Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்
பக்கம் 41:
வாங்க பேசலாம்:
ஓநாயும், நாயும் கதையை உம் சொந்த நடையில் கூறுக.
பாடச்சுருக்கம் :
காட்டில் ஒரு ஓநாய் பசியால் வாடி அலைந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு நாய் வந்தது. அது கொழுகொழு என்று இருந்தது. அந்த நாயைப் பார்த்த ஓநாய் அதனுடன் பேச ஆரம்பித்தது. ஓநாயைக் காட்டைவிட்டு வெளியே வரும்படி நாய் அழைத்தது. தன்னைப் போல் இருந்தால் ஓநாய்க்கும் நல்ல உணவு கிடைக்கும் என்றது. வீட்டில் கடினமான வேலை எதுவும் கிடையாது.
புதியவர்களைக் கண்டால் விரட்டி அடிக்க வேண்டும். வீட்டுக்காரர்களைப் பார்த்தால் வாலை ஆட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டில் உள்ளவர்கள் அன்பு காட்டுவார்கள். நல்ல உணவு கொடுப்பார்கள். இதனைக் கேட்ட ஓநாய் அந்த நாயுடன் வரச் சம்மதித்தது. திடீரென நாயின் கழுத்தில் உள்ள கருப்புப் பட்டையை
ஓநாய் பார்த்தது. அந்தக் கருப்புப் பட்டை எப்படி வந்தது என ஓநாய் கேட்டது. அது தன்னைச் சங்கிலியால் கட்டிப் போட உதவும் பட்டை என நாய் கூறியது.
உடனே ஓநாய் சுதாரித்துக் கொண்டது. வீட்டில் மாட்டிக் கொண்டு நல்ல உணவுகளைச் சாப்பிடுவதை விட வாழ்க்கையில் எவ்வளவு வசதிகள் இருந்தாலும் சுதந்திரம் இல்லாவிட்டால் பயன் கிடையாது. சுதந்திரமாகக் காட்டில் அலைவதே மேல் என்று கூறிவிட்டு ஓநாய் அங்கிருந்து அகன்று சென்றது.
பக்கம் 42:
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
கேள்வி 1.
மகிழ்ச்சி – இச்சொல் உணர்த்தும் பொருள் ____________.
(அ) இன்பம்
(ஆ) துன்பம்
(இ) வருத்தம்
(ஈ) அன்பு
விடை :
(அ) இன்பம்
கேள்வி 2.
ஒன்றுமில்லை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) ஒன்று + இல்லை
(ஆ) ஒன்றும் + இல்லை
(இ) ஒன்றுமே + இல்லை
(ஈ) ஒன்று + மில்லை
விடை :
(ஆ) ஒன்றும் + இல்லை
கேள்வி 3.
அப்படி + ஆனால் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
(அ) அப்படியானால்
(ஆ) அப்படியனால்
(இ) அப்படியினால்
(ஈ) அப்படி ஆனால்
விடை :
(அ) அப்படியானால்
கேள்வி 4.
விருப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல்
(அ) வெறுப்பு
(ஆ) கருப்பு
(இ) சிரிப்பு
(ஈ) நடிப்பு
விடை :
(அ) வெறுப்பு
வினாக்களுக்கு விடையளி:
கேள்வி 1.
பசியால் மெலிந்த ஓநாய் எங்குச் சுற்றித் திரிந்தது?
விடை :
பசியால் மெலிந்த ஓநாய் காடு முழுவதும் சுற்றித் திரிந்தது.
கேள்வி 2.
நாய், ஓநாயை எங்கு வரச் சொன்னது?
விடை :
நாய், ஓநாயைக் காட்டைவிட்டு வெளியேறி வீட்டிற்கு வரும்படி சொன்னது.
கேள்வி 3.
நாயின் கழுத்தில் என்ன இருந்தது?
விடை :
நாயின் கழுத்தில், அதைச் சங்கிலியால் கட்டிப்போட ஒரு கருப்புப் பட்டை இருந்தது.
அகர முதலியைப் பார்த்து பொருள் எழுதுக.
கேள்வி 1.
விதவிதமான – ________________
விடை :
வகைவகையான
கேள்வி 2.
சுதந்திரம் – ________________
விடை :
விடுதலை
கேள்வி 3.
வருடுதல் – ________________
விடை :
தடவுதல்
கேள்வி 4.
பிரமாதம் – ________________
விடை :
பெருஞ்சிறப்பு
கேள்வி 5.
சந்தேகம் – ________________
விடை :
ஐயம்.
சரியான தொடரை ✓ எனவும் தவறான தொடரை ✗ எனவும் குறியிடுக.
கேள்வி 1.
ஓநாய் தின்பதற்கு எதுவும் கிடைக்காமல் மெலிந்திருந்தது.
விடை :
✓
கேள்வி 2.
நாய் புதியவர்களைக் கண்டால் விரட்டியடிக்காது.
விடை :
✗
கேள்வி 3.
ஓநாயின் கழுத்தில் கருப்புப் பட்டை இருந்தது.
விடை :
✗
கேள்வி 4.
ஓநாய் சுதந்திரமாக வாழ ஆசைப்படவில்லை.
விடை :
✗
கேள்வி 5.
ஓநாயை நாய் வீட்டிற்கு அழைத்தது.
விடை :
✓
சரியான சொல்லால் நிரப்புக.
கேள்வி 1.
நீ எவ்வ ளவு ___________ இருக்கிறாய்?
விடை :
அழகாக
கேள்வி 2.
நாயின் கழுத்தில் ____________ இருந்தது.
விடை :
கருப்புப்பட்டை
கேள்வி 3.
வீட்டுக்காரர்கள் நாயை ___________ வருடிக் கொடுப்பார்கள்.
விடை :
அன்பாக
கேள்வி 4.
வீட்டில் மாட்டிக் கொள்வதைவிட _____________ காட்டில் அலைவதே மேல.
விடை :
சுதந்திரமாக
கேள்வி 5.
என்னைத் தயவுசெய்து அழைத்துச் செல் என்று _______________ கூறியது.
விடை :
ஓநாய்
சொற்களை இணைத்து எழுதுவோம்
விடை :
சொல் விளையாட்டு:
கேள்வி 1.
விடை :
கேள்வி 2.
விடை :
சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடரை உருவாக்குக.
எ.கா. சுதந்திரத்தை கொடுக்க என் மாட்டேன் விட்டு
விடை :
என் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்.
கேள்வி 1.
கொழு, கொழு அழகையும் புகழ்ந்தது நாயின் உடம்பையும்.
விடை :
நாயின் கொழு, கொழு உடம்பையும் அழகையும் புகழ்ந்தது.
கேள்வி 2.
பார்த்தால் வீட்டுக்காரர்களைப் ஆட்ட வாலை வேண்டும்.
விடை :
‘வீட்டுக்காரர்களைப் பார்த்தால் வாலை ஆட்ட வேண்டும்.
பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.
எ.கா. நான் என்ன வேலை செய்ய வேண்டும்
விடை :
நான் என்ன வேலை செய்ய வேண்டும்?
கேள்வி 1.
ஆகா என்ன சுகம் தெரியுமா
விடை :
ஆகா! என்ன சுகம் தெரியுமா?
கேள்வி 2.
ஒன்றுமில்லை என்றால் கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது
விடை :
ஒன்றுமில்லை என்றால் கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது?
கேள்வி 3.
என்ன கட்டிப் போடுகிறார்களா
விடை :
என்ன, கட்டிப் போடுகிறார்களா?
கேள்வி 4.
நம் விருப்பம் போல போக முடியாது அது என்ன பிரமாதம்.
விடை :
நம் விருப்பம் போல போக முடியாது. அது என்ன பிரமாதம்?
கேள்வி 5.
நல்ல உணவு உனக்கும் கிடைக்கும் என்று சொன்னது
விடை :
“நல்ல உணவு உனக்கும் கிடைக்கும்” என்று சொன்னது.
சூழலுக்கேற்ற உணர்வைத் தெரிவு செய்க.
(சிரிப்பு, மகிழ்ச்சி, வருத்தம், வியப்பு, அச்சம்)
கேள்வி 1.
பாட்டி புத்தாடை வாங்கித் தரும்போது ஏற்படுவது
விடை :
மகிழ்ச்சி
கேள்வி 2.
மிகப்பெரிய யானையைப் பார்க்கும்போது
விடை :
வியப்பு
கேள்வி 3.
கோமாளி செய்யும் செயல்களைக் காணும்போது
விடை :
சிரிப்பு
கேள்வி 4.
நம்முடைய நண்பர் கீழே விழுவதைக் காணும்போது
விடை :
வருத்தம்
கேள்வி 5.
திடீரென எதிரில் பாம்பைக் காணும்போது
விடை :
அச்சம்
சிந்திக்கலாமா?
கேள்வி 1.
எந்தக் கிளி மகிழ்ச்சியாக இருக்கும்? ஏன்?
விடை :
மரக்கிளையில் உள்ள கிளி மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில் அது சுதந்திரமாக உள்ளது. கூண்டுக்கிளி கவலையோடு இருக்கும். ஏனெனில் அது அடிமைபோல் அடைந்து கிடக்கிறது. அதனால் சுதந்திரமாகப் பறந்து செல்ல முடியாது.