Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Economics Chapter 3 பணம் மற்றும் கடன் Textbook Questions and Answers, Notes.
TN Board 9th Social Science Solutions Economics Chapter 3 பணம் மற்றும் கடன்
9th Social Science Guide பணம் மற்றும் கடன் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
Question 1.
பண்டைய காலத்தில் பண்டமாற்றத்திற்கு பதிலாக பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்ட உலோகம் ____. (தங்கம் / இரும்பு)
விடை:
தங்கம்
Question 2.
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையிடம் இருக்கும் இடம் _____. (சென்னை / மும்பை)
விடை:
மும்பை
Question 3.
சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை ____ (அமெரிக்க டாலர் / பவுண்டு)
விடை:
அமெரிக்க டாலர்
Question 4.
ஜப்பான் நாட்டின் பணம் _____ என்று அழைக்கப்படுகிறது. (யென்/ யுவான்)
விடை:
யென்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
_____ வணிகத்தின் முதல் வடிவம்.
விடை:
பண்டமாற்றம் செய்யப்பட்ட பொருட்களே
Question 2.
பண விநியோகம் ____ பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
விடை:
நான்கு
Question 3.
இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் அச்சகம் தொடங்கப்பட்ட இடம் _____.
விடை:
நாசிக்
Question 4.
பணப்பரிமாற்றத்தை முறைப்படுத்துகின்ற பொறுப்பு ____ க்கு உள்ளது.
விடை:
இந்திய ரிசர்வ் வங்கி
Question 5.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பணம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை ______
விடை:
பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்
III. பொருத்துக.
IV. குறுகிய வினாக்களுக்கு விடையளி.
Question 1.
பணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?
விடை:
பணம் கண்டுபிடித்தல்
- காலப்போக்கில் பண்டமாற்றம் செய்வதிலும், பண்டமாற்றும் பொருள்களின் அளவு மற்றும் மதிப்பைக் கணக்கிடுவதிலும் பிரச்சனைகள் இருந்தன.
- பிரச்சனைகளுக்கு தீர்வுகாண பண்டங்களை மாற்றிக் கொள்ளப் பொதுவான மதிப்புள்ள ஒரு பொருளை நிர்ணயம் செய்தனர். இது பெரும்பாலும் உலோகமாக இருந்தது. இந்த உலோகங்களே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பணம் ஆகும்.
Question 2.
பண்டைய காலப் பணம் என்பது யாது?
விடை:
பண்டமாற்று முறைக்குப் பதிலாக தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன.
இவை பண்டய காலப் பணம் ஆகும். இவை புராதனப் பணம் என்றும் அழைக்கப்படுகின்றன.
Question 3.
பண்டைய காலத்தில் பண்டமாற்று முறையில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் யாவை?
விடை:
பண்ட மாற்றுப் பொருள்கள்
Question 4.
நறுமணப்பாதை என்றால் என்ன? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
நறுமணப்பாதை :
- தமிழகத்தின் கிழக்குக் கடலில் இருந்து மிளகு, நறுமணப் பொருட்கள், முத்து, ரத்தினங்கள், மாணிக்கம் மற்றும் பருத்தி ஆடைகள் பலநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
- ஏற்றுமதிப் பொருட்களில் மிளகு மற்றும் நறுமணப் பொருட்கள் அதிகம் இடம் பெற்றதால் இந்த வணிகப்பாதை “நறுமணப் பாதை” என்று அழைக்கப்பட்டது.
Question 5.
இயற்கைப் பணம் என்றால் என்ன?
விடை:
இயற்கைப் பணம்.
உலகம் முழுவதும் மதிக்கப்படும் உலோகங்களாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை ஏற்கப்பட்டன. இதனால் இவை நாடுகளுக்கு இடையிலான பண்டமாற்றத்தில் பொது மதிப்பீடாகப் பயன்படுத்தப்பட்டன. இவையே “இயற்கைப் பணம்” ஆகும்.
Question 6.
குறைந்த மதிப்பிலான நாணயங்கள் ஏன் அதிகளவு அச்சடிக்கப்பட்டன?
விடை:
குறைந்த மதிப்பிலான நாணயங்கள் அதிகளவு தயாரிக்கப்பட்டன. ஏனெனில்,
- வணிகத்தின் விரிவாக்கத்திற்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி, இருப்பு இருப்பதில்லை. இவை வரம்புக்குள் தான் இருந்தன.
- சிறிய மதிப்பிலான பொருட்கள் வாங்கவும், விற்கவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் குறைந்த மதிப்பு உலோகங்களின் நாணயங்கள் பயன்பட்டன.
Question 7.
அந்நிய செலாவணி என்றால் என்ன?
விடை:
அந்நியச் செலாவணி.
ஒரு நாட்டில் பயன்படுத்தப்படும் பணம் செலாவணி என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் செலாவணி ‘ரூபாய்’ ஆகும். ஒருநாட்டில் வெளிநாட்டின் செலாவணி “அந்நியச் செலாவணி” ஆகும். உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி அமெரிக்க டாலர் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இம்மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடும்.
V. விரிவான விடையளி
Question 1.
நவீன உலகில் பணப்பரிமாற்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விவரி.
விடை:
நவீன உலகின் (மின்ன்ணு உலகின்)பணப் பரிமாற்றம்.
- சேமிப்பில் உள்ள பணத்தை நேரடியாக வங்கிக்குச் சென்று படிவத்தை நிரப்பி அல்லது காசோலை வழங்கி பெறுவதற்குப்பதிலாக பணம் எடுக்கும் இயந்திரத்தின் மூலம் தேவையான பணத்தை எடுக்க தானியங்கி பணம் வழங்கும் அட்டை பயன்படுகிறது. இதே போல் வங்கிக்குச் செல்லாமல் நமது கணக்கில் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது
- முன்னதாகப் பணம் பெற்று பின்னர் செலுத்தும் வகையில் கடன் அட்டை பயன்படுகிறது.
- பணப்பரிமாற்றம் செய்ய காசோலை அல்லது கேட்பு வரைவோலை பயன்படுத்துவதற்கு மாற்றாக இணையவழி பரிமாற்றங்கள் நடைமுறையில் உள்ளன. உலகின் எந்த மூலையிலிருந்தும் நினைத்த நொடியில் பணப்பரிமாற்றம் செய்யலாம்.
- அலைபேசி மூலம் மின்னணு பரிமாற்றம் செய்யும் தொழில் நுட்பம் பரவலாக பயன்பாட்டில் உள்ளது.
Question 2.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரி.
விடை:
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள்:
இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, 1935 முதல் செயல்படத் தொடங்கியது.1937ல் இருந்து மும்பையில் நிரந்தரமாக இயங்கி வருகிறது. 1949ல் நாட்டுடமையாக்கப்பட்டது.
- இந்தியாவில் அனைத்து வங்கிகளும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன (1969). இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்கு படுத்தும் பணியினை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மேற்கொள்கிறது.
- பணப் பரிமாற்றத்தை பராமரிக்கும் பொறுப்பும் கண்காணிக்கும் கடமையும் அரசுக்கு உண்டு. வங்கிகளில் சேமிக்கப்படும் பணம் தொழில் வளர்ச்சிக்கும் பொருளியல் வளர்ச்சிக்கும் ஏழைகளின் நலனுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
- ஒரு நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையில் முக்கியப் பங்களிப்பான விலைக்கட்டுப்பாட்டை இந்தியாவில் ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது.
- எவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டும், எப்படி பாதுகாப்பாக உரிய இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது. இலங்கை, பூடான், ஈராக், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அச்சடித்து அனுப்பப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் ரூபாய் மற்றும் வங்கிகள் தொடர்பான ஆவணங்கள் அச்சடிக்க அச்சகங்கள் உள்ளன.
- அச்சடிக்கப்பட்ட பணத்தில் 85% புழக்கத்தில் விடப்படுகிறது. ஆகஸ்ட் 2018 நிலவரப்படி இந்தியாவில் ரூபாய் 19 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது.
Question 3.
பணத்தின் செயல்பாடுகளைப் பட்டியலிடுக.
விடை:
பணத்தின் செயல்பாடுகள்:
பண்டமாற்று முறையினால் உருவாகும் சிக்கல்களுக்கு மாற்றாக பணத்தின் வரவு பெரிதும் ஏற்கப்படவேண்டும்.
பணம் – பரிமாற்ற ஊடகம்:
ஒருநாட்டில் அனைத்து நுகர்பொருள்கள் மற்றும் சேவைகளுக்குப் பணம் தடையின்றி ஏற்கப்படவேண்டும்.
பணம் – கணக்கு அலகு:
- ஒரு நாட்டில் அனைத்து நுகர்பொருள்கள், தயாரிப்புகள், சேவைகள் என அனைத்துக்குமான மதிப்பினைக் கணக்கிடுவதில் பணம் பொதுவான, தரப்படுத்தப்பட அலகாக இருக்க வேண்டும்.
- நிதி பரிவர்த்தனைகளை அளவிடவும் கணக்குகளாக பராமரிக்கவும் பணம் பயன்படுகிறது.
பணம் – மதிப்பீட்டினைச் சேமித்தல் மற்றும் மாறுபடும் பண வழங்கீடுக்கான தரப்படுதல்:
பணத்தினைச் சேமிப்பதின் மூலம் எதிர்காலத்துக்கான பொருளை வாங்கும் ஆற்றலைச் சேமிப்பதாகும்.
VI. சரியானக் கூற்றை எழுதுக.
VII. செயல்திட்டம் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)
1. உள்ளூர் அருங்காட்சியகத்திற்குச் சென்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நாணயங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரி
2. நீ வெளிநாட்டிற்குச் சென்று கட்டிடக்கலை வல்லுநருக்கான மேற்படிப்பைப் பயில கல்விக் கடன் பெறும் வகையில் வங்கி மேலாளருக்கு விண்ணப்பம் ஒன்று வரைக
VIII. வாழ்க்கை திறன்
Question 1.
ஒரு 20 ரூபாய் நோட்டை உற்றுநோக்கி, அதில் நீ காண்பவற்றை பட்டியலிடுக.
விடை:
20 ரூபாய் நோட்டு:
- எண்கள் ஒரு பக்கத்தில் மேலும் கீழும் அச்சிடப்பட்டுள்ளது.
- வலது புறம் காந்தி தலை அச்சிடப்பட்டுள்ளது
- RESERVE BANK OF INDIA என்ற வார்த்தை மையத்தில் உள்ளது
- கவர்னரின் உறுதிமொழியுடன் கூடிய கையொப்பம் இடம் பெற்றுள்ளன.
- ₹ என்ற குறியீடு முன்னும் பின்னும் உள்ளது
- அசோகரது நான்முகச்சிங்கம் இடம் பெற்றுள்ளது
- சீர்க்கோடு இடம் பெற்றுள்ளது.
- 15 மொழியில் மதிப்பு எழுதப்பட்டுள்ளது
- இயற்கைக் காட்சி அச்சிடப்பட்டுள்ளது
Question 2.
உன் வீட்டின் ஒரு மாதத்திற்கான வரவு செலவு திட்டத்தை தயார் செய்க.
விடை:
மாத வரவு செலவு:
9th Social Science Guide பணம் மற்றும் கடன் Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்க
Question 1.
_______ சரியான விடையைத் தேர்வு செய்க பன்னாட்டு வணிகத்தின் முதல் வடிவம். (பண்டமாற்று முறை / நாணயங்கள்)
விடை:
பண்டமாற்றுமுறை
Question 2.
ஷெர்ஷா சூரி வெளியிட்ட நாணயத்தின் எடை _____ (178 கிராம் /198 கிராம்)
விடை:
178 கிராம்
Question 3.
ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம் ____ ல் உருவாக்கப்பட்டுள்ளது. (1924 /1934)
விடை:
1934
Question 4.
இந்தியாவின் அனைத்து வங்கிகளும் ____ ல் நாட்டுடைமையாக்கப்பட்டது. (1969/1979)
விடை:
1969
Question 5.
ஆஸ்திரேலிய செவாணியின் பெயர் _____ (ரிங்கிட் / டாலர்)
விடை:
டாலர்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
Question 1.
_____ கிரெடிட் கார்டை உருவாக்கினார்.
விடை:
ஜான் பிக்கின்ஸ்
Question 2.
தங்கம், வெள்ளி ___ என்று அழைக்கப் பட்டன.
விடை:
இயற்கையான பணம்
Question 3.
இந்திய ரிசர்வ் வங்கி ____ முதல் செயல்படத் தொடங்கியது.
விடை:
ஏப்ரல், 1935
Question 4.
______ என்ற இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
விடை:
வித்யா லட்சுமி கல்வி கடன் திட்டம்
Question 5.
கனடா நாட்டு நாணயத்தின் பெயர் ____
விடை:
டாலர்
III. பொருத்துக.
IV. குறுகிய விடையளி.
Question 1.
ரிசர்வ் வங்கி பணம் அச்சடிக்கும் இடங்கள் யாவை?
விடை:
- நாசிக் (மகாராஷ்டிரம்)
- தேவாஸ் (மத்தியப் பிரதேசம்)
- மைசூர் (கர்நாடகம்)
- சல்பானி (மேற்கு வங்காளம்).
Question 2.
எந்த நாட்டுப் பணங்கள் ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன?
விடை:
Question 3.
கடன் கிடைக்கப் பெறும் நிறுவனங்கள் யாவை?
விடை:
- நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள்.
- முறை சாரா நிதி நிறுவனங்கள்
- சுய உதவிக் குழுக்கள் மூலம் பெறப்படும் நுண் கடன்கள்.
Question 4.
சுய உதவிக் குழுக்கள் – விவரி?
விடை:
குறிப்பிட்ட பகுதியில் வாழ்பவர்கள் அல்லது குறிப்பிட்ட தொழிலில் ஈடுபடுபவர்கள் குழுவாக அமைத்து சிறு சேமிப்பில் ஈடுபடுகின்றனர். இவர்கள் சுய உதவிக் குழுக்கள் எனப்படுகின்றனர்.
Question 5.
பண விநியோக முளையைப் பற்றி எழுதுக.
விடை:
பண விநியோகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ப1 = மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் + அனைத்து வணிக கூட்டுறவு வங்கிகளில்
சேமிக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை + ரிசர்வ் வங்கி வைப்புத்தொகை
ப2 = ப1 + அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்குகளில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு வகை.
ப3 = ப1 + அனைத்து வணிக, கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள கால வைப்புத் தொகை
ப4 = ப3 + அஞ்சல் அலுவலகங்களின் மொத்த வைப்புத் தொகை
மனவரைபடம்