Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் … டும் … டும் … டும் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் … டும் … டும் … டும்
பக்கம் 30:
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
கேள்வி 1.
விறகெல்லாம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________
(அ) விறகு + எல்லாம்
(ஆ) விறகு + கெல்லாம்
(இ) விற + கெல்லாம்
(ஈ) விறகு + எலாம்
விடை :
(அ) விறகு + எல்லாம்
கேள்வி 2.
‘படம் + கதை’ – இச்சொற்களைச் சேர்த்து எழுதிக் கிடைப்பது ____________
(அ) படம்கதை
(ஆ) படக்கதை
(இ) படகதை
(ஈ) படகாதை
விடை :
(ஆ) படக்கதை
கேள்வி 3.
இப்படத்திற்கு உரிய சொல்லைக் கண்டறிக ______________
(அ) ஓனான்
(ஆ) ஓநான்
(இ) ஓணான்
(ஈ) ஓணன்
விடை :
(இ) ஓணான்
கேள்வி 4.
தோசை – இச்சொல்லின் ஒலிப்புடன் தொடர்பில்லாத சொல் எது? ___________
(அ) ஆசை
(ஆ) மேசை
(இ) பூசை
(ஈ) இசை
விடை :
(ஈ) இசை
வினாக்களுக்கு விடையளி:
கேள்வி 1.
ஓணான் எதற்காக உழவரிடம் சென்றது?
விடை :
ஓணானின் வாலில் முள் குத்தி மாட்டிக் கொண்டது. அதை எடுப்பதற்காக ஓணான் உழவரிடம் சென்றது.
கேள்வி 2.
தோட்டக்காரன் ஓணானிடம் என்ன கூறினான்?
விடை :
தோட்டக்காரன் ஓணானிடம் பானை உடைந்து விட்டது. எனவே அதற்குப் பதில் பூக்களைத் தருவதாகக் கூறினான்.
கேள்வி 3.
கதையில் ஓணான் பெற்று வந்த பொருள்களைக் கூறுக.
விடை :
கத்தி, விறகு, தோசை, பானை, பூக்கள், மேளம் – ஆகியவை ஓணான் பெற்று வந்த பொருள்கள் ஆகும்.
கேள்வி 4.
படக்கதையிலிருந்து நீ அறிந்து கொண்ட கருத்து யாது?
விடை :
துன்பம் வரும் வேளையில் மனம் சோர்வு அடையக் கூடாது. eஒன்று போனால் மற்றொன்று கிடைக்கும் என் தன்னம்பிக்கை நமக்கு வேண்டும்.
புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.
கேள்வி 1.
ஊர்கூடி என்னை இழுத்தால்தான் நான் அசைந்து வருவேன் – நான் யார்?
விடை :
தேர்
கேள்வி 2.
இடி இடிக்கும்; மின்னல் மின்னும்; மழை பெய்யாது – அது என்ன?
விடை :
வாண வேடிக்கை
கேள்வி 3.
நிழல் தருவேன் காய் தருவேன் பழம் தருவேன். நான் யார்?
விடை :
மரம்
கேள்வி 4.
‘கலை’ என்ற சொல்லில் முதல் எழுத்து ‘படம்’ என்ற சொல்லில் இடை எழுத்து மடல்’ என்ற சொல்லில் இறுதி எழுத்து – நான் யார்?
விடை :
கடல்
சொல் விளையாட்டு :
ஒரு சொல்லில் உள்ள ஏதாவது ஓர் எழுத்தைக்கொண்டு, புதிய சொற்களை உருவாக்கி மகிழ்க.
இதே போன்று ஒட்டகம், குருவி, சிங்கம், கவிதை போன்ற சொற்களைத் தொடக்கமாக வைத்துச் சொற்களை உருவாக்குக.
விடை :