Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

9th Social Science Guide மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது
அ) கொரில்லா
ஆ) சிம்பன்ஸி
இ) உராங் உட்டான்
ஈ) பெருங்குரங்கு
விடை:
ஆ) சிம்பன்ஸி

Question 2.
வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்
அ) பழைய கற்காலம்
ஆ) இடைக்கற்காலம்
இ) புதிய கற்காலம்
ஈ) பெருங்கற்காலம்
விடை:
இ) புதிய கற்காலம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ____ ஆவர்.
அ) ஹோமோ ஹேபிலிஸ்
ஆ) ஹோமோ எரக்டஸ்
இ) ஹோமோ சேபியன்ஸ்
ஈ) நியாண்டர்தால் மனிதன்
விடை:
இ) ஹோமோ சேபியன்ஸ்

Question 4.
எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி ______ எனப்படுகிறது
அ) கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு
ஆ) பிறைநிலப் பகுதி
இ) ஸோலோ ஆறு
ஈ) நியாண்டர் பள்ளத்தாக்கு
விடை:
ஆ) பிறைநிலப்பகுதி

Question 5.
சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _________ கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.
அ) நுண்கற்காலம்
ஆ) பழங்கற்காலம்
இ) இடைக் கற்காலம்
ஈ) புதிய கற்காலம்
விடை:
ஆ) பழங்கற்காலம்

Question 6.
i) எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தையதாகும்.
ii) வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் மொழியை வளர்த்தெடுத்தார்கள்; அழகான ஓவியங்களையும் கலைப்பொருட்களையும் உருவாக்கினார்கள்.
iii) வரலாற்றுக்கு முந்தைய காலச் சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாகக் கருதப்படுகின்றன,
iv) வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது.
அ) i) சரி
ஆ) i) மற்றும்
ii) சரி
இ) i) மற்றும்
iv) சரி
ஈ) ii) மற்றும்
iii) சரி
விடை
இ) i) மற்றும்
iv) சரி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 7.
i) செல்ட் எனப்பட்ட மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள்
ii) புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது.
iii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் பழங்கற் காலம் எனப்படுகிறது.
iv) விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம் இடைக்கற்காலம் எனப்படுகிறது.
அ) i) சரி
ஆ) ii) சரி
இ) ii) மற்றும்
iii) சரி
ஈ) iv) சரி
விடை:
அ) i) சரி

Question 8.
கூற்று : தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காரணம் : நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது.
அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரி; காரணம் தவறு,
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
கைகோடரிகளும் வெட்டுக்கருவிகளும் _____ பண்பாட்டைச் சேர்ந்த முக்கியமான கருவிவகைகளாகும்.
விடை:
கீழ் பழங்கற்கால

Question 2.
கற்கருவிகளை உருவாக்குவதற்குத் தேவையான வழிமுறைகளும் நுட்பமும் ______ தொழில் நுட்பம் என அழைக்கப்படுகின்றன.
விடை:
கற்கருவி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் _____ எனப்படும்.
விடை:
இடைக்காலம்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்க

Question 1.
அ) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும்’ என்ற கருத்து உதவுகிறது.
ஆ) ‘உயிர்களின் தோற்றம் குறித்து’ என்ற நூலை ஹெர்பர்ட் ஸ்பென்சர் பதிப்பித்தார்.
இ) உயிரியல் பரிணாம வளர்ச்சி குறித்த டார்வின் கோட்பாடு இயற்கைத்தேர்வு என்ற வழிமுறையுடன் தொடர்பு உடையது.
ஈ) கல் தொழில்நுட்பம் குறித்து ஆராய்வது நிலவியல் ஆகும்
விடை:
அ) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும்’ என்ற கருத்து உதவுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 2.
அ) குரங்கினங்களில் உராங் உட்டான் மனித மரபுக்கு மிக நெருக்கமான குரங்கினமாகும்.
ஆ) மனிதர்களின் முன்னோர்களை ஹோமினின் என்கிறோம், அவர்களின் தோற்றம் குறித்த சான்றுகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.
இ) செதிலை கருவிகள் செய்ய பயன்படுத்த முடியாது.
ஈ) சிறு செதில்கள் தயாரிக்கப் பயன்படும் மூலக்கல் அச்சூலியன் எனப்படும்.
விடை:
ஆ) மனிதர்களின் முன்னோர்களை ஹோமினின் என்கிறோம், அவர்களின் தோற்றம் குறித்த சான்றுகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.

IV. பொருத்துக.
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் 1

V. சுருக்கமான விடை தருக

Question 1.
ஊகக் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் , அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?
விடை:

  • பரிணாம வளர்ச்சிப் போக்கில் மனிதர்கள் இயற்கை, தம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள் மற்றும் உலகம் குறித்துச் சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும் தொடங்கினர்.
  • இதன் மூலம் மனிதர்கள் உணர்தல் நிலையையும் அறிவாற்றலையும் கொண்டவர்களாக மாறினார்கள்.

Question 2.
வரலாற்றுக்கு முந்தைய காலத் தமிழக மக்களின் வாழ்வில் கால்நடை வளர்த்தல் ஏற்படுத்திய தாக்கம் பற்றி குறிப்பு தருக.
விடை:

  • இரும்புக்கால மக்கள் வேளாண்மை மேற்கொண்டு, ஆடு, மாடுகளையும் வளர்த்தார்கள்.
  • சில குழுக்கள் வேட்டையாடிக்கொண்டும், உணவு சேகரித்துக் கொண்டும் இருந்தநிலையில், இவர்கள் பாசன நிர்வாகத்தை மேம்படுத்தினர். திணையும், நெல்லும் பயிரிட்டனர்.
  • பானைகள் செய்தார்கள். நிரந்தரமான இடங்களில் வசித்தார்கள். கலைகள் பல வளர்ந்தனர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு
விடை:

  • டோல்மென் எனப்படும் கற்திட்டை.
  • சிஸ்ட் எனப்படும் கல்லறைகள்
  • மென்ஹிர் எனப்படும் நினைவுச்சின்ன குத்துக்கல், தாழி, பாறைக் குடைவு குகைகள்.
  • சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள்.

Question 4.
கருவி செய்வதில் கீழ்ப் பழைய கற்கால மக்களிடமிருந்த தொழில்நுட்பத்தைத் திறனாய்வு செய்க.
விடை:

  • கீழ்ப் பழைய கற்கால மக்கள் தமது வாழ்க்கைத் தேவைகளுக்காக இருமுகக் கருவிகளான கைக்கோடாரி, வெட்டுக்கத்தி போன்ற பல கருவிகளைக் செய்தார்கள்.
  • இவை சமபங்கு உருவ அமைப்பை (Symmetry) பெற்றுள்ளன. மனித மூதாதையரின் அறிவுணர் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.
  • பெரிய கற்களை செதில்களாகக் சீவி பல கருவிகளை வடிவமைத்தார்கள்.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
விவசாயம், பானை செய்தல், உலோகக் கருவிகள் செய்தல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சி பெருங்கற்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும் – உறுதிப்படுத்தவும்.
விவசாயம்:

  • பெருங்கற்கால (இரும்புகால) மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டபொழுது திணையும் நெல்லும் பயிரிடப்பட்டன.
  • நதிகள், குளங்களுக்கு அருகே பெருங்கற்கால இடங்கள் அமைந்ததால் பாசன நிர்வாகம் மேம்பட்டது. பாசன தொழில் நுட்பம் வளர்ந்தது.
  • ஈமச் சின்னங்களுக்குள நெல்லை வைத்துப் புதைத்தார்கள்.
    சான்றுகள்: ஆதிச்சநல்லூர், பொருந்தல்.
    பானை செய்தல்:
  • கறுப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. உள்ளே கறுப்பாகவும், வெளியே சிவப்பாகவும், பளபளப்பாகவும் இம் மண்பாண்டங்கள் காணப்பட்டன.
  • இப்பாண்டங்கள் சமையல், பொருள்கள் சேமிப்பு மற்றும் சாப்பிடுவதற்கு பயன்பட்டன. உலோகக்கருவிகள்
  • பெருங்கற்கால இரும்புக் கருவிகள் வேளாண்மை, வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் மற்றும் போர்களில் பயன்படுத்தப்பட்டன. வாள், குறுவாள், கோடவரி, உளி, விளக்கு, மக்காலி ஆகியவை கிடைத்துள்ளன.
  • வெண்கலக் கிண்ணங்கள், கலங்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
  • இக்கால கல்லறைகளில் ஈமப்பொருட்களாக இரும்புப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

Question 2.
மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக
விடை:
புவியின் மேலடுக்குகளில் வரலாற்றுக் கால கட்டங்கள் குறித்த நிலவியல், தொல்லியல், உயிரியல் பதிவுகள் காணப்படுகின்றன. குறிப்பாக மனித மூதாதையரின் எலும்பு புதை படிவங்கள் புதைந்துள்ளன.

  • மண் மற்றும் பாறை அடுக்குகள், தொல்மானுடவியல் அறிஞர்கள் மற்றும் தொல்லியல் அறிஞர்களால் அகழ்ந்து, சான்றுகள் சேகரிக்கப்படுகின்றன.
  • அறிவியல் பூர்வமாக கணிக்கப்படும் புதை படிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளின் காலம் மனிதர்களின் பரிணாமம், தொல் பழங்காலம் பற்றி அறிய உதவுகிறது.
  • நிலவியல் ஆய்வாளர்களால் புவியின் நீண்ட நெடிய வரலாறு நெடுங்காலம் (Era), காலம் (Period), ஊழி (Epoch), என பிரிக்கப்படுகிறது.
  • முந்தைய தொல்லுயிரூழி – பல செல் உயிரினங்கள்
    பழந்தொல்லுயிரூழி – மீன்கள், ஊர்வன, தாவரங்கள்
    இடைத் தொல்லுயிரூழி – டைனோஸர்
    பாலூட்டிகள் காலம் – ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள் (குரங்கினம்)
    (இக் குரங்கினத்திலிருந்துதான் நவீன மனித இனம் தோன்றியது)

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. உலக வரைபடத்தில் வரலாற்றுக்கு முந்தைய கால நாகரிகம் நிலவிய பகுதிகளைக் குறிக்கவும்

2. வரலாற்றுக்கு முந்தைய காலம் தமிழ்நாட்டில் நிலவிய இடங்கள் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை அமைக்கவும்

9th Social Science Guide மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராய்வது பற்றிகுறிப்பிடப்படும் இயல் எது?
அ) தொல்மானுடவியல்
ஆ) வரலாறு
இ) புவியியல்
ஈ) தொல்லியல்
விடை:
ஈ) தொல்லியல்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 2.
மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய்ந்து அறிந்து கொள்ளும் இயல். அ) மண்ண டுக்கியல்
ஆ) தொல்மானுடவியல்
இ) தொல்லியல்
ஈ) புவியியல்
விடை:
ஆ) தொல்மானுடவியல்

Question 3.
ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள் தோன்றிய காலம் எது?
அ) தொல்லுயிரூழி காலம்
ஆ) இடைத் தொல்லுயிரூழி காலம்
இ) பாலூட்டிகள் காலம்
ஈ) பழந்தொல்லுயிரூழி காலம்
விடை:
இ) பாலூட்டிகள் காலம்

Question 4.
மறுமலர்ச்சி எங்கு தோன்றியது?
அ) ஆசியா
ஆ) ஆப்பிரிக்கா
இ) அமெரிக்கா
ஈ) ஐரோப்பா
விடை:
ஈ) ஐரோப்பா

Question 5.
இயற்கை மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளால் உருவான பாறை மற்றும் மண் அடுக்குகளின் தோற்றம், தன்மை குறித்து ஆராய்தல்
அ) தொல்லியல்
ஆ) மண்ணியல்
இ) புவியியல்
ஈ) மண்ண டுக்கியல்
விடை:
ஈ) மண்ண டுக்கியல்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 6.
உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழக அருங்காட்சியகம்
அ) ஆஷ்மோலியன்
ஆ) என்னிகால்டி-நன்னா
இ) கேபி டோலைன்
ஈ) கேம்பிரிட்ஜ் –
விடை:
அ) ஆஷ்மோலியன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
புவி எத்தனை ஆண்டுகளுக்கு முன் உருவானது ________
விடை:
454 பில்லியன்

Question 2.
ஆஸ்ட்ரோலாபித்திஸைன் என்பதன் பொருள் _____
விடை:
தெற்கத்திய மனிதக் குரங்கு

Question 3.
வரலாறு எழுதுவது யாருடைய காலத்தில் தொடங்கியது _____
விடை:
கிரேக்கர்கள்

Question 4.
மறுமலர்ச்சியின் காலம் எந்த நூற்றாண்டு ______
விடை:
15-16

Question 5.
உலகின் மிகத் தொன்மையான அருங்காட்சியகம் _____ அது எங்குள்ளது ________
விடை:
என்னிகால்டி-நன்னா

Question 6.
சார்லஸ் டார்வின் _______, _______ என்ற நூற்களை எழுதினார்.
விடை:
உயிரினங்களின் தோற்றம், மனிதனின் தோற்றம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 7.
மனிதர்களின் மூதாதையர்கள் ______ என்று அழைக்கப்படுகின்றனர்.
விடை:
ஹோமினின்

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் 3

IV. சுருக்கமான விடை தருக

Question 1.
புவி எப்பொழுது உருவானது? நிலவியல் ஆய்வாளர்கள் புவி வரலாற்றை எவ்வாறு பிரிக்கிறார்கள்?
விடை:

  • புவி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படுகிறது.
  • புவியின் நீண்ட நெடிய வரலாற்றை நிலவியல் ஆய்வாளர்கள் நெடுங்காலம், காலம், ஊழி என்று பிரிக்கிறார்கள்.

Question 2.
ஊகக்காலம் பற்றி சுருக்கமாக எழுதுகு.
விடை:
ஊகக் காலம்:

  • பரிணைாம வளர்ச்சிப் போக்கில் உணர்தல் நிலை மற்றும் அறிவாற்றல் கொண்ட மனிதர்கள், இயற்கை, சுற்றியுள்ள உயிரினங்கள், உலகம் குறித்து சிந்திக்கவும் கேள்வி எழுப்பவும் தொடங்கினார்.
  • சூரியன், சந்திரன் முதலான பல இயற்கை ஆற்றல்கள் குறித்து தமது சுய புரிதல்களை உருவாக்கினர். இப்புரிதல்களில் சில அறிவியல் பூர்வமானவை அல்ல.
  • உலகின் தோற்றம் குறித்த அவர்களின் அறிவியலறிவின் போதாமை வெளிப்படும் இக்காலம் “ஊகக் காலம்” ஆகும்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
கருக்கல் மற்றும் செதில் என்றால் என்ன?
விடை:

  • கருக்கல் (core) என்பது ஒரு கல்லின் முதன்மைப் பாளம் ஆகும். கற்சுத்தியலால் இதிலிருந்து செதில்கள் உடைத்து எடுக்கப்படுகின்றன.
  • செதில் (flakes) – பெரிய கற்பாளத்திலிருந்து அல்லது கருங்கல்லில் இருந்து உடைத்து எடுக்கப்பட்ட ஒரு சிறு கற்துண்டு.

Question 4.
சர் இராபர்ட் புரூஸ் என்ன கண்டுடித்தார்?
விடை:

  • பொ.ஆ.1863 இல் சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் பழங்கற்காலக் கருவிகளை முதன் முறையாகக் கண்டுபிடித்தார்.
  • இங்கு கண்டெடுக்கப்பட்ட கைக்கோடரிகள் சென்னை கற்கருவித்தொழிலகம் என்று அழைக்கப்படுகின்றன. அவர் கண்டெடுத்த கருவிகள், சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.

V. தலைப்பு வினாக்கள்

ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளி .

Question 1.
மேல் பழங்கற்காலப் பண்பாடு
(i) பியூரின் என்பது என்ன ?
விடை:
பியூரின் என்பது கூரிய வெட்டுமுனை உள்ள கல்லாலான உளி.

(ii) வீனஸ் என்று அழைக்கப்படுவது எது?
கல்லிலும், எலும்பிலும் செதுக்கப்பட்ட பெண் தெய்வச் சிற்பங்கள்.

(iii) மேல் பழங்கற்காலப் பண்பாடு எப்போது தோன்றியது?
விடை:
சுமார் 60000 ஆண்டுகளுக்கு முன்.

(iv) பனிக்காலம் என்றால் என்ன?
விடை:
உலகின் பல பாகங்கள் பனியாலும் பனிப்பாளங்களாலும் மூடப்பட்டிருந்த காலம் (8000 ஆண்டுகளுக்கு முன்).

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 2.
ஹோமினிட் மற்றும் ஹோமின்ஸ்
(i) ஹோமினிட் என்போர் யார்?
விடை:
மனிதர்களை உள்ளடக்கிய நவீன மற்றும் அழிந்து போன அனைத்து பெருங்குரங்கு இனங்கள் ஹோமினிட் ஆகும்.

(ii) ஆப்பிரிக்காவில் கருவிகளை உருவாக்கிய முதல் மனித இனம் எது?
விடை:
ஹோமோ ஹெபிலிஸ்

(iii) நவீன கால மனிதர்கள் எந்தப் பெயரால் குறிக்கப்படுகிறார்கள்?
விடை:
ஹோமோ சேப்பியன்

(iv) இந்த இனத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு வகையைக் கூறு.
விடை:
ஹோமோ ஹெபிலிஸ் / நியாண்டர்தாலென்சிஸ்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
மனித முன்னோர்களின் தொடக்க காலக் கற்கருவிகளின் தொகுப்பு

(i) அச்சூலியக் கருவிகள் கர்நாடகத்திலும் மத்திய பிரதேசத்திலும் எங்கு கண்டெக்கப்பட்டுள்ளன.
விடை:
அ) * கர்நாடகா – இசாம்பூர் , மத்திய பிரதேசம் – பிம்பெத்கா

(ii) பியூரின் என்றால் என்ன?
விடை:
பியூரின் என்பது கூரிய வெட்டுமுனை உள்ள கல்லாலான உளி.

(iii) இருமுகக் கருவிகள் என்றால் என்ன?
விடை:
இருபுறமும் செதுக்கப்பட்டதால் இக்கருவிகள் இருமுகக் கருவிகள் ஆகும்.

(iv) மனித இன முன்னோடிகள் பயன்படுத்திய கல்லால் ஆன ஆயுதங்கள் சிலவற்றைக் கூறுக.
விடை:
கைக்கோடரி, வெட்டுக்கத்தி

VI. விரிவான விடையளிக்கவும்

Question 1.
மேல் பழங்கற்காலப் பண்பாடு குறித்து விவரிக்கவும்.
விடை:
அறிமுகம்:
(i) இடைப் பழங்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து வந்த மேல் பழங்கற்காலப் பண்பாட்டில் ஏற்பட்ட கற்குருவி தொழிலில் புதிய நுட்பங்கள் சிறப்பான கூறாகும். இந்த மேல் பழங்கற்காலப் பண்பாடு சுமார் 60000 ஆண்டுகளுக்கு முன்தோன்றியது பனிக்காலம் முற்றுப் பெற்ற சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஹேலோசின் காலம் வரை நீடித்தது. (பனிக்காலம் – தற்காலத்திற்கு 8000 ஆண்டுகளுக்கு முன்)

இக்காலத்தில் கற்களாலான நீண்ட கத்திகளும், பியூரின் எனப்படும் உளிகளும் உருவாக்கப்பட்டன. சிலிகா அதிகமுள்ள பல்வேறு கல் வகைகள் கருவிகள் செய்யப் பயன்பட்டன.

திறன்க ள்:
பல்வேறு ஓவியங்களும், கலைப்பொருட்களும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டன. பல்வேறுசெய்பொருட்கள் இவர்களது படைப்பாற்றல் திறனில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் தொழிகள் உருவானதைக் காட்டுகின்றன.

மனித பரிணாம வளர்ச்சி:
முதல் நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவின் சஹாராவிற்குத் தெற்குப் பகுதியில் (சப்-சஹாரா) தோன்றினர். இந்த இனம் மேல் பழங் கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவினார்கள். ஒருவேளை இவர்கள் அங்கிருந்தவர்களை விரட்டியிருக்கலாம். ஐரோப்பாவில் குரோமாக்னன் மனிதர்கள் வாழ்ந்தார்கள்.

கருவிகள் மற்றும் கலைகள்:

  • கொம்புகளும், தந்தங்களும் கருவிகள் மற்றும் கலைப்பொருட்கள் செய்யப் பயன்பட்டன. எலும்பாலான பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. பதக்கம் மற்றும் வேலைப்பாடு மிக்க கருவிகள் பயன்பாட்டில் இருந்தன.
  • ஆடைகளை அணிந்தனர், சமைத்த உணவை உண்டனர், இறந்தவர்கள் மார்பில் கைவைத்த நிலையில் புதைக்கப்பட்டார்கள். கல்லிலும், எலும்பிலும் செதுக்கப்பட்ட வீனஸ் பெண் தெய்வச் சிற்பங்கள் ஐரோப்பாவிலும், ஆசியாவின் சில பகுதிகளிலும் உருவாக்கப்பட்டன.

மனவரைபடம்

மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் – வரலாற்றுக்கு முந்தைய காலம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் 5