Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 4 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.
TN State Board 12th Tamil Model Question Paper 4
நேரம் : 2.30 மணி
மதிப்பெண்கள் : 90
குறிப்புகள்:
- இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
- வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். - வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
- வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
- வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
- வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.
பகுதி -1
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக [14 x 1 = 14]
(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)
Question 1.
‘இளந்தமிழே ‘ தலைப்பிலான சிற்பி பால சுப்ரமணியத்தின் பாடல் இடம் பெற்ற தொகுப்பின் பெயர்
(அ) கொத்துப்பூ
(ஆ) நிலவுப்பூ
(இ) ஆவாரம்பூ
(ஈ) தாழம்பூ
Answer:
(ஆ) நிலவுப்பூ
Question 2.
‘உயர்ந்தோர்’ என்பதன் இலக்கணக் குறிப்பு…….
(அ) பலர்பால் வினைமுற்று
(ஆ) பெயரெச்சம்
(இ) முன்னிலை ஆண்பால் வினைமுற்று
(ஈ) வினையாலணையும் பெயர்
Answer:
(ஈ) வினையாலணையும் பெயர்
Question 3.
இருவேறு பொருள்களுக்கான ஒப்புமையைக் கூறிப் பின்னர் அவற்றின் பொருளை வேறுபடுத்துவது. ………
(அ) பொருள் வேற்றுமை அணி
(ஆ) பிரிதுமொழிதல் அணி
(இ) சிலேடை அணி
(ஈ) தொழில் உவமை அணி
Answer:
(அ) பொருள் வேற்றுமை அணி
Question 4.
‘உவா உற வந்து கூடும் உடுபதி, இரவி ஒத்தார் – யார் யார்?
(அ) சடாயு, இராமன்
(ஆ) குகன், இராமன்
(இ) சுக்ரீவன், இராமன்
(ஈ) சவரி, இராமன்
Answer:
(இ) சுக்ரீவன், இராமன்
Question 5.
‘உத்தமச் சோழனின்’ மனிதத் தீவுகள் என்பது…………
(அ) சிறுகதைத் தொகுப்பு
(ஆ) நெடுங்கதைத் தொகுப்பு
(இ) கவிதைத் தொகுப்பு
(ஈ) கட்டுரைத் தொகுப்பு
Answer:
(அ) சிறுகதைத் தொகுப்பு
Question 6.
சம்பந்தர் தேவாரத்தைத் தொகுத்தவர்…
(அ) மாணிக்க வாசகர்
(ஆ) திருமலை நம்பி
(இ) நம்பியாண்டார் நம்பி
(ஈ) அப்பர்
Answer:
(இ) நம்பியாண்டார் நம்பி
Question 7.
பூப்பெயர் முன் இன மென்மையுந் தோன்றும் என்னும் விதிப்படி அமைந்த சொல் …
(அ) திரைப்படம்
(ஆ) நாடக சபா
(இ) பூங்காற்று
(ஈ) பேரூர்
Answer:
(இ) பூங்காற்று
Question 8.
வெண்பாவிற்கான ஓசை……..
(அ) இன்னோசை
(ஆ) செப்பலோசை
(இ) அகவலோசை
(ஈ) துள்ளல் ஓசை
Answer:
(ஆ) செப்பலோசை
Question 9.
சரியானதைச் தெரிவு செய்க
(அ) முதல் கல் – 1. தோப்பில் முகமது மீரான்
(ஆ) உரிமைத்தாகம் – 2. பூமணி
(இ) தலைக்குளம் – 3. உத்தமச் சோழன்
(ஈ) தம்பி நெல்லையப்பருக்கு – 4. பாரதியார்
(அ) 3214 (ஆ) 2314 (இ) 1234 (ஈ) 4 231
Answer:
(அ) 3214
Question 10.
இரவு பகல் என்பதன் இலக்கணக் குறிப்பு………..
(அ) எண்ணும்மை
(ஆ) உவமைத் தொகை
(இ) வினைத் தொகை
(ஈ) உம்மைத் தொகை
Answer:
(ஈ) உம்மைத் தொகை
Question 11.
METRO TRAIN என்பதன் தமிழாக்கம் ……….
(அ) மகா தொடர்வண்டி
(ஆ) மாநகரத் தொடர்வண்டி
(இ) மெகா புகைவண்டி
(ஈ) பெருநகரத் தொடர்வண்டி
Answer:
(ஆ) மாநகரத் தொடர்வண்டி
Question 12.
‘செல்’ என்ற வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்றைத் தெரிவு செய்க.
(அ) செல்கிறான்
(ஆ) செல்க
(இ) செல்லும்
(ஈ) செல்லல்
Answer:
(ஆ) செல்க
Question 13.
‘மூதூர்’ என்ற சொல்லில் எவ்வகைப் புணர்ச்சி நிகழ்ந்துள்ளது?
(அ) உடம்படு மெய்ப்புணர்ச்சி
(ஆ) குற்றியலுகரப் புணர்ச்சி
(இ) பண்புப் பெயர்ப்புணர்ச்சி
(ஈ) பூப்பெயர்ப் புணர்ச்சி
Answer:
(இ) பண்புப் பெயர்ப்புணர்ச்சி
Question 14.
சரியான குறளைத் தெரிவு செய்க
(அ) மறத்தல் வெகுளியை பார் மட்டும் தீய பிறத்தல் அதனால் வரும்
(ஆ) மறத்தல் யார்மாட்டும் வெகுளியை தீய பிறத்தல் அதனான் வரும்
(இ) மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்
(ஈ) வெகுளியை மறத்தல் யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்
Answer:
(இ) மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்
பகுதி – II
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக [12 x 2 = 24]
பிரிவு – 1
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.
Question 15.
தமிழ்மொழியின் பெருமையைப் பற்றி பேசாத மரபுக் கவிஞர் இல்லை என்பதற்கான கூற்று யாது?
Answer:
- தமிழ் மொழி நம் அடையாளம் ; பண்பாட்டின் நீட்சி ; தோன்றிய காலந்தொட்டு மக்களால் பேசப்பட்டு எழுதப்பட்டு உயிர்ப்போடும், இளமையோடும் இருப்பது.
- இன்றும் தமிழ் மொழியின் புகழ் எத்திசையும் இலங்குகிறது. அத்தகைய தமிழின் பெருமையைப் பேசாத மரபுக்கவிஞர்கள் இல்லை
Question 16.
‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக.
Answer:
- பெய்யென பெய்யும் மழைக்காலத்தில் சூரியன் திடீரென்று பயணம் செய்கிறது.
- அதனால் காய்கிறது. நனைந்து ஈரமாகிருந்த வெளிச்சம், நகரம் முழுக்க பளிச்சென்று பட்டை தீட்டிய வெள்ளை வைரம் போல காட்சியளிக்கிறது.
Question 17.
நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?
Answer:
- சவரி, இராமனைப் புகழ்ந்து அன்பின் கனிவினால் அருவி இழிவது போலக் கண்ணீர் வடித்தாள். (இராமனைக் கண்டதால்) ‘என் பொய்யான உலகப்பற்று அழிந்தது.
- அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது என் பிறவி ஒழிந்தது.” என்று கூறினாள்.
- வேண்டிய எல்லாம் கொண்டுவந்து அவள் இராம இலக்குவருக்கு விருந்து செய்விக்க, அவர்களும் விருந்தை ஏற்றனர்.
Question 18.
ஊன் விற்பவர் எப்பொழுது இருக்கமாட்டார்கள்?
Answer:
உலகத்தார் புலால் தின்னும் பொருட்டு உயிர்களைக் கொல்பவர்கள் இல்லையாயின், வருவாயின் பொருட்டு ஊன் விற்பவர் யாரும் இருக்க மாட்டார்கள்.
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக
Question 19.
ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் மழையைக் கணிக்கும் அறிகுறிகளாகக் குறிப்பிடுபவை யாவை?
Answer:
கார்மேகங்கள், சூரிய உதயத்திற்கு 15, 20 நிமிடங்களுக்கு முன்னதாகக் கிழக்கு வானத்தில் தோன்றுதல், செம்மை நிற மேகங்கள், திடீர் புயல், காற்றின் திசை , இடி, மின்னல், பலமான காற்று, வானவில் முட்டைகளைச் சுமந்திருக்கும் எறும்புகள் வெப்பமும் ஈரப்பதமுமான வானிலை, தூசுப் பனிமூட்டம்.
Question 20.
மையாடல் என்றால் என்ன?
Answer:
- சுவடிகளிலுள்ள எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளி இலைச்சாறு அல்லது ஊமத்தையிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள்.
- அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும்.
- இங்ஙனம் மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அக்ஷராப்பியாசத்தை ‘மையாடல் விழா என்று சொல்வார்கள்.
Question 21.
விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வ தொன்றே உயிர்ப்பணியாகக் கொண்டோன்’ – யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?
Answer:
- பாவேந்தர் பாரதிதாசன் வேங்கடசாமியைப் பற்றி கூறுகிறார்.
- தமிழ் கெட நேர்ந்த போது தமிழ்ப் பணியை உயிர்பணியாகக் கொண்டு தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்தல் வேண்டும் எனக் கூறுகிறார்.
பிரிவு – 3
எவையேனும் ஏழனுக்கு விடை தருக.
Question 22.
ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக
Answer:
(அ) அறிந்து (ஆ) நின்றேன்
Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
Answer:
(அ) எத்திசை (ஆ) தினந்தினம்
(அ) எத்திசை = எ + திசை
விதி : இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
(ஆ) தினந்தினம் = தினம் – தினம்
தின – தினம் = தினந்தினம்
விதி : மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத்திரிபவும் ஆகும்.
Question 24.
மரபுப்பிழைகளை நீக்குக. யானை கத்த மயில் கூவ நரி குரைத்தது?
Answer:
யானை பிளிற மயில் அகவ நரி ஊளையிட்டது.
Question 25.
வ. ம. பே. மே.து – என்பதன் விரிவாக்கம் தருக.
Answer:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
Question 26.
கொச்சைச் சொற்களைத் திருத்துக. உணவில் பாவக்காய் சேர்த்தால் ஒடம்புக்கு ரொம்ப நல்லது.
Answer:
உணவில் பாகற்காய் சேர்த்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது.
Question 27.
விடைக்கேற்ற வினா தருக.
அ) வாழ்வின் அணியாக விளங்குவது கல்வி
(ஆ) நிறைய அன்பு, குறைவில்லா ஆர்வம், தொண்டில் மகிழ்ச்சி என்பன சிறந்த மனித இயல்புகள்.
Answer:
(அ) வாழ்வின் அணியாக விளங்குவது எது?
(ஆ) சிறந்த மனித இயல்புகள் எவை?
Question 28.
உரிய இடங்களில் வல்லின மெய் இடுக
(அ) திறனாய்வு கலையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி.சு. நடராசன் குறிப்பிடத்தக்கவர்.
Answer:
திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி.சு. நடராசன் குறிப்பிடத்தக்கவர்.
(ஆ) குடும்பமும் உயிரிகளை போன்றே தோன்றுகிறது. வளர்கிறது. பல கட்டங்களை கடக்கிறது.
Answer:
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது. வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது.
Question 29.
மயங்கொலிச் சொற்களின் பொருள் அறிந்து ஒரே தொடரில் அமைக்கவும்.
Answer:
வலை – வளை விடை வலைக்குள் மாட்டிக் கொள்ளாத எலி தனது வளைக்குள் புகுந்துவிட்டது.
Question 30.
MORPHING என்பதன் கலைச்சொல்லாக்கம் தருக.
Answer:
விடை: உருமாற்றம்
பகுதி – III
ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக [784 = 28]
பிரிவு – 1
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக
Question 31.
இளந்தமிழே’ என்னும் பாடலில் கவிஞர் எவற்றை கூவி வா வா என்றும் சீறி வா வா என்றும் அழைகின்றார்?
Answer:
- திரண்டு வரும் கவிதை வெறிக்கு வெள்ளத்திற்கு உணவு எங்கள் முத்தமிழே நீ தானே
- முன்னொரு காலத்தில் பாண்டியர்களின் தமிழ்ச்சங்கத்தில் கொலுவிலிருந்து வணங்கப்பட்டாய், பாரி, ஓரி, காரி, ஆய், அதிகன், பேகன், நள்ளி என் கடையேழு வள்ளல்களை பெற்றுத் தந்தாய்.
- மீண்டும் அந்த பழந்தமிழை புகுத்தவும், உடலை சிலிர்க்க வைக்கவும் தமிழ்க்குயிலே உன்னை கூவி வா.. வா.. என்று அழைக்கிறேன்.
- நீ கூண்டை உடைத்து வெளிவரும் சிங்கம் போல குளிரான பொதிகை மலைத் தேன்சுவை மிக்க தென் தமிழே நீ சீறி வா…. வா…. என மனமுருகி செந்தமிழை கவிஞர் அழைக்கின்றார்.
Question 32.
”வருபவர் எவராயினும் நன்றி செலுத்து” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
- இடம் :- விருந்தினர் இல்லம் என்ற கவிதைப் பேழையிலிருந்து எடுக்கப்பட்டது.
- பொருள் : வருபவர் எவராயினும் நன்றி செலுத்த வேண்டும். ஏனெனில் வருவதெல்லாம் ஒவ்வொரு வழிகாட்டியாகிய அனுபவமாக அனுப்பப்படுகிறது. எனவே வருபவர் எவராயினும் நன்றி செலுத்த வேண்டும்.
- விளக்கம் : வக்கிரம், அவமானம், வஞ்சனை இவற்றையெல்லாம் இன்முகத்துடன் வரவேற்று, வருபவர் எவராயினும் நன்றி செலுத்த வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரும் ஒரு வழிகாட்டி ஆவார்.
Question 33.
யானை புக்க புலம் போல, தானும் உண்ணான் உலகமும் கெடுமே – உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக.
Answer:
உவமை :
சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து யானைக்குக் கவளமாகக் கொடுத்தால் அது அதற்கு பலநாள் உணவாகும்.
பொருள்:
அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரிதிரட்டினால் நாடு கோடிக் கணக்கில் செல்வம் பெற்றுச் சிறப்படையும்.
உவமை:
யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது அரசனது நிலையும்.
பொருள்:
அரசன் அறிவில் குறைந்தவனாகி முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்புவது யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது. அரசன் தானும் பயனடைய மாட்டான், நாட்டு மக்களும் துன்புறுவர்.
Question 34.
சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமைகளை எழுதுக.
Answer:
- இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.
- எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டு வந்து வைத்தான்.
- தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் கொண்டு வந்து தூவினான். மணலினால். மேடையைத் திருத்தமாக அமைத்தான்.
- நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச்சடங்கு செய்யப்படக் கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.
Question 35.
தொல்காப்பியம் பாவகைகளுடன் அறவியல் கருத்துக்களையும் இணைத்துள்ளது என்பதற்கான சான்று தருக.
Answer:
- அகம் ஐந்திணைகளைப் பேசுகிற தொல்காப்பியம் புணர்தல், பிரிதல் முதலான அகன் ஐந்திணைகளை இன்பம், பொருள், அறம் ஆகிய அறவியல் லட்சியப் பொருள்களோடு இரண்டற இணைத்துவிடுகின்றது.
- அதுபோல், இன்னோரிடத்தில், பா வகைகள் ஆசிரியம் முதற்கொண்டு நான்கு எனச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து.
அந்நில மருங்கின் அறமுதலாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப
என்று பாவகைகளோடு அறவியல் கருத்துக்களை இணைத்துச் சொல்லிவிடுகிறது.
Question 36.
பேரிடர் மேலாண்மை ஆணையம் – விளக்கம் தருக.
Answer:
- பேரிடர் மேலாண்மை ஆணையம் நடுவணரசால் 23122005ல் தொடங்கப்பட்டது.
- புயல், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், தீவிபத்து பனிப்புயல், விபத்துகள் முதலான பேரிடர்கள் ழும் பொழுது இந்த அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த இந்த ஆணையம் உதவுகிறது.
- இக்குழு மாநிலம், மாவட்டம், ஊராட்சி. சிற்றூராட்சி என அனைத்து நிலைகளிலும் பேரிடர் காலங்களில் செயல்படுகின்றது.
- அரசு தீயணைப்புத்துறை, காவல், தன்னார்வத் தொண்டு நிறுவனம் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
- பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவது, 2006 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியைக் கூறலாம்.
Question 37.
தென்னிந்திய சினிமாத் தொழில் வளர காரணமானவர் யாவர்?
Answer:
- படங்காட்டுதல் மூலம்தான் முதன் முதலாகத் தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றியது.
- மனைவியின் வைரமாலையை விற்று சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுக்கார் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார்.
- திருச்சியில் ஒரு கூடாரத்தில் படங்காட்ட ஆரம்பித்த அவர், பின்னர்.
- திருவனந்தபுரம், மதுரை நகர்களில் முகாமிட்டு, மதராசுக்கு வந்து காட்சிகள் நடத்தினார்.
- அங்கிருந்து வடக்கே சென்று பெஷாவர்.
- லாகூர் பின்னர் லக்னோ நகரங்களில் படக்காட்சிகள் நடத்திவிட்டு 1909 இல் மதராஸ் திரும்பினார்.
- அங்கே எஸ்பிளனேட்டில் (இன்றைய பாரிஸ் அருகே கூடாரம் போட்டுச் சலனப்படங்களைத் திரையிட்டார்.
- சென்னையிலிருக்கும் போது சினிமாத்தொழிலை இங்கு நிறுவ ஒரு முக்கியமான அடியெடுத்து வைத்தார்.
- புரொஜக்டர்களை இறக்குமதி செய்து விற்க ஆரம்பித்தார். இதனால் புதிய திரையரங்குகள் வர ஏதுவாயிற்று.
Question 38.
மழை வெள்ள பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிகை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
Answer:
- பேரிடர்க் காலங்களில் தாங்கக்கூடியவையாக புதிய கட்டுமானங்களை அமைக்க வேண்டும்.
- நீர்வழிப் பாதைகளுக்கான தெளிவான வரைப்படம் உருவாக்கப்பட்டு அப்பாதைகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
- சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டங்களைச் சமூக இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும்.
- கடற்கரை ஓரங்களில் சதுப்பு நிலக் காடுகளை வளர்த்தல் வேண்டும்.
பிரிவு – 3
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக
Question 39.
பொருள் வேற்றுமை அணி உதாரணத்துடன் விளக்குக.
Answer:
பொருள் வேற்றுமை அணி:
“ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து) இருளகற்றும் “
விளக்கம் :
இருவேறு பொருள்களுக்கான ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும். தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை முதலில் கூறி அவற்றுள் தமிழ் தன்னேரிலாதது என்ற தன்மையைப் பின்னர் வேறுபடுத்திக் காட்டுவதால் இது பொருள் வேற்றுமை அணி ஆயிற்று. இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.
(அல்ல து)
உருவக அணி உதாரணத்துடன் விளக்குக.
அணி விளக்கம் :
உவமானமும், உவமேயமும் வேறு வேறு பொருள் எனத் தோன்றாமல் ஒன்று போல் காட்டி, உவமானத்தின் தன்மை முழுவதும் உவமேயத்தில் மறைந்து நிற்கும்படிக் கூறுவது ‘உருவக அணி’ எனப்படும்.
(எ.கா) முகத்தாமரை
விளக்கம்
முகமானது தாமரையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் கூறும் பொருள் ‘உவமேயம்’ எனப்படும். ஒப்புமையாகக் காட்டும் பொருள் உவமை’ எனப்படும்.
Question 40.
இலக்கிய நயம் பாராட்டுக. கொடுக்கப்பட்ட பாடலில் பயின்று வந்துள்ள ஏதேனும்நயங்களை மட்டும் எழுதுக.
Answer:
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்.
கமனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்.
தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலுந் தேர்க்காலும் வழுகும்.
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே
– திரிகூட ராசப்பக் கவிராயர்
ஆசிரியர் குறிப்பு:
திரிகூடராசப்பக் கவிராயர் என்பவர் திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற இசை நாடகத்தின் ஆசிரியர் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியை அடுத்துள்ள மேலகரம் என்னும் ஊரில் ஏறக்குறைய 18 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்.
திரண்ட கருத்து:
ஆண்குரங்குகள் பலவகையான பழங்களைப் பறித்துப் பெண் குரங்குகளுக்குக் கொடுத்துத் தழுவுகின்றன. அவற்றுள் சில பழங்களைப் பெண் குரங்குகள் சிதறுகின்றன. அந்தப் பழங்களைத் தேவர்கள் இரந்து கேட்கின்றனர். வேடர்கள் தேவர்களைத் தம் கண்களால் ஏறெடுத்துப் பார்த்து அழைக்கின்றனர். வானத்தில் செல்ல வல்ல சித்தர்கள் மூலிகைகளை வளர்க்கின்றனர். மலையிலுள்ள அருவியின் அலைகள் எழுந்து வானத்தில் வழிந்து ஓடுகின்றன. இதனால் சூரியனின் குதிரைகளுடைய கால்களும் தேர்ச் சக்கரங்களும் வழுக்கி விழுகின்றன. இத்தகைய சிறப்புகளை உடையது குற்றால மலை என விளக்குகிறாள். இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்.
மையக்கருத்து :
பெண் குரங்குகள் சிதறும் பழங்களைத் தேவர்கள் கேட்கின்றனர். சூரியனின் குதிரைகளும் கால்களும் தேர்ச் சக்கரங்களும் வழுக்கி விழுகின்றன என குற்றால மலையின் சிறப்பினைக் கூறுகிறது.
எதுகை : இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை
வானரங்கள்
கானரங்கள்
மோனை : முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை
கானவர்கள்
கமனசித்தர்
இயைபு: கடைசி எழுத்து ஒன்றி வருவது இயைபு
அழைப்பார்
விளைப்பார்
அணி : இயல்பு நவிற்சி அணி
Question 41.
‘இளங்கன்று பயமறியாது” – பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
Answer:
பழமொழி விளக்கம்:
இளமைப் பருவத்தினர், தனக்குப் பின்னால் நேரக்கூடிய துன்பத்தினைப் பற்றிய பயம் அறியாமல் தற்போது உடனே ஒரு முடிவினை எடுத்துவிடுவர். அது பேராபத்தாய்க் கூட முடிந்து விடும்.
வாழ்க்கை நிகழ்வு:
என் நண்பன் மாதவன் அவன் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவன் மிகவும் துடிப்புடன் செயலாற்றக் கூடியவன். ஊரிலும் சரி, பள்ளியிலும் சரி, தன்னை ஒரு வீரன் என்று காட்டிக் கொள்வதில் பெருமைப்படக் கூடியவன். யாரும் செய்யத் துணியாத காரியத்தையும் உடலை வருத்தி கடினமானாலும் அதைச் செய்து முடிந்து விடுவான்.
ஒரு முறை அவனது நண்பர்கள் அவன் தெருவின் புற்றிலுள்ள பாம்பினைப் பிடிப்பதற்கு மாதவனிடம் பந்தயம் வைத்தனர். பந்தயத்தில் வெற்றிபெற வேண்டும் என நினைத்து மாதவன் பாம்பினைத் தன் கையால் பிடித்தான். பாம்பு கடித்து விடும் என்ற பயம் கூட அவனுக்கு இல்லை. இந்நிகழ்வு மூலமே இளங்கன்று பயமறியாது என்பதனை உணர்ந்தேன்.
Question 42.
தமிழாக்கம் தருக.
Answer:
- As is the king, so are his subjects.
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. - Practice makes one perfection
சித்திரமும் கைப்பழக்கம். - Slow and steady win the race.
நிதானம் பிரதானம். - Experience will make a person efficient.
அனுபவம் ஒருவனைத் திறமை மிக்கவனாக்கும்.
Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஒன்றின் கவிதை புனைக. செந்தமிழ் (அல்லது) நிலா
Answer:
பகுதி – IV
பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3×6 = 18]
Question 44.
(அ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக. தமிழின் சீரிளமைத் திறத்தை வியந்த கவிஞர் சிற்பி பின்வருமாறு கூறுகிறார்.
Answer:
- செம்மை மிகுந்த சூரியன் மாலையில் மலை முகட்டில் மறையும் பொழுது வானம் செந்நிறப்பூக்காடாய் காட்சி தருகிறது.
- தொழிலாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாக காணப்படும்.
- இக்காட்சிகளை எல்லாம் நான் வியந்து பாடி அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
- பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே.
- பாரி முதல் வள்ளல்களை இவ்வுலகிற்கு தந்த தாயோ!
- உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கக் கூவி வா.
- கூண்டினை உடைத்தெறிந்த சிங்கம் போல வா!
- குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா.
இவ்வாறே தமிழின் சீரிளமைத்திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகின்றார்.
(அல்லது)
Question 44.
(ஆ) திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் – நிறுவுக.
Answer:
- திருக்குறள் என்பது புகழ் பெற்ற இலக்கியமாகும்.
- உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, முப்பால், உத்திரவேதம், தெய்வநூல் என பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
- இதனை இயற்றியவர் கி.மு. 2-ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5-ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்த திருவள்ளுவர் என்று அறியப்படுகிறது.
- திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் நூல்களின் திரட்டில் இருக்கிறது.
- திருக்குறள், அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல், மாந்தர்கள் தம் அகவாழ்விலும், புறவாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
- இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய்ப் பிரிந்தும், அழகுடன் இணைந்தும், கோர்த்தும் விளங்குகிறது.
- இதில் அறத்துப்பாலில் – 38 அதிகாரமும், பொருட்பாலில் – 70 அதிகாரமும், காமத்துப்பாலில் 25 என 133 அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
- திருக்குறளில் கூறப்பட்ட அனைத்து கருத்துக்களும் உலகின் பல்வேறு சமயங்களில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது.
- எல்லா மதமும், எல்லா சமயமும், எல்லா நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்வதால் தான் உலகப்பொதுமறை என்று இந்நூல் அழைக்கப்படுகிறது.
“ஆயிரம் மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள்
ஆனால் தாய்மொழியை மறந்துவிடாதீர்கள் ”
“எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாழுங்கள்
ஆனால், சொந்த நாட்டை மறந்துவிடாதீர்கள்”
Question 45.
(அ) மயிலையார் ஓர் ” ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.
Answer:
முன்னுரை:
- ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும்.
- அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
- இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய படியே எழுதி முடித்த புத்தகங்களே. தமிழர் தம் பழம்பெருமையை உணர உதவும் புதையலாக விளங்குகிறது.
தொடக்ககால ஆய்வுகள் :
- 1934 இல் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த. சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்.
- அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார். இதுவே அவருடைய முதல் நூலாகும்.
- தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாடு காரணமாக, பௌத்தமும் தமிழும் சமணமும் தமிழும்’ ஆகிய நூல்களை அவர் இயற்றினார்.
- சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழியாய்வு முதலான பல துறைகளிலும் இவர் கவனம் செலுத்தினார்.
- குறிப்பாக, கல்வெட்டு ஆய்வில் இவருக்குப் பயிற்சி அதிகம். தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர்.
- வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்த காரணத்தால் சாசனங்களை அவரால் எளிதாக வாசிக்க முடிந்தது.
- வரலாறு, இலக்கியம், கலையியல், சமயம் எனப் பல துறைகளிலும் நூல்களை எழுதியிருப்பது வேங்கடசாமியின் பன்முக அறிவை விளக்குகிறது.
வரலாற்று ஆய்வு :
- மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார்.
- தமிழில் அம்மன்னனைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெற்றது.
- சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளுநாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.
- சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.
- இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறித்தனர்.
- இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக ஆராய்ந்து களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல் மூலம் வெளிப்படுத்தினார்.
கலையியல் ஆய்வு:
- கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார்.
- தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் ஆகும்.
- இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்.
- நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியவை கலை பற்றிய இவருடைய பிற நூல்கள் ஆகும்.
- தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.
கல்வெட்டு ஆய்வுகள்:
- சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் (அரசியல்) ஆகிய நூல்களையும் எழுதினார்.
- ஆய்வுலகில் மயிலை சீனி. வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கூற வேண்டுமானால் தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்ததைக் குறிப்பிடலாம்.
- தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.
- தமிழியலுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை இவர் மேற்கொண்டார். இப்பணியின் விளைவாக, சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்து போன தமிழ் நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார்.
பன்மொழிப் புலமை :
- தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை. நீண்ட வரலாறு கொண்ட மொழியின் சொற்களில் இவ்வகையான ஆய்வுக்குரிய ஏதுக்கள் மிகுதியாகும்.
- வேங்கடசாமி தொடர்ச்சியாக இத்தகைய சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். செந்தமிழ்ச் செல்வி ‘ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
- மகேந்திரவர்மன் இயற்றிய மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
- தமிழ்ப் பண்பாட்டிலும் தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட மயிலை சீனி.
- அவர்கள் தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர்.
ஆராய்ச்சிப் பேரறிஞர்:
- மயிலை சீனியாரால் பல ஆய்வுகள் தமிழுலகுக்கு முதன்முதலாக வழங்கப்பட்டவை. இவரது ஆய்வுகள் அறிஞருக்கு மட்டுமன்றிப் பொதுமக்களுக்கும் அறிவு விருந்தோம்பியவை.
- பல ஆய்வுகள் கிளைவிடுவதற்கு அடிமரமாக இருந்தவை. இவரது ஆய்வுகள், வேண்டாத நூலிது என்றோ நூலில் வேண்டாத பகுதி என்றோ ஒதுக்க முடியாத வகையில் இவரது எழுத்தாளுமை திகழ்ந்தது.
முடிவுரை:
- தமிழக வரலாற்றுக் கழகத்திலும் தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றிய வேங்கடசாமிக்கு 1962இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது.
- மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது.
- தமது ஓயாத தேடலினாலும் கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வு முடிவுகளைக் கொணர்ந்த இம்மாமனிதருக்கு அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.
(அல்லது)
Question 45.
(ஆ) ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு’ – நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
Answer:
முன்னுரை:
மதுரை தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருப்பது மதுரை. அம்மதுரையின் சிறப்பு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
மதுரை மாநகர்:
தமிழ்நாட்டின் 3 ஆவது பெரிய நகரம் மதுரை. 10 லட்சத்திற்கும் மேல் மக்கட்தொகை கொண்டது. இந்திய மாநகரங்களின் பட்டியலில் 31 ஆவது பெரிய நகரம் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில் மிகவும் புகழ்வாய்ந்தது.
பழமை :
இந்திய துணைக் கண்டத்தில் தொன்மையான வரலாற்றை கொண்ட மதுரை சுமார் 25,000 ஆண்டுகள் பழமையானது, பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கியது.
பெயர்க்காரணம்:
இந்நகரம் மதுரை, கூடல், மல்லிகை மாநகர், நான் மாடக்கூடல் திரு ஆலவாய் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. மருதத்துறை மதுரை, மருதமரங்கள் மிகுதியாகவிருந்ததால் மருதத்துறை என்பது மருவி, மதுரை என ஆனது. இந்துக்கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.
வரலாற்று நினைவிடங்கள்:
மதுரையில் வரலாற்று நினைவிடங்கள் பல அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை, போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. இந்நகரில் ஆண்டுதோறும் பல கொண்டாட்டங்கள் நடை பெறுகிறது. அவற்றில் புகழ் பெற்றது சித்திரைத் திருவிழா. இது 10 நாட்கள் நடைபெறும் திருகல்யாணம் ஆகும். அதில் கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் சிறப்பு.
ஏறுதழுவுதல் :
மதுரை மாநகரில் ஏறுதழுவுதல் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவுதல் நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும். இது பலகாலமாக நடைப்பெற்று வரும் ஒரு நிகழ்வாகும். தற்பொழுது ஏறுதழுவுதலுக்கு தடைவிதிக்கப்பட்டு பல போராட்டங்களை மக்கள் நடத்தி அதில் வெற்றி பெற்றனர்.
தொழில் மற்றும் கல்வி :
மதுரை தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்துறை மையமாகவும், கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன. தகவல் தொழில் நுட்பத்துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன.
மதுரை மருத்துவக் கல்லூரி, ஓமியோ மருத்துவக் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற கல்வி நிலையங்கள் மதுரையில் நகரில் அமைந்துள்ளது.
முடிவுரை:
முச்சங்கம் வளர்த்த மதுரையில் அன்பும் அருளும் நிறைந்திருக்கும். அவை வரலாறும் வடிவழகும் கொண்டது. அந்நகரில் வாழ்வது சிறப்பு வாய்ந்தன.
Question 46.
(அ கோடைமழை கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப் பண்புகளை விளக்குக.
Answer:
1. மருத்துவமனையின் உள்ளிருந்து வெளியே வந்தாள் ஒரு பெண்.
2. தாயின் தோளில் கோழிக்குஞ்சாய் ஒரு பிஞ்சு ஒடுங்கி இருக்க அவள் கை அதைச் சுற்றிப் படர்ந்து இருந்தது பார்க்கவும் நினைக்கவும் மிகவும் பாந்தமாக இருந்தது.
3. நெடுமூச்சு தவிர வேறு ஏதும் இல்லாத குழந்தை மீதான தன் கையை அழுத்தி இருத்திக் கொண்டாள். இந்த அரவணைப்பு இதற்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு…? தனக்குப் பிறகு….?
4. பிள்ளையைப் பரிசோதித்த டாக்டர் நெஞ்சில் சளி கட்டி இருப்பதால் காய்ச்சல்… பயப்படத் தேவையில்லை, பக்குவமாய்ப் பார்த்துக்கொண்டால் இரு தினங்களில் தணிந்துவிடும் என மருந்து எழுதிக் கொடுத்தார்.
5. ‘உங்க கை இப்படி நடுங்குது பெரியவரே… வீட்ல வேற யாரும் இல்லையா? ஊசி போட்ட வலியால் வீறிட்ட குழந்தையை லாவகமாய் அணைத்துச் சமாதானப்படுத்தி அவ்வாறு கேட்ட வெள்ளையுடை தேவதைக்கு நன்றிச் சிரிப்பை மட்டுமே பதிலாக விட்டு வெளியே வந்தார்.
6. தவித்த தொண்டையைத் தேநீரால் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வழக்கமாய் வாங்கும் மருந்துக் கடை நோக்கிப் பயணப்பட்டார்.
7. “வாங்கய்யா உட்காருங்க. புள்ளைக்கு உடம்பு சரியில்லையா? இப்படிக் கொடுங்க….. கைச்சுமை மட்டும் இடம் மாறியது.
8. ”மூணு நாளா சிரமப்படுது பாவம். டாக்டர் ஊசி போட்டு மருந்து எழுதிக் குடுத்திருக்கார். சரியாயிடும். இப்போ உன்கிட்ட மருந்து வாங்க மட்டும் வரல பாபு” ….. சீட்டை நீட்டியபடி அமைதியாய்ச் சொன்னவரை யோசனையுடன் பார்த்தான் பாபு.
9. “ரொம்ப நாளாகவே சொல்லிக்கிட்டு இருக்கே, இப்ப எனக்கும் சரியாய்த்தான் படறது. இதுக்காக இன்னும் நிறைய நாள் உசிரோட இருக்கணும்னு எனக்கும் ஆசைதான்.
10. நெஞ்சில் உரம் இருந்தாலும் உடம்பு கேட்கணுமே? சாவோட மல்லுக்கு நிக்கிற வயசா? அப்ப இதனோட கதி? சரி…. நாளைக்கு அவர்களைக் கூட்டிட்டு வந்துடறயா பாபு.
11. “ஐயா’ ”ஆமாம்பா நெசமாத்தான் சொல்றேன். அம்மா என்கிற பாசமே தெரியாமல் இருக்க இது மட்டும் என்ன பாவம் செய்தது? பெண்ணோட பரிவும் பாசமும் ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்னு இப்பதான் நல்லாப் புரிஞ்சது பாபு.
12. இதைப் பிரிஞ்சிருக்க முடியாதே என்கிற என்னோட சுயநலத்துக்காக இதை அனாதையா விட்டுட்டுப் போறது எவ்வளவு பெரிய பாதகம்..? அதான். அதுவும் இல்லாம அவங்க உனக்கு நல்லாத் தெரிஞ்சவங்க அதனால் பத்திரமான இடத்துக்குத் தான் போய்ச் சேருறது புள்ளையன்னு நிம்மதி. அவங்கள் உடனே வரச் சொல்லிடு. ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.”
13. வினாடி தாமதித்தாலும் மனம் மாறிவிடுமோ என்பது போல் மருத்தும் குழந்தையுமாக விடுவிடுவென நடந்தார்.
14. இரவெல்லாம் உறக்கமின்றிப் புரண்டு……… எல்லாம் இதோட நல்லதுக்குதானே எனத் திரும்பத் திரும்ப நினைத்துச் சமாதானப்படுத்திக் கொண்டார்.
15. பாபுவுடன் வந்த அவர்களைப் பார்த்த போது……… பிள்ளைப் பாக்கியம், ஏக்கம்…….. தவிப்பு……. எதிர்பார்ப்பு அத்தனையும் அம்முகங்களில் உணர்ந்த போது பிள்ளையின் பாதுகாப்புக் குறித்த நம்பிக்கை வலுத்தது.
16. நெடுநாள் தயக்கத்துக்குப் பின்னான தன் முடிவு குறித்து இனி இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்ற அளவில் உறுதி கூடியது.
17. அந்நேரத்திற்கு நெருடல் எல்லாம் பிள்ளையைப் பிரிந்து இருக்க வேண்டுமே எனும் உதிரத்தை உறைய வைக்கும் உறுத்தல் மட்டுமே. விழி நீரைப் பிடிவாதமாய் வந்த வழி அனுப்பி வைத்தார்.
18. ”உங்களுக்குக் கவலையே வேணாம் ஐயா. இப்படிச் சொல்றது கூட சரியில்லைதான். நல்லாப் பார்த்துக்கிறோம்னு பெத்தவங்க யாராவது உறுதிமொழி அளிக்கிறார்களா என்ன…….” அப்பா’ என அழைக்கப்பட இருப்பவன் ஓரிரு கணம் போல் தயங்கிப் பிறகு தொடர்ந்தான்.
19. ”ஐயா, ரொம்ப பெரிய மனசோட எங்க வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க. நன்றி சொல்றதுக்குப் பதிலா உங்களிடமே இன்னுமொரு உதவி கேட்கின்றோம். குழந்தையைப் பிரிந்து சிரமப்படாமல் நீங்களும் எங்களோடு வந்துடுங்கய்யா.
20. எங்க மூணு பேருக்குமே ஒரு பெரிய துணையா பலமா இருக்கும் நீங்க எதுக்கும் தயங்காதீங்க. நாம் ஒருத்தருக்கு ஒருத்தர் முடிந்த அளவில் உதவியாய் இருப்போம். சரின்னு சொல்லுங்க ஐயா”.
21. இறைஞ்சும் தன்மையில் கேட்கப்பட…… அதிர்ந்து போனார் ஆறுமுகம். யாருக்கு யார் உதவி? எவ்வளவு பெரிய விஷயம்? இவ்வளவு எளிமையாய் …… தனக்கு எந்தச் சங்கடமும் கூடாதென மிகவும் பக்குவமாய் இவன்… மலை போன்ற அத்தனை பிரச்சனைகளும் எப்படி இப்படி ஒரே நாளில் தீர்வு கண்டு குழந்தையுடன் …… தன்னையும் சுவீகரித்து ………. .
22. ”பா…….. இப்போதைக்கு எனக்குச் சாவு வராதுனு தோணுதுப்பா………. கண்ணீரை இப்போது சுதந்திரமாய் வெளியனுப்பியபடி கைகூப்பினார்
முதியவர்.
Question 46.
(ஆ) ‘உரிமைத்தாகம் ‘ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்…. கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
Answer:
1. மேலூர் பங்காருசாமியிடம் தன் நில பத்திரத்தை கொடுத்துப் பணம் பெற்ற வெள்ளைச்சாமி அதை அவனால் மீட்டுக்கொள்ள முடியவில்லை. தேவையான பணத்தைத் தயார் செய்ய முடியவில்லை. மேலும் வட்டியும் அதிகமாகிக் கொண்டே போனது.
2. இதை எப்படியோ தெரிந்து கொண்ட வெள்ளைச்சாமியின் அண்ணன் முத்தையா பங்காரு சாமியிடம் சென்று பத்திரத்தை மீட்பதற்காகப் பேசினான்.
3. ஆனால் அவன் தம்பி என் சொந்தப் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம் என்று சொல்லித் திட்டி அனுப்பிவிட்டான்.
4. காலம் கடந்து கொண்டே இருந்தது வெள்ளைச்சாமிக்குப் போதிய பணம் கிடைக்கவே இல்லை. வட்டியும் கொடுக்கவில்லை.
5. பிறகு இறுதியாக வெள்ளைச்சாமியின் புஞ்சை நிலம் ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் அவனுடைய நிலம் கைமாறிப்போனது.
6. வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் நிலத்தையும், தன் உறவுகளையும் பறிகொடுத்துவிட்டோம் என எண்ணி வெள்ளைச்சாமி மனநிம்மதியில்லாமல் இருந்தான்.
7. தன்னுடைய நிலத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனவேதனையில் துடித்தான்.
8. நாட்கள் பல கடந்தது. மழைக்காலம் தொடங்கியது. மழை பெய்யோ பெய்யெனப் பெய்தது. அதற்கு அடுத்த நாள் காட்டு மேட்டுப் பகுதியில் வெள்ளைச்சாமி செல்லும் போது அவனுடைய புஞ்சை நிலத்தினால் அவனுடைய அண்ணன் முத்தையா ஏர் உழுதுகொண்டு இருந்தான்.
9. அதைப் பார்த்த பிறகுதான் விசாரித்தான் யார் அந்த நிலத்தை ஏலத்தில் வாங்கியது? என்று, அப்பொழுது தான் அவனுக்கு தெரிந்தது தன்னுடைய அண்ணன் நிலத்தை வாங்கியுள்ளான் என தன்கையிலிருந்து சென்றாலும் என் அண்ணன் கையில் என் நிலம் உள்ளது என்ற சந்தோசத்தில் சென்றான் வெள்ளைச்சாமி. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுகிறது என்று சொல்லியதெல்லாம் உண்மைதான்.
பகுதி -V
அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. [1 x 4 = 4]
Question 47.
(அ) துன்பு உளது’ எனத் துவங்கும் கம்பராமாயணம் பாடல்.
Answer:
துன்பு உளது எனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; இடை மன்னும்
பிரிவு உளது என உன்னேல்;
முன்பு உளெம் ஒரு நால்வேம்
முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர்
ஐவர்கள் உளர் ஆனோம் – கம்பர்
(ஆ) ‘சுடும்’ என முடியும் குறளை எழுதுக. [1x 2 = 21]
Answer:
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும். – திருவள்ளுவர்