Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் Textbook Questions and Answers, Notes.
TN Board 9th Social Science Solutions Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்
9th Social Science Guide நிலவரைபடத் திறன்கள் Text Book Back Questions and Answers
பகுதி – I புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
Question 1.
ஒரு நிலவரைபடத்தின் கருத்து (அல்லது) நோக்கத்தைக் குறிப்பிடுவது.
அ) தலைப்பு
ஆ) அளவை
இ) திசைகள்
ஈ) நிலவரைப்படக் குறிப்பு
விடை:
ஈ) நிலவரைப்படக் குறிப்பு
Question 2.
நிலவரைப்படத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள்.
அ) முறைக்குறியீடுகள்
ஆ) இணைப்பாய புள்ளிகள்
இ) வலைப்பின்னல் அமைப்பு
ஈ) திசைகள்
விடை:
அ) முறைக்குறியீடுகள்
Question 3.
உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் (GPS) பயன்படுத்தப்படும் செயற்கைக் கோள்கள்.
அ) 7
ஆ) 24
இ) 32
ஈ) 64
விடை:
ஆ) 24
II. பொருத்துக
III. கொடுக்கப்பட்டுள்ள கூற்றை ஆராய்ந்து சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
கூற்று (A): செங்குத்துக் கோடுகளும் இடைமட்டக் கோடுகளும் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் உருவாக்கும் வலை அமைப்பிற்கு இணைப்பாயங்களின் அமைப்பு.
காரணம் (R): கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் செல்லும் கோடுகள் முறையே வடக்கைக்கோடுகள், கிழக்கைக்கோடுகள் என்று அழைக்கின்றன.
அ) A மற்றும் R இரண்டும் சரி R ஆனது A விற்கு சரியான விளக்கம்.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி R ஆனால் ஆனது A விற்கு சரியான விளக்கமல்ல
இ) A சரி R தவறு
ஈ) A தவறு R சரி
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி R ஆனது A விற்கு சரியான விளக்கம்.
Question 2.
கூற்று (A): ஒரு நிலவரைப்படத்தில் உள்ள வரைபடக் குறிப்புகள் வரைபடத்தில் உள்ள செய்திகளைப் புரிந்து கொள்ளப் பயன்படாது. காரணம் (R): இது பொதுவாக நிலவரைப்படத்தின் அடிப்பகுதியில் இடது அல்லது வலது புற ஓரத்தில் காணப்படும்.
அ) A தவறு R சரி
ஆ) A மற்றும் R இரண்டும் சரி ஆனால் R ஆனது A விற்கு சரியான விளக்கமல்ல
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A மற்றும் R இரண்டும் சரி, R ஆனது A விற்கு சரியான விளக்கம்
விடை:
அ) A தவறு R சரி
IV. சுருக்கமான விடையளி
Question 1.
நிலைவரைபடம் என்றால் என்ன?
விடை:
நிலவரைபடம்:
- நிலவரைபடம் ஒரு புவியிலாளரின் அடிப்படைக் கருவியாகும். இது வரைபடங்கள் வார்த்தைகள் மற்றும் குறியீடுகள் மூலம் புவியின் மேற்பரப்பினைத் தெள்ளத்தெளிவாகவும் திறப்படவும் விளக்குகிறது.
- புவியியல் கற்பித்தலில் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இருப்பிட வழிகாட்டியாகவும் நிலவரைபடங்கள் சொல்லப்படுகின்றன.
Question 2.
நிலவரைப்படத்தின் கூறுகள் யாவை?
விடை:
நிலவரைபடத்தின் கூறுகள்:
தலைப்பு, அளவை, திசை, வலைப்பின்னல் அமைப்பு, கோடுச்சட்டம் நிலவரைபடக் குறிப்பு, முறைக் குறியீடுகள்.
Question 3.
A மற்றும் B ஆகிய இரு நகரத்துக்கு இடையான தூரம் 5கி.மீ. ஆகும். இது நிலவரைப்படத்தில் 5செ.மீ. இடையாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த தூரத்தை கணக்கிட்டு பிரதி பின்ன முறையில் விடை தருக.
விடை:
நிலவரைபடத்தூரம் = 5 செ.மீ.
புவிபரப்பின் தூரம் = 5 கி.மீ.
1cm=1km ஃ 5cm=5km
ஃஎனவே பிரதி பின்ன முறை = RF = 1:100000
Question 4.
நில அளவை செய்யப் பயன்படும் கருவிகளைக் கூறுக
விடை:
சங்கிலி, பட்டகக் காந்தவட்டை, சமதளமேசை, மட்டமானி, அப்ளே மட்டம், சாய்வுமானி, தியோடலைட் மொத்த ஆய்வு நிலையம், உலகலாவிய பயணச் செயற்கைக்கோள் ஒழுங்குமுறை.
Question 5.
தொலை நுண்ணுணர்வு – வரையறு?
விடை:
- தொலை நுண்ணுணர்வு என்பது புவியில் உள்ள பொருட்களை நேரிடையாகத் தொடர்பு கொள்ளாமல் தொலைவிலிருந்து உற்று நோக்கி அவற்றின் தகவல்களைச் சேகரிப்பது ஆகும்.
- தொலை என்பது தூரத்தையும் நுண்ணுணர்தல்’ என்பது தகவல்களைச் சேகரிப்பதையும் குறிக்கும்.
Question 6.
தொலை நுண்ணுணர்வின் கூறுகள் யாவை?
விடை:
தொலை நுண்ணுணர்வின் கூறுகள்
- ஆற்றல் மூலம்
- இலக்கு
- அனுப்பும் வழி
- உணர்விகள்
V. காரணம் கூறுக
Question 1.
நிலவரைபடம் வரைதலில் செயற்கைக்கோள் பதிமங்கள் துணைபுரிகின்றன.
விடை:
ஏனெனில்,
- செயற்கைக் கோள் பதிமங்கள் செயற்கைக் கோள்களின் எண்ணிம தோற்றுரு செய்யப்பட்ட படங்களை (digitally transmitted images) குறிப்பிடுகிறது. புவியின் தன்மைகள், விவரங்கள், மாறுதல்கள் பற்றி அறிய வான்வெளி செயற்கைக் கோளிலிருந்து எடுக்கப்படும் படங்கள்.
- மிகக்குறுகிய காலத்தில் முழுப்பகுதியில் உள்ள அனைத்து தகவல்களையும் சேகரிக்கலாம். எளிதாக பட மேம்பாட்டிற்கான மென்பொருள்களுடன் ஒருங்கிணைக்கப்படலாம். செயற்கைக்கோள் பதிமங்கள் பயன்பாடு 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் நிலவரைபட உருவாக்கத்தை மேலும் ஊக்குவித்தனர்.
Question 2.
புவியியல் வல்லுநர்களின் அடிப்படைக் கருவி நிலவரைப்படம்.
விடை:
ஏனெனில்,
நிலவரைப்படம் வரைபடங்கள், வார்த்தைகள், குறியீடுகள் மூலம் புவியின் மேற்பரப்பினைத் தெள்ளத் தெளிவாகவும், திறம்படவும் விளக்குகிறது. புவியியல் கற்பித்தல் ஒருங்கிணைந்த பகுதியாகவும், இருப்பிட வழிகாட்டியாகவும் நிலவரைப்படங்கள் அமைகின்றன.
Question 3.
நிலவரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட இடங்களைச் சுட்டிக்காட்ட புவி வலைப்பின்னல் அமைப்பு பயன்படுகிறது.
விடை:
ஏனெனில்,
- நிலபரைப்படத்தில் ஓர் இடத்தின் அமைவிடம் அதன் அட்சக்கோடு மற்றும் தீர்க்கக்கோடு மூலம் வரையறுக்கப்படுகிறது. படத்தில் ஒரு கட்டம் என்பது ஓரிடத்தின் அமைவிடத்தைக் காட்ட உதவும் எண்ணெழுத்துக் குறியீடுகள் கொண்ட வரிசைகளின் அமைப்பாகும்.
- படத்தில் இடவலமான கிடைமட்டக் கோடுகள் வடக்கைக் கோடுகள் (Northing) என்றும், மேல்கீழ் செங்குத்துக் கோடுகள் கிழக்கைக் கோடுகள் (Easting) என்றும் அழைக்கப்படுகின்றன. இக்கோடுகள் வெட்டும் புள்ளிகள் இணைப்பாயப் புள்ளிகள் ஆகும்.
- வலைப்பின்னல் (Grid) என்பது தல வரைபடத்தில் பல கோடுகள் இணைந்து ஓர் இடத்தின் அமைவிடத்தைத் துல்லியமாகக் காட்டும் நுட்பம் ஆகும்.
VI. வேறுபடுத்துக
Question 1.
புவிமாதிரி மற்றும் நிலவரைபடம்
விடை:
Question 2.
வான் வழி புகைப்படங்கள் மற்றும் செயற்கைக்கோள் பதிமங்கள் செயற்கைக்கோள் பதிமங்கள்
விடை:
Question 3.
புவியியல் தகவல் அமைப்பு மற்றும் உலக அமைபிட கண்டறியும் தொகுதி
விடை:
VII. விரிவான விடையளிக்கவும்
Question 1.
நிலவரைபடங்களில் அளவை என்பதன் பொருள் என்ன? அதன் வகைகளை விளக்குக.
விடை:
அளவை:
அளவையைக் கொண்டு வரைவதன் மூலம் முழுப் புவியையும் ஒரு காகிதத்தில் காட்ட முடியும். அளவை
என்பது நிலவரைபடத்தில் இரு புள்ளிகளுக்கும் புவிப்பரப்பில் அதே இரு புள்ளிகளுக்கும் இடையிலுள்ள தூரவிகிதம் ஆகும். அளவைகள் மூன்று முறைகளில் நிலவரைபடத்தில் காட்டப்படுகின்றன.
சொல்லளவை முறை:
நிலவரைபடத்திலுள்ள தூரம் மற்றும் புவியின் உண்மையான தூரத்தினை ஒப்பீடு செய்து சொற்களில் குறிப்பிடுவது சொல்லளவை முறையாகும். அதாவது ஒரு சென்டிமீட்டர் பத்து கிலோமீட்டர்க்குச் சமம். இது 1 செ.மீ = 10 கி.மீ என்று குறிக்கப்படுகிறது.
பிரதிபின்ன முறை:
இம்முறையில் நிலவரைபட மற்றும் உண்மையான தூரங்களின் ஒப்பீடு விகிதமாகவோ, பின்னமாகவோ வெளிப்படுத்தப்படும். இது வழக்கமாக R:F என சுருக்கமாகக் கூறப்படுகிறது (R.F. = பிரதிபின்ன முறை).
கோட்டளவை முறை:
நில வரைபடங்களில் ஒரு நீண்ட கோடு பல சம பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் நிலப்பரப்பில் எவ்வளவு தூரத்தைக் காட்டுகிறது என்பதை அறிவதே கோட்டளவை முறையாகும். இந்த முறையின் மூலம் நிலவரைபடத்திலுள்ள தூரத்தினை நேரடியாக அளக்க உதவுகிறது.
Question 2.
திசைகள் – தகுந்த படம் வரைந்து விளக்குக.
விடை:
திசைகள்:
- பொதுவாக நிலவரைப்படங்கள் வடதிசையை அடிப்படையாகக் கொண்டு வரையப்படுகின்றன.
- ஒரு நிலவரைபடத்தில் வடக்குதிதிசை எப்போதும் புவியின் வட துருவத்தை நோக்கியே உள்ளது.
- நாம் வட துருவத்தைப் பார்த்து நின்றால், நமது , வலக்கை கிழக்கு திசையையும், இடக்கை மேற்குத் திசையையும் நமது பின்புறம் தெற்கு திசையையும் காட்டும்.
- இவை அடிப்படை திசைகளாகும். பொதுவாக, நிலவரைபடத்தின் மீது காணப்படும் அம்புமுனை வடக்குத் திசையைக் குறிப்பிடும்.
Question 3.
உலக அமைவிடத் தொகுதியின் (GPS) பயன்களை விவரி.
விடை:
உலக அமைவிட கண்டறியும் தொகதியின் நன்மைகள் (GPS):
- கைப்பேசிகள், கைக்கடிகாரங்கள், புல்டோசர்கள், கப்பல் கொள்கலன்கள் மற்றும் தானியிங்கி பணப்பரிமாற்ற கருவிகள் (ஏ.டி.எம்) என அனைத்திலும் தொழில் நுட்பம் உதவுகிறது.
- உலக அமைவிட கண்டறியும் தொகுதியின் முக்கிய நோக்கம் பயண தகவல்களை தூரம், வழி மற்றம் திசை) மிக துல்லியமாக தருவதே ஆகும். இராணுவ போர்த்தேடல்கள் மற்றம் போர்க்கால மீட்பு நடவடிக்கைகளிலும் உறுதுணையாகத் திகழ்கின்றது. நம்பிக்கையான சுற்றுலா வழிக் காட்டியாகவும் உள்ளது.
- விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகள், நெருக்கடிகாலத் தேவைகளைத் துரிதமாக வழங்குதல் மற்றும் பேரிடல் நிவாரண நடவடிக்கைகளுக்கும் ஜி.பி.எஸ் பெரிதும் உதவுகிறது.
- வானிலை முன்னறிவிப்பு, நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உலக அமைவிட கண்டறியும் தொகுதிகளின் உதவுயுடன் சிறப்பாக செயல்படுகின்றன.
VIII. உயர் சிந்தனை வினாக்கள்
1. செயற்கைக்கோள் இல்லாத உலகத்தை உன்னால் கற்பனை செய்ய இயலுமா? (மாணவர்களுக்கானது)
2. உங்களை நிலவரைபடவியலாளராக (Cartographer) நினைத்துக்கொண்டு உங்கள் பகுதியின் வரைபடத்தை வரைக. (மாணவர்களுக்கானது)
9th Social Science Guide நிலவரைபடத் திறன்கள் Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்க
Question 1.
20ம் நூற்றாண்டில் தலப்பரப்பு அளவிடுதலின் புதிய நிலை
அ) தலப்படங்கள்
ஆ) வானவியல் புகைப்படங்கள்
இ) நிலவரைபடங்கள்
ஈ) செயற்கைக்கோள் பதிமங்கள்
விடை:
ஈ) இயற்கைக்கோள் பதிமங்கள்
Question 2.
மிகப்பறந்த நிலப்பரப்பில் குறைந்த விவரத்தை தரக்கூடிய நிலவரைபடம்.
அ) பெரிய அளவை நிலவரைபடம்
ஆ) கருத்துசார் வரைபடம்
இ) இயற்கை வரைபடம்
ஈ) சிறிய அளவை நிலபரைபடம்
விடை:
ஈ) சிறிய அளவை நிலவரைப்படம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
நிலவரைபடம் என்பது ஒரு …………..
விடை:
இருப்பிட வழிகாப்பு
Question 2.
………….. என்பது உலகிலேயே மிகப்பழைய வரைபடமாகக் கருதப்படுகிறது.
விடை:
பாபிலோனிய நிலவரை
படம்-அமாகோ முண்டி)
Question 3.
தொலை என்பது ………… குறிக்கும்
விடை:
தூரத்தை
Question 4.
நுண்ணுணர்தல் என்பது …………. குறிக்கும்
விடை:
தகவல்களைச்
சேகரிப்பதைக்
Question 5.
GIS என்பது ………
விடை:
புவியியல் தகவல்
அமைப்பு
III. பொருத்துக.
IV. குறுகிய விடையளி.
Question 1.
உலக நிலபரைப்படங்களை உருவாக்கியவர் யாவர்?
விடை:
- ஹெரோடோடஸ்
- அனாக்ஸிமண்டர் பிதாகோரஸ்
- எரடோஸ்தெனிஸ்
- தாலமி
- அல் இட்ரிஸி
Question 2.
முதல் நில வரைபடவியலாளர் யார்? ஏன்?
விடை:
பண்டைய கிரேக்க நாட்டைச் சேர்ந்த அனாக்ஸிமேன்டர் என்பவர் வரைந்த நிலவரைபடமே உலகின் முதல் நிலவரைபடம் ஆகும். இக்காரணத்தால் அவர் முதல் நிலவரைபடவியலாளராகக் கருதப்படுகிறார்.
Question 3.
புவித் தகவல் தொகுதியின் வன்பொருள் மற்றும் மென்பொருள்களின் செயல்பாடுகள் யாவை?
விடை:
புவி தகவல் தொகுதியின் வன்பொருள் மற்றும் மென்பொருளின் செயல்பாடுகள்
- புள்ளி விவர உள்ளீடு மற்றும் சரிபார்த்தல்
- தொகுத்தல்
- சேமித்தல்
- புதுப்பித்தல் மற்றும் மாற்றியமைத்தல்
- மேலாண்மை மற்றும் பரிமாற்றம் செய்தல் கையாளுதல்
- மாற்றியமைத்தல் மற்றம் தகவல் தரல்
- பகுப்பாய்வு மற்றும் சேர்த்தமைத்தல்
Question 4.
புவியைக் குறித்துக்காட்டுவதற்கான முறைகள் யாவை?
விடை:
- சொல்லளவை முறை
- பிரதி பின்ன முறை
- கோட்டளவை முறை
V. வேறுபடுத்துக
Question 1.
பெரிய அளவை நிலவரைபடம் மற்றும் சிறிய அளவை நிலவரைபடம்
விடை:
VI. விரிவான விடையளி
Question 1.
பின்வரும் நிறக் குறியீடுகள் நிலவரைபங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
விடை:
- பழுப்பு : நிலம் அல்லது புவி அம்சங்கள் – சம உயரக் கோடுகள், அரிக்கப்பட்ட பகுதிகள், முக்கிய குன்றுப் பகுதிகள், மணல் பகுதிகள் மற்றும் குன்றுகள், இரண்டாம் நிலை அல்லது சரளை சாலைகள்.
- வெளிர் நீலம் : நீர் நிலைகள் – கால்வாய்கள், கடற்கரைகள், அணைகள், ஏரிகள், சதுப்பு நிலங்கள், வெள்ளக்கரை, குளங்கள், ஆறுகள் நீர்த்தேக்கத் தொட்டிகள்.
- கருநீலம் : தேசிய நீர் வழிகள்.
- பச்சை தாவரங்கள் – பயிரிடப்பட்டவயல்கள், கோல்ஃப்மைதானங்கள், இயற்கை மற்றும் வேட்டையாடுதலுக்கு
ஒதுக்கப்பட்ட எல்லைகள், பழத்தோட்டங்கள் மற்றும் திராட்சை தோட்டங்கள், பொழுதுபோக்கு மைதானங்கள், வனப்பகுதி. - கருப்பு : கட்டுமான இடங்கள் – சாலைகள், தடங்கள், இருப்புப் பாதைகள், கட்டடங்கள், பாலங்கள், கல்லறைகள், தகவல் தொடர்பு கோபுரங்கள், அணைச் சுவர்கள், அகழ்வாய்வுகள் மற்றும் சுரங்க இடிபாடுகள், தொலைபேசி இணைப்புகள், மின் இணைப்புகள், காற்றாலைகள், எல்லைகள்.
- சிவப்பு :கட்டுமான இடங்கள் – தேசிய, கிளை மற்றும் முக்கிய சாலைகள், கலங்கரை விளக்கங்கள் மற்றும்
கடல் விளக்குகள். - இளஞ்சிப்பு : பன்னாட்டு எல்லைகள்.
Question 2.
புவன் (Bhuvan) அறிவியல் அறிஞர்கள் கொள்கை வகுப்பவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மிக அதிக அளவில் பயன்படுகிறது என்பதை நியாயப்படுத்துக.
விடை:
- புவன் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு புவி’ என்று பொருள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தினால் (ISRO) ஆகஸ்டு 12ம் நாள், 2009ஆம் ஆண்டு, இலவச இணைய தளம் கணினி சார்ந்த பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது.
- செயற்கைக்கோள் படங்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் ஏழு செயற்கை கோள்களின் மூலம் கார்ட்டோசாட் I மற்றும் கார்டோசாட் II எடுக்கப்பட்ட படங்களும் இதில் உள்ளடக்கியது.
- உலகின் எந்த ஒரு பகுதி அல்லது ஓர் இடத்தின் பெயர்களையோ அட்ச தீர்க்கப் பரவலைக் கொண்டு ஆராய்ந்து அறியலாம். விஞ்ஞானிகள், அறிஞர்கள், கல்வியாளர்கள் கொள்கை வகுப்பாளர்கள் அல்லது பொது மக்கள் ஆகியோருக்கு புவன் மிகுந்த பயனை அளிக்கிறது.
புவனின் நன்மைகள்:
- தனது முப்பரிமாண அமைவு மூலம் புவன் புவி மெய்யாகவே அண்டவெளியில் சுழல்வதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது.
- மாணவர்கள், அறிவியல் மற்றும் பல்வேறு இடங்களின் வரலாறு போன்ற பலவகையான பாடங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
- இயற்கை வளத் தகவல்களையும் பேரிடர்கள் பற்றிய தகவல்களையும் உரிய நேரத்தில் தெரிவிப்பதில் மிகவும் உறுதுணையாக உள்ளது.
- ஆட்சியாளர் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் உதவுகிறது.
மனவரைபடம்