள்

Question 5.
முதலுதவி என்பதன் நோக்கம்
அ) பணத்தைச் சேமித்தல்
ஆ) வடுக்களைத் தடுத்தல்
இ) மருத்துவப் பராமரிப்பு தடுத்தல்
ஈ) வலி நிவாரணம்
விடை:
ஈ) வலி நிவாரணம்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1
ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும் மக்களை ______________ என அழைக்கிறோம்.
விடை:
சமூகம்

Question 2.
நான் பச்சை நிறத்தில் குப்பைகளோடு இருக்கக்கூடிய பெட்டி நான் _____________.
விடை:
குப்பைத் தொட்டி

Question 3.
கண்கள் உலகிலனக் காணப் பயன்படும் ____________ கருதப்படுகின்றன
விடை:
சாளரங்களாக

Question 4.
முடியை மென்மையாக வைத்திருக்க மயிர்க்கால்கள் ____________ உற்பத்தி செய்கின்றன.
விடை:
எண்ணெயை

Question 5.
காசநோய் என்பது ______________ பாக்டீரியாவால் ஏற்படுகிறது
விடை:
மைக்கோபாக்டீரியம் டியூப்ரகுலே

III. சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறெனில் சரிசெய்து எழுதுக

Question 1.
அனைத்து உணவுகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்
விடை:
சரி

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 2.
சின்னம்மை லுகோடெர்மா என்றும் அழைக்கப்டுகிறது.
விடை:
தவறு – வாரி செல்லா என்றும் அழைக்கப்படுகிறது.

Question 3.
வயிற்றுப்புண் ஒரு தொற்றாநோய்.
விடை:
சரி

Question 4.
ரேபிஸ் நோய் இறப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு அபாயகரமான நோயாகும்.
விடை:
சரி

Question 5.
முதல்நிலை தீக்காயத்தில் முழுத்தோல் பகுதியும் சேதமடைகிறது.
விடை:
தவறு – மேல் புறத்தோல் சேதமடைகிறது.

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 2

V. ஒப்புமை தருக

Question 1.
முதல்நிலைத் தீக்காயம் : மேற்புறத்தோல் ::
இரண்டாம் நிலைத் தீக்காயம் : ____________
விடை:
மேல் புறத்தோல் மற்றும் டெர்மிஸ்

Question 2.
டைபாய்டு : பாக்டீரியா :: ஹெபடைடிஸ் : ____________
விடை:
வைரஸ்

Question 3.
காசநோய் : காற்று :: காலரா : _____________
விடை:
மாசுபட்ட உணவு மற்றும் நீர்

VI. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து, சரியான ஒன்றைத் தேர்வு செய்க

Question 1.
கூற்று : வாய்ச் சுகாதாரம் நல்லது.
காரணம் : நல்ல பற்கள் ஆரோக்கியமான திசுக்களைக் கொண்ட ஈறுகளால் சூழப்பட்டுள்ளன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி. ஆனால். காரணம் தவறு. .
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 2.
கூற்று : சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.
காரணம் : உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல் மற்றும் அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கிருமிகள் தோற்றுவிக்கின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி. ஆனால். காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

VII. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
சுகாதாரம் என்றால் என்ன?
விடை:
சுகாதாரம் என்பது நோய்களைத் தடுக்கவும், நல்ல ஆரோக்கியத்தைக் தக்க வைத்துக் கொள்ளவும். குறிப்பாகத் தூய்மை பாதுகாப்பான குடிநீர் உட்கொள்ளல் மற்றும் சரியான முறையில் கழிவு அகற்றுதல் போன்ற நல்ல செயல்களைக் குறிப்பதாகும்.

Question 2.
கண்களைப் பாதுகாக்கும் முறைகள் பற்றி எழுது.
விடை:

  • கண்களைக் தசக்குதல் கூடாது.
  • நீண்ட நேரமாகத் தொலைக்காட்சி பார்த்தல் மற்றும் கணினி பயன்பாட்டை குறைத்தல் வேண்டும்.

Question 3.
உனது முடியை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணுவது எவ்வாறு?
விடை:

  • உச்சந்தலையை நன்றாகத் தேய்த்துக் குளிக்கும் போது இறந்த சருமச் செல்கள், அதிக எண்ணெய் மற்றும் தூசி ஆகியவற்றை அகற்றலாம்.
  • சுத்தமான தண்ணீரில் குளித்தல், நல்ல தரமான சீப்புகளைப் பயன்படுத்துதல் முடி பராமரிப்புக்கு மிக அவசியமாகக் கருதப்படுகிறது.

Question 4.
தனது கைபேசியில் சோபி அடிக்கடி விளையாடுகிறார். கண் எரிச்சலிலிருந்து அவரது கண்களைப் பாதுகாக்க உனது பரிந்துரை என்ன?
விடை:

  • கண்களை அவ்வப்போது திறந்து மூடுதல் வேண்டும்.
  • கைபேசியில் உள்ள தொடுதிரையின் பிரகாசம் மிக அதிகமாகவோ, மிக குறைவாகவோ இருக்கக் கூடாது.
  • தொடுதிரை சுத்தமாக இருக்க வேண்டும்.
  • கையேசியை கண்களுக்கு மிக அருகில் வைத்து பயன்படுத்தத் கூடாது.

Question 5.
மழைக்காலத்தில் உங்கள் பகுதியில் பரவும் இரண்டு தொற்று நோய்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • காலரா
  • டைபாய்டு காய்ச்சல்

Question 6.
காயங்களுக்கு என்ன முதலுதவி வழங்க வேண்டும்?
விடை:

  • பாதிக்கப்பட்ட பகுதியைச் சுத்தமான குளிர்ந்த நீரால் கழுவிய பின் ஒரு கிருமி நாசினித் திரவத்தால் சுத்தம் செய்ய வேண்டும்.
  • பிறகு கிருமி நாசினிக் களிம்பு இடவேண்டும்.
  • தொற்று நோயைத் தடுக்கும் வண்ணம் காயம்பட்ட இடத்தைச் சுற்றிக் கட்டுத் துணியால் கட்டப்பட வேண்டும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 7.
கங்காவிற்குச் சிறிய தீக்காயம் ஏற்பட்டதால், நான் தண்ணீரால் புண்ணைக் கழுவினேன்” என்று ரவி கூறினான். அவனது கூற்றினை ஏற்றுக் கொள்கிறாயா, இல்லையா? ஏன் என்பதை விவரி?
விடை:

  • அவருடைய கூற்று ஏற்றுக் கொள்ளப்படதக்கது.
  • ஏனெனில் சிறிய தீக்காயத்திற்கு, பாதிப்படைந்த பகுதியை குளிர்ந்த நீரால் கழுவி பின் கிருமி நாசினி களிம்பை அந்த இடத்தில் இட வேண்டும்.

VIII. சுருக்கமாக விடையளி

Question 1.
முதலுதவியின் அவசியம் என்ன?
விடை:

  • உயிரைப் பாதுகாக்க. > நோயாளியின் இரத்தக் கசிவைத் தடுக்க மற்றும் நிலையை உறுதிப்படுத்த > வலி நிவாரணம் அளிக்க
  • ஆரம்ப நிலைக்கான ஒரு அவசர மருத்துவச் சேவை.

Question 2.
இந்தப்படம் எதை விளக்குகிறது?
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 3
விடை:

  • குப்பையை கண்ட இடத்தில் போடக்கூடாது.
  • பொது இடத்தை தூய்மையாக வைப்பது நமது கடமை.

Question 3.
தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்களை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 4

Question 4.
உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?
விடை:

  • ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குதல் மூலம் பற்களிலும், ஈறுகளில் பற்கரை மற்றும் கருவண்ணம் உருவாவதைத் தடுக்கிறது.
  • ஃப்ளோசிங் செய்யும் போது உணவுத் துகள்கள், பற்கரை மற்றும் பாக்டீரியாக்கள் நீக்கப்படுகின்றன.

Question 5.
தொற்று நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?
விடை:
அசுத்தமான காற்று. நீர் உணவு அல்லது வெக்டார்கள் என்று அழைக்கப்படும். நோய் கடத்திகளான பூச்சிகள் மற்றும் பிற விலங்குகள் மூலமாகவும் தொற்று நோய்கள் பரவுகின்றன.

Question 6.
மெல்லிய, சிதறிய முடி மற்றும் முடி உதிர்தல் போன்ற குறைபாட்டை குறைக்க கூறும் ஆலோசனை யாது?
விடை:

  • மெல்லிய, சிதறிய முடி மற்றும் முடி உதிர்தல் ஆகியவை முடியின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறிக்கின்றன.
  • பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • புரதச் சத்து மிகுந்த உணவினையும் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.

IX. விரிவாக விடையளி

Question 1.
ஏதேனும் மூன்று தொற்று நோய்களைப் பற்றி விரிவாக எழுதுக.
விடை:
காசநோய்
காசநோய் மைக்ரோபாக்ரியம் டியூபர்குலேயெ என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

பரவும்முறை
நோயாளியிடமிருந்து வரும் சளி, எச்சில் மற்றும் உடமைகள் மூலம் பரவுகின்றன.

அறிகுறிகள்
எடை இழப்பு, காய்ச்சல், தொடர்ந்து இருமல், சளியுடன் இரத்தம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

தடுப்பு மற்றும் சிகிச்சை

  • BCG தடுப்பூசி போடுதல்
  • நோயாளிக்கு சிறப்பு கவனம் செலுத்துதல்
  • DOT போன்ற தொடர்ச்சியாக அளிக்கப்படும் மருந்துகளைப் பயன்படுத்துதல்

காலரா
விப்ரயோ காலரே என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

பரவும்முறை
அசுத்தமான உணவு, அல்லது நீர் மூலம் பரவக்கூடியது.

அறிகுறிகள்
வயிற்றுப் போக்கு, தலைவலி மற்றும் வாந்தி

தடுப்பு மற்றும் சிகிச்சை

  • சாப்பிடும் முன் கைகளை கழுவுதல்
  • தெருக்களில் விற்கப்படும் திறந்த வெளி உணவுகளை தவிர்த்தல்
  • காலராவிற்கு எதிராக தடுப்பூசி போடுதல்.

டைப்பாய்டு
சால்மோனெல்லா டைபி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

பரவும்முறை
அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் பரவுகிறது.

அறிகுறிகள்
பசியின்மை , தீவிரத் தலைவலி, அடி வயிற்றில் புண், அல்லது தடிப்புகள் மற்றும் தீவிரக் காய்ச்சல் (104°F) வரை காய்ச்ச ல்

தடுப்பு மற்றும் சிகிச்சை

  • கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரை உட்கொள்ளுதல்,
  • முறையாக கழிவுநீர் அகற்றுதல்
  • தடுப்பூசி போடுதல்

Question 2.
ஒரு நபருக்குத் தோலில் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வாய்? முதலுதவிக்கான — பல்வேறு சூழ்நிலைகளையும் கூறுக.
விடை:

  • சிறிய தீக்காயங்களைக் குளிர்ந்த நீரில் கழுவி கிருமிநாசினிக் களிம்பு இடவேண்டும்.
  • கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டு கொப்புளங்கள் இருந்தால் நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • காயம்பட்ட இடத்தைச் சுற்றி சுத்தமான ஒட்டக் கூடிய தன்மையற்ற துணி அல்லது கட்டுத் துணிகளால் சுற்ற வேண்டும்.
  • பெரிய தீக்காயங்களுக்கு மருத்துவரின் சிகிச்சையை நாட வேண்டும்.

முதலுதவிக்கான பல்வேறு சூழ்நிலைகள் :

  • உயிரைப் பாதுகாக்க
  • நோயாளியின் இரத்தக்கசிவைத் தடுக்க மற்றும் நிலையை உறுதிப்படுத்த
  • வலி நிவாரணம் அளிக்க
  • ஆரம்ப நிலைக்கான ஒரு அவசர சிகிச்சை.

Question 3.
ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எவ்வாறு நோய் பரவுகிறது?
விடை:

  • மாசுபட்ட காற்று, அசுத்தமான உணவு மற்றும் நீர் வெக்டார்கள் எனப்படும் நோய்க் கடத்திகளாலும் நோய் பரவுகிறது.
  • சளி மற்றும் காய்ச்சல் பொதுவான தொற்று நோய்கள்
  • இது பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலம் பரவுகிறது.
  • நாசியிலிருந்து வெளியேறும் சளியில் பாக்டீரியா அல்லது வைரஸ் காணப்படலாம்.
  • அப்போது நோயாளி நாசியைத் தொட்டபின் வேறு பொருளையோ அல்லது வேறு நபரையோ தொடும் போது வைரஸ் இடம் பெயர்கிறது.
  • நோயாளியின் தும்மல் மற்றும் இரும்மலின் போது வெளியேறும் துளிகளில் வைரஸ் இருந்தால், அது காற்றில் பரவும்.
  • எனவே சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் கைக்குட்டையைப் பயன்படுத்தி நாசியைச் சிந்துவதும் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற செயல்களால் வைரஸை பரவாமல் செய்ய முடியும்.

X. உயர் சிந்தனை வினா

Question 1.
ஒரு நபர் அலுவலகத்தில் அல்லது வகுப்பறையில் பகல் நேரத்தில் தூங்குவது ஏன்? இத்தகைய சூழ்நிலையை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? விவரி.
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 5
விடை:

  • இரவு நேரப் பணி அல்லது அதிக நேரம் கண் விழித்து படித்தல்.
  • ஒரு மனிதனுக்கு சராசரியாக 7-8 மணி நேரத் தூக்கம் மிக அவசியம்.
  • இந்த தூக்க நேரத்தில் குறைவு ஏற்பட்டால் அது பல உடல் பிரச்சனைகளை உருவாக்கும்.
  • சில நேரங்களில் சுவாசக் கோளாறு காரணமாக சரியான தூக்கம் இல்லையென்றாலும் பகல் நேரத்தில் தூக்கம் வரும்.
  • கவனக்குறைவு, ஒருமுகப்படுத்தி படித்தலில் குறைபாடு, ஞாபக மறதி போன்ற காரணங்களாலும் படிக்கும் குழந்தைகள் வகுப்பறையில் தூங்குகின்றனர்.

7th Science Guide உடல் நலமும், சுகாதாரமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறி ________________
அ) ஈறுகளில் இரத்தக் கசிவு
ஆ) பற்சிதைவு
இ) இரத்தத் தட்டகளின் எண்ணிக்கை குறைவு
ஈ) எடை இழப்பு
விடை:
இ) இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறைவு

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 2.
வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகும் நோய் ______________
அ) வண்ணக்குருடு
ஆ) இரவு குருட்டுத் தன்மை
இ) இளம் சிவப்புக் கண் நோய்
ஈ) பெலாக்ரா
விடை:
இ) இளம் சிவப்புக் கண் நோய்

Question 3.
தீவிர இரத்த சோகையினால் இளம் குழந்தைகளுக்கு _____________ தொற்று நாள்பட்ட வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.
அ) பாக்டீரியா
ஆ) வைரஸ்
இ) புரோட்டோசோவா
ஈ) கொக்கிப் புழு
விடை:
ஆ) கொக்கிப் புழு

Question 4.
______________ ஆம் ஆண்டு உலகிலேமே முதன்முதலில் பென்சிலின் கண்டறியப்பட்டது.
அ) 1928
ஆ) 1938
இ) 1948
ஈ) 1926
விடை:
அ) 1928

Question 5.
சத்தை ஊசியாக எடுக்காமல் மாத்திரைகளாக வாய் வழியாக உட்கொள்ளலாம்.
அ) கால்சியம்
ஆ) மெக்னீசியம்
இ) இரும்பு
ஈ) சோடியம்
விடை:
இ) இரும்பு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மருந்துகளின் இராணி என அழைக்கப்படுவது ___________
விடை:
பென்சிலின்

Question 2.
__________ தோலில் சில பகுதி அல்லது மொத்தப் பகுதியில் நிறமி இழப்புகளால் ஏற்படும் ஒரு தொற்றா நோயாகும்.
விடை:
லுகோடெர்மா

Question 3.
தட்டம்மையின் முக்கிய அறிகுறி ____________ ஆகும்.
விடை:
அம்மை கொப்புளங்கள்

Question 4.
பசியின்மையை _____________ என்றும் அழைக்கலாம்
விடை:
அனோரெக்ஸியா

Question 5.
______________ உடல் அமைப்பு ஒரு மகத்தான அதிசயம்
விடை:
மனித

III. சரியா? தவறா (தவறெனில் தவறை சரி செய்)

Question 1.
பற்கள் உணவை அரைக்கும் போது ஊக்குவிக்கப்பட்ட உமிழ்நீர் மற்றும் செரிமானச் சுரப்புகள் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 2.
மஞ்சள் காமாலை ஒரு உயிர்க் கொல்லி நோய்.
விடை:
சரி

Question 3.
முதல்நிலை தீக்காயம் என்பது மேல்புறத் தோல் மற்றும் உட்தோல் தீயால் பாதிக்கப்படுவது
விடை:
தவறு. சரியான விடை : முதல் நிலை தீக்காயம் மேல்புறத் தோலை மட்டும் பாதிக்கிறது.

Question 4.
டைபாய்டு, சால்மோனெல்லா டைபி எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
விடை:
சரி

Question 5.
வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் வாந்தி ஆகியவை காலராவின் அறிகுறிகளாகும்.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 6

V. வாக்கியத்திற்கேற்ற சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

(இளம் சிவப்புக் கண்நோய், கழுத்துக் கழலை, இரவு குருட்டுத் தன்மை, ஏடிஸ் எஜிப்டி )
Question 1.
மிகவும் தொற்று, இருமல் மற்றும் தும்மல் மூலம் பரவுகிறது.
விடை:
இளம் சிவப்புக்கண் நோய்

Question 2.
ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுவது.
விடை:
கழுத்துக் கழலை

Question 3.
இது இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை குறைக்கிறது.
விடை:
ஏடிஸ் எஜிப்டி

Question 4.
இது விழித்திரை செல்களின் குறைபாடு
விடை:
இரவு குருட்டுத் தன்மை

(லுகோடெர்மா, HIV,MMR,ஆஸ்துமா)
Question 1.
தீங்கு விளைவிக்கக் கூடிய வெளிப்புறக் காரணிகள் உடலில் ஏற்படுத்தும் சிக்கல்.
விடை:
ஆஸ்துமா

Question 2.
நோய் எதிர்ப்பு சக்தி முழுவதுமாக குறைவது.
விடை:
HIV

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 3.
சிகிச்சை இல்லா ஒரு நோய் இது தொடுதல் மூலம் பரவாது.
விடை:
லுகோடெர்மா

Question 4.
குழந்தைப் பருவத்திலேயே கொடுக்கப்பட்ட வேண்டிய தடுப்பூசி
விடை:
MMR

VI. ஒப்புமை வினா

Question 1.
பற்சிதைவு: பாக்டீரியா: மஞ்சள் காமாலை: ___________
விடை:
வைரஸ்

Question 2.
ரேபிஸ்: வெறிநாய்கடி; தட்டம்மை : ___________
விடை:
வாரி செல்லா

VII. கூற்றும் காரணமும்

Question 1.
உறுதிப்படுத்துதல் :
கூற்று A : அரைக்கும் மற்றும் ருசிக்கும் செயல் மாஸ்டிகேசன்’ என்று அழைக்கப்படுகிறது.
காரணம் R : உணவை அரைக்கும் போது உமிழ்நீர் மற்றும் செரிமானச் சுரப்புகள் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.

அ) A மற்றும் R இரண்டும் சரி
ஆ) A மற்றும் R இரண்டும் தவறு
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
விடை:
அ) Aமற்றும் R இரண்டும் சரி

Question 2.
உறுதிப்படுத்துதல் :
கூற்று A : மண் சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்குப் பொதுவாக இரத்தச் சோகை இருக்கும்.
காரணம் R : அன்றாட உணவில் புரதச்சத்து குறைபாட்டினால் இரத்த சோகை ஏற்படுகிறது.

அ) A மற்றும் R இரண்டும் சரி
ஆ) A மற்றும் R இரண்டும் தவறு
இ ) A. சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
விடை:
அ) A சரி ஆனால் R தவறு

VIII. மிகக் குறுகிய விடை தருக

Question 1.
சிறிய தீக்காயங்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி யாது?
விடை:
சிறிய தீக்காயப் பகுதிகளை குளிர்ந்த நீரில் கழுவி கிருமி நாசினிக் களிம்பு இட வேண்டும்.

Question 2.
பாக்டீரியாவினால் ஏற்படச் கூடிய நோய்கள் எழுதுக.
விடை:
காசநோய், காலரா, டைபாய்டு என்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 3.
அடிப்படை சமூக சுகாதாரத்தை எவ்வாறு பராமரிக்கலாம்?
விடை:

  • நாம் வாழும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல்.
  • வடிகால் சரியான முறையில் மூடப்பட்டிருத்தல்.
  • வீட்டுக் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுதல்.

IX. குறுகிய விடை தருக

Question 1.
மஞ்சள் காமாலை நோயின் அறிகுறிகள் யாவை?
விடை:
த பசியின்மை , வாந்தி, மஞ்சள் நிறமுடைய சிறுநீர் கண்களில் மஞ்சள் நிறம்.

Question 2.
பற்களைப் பராமரிக்கும் இரண்டு வழிகளைக் கூறுக.
விடை:

  • ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குதல் மூலம் பற்களிலும், ஈறுகளில் பற்காரை மற்றும் கருவண்ணம் உருவாவதைத் தடுக்கிறது.
  • ஃப்ளோசிங் செய்யும் போது உணவுத் துகள்கள், பற்காரை மற்றும் பாக்டீரியாக்கள் நீக்கப்டுகின்றன.

Question 3.
ஒரு நபர்க்கு நோய் ஏற்படுவதற்கான காரணங்களை எழுது.
விடை:

  • நுண் கிருமிகளின் தொற்று
  • சமச்சீர் உணவு உட்கொள்ளாதது.
  • தவறான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள்
  • ஒன்று அல்லது பல உடல்பாகங்கள் அல்லது உறுப்புகளின் செயலிழப்பு

Question 4.
வெறி நாய்கடியின் தடுப்பு மற்றும் சிகிச்சை முறையை எழுதுக
விடை:

  • விலங்கு கடித்தவுடன் முதலுதவி செய்ய வேண்டும்.
  • பின் மருத்துவரை அணுகுதல் நலம்.
  • இரண்டு முதல் 12 வாரங்கள் அல்லது இரண்டு வருடங்கள் கழிந்த பின் கூட நோயின் அறிகுறிகள் தென்படலாம்.
  • அறிகுறிகள் ஏற்படும் முன் தடுப்பூசி போடுவது அவசியம்.

Question 5.
தடுப்பூசி போடுவதன் நோக்கமென்ன?
விடை:
ஒரு குறிப்பிட்ட வியாதிக்கெதிராக நோய்த் தடுப்பாற்றலை உருவாக்கி அந்நோய்க்கெதிராகப் போராட நம் உடலை தயார் செய்தலே தடுப்பூசி போடுவதன் நோக்கமாகும்.

X. விரிவான விடை தருக

Question 1.
தீக்காயம் என்றால் என்ன? அதன் மூன்று வகைகளை விவரி.
விடை:
வெப்பம், வேதிப்பொருட்கள், மின்சாரம், சூரிய ஒளி அல்லது அணுக்கதிர் வீச்சினால் ஏற்படும் திசுச் சேதங்கள் தீக்காயங்கள் எனப்படும்.

முதல் நிலை தீக்காயங்கள்
இது தோல் வெளிப்புற அடுக்கு மட்டும் பாதிப்படைவதாகும்.

இரண்டாம் நிலை தீக்காயங்கள்
மேல்புறத் தோல் மற்றும் அதற்குக் கீழ் உள்ள உட்தோலும் தீயால் பாதிக்கப்படுவது இரண்டாம் நிலை தீக்காயமாகும்.

மூன்றாம் நிலை தீக்காயங்கள்

  1. இங்கு தோலின் முழு ஆழத்திற்குத் தோலினை அழித்தும் மற்றும் அடிப்படைத்திசுக்களையும் சிதைக்கும் நிலை ஆகும்.
  2. இத்தகைய தீக்கதிர்களால் பாதிக்கப்பட்டோருக்கு பெரும்பாலும் தோல் ஒட்டுதல் தேவைப்படுகிறது.
  3. சேதமடைந்த இரத்தக் குழாய்களிலிருந்து திரவ இழப்பு ஏற்படுவதால், தீப்பட்ட இடத்தில் வீக்கம் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 2.
பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்களின் அறிகுறிகள் அதன் தடுப்பு மற்றும் சிகிச்சை முறையினை அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 7

மனவரைபடம்
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 8