Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 1 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.
TN State Board 12th Tamil Model Question Paper 1
நேரம்: 2.30 மணி
மதிப்பெண்கள் : 90
குறிப்புகள்:
- இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
- வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். - வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
- வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
- வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
- வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.
பகுதி – I
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 x 1 = 14]
(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)
Question 1.
1984 ல் இ. ஆ. ப. தேர்வை முழுமையாகத் தமிழில் எழுதி வெற்றி பெற்ற முதல் தமிழ் இலக்கிய மாணவர்………
(அ) ஆர். பாலகிருஷ்ண ன்
(ஆ) வீ. இராம கிருஷ்ண ன்
(இ) ஆர். பால சுந்தரம்
(ஈ) ஏ. சண்முக சுந்தரம்
Answer:
(அ) ஆர். பாலகிருஷ்ண ன்
Question 2.
‘மகாமகோ உபாத்யாயா’ என்பதன் தமிழாக்கம் …..
(அ) பேராசிரியர்
(ஆ) மகா பேராசிரியர்
(இ) பெரும் போராசிரியர்
(ஈ) மகா ஆசிரியர்
Answer:
(இ) பெரும் போராசிரியர்
Question 3.
கடித இலக்கியத்தின் வாயிலாக …………… வெளிப்படுத்தும் திறன் வளர்த்தல் நன்று.
(அ) கலை உணர்வு
(ஆ) காப்பிய உணர்வு
(இ) பண்பாட்டு உணர்வு
(ஈ) சமூக உணர்வு
Answer:
(ஈ) சமூக உணர்வு
Question 4.
கம்ப இராமாயணம் எழுதப்பட்ட நூற்றாண்டு ……….
(அ) பத்து
(ஆ) பதினொன்று
(இ) பன்னிரண்டு
(ஈ) பத்தொன்பது
Answer:
(இ) பன்னிரண்டு
Question 5.
பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை அமைக்கப்பட்ட காலம்………. காலம் ஆகும்.
(அ) முதலாம் மகோந்திரவர்மன்
(ஆ) 2-ம் மகேந்திரவர்மன்
(இ) நரசிம்ம மகேந்திரவர்மன்
(ஈ) இராஜசிம்மன்
Answer:
(இ) நரசிம்ம மகேந்திரவர்மன்
Question 6.
‘ஏழாவது அறிவு ‘ நூலின் ஆசிரியர்
(அ) தேவதாசன்
(ஆ) தேவசகாயம்
(இ) இறையன்பு
(ஈ) நாகபுஷ்பம்
Answer:
(இ) இறையன்பு
Question 7.
பதினேழு நரம்புகளைக் கொண்ட யாழ்…………
(அ) சகோடயாழ்
(ஆ) செங்கோட்டியாழ்
(இ) மகரயாழ்
(ஈ) பேரியாழ்
Answer:
(இ) மகரயாழ்
Question 8.
‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ என்ற விதிப்படி புணர்ந்த சொல் ……
(அ) வரவானது
(ஆ) கலையரசி
(இ) தினந்தினம்
(ஈ) காதோடு
Answer:
(ஈ) காதோடு
Question 9.
ஆடலும் பாடலும் என்பதன் இலக்கணக் குறிப்பு……….
(ஆ) உம்மைத் தொகை
(ஆ) பண்புத் தொகை
(இ) எண்ணும்மை
(ஈ) வினைத்தொகை
Answer:
(இ) எண்ணும்மை
Question 10.
அகவற்பா என அழைக்கப்படும் பாவகை …………….
(அ) ஆசிரியப்பா
(ஆ) வெண்பா
(இ) வஞ்சிப்பா
(ஈ) கலிப்பா
Answer:
(அ) ஆசிரியப்பா
Question 11.
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம் என்று பாடியவர்
(அ) சோமசுந்தர பாரதி
(ஆ) மகாகவி பாரதி
(இ) சுத்தானந்த பாரதி
(ஈ) பாரதிதாசன்
Answer:
(ஆ) மகாகவி பாரதி
Question 12.
தென்னிந்தியாவில் இராயபுரத்தில் முதல் தொடர் வண்டி நிலையம் அமைக்கப்பட்ட ஆண்டு
(இ) 1586
(ஈ) 1658
(அ) 1856)
ஆ) 1756
Answer:
(இ) 1586
Question 13.
குறியீடுகளைப் பொருத்துக
(அ) பெண் – 1. சமாதானம்
(ஆ) புறா – 2. வீரம்
(இ) தராசு – 3. விளக்கு
(ஈ) சிங்க ம் – 4. நீதி
(அ) 2, 4, 1, 3 (ஆ) 2, 4, 3,1 (இ) 3, 1, 4, 2 (ஈ) 3, 1, 2, 4
Answer:
(இ) 3, 1, 4, 2
Question 14.
சொல்லிசை அளபெடைச் சொல்………
(அ) கழீஇ
(ஆ) படாஅ
(இ) எங்ங்கிறை
(ஈ) படூஉ
Answer:
(அ) கழீஇ
பகுதி – II
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக. [12 x 2 = 24]
பிரிவு – 1
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.
Question 15.
‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது” – விளக்கம் தருக.
Answer:
- பெய்யென பெய்யும் மழைக்காலத்தில் சூரியன் திடீரென்று பயணம் செய்கிறது.
- அதனால் காய்கிறது, நனைந்து ஈரமாகியிருந்த வெளிச்சம், நகரம் முழுக்கப் பளிச்சென்று பட்டை தீட்டிய வெள்ளை வைரம் போலக் காட்சியளிக்கிறது
Question 16.
இராமலிங்கனார் குறிப்பு வரைக.
Question 17.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு என்பதை விளக்குக.
Answer:
- ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அத்தனித்தன்மை அடையாளம் காணப்படுகையில் எழுச்சியும் ஊக்கமும் உடன் இணைந்து கொள்கிறது.
- அடையாளம் இழந்த ஒருவர், முகத்தைத் தொலைத்தவராகிறார்.
- சமூகத்தின் இறுக்கமான குடும்பக் கட்டுமானத்தில் சிக்கித் திணரும் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
- தொலைத்ததை மீட்கும் வேட்கை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
Question 18.
பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ – தொடரில் உள்ள முரண் நயத்தைக் குறிப்பிடுக.
Answer:
- முரண் என்பது பாடலில் அமைந்துள்ள எதிர் சொற்களைக் குறிக்கின்றது.
- பெருங்கடல், சிறுகுடி இவையே, இப்பாடலில் அமைந்துள்ள முரண் நயம் ஆகும்.
- பெரிய கடல், சிறிய குடி என்பதால் பெரிய X சிறிய என்பது முரண் ஆகும்.
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக
Question 19.
தொல்காப்பியம் செய்யுளை ஓர் உள்ளமைப்பாக கொண்டுள்ளது என்பதனை விளக்குக.
Answer:
- அழகியலை உருவாக்குவதற்குத் தளம் அமைத்துத் தருகின்ற தொல்காப்பியம்,
- இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கணம்.
- எழுத்துகள் பற்றிப் பேசுகிறபோதே செய்யுளின் வழக்கு பேசப்பட்டுவிடுகிறது.
- எழுத்தையும் சொல்லையும் போன்றே செய்யுளையும் ஓர் உள்ளமைப்பாகத் தொல்காப்பியம் கருதுகிறது.
Question 20.
புக்கில், தன்மனை – சிறு குறிப்பு எழுதுக
Answer:
- மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் தம்மனை’, நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது.
- இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில்’ எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் தன்மனை எனவும் வழங்கப்பெற்றுள்ளன.
Question 21.
தமிழாய்வு நூலகங்கள் எவை?
Answer:
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம்
- ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
- மறைமலையடிகள் நூலகம்
- செம்மொழி தமிழாய்வு நூலகம்
பிரிவு – 3
எவையேனும் ஏழனுக்கு விடை தருக.
Question 22.
ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
(அ) விரும்பிய (ஆ) தேடேன்
Question 23.
ஒன்றனுக்கு மட்டும் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
Answer:
(அ) ஏழையென ஆ) முன்னறிவிப்பு
(அ) ஏழையென = ஏழை – என
விதி : இ ஈ ஐ வழி யவ்வும் ‘ ஏழை + ய் + என ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
(ஆ) முன்னறிவிப்பு = முன் + அறிவிப்பு முன் +ன் + அறிவிப்பு = முன்னறிவிப்பு
விதி : தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
Question 24.
மரபுப்பிழை நீக்குக.
Answer:
ஆந்தையின் முழக்கம் கேட்டு நாய் ஊளையிட்டது.
ஆந்தையின் அலறல் கேட்டு நாய் குரைத்தது.
Question 25.
PASSWORD என்பதன் தமிழாக்கம் ……………….
Answer:
கடவுச்சொல்
Question 26.
கொச்சைச் சொற்களைத் திருத்துக. செத்த நாழி இரு. இதோ வந்திடறேன்
Answer:
சில நாழிகை இரு. இதோ வருகிறேன்.
Question 27.
விடைக்கேற்ற வினா தருக.
Answer:
(அ) உப்பு விளையும் களத்திற்கு அளம் என்று பெயர்.
(ஆ) சிறுபாணாற்றுப்படை நூலை இயற்றியவர் நத்தத்தனார்.
(அ) அளம் என்பது யாது?
(ஆ) சிறுபாணாற்றுப்படை நூலாசிரியர் யார்?
Question 28.
மயங்கொலிச் சொற்களின் பொருள் வெளிப்படுமாறு ஒரே தொடரில் அமைக்கவும்.
Answer:
அரன் – அரண்
அரன் – சிவபெருமான்
அரண் – பாதுகாப்பு
எப்பொழுதும் எமக்கு அரனே அரணாக இருந்து காப்பாற்றுகின்றார்.
Question 29.
உவமைத் தொடரைப் பயன்படுத்தித் தொடர் அமைக்கவும்.
Answer:
அத்திப் பூத்தாற்போல
எனது பேராசிரியர் அத்திபூத்தாற்போல என் வீட்டிற்கு வருகை தந்தார்.
Question 30.
தனித்தமிழில் எழுதுக.
Answer:
நண்பனின் ஜானுவாசத்திற்கு அனைவரும் வந்தனர்.
நண்பனின் மாப்பிள்ளை அழைப்பிற்கு அனைவரும் வந்தனர்.
பகுதி – III
ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7×4 = 28]
பிரிவு – 1
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக
Question 31.
வரிவிதிப்பில் அரசன் எவ்வாறு செயல்பட வேண்டும் எனப் பிசிராந்தையார் விவரிக்கிறார்?
Answer:
- ஒரு மாவிற்கும் குறைந்த நிலமாயினும் அதன்கண் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும்.
- நூறு மடங்கு பெரிய வயலாக இருந்தாலும் யானை தனித்துச் சென்று வயலில் புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லைவிட அதன் கால்களால் மிதிப்பட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.
- அதுபோல அறிவுடைய அரசன், வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு , கோடிக் கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.
- அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு.
- நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்புவது. யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் பயிரை வீணாக்குவது போன்றது.
- அரசன் தானும் பயனடைய மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்.
Question 32.
எங்கிருந்தோ வருகிறது
வண்ணத்துப்பூச்சியொன்று
பறவைகளும் வரக்கூடும் நாளை – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம். தமிழ்நதி ஆசிரியரின் ” அதன் பிறகு எஞ்சும்” எனும் கவிதைத் தொகுப்பில் அதிசய மலர்’ என்ற தலைப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.
பொருள்: மலரைத் தேடி வண்ணத்துச் பூச்சியும், பறவைகளும் வரும். போர் மூண்டு முடிந்த மண்ணிலும் பூக்கும் மலருக்கும் வரும் என்று பொருள் படுகிறது.
விளக்கம்: குண்டு மழை பொழிந்து ஓய்ந்தபின் யானையின் எச்சத்திலிருந்து வந்த பூச்செடியில் மலரின் வாசத்திற்கு வண்ணத்துப்பூச்சியும், பறவைகளும் வரும் என்பதைக் கவிஞர் கூறியுள்ளார்.
Question 33.
ஏதேனும் இரண்டு மெய்ப்பாடுகள் தோன்றுவதற்கான சூழ்நிலையைக் கற்பனையாகப் படைக்க.
Answer:
நகை – சிரிப்பு:
நகை என்பது சிரிப்பு. தன் மனம் எந்தவிதக் கவலையும் இல்லாத நிலையிலும், எந்தவித மனபாரமும், எந்தவித அழுத்தமும், இல்லாத சூழ்நிலையில் உருவாவதே சிரிப்பு சிரிப்புக்கு முக்கியக் காரணம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தான் செய்யும் அனைத்துச் செயல்களையும், வேலைகளையும் தானே விரும்பி, பிடித்தமானதாக நன்றாக மாற்றிக்கொண்டு செய்யும் வேலைகள் சிறப்பாக அமையும். மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும், மனதிற்கு சிரிப்பை கொடுக்கும்.
வெகுளி – சினம்:
சினம் தன்னையும், தன்னைச் சார்ந்தவர் அனைவரையும் அழித்துவிடும் பெரும் ஆயுதம். சினத்தால் அழிந்தவர்கள் இந்த உலகத்தில் பலர் உண்டு. சினம் மனதிற்குப் பயத்தைக் கொடுக்கும், பதட்டத்தைக் கொடுக்கும், அழுத்தத்தைக் கொடுக்கும், மனதின் மகிழ்ச்சியை அழித்துவிடும், முகத்தில் உள்ள சிரிப்பை அழித்துவிடும். எனவே சினத்தை முடிந்தவரை குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
Question 34.
கல்வியில் சிறந்தவர் எந்நிலையில் இருப்பர்?
Answer:
- வாழ்வின் அணியாக விளங்குவது கல்வி.
- கல்வி கற்றோர் எந்நிலையிலும் சிறந்தே இருப்பர். தாழும் நிலை வரினும் கலங்காது.
- அறிவால் உலகையே சொந்தமாக்கிக்கொள்வர். எங்குச் சென்றாலும் மற்றவர் மதிப்பைப் பெறுவர்.
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.
Question 35.
மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள் குறித்து எழுதுக.
Answer:
- ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
- பாடம் கற்பிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவர் வளாகம் சாராத ஆய்வாளராகத் தம்மை உருவாக்கிக் கொண்டார்.
- கட்டுரையோ, நூலோ எழுதும் முன் தரவுகளைச் சேகரித்துத் தமது ஆய்வுக்கு ஏற்றதை ஒப்பிட்டு ஐயமிருப்பின் மற்றவர்களைக் கேட்டுத் தெளிந்த பிறகே வெளியிடுவார்.
- மயிலை சீனி. ஒரு தமிழ்த் தேனீ .
- அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடந்தன. நூலகங்களே அவரது தாயகங்களாயின.
- அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கிக் கருத்து முத்துகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்கினார்.
- புதிய செய்தி தருதல், புது விளக்கமளித்தல், இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டுதல்.
- தவறுகளை மறுத்து உண்மையை எடுத்துரைத்தல் என்பவற்றை ஆய்வு அணுகு முறைகளாகக் கொண்டார்.
மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள்.
- விபுலானந்த அடிகள்… இதழ்களில் வெளியாகின.
- பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும்
- களப்பிரர் ஆட்சியில்
- தமிழகம் தமிழர் வளர்த்த அழகுக்
- கலைகள் தமிழ்நாட்டு
- வரலாறு சாசனச் செய்யுள் மஞ்சரி
- மறைந்து போன தமிழ் நூல்கள்
Question 36.
திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
Answer:
- காட்சி என்பது கதை நகர்வுக்கு உதவுவது. திரைப்படத்தில் காட்சிகள் சிறப்பாக அமைந்தால் வசனத்திற்குக்கூட இரண்டாம் இடம்தான்.
- நாடகத்தில் விளக்கை அணைத்தும் திரையை இறக்கியும் காட்சி மாற்றத்தைக் காண்பிப்பார்கள்.
- ஆனால் திரைப்படத்தில் வசனம் இன்றிக் காட்சிகளை அடுத்தடுத்து வைப்பதன் மூலம் கதை சொல்வார்கள்.
- முதல் காட்சியில் தோழி ஒருத்தி கதாநாயகியிடம் தொடர்வண்டிப் பயணச்சீட்டைக் கொடுப்பாள்.
- அடுத்த காட்சியில் கதாநாயகி தொடர்வண்டியில் இருப்பாள்!
- எண் 7, வீரையா தெரு… என்று ஒருவர் முகவரியைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்த முகவரியில் சென்று காட்சி நிற்கும்.
- இவ்விரண்டு காட்சியின் அமைப்பே ஆற்றல் உள்ளதாக வரையறுக்கப்பட்டுள்ளது.
Question 37.
உ.வே.சா. குறித்து எழுதுக.
Answer:
- தமிழ்த் தாத்தா என அழைக்கப்பெற்ற உவே.சா. இணையற்ற ஆசிரியர், புலமைப் பெருங்கடல், சிறந்த எழுத்தாளர்.
- பதிப்பாசிரியர், பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்.
- மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தாக்ஷிணாத்திய கலாநிதி’ உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளவர்.
- கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- 1932 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.
- அவரது திருவுருவச் சிலை சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது.
- சென்னை திருவான்மியூரில் உவே. சாவின் பெயரில் நூலகம் அமைந்துள்ளது.
Question 38.
சங்கப் பாடல்களின் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் – விளக்குக.
Answer:
ஒலிக்கோலங்கள்
- எல்லா தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும் தான் தொடங்குகிறது.
- மொழி சார்ந்த கவிதையும் இசையோடும் இசைக்கருவியோடும் தான் பிறக்கிறது.
- ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன. இதனையே அந்தப் பனுவலின் – பாடலின் – ஒலிப்பின்னல் என்கிறோம்.
(எ.கா.) கடந்தடு தானை மூவிருங்கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே;
என்னும் இப்பாடலில் வன்மையான உணர்ச்சியைக் காட்டுகிற விதத்தில் க, த, ட, ற முதலிய வல்லின மெய்கள், பிற மெல்லின, இடையின மெய்களைக் காட்டிலும் அதிகமாக வருதலை அறிந்து கொள்ளலாம்.
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக
இப்படிப் பல, உயிர் ஒலிகள் – குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுக்களும் இங்கே கவனத்திற்குரியன. இந்த ஒலிக்கோலம் சங்கப்பாடல்களில் முக்கியமான ஒரு பண்பு.
பிரிவு – 3
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.
Question 39.
பாடாண்திணை அல்லது பரிசில் துறையை உரிய எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
பாடாண்திணை
1. பாடு – ஆண் – திணை பாடப்படும் ஆண் மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவது. பாடாண் திணை என்பது மன்னனின் வீரம், கொடை, கல்வி போன்ற சிறப்புகளைக் கூறுவது. ஆனால் நம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் ஒளவையார் அதியமான் பரிசில் கொடுக்காததால் கடுஞ்சொல் கூறுவது போன்று தோன்றலாம். ஆனால், ஒளவை தன்னைவிட்டு பிரிந்துவிடக் கூடாது. தன் அவையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு நடந்து கொள்கின்றான்.
2. அதியமான் புலவரின் பெருமையையும், கல்வியின் சிறப்பையும் அறிந்தவனாக இருக்கிறான் என்பதாலும் இப்பாடல் பாடாண் திணைக்குரியது ஆயிற்று. பொருத்தம் : ஒழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் என்று உவமானமும், ஒழுக்கமுடையார் சொல் என்ற உவமேயகம் வந்து, இடையில் அற்றே என்ற உவம உருபு வெளிப்படையாக வந்ததால் இக்குறளில் உவமையணி அமைந்துள்ளது.
(அல்லது)
பரிசில் துறையை
பரிசு வேண்டி வாயிலில் நிற்பது.
(எ.கா.) வாயிலேயே எனத் தொடங்கும் அவ்வையார் எழுதிய புறநானூற்றுப் பாடல்.
பொருத்தம் அதியமான் நெடுமானஞ்சி என்னும் மன்னனிடம் புலவர்கள் பாடிப் பரிசு பெறுவது வழக்கம். அவ்வாறு பாடிப் பரிசு பெற வேண்டி அவ்வையார் நிற்பதால் இப்பாடல் பரிசில் துறையைச் சேர்ந்ததாகும்.
Question 40.
உவமையணி எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
அணி விளக்கம் :
இரண்டு பொருள்களுக்கு ஒப்புமை தோன்றச் சொல்வது உவமையணி ‘ யாகும். இது தாயணி’ என்று கூறப்படும். ஏனெனில் இந்த அணியிலிருந்தே மற்ற அணிகள் தோன்றின.
(எ.கா) இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்
விளக்கம்
சேற்று நிலத்தில் வழுக்கி விழாமல் இருக்க ஊன்றுகோல் எங்ஙனம் உதவுகிறதோ, அதுபோல நாம் துன்பப்படும் வேளையில் பெரியோர்களின் வாய்ச்சொற்கள் ஊன்றுகோலாக இருந்து நம்மைக் காப்பாற்றும்.
(அல்லது)
உருவக அணி எடுத்துக்காட்டுடன் விளக்குக.
அணி விளக்கம்:
உவமானமும், உவமேயமும் வேறு வேறு பொருள் எனத் தோன்றாமல் ஒன்றுபோல் காட்டி உவமானத்தின் தன்மை முழுவதும் உவமேயத்தில் மறைந்து நிற்கும்படிக் கூறுவது ‘உருவக அணி’ எனப்படும்.
(எ.கா.) முகத்தாமரை
விளக்கம்
முகமானது தாமரையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் கூறும் பொருள் ‘உவமேயம்’ எனப்படும். ஒப்புமையாகக் காட்டும் பொருள் உவமை’ எனப்படும்.
Question 41.
பழமொழியை நிகழ்வில் அமைத்து எழுதுக.
Answer:
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா:
பழமொழி விளக்கம்:
இளமையில் நல்லொழுக்கங்களைக் கற்காதவன் முதுமையில் கற்பது என்று கூறுவது கடினமானது. அதுவே இப்பழமொழியின் கருத்தாகும்.
வாழ்க்கை நிகழ்வு :
கங்கைகொண்டான் என்பது ஒரு சிற்றூர். அந்த ஊரில் வாழ்பவர்கள் கங்கை நீரை விட புனிதமானவர்கள். சிறு தவறு கூட செய்யமாட்டார்கள். அந்த ஊரின் பெருமையைக் கெடுக்க வந்தவன்தான் பிரசன்னா. பிரசன்னாவை அந்த ஊரில் பிரச்சனை என்று தான் கூறுவார்கள். இவர்கள் ஊரில் பள்ளிக்கூடம் கிடையாது. இவர்கள் அனைவரும் கங்கை கொண்டானை அடுத்துள்ள ஜெயங்கொண்டானிற்குத்தான் படிக்கச் செல்வார்கள்.
அந்தச் சமயம் பிரசன்னா, அந்த ஊர் மாணவர்களிடம் பென்சில் மற்றும் பேனாவை அடிக்கடி திருடிவிடுவான். அவனது அம்மாவோ நீ திருடி வந்த பேனாவின் நிறம் நன்றாக இல்லை. வேறு ஒரு பேனாவைத் திருடிக் கொண்டு வா என்று அவனை உற்சாகப்படுத்தினாள்.
பெரியவன் ஆனதும் அவன் கொள்ளை கொலை போன்ற தீய செயல்களைச் செய்து கொடூரமானவனாக மாறினான். சிறு வயதிலேயே அவனது தாயார் திருத்தி இருந்தால் அவன் திருந்தியிருப்பான். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது இதனால் உணரப்பட்டது.
(அல்லது)
இளங்கன்று பயம் அறியாது
பழமொழி விளக்கம்:
இளமைப் பருவத்தினர், தனக்குப் பின்னால் நேரக்கூடிய துன்பத்தினைப் பற்றிய பயம் அறியாமல் தற்போது உடனே ஒரு முடிவினை எடுத்துவிடுவர். அது பேராபத்தாய் கூட முடிந்து விடும்.
வாழ்க்கை நிகழ்வு:
என் நண்பன் மாதவன் அவன் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவன் மிகவும் துடிப்புடன் செயலாற்றக் கூடியவன். ஊரிலும் சரி, பள்ளியிலும் சரி, தன்னை ஒரு வீரன் என்று காட்டிக் கொள்வதில் பெருமைப்படக் கூடியவன். யாரும் செய்யத் துணியாத காரியத்தையும் உடலை வருத்தித் கடினமானாலும் அதைச் செய்து முடிந்து விடுவான்.
ஒரு முறை அவனது நண்பர்கள் அவன் தெருவின் புற்றிலுள்ள பாம்பினைப் பிடிப்பதற்கு மாதவனிடம் பந்தயம் வைத்தனர். பந்தயத்தில் வெற்றிபெற வேண்டும் என நினைத்து மாதவன் பாம்பினைத் தன் கையால் பிடித்தான். பாம்பு கடித்து விடும் என்ற பயம் கூட அவனுக்கு இல்லை. இந்நிகழ்வு மூலமே இளங்கன்று பயமறியாது என்பதனை உணர்ந்தேன்.
Question 42.
தமிழாக்கம் தருக.
Answer:
1. All is fair in love and war.
2. Knowledge is power.
3. The measure is a treasure.
4. Time and tide wait for none.
1. ஆபத்துக்குப் பாவம் இல்லை
2. அறிவே ஆற்றல்.
3. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.
4. ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது./காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது.
Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றனுக்கு கவிதை புனைக.
Answer:
நம்பிக்கை அல்லது வான்மழை
பகுதி – IV
பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3×6 = 18]
Question 44.
(அ) அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைநிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று நிறுவுக.
Answer:
அறிவுடைமை :
அறிவு மட்டுமே ஒருவனுடைய வாழ்க்கையை உயர்த்தும் தன் வாழ்க்கையைச் சிறப்பாக மாற்றி கொள்ளும் உறுதியையும், வல்லமையையும், வலிமையையும் கொடுப்பது அறிவு மட்டுமே. அந்த அறிவுடைமை பற்றி வள்ளுவர் கூறுவது,
“அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண்”
அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.
“சென்ற இடத்தால் செலவிடா தீது ஓரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு”
மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
எப்பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு”
உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்நெறியில் தானும் உலகத்தோடு இணைந்து செல்வதே அறிவாகும்.
“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்”
பின்பு வரப்போவதை முன்பே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமை கொண்ட
அறிவுடையவர்க்கு அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
(அல்லது)
Question 44.
(ஆ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
Answer:
குகனிடம் இராமன் கூறியது:
வேடுவ தலைவர் குகனிடம் இராமன் நீ என் தம்பி; இலக்குவன் உன் தம்பி; அழகிய வெற்றியைக் கொண்ட சீதை, உன் அண்ணி, குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதேயாகும். நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன்.
துன்பு உளது எனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்
குகனின் வருத்தம் :
(இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவானே என்று குகன் வருந்தினான். அதை உணர்ந்த இராமன் கூறுகிறான்) குகனே! துன்பம் என்று ஒன்று இருந்தால் தானே இன்பம் என்பது புலப்படும். துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக உண்டு. நமக்கிடையே இப்போது இப்பிரிவு நேர்கிறது என்று எண்ணாதே இதுவரை நாங்கள் நால்வரே உடன் பிறந்தவர் என்றிருந்தோம். உறவு என்பது எங்கள் நால்வரோடு நின்றுவிடவில்லை. இப்போது உன்னையும் சேர்த்து நாம் ஐவர் ஆகின்றோம்.
இராமன் செய்த இறுதிச்சடங்கு :
கழுகு வேந்தன் சடாயு, இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது தடுத்துச் சண்டையிட்டுக் காயப்படுகிறான். இராமனிடம் நடந்ததைக் கூறுகிறான்; பின் இறந்துவிடுகிறான். இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.
“எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை” என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டு வந்து வைத்தான். தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான்.
பூக்களையும் கொண்டு வந்து தூவினான். மணலினால், மேடையைத் திருத்தமாக அமைத்தான். நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச் சடங்கு செய்யப்படக் கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான். குகனும் விடணும்
இராமனின் தம்பியாதல் :
இராமனின் தம்பிகள் நால்வர் உடன்பிறந்தவர்களாக இருந்தோம் குகனுடன் சேர்த்து நாங்கள் ஐவர் ஆனோம். பின்னர் மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம். உள்ளத்தில் அன்பு கொண்டு எங்களிடம் வந்த அன்பனே, உன்னுடன் சேர்த்து எழுவர் ஆனோம். புகுதற்கரிய கானக வாழ்வை மேற்கொள்ளும்படி என்னை அனுப்பிய உன் தந்தையாகிய தயரதன், இதனால் புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெறுகிறான்.
சவரியின் விருந்து :
சவரி, இராமனைப் புகழ்ந்து அன்பின் கனிவினால் அருவி இழிவது போலக் கண்ணீர் வடித்தாள். (இராமனைக் கண்டதால்) என் பொய்யான உலகப்பற்று அழிந்தது, அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது. என் பிறவி ஒழிந்தது’ என்று கூறினாள், வேண்டிய எல்லாம் கொண்டுவந்து அவள் இராம இலக்குவருக்கு விருந்து செய்விக்க, அவர்களும் விருந்தை ஏற்றனர்.
Question 45.
அ குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:
1. குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு , சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது. குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது.
2. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.
குடும்பம் :
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் திருமணம்’, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை . குடும்பம் எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில் தான் (1029) வருகிறது.
வாழிடம் :
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் தம்மனை’, ‘நும்மனை ‘ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.
மணந்தகம் :
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது : வளர்கிறது. பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே.
மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.
தாய்வழிக் குடும்பம் :
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
முதலான தொடர்களில் இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.
சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.
தந்தைவழிக் குடும்பம்:
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.
ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.
தனிக்குடும்பம் :
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுப்படுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.
விரிந்த குடும்பம் :
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது.
(அல்லது)
Question 45.
ஆ) நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
- உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை.
- ஆனால் யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக் கொண்டால் போதும்.
- தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால் யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.
“நாலடியார் அதையே பக்குவமாகச் சொல்கிறது.
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல் சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான் பயந் தாங்கு”
- நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்பவன்.
- அடுத்தவரிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான்.
- டைமன் என்பவன் ஏதென்ஸ் நகரில் இருந்தான்.
- அவன் வரவு குறைந்தாலும் செலவு நீடித்தது. அவனது உதவியாளர் நிதி நிலைமையைப் பற்றிப் பேசவருகிற பொழுதெல்லாம் கேட்க மறுத்தான்.
- ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரிக்கிறார்கள். ஆனால் அப்போதும் அவன் வருந்தவில்லை.
- தான் அளித்த விருந்தை உண்டவர்கள், உதவுவார்கள் என்று பொய்க்கணக்குப் போடுகிறான்.
- அவனுடைய சேவகர்கள் நான்கு திசைகளுக்கும் சென்று வெறும் கையோடும். வெளிறிய முகத்தோடும் திரும்புகிறார்கள்.
- அவன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான்.
- மனித இனத்தையே வெறுக்கிறான். ‘டைமன்’ பற்றிய ஷேக்ஸ்பியரின் நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல்
விளக்கம், ஒளவையார் நல்வழியில்
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு”
என்று நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
Question 46.
அ உரிமைத்தாகம் கதையை நாடக வடிவில் விரிவாக எழுதுக.
Answer:
பங்கேற்போர் முத்தையன், மூக்கம்மாள், வெள்ளைச்சாமி மேலூர் பங்காரு சாமி
காட்சி – 1
களம் : முத்தையன் வீடு
பங்கேற்போர் : முத்தையன், மூக்கம்மாள்
மூக்கம்மாள் : என்னங்க?… என்னங்க?
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?
முத்தையன் : ஏய்… சொன்னாத்தானே தெரியும். ரொம்ப பீடிகை போடாம் – விபரத்தை சட்டுன்னு சொல்லு.
மூக்கம்மாள் : நேத்து கோழி கூப்புட எந்திரிச்சு கஞ்சி காய்ச்சிட்டு இருந்தேன். அப்போ…. பக்கத்து வீட்ல, உங்க தம்பியும், தம்பி மனைவியும் கடுகடுன்னு பேசிக்கிட்டாங்க. ஏதோ மனக்கசப்புன்னு தோணுது.
உங்களுக்குத் தம்பி…. ஆனா அவன்
நான் தூக்கி வளர்த்த பிள்ளை மனசு கொதிக்குது தம்பி வீட்டுல என்ன பிரச்சனைன்னு கொஞ்சம் விசாரிங்க.
முத்தையன் : வெள்ளைச்சாமி என்னோட தம்பியா அவன்? வீட்டுக்காரி பேச்சை கேட்டுகிட்டு, தூக்கி வளர்த்த உன்னையும், அப்பா போல ஆதரவு காட்டின என்னையும் தூக்கி எறிஞ்சிட்டுப் போனவனைப் பத்திப் பேசாதே. தலைக்கு மிஞ்சிட்டான். இனிமே அவனைப் பத்திப் பேசி பயன் இல்லை.
மூக்கம்மாள் – அப்படி தம்பியை வெறுத்துப் பேசாதிங்க தம்பி – தவறு செஞ்சா , அண்ணன் பொறுக்கனு தம்பி பிரச்சனையை நீங்கதான் தீர்க்கணும்.
முத்தையன் : சரி…. தம்பிக்கு என்ன பிரச்சனை? சொல்லு மொதல்ல. மூக்கம்மாள் : சரி. சொல்றேன். உங்க தம்பி. உங்க கிட்ட கூட ஒரு வார்த்தை கேட்காம், மேலூரு பங்காருசாமி அய்யாகிட்ட போய் 200 வாங்கினாராம். வாங்கும்போதே அவரு நம்பிக்கைக் கிரயம் நிலத்துமேலே கேட்டு வாங்கினாராம். ஆறு மாசமா உங்க தம்பி வட்டி மட்டும் தான் கட்டினாராம். நிலத்தை மீட்கணும்னு உங்க தம்பி பொண்டாட்டி இப்போ சண்டை போடுறாளாம். இதுதாங்க பிரச்சனை.
முத்தையன் : சரி … சரி… நான் பாத்துக்கிறேன். நீ கவலைப்படாதே. சரி ….. எங்கிட்ட இருந்த பணத்துக்கெல்லாம் பருத்திவிதை, அது இதுன்னு வயலுக்காகச் செலவழிச்சிட்டேன். இப்போ போயி உதவுங்கன்னு சொல்ற. என்ன பண்றது?
மூக்கம்மாள் : ஒண்ணும் யோசிக்காதீங்க….. இந்தாங்க என்னோட கம்மல், மூக்குத்து, மோதிரம். இதை அடகு வைங்க. தம்பி… பிரச்சனையைத் தீருங்க சாரி…. நான் மேலூர் வரைக்கும் போயி …. வேலையை முடிச்சுட்டு வரேன். நீ கவலைப்படாதே!
காட்சி – 2
காலம். வெள்ளைச்சாமி வீடு பங்கேற்போர்.
அண்ணன் முத்தையன், தம்பி வெள்ளைச்சாமி
முத்தையன். என்னடா தம்பி? காலைலேர்ந்து ஆளையே காணும். பக்கத்துல உள்ள அண்ணனைவிட, பங்காரு சாமியை பெரிசா நெனைச்சுட்டே போலிருக்கு? சரி…. சரி… எனக்கு விஷயமெல்லாம் தெரியும். நிலத்தை நம்பிக்கையா எழுதிக் கொடுத்தியா? இல்ல கிரயமே பண்ணிட்டயா?! வெள்ளைச்சாமி: நம்பிக்கையாத்தான்….. ஸ்டாம்ப் பேப்பர்ல எழுதி வாங்கினாங்க. ஆறு மாசமா தவறாம வட்டி கட்டிட்டேன்.
முதல் 200 ரூபாயும் உடனே தரணும்னு இப்போ கேட்கறாரு வயல்ல விதைக்காதேன்னு கறாராய் பேசறாரு. முத்தையன்: அவ்வளவு தானே?!… நான் என்னமோ… ஏதோன்னு பயந்துட்டேன். மசமசன்னு நிக்காம வயலை உழுதுபோடு. என்னோட பாகத்தை உழுதிட்டேன். நாளைக்கு நாம் இரண்டு பேரும் ஒத்துமையா வயல்ல விதை விதைக்கணும். புரிஞ்சுதா? பங்காரு சாமியை நான் பாத்துட்டு வாரேன்.
காட்சி – 3
பங்கேற்போர் : பங்காரு சாமி – முத்தையன் களம் : பங்காருசாமி வீடு
முத்தையன் : அய்யா, வணக்கமுங்க.
பங்காருசாமி : என்னப்பா? வராத ஆளு வந்திருக்கே… என்ன விஷயம்.
முத்தையன் : என்னோட தம்பி உங்ககிட்ட வாங்கின பணத்துக்கு வட்டி ஒழுங்கா கட்டிட்டதா சொன்னான். கடன் தொகை ரூபாய் 200 ஐ கொடுக்க முடியலைன்னு வருத்தப்பட்டான். இந்தாங்க பணம் ரூபாய் 200. ஏதோ நம்பிக்கைப் பத்திரம்னு சொன்னான். அதக்குடுங்கையா.
பங்காருசாமி : கடன் வாங்கியது அவன். ரூ 400 க்கு அறுதிச் கெரயம் எழுதியாச்சு. வயலில் இறங்காதே, விதைக்காதேன்னு சொல்லியும் விட்டாச்சு. இனி எதுவும் செய்ய முடியாது.
முத்தையன் : அய்யா வட்டியும் தந்தாச்சு . முதலும் இப்போ கொடுத்துட்டேன். பாக்கி ஏதும் இல்லை. உங்களுக்குத் தெரிஞ்சதை நீங்க பாருங்க. எனக்குத் தெரிஞ்சதை நான் பார்க்கிறேன்.
காட்சி – 4
இடம் : முத்தையன் வயல் பங்கேற்போர் : முத்தையன், வெள்ளைச்சாமி, பங்காருசாமி (முத்தையன், வெள்ளச்சாமி இருவரும் தனது வயல்களில் உழவு செய்கிறார்கள் அங்கு வந்த பங்காருசாமி கோபப்படுகிறான்) பங்காருசாமி : ஏய்… முத்தையா … வெள்ளச்சாமி ரெண்டு பேருக்கும் கெட்ட காலம் வந்திருச்சா? 400 ரூபாயைக் கொடுத்துட்டு உழவு செய்யுங்க…. இல்லைன்னா …. வக்கீலு, கோட்டுன்னு அலைய வச்சிருவேன்.
(வெள்ளைச்சாமி மாட்டை அடிக்கும் சாட்டையைக் காட்டி பங்காரு சாமியைப் பார்த்து முறைக்கிறான்) முத்தையன் : தம்பி…. நீ அவசரப்படாதே ! நான் பார்த்துக்கறேன். என்று சொன்னபடியே சாட்டையை சுழற்றியபடி முத்தையன் பங்காருசாமியை நோக்கி யாருக்கு வலிக்குது பார்ப்போம் என்று கூறியபடி நெருங்கி வந்தான்)
பங்காருசாமி : அண்ணனும் தம்பியும் ஒண்ணு கூடிட்டாங்க மாட்டிகிட்டா …. நேரா சொர்க்கந்தான் -… இனி இந்த ஏரியா பக்கமே வரமாட்டேன் சாமி
(அல்லது)
Question 46.
(ஆ) மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக.
Answer:
முன்னுரை:
1995 இல் நண்பர் வி.பி.கெ.மேனன் ஒரு படம் எடுக்கத் தீர்மானித்தார். அதில் முக்கியமான வேடமேற்று நடிக்க சிவாஜிகணேசனும், மோகன்லாலும் சம்மதித்திருந்தார்கள். திரைக்கதை ஜான்பால், ராஜீவ்நாத் ‘ தான் படத்தின் இயக்குநர். ஒரு நாள் காலையில் ராஜீவ்நாத் என்னிடம் சொன்னார். ”இன்னைக்குச் சாயங்காலம் சிவாஜிகணேசன், அவருடைய வீட்டுக்கு இரவு விருந்துக்கு நம்மைக் கூப்பிட்டிருக்கார். அன்று மாலை ஜான்பாலும் பாலச்சந்திரன் ராஜீவ்நாத்துடன் சிவாஜி கணேசனின் வீட்டுக்குப் போனோம்.
வீரபாண்டிய கட்டபொம்மன்:
வேலைக்காரர் எங்களை மேலே வருமாறு பணித்தார். இயல்பாய் மாடி ஏறிய நான் ஒரு திருப்பத்தில் நடுங்கிப்போய்க் கையெடுத்துத் தலைகுனிந்து வணங்க முற்பட்டேன். அங்கே சுவரில் வீரபான கட்டபொம்மனின் வேடத்தில் வீரத்தையும், கம்பீரத்தையும் கொட்டி முழங்கிய சிவாஜிகணேசனின் ஆயில் பெயிண்ட் செய்யப்பட்ட படம். அடுத்த திருப்பத்தில் உடைவாள் உருவின நிலையில் சத்ரபதி சிவாஜி.
வலது பெருவிரலால் மீசை முறுக்கி மந்தகாசப் புன்னகையுடன் நிற்கும் ராஜராஜ சோழன் ஒரு புறம். ஒரு புறம் கண்ணாடி அறைக்குள் பிரெஞ்சு அரசு சிவாஜி கணேசனின் நடிப்பைப் பாராட்டி அளித்த செவாலியர் விருதுடன் கூடிய மிகப் பெரிய வெள்ளைக் குதிரை எல்லாம் பார்த்து இரசித்தபடியே நாங்கள் சோஃபாக்களில் அமர்ந்தோம்.
சிவாஜி கணேசனைப் பார்த்து மகிழ்ந்தது:
ஒரே சீராய் அடி எடுத்து வைத்து, ஒவ்வொரு பாத அடி வைக்கும் போதும், மறுதோள் முன்னோக்கிச் சாய, தலை நிமிர்ந்து, நெஞ்சு விரித்து, இசைக்கு அசைப்பது போலக் கைகள் வீசி, பார்வை இமை அசையாது மெல்ல மெல்லச் சிங்க நடை நடந்து வரும் அந்த மகாநடிகனைப் பார்த்த பொழுது ராஜராஜ சோழனின் வருகையைப் பார்த்த தமிழ்நாட்டுத் தெருப்பிள்ளைகளைப் போல நான் துள்ளி எழுந்தேன்.
அவர் ஒரு ராஜநடை நடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தார். நானும் ராஜீவ்நாத்தும் அவரின் காலில் விழுந்து வணங்கினோம். அவர்கள் கதையைப் பற்றியும் கதாபாத்திரத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்க நான் சிவாஜிகணேசனின் புருவங்களையும் ; கண்களையும், முக அபிநயங்களையும், உதடுகளையும், கைவிரல்களையும் தாள், லய அபிநயங்களையும், சலனங்களையும் பார்த்துக்கொண்டு நிசப்தனாய் அமர்ந்திருந்தேன்.
சிவாஜி கேட்டதால் பாலசந்திரன் நடித்து காட்டிய நிகழ்வுகள்:
திருவிளையாடலில் ருத்ர தாண்டவமாடிய சிவாஜி கணேசனை இதயத்தில் தியானித்து சிவபக்தனான ராவணனின் ஆக்ரோஷமான உத்தரவுகளைக் கீழ்ஸ்தாயில் நான் ஆரம்பித்தேன்.
மெல்ல மெல்ல இராவணன் என்னை ஆகர்ஷித்து ஆவேசப்படுத்தினான்.
“இலங்கையில் போர்க்கொடிகள் பறக்கட்டும். எதிரிகளைத் தடுக்க ஆயத்தமாகலாம். கோட்டை வாயிலில் மகட்ரசன். கிழக்கிலும், மேற்கிலும் சுகசாரணர்கள் நிற்கட்டும். தெற்கில் நிகும்பன். அகம்பானன் முன்னணியில் படை போக ஆரம்பிக்கட்டும்.
பிரகஸ்தன் படையின் பின்னால் வந்து யுத்த நிலையைக் கணிக்கட்டும். தூம்ராட்சன் எதிரிப் படைகளின் பின்னாலிருந்து அழிந்து வரட்டும். வலத்தில் மகா பார்ஷ்வ ன். இடத்தில் மகோதரன், யானை ஆயிரம், ரதம் ஆயிரம் குதிரைகள் இரண்டாயிரம், காலாப்படை ஒரு கோ,ஆ… நானே வெல்வேன்.”
நான் சொல்லி முடித்ததும் தான் ஒரு மாபெரும் நடிகன் என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டு முதன் முதலாய் ஒரு நாடக வசனத்தைக் கேட்கும் சாதாரண மனிதனைப் போலக் கைதட்டினார். சிவாஜிகணேசன். என் குரல் நன்றாக இருப்பதாகப் பாராட்டவும் செய்தார்.
பகுதி – V
அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.
Question 47.
(அ) ‘ஒருமையுடன்’ என்று தொடங்கும் வள்ளலாரின் தெய்வமணிமாலைப் பாடலை எழுதுக. [1 x 4 = 4]
Answer:
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும் பெருமை
பெறும் நினது புகழ்
பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்கவேண்டும் பெருநெறி
பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்கவேண்டும் – இராமலிங்க அடிகள்
(ஆ) ‘மிகும்’ என்று முடியும் குறளை எழுதுக. [1 x 2 = 2]
Answer:
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும்.
– திருவள்ளுவர்