Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 1 Chapter 4 அணு அமைப்பு Questions and Answers, Notes.
TN Board 7th Science Solutions Term 1 Chapter 4 அணு அமைப்பு
7th Science Guide அணு அமைப்பு Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
பருப்பொருளின் அடிப்படை அலகு ______________ ஆகும்.
அ) தனிமம்
ஆ) அணு
இ) மூலக்கூறு
ஈ) எலக்ட்ரான்
விடை:
ஆ) அணு
Question 2.
அணுக்கருவைச் சுற்றி வரும் அடிப்படை அணுத்துகள் ____________ ஆகும்.
அ) அணு
ஆ) நியூட்ரான்
இ) எலக்ட்ரான்
ஈ) புரோட்டான்
விடை:
இ) எலக்ட்ரான்
Question 3.
_____________ நேர் மின்சுமையுடையது.
அ) புரோட்டான்
ஆ) எலக்ட்ரான்
இ) மூலக்கூறு
ஈ) நியூட்ரான்
விடை:
அ) புரோட்டான்
Question 4.
ஓர் அணுவின் அணு எண் என்பது அதிலுள்ள ____________ ஆகும்.
அ) நியூட்ரான்களின் எண்ணிக்கை
ஆ) புரோட்டான்களின் எண்ணிக்கை
இ) புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை
ஈ) அணுக்களின் எண்ணிக்கை
விடை:
ஆ) புரோட்டான்களின் எண்ணிக்கை
Question 5.
நியூக்ளியான்கள் என்பது _____________ குறிக்கும்.
அ) புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்
ஆ) நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்
இ) புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்
ஈ) நியூட்ரான்கள் மற்றும் பாஸிட்ரான்களைக்
விடை:
இ) புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
ஒரு அணுவில் காணப்படும் மிகச்சிறிய துகள் ______________
விடை:
அணுக்கூறுகள்
Question 2.
அணுவின் உட்கருவில் __________ மற்றும் _________ இருக்கும்.
விடை:
புரோட்டான்கள், நியூட்ரான்கள்
Question 3.
அணுவின் உட்கருவை _____________ சுற்றி வரும்
விடை:
எலக்ட்ரான்கள்
Question 4.
கார்பனின் இணைதிறன் 4 மற்றும் ஹைட்ரஜனின் இணைத்திறன் 1 ஆக உள்ளது எனில், மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு _____________
விடை:
CH4
Question 5.
மெக்னீசியம் அணுவின் வெளிவட்டப் பாதையானது இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கிறது எனில் மெக்னீசியம் அணுவின் இணைதிறன் _____________
விடை:
இரண்டு
III. பொருத்துக
விடை:
IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக
Question 1.
ஒரு தனிமத்தின் அடிப்படை அலகு மூலக்கூறு ஆகும்.
விடை:
தவறு. ஒரு தனிமத்தின் அடிப்படை அலகு அணு ஆகும்
Question 2.
எலெக்ட்ரான்கள் நேர்மின்சுமை கொண்டவை
விடை:
தவறு. எலெக்ட்ரான்கள் எதிர்மின்சுமை கொண்டவை
Question 3.
ஓர் அணு மின்சுமையற்ற நடுநிலைத் தன்மையை கொண்டது.
விடை:
சரி
Question 4.
அணுவின் உட்கருவைச் சுற்றி புரோட்டான்கள் காணப்படுகின்றன.
விடை:
தவறு. அணுவின் உட்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் காணப்படுகின்றன.
V. ஒப்புமை தருக
Question 1.
சூரியன் : உட்கரு :: கோள்கள் : _____________
விடை:
எலக்ட்ரான்கள்
Question 2.
அணு எண் : ____________ :: நிறை எண் : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை.
விடை:
புரோட்டான்கள் (அ) எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
Question 3.
K : பொட்டாசியம் :: C : _________
விடை:
கார்பன்
VI. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து, சரியான ஒன்றைத் தேர்வு செய்க
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
Question 1.
கூற்று : ஓர் அணு மின்சுமையற்றது, நடுநிலையானது
காரணம் : அணுக்கள் சம எண்ணிக்கையிலான புரோட்டான்களையும் எலக்ட்ரான்களையும் கொண்டவை.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
Question 2.
கூற்று : ஓர் அணுவின் நிறை என்பது அதன் உட்கருவின் நிறையாகும்.
காரணம் : உட்கரு மையத்தில் அமைந்துள்ளது.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
சரியான விளக்கம் : அணுவின் நிறை என்பது புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல்.
Question 3.
கூற்று : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை அணு எண்ணாகும்.
காரணம் : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை நிறை எண்ணாகும்.
விடை:
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
சரியான விளக்கம் : புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அணு எண்ணாகும்.
VII. மிகச் சுருக்கமாக விடையளி
Question 1.
அணு – வரையறு.
விடை:
பருப்பொருள்களை உருவாக்கும் மிகச் சிறிய துகள்களே அணுக்கள் எனப்படும்.
Question 2.
அணுவின் அடிப்படைத் துகள்களைக் குறிப்பிடவும்.
விடை:
புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்கள்
Question 3.
அணு எண் என்றால் என்ன?
விடை:
ஓர் அணுவில் உள்ள புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கையே அணு எண் எனப்படும்.
Question 4.
புரோட்டானின் பண்புகள் யாவை?
விடை:
- புரோட்டான் அணுவின் மிகச்சிறிய அணுக்கூறு ஆகும்.
- புரோட்டான்கள் அணுக்கருவினுள் அமைந்துள்ளன.
- புரோட்டான்கள் நேர்மின்னூட்டம் பெற்ற துகள்கள் ஆகும்.
- புரோட்டான்கள் நேர்மின்னூட்டத்தின் மதிப்பு எலக்ட்ரான் பெற்றுள்ள எதிர் மின்னூட்டத்தின் மதிப்பிற்குச் சமமாகும்.
Question 5.
நியூட்ரான்கள் ஏன் மின்சுமையற்ற துகள்கள் என அழைக்கப்படுகின்றன?
விடை:
- நியூட்ரான்கள் எவ்வித மின்சுமையும் கொண்டிருக்கவில்லை.
- எனவே நியூட்ரான்கள் மின்சுமையற்ற துகள்கள் என அழைக்கப்படுகின்றன.
VIII. சுருக்கமாக விடையளி
Question 1.
ஐசோடோப்புகள், ஐசோபார்கள் – வேறுபடுத்தவும்.
விடை:
Question 2.
ஐசோடோப்புகள் என்றால் என்ன? ஓர் உதாரணம் தருக.
விடை:
- ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு எண்ணிக்கையுள்ள நியூட்ரான்களை பெற்றிருக்கலாம்.
- அத்தகைய அணுக்கள் ஒரே அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்களையும் பெற்றுள்ளன. அவை ஐசோடோப்புகள் என அழைக்கப்படுகின்றன.
- உதாரணம் : புரோட்டியம் (1H1), டியூட்ரியம் (1H2), மரிட்டியம் (1H3)
Question 3.
நிறை எண் மற்றும் அணு எண் வேறுபடுத்துக.
விடை:
Question 4.
ஒரு தனிமத்தின் அணு எண் 9 மற்றும் அத்தனிமம் 10 நியூட்ரான்களை கொண்டுள்ளது எனில், தனிம ஆவர்த்தன அட்டவணையினைக் கொண்டு அது எத்தனிமம் எனக் கண்டறிக. அதன் நிறை எண் யாது?
விடை:
தனிமம் ஃப்ளூரின் ஆகும். 9F19 நிறை எண்
A = புரோட்டான் எண்ணிக்கை + நியூட்ரான் எண்ணிக்கை
= அணு எண் + நியூட்ரான் எண்ணிக்கை
= 9 + 10 = 19
IX. விரிவாக விடையளி
Question 1.
அணு அமைப்பின் படம் வரைந்து அதன் அடிப்படைத் துகள்களின் நிலையினை விளக்குக.
விடை:
- அணு கோள வடிவமானது.
- நடுவில் உட்கரு அமைந்துள்ளது.
- உட்கருவில் புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் உள்ளன.
- எலக்ட்ரான்கள் உட்கருவை வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.
Question 2.
ஒரு தனிமத்தின் அணு எண் மற்றும் நிறை எண் முறையே 26 மற்றும் 56. அந்த அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. அதன் அணு அமைப்பினை வரையவும்.
விடை:
ராட்டான்களின்
அணு எண் (Z) = புரோட்டான்களின் எண்ணிக்கை = எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 26
நிறை எண் (A) = புரோட்டான்களின் எண்ணிக்கை + நியூட்ரான்களின் எண்ணிக்கை (N)
A = Z ± N
N = A – Z
= 56 – 26 = 30
எலக்ட்ரான் அமைப்பு : 2, 8, 14, 2
Question 3.
நியூக்ளியான்கள் என்றால் என்ன? அவை ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
விடை:
நியூக்ளியான்களின் பண்புகளை எழுதவும்.
- புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் ஆகியன நியூக்ளியான்கள் ஆகும்.
- அணுவின் உட்கருவினுள் இவைகாணப்படுவதால் நியூக்ளியான்கள் என அழைக்கப்படுகின்றன.
- புரோட்டான்கள் நேர்மின்னூட்டம் பெற்ற துகள்கள் ஆகும்.
- நியூட்ரான்கள் எவ்வித மின்சுமையும் பெற்றிருக்கவில்லை.
- புரோட்டான் மற்றும் நியூட்ரான் ஆகியன ஒத்த நிறையை பெற்றுள்ளன.
Question 4.
இணைதிறனை வரையறு. அணு எண் 8 கொண்ட ஒரு தனிமத்தின் இணைதிறன் மதிப்பு என்ன? அத்தனிமம் ஹைட்ரஜனுடன் இணைந்து உருவாக்கும் சேர்மம் யாது?
விடை:
- ஓர் அணு பிற அணுவுடன் இணையக்கூடிய திறனிற்கு இணை திறன் என்று பெயர்.
- ஓர் அணுவின் இணைதிறன் அது எத்தனை ஹைட்ரஜன் அணுக்களை பிணைத்து வைத்திருக்க இயலும் என்பதனை கொண்டு அளவிடப்படுகிறது.
- அணு எண் 8 கொண்ட தனிமம் ஆக்சிஜன் ஆகும்.
- ஆக்சிஜனின் இணைதிறன் இரண்டு.
- ஒரு ஆக்சிஜன் அணு இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்து ஒரு மூலக்கூறு நீரினை உருவாக்குகிறது.
- நீர் மூலக்கூறின் வாய்பாடு H2O
X. உயர் சிந்தனைத் திறன்கள் அடிப்படையிலான வினாக்கள்
Question 1.
ஒரு தனிமத்தின் அணுவில் எலக்ட்ரான் இல்லை எனில் அந்த அணுவிற்கு நிறை உண்டா இல்லையா? ஒரு அணு எலக்ட்ரான் இன்றி இருக்குமா? அவ்வாறு இருந்தால், எடுத்துக்காட்டு தருக.
விடை:
- ஒரு அணு எலக்ட்ரான் இன்றி இருக்காது..
- ஒரு அணு நடுநிலைத் தன்மையுடன் விளங்க சம எண்ணிக்கையில் புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் பெற்றிருக்க வேண்டும்.
- எலக்ட்ரான் இல்லாத அணு நேர்மின் அயனியாக இருக்கும்.
- நேர்மின் அயனியில் புரோட்டான் மற்றும் நியூட்ரான்கள் உள்ளதால் அதற்கு நிறை உண்டு.
- எ.கா. H+ அயனியில் ஒரு புரோட்டான் மட்டுமே உள்ளது. நியூட்ரான்கள் இல்லை எனவே
- H+ அயனியின் நிறை புரோட்டானின் நிறைக்கு சமம்.
Question 2.
சாதாரண உப்பு என்பது யாது? அதிலுள்ள தனிமங்கள் யாவை? சாதாரண உப்பின் மூலக்கூறு வாய்ப்பாட்டினை எழுதுக. அத்தனிமங்களின் அணு எண் மற்றும் நிறை எண் மதிப்பு என்ன? அந்த சேர்மத்திலுள்ள அயனிகளை எழுதவும்.
XI. செயல்திட்டம் (மாணவர்களுக்கானது)
Question 1.
அணுக்கள் எவ்வாறு இருக்கும் என்பதை அறிய மாணவர்களை ஒரு மாதிரியினை உருவாக்கச் செய்யலாம். எலக்ட்ரான் வட்டங்களை உருவாக்க குழாயைச் சுத்தம் செய்யும் மெல்லிய உலோகக் கம்பிகளையும், புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் குறிப்பிட வெவ்வேறு நிறங்களில் உள்ள பந்துகளையும் எலக்ட்ரான்களைக் குறிப்பிட மணிகளையும் கொடுக்கலாம். மாணவர்கள் அப்பொருள்களைக் கொண்டு அணு மாதிரியை உருவாக்கி வகுப்பறையின் சுவர்களில் தொங்கவிடும் போது மகிழ்ச்சியடைவர்.
7th Science Guide அணு அமைப்பு Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
Question 1.
பின்வருவனவற்றுள் மிகச் சிறிய துகள் எது?
அ) சிவப்பு இரத்த அணு
ஆ) வைரஸ்
இ) அணு
ஈ) தூசி துகள்கள்
விடை:
இ) அணு
Question 2.
அணுவின் வடிவம்?
அ) சதுரம்
ஆ) கோளம்
இ) வட்டம்
ஈ) கனசதுரம்
விடை:
ஆ) கோளம்
Question 3.
எது நியூக்ளியான் அல்ல?
அ) புரோட்டான்
ஆ) நியூட்ரான்
இ) எலக்ட்ரான்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
இ) எலக்ட்ரான்
Question 4.
ஹைட்ரஜன், டியூட்டீரியம் மற்றும் டிரிட்டியம் ஆகியவற்றில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை முறையே?
அ) 0, 1, 2
ஆ) 1, 0, 2
இ) 1, 2, 0
ஈ) 2, 1, 0
விடை:
அ) 0, 1, 2
Question 5.
கால்சியம் குளோரைடின் மூலக்கூறு வாய்பாடு CaCl, எனில் கால்சியத்தின் இணைதிறன் ?
அ)1
ஆ) 2
இ) 3
ஈ) 4
விடை:
ஆ) 2
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
Question 1.
ஒரு அணு மனிதனின் ______________ காட்டிலும் ஆயிரம் மடங்கு சிறியது.
விடை:
தடிமனான முடியைக்
Question 2.
ஒரு நானோ மீட்டர் என்பது ______________ .
விடை:
1 × 10-9 மீ
Question 3.
அணுவின் மொத்த நிறையும் அதன் ______________ அமைந்துள்ளது.
விடை:
அணுக் கருவினுள்
Question 4.
4Be9 என்ற அணுவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை ___________
விடை:
5
Question 5.
சோடியத்தின் இணைதிறன் ஒன்று மற்றும் ஆக்சிஜனின் இணைதிறன் இரண்டு எனில் சோடியம் ஆக்சைடின் மூலக்கூறு வாய்பாடு ______________
விடை:
Na2O
III. சரியா? தவறா? தவறெனில் சரி செய்து எழுதுக
Question 1.
அணு என்பது மிகச்சிறிய பிரிக்க இயலும் துகள் என்ற அணுக்கொள்கையை ஜான் டால்டன் வெளியிட்டார்.
விடை:
தவறு. அணு என்பது மிகச்சிறிய பிரிக்க இயலாத துகள் என்ற அணுக் கொள்கையை ஜான் டால்டன் வெளியிட்டார்
Question 2.
ரூதர்போர்டு தடிமனான தங்கத் தகட்டின் மீது எதிர்மின்னூட்டம் கொண்ட ஆல்பா கதிர்களை மோதச் செய்து சோதனையை மேற்கொண்டார்
விடை:
தவறு. ரூதர்போர்டு மெல்லிய தங்கத் தகட்டின் மீது நேர்மின்னூட்டம் கொண்ட ஆல்பா கதிர்களை மோதச் செய்து சோதனையை மேற்கொண்டார்
Question 3.
அணுவின் அளவவோடு ஒப்பிடும் போது அணுக்கருவானது அளவில் மிக மிகச் சிறியதாகும்.
விடை:
சரி
Question 4.
ஒரு அணுவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை சமம்.
விடை:
சரி
Question 5.
மீத்தேனின் வாய்பாடு CH4, ஏனெனில் ஹைட்ரஜனின் இணைதிறன் 4 ஆகும்.
விடை:
தவறு. மீத்தேனின் வாய்பாடு CH4, ஏனெனில் கார்பனின் இணைதிறன் 4 ஆகும்
IV. பொருத்துக
V. வாக்கியத்தை சரியான வடிவத்தில் எழுதவும்
Question 1.
ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்களையும் கொண்டது ஐசோடோப்புகள் மற்றும் ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டது ஐசோபார்கள் எனப்படும்.
விடை:
சரியான கூற்று :
ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டது ஐசோபார்கள் மற்றும் ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டது ஐசோடோப்புகள் எனப்படும்.
Question 2.
உட்கருவானது எதிர்மின் சுமையுடைய எலக்ட்ரான்களை குறிப்பிட்ட வட்ட பாதையில் சுற்றி வருகின்றது.
விடை:
சரியான கூற்று :
எதிர்மின் சுமையுடைய எலக்ட்ரான்கள் உட்கருவினை குறிப்பிட்ட வட்டபாதையில் சுற்றி வருகின்றன.
VI. கொடுக்கப்பட்டுள்ள ஒப்புமையை முடிக்கவும்
Question 1.
புரோட்டான் : நேர்மின்னூட்டம் பெற்ற துகள் :: ___________ : எதிர்மின்னூட்டம் பெற்ற துகள்.
விடை:
எலக்ட்ரான்
Question 2.
6C12 & 6C14 : ஐசோடோப்புகள் :: 18Ar40 & 20Ca40 : _________
விடை:
ஐசோபார்கள்
VII. சரியான கூற்றை தேர்வு செய்யவும்
Question 1.
கூற்று (A): ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டது ஐசோடோப்புகள் ஆகும்.
காரணம் (R): ஐசோடோப்புகள் வேறுபட்ட நியூட்ரான் எண்ணிக்கையை பெற்றுள்ளன.
அ) கூற்றும் (A) காரணமும் (R) சரி. மேலும் காரணம் (R) கூற்றுக்கான (A) சரியான விளக்கம்
ஆ) கூற்றும் (A) காரணமும் (R) சரி. மேலும் காரணம் (R) கூற்றுக்கான (A) சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி
ஈ) கூற்று (A), காரணம் (R) இரண்டுமே தவறு
விடை:
அ) கூற்றும் (A) காரணமும் (R) சரி.
மேலும் காரணம் (R) கூற்றுக்கான (A) சரியான விளக்கம்
Question 2.
கூற்று (A): அணுவின் மொத்த நிறையும் அதன் அணுக்கருவினுள் அமையவில்லை
காரணம் (R): அணுக்கருவினுள் புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் உள்ளன.
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. மேலும் காரணம் (R) கூற்றுக்கான (A) சரியான விளக்கம்
ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. மேலும் காரணம் (R) கூற்றுக்கான (A) சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி
ஈ) கூற்று (A), காரணம் (R) இரண்டுமே தவறு
விடை:
இ) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி
சரியான கூற்று : அணுவின் மொத்த நிறையும் அதன் அணுக்கருவினுள் அமைந்துள்ளது.
VIII. மிகக் குறுகிய விடையளி
Question 1.
அணுவின் அடிப்படைத் துகள்கள் என்றால் என்ன?
விடை:
- அணுவினை உருவாக்கும் துகள்கள் அணுவின் அடிப்படைத் துகள்கள் எனப்படும்.
- அவை புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் ஆகும்.
Question 2.
நிறை எண் – வரையறு.
விடை:
நிறை எண் (A) என்பது அணுக்கருவினுள் உள்ள மொத்த புரோட்டான்கள் (P) மற்றும் நியூட்ரான்களின் (N) எண்ணிக்கையின் கூடுதலுக்கு சமமாகும். A = P + N
Question 3.
ஒரு அணுவில் உள்ள புரோட்டான்கள், எலக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரான்களை கணக்கிடும் வாய்பாடுகளைத் தருக.
விடை:
- புரோட்டான்களின் எண்ணிக்கை = எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = அணு எண்
- நியூட்ரான்களின் எண்ணிக்கை (N) = நிறை எண் (A) – புரோட்டான்களின் எண்ணிக்கை (P) (N = A – P)
IX. குறுகிய விடையளி
Question 1.
டால்டனின் அணுக் கொள்கை பற்றி எழுதுக.
விடை:
- பருப்பொருள்கள் அணுக்கள் எனும் மிகச் சிறிய துகள்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
- அணு என்பது மிகச்சிறிய பிரிக்க இயலாத துகள்.
- அணு கோள வடிவில் உள்ளது.
Question 2.
தாம்சனின் அணுக் கொள்கை பற்றி எழுதுக.
விடை:
- J.J. தாம்சன் கொள்கைப்படி தர்பூசணியில் சிகப்பு பகுதி காணப்படுவது போல் அணுவில் நேர் மின்னூட்டம் காணப்படுகிறது.
- தர்பூசணியில் விதை பதிந்து காணப்படுவது போல் எதிர் மின்னூட்டம் நேர் மின்னூட்டத்தில் பதிந்து காணப்படுகிறது.
- அணுவின் நேர் மற்றும் எதிர் மின்னூட்டங்கள் சம எண்ணிக்கையில் காணப்படுவதால், அணுவில் எவ்வித மின்சுமையும் இல்லை.
Question 3.
அணுவின் அடிப்படைத் துகள்களின் மின்சுமை மற்றும் நிறை பற்றி எழுதுக.
விடை:
Question 4.
பின்வரும் தனிமங்களின் இணைதிறன்கள் முறையே ஹைட்ரஜன் 1, ஆக்சிஜன் 2, சோடியம் 1 மற்றும் குளோரின் 1 எனில் (i) நீர் (ii) ஹைட்ரஜன் குளோரைடு (iii) சோடியம் ஆக்சைடு (iv) சோடியம் குளோரைடு ஆகியவற்றின் வாய்பாட்டினை எழுதுக.
விடை:
Question 5.
பின்வரும் அணுக்களின் அமைப்பினை வரைக., 1H1, 2He4 மற்றும் 8O16
விடை:
X. விரிவான விடையளி
Question 1.
ரூதர்போர்டின் சிதறல் சோதனையை விவரி.
விடை:
- ரூதர்போர்டு ஒரு மெல்லிய தங்கத் தகட்டினை நேர்மின்னூட்டம் கொண்ட ஆல்பா கதிர்களைக் கொண்டு மோதச் செய்தார்.
- அதிக திசை வேகம் கொண்ட பெரும்பான்மையான ஆல்பா கதிர்கள் எவ்வித தடைப்பொருள்களின் மீதும் மோதாமல் தங்கத் தகட்டினை ஊடுருவிச் சென்றது.
- மிகச் சில ஆல்பா கதிர்கள் தங்கத்தகட்டின் மீது மோதி பின்னோக்கி வந்தது.
- இச்சோதனையின் அடிப்படையில் ரூதர்போர்டு பின்வரும் அணுக் கொள்கையை வெளியிட்டார்.
- அதிக அளவிலான ஆல்பா கதிர்கள் தங்கத் தகட்டினை ஊடுருவிச் சென்றதால் அணுவானது பெரும்பான்மையான வெற்றிடத்தைக் கொண்டிருக்கிறது.
- மிகச் சில ஆல்பா கதிர்கள் பின்னோக்கி வந்ததால் நேர்மின் சுமையுடைய அணுக்கருவானது அணுவுடன் ஒப்பிடும் போது மிகமிகச் சிறியதாகும்.
Question 2.
ரூதர்போர்டு அணுக்கொள்கையை விவரி.
விடை:
ஆல்பா கதிர் சிதறல் சோதனையின் அடிப்படையில் ரூதர்போர்டு வெளிட்ட அணுக்கொள்கை.
- அணுவின் மையமான அணுக்கருவானது நேர்மின் தன்மை உடையது. அணுவின் பெரும்பான்மை நிறையானது அதன் மையத்தில் அமைந்துள்ளது.
- எதிர்மின்தன்மை கொண்ட எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட வட்டபாதையில் அணுக்கருவினைச் சுற்றி வருகின்றன.
- அணுவுடன் ஒப்பிடும்போது அணுக்கருவானது அளவில் மிகமிகச் சிறியதாகும்.
முயற்சி செய்க :1
Question 1.
கார்பனின் அணு எண் z = 6 எனில் அந்த அணுவானது அதன் சுற்றுப்பாதைகளில் எத்தனை எலெக்ட்ரான்களைக் கொண்டுள்ளன?
விடை:
6 எலக்ட்ரான்கள்
முயற்சி செய்க : 2
Question 1.
ஏன் அனைத்து அணுக்களின் அணு எண் மற்றும் நிறை எண் ஆகியவை எப்போது முழு எண்ணாகவே காணப்படுகின்றன?
விடை:
- அணு எண் என்பது புரோட்டான்களின் அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஆகும்.
- நிறை எண் என்பது புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கையின் கூடுதல்.
- ஒரு அணுவில் உள்ள புரோட்டான்கள், எலக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை முழு எண் ஆகும். ஆதலால் அணு எண் மற்றும் நிறை எண் ஆகியவை எப்போதும் முழு எண்ணாகவே காணப்படுகின்றன.
Question 2.
ஒரு சல்பர் அணுவானது 16 புரோட்டான்களையும் 16 நியூட்ரான்களையும் கொண்டுள்ளது. அதன் அணு எண் மற்றும் நிறை எண்ணின் மதிப்பினை தருக.
விடை:
அணு எண் = புரோட்டன்களின் எண்ணிக்கை = 16
நிறை எண் = புரோட்டன்களின் எண்ணிக்கை + நியூட்ரான்களின் எண்ணிக்கை. = 16 + 16 = 32 ஃ சல்பர் அணு 16S32
செயல்பாடு:1
நமக்கு தெரிந்த சில பொருள்களின் படங்களும் அவற்றின் துகள்களும் கீழே உள்ள படங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
Question 1.
பொருள்களின் பெயர்களையும் அவை எத்துகள்களால் உருவானது என்பதனையும் எழுதுக
விடை:
1. சுத்தியல் – இரும்பு
2. வளையல் – தங்கம்
3. குடிநீர்க்குழாய் – துருப்பிடிக்காத எஃகு
4. பாத்திரங்கள் – தாமிரம், – துருப்பிடிக்காத எஃகு
செயல்பாடு : 2
பின்வரும் செயல்பாட்டின் மூலம் நாம் அணுவின் பண்புகளை பட்டியல் இடுவோமா? படத்தில் – அணுவின் பாகங்களை குறித்து பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Question 1.
________________ நேர்மின் சுமை கொண்ட துகளாகும்.
விடை:
புரோட்டான்
Question 2.
____________ எதிர்மின்சுமை கொண்ட துகளாகும்.
விடை:
எலக்ட்ரான்
Question 3.
______________ மின்சுமை அற்றது.
விடை:
நியூட்ரான்
செயல்பாடு :3
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையினை உற்றுநோக்கி பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Question 1.
நான் சுவாசித்தலுக்குப் பயன்படுவேன். நான் இல்லாமல் உங்களால் உயிர் வாழ முடியாது. என்னை உங்களுக்குத் தெரிகிறதா? எனது பெயரையும், குறியீட்டையும் எழுதுக.
விடை:
ஆக்சிஜன், 0
Question 2.
இது பலூன்களை நிரப்ப பயன்படுகிறது. இது ஒரு வாயுவாகும். இதனை அடையாளம் காண்க. இதன் நிறை எண் என்ன?
விடை:
ஹீலியம், 4
Question 3.
வாழைப்பழத்தில் உள்ள தனிமத்தின் பெயரைக் குறிப்பிடுக. அதன் அணு எண் மதிப்பு யாது?
விடை:
பொட்டாசியம், 19
Question 4.
‘நான் பட்டாசுகளில் காணப்படுவேன். நான் எத்தனைபுரோட்டான்களை கொண்டுள்ளேன்?
விடை:
சல்பர், 16
Question 5.
நான் உயர்ந்த மதிப்புமிக்க தனிமம். நான் யாரென்று கண்டுபிடி? என்னுடைய நிறை என்ணைக் கூற முடியுமா?
விடை:
தங்கம், 197
மனவரைபடம்