Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு Textbook Questions and Answers, Notes.
TN Board 9th Social Science Solutions Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
9th Social Science Guide இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு Text Book Back Questions and Answers
நினைவில் கொள்க
1. பொருளியல் வருவாய் ஈட்டும் துறைகள் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
2. அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு உண்டு.
3. பொதுத் துறைகள் என்பவை அரசு நிர்வாகம் செய்யும் நிறுவனங்களாகும்.
4. ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் குறைந்த கூலியே கொடுக்கப்படுகிறது.
5. இந்தியாவில் மிக அதிகமானோருக்கு வேலை வாய்ப்பை வழங்குவது விவசாயம் ஆகும்.
பகுதி – I புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
Question 1.
பணியிடத்தைக் கணக்கிடுவதற்கு _____ வயது வரையிலான வயதை கணக்கிடலாம்.
அ) 12-60
ஆ) 15-60
இ) 21-65
ஈ) 5-14
விடை:
ஆ) 15-60
Question 2.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளில் எந்த இறங்கு வரிசை சரியானது?
அ) முதன்மை துறை, இரண்டாம் துறை, சார்புத்துறை
ஆ)முதன்மைத் துறை, சார்புத்துறை, இரண்டாம் துறை
இ) சார்புத் துறை, இரண்டாம் துறை, முதன்மைத் துறை
ஈ) இரண்டாம் துறை, சார்புத் துறை, முதன்மைத் துறை
விடை:
ஆ) முதன்மைத் துறை, சார்புத்துறை, இரண்டாம் துறை
Question 3.
பின்வரும் துறைகளில் இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறை எது?
அ) முதன்மைத் துறை
ஆ) இரண்டாம் துறை
இ) சார்புத்துறை
ஈ) பொதுத்துறை
விடை:
அ) முதன்மைத்துறை
Question 4.
பின்வருவனவற்றுள் எது முதன்மைத் துறை சார்ந்ததல்ல?
அ) வேளாண்மை
ஆ) உற்பத்தி
இ) சுரங்கத் தொழில்
ஈ) மீன்பிடித் தொழில்
விடை:
ஆ) உற்பத்தி
Question 5.
பின்வருவனவற்றுள் எது இரண்டாம் துறையை சார்ந்ததல்ல?
அ) கட்டுமானம்
ஆ) உற்பத்தி
இ) சிறு தொழில்
ஈ) காடுகள்
விடை:
ஈ) காடுகள்
Question 6.
மூன்றாம் துறையில் அடங்குவது.
அ) போக்குவரத்து
ஆ) காப்பீடு
இ) வங்கியல்
ஈ) அனைத்தும்
விடை:
ஈ) அனைத்தும்
Question 7.
எந்த துறையில் தொழிலமைப்பு முறை சேர்க்கப்படவில்லை?
அ) முதன்மைத் துறை
ஆ) இரண்டாம் துறை
இ) சார்புத் துறை
ஈ) தனியார் துறை
விடை:
ஈ) தனியார் துறை
Question 8.
பட்டியல் – II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு.
விடை :
ஆ) 4 3 2 1
Question 9.
எந்த டெல்லி சுல்தான் வேலையின்மை பிரச்சனையை தீர்க்க “வேலை வாய்ப்பு அலுவலகத்தை” அமைத்தார்?
அ) முகமது பின் துக்ளக்
ஆ) அலாவுதீன் கில்ஜி
இ) ஃபெரோஷ் ஷா துக்ளக்
ஈ) பால்பன்
விடை:
இ) ஃபெரோஷ் ஷா துக்ளக்
Question 10.
_____ துறை பதிவு செய்யப்பட்டு மற்றும் அரசு விதிகளை பின்பற்றுகிறது.
அ) வேளாண்மை
ஆ) ஒழுங்கமைக்கப்பட்ட
இ) ஒழுங்கமைக்கப்படாத
ஈ) தனியார்
விடை:
ஆ) ஒழுங்கமைக்கப்பட்ட
Question 11.
______ துறை வேலை பாதுகாப்பு மற்றும் அதிக ஊதியம் வழங்குகிறது.
அ) பொதுத் துறை
ஆ) ஒழுங்கமைக்கப்பட்டத் துறை
இ) ஒழுங்கமைக்கப்படாத துறை
ஈ) தனியார் துறை
விடை:
ஆ) ஒழுங்கமைக்கப்பட்டத் துறை
Question 12.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
அ) வங்கியியல
ஆ) ரயில்வே
இ) காப்பீடு
ஈ) சிறு தொழில்
விடை:
ஈ) சிறு தொழில்
Question 13.
பொதுத் துறை மற்றும் தனியார் துறை என்று எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது?
அ) பணியாளர்களின் எண்ணிக்கை
ஆ) இயற்கை வளங்கள்/பொருளாதார செயல்முறை
இ) நிறுவனங்களின் உரிமை
ஈ) வேலைவாய்ப்பின் நிலை
விடை:
அ) பணியாளர்களின் எண்ணிக்கை
Question 14.
கூற்று (A) – ஒழுங்குபடுத்தப்படாத துறையின் பொருளாதார பண்பு என்பது வீட்டினுள் உற்பத்தி நடவடிக்கை மற்றும் சிறுதொழில் செய்வதாகும்.
காரணம் (R) – இங்கு குறைவான ஊதியமும் மற்றும் வேலைகள் முறையாக வழங்கப்படுவதில்லை.
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, கூற்றுக்கான காரணம் சரி
ஆ)கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, கூற்றுக்கான காரணம் தவறு
இ) கூற்று (A) சரி காரணம் (R) தவறு.
ஈ) கூற்று (A) தவறு காரணம் (R) சரி.
விடை:
ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. (R), (A) வை விளக்கவில்லை.
Question 15.
தொழிலாளர்களைப் பணியமர்த்துபவர்களாகவும், அவர்கள் பணிக்கான வெகுமதிகளைச் செலுத்தும் நபர்களாகவும் உள்ளவர்கள்
அ) ஊழியர்
ஆ) முதலாளி
இ) உழைப்பாளி
ஈ) பாதுகாவலர்
விடை:
ஆ) முதலாளி தமிழ்நாட்டில்
Question 16.
துறையில் ____ அதிக நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
அ) வேளாண்மை
ஆ) உற்பத்தி
இ) வங்கியல்
ஈ) சிறுதொழில்
விடை:
அ) வேளாண்மை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
______ துறையில் வேலைவாய்ப்புகள் நிலையான மற்றும் முறையானவை அல்ல.
விடை:
ஒழுங்கமைக்கப்படாத
Question 2.
பொருளாதார நடவடிக்கைகள் _____ மற்றும் _____ துறைகளாக வகைப்படுத்துகின்றன.
விடை:
பொது, தனியார்
Question 3.
______ எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கையில் ஒரு முக்கிய உறுப்பாக இடம் பெற்றுள்ளது.
விடை:
வேலை வாய்ப்பு
Question 4.
வேலைவாய்ப்பு முறை மாற்றத்திற்கான காரணம் _____
விடை:
மக்களின் வாழ்க்கை முறை
Question 5.
இந்தியாவில் வேலைவாய்ப்பின் தன்மை _____
விடை:
பல பரிமாணங்களைக் கொண்டது
Question 6.
_____ -ன் பொருளாதாரம் என்பது நாட்டு மக்களின் எண்ணிக்கை, உழைக்கும் மற்றும் உழைக்கும் திறன் பெற்றவர்களைக் குறிக்கும்.
விடை:
உழைப்போர் குழு
Question 7.
பொதுத்துறை என்பது _____
விடை:
அரசு நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் ஆகும்
III. பொருத்துக
IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி
Question 1.
பொருளாதாரத்தில் தொழிலாளர் சக்தி என்றால் என்ன?
விடை:
தொழிலாளர் சக்தி என்பது நாட்டு மக்களில் வேலையில் இருப்போரும், கூடவே வேலை செய்யும் திறன் பெற்ற நபர்களும் ஆவர்.
Question 2.
குழந்தைகளையும் 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்களையும் ஏன் பணிக் குழுக்களாகக் கருதக்கூடாது?
விடை:
- 15 வயதுக்குக் குறைந்தவர்கள் குழந்தைகளாகக் கருதப்படுகின்றனர்.
- 60 வயதைக் கடந்தவர்கள் உற்பத்தி சார்ந்த வேலையை மேற்கொள்வதற்கு உடல் ரீதியாகத் தகுதியானவர்கள் அல்ல.
Question 3.
பொருளாதாரத்திலுள்ள மூன்று துறைகள் யாவை?
விடை:
(1) முதன்மைத்துறை – விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு
(2) இரண்டாம் துறை – உற்பத்தி, தொழிற்சாலைகள், கட்டுமானம்
(3) சார்புத் துறை – போக்குவரத்து, காப்பீடு, வங்கி
V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி
Question 1.
விவரி
அ) முதன்மைத் துறை
ஆ) இரண்டாம் துறை,
இ) சார்புத் துறை
விடை:
அ) முதன்மைத்துறை:
- விவசாயம், காடுகள், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பால் பண்ணை , மீன் வளர்ப்பு போன்றவை இதில் அடங்கும்.
- இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழுவின் பெரும்பகுதி முதன்மைத் துறையில் ஈடுபட்டுள்ளது.
- முதன்மைத்துறை விவசாயத்துறை என்றும் அழைக்கப்படுகிறது.
ஆ) இரண்டாம் துறை:
- உற்பத்தி, சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள், கட்டுமானம் போன்றவை இதில் அடங்கும்.
- இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழுவின் சிறுபகுதியினரே இரண்டாம் துறைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். வளர்ந்த நாடுகளில் இரண்டாம் துறை ஊழியர்கள் அதிக அளவில் இருப்பர்.
இ) சார்புத்துறை:
- போக்குவரத்து, காப்பீடு, வங்கி, வணிகம், தொலைத் தொடர்பு, வீட்டுமனை விற்பனை அரசு மற்றும் அரசு சாரா சேவைகள் இதில் அடங்கும்.
- இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைவான அளவினரே சார்புத் துறையில் ஈடுபட்டுள்ளனர். வளர்ந்த நாடுகளில் அதிக அளவில் இருப்பர். இத்துறை சேவைத்துறை என்றும் அழைக்கப்படுகிறது.
Question 2.
இந்தியாவில் வேலைவாய்ப்பு அமைப்பைப் பற்றி விளக்குக.
விடை:
- இந்தியாவில் வேலைவாய்ப்பின் தன்மையானது பல பரிமாணங்களைக் கொண்டது. சிலருக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு ஓராண்டில் சில மாதங்களுக்கே வேலை கிடைக்கும்.
- வேலையமைப்பை முதன்மைத்துறை அல்லது விவசாயத் துறை, இரண்டாம் துறை அல்லது தொழில் துறை, மூன்றாம் துறை அல்லது சார்புத்துறை அல்லது சேவைத்துறை என மூன்றாக வகைப்படுத்தலாம்.
முதன்மைத்துறை : விவசாயம், காடுகள், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பால் பண்ணை ,
மீன் வளர்ப்பு போன்றவை
இரண்டாம்துறை : உற்பத்தி, சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள், கட்டுமானம் போன்றவை
சார்புத்துறை : போக்குவரத்து, காப்பீடு, வங்கி, வணிகம், தொலைத் தொடர்பு, வீட்டுமனை விற்பனை, அரசு மற்றும் அரசு சாரா சேவைகள் - 1972-73 ஆண்டுகளில் தொடங்கி கடந்த நான்கு பத்தாண்டுகளில் இந்தியாவில் வேலை வாய்ப்பு வளர்ச்சி சராசரியாக 2% அளவுக்கு உயர்ந்துள்ளது.
Question 3.
ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் நிலவுகின்ற வேலை வாய்ப்பை ஒப்பிடுக
விடை:
Question 4.
பொதுத் துறையையும் தனியார் துறையையும் வேறுபடுத்துக.
விடை:
VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)
1. உங்களை சுற்றி பெரியவர்கள் செய்யும் அனைத்து வகையான வேலைகளையும் நீண்ட பட்டியலிடுக. நீங்கள் அவைகளை எவ்வாறு வகைப்படுத்துவீர்கள்.
2. ஒரு ஆராய்ச்சி அறிஞர் சென்னையிலுள்ள உழைக்கும் மக்களைப் பார்த்து என்னவெல்லாம் கண்டறிந்தார்.
விடை:
Question 3.
பின்வரும் தொழில்களை முதன்மை , இரண்டாம் மற்றும் சார்புத் துறைகளின் கீழ் பட்டியலிடுக.
விடை:
பால் விற்பனையாளர், தையல்காரர், ஆசிரியர், மருத்துவர், விவசாயி, தபால்காரர், பொறியாளர், குயவர், மீனவர், கைவினைஞர்கள், காவலர், வங்கியாளர், ஓட்டுநர், தச்சர்.
VII. சிந்தனை வினா.
Question 1.
தற்போது மூன்றாம் துறை உலகத்தில் முதலிடத்தில் உள்ளது. காரணம் கூறுக.
விடை:
தற்போது மூன்றாம் துறை உலகத்தில் முதலிடத்தில் உள்ளது. ஏனெனில்,
- மூன்றாம் துறையான சார்புத்துறை சேவைத்துறை பொதுமக்களுக்கும், வணிகத்துறைக்கும் சேவைகளை வழங்குகிறது.
- காப்பீடு, வங்கித்துறை, உடல்நலம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சில்லரை மற்றும் மொத்த வியாபாரம், கேளிக்கை ஆகியவை இத்துறையைச் சார்ந்தவை.
- நம்நாட்டில் சேவைத்துறையில் கவர்ந்திழுக்கும் வகையில் வேலை வாய்ப்பு விரிவாக்கம் உள்ளது.
- பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் அதிக சதவிகித தொழிலாளர்கள் சார்புத் துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் 80 சதவிகித மக்கள் சார்புத்துறை தொழிலாளர்கள்.
VIII. வாழ்வியல் திறன் (மாணவர்கள் செய்ய வேண்டியது)
1. உங்களுடைய கிராம பொருளாதாரத்தைப் பற்றி விவாதிக்கவும்.
9th Social Science Guide இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு Additional Important Questions and Answers
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
1972-73 ஆம் ஆண்டு தொடங்கி நான்கு பத்தாண்டுகளுக்கு இந்தியாவின் வேலைவாய்ப்பு வளர்ச்சி வீதம் சராசரியாக ____ பெருகி உள்ளது.
விடை:
2 %
Question 2.
அரசு நிறுவனம் செய்யும் நிறுவனங்கள் ____ துறைகள் எனப்படுகின்றன.
விடை:
பொது
II. சுருக்கமான விடை தருக
Question 1.
மக்களின் அடிப்படைத் தேவைகள் யாவை?
விடை:
- உணவு
- உடை
- இருப்பிடம்
- வேலை வாய்ப்பு
Question 2.
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பின் போக்கு பற்றி குறிப்பு வரைக.
விடை:
- நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும் தமிழகத்தில் விவசாயமே அதிகம் பேருக்கு வேலையளித்துக் கொண்டிருக்கிறது.
- இதற்குக் காரணம் விவசாயமல்லாத துறைகள் மக்களுக்குப் போதுமான அளவு வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை.
- தமிழ்நாட்டின் வேலை வாய்ப்பு வளர்ச்சியின் பெரும்பகுதி, குறைந்த வருமானங்களை அளிக்கின்ற முறை சாரா துறைகளின் பங்களிப்பாகவே உள்ளது.
Question 3.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடுமையான சரிவு ஏற்பட்டாலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து விவசாயத்தில் அதிகமாக ஈடுபடுவதன் காரணத்தைக் கூறுக?
விடை:
தமிழ்நாட்டில் விவசாயமல்லாத துறைகள், உழைப்பாளர்கள் குழு தொழில்களை மாற்றிக் கொள்வதற்குப் போதுமான அளவு வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. எனவே தொடர்ந்து விவசாயத்தில் அதிகமானோர் ஈடுபடுகின்றனர்.
மனவரைபடம்