Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf 7 வெப்பம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 7 வெப்பம்

9th Science Guide வெப்பம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கலோரி என்பது எதனுடைய அலகு?

அ) வெப்பம்
ஆ) வேலை
இ) வெப்பநிலை
ஈ) உணவு
விடை :
அ) வெப்பம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி

Question 2.
வெப்பநிலையின் SI அலகு

அ) ஃபாரன்ஹீ ட்
ஆ) ஜூல் இ செல்சியஸ்
ஈ) கெல்வின்
விடை :
இ) கெல்வின்

Question 3.
ஒரே நீளமுள்ள இரண்டு உருளை வடிவிலுள்ள கம்பிகளின் குறுக்கு வெட்டுப் பரப்பின் விகிதம் 2 :1. இரண்டு கம்பிகளும் ஒரே மாதிரியான பொருளினால் செய்யப்பட்டிருந்தால் எந்தக் கம்பி வெப்பத்தை அதிகம் கடத்தும்?

அ) இரண்டும்
ஆ) கம்பி – 2
இ கம்பி – 1
ஈ) எதுவும் இல்லை
விடை :
இ) கம்பி -1

Question 4.
மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?

அ) வெப்பக்கதிர்வீச்சு
ஆ) வெப்பக்கடத்தல்
இ வெப்பச்சலனம்
ஈ) ஆ மற்றும் இ
விடை :
ஆ) வெப்பக்கடத்தல்

Question 5.
வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம், வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் வெப்ப இழப்பைக் குறைக்கும் கருவி.

அ) சூரிய மின்கலம்
ஆ) சூரிய அழுத்த சமையற்கலன்
இ) வெப்பநிலைமானி
ஈ) வெற்றிடக் குடுவை
விடை :
இ) வெற்றிடக் குடுவை

II. கோடிட்ட இடத்தை நிரப்புக :

Question 1.
வேகமாக வெப்பத்தைக் கடத்தும் முறை …………………………….
விடை :
வெப்பக்கதிர்வீசல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி

Question 2.
பகல் நேரங்களில், காற்று ……………………………. லிருந்து ……………………………. க்கு பாயும்
விடை :
கடல், நிலம்

Question 3.
திரவங்களும், வாயுக்களும் ……………………………. முறையில் வெப்பத்தைக் கடத்தும்
விடை :
குறைவான

Question 4.
வெப்பநிலை மாறாமல் பொருளொன்று ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு ……………………………. மாறுவதை என்கிறோம்.
விடை :
உள்ளுறை வெப்பம்

III. கருத்து மற்றும் காரணம் வகைக் கேள்விகள்

சரியான ஒன்றைத் தேர்ந்தெடு :
அ. கருத்தும் காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.
ஆ. கருத்தும் காரணமும் சரி, ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.
இ. கருத்து சரி, காரணம் தவறு.
ஈ. கருத்து தவறு, காரணம் சரி.

Question 1.
கருத்து : தாமிரப் பகுதியை அடிப்பகுதியாகக் கொண்ட பாத்திரங்கள் மூலம் விரைவாக சமைக்கலாம்.

காரலாம் : தாமிரம் ஒரு எளிதிற் கடத்தி.
விடை :
(அ) கருத்தும் காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.

Question 2.
கருத்து : மதிய வேளையில் அதிகமான சூரியக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன.
காரணம் : சூரியக்கதிர்கள் வெப்பக் கதிர்வீச்சு மூலம் பூமியை வந்தடைகின்றன.
விடை :
(ஆ) கருத்தும் காரணமும் சரி, ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.

கருத்து : வெப்பநிலை 100°C எட்டியவுடன் வெப்பநிலை மேலும் மாறாமல் நீர் நீராவியாக மாறுகிறது.
காரணம் : நீரின் கொதிநிலை 10°C
விடை :
(இ) கருத்து சரி, காரணம் தவறு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.
வெப்பக் கடத்தல் – வரையறு.
விடை :

  • அதிக வெப்பநிலை உள்ள பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள பொருளுக்கு மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பம் பரவும் நிகழ்வு.

Question 2.
பனிக்கட்டியானது இரட்டைச் சுவர் கொள்கலன்களில் வைக்கப்படுவது ஏன்?
விடை :

  • இரட்டைச் சுவர்களுக்கிடையே உள்ள இடைவெளியில் வெற்றிடம் உள்ளது.
  • வெற்றிடம் வெப்பத்தைக் கடத்தாது.
  • வெற்றிடம் வெளியே உள்ள வெப்பத்தை உட்புறம் கடத்துவதில்லை.
  • எனவே பனிக்கட்டியானது இரட்டைச் சுவர் கொள்கலனில் வைக்கப்படுகிறது.

Question 3.
மண்பானையில் வைத்திருக்கும் தண்ணீர் எப்போதும் குளிராக இருப்பது ஏன்?
விடை :

  • மண்பானையில் உள்ள நுண்துளைகள் வழியே கசியும் நீர் ஆவியாகிக் கொண்டே இருக்கும்.
  • ஆவியாதல் மூலம் வெப்பம் வெளியேற்றப்படுவதால் பானைக்குள் உள்ள நீர் குளிர்ச்சியாக இருக்கும்.

Question 4.
வெப்பச்சலனம் – வெப்பக்கதிர்வீச்சு இரண்டையும் வேறுபடுத்துக.
விடை :
Samacheer Kalvi 9th Science Guide Chapter 7 வெப்பம் 1

Question 5.
கோடைக்காலங்களில் மக்கள் ஏன் வெள்ளை நிற ஆடை அணிவதை விரும்புகிறார்கள்?
விடை :

  • வெள்ளை நிற ஆடைகள் வெப்ப பிரதிபலிப்பான்கள்.
  • வெப்பத்தை உள்ளே அனுமதிக்காது.
  • எனவே கோடைக்காலங்களில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி

Question 6.
தன் வெப்ப ஏற்புத் திறன் – வரையறு.
விடை :

  • ஓரலகு நிறையுள்ள (1kg) பொருளின் வெப்பநிலையை ஒரு அலகு 1°C அல்லது K உயர்த்த தேவையான வெப்ப ஆற்றல்.
  • SI அலகு : Jkg-1k-1

Question 7.
வெப்ப ஏற்புத் திறன் – வரையறு.
விடை :

  • ஒரு பொருளின் வெப்பநிலையை 1°C உயர்த்த தேவையான வெப்ப ஆற்றல்.
  • SI அலகு J/KT

Question 8.
உருகுதலின் உள்ளுறை வெப்பம் – வரையறு.
விடை :

  • உருகுதல் நிகழ்வின் போது வெப்பமானது உட்கவரப்பட்டு அதே வெப்பம் உறைதல் நிகழ்வின் போது வெப்பநிலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் வெளிவிடப்படும்.
  • இந்த வெப்பம் உருகுதலின் உள்ளுறை வெப்பம் எனப்படும்.

V. விரிவாக விடையளி:

Question 1.
அன்றாட வாழ்வில் வெப்பச்சலனம் பற்றி விளக்குக.
விடை :

1. சூடான காற்று பலூன்கள் :

  • சூடான பலூன்களின் அடிப்பகுதியில் காற்று மூலக்கூறுகள் வெப்பத்தால் மேல் நோக்கி நகருகிறது.
  • அடர்த்தி குறைந்த சூடான காற்றால் பலூன் மேல் நோக்கி நகரும்.
  • சூடான காற்று மேலே செல்வதால் குளிர் காற்று கீழே வரும்.
  • இச்செயல் தொடர்ந்து நடைபெறும்.

2. நிலக்காற்றும் கடல்காற்றும் :

  • பகல் நேரங்களில் நிலம் கடல் நீரை விட அதிகமாக சூடாவதால் சூடான காற்று மேலே செல்கிறது. எனவே குளிர்ந்த காற்று கடல் பகுதியிலிருந்து நிலத்தை நோக்கி வீசுகிறது.
  • இது கடல் காற்று எனப்படும். இரவு நேரங்களில் நிலப்பரப்பு கடல்நீரை விட விரைவாக குளிர்வடைகிறது. எனவே நிலப்பரப்பிலிருந்து காற்று கடலை நோக்கி வீசுகிறது. இது நிலக்காற்று எனப்படும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி

3. காற்றோட்டம் :

  • காற்று அழுத்தம் அதிகமான பகுதியிலிருந்து குறைவான பகுதிக்கு செல்லும்.
  • சூடான காற்று மேலெழும்புவதால் அழுத்தம் குறைகிறது. எனவே குளிர்ந்த காற்று அதிக அழுத்தப் பகுதியிலிருந்து அங்கு வருகிறது.
  • இதுவே காற்றோட்டத்தை உருவாக்குகிறது.

4. புகை போக்கிகள் :

  • சமையல் அறைகளிலும், தொழிற்சாலைகளிலும் உயரமான புகைபோக்கிகள் உள்ளன.
  • இங்கு சூடான காற்று அடர்த்தி குறைவாக இருப்பதால் வளிமண்டலத்திற்கு செல்கின்றன.

Question 2.
நீரின் நிலை மாற்றங்கள் யாவை? விளக்குக.
விடை :

  • நீர் திட, திரவ, வாயு ஆகிய மூன்று நிலைகளில் காணப்படுகிறது.
  • சாதாரண வெப்பநிலையில் நீர் திரவமாக உள்ளது.
  • 100°C க்கு வெப்பப்படுத்தும் போது நீராவியாக மாறுகிறது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 7 வெப்பம் 2
  • நீராவியை குளிர்வித்தால் மீண்டும் திரவமாகிறது.
  • அத்திரவத்தை 0°Cக்கு குளிர்வித்தால் பனிக்கட்டிய திண்ம நிலைக்கு மாறுகிறது.
  • இவ்வாறு வெப்பநிலையை மாற்றும்போது நீர் தன் நிலையை மாற்றுகிறது. இது நிலைமாற்றம் எனப்படும்.

நிலை மாற்றத்தின் படிநிலைகள் :

  • உருகுதல் : ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல். இயற்பியல் – பாடம்-7 பா
  • உறைதல் : ஒரு பொருள் வெப்பத்தை வெளியிட்டு திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறுதல்.
  • ஆவியாதல் : ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறுதல் ஆவியாதல் எனப்படும்.
  • குளிர்தல் : ஒரு பொருள் வெப்பத்தை வெளியிட்டு வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறுதல் எனப்படும்.

Question 3.
நீரானது வெப்பத்தை அரிதாகக் கடத்தக் கூடியது என்பதை எவ்வாறு சோதனை மூலம் நிருபிக்கலாம்? சமைக்கும் போது நீரை எவ்வாறு எளிதாகச் சூடுபடுத்தலாம்?
விடை :
சோதனை :

  • ஒரு சோதனைக் குழாயில் பனிக்கட்டியை (ICE) கம்பியால் சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி
  • சோதனைக் குழாயில் 4ல் 3 பங்கு நீரால் நிரப்ப வேண்டும்.
  • பனிக்கட்டியானது சோதனைக் குழாயில் அடிப்பகுதியில் பிளக்கு இருக்குமாறு வைக்க வேண்டும்.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 7 வெப்பம் 3
  • இப்போது சோதனைக்குழாயை மேல் பகுதியில் புன்சன் விளக்கால் சூடேற்ற வேண்டும்.
  • சோதனைக்குழாயின் மேற்பகுதியில் உள்ள நீரானது கொதிக்க ஆரம்பிக்கும்.
  • ஆனால் அடிப்பகுதியிலுள்ள நீரானது குளிர்ச்சியாக இருக்கும்.
  • இதிலிருந்து நீரானது வெப்பத்தை அரிதாகக் கடத்தும் என்பதை அறியலாம்.
  • உலோகங்கள் வெப்பத்தை நன்கு கடத்தும். எனவே சமைக்கும் போது அலுமினியம் (அ) தாமிர பாத்திரத்தைப் பயன்படுத்தி எளிதாக நீரை சூடுபடுத்தலாம்.

VI. கணக்குகள்

Question 1.
25 கிராம் நீரை 0°C இருந்து 100°Cக்கு வெப்பப்படுத்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலை ஜூல் அலகில் கணக்கிடுக. அதனை கலோரியாக மாற்றுக. (விடை : 10450 J)
விடை :
(நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் = 4.18J/g°C)
Q = mst
= 25 x 4.18 x 100
= 25 x 418
Q = 10450 J

Question 2.
90’C ல் இருந்து 100கி நீரையும் 20’C ல் இருக்கும் 600கி நீரையும் கலக்கும் போது கிடைக்கும் கலவையின் இறுதி வெப்பநிலை எவ்வளவு? (விடை : 30°C)
விடை :
90°Cல் உள்ள நீர் இழக்கும் வெப்பநிலையானது 20°Cல் உள்ள நீரில் ஏற்கப்படுவதால் இறுதி வெப்பநிலை
C x (100/1000) x (90° – T) = C x (600/1000) x (T – 20°)
(90° – T) = 6 x (T – 20°)
(90° – T) = 6 T – 1200
T + 6 T = 120° + 900
7T = 2100
T = 30°C
இறுதி வெப்பநிலை 30°C

Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி

Question 3.
0°C-ல் இருக்கும் உகி பனிக்கட்டியை 20°C நீராக மாற்ற தேவைப்படும் வெப்ப ஆற்றலைக் கணக்கிடு. விடை : 836000y

(நீரின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் = 334000J/kg, நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் = 4200J/kg/K)
விடை :
பனிக்கட்டியின் நிறை m = 2 கிகி.
நீரின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் (hfg) = 334000J/kg
நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன் Cp = 4200 J/kg/k
2kg பனிக்கட்டியை 20°C நீராக மாற்ற தேவைப்படும் வெப்ப ஆற்றல்
= (mhfg) + m CpΔT
= [2 x 334000] + [2 x 4200 x (20 – 0)]
= [2 x 334000] + [2 x 4200 x 20]
= (668000) + (168000)
தேவையான வெப்ப ஆற்றல் = 836000 = 836000J

9th Science Guide வெப்பம் Additional Important Questions and Answers

II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல் ……………………………
விடை :
அக ஆற்றல்

Question 2.
ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது அதன் …………………………… ஆற்றல் அதிகரிக்கிறது.
விடை :
இயக்க

Question 3.
வெப்பநிலைமானிகளில் பயன்படும் திரவம் ……………………………
விடை :
பாதரசம்

Question 4.
வெப்பத்தால் அதிகம் விரிவடைவது ……………………………
விடை :
வாயு

Question 5.
சிறந்த வெப்பக்கடத்திக்கு உதாரணம் ……………………………
விடை :
தாமிரம்

Question 6.
…………………………… முறையில் வெப்பம் பரவ பருப்பொருள் ஊடகம் தேவையில்லை
விடை :
வெப்பக்கதிர்வீச்சு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி

Question 7.
…………………………… நிற பரப்பு வெப்பத்தை அதிகமாக உட்கவரும்
விடை :
கருமை

Question 8.
இரவு நேரத்தில் காற்று தரையிலிருந்து கடலை நோக்கி வீசும் இது …………………………… என அழைக்கப்படுகிறது.
விடை :
நிலக்காற்று

Question 9.
……………………………. நேரத்தில் குளிர்க்காற்று கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசும்
விடை :
பகல்

Question 10.
சூரிய வெப்பமானது …………………………… முறையில் புவியை அடைகிறது.
விடை :
கதிர்வீச்சு

Question 11.
ஃப்ரான்ஹீட் வெப்பநிலை மானியில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை
விடை :
180

Question 12.
…………………………… ஆடை ஒரு வெப்ப அரிதிற் கடத்தி
விடை :
கம்பளி

Question 13.
வெற்றிடத்தில் கூட நடைபெறுவது ……………………………
விடை :
வெப்பக் கதிர்வீச்சு

Question 14.
செல்சியஸ் அளவீட்டில் புள்ளிகளுக்கிடையே உள்ள இடைவெளி
விடை :
100 பகுதிகள்

Question 15.
ஃப்ரான்ஹீட் அளவீட்டை செல்சியஸாக மாற்றும் சமன்பாடு
விடை :
C = 5/9 (F-32)

Question 16.
தனிச்சுழி வெப்பநிலை ……….
விடை :
OK

Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி

Question 17.
ஒரு வாயுவின் அழுத்தமும், கன அளவும் சுழியாக மாறும் வெப்பநிலை …………………………… எனப்படும்
விடை :
தனிச்சுழி வெப்பநிலை

Question 18.
ஓரலகு நிறையுள்ள பொருளின் வெப்பநிலையை ஓரலகு உயர்த்த தன்வெப்ப தேவையான வெப்ப ஆற்றலின் அளவு …………………………… எனப்படும்
விடை :
ஏற்புத்திறன்

Question 19.
நீரின் தன்வெப்ப ஏற்புத் திறன் …………………………… J/Kg°C
விடை :
4200

Question 20.
கண்ணாடியின் தன்வெப்ப ஏற்புத்திறன் …………………………… Jkg-1k-1
விடை :
504

Question 21.
நீர் குளிர்விப்பானாக பயன்படுத்தக் காரணம் …………………………… அதிகம்
விடை :
தன்வெப்ப ஏற்புத்திறன்

Question 22.
தொழிற்சாலைகளிலும், இயந்திரங்களிலும் ஏற்படும் வெப்பத்தை ப்பதற்கு …………………………… பயன்படுகிறது.
விடை :
தனி

Question 23.
ஒரு பொருளின் வெப்பநிலையை 1°C உயர்த்த தேவையான வெப்ப ஆற்றல் …………………………… ஆகும்.
விடை :
வெப்ப ஏற்புத்திறன்

Question 24.
வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு
விடை :
J/K

Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி

Question 25.
பருப்பொருள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவது …………………………… எனப்படும்
விடை :
நிலை மாற்றம்

Question 26.
நீரின் கொதிநிலை …………………………… °C
விடை :
100

Question 27.
பனிக்கட்டியின் உருகுநிலை ……………………………
விடை :
°C

Question 28.
ஒரு பொருள் திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறுவது …………………………… எனப்படும்
விடை :
உருகுதல்

Question 29.
ஒரு பொருள் திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு வரும்போது வெப்பம் ……………………………
விடை :
வெளியிடப்படும்

Question 30.
திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறுதல் …………………………… எனப்படும்.
விடை :
ஆவியாதல்

Question 31.
வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறுதல் …………………………… ஆகும்.
விடை :
குளிர்தல்

Question 32.
நீரின் கொதிநிலை மற்றும் ஒடுக்கல் நிலை …………………………… °c
விடை :
100°C

Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி

Question 33.
திண்மம் நேரடியாக வாயுநிலைக்கு மாறுதல் …………………………… ஆகும்.
விடை :
பதங்கமாதல்

Question 34.
உள்ளுறை வெப்பம் என்பது …………………………… எனப்படும்.
விடை :
மறைவெப்பம்

Question 35.
ஆவியாதலின் போது வெப்பம் ……………………………
விடை :
உட்கவரப்படும்

Question 36.
குளிர்தலின் போது வெப்பம்
விடை :
வெளியிடப்படும்

Question 37.
தன் உள்ளுறை வெப்பத்தின் SI அலகு ……………………………
விடை :
JKg-1

Question 38.
தன் உள்ளுறை வெப்பத்தின் சமன்பாடு ……………………………
விடை :
L = Q/m

Question 39.
பனிக்கட்டியின் தன் உள்ளுறை வெப்பம் …………………………… Jg-1
விடை :
336

Question 40.
வெப்பநிலை, அழுத்தம் மற்றும் …………………………… ஆகியவற்றைப் பொருத்து நிலைமாற்றம் நடக்கும்
விடை :
வெப்பப் பரவல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி

Question 41.
நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாப்பொருட்களும் …………………………… கட்டமைக்கப்பட்டுள்ளன
விடை :
மூலக்கூறுகளால்

Question 42.
வெள்ளை நிற ஆடைகள் சிறந்த வெப்பப் ……………………………
விடை :
பிரதிபலிப்பான்கள்

Question 43.
ஒரு பொருள் திடநிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு ……………………………
விடை :
உருகுதல்

Question 44.
திரவப் பொருள் வாயு நிலைக்கு மாறும் வெப்பநிலை …………………………… எனப்படும்
விடை :
கொதிநிலை

Question 45.
ஒரு பொருள் வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு ……………………………
விடை :
குளிர்தல்

Question 46.
தன் வெப்ப ஏற்புத்திறனின் குறியீடு ……………………………
விடை :
c

Question 47.
…………………………… நடைபெற பருப்பொருட்கள் தேவையில்லை
விடை :
வெப்பக்கதிர்வீச்சு

Question 48.
அனைத்து வகையான வாயுக்களின் அழுத்தம் ……………………………
விடை :
273.15°c

Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி

Question 49.
பாதரசத்தின் தன்வெப்ப ஏற்புத்திறன் ……………………………
விடை :
139JKg-1k-1

Question 50.
நீரின் கொதிநிலை மற்றும் ஒடுக்கல் நிலை
விடை :
100°C

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 7 வெப்பம் 4

III. அலகுகளை பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 7 வெப்பம் 5

IV. கருத்து மற்றும் காரண வகை

சரியான ஒன்றைத் தேர்ந்தெடு :
a) கருத்தும் காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.
b) கருத்தும் காரணமும் சரி, ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.
c) கருத்து சரி, காரணம் தவறு.
d) கருத்து தவறு, காரணம் சரி.

Question 1.
கருத்து : இரயில் பாதைகளில் சிறிய இடைவெளி விடப்பட்டிருக்கும்.
காரணம் : வெயில் காலங்களில் அதிக வெப்பம் இரயில் தண்டவாளங்களை விரிவடையச் செய்யும்.
விடை :
a) கருத்தும், காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.

Question 2.
கருத்து : நாய் தன் நாக்கை வெளியே தொங்கவிட்டு சுவாசிக்கும் போது நாக்கிலிருந்து ஈரப்பதம் திரவமாகி பின் ஆவியாகிவிடும்.
காரணம் : திரவம் வாயு நிலைக்கு மாற வெப்ப ஆற்றல் தேவை. இந்த வெப்பம் நாயின் நாக்கிலிருந்து பெறப்பட்டு நாய் தன்னை குளிர்வித்துக் கொள்கிறது.
விடை :
a) கருத்தும், காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி

Question 3.
கருத்து : பனிக்கட்டியானது முழுவதும் திரவமாக மாறும் வரை வெப்பநிலை 0 C ல் இருக்கும்.
காரணம் : பனிக்கட்டியின் உருகு நிலை 100°C
விடை :
c) கருத்து சரி, காரணம் தவறு

Question 4.
கருத்து : நீர் ஒரு சிறந்த வெப்பங்கடத்தி
காரணம் : நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் அதிகம்
விடை :
d) கருத்து தவறு, காரணம் சரி

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
வெப்பநிலை என்றால் என்ன? அலகு யாது?
விடை :

  • ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவு வெப்பநிலை எனப்படும்.
  • வெப்பநிலையின் SI அலகு: கெல்வின் (K)
  • பிற அலகுகள்: செல்சியஸ், பாரன்ஹீட்

Question 2.
வெப்பநிலையை அளவிடும் மூன்று அளவீடுகள் யாவை?
விடை :

  • பாரன்ஹீ ட் அளவீடு
  • செல்சியஸ் (அ) சென்டிகிரேடு அளவீடு
  • கெல்வின் (அ) தனித்த அளவீடு

Question 3.
கெல்வின் வரையறு.
விடை :

  • நீரின் மும்மைப் புள்ளியின் 1/273.15 பங்கு ஒரு கெல்வின் ஆகும்.

Question 4.
உருகுநிலை என்றால் என்ன?
விடை :

  • ஒரு திடப்பொருள் தன் நிலையை திரவ நிலைக்கு மாற்றும் வெப்பநிலை உருகுநிலை எனப்படும்.
  • பனிக்கட்டியின் உருகு நிலை 0°C

Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி

Question 5.
கொதிநிலை என்றால் என்ன?
விடை :

  • எந்த வெப்பநிலையில் திரவப் பொருள் வாயு நிலைக்கு மாறுகிறதோ அந்த வெப்பநிலை கொதிநிலை எனப்படும்.
  • நீரின் கொதிநிலை 100°C

Question 6.
பதங்கமாதல் என்றால் என்ன?
விடை :

  • வெப்பப்படுத்தும்போது திடப்பொருள் நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு.
  • எ.கா அயோடின், நாப்தலின், உலர் கார்பன் – டை – ஆக்ஸைடு

Question 7.
உருகுதலின் உள்ளுறை வெப்பம் என்றால் என்ன?
விடை :

  • உருகுதலின் போது வெப்பமானது உட்கவரப்பட்டு அதே வெப்பம் உறைதல் நிகழ்வின் போது வெப்ப நிலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் வெளியிடப்படும் இந்த வெப்பம் உருகுதலின் உள்ளுறை வெப்பம் எனப்படும்.

Question 8.
ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் என்றால் என்ன?
விடை :

  • ஆவியாதலின் போது வெப்பம் உட்கவரப்பட்டு அதே வெப்பம் குளிர்தல் நிகழ்வின் போது வெப்பநிலையில் மாற்றமில்லாமல் வெளியிடப்படும்.
  • இந்த வெப்பம் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் எனப்படும்.

Question 9.
தன் உள்ளுறை வெப்பநிலை – வரையறு.
விடை :

  • ஒரு பொருள் திட, திரவ, வாயு ஆகிய நிலைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும் போது வெப்பநிலை மாறாமல் உட்கவரும் அல்லது வெளியிடப்படும் ஆற்றல் தன் உள்ளுறை வெப்பநிலை ஆகும்.
  • SI அலகு J/Kg

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
வெப்பச்சலனம் என்றால் என்ன? காற்றில் ஏற்படும் வெப்பச் சலனத்தை விளக்கு.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 7 வெப்பம் 6
விடை :

  • ஒரு திரவத்தின் அதிக வெப்பமுள்ள பகுதியில் இருந்து குறைவான வெப்பமுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவுவது வெப்பச் சலனம் எனப்படும்.
  • நிலப்பகுதியில் வெப்பமாகும் காற்று விரிவடைகிறது. அதனால் அடர்த்தி குறைகிறது.
  • இத்தகைய காற்று மூலக்கூறுகள் மேலே செல்ல கனமான குளிர் காற்று மூலக்கூறுகள் கீழே வருகின்றன.
  • இங்கு மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவுகிறது.

Question 2.
அன்றாட வாழ்வில் வெப்பக்கடத்தல் பற்றி விவரி.
விடை :

  1. உலோகங்கள் மிகச்சிறந்த வெப்பக்கடத்திகள். அதனால்தான், அலுமினியப் பாத்திரங்களை சமையலுக்குப் பயன்படுத்துகிறோம்.
  2. பாதரசம் சிறந்த வெப்பக்கடத்தியாக இருப்பதால் அதை வெப்ப நிலைமானியில் பயன்படுத்துகிறோம். Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி
  3. நாம் குளிர்காலங்களில் கம்பளி ஆடைகளை உடுத்துகிறோம். கம்பளி ஒரு அரிதிற் கடத்தி. எனவே உடலின் வெப்பத்தை வெளிப்புறத்திற்குக் கடத்தாமல் வைத்திருக்கும்.