Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf 6 ஒளி Textbook Questions and Answers, Notes.
TN Board 9th Science Solutions Chapter 6 ஒளி
9th Science Guide 9th Science Guide ஒளி Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
Question 1.
ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும் போது எந்த படுகோணத்தில் ஒளிவிலகல் அடையாது?
அ) O
ஆ) 45°
இ) 90°
விடை :
இ) 90°
Question 2.
டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது
அ) குழியாடி
ஆ) குவியாடி
இ) சமதள ஆடி
விடை:
அ) குழியாடி
Question 3.
பெரிதான, மாய பிம்பங்களை உருவாக்குவது.
அ) குழியாடி
ஆ) குவியாடி
இ) சமதள ஆடி
விடை:
அ) குழியாடி
Question 4.
எதிரொளிக்கும் பகுதி வெளிப்புறமாக வளைந்திருப்பின், அது
அ) குழியாடி
ஆ) குவியாடி
இ) சமதள ஆடி
விடை:
ஆ) குவியாடி
Question 5.
முப்பட்டகம் ஒன்றின் வழியே ஒளிக்கற்றை பாயும் போது அது,
அ) எதிரொளிக்கப்படுகிறது
ஆ) விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது.
இ) விலகல் மட்டும் அடைகிறது
விடை:
ஆ) விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது
Question 6.
ஒளியின் திசைவேகம் ல் பெருமமாக உள்ளது.
அ) வெற்றிடத்தில்
ஆ) கண்ணாடியில்
இ) வைரத்தில்
விடை:
அ) வெற்றிடத்தில்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
Question 1.
அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும்போது அது — செல்கிறது.
விடை:
குத்துக்கோட்டை
Question 2.
நோக்கி விலகிச் தெரு விளக்குகளில் (street light) பயன்படும் ஆடி
விடை:
குழியாடி
Question 3.
முப்பட்டகம் ஒன்றில் ஏற்படும் விலகு கோணம் – கோணத்தைப் பொறுத்தது.
விடை:
படு
Question 4.
5 செ.மீ. குவியத் தொலைவு கொண்ட குழியாடியின் வளைவு ஆரம் =
விடை:
10 செ.மீ
Question 5.
சூரிய அடுப்புகளில் சூரிய ஒளியைக் குவித்து வெப்பம் உண்டாக்கப் பயன்படும் பெரிய ஆடிகள்.
விடை:
குழி
III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக
Question 1.
ஒளிவிலகல் கோணம் ஒளிவிலகல் எண்ணைப் பொருத்தது.
விடை:
தவறு, ஒளி விலகல் கோணம் ஒளி விலகல் திசைவேகத்தைப் பொருத்தது
Question 2.
ஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது, விலகல் அடைவதில்லை .
விடை:
தவறு. ஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது விலகல் அடையும்.
Question 3.
குவியாடி எப்போதும் சிறிதாக்கப்பட்ட, நேரான, மாய பிம்பத்தை உருவாக்கும்.
விடை:
சரி
Question 4.
குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பொருள் வைக்கப்படும் போது நேரான மாய பிம்பம் உருவாகும்.
விடை:
தவறு – குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பொருள் வைக்கப்படும்போது தலைகீழான மெய்பிம்பம் உருவாகும்.
Question 5.
வைரங்கள் மின்னுவதற்குக் காரணம் ஒளியின் முழு அக எதிரொளிப்பே.
விடை:
சரி
IV. பொருத்துக
V. கூற்று மற்றும் காரண வகை வினாக்கள்
சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
Question 1.
கூற்று : மலைப்பாதைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவில் போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்க குவி ஆடி மற்றும் குழி ஆடியை விட சமதள ஆடியே பயன்படுத்தப்படுகிறது.
காரணம் : ஒரு குவி ஆடியானது சமதள ஆடி அல்லது குழி ஆடியை விட மிக அதிகமான பார்வைப்புலம் உடையது.
அ) கூற்றும் காரணமும் சரி; மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
இ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
விடை:
(இ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
Question 2.
கூற்று: படுகதிர் கோளக ஆடியின் வளைவு மையத்தில் பட்டு எதிரொளித்த பின் மீண்டும் அதே பாதையில் திரும்புகிறது.
காரணம் : படுகோணம் i = எதிரொளிப்புக் கோணம் (r) = 0°
அ) கூற்றும் காரணமும் சரி; மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
இ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
விடை:
(அ) கூற்றும் காரணமும் சரி; மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
VI. மிகக் சுருக்கமாக விடையளி
Question 1.
குறியீட்டு மரபுகளின் அடிப்படையில், எந்த ஆடி மற்றும் எந்த லென்ஸ் எதிர்க்குறி குவியத்தொலைவு கொண்டது?
விடை :
(i) குழி ஆடி
(ii) குழி லென்ஸ்
Question 2.
நேரான, பெரிதாக்கப்பட்ட பிம்பம் மற்றும் அதே அளவுள்ள தலைகீழான பிம்பம், இவற்றைத் தரக்கூடிய ஆடி (கள்) எது/எவை?
விடை :
குழி ஆடி
Question 3.
குழியாடி ஒன்றின் குவியத்தில் பொருள் வைக்கப்படும் போது, பிம்பம் எங்கே உருவாகும்?
விடை :
பிம்பம் ஈரிலாத் தொலைவில் கிடைக்கும்.
Question 4.
ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது ஏன் ஒளிவிலகல் ஏற்படுகிறது?
விடை :
(i) மாறுபட்ட அடர்த்தி உள்ள ஊடகம்.
(ii) ஒளியின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம்.
Question 5.
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் என்ன?
விடை :
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3 x 10 மீவி-1
Question 6.
பல்லை ஆராய பல் மருத்துவர்கள் குழியாடியையே பயன்படுத்துகின்றனர். ஏன்?
விடை :
நேரான, பெரிதாகக்கப்பட்ட பல்லின் பிம்பம் கிடைக்கிறது.
VII. சுருக்கமாக விடையளி
அ) படத்தில் கொடுக்கப்பட்டுள்ள குழியாடியில் பொருளின் பிம்பம் எவ்வாறு கிடைக்கப் பெறுகிறது என வரைந்து காட்டுக.
விடை:
ஆ) பிம்பத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்?
விடை:
பொருளைவிடப் பெரிய, தலைகீழான மெய் பிம்பம்.
Question 2.
பின்வருவனவற்றுள் குவியாடி எது? குழியாடி எது? எனத் தெரிவு செய்து அதனை அட்டவணைப்படுத்துக பின்னோக்கு ஆடி, பல் மருத்துவர் ஆடி, கை மின்விளக்கு ஆடி, பல் பொருள் அங்காடிகளில் உள்ள ஆடி, ஒப்பனை ஆடி.
விடை :
Question 3.
கோளக ஆடியின் மீது பட்டு அதே திசையில் எதிரொளிக்கப்படும் படுகதிரின் திசை எது? ஏன் என்று காரணம் கூறுக.
விடை :
- ஆடியின் வளைவு மையம் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர்,எதிரொளிக்கப்பட்ட பின்பு அதே பாதையில் திரும்பிச் செல்லும். விதி : <i = 0, ஃ <r = 0
Question 4.
உருப்பெருக்கம் என்றால் என்ன? அதன் சமன்பாட்டை எழுதுக. மெய் பிம்பம், மற்றும் மாய பிம்பம் ஆகியவற்றிற்கான குறியீடு என்ன?
விடை :
வரையறை :
பிம்பத்தின் அளவிற்கும் h, பொருளின் அளவிற்கும் h, இடையேயான தகவு ஆகும்.
சமன்பாடு \(m=\frac{h_{1}}{h_{0}}=-\frac{\mathrm{V}}{\mathrm{u}}\)
அ) மெய்பிம்பத்தின் குறியீடு = (-) எதிர்குறி
ஆ) மாய பிம்பத்தின் குறியீடு = (+) நேர்குறி
Question 5.
கோளக ஆழச் சமன்பாட்டை எழுதுக. அதில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் ஒவ்வொன்றையும் விளக்குக.
விடை :
கோளக ஆடிச் சமன்பாடு \(\frac{1}{f}=\frac{1}{u}+\frac{1}{v}\)
f – கோளக ஆடியின் குவியத் தொலைவு
u – பொருளின் தொலைவு
v – பிம்பத்தின் தொலைவு.
VIII. விரிவாக விடையளி
Question 1.
அ) கதிர்ப்படங்கள் மூலம் ஒரு குழியாடி பின்வரும் நிலைகளில் எவ்வாறு பிம்பத்தை உருவாக்குகிறது என வரைந்து காட்டுக.
i) c -இல்
ii) c-க்கும் F-க்கும் இடையில்
iii) F-க்கும் P-க்கும் இடையில்
ஆ) மேற்கண்ட ஒவ்வொரு நிலைகளிலும் பிம்பத்தின் நிலை (இடம்), தன்மை ஆகியவற்றைப் படத்தில் குறிப்பிடுக.
Question 2.
பின்வரும் நிகழ்வுகளில் ஒளியானது விலகல் அடையும் விதத்தைப் படங்கள் வரைந்து விளக்குக.
அ) அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு
ஆ) அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர் குறை ஊடகத்திற்கு
இ) இரு ஊடகங்களைப் பிரிக்கும் பரப்பிற்கு செங்குத்தாக
விடை:
அ) அடர் குறை ஊடகத்திலிருந்து அடர் மிகு ஊடகத்தினுள் ஒளி செல்லும்போது குத்துக் கோட்டை நோக்கி விலகல் அடைகிறது
ஆ) அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர் குறை ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது குத்துக் கோட்டை விட்டு விலகிச் செல்கிறது.
இரு ஊடகங்களைப் பிரிக்கும் பரப்பிற்கு செங்குத்தாக ஒளிக்கதிர் செல்லும்போது பரப்பிற்குக் குத்தாகப்படும் ஒளிக்கதிர் விலகல் அடைவதில்லை.
IX. கணக்குகள்
Question 1.
குழியாடியின் முன் 7 செ.மீ தொலைவில் பொருள் வைக்கப்படும்போது அதன் ஒன்றின் மும்மடங்கு உருப்பெருக்கப்பட்ட பிம்பம் கிடைக்கிறது எனில், பிம்பம் எவ்விடத்தில் கிடைக்கும்?
விடை :
21 செ.மீ. தொலைவில்
பொருளின் தொலைவு u = 7 செ.மீ
உருப்பெருக்கம் \(\mathrm{m}=\frac{-\mathrm{V}}{\mathrm{u}}\) தொலைவில்
பிம்பத்தின் தொலைவு (v) = ?
– 3 = \(\frac{-\mathrm{V}}{\mathrm{u}}\)
3u = v
v = 3u = 3 x 7 = 21.
Question 2.
காற்றிலிருந்து 1.5 ஒளிவிலகல் எண் கொண்ட கண்ணாடிப் பாளத்திற்கு ஒளி செல்கிறது. கண்ணாடியில் ஒளியின் வேகம் என்ன? (வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3 x 108 மீ/வி (விடை : 2 x 108 மீ/வி)
விடை :
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் c = 3 x 108 மீ/வி
ஒளிவிலகல் எண் μ = 1.5
கண்ணாடியில் ஒளியின் திசை வேகம் v = ?
\(\begin{aligned}
u &=\frac{c}{v} \\
&=1.5=\frac{3 \times 10^{8}}{\mathrm{v}} \\
&=\frac{3 \times 10^{8}}{v}
\end{aligned}\)
கண்ணாடியில் ஒளியின் திசைவேகம் v = 2 x 108 மீ/வி
Question 3.
நீரில் ஒளியின் வேகம் 2.25X100 மீ/வி, வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3×108 மீ/வி எனில், நீரின் ஒளிவிலகல் எண்ணைக் கணக்கிடுக. (விடை : 1.33)
விடை :
நீரில் ஒளியின் வேகம் v = 2.25 x 108
வெற்றிடத்தில் ஒளியின் வேகம்
c = 3 108
நீரின் ஒளிவிலகல் எண் u= ?
\(u=\frac{c}{v}=\frac{3 \times 10^{8}}{2.25 \times 10^{8}}=\frac{3}{2.25}\)
μ = 1.33(அலகு இல்லை)
X. உயர்சிந்தனை வினாக்கள்
Question 1.
ஒளிக்கதிரானது தண்ணீரிலிருந்து காற்றை நோக்கிச் செல்கிறது. அதன் பாதையில் ஏற்படும் மாறுபாட்டைக் குறிக்கும் கதிர்ப்படம் வரைக.
விடை :
Question 2.
ஓர் ஒளிக்கதிர் காற்றிலிருந்து கண்ணாடிக்குள் நுழையும் போது ஏற்படும் விலகு கோணத்தின் மதிப்பானது, படுகோணத்தின் மதிப்பை விட அதிகமாக இருக்குமா? அல்லது குறைவாக இருக்குமா?
விடை :
ஒளிக்கதிர் காற்றிலிருந்து கண்ணாடிக்குள் நுழையும் போது ஏற்படும் விலகு கோணத்தின் மதிப்பு படுகோணத்தின் மதிப்பை விட குறைவாக இருக்கும்.
காரணம்: விலகு கதிர் அடர் மிகு ஊடகத்தில் குத்துக்கோட்டை நோக்கி விலகிச் செல்லும்.
Question 3.
வைரத்தின் ஒளிவிலகல் எண்ணின் மதிப்பு 2.41 எனில், அந்த வைரத்தின் வழியாக ஒளி செல்லும் போது அதன் வேகம் என்னவாக இருக்கும்?
விடை :
வைரத்தின் ஒளிவிலகல் எண் μ = 2.41
காற்றில் ஒளியின் திசைவேகம் c = 3 x 108 மீ/வி
வைரத்தில் ஒளியின் வேகம் V = ?
\(\begin{aligned}
&\mu=\frac{C}{V} \\
&V=\frac{C}{\mu}=\frac{3 \times 10^{8}}{2.41}
\end{aligned}\)
V = 1.245 x 108 மீட்டர்/விநாடி.
9th Science Guide ஒளி Additional Important Questions and Answers
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
Question 1.
ஒளி என்பது …………………………….. ன் ஒரு வடிவம்
விடை :
ஆற்றல்
Question 2.
ஒளி …………………………….. வடிவில் செல்கிறது.
விடை :
மின்காந்த அலை
Question 3.
ஒளியைக் கதிர்வடிவில் கருதுவது …………………………….. என அழைக்கப்படும்.
விடை :
கதிர் ஒளியியல்
Question 4.
ஒளியை அலை வடிவில் தருதுவது ……………………………..
விடை :
அலை ஒளியியல்
Question 5.
ஒளிக்கதிரிகளின் கட்டு …………………………….. ஆகும்
விடை :
ஒளிக்கற்றை
Question 6.
குத்துக் கோட்டுடன் படுகதிர் ஏற்படுத்தும் கோணம் ……………………………..
விடை :
படுகோணம்
Question 7.
படுகோணமும், எதிரொளிப்பு கோணமும் ……………………………..
விடை :
சமம்
Question 8.
படுகதிர், எதிரொலிப்புக்கதிர் மற்றும் குத்துக்கோடு ஆகியவை …………………………….. அமையும்
விடை :
ஒரே தளத்தில்
Question 9.
ஒருவரின் முழு உருவமும் தெரிய ஆடியின் உயரம் நபரின் உயரத்தில் …………………………….. இருக்க வேண்டும்.
விடை :
பாதி
Question 10.
சமதள ஆடியில் தோன்றுவது ……………………………..
விடை :
இடவல மாற்றம்
Question 11.
கோளத்தின் மையத்தை நோக்கியபடி பளபளப்பு உள்ள ஆடி …………………………….. எனப்படும்.
விடை :
குழி ஆடி
Question 12.
எதிரொளிக்கும் பரப்பு வெளிப்புறமாக வளைந்துள்ள ஆடி ……………………………..
விடை :
குவி ஆடி
Question 13.
கோளக ஆடியின் வடிவியல் மையம் …………………………….. ஆகும்.
விடை :
ஆடி மையம் (P)
Question 14.
ஆடி மையத்தையும் வளைவு மையத்தையும் இணைக்கும் செங்குத்துக் கோடு …………………………….. ஆகும்.
விடை :
முதன்மை அச்சு
Question 15.
ஆடி மையத்திற்கும் வளைவு மையத்திற்கும் இடையே உள்ள தொலைவு ……………………………..
விடை :
வளைவு ஆரம் (R)
Question 16.
ஆடி மையத்திற்கும் முதன்மை குவியத்திற்கும் இடையே உள்ள தொலைவு …………………………….. ஆகும்.
விடை :
குவியத் தொலைவு (f)
Question 17.
வளைவு ஆரத்திற்கும், குவியத் தொலைவிற்கும் இடையே உள்ள தொடர்பு ……………………………..
விடை :
R = 2f
Question 18.
ஆடியின் வளைவு மையம் வழியே செல்லும் ஒளிக்கதிர் எதிராளிக்கப்பட்ட பின் …………………………….. பாதையில் செல்லும்
விடை :
அதே
Question 19.
முதன்மை அச்சுக்கு இணையாக செல்லும் ஒளிக்கதிர் எதிரொளிக்கப்பட்ட பிறகு …………………………….. வழியாகச் செல்லும்.
விடை :
முக்கியக் குவியம்
Question 20.
எப்போதும் நேரான பிம்பமாக இருப்பது ……………………………..
விடை :
மாயபிம்பம்
Question 21.
எதிராளிப்பிற்குப்பின் பொருளிலிருந்து செல்லும் கதிர்கள் சந்தித்தால் உருவாகும் பிம்பம் …………………………….. ஆகும்.
விடை :
மெய்பிம்பம்
Question 22.
…………………………….. பிம்பத்தை தரையில் வீழ்த்த முடியாது
விடை :
மாய பிம்பம்
Question 23.
வளைவு மையம் Cல் பொருள் வைக்கப்பட்டால் பிம்பம் …………………………….. ல் கிடைக்கும்.
விடை :
ல்
Question 24.
F க்கும் Pக்கும் இடையில் பொருள் வைக்கப்பட்டால் கிடைக்கும் பிம்பம் ……………………………..
விடை :
தலைகீழான மெய்பிம்பம்
Question 25.
ஆடியில் அனைத்து தொலைவுகளும் …………………………….. இருந்து அளவிடப்படுகின்றது.
விடை :
ஆடிமையம் (P)
Question 26.
ஆடிச் சமன்பாடு ……………………………..
விடை :
\(\frac{1}{\mathrm{f}}=\frac{1}{\mathrm{u}}+\frac{1}{\mathrm{v}}\)
Question 27.
பிம்பத்தின் அளவிற்கும், பொருளின் அளவிற்கும் இடையேயான தகவு …………………………….. ஆகும்.
விடை :
உருப்பெருக்கம்.
Question 28.
கை மின் விளக்கு, வாகன முகப்பு விளக்கு மற்றும் தேடு விளக்குகளில் பயன்படுத்தப்படும் ஆடி ……………………………..
விடை :
குழியாடி
Question 29.
குவியாடியின் ஆடி மையத்தில் படும் கதிர், முதன்மை அச்சுக்கு …………………………….. கோணத்தில் எதிரொளிக்கப்படும்.
விடை :
அதே கோணத்தில்.
Question 30.
வாகனங்களின் பின்னோக்குக் கண்ணாடியாக பயன்படுபவை ……………………………..
விடை :
குவி ஆடிகள்
Question 31.
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் ……………………………..
விடை :
3,00,000 கி.மீ
Question 32.
ஒளி விலகலுக்கு காரணம் …………………………….. ல் ஏற்படும் மாறுபாடு ஆகும்.
விடை :
ஒளியின் திசை வேகத்தில்
Question 33.
ஒளி அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்தினால் செல்லும்போது …………………………….. விலகலடையும்
விடை :
குத்துக்கோட்டை நோக்கி
Question 34.
அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது …………………………….. விலகி செல்லும்.
விடை :
குத்துக்கோட்டை விட்டு
Question 35.
ஸ்நெல் விதி ……………………………..
விடை :
\(\frac{\sin i}{\sin r}=\) மாறிலி
Question 36.
கண்ணாடியின் ஒளி விலகல் எண் ……………………………..
விடை :
1.5
Question 37.
90° விலகுகோணத்தை ஏற்படுத்தும் படுகோணம் …………………………….. எனப்படும்.
விடை :
மாறுநிலைக் கோணம்.
Question 38.
முழு அக எதிரொளிப்பு ஏற்பட ஒளி …………………………….. ஊடகத்திலிருந்து …………………………….. அடர்மிகு, ஊடகத்திற்கு செல்ல
விடை :
அடர்குறை வேண்டும்.
Question 39.
வைரங்கள் மின்னுவதற்குக் காரணம்
விடை :
முழு அக் எதிரொளிப்பு
Question 40.
வைரம் காற்று இடைமுகத்தின் மாறுநிலைக் கோணம்
விடை :
24.4°
Question 41.
ஒளி இழைகள் …………………………….. அடிப்படையில் செயல்படுகின்றன
விடை :
முழு அக எதிரொளிப்பு
Question 42.
நீண்ட தொலைவிற்கு ஒலி, ஒளிச் சைகைகளை அனுப்ப …………………………….. பயன்படுகின்றன.
விடை :
ஒளி இழைகள்
Question 43.
ஒளி இழையின் தந்தை ……………………………..
விடை :
நரிந்தர் கபானி
Question 44.
லேசர், உயிரி மருத்துவக் கருவிகள், சூரிய ஆற்றல், மாசு நெறிசெய் தொழில் நுட்பம் ஆகியவற்றில் …………………………….. பயன்படுகின்றன.
விடை :
ஒளி இழைகள்
Question 45.
கண்ணாடி மற்றம் நீரின் ஒளிவிலகல் எண் முறையே \(\frac{3}{2}\) மற்றும் \(\frac{4}{3}\) எனில் கண்ணாடி மற்றும் நீரில் ஒளியின் திசைவேகத்தின் தகவு ……………………………..
விடை :
8:9
Question 46.
குழியாடி ஒன்றின் Pக்கும் Cக்கும் இடைவெளி 10 செ.மீ எனில் அதன் குவியத்தொலைவு ……………………………..
விடை :
5 செ.மீ
Question 47.
ஒளி விலகல் எண்ணின் அலகு ……………………………..
விடை :
அலகு இல்லை
Question 48.
படுகோண மதிப்பு 45° எனில் எதிரொளிப்புக் கோண மதிப்பு ……………………………..
விடை :
45°
Question 49.
சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் ……………………………..
விடை :
மாய பிம்பம்
Question 50.
குழி ஆடியில் பொருளை விடப் பெரிய, தலைகீழான மாய பிம்பம் கிடைக்க வேண்டும் எனில் பொருளின் நிலை ……………………………..
விடை :
சிக்கும் முக்கும் இடையில்
Question 51.
காற்றின் ஒளிவிலகல் எண் ……………………………..
விடை :
1.00
II. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.
Question 1.
காட்சியை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகை மின்காந்த ஆற்றலே ஒளி எனப்படும்
விடை:
சரி
Question 2.
சமதள ஆடி, குழி ஆடி மற்றும் குவி ஆடி எப்போதும் மெய் பிம்பத்தை உருவாக்கும். விடை: தவறு — சமதள ஆடி, குழி ஆடி மற்றும் குவி ஆடி எப்போதும் மெய்பிம்பத்தை உருவாக்காது.
விடை:
தவறு
Question 3.
நாம் காணும் இடவல மாற்றம் உண்மையில் ஆடியால் ஏற்பட்டது அல்ல. அது நம் புலனுணர்வினால் ஏற்படும் ஒரு நிகழ்வு தான்.
விடை:
சரி
Question 4.
கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி வெளிப்பக்கமாக வளைந்திருந்தால் அது குழியாடிகள் எனப்படும்.
விடை:
தவறு — கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி வெளிப்பக்கமாக வளைந்திருந்தால் அது குவியாடி எனப்படும்.
III. பொருத்துக.
IV. கூற்று மற்றும் காரண வகை
கீழே கொடுக்கப்பட்டுள்ள (அ) முதல் (இ) வரையுள்ள தெரிவுகளில் எது மிகச் சரியானதோ அதைத் தேர்ந்தேடுக்கவும்
Question 1.
கூற்று: எதிரொளிக்கும் பகுதியானது கோளக வடிவில் உள்ள ஆடிகள் கோளக ஆடிகள் எனப்படும்.
காரணம்: கோளக ஆடி எதிரொளிப்பின் அடிப்படையில் செயல்படுகிறது.
அ) கூற்றும் காரணமும் சரி, மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
இ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
விடை:
அ. கூற்றும் காரணமும் சரி. மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
Question 2.
கூற்று: முதன்மை அச்சுக்கு இணையாகச் செல்லும் ஒளிக்கதிர், எதிரொளிக்கப்பட்டு பின்பு முக்கியக் குவியம் வழியாகச் செல்லும்.
காரணம்: முதன்மை அச்சுக்கு இணையாகச் செல்லும் ஒளிக்கதிர் 45° படுக்கோணத்தில் வளை பரப்பில் படுகிறது.
அ) கூற்றும் காரணமும் சரி, மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
இ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
விடை:
ஆ. கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
V. படம் வரைதல்
Question 1.
குவியாடியால் ஏற்படும் பிம்பத்திற்கான கதிர் படம் வரைக.
விடை:
Question 2.
குழியாடியில், F-ல் பொருள் வைக்கப்படும் போது உருவாகும் பிம்பத்திற்கான கதிர் படம் வரைக.
விடை:
VI. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்
Question 1.
ஒளியியல் என்றால் என்ன?
விடை:
ஒளியின் பண்புகளையும் அதன் பயன்பாடுகளையும் பற்றி ஆராயும் இயற்பியலின் ஒரு பிரிவு.
Question 2.
கோளக ஆடிகள் என்றால் என்ன?
விடை:
எதிரொளிக்கும் பகுதியானது கோளக வடிவில் உள்ள ஆடிகள்.
Question 3.
வளைவு மையம் என்றால் என்ன?
விடை:
கோளக் ஆடி, எந்த உள்ளீடற்ற கோளத்தின் ஒரு பகுதியாக அமைகிறதோ, அந்த கோளத்தின் மையம் வளைவு மையம் எனப்படும்.
Question 4.
ஊடகத்தின் ஒளிவிலகல் என்ணை வரையறு.
விடை:
காற்று அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசை வேகத்திற்கும், ஊடகத்தில் ஒளியின் திசை வேகத்திற்கும் இடையே உள்ள தகவு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் எனப்படும்.
Question 5.
கோளக ஆடியின் குவியத் தொலைவு என்றால் என்ன?
விடை:
ஆடிமையத்திற்கும் முதன்மைக் குவியத்திற்கும் இடையே உள்ள தொலைவு குவியத் தொலைவு எனப்படும்.
Question 6.
எதிரொளிப்பு விதிகளை கூறுக.
விடை:
- படுகதிர், எதிரொளிப்புக் கதிர் மற்றும் படுபுள்ளிக்கு வரையப்படும் குத்துக் கோடு ஆகிய இம்மூன்றும் ஒரே தளத்தில் அமையும்
- படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் சமம்.
Question 7.
முழு அக எதிரொளிப்புக்கான நிபந்தனைகளை எழுதுக.
விடை:
- ஒளியானது அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர் குறை ஊடகத்திற்குச் செல்ல வேண்டும்.
- அடர்மிகு ஊடகத்தில் படு கோணத்தின் மதிப்பு மாறு நிலைக் கோணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
VII. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்
Question 1.
கோளக ஆடிகளில் தோன்றும் பிம்பங்களை வரையத் தேவையான விதிகளை கூறுக.
விடை:
விதி 1: ஆடியின் வளைவு மையம் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர், எதிரொளிக்கப்பட்ட பின்பு, அதே பாதையில் திரும்பிச் செல்லும்.
விதி 2 : முதன்மை அச்சுக்கு இணையாகச் செல்லும் ஒளிக்கதிர், எதிரொளிக்கப்பட்ட பின்பு, முக்கியக் குவியம் வழியாகச்செல்லும்.
விதி 3 : முக்கியக் குவியம் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர் முதன்மை அச்சுக்கு இணையாக எதிரொளிக்கப்படும்.)
விதி 4 : ஆடி மையத்தில் (P) படும் AP என்ற ஒளிக்கதிர் படுகோணத்திற்குச் சமமான கோணத்தில் PB என்ற திசையில் எதிரொளிக்கப்படும்.
Question 2.
மெய் பிம்பம், மாய பிம்பம் வேறுபடுத்துக.
விடை:
Question 3.
முழு அக எதிரொளிப்பு எப்போது நிகழ்கிறது என்பதை விவரி.
விடை:
- அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்தை நோக்கி ஒளி செல்லும் போது குத்துக் கோட்டை விட்டு விலகிச் செல்கிறது.
- அடர் மிகு ஊடகத்தில் படு கோணம் அதிகரிக்கும் போது அடர்குறை ஊடகத்தில் அதன் விலகு கோணமும் அதிகரிக்கிறது.
- குறிப்பிட்ட படுகோணத்திற்கு விலகு கோணத்தின் மதிப்பு r=90°. அல்லது பெருமம் எனில் அக்கோணம் water மாறுநிலைக் கோணம் Qo எனப்படும்.
படுகோணத்தின் மதிப்பு QC – யை விட அதிகமாக உள்ளபோது, விலகு கதிர் வெளியேறாது. ஏனெனில் r > 90°; எனவே அதே ஊடகத்திலேயே ஒளி முழுவதுமாக எதிரொளிக்கப்படுகிறது. இதுவே முழு அக எதிரொளிப்பு ஆகும்.