Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி Textbook Questions and Answers, Notes.
TN Board 9th Social Science Solutions Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
9th Social Science Guide அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி Text Book Back Questions and Answers
நினைவில் கொள்க
1. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா
2. இந்தியாவில் வாக்களிக்கத் தகுதியான வயது 18
3. தேர்தலில் போட்டியிடத் தகுதியான வயது 25
4. இந்தியாவில் தேர்தல் ஆணையம் பாரபட்ச மற்ற தேர்தல்களை நடத்துகிறது
5. இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் 1952 ல் நடைபெற்றது.
பகுதி – I புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
Question 1.
ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை
அ) தனி நபராட்சி
ஆ) முடியாட்சி
இ) மக்களாட்சி
ஈ) குடியரசு
விடை:
ஆ) முடியாட்சி
Question 2.
முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை
அ) சிறுகுழு ஆட்சி
ஆ) மதகுருமார்களின் ஆட்சி
இ) மக்களாட்சி
ஈ) தனிநபராட்சி
விடை:
ஈ) தனிநபராட்சி
Question 3.
முன்னாள் சோவியத் யூனியன் …………….. க்கு எடுத்துக்காட்டு
அ) உயர்குடியாட்சி
ஆ) மதகுருமார்களின் ஆட்சி
இ) சிறுகுழு ஆட்சி
ஈ) குடியரசு
விடை:
இ) சிறுகுழு ஆட்சி
Question 4.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்
அ) இந்தியா
ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இ) பிரான்ஸ்
ஈ) வாட்டிகன்
விடை:
ஈ) வாட்டிகன்
Question 5.
ஆபிரகாம் லிங்கன் ………… நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்.
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஆ) இங்கிலாந்து
இ) சோவியத் ரஷ்யா
ஈ) இந்தியா
விடை:
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
Question 6.
குடவோலை முறையை பின்பற்றியவர்கள்
அ) சேரர்கள்
ஆ) பாண்டியர்கள்
இ) சோழர்கள்
ஈ) களப்பிரர்கள்
விடை:
இ) சோழர்கள்
Question 7.
பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்டப் பகுதி
அ) பண்டைய இந்தியாவின் குடியரசுகள்
ஆ) அமெரிக்கா
இ) பண்டைய ஏதென்ஸ் நகர அரசுகள்
ஈ) பிரிட்டன்
விடை:
இ) பண்டைய ஏதென்ஸ் நகர அரசுகள்
Question 8.
எந்த மொழியிலிருந்து “டெமாகிரஸி” என்ற வார்த்தை பெறப்பட்டது?
அ) கிரேக்கம்
ஆ) லத்தீன்
இ) பாரசீகம்
ஈ) அரபு
விடை:
அ) கிரேக்கம்
Question 9.
மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்
அ) நாடாளுமன்றம்
ஆ) மக்கள்
இ) அமைச்சர் அவை
ஈ) குடியரசு தலைவர்
விடை:
ஆ) மக்கள்
Question 10.
கீழ்க்கண்ட எந்த ஒரு நாடானது அதிபர் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது?
அ) இந்தியா
ஆ) பிரிட்டன்
இ) கனடா
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
விடை:
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
Question 11.
உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு
அ) கனடா
ஆ) இந்தியா
இ) அமெரிக்க ஐக்கிய
ஈ) சீனா
விடை:
ஆ) இந்தியா
Question 12.
கூற்று (A) : நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது.
காரணம் (R) : மக்கள் நேரடியாக முடிவெடுப்பதில் பங்கு பெறுகிறார்கள்.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
Question 13.
கூற்று (A) : இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது.
காரணம் (R) : இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்கவில்லை.
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
Question 14.
வாக்குரிமையின் பொருள் :
அ) தேர்ந்தெடுப்பதற்கான உரிமை
ஆ) ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை
இ) வாக்களிக்கும் உரிமை
ஈ) பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை
விடை:
இ) வாக்களிக்கும் உரிமை
Question 15.
அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது
அ) சமூகச் சமத்துவம்
ஆ) பொருளாதார சமத்துவம்
இ) அரசியல் சமத்துவம்
ஈ) சட்ட சமத்துவம்
விடை:
அ) சமூகச் சமத்துவம்
Question 16.
பிரதமரை நியமிப்பவர் /நியமிப்பது
அ) மக்களவை
ஆ) மாநிலங்களவை
இ) சபாநாயகர்
ஈ) குடியரசுத் தலைவர்
விடை:
ஈ) குடியரசுத் தலைவர்
Question 17.
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்
அ) லோக்சபைக்கு 12 உறுப்பினர்கள்
ஆ) ராஜ்ய சபைக்கு 2 உறுப்பினர்கள்
இ) ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்
ஈ) ராஜ்ய சபைக்கு 14 உறுப்பினர்கள்
விடை:
இ) ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்
Question 18.
இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு
அ) 1948 – 49
ஆ) 1951 – 52
இ) 1957 – 58
ஈ) 1947 – 48
விடை:
ஆ) 1951-52
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
Question 1.
இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு …….
விடை:
1949
Question 2.
இரண்டு வகையான மக்களாட்சி ……… மற்றும் …….. ஆகும்,
விடை:
நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி
Question 3.
நேரடி மக்களாட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு ………
விடை:
சுவிட்சர்லாந்து
Question 4.
இந்தியா …….. மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.
விடை:
மறைமுக
Question 5.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ……… ஆவார்.
விடை:
ஜவஹர்லால் நேரு
Question 6.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு ………
விடை:
1920
Question 7.
இந்தியாவில் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் …….. மற்றும்…….. ஆவர்.
விடை:
எட்வின் லுட்டியன்ஸ், ஹெர்பர்ட் பேக்கர்
III. பொருத்துக
IV. பின்வரும் வினாக்களுக்கு குறுகிய விடையளி
Question 1.
ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையை கூறுக.
விடை:
“மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என ஆப்ரகாம் லிங்கன் கூறியுள்ளார்.
Question 2.
மக்களாட்சி அரசாங்க அமைப்பினைப் பற்றிக் கூறுக.
விடை:
- மக்களாட்சி அரசாங்க அமைப்பு.
- நாடாளுமற்ற அரசாங்க அமைப்பு (இந்தியா, இங்கிலாந்து)
- அதிபர் அரசாங்க அமைப்பு (அமெரிக்கா, பிரான்சு) என இருவகைப்படும்.
Question 3.
நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக.
விடை:
V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி
Question 1.
மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை?
விடை:
- நவீன உலகில் மக்களாட்சி அரசாங்கங்கள் தழைத்தோங்கி, மேலாதிக்கம் செலுத்தும் வடிவமாக உள்ளது. இதுசரை கடுமையான சவாலோ, போட்டியோ எதிர்கொள்ளப்படாத நிலையில் உலகெங்கும் மக்களாட்சி கடந்த நூறு ஆண்டுகளில் வளர்ந்து வருகிறது.
இந்தியாவில் மக்களாட்சி எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்:- கல்வியறிவின்மை
- வறுமை
- பாலினப்பாகுபாடு
- பிராந்திய வாதம் (வட்டாரப் பாகுபாடு)
- சாதி, வகுப்பு, சமயப்பண்பாடு
- ஊழல்
- அரசியல் குற்றமயமாதல்
- அரசியல் வன்முறை.
Question 2.
இந்தியாவில் மக்களாட்சி வெற்றிகரமாகச் செயல்படத் தேவையான நிபந்தனைகளை விளக்குக.
விடை:
- ஏழைகள் மற்றும் எழுத்தறிவற்றோருக்கு மக்களாட்சியின்பலன்களைக் கிடைக்கச்செய்ய அதிகாரம் அளித்தல்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமது அதிகாரத்தையும், பொதுச் சொத்துக்களையும் தவறாகப் பயன்படுத்தாமல் இருத்தல்.
- மக்களாட்சி முறையைப் பீடித்திருக்கும் சமூக தீமைகளையும், சமூகக் கொடுமைகளையும் ஒழித்தல்.
- மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கப் பாரபட்சமற்ற, திறமைமிக்க ஊடகங்களின் தேவையை உணர்தல்.
- பொதுமக்களின் கருத்து வலுவாக இருத்தல்.
- மக்களிடையே சகிப்புத்தன்மையும், மத நல்லிணக்கமும் நிலவுதல்.
- அடிப்படை உரிமைகள் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்படுத்துதல்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல்.
- வலுவான பொறுப்புமிக்க எதிர்க்கட்சி இருத்தல்.
Question 3.
இந்தியாவில் மக்களாட்சி பற்றிய உங்களது கருத்து என்ன?
விடை:
- இந்தியாவின் மக்களாட்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்ற ஆட்சி முறையாகும்.
- நாட்டிற்குத் தேவையான கூட்டங்களை உருவாக்குகின்ற இந்திய நாடாளுமன்ற மக்களாட்சி அரசாங்கத்தின் இரு முக்கிய கூறுகள்.
- கொள்கை முடிவெடுப்பதில் மக்கள் பங்குபெறுதல்,
- ஒப்பிதல் அளித்தல்.
- உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி , குடியரசு ஆகிய 5 முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது.
- சாதி, சமய, சினம், பால், கல்வித்தகுதி பாகுபாடு இன்று 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் சமமான வாக்குரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.
VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)
1. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன என்பதை வகுப்பறையில் கலந்துரையாடு.
2. மக்களாட்சி என்பது “சிறுபான்மையினரை மதிக்கும் பெரும்பான்மையினரின் ஆட்சி” – கலந்துரையாடு.
3. உங்கள் வகுப்பறையில் மாதிரி தேர்தலை நடத்துக.
4. இந்தியாவில் மக்களாட்சியின் நிறை, குறைகளைப் பற்றி வகுப்பறையில் குழு விவாதம் செய்க.
5. தற்போதைய தேர்தல் ஆணையர்களின் பெயர் மற்றும் படங்களைச் சேகரி.
6. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் படங்களை கி.பி. 1947 முதல் தற்பொழுது வரை சேகரித்து துணுக்குப் புத்தகம் தயாரிக்க.
VII. சிந்தனை வினா
Question 1.
சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா? அத்தகைய நாட்டில் பொது மக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?
விடை:
- ஓர் அரசியல் தலைவர் முழு அதிகாரத்தையும் கைக்கொண்டு கடுமையாகப் பயன்படுத்தும் நிலை.
- இவ்வகை ஆட்சியில் பொதுக்கருத்துக்கு இடமில்லை. கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஒருவர் தன் குரலை எழுப்ப உரிமை, சுதந்திரம் கிடையாது.
Question 2.
குடிமக்களின் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மக்களாட்சி எவ்வாறு வழி வகுக்கிறது? விளக்குக.
விடை:
- அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.
- ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் ஆளுமை வளர்ச்சியில் முன்னேற்றம் காண அடிப்படை சுதந்திர உரிமை உண்டு.
- அனைவரும் சமம் என்ற நிலையில் இணக்கமான வாழ்வுக்கு அடித்தளமாகிறது.
- அடிப்படை உரிமைகள் இருப்பதால் அமைதியாக வாழ முடியாது.
VIII. வாழ்வியல் திறன்
குறிப்பிட்ட நாடுகளை தேர்வு செய். ஒவ்வொரு நாட்டையும் ஆராய்ந்து அந்நாட்டின் அரசாங்கம் – உயர்குடியாட்சி, முடியாட்சி, தனிநபராட்சி, சிறுகுழு ஆட்சி, மதகுருமார்கள் ஆட்சி, மக்களாட்சி குடியரசு – இவற்றில் எந்த வகையைச் சார்ந்தது என்பதைக் கூறவும் : பின்னர் அரசாங்க வகைகளைத் தீர்மானிக்க உதவும் பண்புகளை விவரி.
9th Social Science Guide அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்க
Question 1.
முடியாட்சி நடைபெறும் நாடு
அ) சீனா
ஆ) பிரான்சு
இ) பூடான்
ஈ) ஆஸ்திரேலியா
விடை:
இ) பூடான்
Question 2.
நேரடி மக்களாட்சி நடைபெறும் நாடு
அ) சுவிட்சர்லாந்து
ஆ) இந்தியா
இ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஈ) இங்கிலாந்து
விடை:
அ) சுவிட்சர்லாந்து 3
Question 3.
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம்
அ) 3 ஆண்டுகள்
ஆ) 4 ஆண்டுகள்
இ) 5 ஆண்டுகள்
ஈ) 6 ஆண்டுகள்
விடை:
இ) 5 ஆண்டுகள்
Question 4.
இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான வயது
அ) 18
ஆ) 21
இ) 25
ஈ) 30
விடை:
அ) 18
Question 5.
நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்கு ………… உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
அ) 2
ஆ) 7
இ) 12
ஈ) 15
விடை:
இ) 12
II. பொருத்துக
III. சுருக்கமான விடை தருக
Question 1.
மக்களாட்சி என்பதன் பொருள் என்ன?
விடை:
ஒரு நாட்டின் மக்கள் உயர்ந்த அதிகாரங்களை பெற்று அமைக்கும் ஆட்சி முறையே ‘மக்களாட்சி’. இதன் பொருள் “நாட்டு மக்களின் கைகளில் ஆட்சி அதிகாரம்” உள்ளது என்பதாகும். (குறிப்பிட்ட காலத்திற்கு பிரதிநிதிகளை சுதந்திரமான, நேர்மையான தேர்தல்கள் மூலம் நேரடியாக அல்லது மறைமுகமாக மக்கள் தேர்ந்தெடுப்பார்).
Question 2.
வயது வந்தோர் வாக்குரிமை என்றால் என்ன?
விடை:
சாதி, சமயம், இனம், பால், கல்வித்தகுதி என எவ்வித பாரபட்சமும் இன்றிபதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு
இந்தியக் குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
Question 3.
நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
விடை:
- மேலவை உறுப்பினர்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
- மேலும் கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறப்பாக சேவை புரிந்த 12 பேரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
IV. விரிவான விடையளி
Question 1.
அரசாங்க அமைப்பு முறைகளை விளக்குக.
விடை:
உயர் குடியாட்சி, முடியாட்சி, தனிநபர் ஆட்சி, சிறுகுழு ஆட்சி, மதகுருமார்கள் ஆட்சி, மக்களாட்சி மற்றும் குடியரசு என அரசாங்க அமைப்பு முறைகள் பல வகைப்படும்.
உயர் குடியாட்சி :
உயர் குடியினரால் நடத்தப்பட்டு அமைக்கப்படும் அரசாங்கம் ஆகும். எ.கா இங்கிலாந்து, ஸ்பெயின்.
முடியாட்சி :
ஒரு நபர் (வழக்கமாக அரசர்) – அமைக்கும் அரசாங்கமே முடியாட்சி எனப்படும். (எ.கா.) பூடான், ஓமன், கத்தார்
தனிநபர் ஆட்சி :
முழு அதிகாரம் கொண்ட ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கமே தனிநபர் ஆட்சி ஆகும். எ.கா. வட கொரியா, சவுதி அரேபியா
சிறு குழு ஆட்சி :
மக்களின் சிறிய குழு ஒன்று ஒரு நாட்டையோ (அ) அமைப்பையோ கட்டுப்படுத்துவதே “சிறு குழு ஆட்சி” எ னப்படும். எ.கா முன்னாள் சோவியத் யூனியன், சீனா, வெனிசுலா
மதகுருமார்களின் ஆட்சி :
மதகுருமார்கள் தம்மை கடவுளாகவோ (அ) கடவுளின் பெயரால், மதகுருமார்களே அமைக்கும் அரசாங்கமே “மதகுருமார்கள் ஆட்சி”. எ.கா. வாட்டிகன்
மக்களாட்சி :
ஒரு நாட்டின் தகுதியுள்ள குடிமக்களால் வாக்களிக்கப்பட்ட தனிநபரோ அல்லது குழுவோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அமைக்கப்படும் அரசாங்கமே “மக்களாட்சி” எனப்படும். எ.கா. இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ்
Question 2.
மக்களாட்சியின் சிறப்புக் கூறுகள் யாவை?
விடை:
- மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இறுதி முடிவை மேற்கொள்ளும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
- சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள்.
- வயது வந்த அனைவருக்கும் சம மதிப்புடைய வாக்குரிமை.
- அடிப்படை உரிமைகள் மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாத்தல்.
Question 3.
மக்களாட்சியின் நிறைகள் மற்றும் குறைகளை எழுதுக.
விடை:
நிறைகள் :
- பொறுப்பும், பதிலளிக்கும் கடமையும் கொண்ட அரசாங்கம்
- சமத்துவமும் சகோதரத்துவமும்
- மக்களிடையே பொறுப்புணர்ச்சி
- தல சுய ஆட்சி
- அனைவருக்கும் வளர்ச்சியும் வளமும்
- மக்கள் இறையாண்மை சகோதர மனப்பான்மை மற்றும் கூட்டுறவு
குறைகள் :
- மறைமுக அல்லது பிரதிநிதித்துவ முறை கொண்ட மக்களாட்சி
- வாக்காளர்களிடையே போதிய ஆர்வமின்மை மற்றும் குறைந்த வாக்குப்பதிவு
- சில சமயங்களில் நிலையற்ற அரசாங்கத்திற்கு வழி வகுத்தல்.
- முடிவெடுக்கும் முறையில் காலதாமதம்.
மனவரைபடம்