Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 9 அண்டம் Textbook Questions and Answers, Notes.
TN Board 9th Science Solutions Chapter 9 அண்டம்
9th Science Guide அண்டம் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
Question 1.
சூரிய மையக் கொள்கையை முன்மொழிந்தவர் யார்?
அ) டைக்கோ பிராஹே
ஆ) ஆர்க்கிமிடிஸ்
இ) நிகோலஸ் கோபர் நிக்கஸ்
ஈ) டாலமி
விடை:
இ) நிகோலஸ் கோபர் நிக்கஸ்
Question 2.
இவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள் அல்ல?
அ) புதன்
ஆ) சனி
இ) யுரேனஸ்
ஈ) நெஃப்டியூன்
விடை:
அ) புதன்
Question 3.
செரஸ் என்பது
அ) விண்க ல்
ஆ) விண்மீ ன்
இ) கோள்
ஈ) சிறுகோள்
விடை:
ஈ) சிறுகோள்
Question 4.
A என்ற கோள் சூரியனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் சுழற்சி நேரம் B என்ற கோளை விட எட்டு மடங்கு அதிகம் எனில், கோள் A வின் தூரம் கோள் B யின் தூரத்தை விட எத்தனை மடங்கு அதிகம்?
அ) 4
ஆ) 5
இ) 2
ஈ) 3
விடை :
அ) 4
Question 5.
ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டது.
அ) 13.7 பில்லியன்
ஆ) 15 மில்லியன்
இ) 15 மில்லியன்
ஈ) 20 மில்லியன்
விடை:
அ) 13.7 பில்லியன்
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
Question 1.
சூரியனின் திசைவேகம் கிமீ/வி.
விடை:
250
Question 2.
முனைகளில், சூரியனின் சுழற்சி வேகம்
விடை:
குறையும் (36 நாள்கள்)
Question 3.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்
விடை:
ஆர்யபட்டா
Question 4.
கெப்ளரின் மூன்றாம் விதியை என்றும் அழைப்பர்.
விடை:
ஒத்திசைவுகளின் விதி
Question 5.
நம் சூரிய குடும்பத்திலுள்ள கோள்களின் எண்ணிக்கை – ஆகும். –
விடை :
8
III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.
Question 1.
பன்னாட்டு விண்வெளி மையம் என்பது சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு ஆதாரமாகும்.
விடை:
சரி
Question 2.
ஹேலிஸ் வால்மீன் 67 மணி நேரங்களுக்கு ஒருமுறை தோன்றும்.
விடை:
தவறு ஹேலிஸ் வால்மீன் 76 ஆண்டுகளுக்கு பின் தோன்றும்.
Question 3.
பூமிக்கு அருகே உள்ள கோள்களுக்கு சுழலும் திசைவேகம் குறைவாக இருக்கும்.
விடை:
தவறு பூமிக்கு அருகே உள்ள கோள்களுக்கு சுழலும் திசைவேகம் அதிகமாக இருக்கும்.
Question 4.
புதன் கோள் சிவப்புக்கோள் என்றழைக்கப்படுகிறது. செவ்வாய் கோள் சிவப்புக்கோள் என்றழைக்கப்படுகிறது.
விடை:
தவறு
IV. சுருக்கமாக விடையளி.
Question 1.
சூரிய மண்டலம் என்றால் என்ன?
விடை:
- சூரியன் மற்றும் அதைச் சுற்றி வரும் வான் பொருள்கள் அனைத்தும் சேர்ந்தது சூரிய மண்டலம் ஆகும்.
- இதில் கோள்கள், வீண்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவை உள்ளது.
Question 2.
சுழற்சித் திசைவேகம் வரையறு.
விடை:
- கோளிலிருந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் செயற்கைக் கோள் ஒன்று வட்டப்பாதையில் சுற்றிவர அளிக்கப்படும் கிடைமட்ட திசைவேகம்.
Question 3.
சுற்றுக்காலம் வரையறு.
விடை:
- புவியை ஒரு முறை முழுமையாக சுற்றிவர ஒரு செயற்கைக் கோள் எடுத்துக் கொள்ளும் காலம். கடந்த தொலைவு
- சுற்றுக்காலம்
Question 4.
துணைக்கோள் என்றால் என்ன? துணைக்கோளின் இரு வகைகள் யாவை?
விடை:
ஒரு சுற்றுப்பாதையில் சூரிய மண்டலத்திலுள்ள கோள்களை சுற்றி வரும் பொருள் துணைக் கோள் எனப்படும்.
துணைக்கோளின் இரு வகைகள்
- இயற்கைத் துணைக்கோள் – நிலவு
- செயற்கைத் துணைக்கோள் – செயற்கைக்கோள்
Question 5.
‘உட்புறக் கோள்கள்’ குறிப்பு வரைக.
விடை:
- உட்புற சூரிய மண்டலத்தில் காணப்படும் புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகிய நான்கும் உட்புறக் கோள்கள்.
- இவற்றின் புறப்பரப்பு திண்மப் பாறை மேலேட்டால் ஆனது. இவை நிலம் சார்கோள்கள் அல்லது பாறைக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன.
- இவற்றின் உட்பகுதி, புறப்பரப்பு மற்றும் வளிமண்டலம் ஆகியவை ஒரே முறையில், ஒரே வடிவில் உள்ளன.
Question 6.
வால் விண்மீன்கள் என்றால் என்ன?
விடை:
- அதி நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வரும் தூசு மற்றும் பனி நிறைந்த பொருட்களே வால் விண்மீன்கள் எனப்படும்.
- இவற்றின் சுற்றுக் காலம் அதிகம். சூரியனை நெருங்கும்போது ஆவியாகி தலை மற்றும் வால் உருவாகும்.
- பல வால் விண்மீன்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் தோன்றுபவை. (எ.டு) ஹாலி வால் விண்மீன் 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் தெரியும்.
Question 7.
கெப்ளரின் விதிகளை – வரையறு.
விடை:
1. முதல் விதி – நீள் வட்டங்களின் விதி
சூரியனின் மையம் ஒரு குவியத்தில் உள்ளவாறு, நீள்வட்டப் பாதையில் கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன.
2. இரண்டாம் விதி – சம பரப்புகளின் விதி
கோளின் மையத்தையும், சூரியனின் மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு சமகாலங்களில் சம பரப்புகளை கடக்கிறது.
3. மூன்றாம் விதி – ஒத்திசைவுகளின் விதி
எந்த இரு கோள்களுக்கும், சுற்றுக்காலங்களின் இருமடிகளின் விகிதம் சூரியனிலிருந்து அவற்றின் பாதியளவு பேரச்சுகளின் மும்மடிகளின் விகிதத்திற்குச் சமம்.
4. பூமியில் உயிர்வாழ்வதற்கான காரணிகள் யாவை?
விடை:
- பூமியில் மட்டும் தான் உயிர்வாழ்வதற்கான சூழல் உள்ளது.
- சூரியனிலிருந்து சரியான தொலைவு.
- சரியான வெப்பநிலை
- நீர் ஆதாரம்
- சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி
- கொண்டுள்ளது. இவையே பூமியில் உயிர் வாழ்வதற்கான காரணிகளாகும்.
V. விரிவாக விடையளி.
Question 1.
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.
விடை:
சூரிய மண்டலத்தில் எட்டு கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. அவையாவன.
1. புதன்
- சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள கோள்.
- பகலில் அதிக வெப்பமாகவும், இரவில் அதிக குளிராகவும் இருக்கும்.
- சூரியனை வேகமாக சுற்றும் கோள்.
- சுற்றுக்காலம் 87.97 புவி நாள்கள். சுழற்சிக்காலம் 58.65 புவி நாள்கள்
2. வெள்ளி
- சூரிய மண்டலத்தில் புவியின் அளவை ஒத்த கோள்.
- வானில் மிகப் பெரிய பிரகாசமாக தெரியும் கோள். அதிக வெப்பநிலை கொண்ட கோள்.
- சுற்றுக்காலம் (1 ஆண்டு ) – 224.7 புவி நாள்கள். சுழற்சிக்காலம் (1 நாள்) – 243 புவி நாள்கள்.
3. பூமி
- உயிர்வாழத் தகுதியான கோள்.
- சரியான தொலைவு, சரியான வெப்பநிலை, வளிமண்டலம், ஓசோன் படலம் கொண்டது.
- சுற்றுக்காலம் – 365.25 நாள்கள் சுழற்சிக்காலம் – 23.93 மணி
4. செவ்வாய்
- சிவப்புக் கோள் என அழைக்கப்படுகிறது.
- துணைக் கோள்கள் டீமோஸ், போபோஸ்.
- சுற்றுக்காலம் – 687 புவி நாள்கள் சுழற்சிக்காலம் – 24 மணி 37 நிமிடம் 22 வினாடி
5. வியாழன்
- மிகப்பெரிய கோள்.
- இதற்கு 3 வளையங்கள் 65 நிலவுகள் உள்ளன.
- சுழற்சிக்காலம் (1 நாள்) – 9 மணி 55 நிமிடம் 30 வினாடி சுற்றுக்காலம் (1 ஆண்டு ) – 11.362 புவி வருடங்கள்
6. சனி
- மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
- இரண்டாவது பெரிய கோள் ஆகும்.
- 60 நிலவுகள் உள்ளன.
- சுற்றுக்காலம் – 29:46 ஆண்டு
- சுழற்சிக்காலம் – 10.7 மணி
7. யுரேனஸ்
- குளிர்மிகு வாயுப் பெருங்கோள் ஆகும்.
- சுற்றுக்காலம் – 84 புவி ஆண்டு
- சுழற்சிக்காலம் – 17.2 மணி
8. நெப்டியூன்
- பச்சை நிற விண்மீன் போலத் தோன்றும்.
- 248 ஆண்டுகளுக்கு ஒரு முறை புளுட்டோ அதன் சுற்றுப்பாதையை கடக்கிறது.
- இந்த நிலை 20 ஆண்டுகள் தொடரும்.
- 13 நிலவுகள் உள்ள ன.
Question 2.
பன்னாட்டு விண்வெளி மையத்தின் நன்மைகளை விவரி.
விடை:
- தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் மேம்படுத்தப்பட்ட நீர் வடிகட்டுதல் மற்றும் சுத்திகரிப்பு முறைகளை பெறலாம்.
- ISS க்கு உருவாக்கப்பட்ட நீர் மீட்பு அழைப்பு (WRS) மற்றும் ஆக்ஸிஜன் உருவாக்கும் அமைப்பு (OGS) சுத்தமான குடிநீர் இல்லாததால் ஈராக்கில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கிராமத்தை மீட்டு மீண்டும் அங்கு வாழ வழிவகை செய்துள்ளனர்.
கண்ணைத் தொடரும் தொழில் நுட்பம் : - இது பல லேசர் அறுவை சிகிச்சைகளில் பயன்படுகிறது.
- இக்கருவி கண்ணின் நிலையை துல்லியமாக தொடர்கிறது.
- பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு பயன்படுகிறது.
- தானியங்கி கைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் :
- அறுவை சிகிச்சையால் அகற்ற இயலாத கட்டிகளை நீக்கவும்,
- உடல் திசு ஆய்வு செய்ய, தானியங்கி கைகள் உதவுகின்றது.
- புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுகின்றது.
- மிகத் துல்லியமாக உடல் திசு ஆய்வுகளை செய்யும்.
- மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை உருவாக்குதல், மார்பக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை, மீயொலி கருவிகள் மேலும் பல பணிகளை செய்கின்றன.
Question 3.
சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன?
விடை:
கோளிலிருந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் செயற்கைக் கோள் ஒன்று வட்டப்பாதையில் சுற்ற அதற்கு அளிக்கப்படும் கிடைமட்ட திசைவேகம் சுழற்சித் திசைவேகம் எனப்படும்.
- புவிக்கு அருகிலிருந்தால் துணைக்கோளின் வேகம் அதிகமாகும்.
- 200 கி.மீ.
- உயரத்தில் உள்ள செயற்கைக் கோள் கிட்டத்தட்ட 27400 கி.மீ./மணி வேகத்திற்கு சற்று அதிக வேகத்தில் இயங்கினால் 24 மணி நேரத்தில் புவியை சுற்றி வரும்.
- புவியின் சுழற்சிக்காலம் 24 மணி எனவே செயற்கைக் கோள் புவிப்பரப்பிற்கு மேல் ஒரே இடத்திலிருப்பது போல் தோன்றும்.
- புவியைப் பொருத்து ஒரு நிலையில் இருப்பதால் இவ்வகை செயற்கைக் கோள்களுக்கு புவிநிலை செயற்கைக் கோள்கள் என்று பெயர்.
சுற்றியக்க திசைவேகம் \(V=\sqrt{\frac{G M}{(R+h)}}\)
G – ஈர்ப்பியல் மாற்றி= 6.67 x 10-11 நிமீ 2 கி.கி
M – புவியின் நிறை = 5.972 x 1024 கி.கி
R – புவியின் ஆரம் = 6371 கி.மீ.
h – புவிப்பரப்பிலிருந்து செயற்கைக் கோளின் உயரம்
VI. கருத்துரு வினாக்கள்
Question 1.
சில விண்மீன்கள் நீல நிறமாகவும், சில சிவப்பு நிறமாகவும் தோன்றுவது காரணம் ஏன்?
விடை:
- வெப்பமான விண்மீன்கள் நீல நிறமாக தோன்றும், குளிர்வான விண்மீன்கள் சிவப்பு நிறமாகத் தோன்றும்.
Question 2.
கோள்கள் நீள்வட்டப்பாதையில் சுழல்வதை எவ்வாறு தொடர்ந்து பராமரிக்க முடிகிறது?
விடை:
- சூரியனுக்கும் கோள்களுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை மூலம் கோள்கள் நீள்வட்டப் பாதையில் சுழல்வதை பராமரிக்க முடிகிறது.
Question 3.
ஏன் சில செயற்கைக் கோள்கள் புவி நிலை செயற்கைக் கோள்கள் எனக் கருதப்படுகின்றன?
விடை:
- சில செயற்கைக் கோள்கள் புவியை 24 மணி நேரத்தில் சுற்றி வருகின்றன.
- புவியின் சுழற்சிகாலமும் 24 மணி.
- எனவே புவியைப் பொருத்து ஒரே நிலையில் இருப்பதால் இவ்வகை செயற்கைக் கோள்கள் புவிநிலை செயற்கைக் கோள்கள் என கருதப்படுகின்றன.
Question 4.
பூமியில் 60 கிகி. எடையுள்ள மனிதன் சூரியனில் 1680 கிகி எடையைக் கொண்டிருப்பது ஏன்?
விடை:
- சூரியனின் ஈர்ப்புவிசை புவியின் ஈர்ப்பு விசையை விட 28 மடங்கு அதிகம்.
- எனவே புவியில் 60 கி.கி எடையுள்ள மனிதன் சூரியனில் 1680 கி.கி. இருப்பான்.
- 60 x 28 = 1680 கி.கி.
VII. கணக்கீடுகள்
Question 1.
புவியின் பரப்பிலிருந்து 36000 உயரத்தில், உள்ள சுழற்சிக் காலம் 24 மணி நேரத்தையும் கொண்டுள்ள செயற்கைக் கோளின் வேகத்தைக் கணக்கிடவும். (R – 6370 கிமீ எனக் கொள்க).
விடை:
(குறிப்பு : மணி நேரத்தை வினாடிகளில் மாற்றியபின் கணக்கிடவும்)
T= 24 மணி = 24 x 60 x 60 = 86400 வினாடி
R = 6370 கி.மீ. h = 36000 கி.மீ.
G = 6.67 x 10 – 11 Nm2 / Kg
Question 2.
பூமியிலிருந்து 400 கிமீ தொலைவில் உள்ள, கோளின் சுழற்சிக் காலத்தை கணக்கிடவும்.
விடை:
9th Science Guide அண்டம் Additional Important Questions and Answers
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
Question 1.
புவி மையம் கொள்கையைக் கூறியவர்
விடை:
தாலமி
Question 2.
சூரிய மைய கொள்கையை வெளியிட்டவர்
விடை:
நிகோலஸ் கோபர்நிகஸ்
Question 3.
விண்வெளியில் காணப்படும் அனைத்து பொருட்களையும் உள்ளடக்கியது
விடை:
அண்டம்
Question 4.
அண்டத்தின் அடிப்படைக் கூறுகள்
விடை:
விண்மீண் திரள்கள்
Question 5.
பார்க்கக்கூடிய அண்டத்தின் அளவு
விடை:
93 பில்லியன் ஒளி ஆண்டுகள்
Question 6.
அண்டத்தின் பெரும் பகுதி மற்றும் ஆக உள்ளது. இருண்ட பொருள்
விடை:
மற்றும் இருண்ட ஆற்றல்
Question 7.
பெருவெடிப்பில் தோன்றிய அடிப்படை தனிமங்கள்
விடை:
ஹைட்ரஜன், ஹீலியம்
Question 8.
அண்டம் கிட்டத்தட்ட _ % இருண்ட பொருளால் ஆனது
விடை:
27%
Question 9.
அண்டத்தில் உள்ள இருண்ட ஆற்றலின் சதவீதம்
விடை:
63%
Question 10.
விண்மீன்களில் தனிமங்கள் இருக்கக் காரணம்
விடை:
ஈர்ப்பு விசை
Question 11.
சூரியன் விண்மீன் திரளின் மையத்தை சுற்றி வர ஆகும் காலம்
விடை:
250 மில்லியன் ஆண்டுகள்
Question 12.
அண்டத்தில் உள்ள விண்மீன் திரள்களின் எண்ணிக்கை
விடை:
சுமார் நூறு மில்லியன்
Question 13.
அதிக சூடேற்றப்பட்ட பருப்பொருள் நிலை எனப்படும்
விடை:
பிளாஸ்மா
Question 14.
அருகிலுள்ள விண்வெளித் திரள்
விடை:
அண்டிரோமீடா
Question 15.
ஏற்றுக்கொள்ளக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களின் எண்ணிக்கை
விடை:
88
Question 16.
கோள்கள் சூரியனை சுற்றி வரக் காரணம்
விடை:
ஈர்ப்பு விசை
Question 17.
சூரியனின் வெப்பம் மற்றும் ஒளி ஆற்றலுக்கு காரணம்
விடை:
அணுக்கரு இணைவு
Question 18.
சூரியனின் ஈர்ப்பு புவியைப் போல _ மடங்கு அதிகம்
விடை:
28 மடங்கு
Question 19.
சூரியனின் புறப்பரப்பு வெப்பநிலை °C.
விடை:
5500 – 6000°C
Question 20.
சூரியனை கோள்கள் ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் எனப்படும்.
விடை:
சுற்றுக்காலம்
Question 21.
ஒரு கோள் தன்னைத்தானே ஒருமுறை சுழல்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் ஆகும்.
விடை:
சுழற்சிக்காலம்
Question 22.
பூமியின் அளவை ஒத்த சிறப்புக் கோள்
விடை:
வெள்ளி
Question 23.
மற்ற கோள்களுக்கு எதிர்த்திசையில் சுழலும் கோள்
விடை:
வெள்ளி
Question 24.
சூரிய மண்டலத்திலேயே பெரிய நிலவு
விடை:
கானிமீடு
Question 25.
அடர்த்தி மிகவும் குறைவான கனமற்ற கோள்
விடை:
Question 26.
முழுவதும் எரியாமல் கற்களாக பூமியில் விழும் கற்கள்
விடை:
விண் வீழ்கற்கள்
Question 27.
நிலவு (துணைக்கோள்) இல்லாத கோள்கள்
விடை:
புதன், வெள்ளி
Question 28.
முதன் முறையாக செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்
விடை:
ஸ்புட்னிக்
Question 29.
புவி நிலைத் துணைக் கோளின் சுற்றுக்காலம் மணி
விடை:
24
Question 30.
ஈர்ப்பியல் மாறிலியின் மதிப்பு
விடை:
6.67 x 10-11 நி.மீ-கி.கி
Question 31.
புவியின் நிறை – kg.
விடை:
5.972 x 1024
Question 32.
சம பரப்புகளின் விதி என்பது கெப்ளரின் – விதி
விடை:
இரண்டாம்
Question 33.
பொருள்கள் (அ) மனிதர்கள் எடையற்று இருப்பது போல் தோன்றும் நிலை ஆகும்
விடை:
நுண் ஈர்ப்பு நிலை
Question 34.
ஒரு செயற்கைக் கோளின் உயரம் குறைவாக இருந்தால் – அதிகமாக இருக்கும்.
விடை:
சுற்றியக்க திசைவேகம்
Question 35.
பன்னாட்டு விண்வெளி மையத்தில் அதிக நாள் இருந்தவர்
விடை:
ஸக்கி வில்சன்
Question 36.
இயக்கக் குறைபாடு மற்றும் பேக்சில் குறைபாடு உள்ளவர்களுக்கு – தொழில்நுட்பம் பயன்படுகிறது.
விடை:
கண்ணை தொடரும் தொழில்நுட்பம்
Question 37.
அறுவை சிகிச்சை மூலம் அகற்ற இயலாத கட்டிகளை நீக்க, துல்லியமாக உடல் ஆய்வு செய்ய பயன்படுகிறது.
விடை:
தானியங்கி கைகள்
Question 38.
பன்னாட்டு விண்வெளி மையத்தை இயக்கவும், பராமரிக்கவும் நாடுகளின் ஒத்துழைப்பு தேவை.
விடை:
16
Question 39.
இஸ்ரோவின் தலைவர்
விடை:
கே.சிவன்
Question 40.
அதி நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வரும் தூசு மற்றும் பனி நிறைந்த பொருள் எனப்படும்.
விடை:
வால் விண்மீன்
Question 41.
வாயு, தூசு , விண்மீன்கள் மற்றும் சூரிய மண்டலங்களை உள்ளடக்கியது ஆகும்.
விடை:
விண்மீன் திரள்
Question 42.
சூரியன் மற்றும் சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் விண்மீன் திரளில் உள்ளது
விடை:
பால்வெளி வீதி
Question 43.
இரவில் நம் கண்களால் காணக்கூடிய விண்மீன்களின் எண்ணிக்கை
விடை:
3000
Question 44.
சூரியன் மற்றும் அதைச் சுற்றிவரும் பொருட்கள் சேர்ந்தது ஆகும்.
விடை:
சூரிய மண்டலம்
Question 45.
வட துருவத்தில்_நாள்களுக்கு சூரியனை நம்மால் காண இயலாது.
விடை:
186
Question 46.
ஹாலி விண்மீன்கள் ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் தெரியும்.
விடை:
76
Question 47.
ஈர்ப்பின் விளைவு இல்லாத நிலையில் எரியும் நெருப்பின் சுடர் வட்டம் இருக்கும்.
விடை:
வடிவில்
Question 48.
விண்ணிலுள்ள பொருட்களில் வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட பெரிய பொருள்
விடை:
பன்னாட்டு விண்வெளி மையம்
Question 49.
பன்னாட்டு விண்வெளி மையத்தின் முதல் பகுதியை எடுத்துச் சென்ற கலம்.
விடை:
ரஷ்யாவின் ஸார்யா
Question 50.
கோள்கள் உருவானபோது வெளிப்பட்ட லட்சக்கணக்கான பாறைத் துகள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. இவை எனப்படும்.
விடை:
சிறுகோள்கள்
II. பொருத்துக.
III. கூற்று மற்றும் காரண வகை
சரியான தேர்வை கீழ்வருவது போல் குறி.
a) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கமாகும்.
b) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல.
c) கூற்று சரி. காரணம் தவறு.
d) கூற்று தவறு. காரணம் சரி.
Question 1.
கூற்று (A) : அண்டத்திலுள்ள விண்மீன் திரள்கள் பல வடிவங்களில் உள்ளன.
காரணம் (R) : வடிவத்தைப் பொருத்து சுருள் திரள், நீள்வட்டத்திரள், வடிவமற்ற திரள் என வகைப்படுத்தப் படுகின்றன.
விடை :
a) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கமாகும்.
Question 2.
கூற்று (A) : வெப்பநிலையை பொருத்து விண்மீன்கள் பல வண்ணங்களில் தோன்றுகின்றன.
காரணம் (R) : செவ்வாய் சிவப்புக் கோள் எனப்படும்.
விடை :
b) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல.
Question 3.
கூற்று (A) : சூரியனில் அணுக்கரு இணைவு கடக்கிறது.
காரணம் (R) : சூரியனில் ஆக்ஸிஜன் உள்ளது.
விடை :
C) கூற்று சரி. காரணம் தவறு.
IV. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக.
Question 1.
வெப்ப விண்மீன்கள் : நீலநிறம் :: குளிர்வான விண்மீன்கள் : _________________
விடை:
சிவப்பு நிறம்
Question 2.
புவியின் சுற்றுகாலம் :: _________________ :: சுழற்சிக்காலம் : 24 மணி
விடை:
365.25 நாள்கள்
Question 3.
NASA: அமெரிக்கா :: ISRO : _________________
விடை:
இந்தியா
V. குறுகிய விடை – 2. மதிப்பெண்கள்
Question 1.
அண்டம் என்றால் என்ன?
விடை:
- புவி, கோள்கள், விண்மீன்கள், வான்வெளி மற்றும் விண்மீன் திரள்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அமைப்பு.
Question 2.
ஒளி ஆண்டு என்றால் என்ன?
விடை:
- ஒரு ஆண்டு காலத்தில் ஒளி செல்லும் தொலைவு ஒளி ஆண்டு எனப்படும். 1 ஒளி ஆண்டு = 9.4607 x 1012 கி.மீ.
Question 3.
விண்மீன் திரளின் பல்வேறு வடிவங்கள் யாவை?
விடை:
- சுருள் திரள், நீள்வட்டத் திரள் மற்றும் வடிவமற்ற திரள் போன்றவை.
- விண்மீன் திரள்கள் தனியாகவோ, தொகுதியாகவோ காணப்படுகின்றன.
Question 4.
நட்சத்திரக் கூட்டங்கள் என்றால் என்ன? எ.கா தருக.
விடை:
- கற்பனை வடிவத்தையோ, அர்த்தங்கொண்ட தோற்றத்தையோ நினைவுறுத்தும் விண்மீன்களின் தொகுப்பு நட்சத்திரக் கூட்டங்கள் எனப்படும்.
- ஆட்டுக்கிடா, மிதுனம், தேள் மற்றும் கேசியோபியா போன்றவை சில நட்சத்திரக் கூட்ட வடிவங்கள் உள்ளன.
Question 5.
சூரியனில் நடைபெறும் வேதிவினை பற்றி எழுதுக.
விடை:
- சூரியனில் அதிக அழுத்தத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றினைந்து ஹீலியம் அணுக்களாக மாறுகின்றன.
- இவ்வினை அணுக்கரு இணைவு எனப்படும்.
- இதில் பெருமளவு ஆற்றல் ஒளி வடிவிலும், வெப்ப வடிவிலும் உருவாகின்றது. பாவை?
Question 6.
சூரியன் மஞ்சள் நிறக் கதிர்களை மட்டும் உமிழ்கிறதா? காரணம் கூறு.
விடை:
- சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சில் அனைத்து நிறங்களும் உள்ளன.
- ஆனால் மஞ்சள் நிறமே அதிக செறிவுடன் காணப்படுகிறது. எனவே சூரியன் மஞ்சள் நிறமாக நமக்குத் தெரிகிறது.
Question 7.
துருவ விண்மீன் என்றால் என்ன? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது? காரணம் கூறு.
விடை:
- எல்லா விண்மீன்களும் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வது போல் தோன்றினாலும், ஒரு விண்மீன் மட்டும் நகராமல் உள்ளது போல் தோன்றும்.
- அதுவே துருவ விண்மீன் ஆகும்.
- நிலையாக அமைந்துள்ள புவியின் சுழல் அச்சிற்கு நேராக அமைந்திருப்பதால் துருவ விண்மீன் ஒரே இடத்தில் நகராமல் உள்ளது போல் தோன்றுகிறது.
- புவியின் தெற்கு அரைக்கோளத்திலிருந்து துருவ விண்மீன் தெரிவதில்லை.
Question 8.
விண்கற்கள் என்றால் என்ன?
விடை:
- சூரிய மண்டலம் முழுவதும் பரவலாக சிதறிக்கிடக்கும் சிறு பாறைத் துண்டுகள் விண்கற்கள் எனப்படும்.
Question 9.
சிறு கோள்கள் என்றால் என்ன?
விடை:
- கோள்கள் உருவான போது வெளிப்பட்ட இலட்சக்கணக்கான பாறைத்துகள்கள் இப்போது சூரியனைச்சுற்றி இயங்கி வருகின்றன. இவை சிறுகோள்கள் எனப்படும்.
VI. விரிவான விடையளி – 5. மதிப்பெண்கள்
Question 1.
விண்மீன் திரள்கள் பற்றி குறிப்பு வரைக.
விடை:
- சுமார் 10 – 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெருவெடிப்பிற்கு பின் விண்மீன் திரள்கள் உருவாயின.
- விண்மீன் திரள் என்பது வாயு, தூசு, கோடிக்கணக்கான விண்மீன்கள் மற்றும்
- அவற்றிலுள்ள சூரிய மண்டலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அமைப்பு.
- பார்க்கக்கூடிய அண்டத்தில் 100 மில்லியன் (1011) விண்மீன்திரள்கள் உள்ளன.
- அண்டத்தின் அளவு 108 முதல் 1014 வரையிலான விண்மீன்களைக் கொண்டது.
- விண்மீன் திரள்களின் பல்வேறு வடிவங்களை பொறுத்து சுருள் திரள்.
- நீள்வட்டத்திரள் மற்றும் வடிவமற்ற திரள் என வகைப்படுத்தப்படுகின்றன.
- விண்மீன் திரள்கள் தனியாகவோ, தொகுதியாகவோ, பெருந்தொகுதியாகவோ காணப்படுகின்றன.
- இவற்றிற்கிடையே இடைவினை புரிகிறது.
- சூரியன் மற்றும் சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் பால்வெளி வீதி விண்மீன் திரளில் உள்ளன.
- நமக்கு அருகிலுள்ள அடுத்த விண்மீன் திரளின் பெயர் ஆண்டிரோமீடா.
- புவி சூரியனைச் சுற்றி வருவதைப் போல் நம் விண்மீன் திரளின் மையத்தை சுற்றி வரை 250 மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.
Question 2.
செயற்கைக் கோள்களின் சுற்றுக்காலம் என்றால் என்ன? அதற்கான சமன்பாட்டை பெறுக.
விடை:
- புவியை ஒரு முறை முழுமையாக சுற்றிவர செயற்கைக்கோள் எடுத்துக்கொள்ளும் காலம் சுற்றுக்காலம் எனப்படும்.
- சுற்றுக்காலம் T = கடந்த தொலைவு / சுற்றியக்க திசைவேகம்
\(\mathrm{T}=\frac{2 \pi \mathrm{r}}{\mathrm{V}}\)
V மதிப்பை பிரதியிட \(\mathrm{T}=\frac{2 \pi(\mathrm{R}+\mathrm{h})}{\sqrt{\frac{\mathrm{GM}}{(\mathrm{R}+\mathrm{h})}}}\)
G – ஈர்ப்பின் மாறிலி = 6.6 x 10-11 Nm2 Kg-2
M – புவியின் நிறை = 5.972 x 1024 Kg
R – புவியின் ஆரம் = 6371 Km
h – புவிப்பரப்பிலிருந்து செயற்கைக்கோளின் உயரம்
Question 3.
பன்னாட்டு விண்வெளி மையம் என்றால் என்ன? அதன் நோக்கங்களைக் கூறு.
விடை:
- விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான ஒரு பெரிய விண்வெளிக்கலமே பன்னாட்டு விண்வெளி மையம் ஆகும். இது தாழ்வான புவி வட்டப்பாதையில் சுமார் 400 கி.மீ. தொலைவில் இயங்குகிறது.
பன்னாட்டு விண்வெளி மையத்தின் நோக்கங்கள் :
- அறிவியல் ஆய்வகமாகவும், வானோக்கு நிலையமாகவும் செயல்பட இது அமைக்கப்பட்டுள்ளது.
- இதன் முக்கிய நோக்கம் விண்ணில் ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் பன்னாட்டு ஆய்வகமாக செயல்படுவது ஆகும். புவியில் அத்தகைய சூழலை ஏற்படுத்த முடியாது.
- பன்னாட்டு விண்வெளி மையத்தில் அமைந்துள்ள நுண்ஈர்ப்பு சூழலானது உயிரியல், மனித உயிரியல், இயற்பியல்.
- வானியல் மற்றும் கால நிலையியல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள சிறந்த சூழலாக விளங்குகிறது.