Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 1 உண்மையே உயர்வு Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 1 உண்மையே உயர்வு
பக்கம் 2:
வாங்க பேசலாம் :
கதைப்பாடலில் உள்ள கருத்துகளை உம் சொந்த நடையில் கூறுக.
பாடல் விளக்கம் :
1. ஒரு ஊரில் கழுதை ஒன்று இருந்தது. அது தன் முதுகில் உப்பு மூட்டை சுமப்பது வழக்கம். ஒரு நாள் அது உப்பு மூட்டையுடன் ஓடை ஒன்றைக் கடந்தது. அப்போது உப்பு மூட்டை முதுகிலிருந்து தவறி ஓடையில் விழுந்துவிட்டது.
2. உப்பு நீரில் கரைந்தது. இதனால் உப்பு மூட்டையின் எடை குறைந்தது. அந்த மூட்டையை, உரிமையாளர் கழுதையின் முதுகில் ஏற்றினார்.
3. உப்பின் எடை குறைந்ததால் கழுதை மகிழ்ச்சி அடைந்தது. அது வேகமாகச் சென்றது.
4. ஒவ்வொரு நாளும் இவ்வாறு கழுதையின் முதுகில் உப்பு மூட்டை ஏற்றப்படும். ஓடைக்குள் வந்ததும் கழுதை உப்பு மூட்டையை நீருக்குள் தள்ளிவிடும்.
5. எடை குறைந்து போனதால் கழுதை உற்சாகமாக ஓடும். கழுதையின் சூழ்ச்சியை அதன் உரிமையாளர் புரிந்து கொண்டார். அதற்கு ஒரு பாடம் புகட்ட எண்ணினார்.
6. அடுத்த நாள் உப்பு மூட்டைக்குப் பதில் பஞ்சு மூட்டையைக் கழுதையின் முதுகில் ஏற்றினார். கழுதை ஓடையை அடைந்தது.
7. கழுதை பஞ்சு மூட்டையை அசைத்து ஓடை நீருக்குள் தள்ளியது. உப்பு மூட்டை போல் இதுவும் இலேசாகிவிடும் என அது நினைத்தது.
8. ஆனால் பஞ்சு மூட்டை நீரை உறிஞ்சி கனத்துப் போய்விட்டது. உரிமையாளர் அதைக் கழுதையின் முதுகில் ஏற்றினார்.
9. கழுதை அந்தக் கனத்த மூட்டையை அதிக சிரமத்துடன் சுமந்து சென்றது. உண்மையான உழைப்பு நமக்கு எப்போதும் வெற்றியைத் தரும். பிறரை ஏய்த்துப் பிழைக்க விரும்பினால் நமக்குத் தோல்வியும், துன்பமுமே கிடைக்கும்.
படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்!
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
கேள்வி 1.
‘சுமந்து’ இச்சொல்லின் பொருள்
(அ) தாங்கி
(ஆ) பிரிந்து
(இ) சேர்ந்து
(ஈ) விரைந்து
விடை :
(அ) தாங்கி
கேள்வி 2.
‘வேண்டுமென்று’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) வேண்டு + மென்று
(ஆ) வேண்டும் + என்று
(இ) வேண் + டுமென்று
(ஈ) வேண்டி + என்று
விடை :
(ஆ) வேண்டும் + என்று
கேள்வி 3.
‘நினைத்தது’ – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
(அ) மறந்தது
(ஆ) பேசியது
(இ) எண்ணியது
(ஈ) வளர்ந்த து
விடை :
(அ) மறந்தது
பக்கம் 3:
கேள்வி 1.
இப்பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?
விடை :
கேள்வி 2.
சிறு வட்டத்தில் உள்ள எழுத்தில் முடியும்படி சொல் உருவாக்குக.
விடை :
- கடை
- குடை
- தடை
- உடை
- ஓடை
- எடை
கேள்வி 3.
படக்குறியீடுகளைக் கொண்டு சொற்களைக் கண்டுபிடிக்கலாமா?
விடை :
- புன்னகை
- அழுகை
- சிந்தனை
- சினம்
- கவலை
- பயம்