Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 3 பாய்மங்கள் Textbook Questions and Answers, Notes.
TN Board 9th Science Solutions Chapter 3 பாய்மங்கள்
9th Science Guide பாய்மங்கள் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
Question 1.
நீரில் முழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவு (அ) குறையும்
(ஆ) அதிகரிக்கும்
(இ) அதே அளவில்
இ) ருக்கும்
(ஈ) குறையும் அல்லது அதிகரிக்கும்.
விடை :
(ஆ) அதிகரிக்கும்
Question 2.
வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு அவற்றின் குறைந்த ……………………………….. காரணமாகும்.
(அ) அடர்த்தி
(ஆ) அழுத்தம்
(இ) திசைவேகம்
(ஈ) நிறை
விடை :
(அ) அடர்த்தி
Question 3.
அழுத்த சமையற்கலனில் (Pressure cooker) உணவு விரைவாக சமைக்கப்படுவதற்குக் காரணம், அதனுடைய
(அ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையைக் குறைக்கிறது.
(ஆ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.
(இ) குறைக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.
(ஈ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் உருகு நிலையைக் குறைக்கிறது.
விடை :
(ஆ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.
Question 4.
நீருள்ள வாளியில், காற்றுப் புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. பாட்டில் கீழ்நோக்கி தள்ளப்படும் போது, அதன் அடிப்பகுதியில் செயல்படும் விசையானது அதிகரிக்கிறது. இதற்கான காரணம் என்ன?
(அ) அதிக பருமனுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.
(ஆ) அதிக எடையுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.
(இ) ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது.
(ஈ) மேலே கூறிய யாவும்
விடை:
(இ) ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கிறது.
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
Question 1.
பொருளானது திரவத்தில் மூழ்கியிருக்கும் போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையை விட ……………………………….. ஆகத் தோன்றும்.
விடை:
குறைவாகத்
Question 2.
வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி ……………………………….. ஆகும்.
விடை:
காற்றழுத்தமானி
Question 3.
திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின்……………………………….. ஐப் பொறுத்தது.
விடை:
அடர்த்தியை
Question 4.
பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் ……………………………….. மூலம் வேலை செய்கிறது.
விடை:
அழுத்தம்
III . சரியா? தவறா? தவறெனில் திருத்துக
Question 1.
இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட நீரின் எடை மிதப்பு விசையைத் தீர்மானிக்கிறது.
விடை:
சரி
Question 2.
ஒருபொருளின் வடிவம் அப்பொருள் மிதக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது. ஒரு பொருளின் அடர்த்தி அப்பொருள் மிதக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.
விடை:
தவறு
Question 3.
மிக உயரமான கட்டடங்களின் அடிப்பாகம் அகலமாக இருப்பதால், கட்டடம் அதிக அழுத்தத்தை புவியின் மீது செலுத்துகிறது. மிக உயரமான கட்டடங்களின் அடிப்பாகம் அகலமாக இருப்பதால், கட்டடம் குறைந்த அழுத்தத்தை புவியின் மீது செலுத்துகிறது.
விடை:
தவறு
Question 4.
ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும்.
விடை:
சரி
Question 5.
நீரியல் அழுத்தி எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுக்க பயன்படுகிறது.
விடை:
சரி
IV. பொருத்துக
V. சுருக்கமாக விடையளி.
Question 1.
திரவம் ஏற்படுத்தும் அழுத்தம் எந்தெந்த காரணிகளைப் பொறுத்தது?
விடை:
திரவங்களில் ஏற்படும் அழுத்தத்தை நிர்ணயிக்கும் காரணிகள்
- ஆழம் (h)
- திரவத்தின் அடர்த்தி (p)
- புவியீர்ப்பு முடுக்கம் (g)
Question 2.
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பது ஏன்?
விடை:
- காற்றைவிட ஹீலியம் அடர்த்தி குறைவு.
- எனவே ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதக்கிறது.
Question 3.
ஆற்று நீரில் நீந்துவது கடல் நீரில் நீந்துவதைவிட எளிதாக இருப்பது ஏன்?
விடை:
- உப்பின் காரணத்தால் கடல் நீரின் அடர்த்தி, ஆற்று நீரின் அடர்த்தியை விட அதிகம்,
- கடல் நீரின் அதிகமான மிதப்பு விசையால் நீந்துபவரின் உடல் குறைவாகவே கடல் நீரில் மூழ்குகிறது. எனவே, கடல் நீரில் நீந்துவது எளிது.
Question 4.
வளி மண்டல அழுத்தம் என்றால் என்ன?
விடை:
குறிப்பிட்ட உயரம் வரை (ஏறத்தாழ 300 கி.மீ) காற்றால் சூழப்பட்ட பூமியானது, வளிமண்டலம் ஆகும்.
காற்றிற்கு எடை உள்ளது. எனவே இடத்தை அடைத்துக்கொள்ளும். மேலும் காற்றும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது வளிமண்டல அழுத்தம் எனப்படும்.
வளிமண்டல அழுத்தம் என்று குறிப்பிடும்போது கடல் மட்டத்தில் உள்ள அழுத்தத்தை குறிப்பிடுகிறோம்.
Question 5.
பாஸ்கல் விதியைக் கூறு.
அழுத்தமுறா திரவங்களில் செயல்படும் புறவிசையானது, திரவங்களின் அனைத்துத் திசைகளிலும் சீராக கடத்தப்படும்.
VI. விரிவாக விடையளி
Question 1.
சிறிய பரப்பின் மீது செயல்படும் விசை அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது என்பதை ஒரு செயல்பாட்டின் மூலம் விளக்குக.
விடை:
- மணற்பாங்கான பரப்பின்மீது நிற்கவும். உங்கள் கால்கள் மணலுக்குள் ஆழமாகச் செல்லும். அதே பரப்பின் மீது படுக்கும்போது, முன்புபோல் உடல் ஆழமாக மணலுக்குள் செல்லாது.
- இரு நிகழ்வுகளிலும், மணல்மீது செயல்படும் விசையை ஏற்படுத்தும் உங்கள் உடலின் எடையானது மாறாமல் உள்ளது. பரப்பிற்குச் செங்குத்தாகச் செயல்படும் இந்த விசையானது “உந்துவிசை” எனப்படும்.
- மணலில் நிற்கும்போது செயல்படும் விசை கால்களின் பரப்பளவிற்குச் சமமான பரப்பளவில் செயல்படுகிறது.
- ஆனால் படுத்திருக்கும் நிலையில் அதே விசையானது உடலின் பரப்பளவிற்கு சமமான பரப்பில் செயல்படுகிறது. உடலின் பரப்பளவு கால்களின் பரப்பளவை விட அதிகமாகும்.
- உந்துவிசையின் விளைவாக தோன்றும் அழுத்தமானது, அது செயல்படும் பரப்பளவை சார்ந்தது. எனவே மணலில் நிற்கும்போது ஏற்படும் உந்துவிசையின் விளைவு படுக்கும்போது ஏற்படும் உந்து விசையின் விளைவைவிட அதிகம்.
- இதிலிருந்து சிறிய பரப்பின் மீது செயல்படும் விசை அதிக அழுத்தத்தை கொடுக்கிறது எனத் தெரிகிறது,
Question 2.
காற்றழுத்தமானியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தை விவரிக்கவும்.
விடை:
- வளிமண்டல அழுத்தத்தை அளக்க காற்றழுத்தமானி என்னும் கருவி பயன்படுகிறது.
அமைப்பு:
- ஒரு முனை திறந்தும் ஒரு முனை மூடியும் உள்ள நீண்ட கண்ணாடிக் குழாயில் பாதரசம் நிரப்பப்பட்டு தலைகீழாக ஒரு கொள்கலனில் வைக்கப்பட்டுள்ளது.
- தலைகீழாக கவிழ்க்கும் போது, திறந்திருக்கும் முனையை.
- கட்டை விரலால் மூடி, பாதரசம் உள்ள கொள்கலனில் கவிழ்க்க வேண்டும்.
செயல்படும் விதம்:
காற்றழுத்தமானியில் உள்ள பாதரசம் வெளியில் உள்ள.
- காற்றின் அழுத்தத்தை சமன்செய்து இயங்குகிறது.
- காற்றின் அழுத்தம் அதிகரிக்கும்போது, கொள்கலனில் உள்ள பாதரசம் கண்ணாடிக் குழாயினுள் தள்ளப்படுகிறது. காற்றின் அழுத்தம்குறையும்போது, குழாயினுள் உள்ள பாதரசம் வெளியேற்றப்படுகிறது.
- குழாயின் மூடிய முனைக்கும், உள்ளேயுள்ள பாதரசத்திற்கும் இடையே காற்று இல்லாமல் வெற்றிடமாக உள்ளது.
- வெற்றிடம் எந்த ‘அழுத்தத்தையும் ஏற்படுத்த இயலாது. ஆகையால் குழாயில் உள்ள பாதரசம் வளிமண்டலத்தின் அழுத்தத்தைக் துல்லியமாக வழங்குகிறது.
- இக்கருவியை ஆய்வகத்திலோ அல்லது வானிலை மையத்திலோ பயன்படுத்தலாம்.
Question 3.
பொருளின் அடர்த்தி எவ்வாறு அப்பொருள் நீரில் மூழ்குமா அல்லது மிதக்குமா என்பதைக் தீர்மானிக்கிறது?
விடை:
- ஒரு பொருளானது கொடுக்கப்பட்ட திரவத்தில் மூழ்குவதோ அல்லது மிதப்பதோ, குறிப்பிட்ட அந்த திரவத்தின் அடர்த்தியோடு அப்பொருளின் அடர்த்தியை ஒப்பிடுவதன் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.
- திரவத்தின் அடர்த்தியை விட பொருளின் அடர்த்தி குறைவாக இருப்பின், அப்பொருளானது அத்திரவத்தில் மிதக்கும்.
- எடுத்துக்காட்டு :
- நீரைவிட அடர்த்தி குறைவாக மரக்கட்டை நீரில் மிதக்கும்.
- நீரைவிட அதிக அடர்த்தி கொண்ட பொருள்கள், (கல்லானது) நீரில் மூழ்கும்
Question 4.
திரவமானியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தை படத்துடன் விவரி.
விடை:
திரவமானி:
- ஒரு திரவத்தின் அடர்த்தியை அல்லது. ஒப்படர்த்தியை நேரடியாக அளப்பதற்குப் பயன்படும் கருவி ‘திரவமானி’ எனப்படும்.
தத்துவம்:
- ஒரு திரவத்தில் மூழ்கியுள்ள திரவமானியின் பகுதியினால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடையானது திரவமானியின் எடைக்குச் சமமாக இருக்கும்.
அமைப்பு:
- திரவமானியின் அடிப்பகுதியில் கோள வடிவத்தினாலான குடுவையையும் மேற்பகுதியில் மெல்லிய குழாயையும் கொண்ட நீண்ட உருளை வடிவ தண்டைக் கொண்டது.
- குழாயின் அடிப்பகுதியில் பாதரசம் அல்லது காரீயக் குண்டுகளால் நிரப்பப்பட்டுள்ளது.
- இது திரவமானியானது மிதப்பதற்கும், திரவங்களில் செங்குத்தாக நிற்பதற்கும் உதவுகிறது.
- மேலே உள்ள மெல்லிய குழாயில் உள்ள அளவீடுகள் மூலம் திரவத்தின் ஒப்படர்த்தியை நேரடியாக அளக்கமுடிகிறது.
செயல்படும்விதம்:
- சோதிக்க வேண்டிய திரவத்தினை கண்ணாடிக் குடுவையில் நிரப்ப வேண்டும்.
- திரவமானியை அத்திரவத்தில் மெதுவாக செலுத்தி, மிதக்கவிட வேண்டும்.
- குழாயின் அளவீடுகள் திரவத்தின் மேற்பகுதியைத் தொடும் அளவு, திரவத்தின் ஒப்படர்த்தி ஆகும்.
Question 5.
மிதத்தல் விதிகளைக் கூறு.
விடை:
மிதத்தல் விதிகளாவன :
- பாய்மம் ஒன்றின் மீது மிதக்கும் பொருளொன்றின் எடையானது, அப்பொருளினால் வெளியேற்றப்பட்ட பாய்மத்தின் எடைக்குச் சமமாகும்.
- மிதக்கும் பொருளின் ஈர்ப்பு மையமும், மிதப்பு வகையின் மையமும் ஒரே நேர்கோட்டில் அமையும்.
- மிதப்பு விசை செயல்படும் புள்ளியே மிதப்பு விசை மையம் எனப்படும்.
VII. கணக்கீடுகள்
Question 1.
200 கிராம் எடை கொண்ட மரக்கட்டை ஒன்று நீரின் மேல் மிதக்கிறது. மரக்கட்டையின் பருமன் 300 செமீ எனில் நீரினால் ஏற்படும் உந்துவிசையைக் கண்டுபிடி.
விடை:
1கி.கி = 9.8N
மரக்கட்டையின் எடை = 200
= 0.2 கி.கி
= 0.2 x 9.8
= 1.96N
= |நீரினால் ஏற்படும் உந்துவிசை = 1.96N
Question 2.
பாதரசத்தின் அடர்த்தி 13600 கிகி மீ’ எனில் ஒப்படர்த்தியைக் கணக்கிடுக.
விடை:
நீரின் அடர்த்தி , pw = 103 kg/m3
பாதரசத்தின் அடர்த்தி, pm = 13600 kg/m3
பாதரசத்தின் ஒப்படர்த்தி, RDm = ?
Question 3.
நீரின் அடர்த்தி 1 கி செமீ எனில் அடர்த்தியை SI அலகில் கூறு.
விடை:
- Cgs அலகு g/cm3 ஆகும்.
- அடர்த்தியின் SI அலகானது kg/m’ ஆகும்.
- 4°C நீரின் அடர்த்தியானது p = 1 kg/m3 ஆகும்.
Question 4.
100கி எடை கொண்ட மரக்கட்டை ஒன்று நீரில் மிதக்கிறது எனில் அதன் தோற்ற எடையைக் கண்டுபிடி
விடை:
100கி எடை கொண்ட மரக்கட்டையானது நீரின் மேல் மிதக்கும் போது, அவை ஒரு மேல்நோக்கிய உந்து விசையினை உணருகிறது. இந்த உந்துவிசையானது நீரில் மூழ்கியுள்ள மரக்கட்டையினால் வெளியேற்றப்பட்ட நீரின் காரணமாக ஏற்படுகிறது.
மிதக்கும் பொருளின் உந்து விசையானது, அப்பொருளின் எடைக்கு சமமாகும்.
எனவே பொருளின் தோற்ற எடையின் மதிப்பு “0” ஆகும்.
VIII. உயர் சிந்தனையைத் தூண்டும் வினாக்கள்.
Question 1.
வளிமண்டல அழுத்தம் 98.6கிலோபாஸ்கல் அளவு இருக்கும் பொழுது பாதரசகாற்றழுத்தமானியின் உயரம் எவ்வளவு இருக்கும்?
விடை:
Question 2.
மீன்கள் எவ்வாறு நீரின் மேலும் கீழும் நீந்த முடிகிறது?
விடை:
- மீனானது தனது செவுள்கள் மூலமாக சுற்றியுள்ள நீரில் இருக்கும் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு அதன் காற்றுப்பையை நிரப்புகிறது. இந்நிகழ்வினால் மீன்னுடைய உடலின் அடர்த்தியானது குறைக்கப்படுகிறது.
- மிதப்பு விசை மற்றும் புவியீர்ப்பு முடுக்கமானது ஒன்றுக்கொன்று எதிராக செயல்படுவதால் மீனினால் தொடர்ந்து அதே நிலையில் இருக்க முடிகிறது.
- பெரும்பாலான மீன்கள் இந்த முறையினை பயன்படுத்தியே நீரின் மேலும், கீழும் நீந்த முடிகிறது.
Question 3.
ஒரு பனிக்கட்டியை ஒரு குவளை நீரிலும், ஒரு குவளை ஆல்கஹாலிலும் போடும் பொழுது என்ன நிகழ்கிறது என்பதை கவனித்து விவரி.
விடை:
ஒரு பனிக்கட்டியை ஒரு குவளை நீரிலும், ஒரு குவளை ஆல்கஹாலிலும் போடும்போது, நீருள்ள குவளையில் பனிக்கட்டியானது மிதக்கிறது. மேலும் ஆலகஹால் உள்ள குவளையில் பனிக்கட்டியானது மூழ்குகிறது. நீரின் அடர்த்தியே இதற்கு காரணம் ஆகும்.
Question 4.
அடியில் துளையுடன் உள்ள படகு நீரில் செல்லும்பொழுது இறுதியில் மூழ்கிவிடும். ஏன்?
விடை:
- துளையுள்ள படகில் நீரானது வேகமாக நுழைகிறது. படகானது கனமாக இருப்பதால் அது மூழ்க தொடங்குகிறது. மேலும் அதற்கு சமமான நீரினை இடப்பெயர்ச்சி செய்ய முயலுகிறது.
- நீரானது தொடர்ந்து படகின் உள்ளே வருவதால், குழாயின் நீர்மட்ட அழுத்தமானது, வளிமண்டல அழுத்தத்தைவிட அதிகமாகிறது.
- இவ்வழுத்த வேறுபாடுகளால், துளையுள்ள படகானது நீரினில் அழுத்தப்பட்டு இறுதியில் மூழ்கிவிடுகிறது.
9th Science Guide பாய்மங்கள் Additional Important Questions and Answers
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
Question 1.
ஒரு பாஸ்கல் = ……………………………….. ஆகும்
விடை:
ஒரு நியூட்டன் / சதுர மீட்டர்
Question 2.
ஒரு பாய்மத்தினால் செலுத்தப்படும் அழுத்தமானது, ஒரு பொருளின் மீது ……………………………….. செயல்படுகிறது.
விடை:
அனைத்துத்திசைகளிலும்
Question 3.
திரவத்தின் ஆழம் அதிகரிக்கும் போது ……………………………….. அதிகரிக்கும்.
விடை:
அழுத்தமும்
Question 4.
1atm = ……………………………….. பார் ஆகும்.
விடை:
1.013
Question 5.
நெகிழும் தன்மைக் கொண்ட தோலினால் மூடப்பட்ட அமைப்பைக் கொண்ட காற்றழுத்தமானி. ………………………………..
விடை:
ஃ போர்டின் காற்றழுத்தமானி
Question 6.
திரவங்களைப் பயன்படுத்தாமல் வளிமண்டல அழுத்தத்தைக் கணக்கிடும் காற்றழுத்தமானி …………………………………
விடை:
அனிராய்டு பாரமானி
Question 7.
குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் காற்றழுத்த மாற்றத்தைக் கணக்கிடும் காற்றழுத்தமானி ………………………………..
விடை:
பாரோகிராப்
Question 8.
……………………………….. உபகரணத்தைக் கொண்டு ஒப்படர்த்தியை அளக்க முடியும்.
விடை:
பிக்நோமீட்டர்
Question 9.
ஒப்பிடப்படும் பொருள் நீர் எனில் ஒப்படர்த்திக்குப் பதிலாக ……………………………….. என பயன்படுத்தலாம்.
விடை:
தன்னடர்த்தி
Question 10.
பால்மானிக் குழாயின் மேல் பகுதியில் ……………………………….. முதல் ……………………………….. வரை அளவீடுகள் குறிக்கப்பட்டு இருக்கும்.
விடை:
15 முதல், 45 வரை
Question 11.
……………………………….. வெப்பநிலையில் தான் பால்மானி மூலம் சரியான அளவீடுகளை அளக்க முடியும்.
விடை:
60°C
Question 12.
ஒரு பால்மானி பாலிலுள்ள அடர்த்தியான ……………………………….. அளவை அளவிடக்கூடியது.
விடை:
வெண்ணெயின்
Question 13.
பால்மானி அளவிடும் சரியான பாலின் அளவீடு ……………………………….. ஆகும்.
விடை:
32
Question 14.
மிதப்பு விசை செயல்படும் புள்ளியே ……………………………….. எனப்படுகிறது.
விடை:
மிதப்பு விசை மையம்
Question 15.
76 செமீ உயரம் கொண்ட பாதரசத் தம்பம் ஏற்படுத்தும் அழுத்தம் ……………………………….. ஆகும்.
விடை:
1 atm
Question 16.
……………………………….. திரவத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிட உதவுகிறது.
விடை:
நீரியல்மானி
Question 17.
நீரியல்மானி ……………………………….. தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
விடை:
ஆர்க்கிமிடிஸ்
Question 18.
1 நியூட்டன் மீ2 = ……………………………….. ஆகும்
விடை:
10டைன் செமீ-2
Question 19.
மலைகளின் மேல் செல்லும்போது வளிமண்டத்தின் அடர்த்தியினால் ……………………………….. குறைகிறது.
விடை:
அழுத்தம்
Question 20.
1Psi = ……………………………….. பாஸ்கல்
விடை:
6895
Question 21.
அடர்த்தி = ………………………………..
விடை:
நிறை / பருமன்
Question 22.
பிக்நோமீட்டர் என்பதற்கு ……………………………….. என்ற மற்றாரு பெயரும் உண்டு.
விடை:
அடர்த்திக்குடுவை
Question 23.
மிதப்பு விசை நடைபெறும் நிகழ்வை ……………………………….. என்றும் அழைக்கலாம்
விடை:
மிதப்புத் தன்மை
Question 24.
……………………………….. என்பது நிலத்தடி நீரை பம்பின் உதவியின்றி மேலே வெளியேற்றும் கிணறு ஆகும்.
விடை:
ஆர்ட்டீசீயன் நீர்த்தேக்கம்.
Question 25.
அழுத்தமானது, அது செயல்படும் பரப்புக்கு ……………………………….. தொடர்புடையது.
விடை:
எதிர்விகித
Question 26.
CGS அலகு முறையில் விசையை ……………………………….. எனும் அளவிலும் பரப்பளவை அளக்கின்றோம், சதுர ……………………………….. சென்டிமீட்டரிலும்
விடை:
டைன்,
Question 27.
பாய்ம அழுத்தம் ஆகும்
விடை:
Question 28.
திரவங்களின் அழுத்தத்தினால், ஒரு திரவத்தில் மூழ்கியிருக்கும் பொருளின் மீதும், கொள்கலனின் சுவற்றின் மீதும் செயல்படும் விசையானது அவற்றின் மேற்பரப்பிற்குச் ……………………………….. செயல்படும்.
விடை:
செங்குத்தாகவே
Question 29.
காற்று நிரப்பப்பட்ட பலூன் ஒன்றினை நீரினுள் அழுத்தும்போது, அது உடனடியாக மேலெழும்பி, நீரின் மேல் மிதக்கும். இந்நிகழ்வு நீரில் ……………………………….. செயல்படுவதைக் குறிக்கிறது,
விடை:
மேல்நோக்கிய அழுத்தம்
Question 30.
இரத்த அழுத்தம் மற்றும் வாகனங்களின் டயர் ட்யூப்களில் உள்ள அழுத்தம் ஆகியவை வளிமண்டல அழுத்தத்தைவிட ……………………………….. உள்ளன,
விடை:
அதிகமாக
Question 31.
பெரும்பாலான மிதக்கும் பொருள்கள் ……………………………….. பருமனையும், அடர்த்தியையும் கொண்டிருக்கின்றன.
விடை:
அதிக, குறைந்த
Question 32.
பெட்ரோலியப் பொருள்கள் நீரில் மிதப்பதற்கு அவற்றின் ……………………………….. குறைவாக உள்ளதே காரணமாகும்,
விடை:
தன்னடர்த்தி
Question 33.
திரவத்தின் ஒப்படர்த்தி ………………………………..
விடை:
Question 34.
விலங்குகள் அவற்றின் கூர்மையான பற்கள் மூலம் ஒரு சதுர அங்குலத்தில் ……………………………….. பௌண்ட்டுக்கும் அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்த முடியும்
விடை:
750
Question 35.
கோடாரி மற்றும் கத்தியின் வெட்டும் பகுதி கூர்மையாக ………………………………..
விடை:
பரப்பளவு குறையும்போது அழுத்தம் அதிகரிக்கிறது
Question 36.
வளிமண்டல அழுத்தத்தைவிட அதிகமான அழுத்தத்தை கணக்கிடும்போது, தனிச்சுழி அழுத்தம் ………………………………..
விடை:
வளிமண்டல அழுத்தம் + அளவிடும் அழுத்தம்
Question 37.
வளிமண்டல அழுத்தத்தைவிட குறைவான அழுத்தத்தைக் கணக்கிடும்போது, தனிச்சுழி அழுத்தம் ………………………………..
விடை:
வளிமண்டல அழுத்தம் ……………………………….. அளவி அழுத்தம்
Question 38.
பால்மானியிலுள்ளே ……………………………….. ம் உள்ளது. இவை அடிப்பகுதியில் உள்ள குமிழ் முதல், அளவீடுகள் குறிக்கப்பட்ட மேற்பகுதி வரை அமைந்திருக்கும்.
விடை:
வெப்பநிலை மானி
Question 39.
உருளையான குமிழினுள் நிரப்பப்பட்ட ……………………………….. ஆனது பால்மானியை பாலின் உள்ளே சரியான அளவு மூழ்கவும், செங்குத்தான நிலையில் மிதக்கவும் உதவுகிறது.
விடை:
பாதரசம்
Question 40.
கார்ட்டீசியன் மூழ்கி சோதனையானது ……………………………….. தன்மையின் தத்துவம் செயல்படும் விதத்தை விளக்குகிறது.
விடை:
மிதப்புத்
Question 41.
……………………………….. விதியின் படி பிஸ்டனில் கொடுக்கப்பட்ட விசையானது குடுவையிலுள்ள திரவத்தின் அனைத்துத் திசைகளிலும் சீராக கடத்தப்படுகிறது.
விடை:
பாஸ்கல்
Question 42.
……………………………….. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் காற்றழுத்த மாற்றத்தை கணக்கிடுகிறது.
விடை:
பாரோ கிராப்
Question 43.
புவியின் மேற்பரப்பில் செயல்படும் சராசரி வளிமண்டல அழுத்தத்தின் மாற்றத்தை கணக்கிடுகிறது மதிப்பு ………………………………..
விடை:
984 hpa
Question 44.
……………………………….. வெப்ப நிலையில் தான் பால்மானி மூலம் சரியான அளவீடுகளை அளக்க முடியும்.
விடை:
60°F
Question 45.
நன்னீரைவிட உப்புநீர் அதிகமான ……………………………….. ஏற்படுத்தும்.
விடை:
மிதப்பு விசையை
Question 46.
மீன்கள் ……………………………….. நிரப்பப்பட்ட நீந்தும் பையைக் கொண்டுள்ளன.
விடை:
காற்றினால்
Question 47.
……………………………….. என்பது இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட பாய்மத்தின் எடை
விடை:
மேல் நோக்கு விசை
Question 48.
……………………………….. நீர்தேக்கம் என்பது நிலத்தடி நீரை பம்பின் உதவியின்றி மேலே வெளியேற்றும் கிணறு ஆகும்.
விடை:
ஆர்ட்டீசியன்
Question 49.
எரிபொருள் நிரப்பும் இடங்களில் வாகனங்களின் டயர் அழுத்தம் ……………………………….. என்னும் அலகுகளில் குறிப்பிடப்படுகிறது.
விடை:
ρsi
Question 50.
எவரஸ்ட் மலைச் சிகரத்தின் வளிமண்டல அழுத்தம் ………………………………..
விடை:
33.7 K.Pa
II. பொருத்துக
III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.
Question 1.
அளவி அழுத்தம் என்பது முழுமையான வெற்றிடத்தை பூஜ்ஜியம் குறிப்பாகக் கொண்டு கணக்கிடப் படுவதாகும். அளவி அழுத்தம் என்பது வளிமண்டல அழுத்தத்தை பூஜ்ஜியம் குறிப்பாகக் கொண்டு கணக்கிடப் படுவதாகும்,
விடை:
தவறு
Question 2.
உந்து விசையின் விளைவாகத் தோன்றும் அழுத்தமானது, அது செயல்படும் பொருளைச் சார்ந்தது. உந்து விசையின் விளைவாகத் தோன்றும் அழுத்தமானது, அது செயல்படும் பரப்பளவைச் சார்ந்தது.
விடை:
தவறு
Question 3.
காற்றழுத்தமானியை வானிலை மையத்தில் பயன்படுத்தலாம்.
விடை:
சரி
Question 4.
திரவங்கள் மற்றும் வாயுக்கள் பொதுவாக பாய்மங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
சரி
Question 5.
திரவத்தின் அழுத்தமானது கொள்கலனின் வடிவம் மற்றும் அளவைப் பொறுத்ததல்ல
விடை:
சரி
IV. கூற்று மற்றும் காரண வகை.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
Question 1.
கூற்று : சிலர் ஆணிப் படுக்கையில் படுத்தாலும், அவர்கள் உடலில் எவ்விதபாதிப்பும் ஏற்படாமல் இருக்கிறது.
காரணம் : அழுத்தமானது அதிக பரப்பளவில் செயல்படுகிறது.
விடை :
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
Question 2.
கூற்று : வளிமண்டலத்தின் அடர்த்தியானது, கடல் மட்டத்திலிருந்து உயரே செல்லும்போது குறைகிறது.
காரணம் : உயரமான மலைகளின் மேலே செல்லும்போது அழுத்தம் அதிகரிக்கிறது.
விடை :
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
Question 3.
கூற்று : புவியின் மேற்பரப்பில் செயல்படும் சராசரி வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பானது, கடல் மட்ட அளவில் சற்று குறைவாகவே உள்ளது.
காரணம் : புவியின் மேற்பரப்பு கடல்மட்ட அளவை விட சற்று உயரமாக இருப்பதே ஆகும்.
விடை :
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
Question 4.
கூற்று : பொருளானது அதன் எடைக்குச் சமமான எடை கொண்ட திரவத்தை இடப்பெயர்ச்சி செய்வதன் மூலம் மிதக்கிறது.
காரணம் : இந்த நிகழ்வில் பொருளானது எந்தவொரு கீழ்நோக்கிய நிகரவிசையையும் பெற்றிருக்கவில்லை.
விடை :
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
Question 5.
கூற்று : நீரியல் தூக்கியானது பாஸ்கல் விதியின் தத்துவத்தில் செயல்படுகிறது.
காரணம் : அழுத்தம் என்பது ஓரலகு பரப்பில் செயல்படும் உந்து விசையாகும்.
விடை :
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
V. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக.
1. அதிகப் பரப்பு : குறைந்த அழுத்தம்
குறைந்த பரப்பு : ____________________
விடை :
அதிக அழுத்தம்
2. கடல் மட்டத்திற்கு மேலே: அழுத்தம் குறைவு
கடல் மட்டத்திற்கு மேலே : ____________________
விடை :
அழுத்தம் அதிகரிப்பு
3. நீராவி விட அடர்த்தி குறைவு: நீரில் மிதக்கும்
நீராவி விட அடர்த்தி அதிகம் : ____________________
விடை :
நீரில் மூழ்கும்
4. பாலின் அடர்த்தி : பால்மானி
சர்க்கரையின் அடர்த்தி : ____________________
விடை :
சர்க்கரைமானி
VI. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்
Question 1.
உந்துவிசை மற்றும் அழுத்தம் வரையறு.
- அழுத்தத்தை ஏற்படுத்தும் விசை ‘உந்துவிசை’ எனப்படுகிறது. SI அலகு நியூட்டன்.
- ஓரலுகு பரப்பிற்கு செங்குத்தாக செயல்படும் உந்து விசையே அழுத்தம்’ எனப்படுகிறது. SI அலகு – பாஸ்கல் (அ) நியூட்டன் / மீட்டர்
Question 2.
மிதப்பு விசை என்றால் என்ன?
பொருளானது பகுதியளவோ அல்லது முழுமையாகவோ மூழ்கும்போது உணரப்படும் மேல்நோக்கு விசையானது, மேல்நோக்கு உந்து விசை’ அல்லது மிதப்பு விசை’ எனப்படும்.
Question 3.
கார்டீசியன் மூழ்கி ஆய்வானது எதனை விளக்குகிறது?
- மிதப்பு விசையின் தத்துவத்தையும்
- நல்லியல்பு வாயு விதியையும் – சோதனை மூலம் விளக்குகிறது.
Question 4.
ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தைக் கூறுக.
ஒரு பொருளானது பாய்மங்களில் மூழ்கும்போது, அப்பொருள் இடப்பெயர்ச்சி செய்த பாய்மத்தின் எடைக்கு சமமான, செங்குத்தான மிதப்பு விசையை உணரும்.
Question 5.
ஒப்படர்த்தி என்றால் என்ன?
- ஒரு பொருளின் அடர்த்திக்கும், நீரின் அடர்த்திக்குமிடையே உள்ள விகிதம் ஒப்படர்த்தி எனப்படும்.
- இது ஒரு எண் ஆகும். இதற்கு அலகு இல்லை.
Question 6.
காற்றழுத்தமானியின் வகைகள் யாவை?
- ஃ போர்டின் காற்றழுத்தமானி
- அனிராய்டு காற்றழுத்தமானி
- பாரோ கிராப் – போன்றன.
Question 7.
அளவி மற்றும் தனிச்சுழி அழுத்தம் பற்றி எழுதுக.
அளவி அழுத்தம் : இவை வளிமண்டல அழுத்தத்தை” பூஜ்யக்குறிப்பாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. தனிச்சுழி அழுத்தம் : இவை முழுமையானவெற்றிடத்தை’ பூஜ்யக்குறிப்பாகக்கொண்டுகணக்கிடப்படுகிறது.
Question 8.
பால்மானியானது எங்கு பயன்படுத்தப்படுகிறது?
- பால் பதனிடும் இடங்கள்.
- பால் பண்ணைகள் – இவற்றில் பெரும்பாலும் பயன்படுகிறது.
VII. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்
Question 1.
திரவத்தம்பத்தினால் ஏற்படும் அழுத்தம் பற்றி விளக்குக.
- ஒரு உயரமான கொள்கலனில் திரவம் நிரப்பப்படுகிறது. அது ஒரு திரவத்தம்பத்தை அதனுள் ஏற்படுத்தும்.
- அதன் குறுக்கு வெட்டுப்பரப்பளவு ‘A’ திரவத்தின் அடர்த்தி ‘p’ மற்றும் திரவத்தின் உயரம் ‘h’ என்க (திரவத்தம்பத்தின் மேற்பரப்பிலிருந்து திரவத்தின் ஆழம் ‘h’ எனலாம்
- திரவத்தம்பத்தின் அடிப்பகுதியிலுள்ள உந்துவிசை (F) = திரவத்தின் எடை
F = mg ____________________ (1) - திரவத்தின் நிறையானது திரவத்தின் பருமனை அதன் அடர்த்தியால் பெருக்கினால் கிடைக்கும். நிறை
m = pV ____________________ (2) - திரவத்தின் பருமன், (V) = குறுக்கு வெட்டுப்பரப்பளவு (A) X உயரம் (h)
V = Ah (3) ____________________ - சமன்பாடு3-ஐ2-ல் பிரதியிட, m = pAh ____________________ (4)
திரவத்தினால் ஏற்படும் அழுத்தம் P = phg ஆகும். எனவே திரவத்தம்பத்திலுள்ள அழுத்தமானது அத்திரவத்தின் ஆழம், அடர்த்தி மற்றும் புவியீர்ப்பு விசை ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது. - குறிப்பிட்ட ஆழத்தில் திரவத்தின் அழுத்தமானது, அந்த திரவத்தினைக் கொண்டுள்ள கொள்கலனின் வடிவத்தையோ, அதிலுள்ள திரவத்தின் அளவையோ பொருத்தது அல்ல, ஆழத்தை மட்டுமே பொறுத்தது.
- படத்திலுள்ள கொள்கலன்கள் வெவ்வேறு வடிவத்தில் வெவ்வேறு அளவு திரவத்தைக் கொண்டிருந்தாலும் அழுத்தமானது சமமாகவே உள்ளது.