Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Economics Chapter 1 மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Economics Chapter 1 மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை

9th Social Science Guide மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை Text Book Back Questions and Answers

நினைவில் கொள்க

1. மேம்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது ஒரு குறிப்பிட்ட நபரின் வளர்ச்சியைக் குறிக்கிறது.
2. நிகர நாட்டு உற்பத்தி என்பது பொருளாதாரத்தின் முதன்மையான குறியீடு ஆகும்.
3. சராசரி வருவாயை தலா வருமானம் என்றும் அழைக்கிறோம்.
4. 1972 ஆம் ஆண்டு வன விலங்கு பாதுகாப்பு சட்டம் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது.
5. அனல்மின் நிலையம் அதிக அளவு கார்பன் – டை- ஆக்சைடை வெளியேற்றுகிறது.

பகுதி – 1 புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
கூற்று (A) : மேம்பாடு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது. காரணம் (R) : மக்கள் அதிக வருவாய், சிறந்த கல்வி, உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைந்த வறுமை பெறுவார்கள்.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
இ (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

Question 2.
மனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது.
அ) ஏழை மக்கள் மீதான முதலீடு
ஆ) வேளாண்மை மீதான செலவு
இ) சொத்துக்கள் மீதான முதலீடு
ஈ) ஒட்டு மொத்த மக்களின் திறமை
விடை:
ஈ) ஒட்டு மொத்த மக்களின் திறமை

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 3.
நாடுகளுக்கு இடையேயான மேம்பாட்டை ஒப்பிட அவர்களின் மிக முக்கிய பண்புகளில் ஒன்றாக கருதப்படுவது.
அ) வளர்ச்சி
ஆ) வருமானம்
இ செலவீனம்
ஈ) சேமிப்புகள்
விடை:
ஆ) வருமானம்

Question 4.
தேசிய வருமானத்தின் உண்மை மதிப்பீடாக இவை கருதப்படுகிறது.
அ) மொத்த நிகர உற்பத்தி
ஆ) மொத்த உள்நாட்டு உற்பத்தி
இ) நிகர தேசிய உற்பத்தி
ஈ) நிகர உள்நாட்டு உற்பத்தி
விடை:
இ) நிகர தேசிய உற்பத்தி

Question 5.
……….. வருவாயை தலா வருமானம் என்றும் அழைக்கிறோம்.
அ) சராசரி
ஆ) மொத்த
இ மக்கள்
ஈ) மாத
விடை:
அ) சராசரி

Question 6.
ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று
அ) ஜப்பான்
ஆ) கனடா
இ ரஷ்யா
ஈ) இந்தியா
விடை:
ஈ) இந்தியா

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 7.
சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று
அ) இந்தியா
ஆ) பாகிஸ்தான்
இ சீனா
ஈ) பூடான்
விடை:
இ) சீனா

Question 8.
கூற்று (A) : நிகர தேசிய உற்பத்தி என்பது தேசிய உற்பத்தி அளவின் உண்மை மதிப்பீடாக கருதப்படுகிறது.
காரணம் (R) : இது தேசிய வருமானம் என்று அழைக்கப்படுகிறது.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
இ (A) சரியானது மற்றும் (R) தவறானது. R) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

Question 9.
கூற்று (A) : எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் மனித வளம் அத்தியாவசியமாக இருக்கிறது.
காரணம் (R) : கல்வி மற்றும் மக்கள் நலத்தில் முதலீடு செய்வதன் விளைவாக அவர்களின் எதிர்காலத்தில் அதிக அளவு பலன் கிடைக்கும்.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

Question 10.
மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) கணக்கில் பின்வரும் எந்தப் பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை?
அ) பாலினம்
ஆ) உடல்நலம்
இ) கல்வி
ஈ) வருமானம்
விடை:
அ) பாலினம்

Question 11.
பின்வரும் எம்மாநிலத்தின் கல்வியறிவு தேசிய கல்வியறிவு விகிதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது?
அ) ஆந்திரப்பிரதேசம்
ஆ) உத்திரப்பிரதேசம்
இ தமிழ்நாடு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) தமிழ்நாடு

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 12.
பாலின விகிதம் என்பது
அ) வயதான ஆண் மற்றும் வயதான பெண் விகிதம்
ஆ) ஆண்கள் மற்றும் பெண்கள் விகிதம்
இ ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவும் சமூக தொடர்பு
ஈ) ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம்
விடை:
ஈ) ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம்

Question 13.
பரம்பரை ரீதியான சமத்துவம் எந்த நடைமுறையில் உறுதி செய்யப்படுகிறது?
அ) தொழிற்சாலை
ஆ) பொருளாதார மேம்பாடு
இ) நிலையான மேம்பாடு
ஈ) பொருளாதார வளர்ச்சி
விடை:
இ) நிலையான மேம்பாடு

Question 14.
பொருந்தாத ஒன்றை கண்டறி.
அ) சூரிய ஆற்றல்
ஆ) காற்று ஆற்றல் இகாகிதம்
ஈ) இயற்கை வாயு
விடை:
இ) காகிதம்

Question 15.
இந்தியாவில் அதிகபட்ச சூரிய ஆற்றல் உற்பத்தியைச் செய்யும் மாநிலம்
அ) தமிழ்நாடு
ஆ) மேற்கு வங்காளம்
இ கேரளா
ஈ) ஆந்திரப் பிரதேசம்
விடை:
அ) தமிழ்நாடு

Question 16.
பல ஆண்டுகளின் உபயோகத்திற்குப் பிறகு தீர்ந்து போகும் வளம்
அ) இயற்கை
ஆ) புதுப்பிக்க இ யலும் வளம்
இ) புதுப்பிக்க இயலாத வளம்
ஈ) புதியவை
விடை:
இ) புதுப்பிக்க இயலாத வளம்

Question 17.
அனல் மின் நிலையம் அதிக அளவிலான ………….. வெளியிடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
அ) ஆக்சிஜன்
ஆ) நைட்ரஜன்
இ கார்பன்
ஈ) கார்பன்-டை-ஆக்சைடு
விடை:
ஈ) கார்பன்-டை-ஆக்சைடு

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
எந்த ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு ……….. என்று அறியப்படும்.
விடை:
பொருளாதார மேம்பாடு

Question 2.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம் ……………
விடை:
புது டெல்லியில் சாஸ்திரி பவன்

Question 3.
இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம் ……….
விடை:
கேரளா

Question 4.
உலகளவில் மனிதவள மேம்பாட்டு அறிக்கையைத் தயாரித்து வெளியிடுகின்ற நிறுவனம் ………….
விடை:
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்

Question 5.
நிலத்தடி நீர் என்பது ………. வளங்களின் ஓர் எடுத்துக்காட்டாகும்
விடை:
புதுப்பிக்கத் தகுந்த

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 6.
An Uncertain Glory என்ற புத்தகத்தை எழுதியவர் ………….
விடை:
அமர்த்தியா சென்

III. பொருத்துக
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 மேம்பாட்டை அறிவோம் தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை 30

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி

Question 1.
மேம்பாடு என்பதற்கு நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள்?
விடை:
“மேம்பாடு” என்பது ஒரு குறிப்பிட்டத் துறையின் அல்லது குறிப்பிட்ட நபரின் மேம்பாட்டைக் குறிக்கிறது.

Question 2.
பொருளாதார மேம்பாட்டின் குறியீடுகள் என்ன?
விடை:

  • நிகர நாட்டு உற்பத்தி
  • தனி நபர் வருமானம்
  • வாங்கும் திறன் சமநிலை
  • மனிதவள மேம்பாட்டுக் குறியீடு

Question 3.
ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பிற நாடுகளுடன் ஒப்பிடுவதற்கு நிகர நாட்டு உற்பத்தி பயனுள்ள அளவீடாகக் கருதப்படாதது ஏன்?
விடை:

  • நாடுகளின் வளர்ச்சியினை ஒப்பிட மொத்த வருவாயைக் (நிகர நாட்டு உற்பத்தி கணக்கிடுவது ஒரு பயனுள்ள நடவடிக்கையாக இருக்க முடியாது. ஏனெனில்,
  • ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு இன மக்கள் வாழ்கிறார்கள். நாட்டின் மொத்த வருவாயை ஒப்பிட்டு சராசரி தனிநபர் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் சொல்ல முடியாது.
  • ஒவ்வொரு நாட்டிலுள்ள மக்களைவிட வேறொரு நாட்டில் உள்ள மக்களிடையே நல்ல வருமானம் உள்ளது.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 4.
எந்த ஒரு நாட்டினுடைய முதன்மை வளமாக மனிதவளம் கருதப்படுவது ஏன்?
விடை:

  • எந்த ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் மனிதவளம் அவசியமாகும். மனித வளத்தில் கல்வி மற்றும் உடல் நலத்தில் செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் உயர்ந்த வருமானத்தை அளிக்கலாம்.
  • உதாரணமாக ஒரு குழந்தையின் கல்விக்கு அளிக்கப்படும் முதலீடு, உற்பத்தியின் மூலம் சமூகத்திற்குப் பெரும் பங்களிப்பைத் தந்து அதிக வருமானம் அளிக்க முடியும்.

Question 5.
பின்வருவனவற்றை விரிவாக்கம் செய்க.
1. PPP
2. HDI
விடை:
1. PPP = Purchasing Power Parity (வாங்கும் திறன் சமநிலை )
2. HDI = Human Development Index (மனித மேம்பாட்டு குறியீட்டெண்)

Question 6.
பின்வருவனவற்றை விரிவாக்கம் செய்க.
விடை:
1. NNP
2. PCI
1. NNP = Net National Product (நிகர நாட்டு உற்பத்தி)
2. PCI = Per Capita Income (Goon (ULDITOOTLD)

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 7.
சூரிய சக்தி என்றால் என்ன?
விடை:
சூரிய சக்தி என்பது சூரிய ஒளி மூலம் மின்சக்தியை நேரடியாக சூரிய ஒளியின் மின்னழுத்த செல்கள் மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்துவதாகும்.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
நிலையான மேம்பாட்டிற்கான கொள்கைகளைப் பற்றி விவரி.
விடை:

  • தற்போதுள்ள சுற்றுச்சூழலை சேதப்படுத்தாமல், எதிர்கால சந்ததியினரின் தேவைகளுக்காக எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் மேம்பாடு அடைதலே நிலையான பொருளாதார மேம்பாடு ஆகும். நிலையான மேம்பாட்டை அடைய பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் தன்மையை சமநிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • இந்தியாவின் மின்தேவைக்கான அனல் மற்றும் புனல் மின் உற்பத்தி நிலையங்களும் பாதகமான சுற்றுச் சூழல் தாக்கத்தைக் கொண்டுள்ளன. எனவே மரபு சாரா வளங்களைப் பயன்படுத்துதல் நிலையான மேம்பாட்டிற்கு மிகவும் அத்தியாவசியம்.
  • சூரிய ஒளி மூலம் மின் சக்தியை நேரடியாக சூரிய ஒளியின் மின்னழுத்த செயல்கள் மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்துவது சூரிய சக்தி ஆகும். தமிழ் நாடு அதிக அளவில் சூரிய மின்தகடு அமைப்பு கொண்ட மாநிலம் ஆகும்.

Question 2.
இந்தியாவின் சுற்றுச்சூழல் கொள்கைகளைப் பற்றி விளக்கமாக விவரிக்கவும்.
விடை:

  • காற்று, நீர் மாசுபாடு, கழிவு மேலாண்மை, பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சிக்கல்களைப் பாதுகாக்கும் விதமாக கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா தன் சுற்றுச் சூழல் கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு உள்ளது.
  • நிலையற்ற காலநிலை, குறைந்த வளங்கள் போன்றவற்றை எதிர்கொண்டு, அணுகு முறைகளில் மாற்றம் கண்டு இந்தியா தனது பாதையில் சவால்களைச் சந்தித்து நிலையான மேம்பாட்டை அடைந்துள்ளது.
  • இந்தியாவின் உச்சநீதி மன்றம் தனது தீர்ப்புகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் அதிகாரங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி, நடைமுறைப் படுத்த உத்தரவிட்டுள்ளது.
  • மக்களுக்கு அதிக வருமானம், திறன் மிக்க கல்வி, சிறந்த சுகாதாரம், ஊட்டச்சத்து உணவு, வறுமையற்ற நிலை சமவாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குவதே இந்தியாவின் சுற்றுச்சூழல் கொள்கைகள் ஆகும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 3.
புதுப்பிக்க தக்க வளங்கள் மற்றும் புதுப்பிக்க தகாத வளங்கள் – வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 மேம்பாட்டை அறிவோம் தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை 50

Question 4.
ஏதேனும் ஐந்து சுற்றுச்சூழுல் சட்டங்களையும் அவற்றின் செயல்களையும் விவரி.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 மேம்பாட்டை அறிவோம் தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை 68

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்கள் செய்ய வேண்டியது)

1. உலகெங்கும் காணப்படும் குப்பை மற்றும் கழிவுகளின் பிரச்சனைகளை கண்டறிந்து பல்வேறு வழிமுறைகளை பட்டியலிடுக.

VII. சிந்தனை வினா

Question 1.
உனது பகுதியில் நீங்கள் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றி விவரி.
விடை:

  • குப்பைகளை சேமித்து வைக்கும் தொட்டிகளை நாள்தோறும் சுத்தம் செய்யவில்லை என்றால் நோய் பரவுகிறது.
  • வீட்டிற்கு அருகில் உள்ள நீரோடைகளில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் நீரை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. > அதிகப்படியான தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
  • சாக்கடை மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது.

VIII. வாழ்வியல் திறன்

Question 1.
தனிநபர் வருமானத்தை எவ்வாறு கணக்கிடுவாய்?
விடை:
நாட்டின் மொத்த வருமானத்தை நாட்டின் மொத்த மக்கள் தொகையால் வகுக்க வேண்டும். இதுவே தலா வருமானம் எனப்படும்.
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 மேம்பாட்டை அறிவோம் தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை 70

9th Social Science Guide மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை Additional Important Questions and Answers

Question 1.
சுருக்கமான விடை தருக. பொருளாதார மேம்பாடு என்றால் என்ன?
விடை:

  • பொருளாதார மேம்பாடு என்பது பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், புதிய தொழில் நுட்பங்களையும் ஏற்றுக் கொள்வதாகும்.
  • பொருளாதார மேம்பாடு என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் நிலையான வளர்ச்சியையும் குறிக்கிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 2.
இந்தியாவில் சூரிய சக்தி பயன்பாடு பற்றி கூறுக.
விடை:

  • சூரியசக்தி என்பது சூரிய ஒளி மூலம் மின்சக்தியை நேரடியாக சூரிய ஒளியின் மின்னழுத்த செல்கள் மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்துவதாகும்.
  • இந்த சூரிய மின் ஆற்றல் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் மின் செலவைக் குறைக்க உதவுகிறது.
  • இந்தியாவில் சூரிய சக்தியை அதிக அளவில் பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். பெற்ற மின்திறன் 1697 மெகாவாட் ஆகும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 மேம்பாட்டை அறிவோம் தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை 80
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 மேம்பாட்டை அறிவோம் தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை 81