Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

9th Social Science Guide தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் Text Book Back Questions and Answers

நினைவில் கொள்க

1. இந்திய தேர்தல் முறை இங்கிலாந்தில் பின்பற்றப்படும் தேர்தல் முறையினைப் பின்பற்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2. இந்தியத் தேர்தல் ஆணையம் நியாயமான பாரபட்சமற்ற தேர்தலை நடத்துகிறது.
3. இந்தியத் தேர்தல் ஆணையம் புது டெல்லியில் அமைந்துள்ளது.
4. மாநில தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்பவர் தலைமைத் தேர்தல் அதிகாரி.
5. வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுவது ஜனவரி, 25

பகுதி – 1 புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
கீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஆ) இங்கிலாந்து
இ) கனடா
ஈ) ரஷ்யா
விடை:
ஆ) இங்கிலாந்து

Question 2.
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு
அ) சுதந்திரமான அமைப்பு
ஆ) சட்டபூர்வ அமைப்பு
இ) தனியார் அமைப்பு
ஈ) பொது நிறுவனம்
விடை:
அ) சுதந்திரமான அமைப்பு

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 3.
இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு
அ) பிரிவு 280
ஆ) பிரிவு 315
இ) பிரிவு 324
ஈ) பிரிவு 325
விடை:
இ) பிரிவு 324

Question 4.
இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றி கூறுகிறது?
அ) பகுதி III
ஆ) பகுதி XV
இ) பகுதி XX
ஈ) பகுதி XXII
விடை:
ஆ) பகுதி XV

Question 5.
பல்வேறு அரசியல் கட்சிகளைத் தேசியக் கட்சியாகவோ அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிப்பவர் /அங்கீகரிப்பது.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) தேர்தல் ஆணையம்
இ) நாடாளுமன்றம்
ஈ) தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர்
விடை:
ஆ) தேர்தல் ஆணையம்

Question 6.
கூற்று (A) : இந்திய அரசியலமைப்புச் சுதந்திரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு வழிவகைச் செய்கிறது.
காரணம் (R) : இது நாட்டின் சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 7.
நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 2012
ஆ) 2013
இ) 2014
ஈ) 2015
விடை:
இ) 2014

Question 8.
அழுத்தக்குழுக்கள் எனும் சொல்லினை உருவாக்கிய நாடு
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஆ) இங்கிலாந்து
இ) முன்னாள் சோவியத் யூனியன்
ஈ) இந்தியா
விடை:
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

Question 9.
கூற்று (A) : இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அழுத்தக்குழுக்கள் காணப்படுகின்றன. காரணம் (R) : அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதை போல இந்தியாவில் அழுத்தக் குழுக்கள் வளர்ச்சியடையவில்லை.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை:
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்திய தேர்தல் ஆணையம் …………….. உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது.
விடை:
மூன்று

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 2.
தேசிய வாக்காளர்கள் தினம் அனுசரிக்கப்படும் நாள் ……….
விடை:
ஜனவரி 25

Question 3.
இந்தியாவில் ……………… கட்சி முறை பின்பற்றப்படுகிறது.
விடை:
பல

Question 4.
2017ல் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளின் எண்ணிக்கை …..
விடை:
7

Question 5.
நர்மதா பச்சோவோ அந்தோலன் என்பது ஒரு …….
விடை:
அழுத்தக்குழு

III. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் 58

IV. பின்வரும் வினாக்களுக்கு குறுகிய விடையளி

Question 1.
இந்தியாவிலுள்ள தேர்தல் முறைப் பற்றி விவரி.
விடை:

  • நாட்டின் சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்திட தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையமானது ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களை உள்ளடக்கியுள்ளது.
  • பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் போன்ற அனைத்து விவகாரங்களைப் பெறுவதற்கான சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றலாம்.
  • மாநில சட்டசபைத் தேர்தல் சம்மந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் போன்றவற்றை அரசியலமைப்பிற்குட்பட்டு தேவையான மாற்றங்களை மாநில சட்ட சபை சட்டங்களை இயற்றலாம்.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 2.
அரசியல் கட்சி என்பதன் பொருளை விளக்குக.
விடை:
ஓர் அரசியல் கட்சி என்பது அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காகத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிகழ்ச்சி நிரல்களையும், குறிப்பிட்ட கொள்கைகளையும் கொண்ட, மக்கள் குழுவின் அமைப்பாகக் காணப்படும்.

Question 3.
இரு கட்சி ஆட்சிமுறை மற்றும் பல கட்சி ஆட்சிமுறையினை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் 66

Question 4.
அழுத்தக் குழுக்கள் என்றால் என்ன?
விடை:
பொது நலன்களைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் தீவிரமாக செயல்படும் குழு அழுத்தக்குழு என்று அழைக்கப்படுகிறது.

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
நேரடித் தேர்தலின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி
விடை:
நிறைகள் :

  • வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதால், நேரடித் தேர்தல் முறையானது வலுவான மக்களாட்சி கொண்டதாகக் கருதப்படுகிறது.
  • அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வும், தகுதியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் மக்களுக்குக் கற்பிக்கிறது. மேலும் மக்கள் அரசியலில் முக்கிய பங்கு வகிக்க ஊக்கமளிக்கிறது

குறைகள் :

  • நேரடித் தேர்தல் முறை அதிக செலவு கொண்டதாக உள்ளது.
  • எழுத்தறிவற்ற வாக்காளர்கள், சாதி, மதம் மற்றும் பிற பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் பிரச்சாரங்கள் மற்றும் பொய்யானப் பரப்புரைகளால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.
  • சில அரசியல் கட்சி வேட்பாளர்கள், வாக்காளர்கள் மீது பணம், பொருள் (அ) பணிகள் மூலமாக தங்களது செல்வாக்கைச் செலுத்துவது என்பது மற்றொரு சவாலாகும்.
  • தேர்தல் பரப்புரைகளின் போது சில நேரங்களில் வன்முறைகள், பதற்றங்கள், சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 2.
அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் யாவை?
விடை:

  • கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடுகின்றன. கட்சிகள் தங்களைத் தேர்ந்தெடுக்க அவர்களது கொள்கைகளையும், திட்டங்களையும் தேர்தல் தொகுதிகளில் முன்னிறுத்துகின்றனர்.
  • நாட்டில் சட்டங்கள் இயற்றுவதில் அரசியல் கட்சிகள் முக்கிய பங்களிப்புச்செய்கின்றன. நாடாளுமன்றங்களிலும்,
    சட்டமன்றங்களிலும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.
  • அரசியல் கட்சிகள் அரசாங்கத்தினை அமைத்து, அவற்றை வழிநடத்துகின்றன.
  • தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகள் எதிர்கட்சியாக அரசின் குறைகள் மற்றும் தவறான கொள்கைகளை எதிர்த்து பல்வேறுபட்ட பார்வைகளை முன்வைக்கின்றன, விமர்சனம் செய்கின்றன. மக்கள் கருத்திற்கு அரசியல் கட்சிகள் வடிவம் கொடுக்கின்றன. அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன.

Question 3.
இந்தியாவில் அழுத்தக் குழுக்களின் செயல்பாடுகள் யாவை?
Answer:
பிரதிநிதித்துவப்படுத்துதல், அரசியல் பங்கேற்பு, கல்வி, கொள்கை உருவாக்கம் மற்றும் கொள்கை அமலாக்கம் போன்ற பல செயல்பாடுகளை அழுத்தக் குழுக்கள் மேற்கொள்கின்றன.

அரசியல் பங்கேற்பு :
மனுக்கள், பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்ற அரசியல் செயல்பாடுகள் மூலம் மக்கள் ஆதரவைத்
திரட்டி தங்கள் செல்வாக்கினை அழுத்தக் குழுக்கள் விரிவுபடுத்துகின்றன.

கல்வி :
பல அழுத்தக் குழுக்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது, இணையத்தளம் பராமரிப்பு, அரசுக் கொள்கைகள் மீது கருத்துகள் வெளியிடுவது மற்றும் உயர்நிலைக் கல்வியாளர்கள், அறிவியலாளர்கள் மட்டுமல்லாமல் முக்கிய பிரபலங்களிடமிருந்தும் கருத்துகளைத் திரட்டி வல்லுநர்களின் ஆதரவினைப் பெறுவது ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன.

கொள்கை உருவாக்கம் :
அரசுக்குத் தகவல் அளிப்பதிலும், ஆலோசனைகளை வழங்குவதிலும் இந்த அழுத்தக் குழுவினர் வலுவான பங்களிப்புச் செய்து வருகின்றனர். கொள்கை உருவாக்கச் செயல்முறைகளில் அவர்கள் தொடர்ந்து ஆலோசனை தருகின்றனர்.

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. தேசியக் கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சாதனைகளை ஒப்பிடுக.

VII. சிந்தனை வினா

Question 1.
தேர்தல்கள் பிரதிநிதித்துவ மக்களாட்சியில் முக்கியத்துவமாகக் கருதப்படுகின்றது.ஏன்?
விடை:

  • மக்களாட்சி என்பதற்கு ‘நாட்டு மக்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் உள்ளது’ என்பது பொருளாகும்.
  • மக்களாட்சி முறையில் மக்கள் தங்களை ஆட்சி செய்பவர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
  • தேர்தல் என்பது ஆட்சியிலிருப்பவர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் முறை ஆகும். இதில் மக்களே அதிகாரம் படைத்தவர்களாக
  • இருக்கின்றனர். மக்கள் நேரடித் தேர்தல் மூலமாகவோ அல்லது மறைமுகத் தேர்தல் மூலமாகவோ தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • மக்களாட்சியின் வெற்றி என்பது ஒரு நாட்டில் குறிப்பிட்ட இடைவேளைக்குப் பிறகு நடத்தப்படும் தேர்தலைப் பொறுத்து அமைந்துள்ளது.
  • தேர்தல் மூலமாகவே அரசின் செயல்பாடுகள் பற்றிய தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். எனவே மக்களாட்சியில் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 2.
வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் முக்கியத்துவம் என்ன?
விடை:

  • ஜனநாயக நாடுகளில் வயது வந்தோர் வாக்குரிமை முறை நடைமுறையில் உள்ளது.
  • இந்தியாவில் பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.
  • சாதி, சமயம், இனம், பால், கல்வித்தகுதி என எவ்விதப் பாரபட்சமும் இன்றி சமமான வாக்குரிமையைப் பெற்றுள்ளனர்.
  • குடிமக்கள் அனைவருக்கும் நிர்வாகத்தில் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே வயது
    வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

Question 3.
மக்களாட்சியின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி.
விடை:
நிறைகள் :

  • பொறுப்பும், பதிலளிக்கும் கடமையும் கொண்ட அரசாங்கங்கள்.
  • சமத்துவம் சகோதரத்துவம்.
  • மக்களிடையே பொறுப்புணர்ச்சி.
  • தலசுய ஆட்சி.
  • அனைவருக்கும் வளர்ச்சியும் வளமும்.
  • மக்கள் இறையாண்மை.
  • சகோதர மனப்பான்மை மற்றும் கூட்டுறவு.

குறைகள் :

  • மறைமுக அல்லது பிரதிநிதித்துவ முறை கொண்ட மக்களாட்சி.
  • வாக்காளர்களிடையே போதிய ஆர்வமின்மை.
  • குறைந்த வாக்குப்பதிவு.
  • சில சமயங்களில் நிலையற்ற அரசாங்கத்திற்கு வழி வகுக்கிறது.
  • மக்களாட்சியில் கையூட்டுகளையும் அதிகாரிகளின் சட்ட மீறல்களையும் தடுக்க முடிவதில்லை.
  • முடிவெடுக்கும் முறையில் காலதாமதம்.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 4.
பல கட்சி ஆட்சி முறையினை விவாதி.
விடை:

  • இரண்டிற்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறுவது பலகட்சி முறை ஆகும். இந்தியா, இலங்கை, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பல கட்சி முறை உள்ளது.
  • இந்தியா போன்ற பெரியநாடுகளில் பல இன, மத, மொழி மக்கள் இருப்பதனால் பல கட்சிகள் தோன்ற வழி வகுக்கிறது.
  • பல கட்சிகள் இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் ஆட்சியைப் பிடிக்கும் ஆர்வத்தில் நல்ல திட்டங்களை சிந்தித்து செயல்படுத்த முடியும்.
  • இரண்டு கட்சிகளில் உள்ள தலைவர்களை மட்டுமே நம்பியிராமல், புதிய கருத்துக்களையும், புதிய கோணத்தில் பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தியுள்ள புதிய தலைவர்களையும் தேர்வு செய்ய முடியும். ஆயினும் பல கட்சி முறையில் ஊழல், பிராந்திய உணர்வு
  • ஆகியவை ஊக்கப்படுத்தப்படும். ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தாவுகின்ற கட்சித்தாவல் மூலம் அரசின் நிலைத்தன்மைக்கு ஊறு ஏற்படும்.

VIII. வாழ்வியல் திறன் (மாணவர்களுக்கானது)

1. உங்களுடைய வகுப்பறையில் மாதிரி வாக்குப் பதிவை நடத்துக.

9th Social Science Guide தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
எதிர் கட்சித் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள தகுதி
அ) ஆளுநர்
ஆ) கேபினட் அமைச்சர்
இ சபா நாயகர்
ஈ) தலைமை நீதிபதி
விடை:
ஆ) கேபினட் அமைச்சர்

Question 2.
தமிழ்நாட்டில் குட வோலை முறை …………. காலத்தில் இருந்தது.
அ) சேரர்கள்
ஆ) சோழர்கள்
இ) பாண்டியர்கள்
ஈ) களப்பிரர்கள்
விடை:
ஆ) சோழர்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 3.
தேசிய அளவில் அரசாங்கத்தின் தலைவர்
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ குடியரசு துணைத் தலைவர்
ஈ) சபா நாயகர்
விடை:
அ) பிரதமர்

Question 4.
பின்வருவனவற்றுள் எந்த நாட்டில் பல கட்சி ஆட்சிமுறை நடைபெற வில்லை
அ) இந்தியா
ஆ) இலங்கை
இ இத்தாலி
ஈ) சீனா
விடை:
சீனா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பிரதமர் ……….. உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.
விடை:
லோக்சபா

Question 2.
VVPTA முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ………
விடை:
2014

Question 3.
அழுத்தக் குழுக்கள் ………. என்றும் அழைக்கப்படுகின்றன.
விடை:
நலக்குழுக்கள்

Question 4.
மாநிலக் கட்சிகள் …………. எனவும் குறிப்பிடப்படுகின்றன.
விடை:
பிராந்தியக் கட்சிகள்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 5.
அரசியலின் மற்றொரு முகம் என்று கருதப்படுபவை ………
விடை:
அழுத்தக்குழுக்கள்

Question 6.
அதிக அளவிலான அழுத்தக் குழுக்கள் உள்ள நாடு ……..
விடை:
இந்தியா

III. குறுகிய விடை தருக

Question 1.
தேர்தல் என்றால் என்ன?
விடை:
தேர்தல் என்பது தமக்கான பொது சேவகர் ஒருவரை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் முறையாகும்.

Question 2.
மறைமுகத் தேர்தல் என்றால் என்ன?
விடை:

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் வாக்களித்துத் தேர்வு செய்யும் முறையே மறைமுகத் தேர்தல் ஆகும்.
  • குடியரசுத் தலைவர் தேர்தலில் இத்தகைய முறையானது கடைபிடிக்கப்படுகிறது.

Question 3.
அரசியல் கட்சிகளின் மூன்று அங்கங்கள் யாவை?
விடை:
தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் எனும் மூன்று அங்கங்களை ஓர் அரசியல் கட்சி பெற்றுள்ளது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 4.
இந்திய பிரதமர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
விடை:
இந்தியப் பிரதமர் பாராளுமன்றத்தின் கீழவையான மக்களவை (லோக்சபா) உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

IV. விரிவான விடை தருக

Question 1.
மறைமுகத் தேர்தலின் நிறைகள் மற்றும் குறைகளைப் பட்டியலிடுக.
விடை:
நிறைகள் :-

  • மறைமுகத் தேர்தல்கள் நடத்த செலவு குறைவானதாகும்.
  • மறைமுக தேர்தல் முறையானது பெரிய நாடுகளுக்கு உகந்தது.

குறைகள் :-

  • வாக்காளர் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதால் ஊழல், கையூட்டு, குதிரை பேரம் ஆகியவற்றிற்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படும்.
  • மக்கள் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நேரடியாக பங்கு பெறாமல், மாறாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகளே இம்முறையில் பங்குபெறுவதால், மக்கள் பிரதிநிதித்துவம் குறைந்த மக்களாட்சி முறையாக காணப்படுகிறது. மக்களின் உண்மையான விருப்பத்தை பிரதிபலிக்காமல் இருக்க நேரிடுகிறது.

Question 2.
இந்தியாவில் செயல்படும் அழுத்தக்குழுக்களை வகைப்படுத்துக.
விடை:

  • வணிகக்குழுக்கள்
  • தொழிற்சங்கங்கள்
  • மாணவர் அமைப்புகள்
  • பழங்குடி அமைப்புகள்
  • கோட்பாட்டு அடிப்படைக் குழுக்கள்
  • விவசாயக் குழுக்கள்
  • தொழில் முறைக் குழுக்கள்.
  • மத அமைப்புகள்
  • மொழிக் குழுக்கள்
  • சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுக்கள்

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் 90
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் 91