Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 4 மின்னூட்டமும் மின்னோட்டமும் Textbook Questions and Answers, Notes.
TN Board 9th Science Solutions Chapter 4 மின்னூட்டமும் மின்னோட்டமும்
9th Science Guide மின்னூட்டமும் மின்னோட்டமும் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
Question 1.
ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்
அ) எலக்ட்ரான்களின் ஏற்பு
ஆ) புரோட்டான்களின் ஏற்பு
இ) எலக்ட்ரான்களின் இழப்பு
ஈ) புரோட்டான்களின் இழப்பு
விடை :
இ) எலக்ட்ரான்களின் இழப்பு
Question 2.
சீப்பினால் தலைமுடியைக் கோதுவதனால்
அ) மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன
ஆ) மின்னூட்டங்கள் இடம் பெயர்கின்றன
இ) அ அல்ல து ஆ
ஈ) இரண்டும் அல்ல
விடை :
ஆ) மின்னூட்டங்கள் இடம் பெயர்கின்றன
Question 3.
மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் ……………………………. எதிர்மின்னூட்டத்தில் …………………………….
அ) தொடங்கி ; தொடங்கும்
ஆ) தொடங்கி ; முடிவடையும்
இ) முடிவடைந்து ; தொடங்கும்
ஈ) முடிவடைந்து ; முடியும்
விடை :
ஆ) தொடங்கி ; முடிவடையும்
Question 4.
ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அதனருகில் கொண்டு வர செய்யப்படும் ……………………………. அளவாகும்.
அ) விசையின்
ஆ) திறமையின்
இ) போக்கின்
ஈ) வேலையின்
விடை :
ஈ) வேலையின்
Question 5.
மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்குக் காரணம் …………………………….
அ) எலக்ட்ரான்கள்
ஆ) நேர் அயனிகள்
இ) அ மற்றும் ஆ
ஈ) இரண்டும் அல்ல
விடை :
இ) அ மற்றும் ஆ இரண்டுமே
Question 6.
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ……………………………. என அழைக்கப்படும்.
அ) ஜூல் வெப்பமேறல்
ஆ) கூலூம் வெப்பமேறல்
இ) மின்னழுத்த வெப்பமேறல்
ஈ) ஆம்பியர் வெப்பமேறல்
விடை :
அ) ஜூல் வெப்பமேறல்
Question 7.
மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?
அ) வெப்ப விளைவு
ஆ) வேதி விளைவு
இ) பாய்வு விளைவு
ஈ)காந்த விளைவு
விடை :
ஆ) வேதி விளைவு
Question 8.
ஒரு கம்பியின் மின்தடை எதைப் பொறுத்து அமையும்?
அ) வெப்பநிலை
இ) கம்பியின் இயல்பு
ஈ) இவையனைத்தும்
விடை:
ஈ) இவையனைத்தும்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
விடைகள் எலக்ட்ரான்கள் ……………………………….. மின்னழுத்தத்திலிருந்து ……………………….. மின்னழுத்தத்திற்கு நகரும்
விடை:
அதிக, குறைந்த
Question 2.
எலக்ட்ரான்கள் நகரும் திசைக்கு எதிர்த்திசையில் நகர்வது மின்னோட்டம் எனப்படும்.
விடை:
மரபு
Question 3.
ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில் ………………………. க்கு ஒப்பானது; ………………………. (இறைப்பான்/குழாய்/ வால்வு)
விடை:
இறைப்பான்
Question 4.
இந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் ………………………… Hz அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் ஆகும்.
விடை:
150 Hz
III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக
Question 1.
மின்னியல் நடுநிலை என்பது சுழி மின்னூட்டம் அல்லது சமமான அளவு நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் உள்ளதைக் குறிக்கும்
விடை:
சரி
Question 2.
ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் பக்க இணைப்பில் இணைக்கப்படும் ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் தொடர் இணைப்பில் இணைக்கப்படும்
விடை:
தவறு
Question 3.
மின்பகு திரவத்தினுள் ஆனோடு எதிர்மின் குறி உடையது மின்பகு திரவத்தினுள் ஆனோடு நேர்மின் குறி உடையது
விடை:
தவறு
Question 4.
மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும்
விடை:
சரி
IV. பொருத்துக
V. கருத்துரு வினாக்கள்
Question 1.
உயர் மின்திறன் கம்பியில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை பாதுகாப்பாகவே உள்ளது எப்படி?
- உயர் மின்திறன் கம்பியில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை பாதுகாப்பாகவே உள்ளது. ஏனெனில் ஒரேகம்பியில் இருப்பதால் மின் சுற்று பூர்த்தியாகாது.
- மின்னழுத்த வேறுபாடு சுழி ஆகும்.
- இதே பறவை மற்றொரு காலை (அ) இறகை அருகிலுள்ள கம்பியில் மோதச் செய்தால் மின்சுற்று பூர்த்தியடைந்து பறவை எரிந்துவிடும்.
Question 2.
சூரிய மின்கலத்தின் மின்னழுத்தம் எப்போதும் மாறாமல் இருக்குமா? கலந்தாய்வு செய்க.
- சூரிய மின்கலத்தில் மின்னழுத்தம் எப்போதும் ஓரே சீராக இருக்காது.
- சூரிய மின்கலம் ஒளி மின்னழுத்த விளைவு தத்துவத்தில் செயல்படுகிறது.
- இதனால் மின்னோட்டம், மின்னழுத்தம், மின் தடை ஆகியவை மாறுபடும். சூரிய கதிர் குறைந்த செறிவிலிருந்து, உயர் செறிவிற்கு செல்லும்.
Question 3.
மாறு மின்னோட்டத்தின் மூலம் மின் முலாம் பூச முடியுமா? காரணம் கூறு.
- மாறு மின்னோட்டத்தின் மூலம் மின் முலாம் பூச முடியாது.
- காலத்தைப் பொறுத்து மின்னோட்டத்தின் திசை மாறிக் கொண்டே இருக்கும். எனவே A.C ஐக் கொண்டு மின் முலாம் பூச முடியாது.
- எனவே மின்முலாம் பூச நேர்த்திசை மின்னோட்டத்தை (DC) பயன்படுத்த வேண்டும்.
VI. பின்வரும் வினாக்களுக்கு விடையளி
Question 1.
இரு மின்னூட்டங்களுக்கு இடையேயான நிலைமின்னியல் விசை எந்த காரணிகளைச் சார்ந்தது?
- மின்னூட்ட மதிப்பு
- மின்னூட்டங்களுக்கு இடையேயான தொலைவு
- அவற்றுக்கிடையேயான ஊடகத்தின் தன்மை
Question 2.
மின்விசைக் கோடுகள் என்றால் என்ன?
மின்புலத்தில் வைக்கப்படும் ஓரலகு நேர் மின்னோட்டம் நகரும் நேர் அல்லது வளைவு கோடுகள்.
Question 3.
மின்புலம் வரையறு.
ஒரு மின்னூட்டத்தைச் சுற்றி மற்றொரு மின்னூட்டம் மின் விசையை உணரும் பகுதி
Question 4.
மின்னோட்டம் வரையறு. அதன் அலகினைத் தருக.
- மின்சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பு.
\(I=\frac{q}{t}\) - SI அலகு: ஆம்பியர் (A)
Question 5.
ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
மின் சலவைப் பெட்டி, நீர் சூடேற்றி, வறுதட்டு (ரொட்டி)
Question 6.
வீட்டு உபயோக மின் பொருள்கள் எவ்வாறு இணைக்கப்படுகின்றன? தொடரிணைப்பிலா? பக்க இணைப்பிலா? காரணங்கள் தருக.
பக்க இணைப்பு:
- பக்க இணைப்பில் ஒவ்வொரு மின் சாதனத்திற்குமிடையே மின்னழுத்த வேறுபாடு சமமாக இருக்கும்.
- மேலும் ஒவ்வொரு சாதனத்தையும் தனித் தனியாக ON, OFF செய்ய இயலும் தொடரிணைப்பில் இது முடியாது.
- தொடரிணைப்பில் இணைத்தால் ஒரு மின் சாதனத்தில் பழுது ஏற்பட்டால் மற்ற சாதனங்கள் இயங்காது.
Question 7.
மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்களைக் கூறுக.
தரையிணைப்பு : அதிகப்படியான மின்னோட்டம் நம்மை தாக்காமல் இந்த இணைப்பின் வழியே பூ மிக்கு சென்று விடும்.
முறிசாவி : குறிப்பிட்ட அளவிற்கு மேல் மின்னோட்டம் பாய்ந்தால் இணைப்பை துண்டித்து விடும்.
மின்னுருகு இழை : மின் சுற்றில் குறிப்பிட்ட விழைவு மதிப்பிற்கு மேல் இவ்விழை வழியே மின்னோட்டம் பாயும் போது உருகி இணைப்பை துண்டித்துவிடும்.
VII. பயிற்சி கணக்குகள்
Question 1.
நெகிழிச் சீப்பு ஒன்றை தலைமுடியில் தேய்ப்பதனால் அது -0.4C மின்னூட்டத்தைப் பெறுகிறது எனில், (அ) எந்தப் பொருள் எலக்ட்ரானை இழந்தது? எது எலக்ட்ரானைப் பெற்றது? (ஆ) இந்நிகழ்வில் இடம் பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?
விடை:
(அ) தலைமுடி எலக்ட்ரான்களை இழக்கும். சீப்பு எலக்ட்ரான்களை பெற்றுக் கொள்ளும்.
(ஆ) இடம் பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான் எண்ணிக்கை \(=n=\frac{q}{e}\)
d – மின்னூட்டம் \(=\frac{-0.4}{1.6 \times 10^{-19}}\)
e – எலக்ட்ரானின் மின் விட்டம்
n – எலக்ட்ரானின் எண்ணிக்கை n =-0.25 x 1019 = 2.5 x 1018
Question 2.
2.5A அளவு மின்னோட்டம் மின்விளக்கு ஒன்றின் வழியே 2 மணி நேரம் பாய்ந்தால், அதன் வழியே செல்லும் மின்னூட்டத்தின் மதிப்பைக் கணக்கிடுக.
\(I=q / t\)
I=9/ நேரம் t = 2 மணி = 2 x 60 x 60 = 7200 வினாடி
மின்னோட்டம் I = 2.5A
மின்னூட்டம் q = I x t
= 2.5 x 7200
= 18000
q = 1.8 x 104C
Question 3.
மின்தடையம் ஒன்றில் பாயும் மின்னோட்டம் (1) மற்றும் அதன் குறுக்கே உருவாகும் மின்னழுத்த வேறுபாடு (V) ஆகியவற்றின் மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மின்தடையத்தின் மின்தடை மதிப்பு என்ன?
விடை:
9th Science Guide மின்னூட்டமும் மின்னோட்டமும் Additional Important Questions and Answers
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
Question 1.
மின்னூட்டத்தின் அலகு ……………………………… ஆகும்
விடை:
கூலூம்
Question 2.
+ 5 C மற்றும் – 3 C மின்னூட்டங்கள் கொண்ட அமைப்பின் மொத்த மின்னூட்டம் ………………………………
விடை:
+2C
Question 3.
மின்னோட்டத்தின் SI அலகு ………………………………
விடை:
ஆம்பியர் (A)
Question 4.
1 கூலும் மின்னூட்டத்திலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
விடை:
6.25 x 1018
Question 5.
மின்னூட்டங்கள் பாயும் வீதம் ……………………………… எனப்படும்.
விடை:
மின்னோட்டம்
Question 6.
ஒத்த மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று ……………………………… எதிர் மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று ……………………………….
விடை:
எதிர்க்கும், ஈர்க்கும்
Question 7.
மின்னூட்டத்திற்கான சமன்பாடு ……………………………..
விடை:
q = ne
Question 8.
ஒரு மின்னூட்டத்தை சுற்றி ஒரு சோதனை மின்னூட்டம் மின்விசையை உணரக்கூடிய பகுதி ………………………….
விடை:
மின்புலம்
Question 9.
மின்விசைக்கு எதிராக ஓரலகு நேர் மின்னூட்டத்தை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு கொண்டு வர செய்யும் வேலை …………………………..
விடை:
மின்னழுத்தம்
Question 10.
நேர் மின்னூட்டங்களின் இயக்கம் …………………………. என அழைக்கப்படும்
விடை:
மரபு மின்னோட்டம்
Question 11.
ஒன்றுக்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு ………………………….
விடை:
மின்கல அடுக்கு
Question 12.
மின்னோட்டத்தை அளக்கும் கருவி …………………………..
விடை:
அம்மீட்டர்
Question 13.
அம்மீட்டரை மின்சுற்றில் ………………………. இணைப்பில் இணைக்க வேண்டும்
விடை:
தொடர்
Question 14.
மின்னியக்குவிசையின் அலகு ……………………….
விடை:
வோல்ட்
Question 15.
மின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவும் கருவி ……………………….
விடை:
வோல்ட் மீட்டர்
Question 16.
மின்தடையின் SI அலகு ……………………….
விடை:
ஓம் (22)
Question 17.
மின்தடையை அளிக்கும் பொருட்கள் ………………………. ஆகும்
விடை:
மின்தடையங்கள்
Question 18.
ஓம் விதி என்பது ……………………………
விடை:
V = IR
Question 19.
நிலையான மின்தடைக்கு உதாரணம் ……………………….
விடை:
கார்பன் மின்தடைகள், கம்பி சுற்றிய மின்தடைகள்
Question 20.
மின்னோட்டத்தின் பாய்வு எதிர்க்கப்படும் போது ………………………. உருவாகிறது.
விடை:
வெப்பம்
Question 21.
மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படும் நிகழ்வு ……………………….
விடை:
ஜீல் வெப்ப விளைவு
Question 22.
ஜீல் வெப்ப விளைவின்படி செயல்படுபவை ……………………….
விடை:
மின்சலவைப் பெட்டி, நீர் சூடேற்றி
Question 23.
மின்னோட்டம் பாயும் கரைசல் ………………………. எனப்படும்.
விடை:
மின்பகு திரவம்
Question 24.
வீடுகளில் கொடுக்கப்படும் மின்னழுத்தம் …………………………………
விடை:
220 v
Question 25.
மிகக் குறைந்த மின்தடை கொண்ட பொருள்கள் ………………………………… எனப்படும்.
விடை:
கடத்திகள்
Question 26.
மனித உடலில் தோன்றும் வலிமை குன்றிய மின்னோட்டத்தின் பெயர் …………………………………
விடை:
நரம்பிணைப்பு சைகை
Question 27.
மின்னணுச் சுற்றுகளினால் பயன்படுத்தப்படும் மின்னோட்டம் …………………………………
விடை:
நேர்த்திசை மின்னோட்டம்
Question 28.
மாறுதிசை மின்னோட்டத்தை நேர்த்திசை மின்னோட்டமாக மாற்றும் கருவி ……………………………..
விடை:
திருத்தி
Question 29.
………………………………… வடிவில் மட்டுமே மின்சாரத்தை சேமிக்க இயலும்
விடை:
நேர் மின்னூட்ட
Question 30.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் மாறு மின்னோட்டத்தின் அதிர்வெண் …………………………………
விடை:
50Hz
Question 31.
உலர்ந்த நிலையில் மனித உடலில் உள்ள மின்தடை
விடை:
1,00,000 ஓம்
Question 32.
முறிசாவி செயல்படும் தத்துவம் …………………………………
விடை:
தொடர்பியலி
Question 33.
மின் உருகு இழையின் தத்துவம் …………………………………
விடை:
ஜீல் வெப்பநிளைவு
Question 34.
மின் உருகு இழை ………………………………… ஆல் ஆனது.
விடை:
நிக்கல் குரோமியம்
Question 35.
தொடர்பிணைப்பில் மின்னோட்டம் பாய் ………………………………… பாதை உண்டு
விடை:
ஒரே ஒரு
Question 36.
2Ω, 3Ω, 4Ω மின்தடைகள் தொடர்பினைப்பில் இணைக்கப்பட்டால் தொகுபயன் மின்தடை ……………………………….
விடை:
9Ω
Question 37.
5Ω, 20Ω மின்தடைகள் பக்க இணைப்பில் இருந்தால் தொகுபயன் மின்தடை மதிப்பு …………………………………
விடை:
5Ω
Question 38.
………………………………… என்பது நேர் மின்னூட்டங்கள் இயங்கும் திசையில் இயங்கும்
விடை:
மரபு மின்னோட்டம்
Question 39.
மின்னியக்கு விசையின் சமன்பாடு …………………………………
விடை:
\(\Sigma=\frac{\mathrm{W}}{\mathrm{q}}\)
Question 40.
கரைசல்களில் மின்னோட்டம் கடத்தப்படும் நிகழ்வு ………………………………… எனப்படும்.
விடை:
மின்னாற்பகுப்பு
Question 41.
அணுக்கள் ……………….., ……………….., ………………. ஆகிய துகள்களைக் கொண்டுள்ளது.
விடை:
எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான்
Question 42.
மின்புலத்தைக் குறிக்கும் கோடுகள் ………………………………… எனப்படுகின்றன.
விடை:
மின்விசைக் கோடுகள்
Question 43.
மின்னழுத்த வேறுபாட்டை ஏற்படுத்துவது …………………………………
விடை:
மின்கலம்
Question 44.
மின்சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பே ………………………………… எனப்படும்.
விடை:
மின்னோட்டம்
Question 45.
மின்னோட்டத்தின் SI அலகு ………………………………… மற்றும் அதன் குறியீடு
விடை:
ஆம்பியர், A
Question 46.
பருப்பொருள்கள் அனைத்தும் ………………………………… ஆனவை
விடை:
அணுக்களாலும், மூலக்கூறுகளாலும்
Question 47.
மின்தடையின் SI அலகு ………………………………… மற்றும் அதன் குறியீடு. ………………………………… ஆகும்
விடை:
ஓம், Ω
Question 48.
………………………………… மூலங்களில் ஒன்று மின்கல அடுக்கு ஆகும்
விடை:
நேர்திசை மின்னோட்டத்தின்
Question 49.
மின்னோட்டம் பாய்வதை எதிர்க்கும் இப்பண்பு ………………………………… எனப்படும்
விடை:
மின்தடை
Question 50.
இரு புள்ளி மின்னூட்டங்களுக்கிடையில் ஏற்படும் நிலைமின்னியல் விசை ………………………………… விதியின் அடிப்படையில் இயங்குகிறது.
விடை:
நியூட்டனின் மூன்றாவது
II. பொருத்துக
III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக
Question 1.
மின்னூட்டங்களுக்கிடையில் உருவாகும் விசை மின்புலம் எனப்படும். மின்னூட்டங்களுக்கிடையில் உருவாகும் விசை மின்விசை எனப்படும்.
விடை:
தவறு
Question 2.
மாறுதிசை மின்னோட்டத்தின் மூலங்களில் ஒன்று மின்கல அடுக்கு ஆகும். நேர்திசை மின்னோட்டத்தின் மூலங்களில் ஒன்று மின்கல அடுக்கு ஆகும்.
விடை:
தவறு
Question 3.
வெவ்வேறு மின் பொருள்களின் மின்தடை ஒன்றாக இருக்கும். வெவ்வேறு மின் பொருள்களின் மின்தடை வெவ்வேறாக இருக்கும்.
விடை:
தவறு
Question 4.
மின்னூட்டம் பெற்ற பொருள் ஒன்றிற்கு கடத்தும் பாதை அளிக்கப்பட்டால், எலக்ட்ரான்கள் அதிக மின்னழுத்தத்திலிருந்து குறைவான மின்னழுத்தத்திற்கு அப்பாதை வழியே பாய்கின்றன.
விடை:
சரி
Question 5.
மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படும் இந்நிகழ்வு ஜூல் வெப்பமேறல் அல்லது ஜுல் வெப்பவிளைவு எனப்படும்.
விடை:
சரி
Question 6.
மாறு திசை மின்னோட்டத்தை நேர்திசை மின்னோட்டமாக மாற்றும் கருவிக்கு திருத்தி என்று பெயர்.
விடை :
சரி
IV. கூற்று மற்றும் காரண வகை. சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
a) கூற்றும் காரணமும் சரி, கூற்றுக்கான காரணம் சரியானது.
b) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.
c) கூற்று சரி, காரணம் தவறு.
d) கூற்று தவறு, காரணம் சரி.
Question 1.
கூற்று (A) : மின்னூட்டங்களின் இயக்கமே மின்னோட்டமாகும்.
காரணம் (R) : உயர் மின்னழுத்தத்திலிருந்து தாழ் மின்னழுத்தத்திற்கு மின்னோட்டம் பாயும்.
விடை:
(a) கூற்றும், காரணமும் சரி, கூற்றுக்கான காரணம் சரியானது.
Question 2.
கூற்று (A) : இரு மின்னூட்டங்களுக்கிடையேயான நிலைமின்னியல் விசை நியூட்டன் மூன்றாம் விதி அடிப்படையில் இயங்குகிறது.
காரணம் (R) : ஒரு மின்னூட்டத்தின் மீது ஏற்படும் விசை வினையாகவும் இன்னொரு மின்னோட்டத்தின் மீது ஏற்படும் விசை எதிர்வினையாகவும் செயல்படுகின்றன.
விடை:
(a) கூற்றும், காரணமும் சரி, கூற்றுக்கான காரணம் சரியானது.
Question 3.
கூற்று (A) : மாறும் மின்தடையங்களில் சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மாற்ற முடியும்.
காரணம் (R) : கரிம படல மின்தடையங்கள் மாறும் மின்தடையம் ஆகும்.
விடை:
(c) கூற்று சரி, காரணம் தவறு
V. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக
Question 1.
மின்னூட்டம் : q = It
மின்னோட்டம் : I= __________
விடை:
= 1 = q/t
Question 2.
தரையிணைப்பு : பச்சை நிறம்
முதன்மை கம்பி : ___________________
விடை:
= சிவப்பு நிறம்
Question 3.
தொடரிணைப்பு : Rs = R1 + R2
பக்க இணைப்பு : __________________
விடை:
\(1 / \mathbf{R}_{\mathrm{P}}=1 / \mathrm{R}_{1}+1 / \mathrm{R}_{2}+1 / \mathrm{R}_{3}\)
Question 4.
நேர்த்திசை மின்னோட்டம் : நேர்கோடு
மாறுதிசை மின்னோட்டம் : _____________________
விடை:
= அலைவடிவம்
Question 5.
அம்மீட்டர் : தொடரிணைப்பு
வோல்ட் மீட்டர் : _______________________
விடை:
= பக்க இணைப்பு
VI. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்
Question 1.
மின் விசை என்றால் என்ன?
விடை:
- மின்னூட்டங்களுக்கிடையே உருவாகும் விசை மின்விசை எனப்படும்.
- இவ்விசை தொடுகையில்லா விசை வகையைச் சார்ந்தது.
Question 2.
மின்னழுத்தம் என்றால் என்ன?
விடை:
அனைத்து மின்விசைக் கோடுகளுக்கும் எதிராக ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு கொண்டு வரச் செய்யப்படும் வேலை மின்னழுத்தம் எனப்படும்.
Question 3.
ஒருகு ஒம் (ohm) வரையறு.
விடை:
- ஒரு கடத்தியின் வழியே 1 ஆம்பியர் மின்னோட்டம் பாயும்போது அதன் முனைகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு 1 வோல்ட் எனில் அந்தக் கடத்தியின் மின்தடை 1 ஓம் ஆகும். \(\mathrm{R}=\frac{V}{\mathrm{I}} \alpha\)
Question 4.
நிலையான மின்தடை, மாறும் மின்தடை வேறுபடுத்துக. நிலையான மின்தடை
விடை:
Question 5.
ஒரு மின்சுற்றுப் படத்தின் முக்கிய உறுப்புகள் யாவை? சாவி மின்தடை அவற்றை பயன்படுத்தி எவ்வாறு மின்சுற்றுப்படம் வரைவாய்?
(i) மின்கலம்
(ii) இணைப்புக்கம்பி
(iii) சாவி
(iv) மின்த டை
Question 6.
மின்னாற்பகுப்பு என்றால் என்ன? மின்பகு திரவம் என்றால் என்ன? மின்கலம்
விடை:
- கரைசல்களில் மின்னோட்டம் கடத்தப்படும் நிகழ்வு மின்னாற்பகுப்பு எனப்படும்.
- மின்னோட்டம் பாயும் கரைசல் மின்பகு திரவம் எனப்படும்.
Question 7.
வலது கட்டைவிரல் விதியைக் கூறு.
விடை:
மின்னோட்டம் வலது கை கட்டை விரலின் திசையில் சென்றால் உருவாகும் காந்தப்புலத்தின் திசை மற்ற விரல்களின் திசையில் இருக்கும்.
Question 8.
மாறுதிசை மின்னோட்டத்தைக் காட்டிலும் நேர்த்திசை மின்னோட்டத்தின் நன்மைகள் யாவை? வரிசைப்படுத்துக.
விடை:
- மின்முலாம் பூசுதல், மின் தூய்மையாக்குதல், மின்னச்சு வார்த்தல் ஆகியவற்றை நேர்த்திசை மின்னோட்டத்தைக் கொண்டே செய்ய இயலும்.
- நேர் மின்னூட்ட வடிவில் மட்டும் மின்சாரத்தை சேமிக்க இயலும்.
Question 9.
ஓமின் விதியைக் கூறுக.
விடை:
ஒரு மின்சுற்றில் இரு புள்ளிகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு அதன் வழியே பாயும் மின்னோட்டத்திற்கு நேர்த்தகவில் இருக்கும். V α I (அ) V = R
VII. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்
Question 1.
தொடரிணைப்பில் மின்தடையங்கள் இணைக்கப்படும் போது தொகுபயன்மின்தடையை கணக்கிடுக.
விடை:
- மூன்று மின்தடைகள் R1, R2 மற்றும் R3 தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
- ஒவ்வொரு மின்தடை வழியே ஒரே அளவு மின்னோட்டம் பாயும்.
- R1, R2, R3 மின்தடைகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு V1, V2, V3,
V = V1 + V2 + V3
- எனவே தொடரிணைப்பில் உள்ள மின்தடைகளின் பயனுறு மின்தடை தனித்தனி மின்தடைகளின் கூடுதலுக்குச் சமம்.
Question 2.
மின்சாரத்தால் விளையும் ஆபத்துகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வரிசைப்படுத்துக.
விடை:
- சேதமடைந்த மின்காப்பு : சேதமடைந்த, வெற்றுக்கம்பியை வெறும் கைகளால் தொடக் கூடாது. ரப்பர் கையுறை (அ) ரப்பர் காலணி அணிந்து தான் மின்சாரத்தை கையாள வேண்டும்.
- வடங்கள் அதிக சூடாதல் : வீடுகளில் தரமான ISI கம்பி வடங்களைப் பயன்படுத்த வேண்டும்.
- மின் பொருத்துவாய்கள் மிகைபாரமேற்றல் : ஒரே மின்பொருத்துவாயில் பல மின் சாதனங்களைப் பொருத்தக் கூடாது.
- பொருத்தமற்ற முறையில் மின்சாதனங்களை பயன்படுத்துதல் : மின்சாதனங்களை அவற்றின் வரையளவுக்கு தகுந்தவாறு பயன்படுத்த வேண்டும்.
- ஈரப்பதம் மிக்க சூழல் : மின்சாரம் உள்ள இடங்களில் நீரோ (அ) ஈரப்பதமோ இல்லாமல் உலர்வாக இருக்க வேண்டும். ஏனெனில் மின்கசிவு ஏற்படும்.
- குழந்தைகளுக்கு எட்டும் வகையில் வைத்தல் : மின்சாரத்தால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படா வண்ணம் மின் பொருத்துவாய்களை வைக்க வேண்டும்.