Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் Textbook Questions and Answers, Notes.
TN Board 9th Science Solutions Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்
9th Science Guide நுண்ணுயிரிகளின் உலகம் Text Book Back Questions and Answers
பகுதி – I. புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
Question 1.
கீழ்காண்பனவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது
அ) காசநோய்
ஆ) மூளைக்காய்ச்சல்
இ) டைபாய்டு
ஈ) காலரா
விடை:
அ) காசநோய்
Question 2.
மறைமுகவிதத்தில் நோய் பரவும் வழிமுறை
அ) தும்மல்
ஆ) இருமல்
இ) கடத்திகள்
ஈ) துளிர்தொற்று முறை
விடை:
இ) கடத்திகள்
Question 3.
டிப்தீரியா எதைத் தாக்குகிறது?
அ) நுரையீரல்
ஆ) தொண்டை
இ) இரத்தம்
ஈ) கல்லீரல்
விடை:
ஆ) தொண்டை
Question 4.
காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு
அ) எலும்பு மஜ்ஜை
ஆ) குடல்
இ) மண்ணீ ரல்
ஈ) நுரையீரல்
விடை:
ஈ) நுரையீரல்
Question 5.
மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் _____ தர்க்கும்.
அ) குடலினை
ஆ) நுரையீரலினை
இ) கல்லீரலினை
ஈ) நிணநீர் முனைகளை
விடை:
ஆ) நுரையீரலினை
Question 6.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு
அ) கல்லீரல்
ஆ) நுரையீரல்
இ) சிறுநீரகம்
ஈ) மூளை
விடை:
அ) கல்லீரல்
Question 7.
குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைலிடிஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது.
அ) தோல்
ஆ) வாய் மற்றும் மூக்கு
இ) காதுகள்
ஈ) கண்
விடை:
ஆ) வாய் மற்றும் மூக்கு
II. கோடிட்ட இடத்தை நிரப்பு
Question 1.
______ கரிமப் பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகின்றன.
விடை:
கெட்டழிக்கும்
பாக்டீரியங்கள்
Question 2.
டைபாய்டு காய்ச்சல் _____ ஆல் ஏற்படுத்தப்படுகிறது.
விடை:
சால்மோனெல்லாடைஃபி
Question 3.
எச்1 என்1 வைரஸ் _____ ஐ உருவாக்குகிறது.
விடை:
பன்றிக்காய்ச்சல்
Question 4.
டெங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு ____ ஒரு கடத்தியாக செயலாற்றுகிறது
விடை:
ஏடிஸ் எய்ஜிப்டி கொசு
Question 5.
______ என்ற தடுப்பூசி காசநோய்க்கு போதுமான பாதுகாப்பினை வழங்குகிறது.
விடை:
பிசிஜி
Question 6.
காலரா ____ ஆல் ஏற்படுகிறது; மற்றும் மலேரியா ____ ஆல் ஏற்படுகிறது.
விடை:
விப்ரியோ காலரா,
பிளாஸ்மோடியம்
III. விரிவுபடுத்தி எழுதுக
Question 1.
ORS
விடை:
ORS – Oral Re hydration Source
Question 2.
WHO
விடை:
WHO – World Health Organization
Question 3.
HIV
விடை:
HIV – Human Immuno Deficiency Virus
Question 4.
BCG
விடை:
BCG – Bacillus Calmelte Guerin
Question 5.
DPT
விடை:
DPT – Dipetheria, Pertussis and Tetanus
IV. கீழ்காண்பனவற்றுள் தனித்திருப்பதை தெரிந்தெடு.
Question 1.
எய்ட்ஸ், ரெட்ரோ வைரஸ், லிம்போசைட்ஸ், பி.சி.ஜி
விடை:
பி.சி.ஜி
Question 2.
பாக்டீரிய நோய், ரேபிஸ், காலரா, சாதாரண சளி மற்றும் இன்ஃபுளுயன்சா
விடை:
காலரா
V. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.
Question 1.
ரைசோபியமானது, பருப்பு வகைத் தாவரங்களில் காணப்படும் வேர் முடிச்சுகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்துபவையோடு தொடர்புடையது.
விடை:
சரி
Question 2.
தொற்றாத வகை நோய்கள் ஒரு மனிதனிடம் இருந்து வளர்ந்து பிறருக்கு பரவுவதாகும்.
விடை:
தவறு – தொற்று வகை நோய்கள் ஒரு மனிதனிடமிருந்து வளர்ந்து பிறருக்கு பரவுவதாகும்.
Question 3.
1796 ஆம் ஆண்டு ஜென்னர் என்பவர் நோய்த் தடுப்பு உருவாக்குதல் என்ற நிகழ்வினைக் கண்டறிந்தார்.
விடை:
சரி
Question 4.
ஹெப்பாடைட்டிஸ் பி, ஹெப்பாடைட்டிஸ் ஏ-வைக் காட்டிலும் அபாயகரமானது.
விடை:
சரி
VI. பொருத்துக
விடை:
VII. கீழ்க்காண்பவனவற்றை வரையறு.
Question 1.
நோய்க்கிருமி
விடை:
உயிருள்ள ஒரு நுண்ணுயிரி பிற உயிரினங்களுக்கு நோயை உண்டாக்குதல். எ.கா. பாக்டீரியா வைரஸ்
Question 2.
பாக்டீரியோஃபேஜ்கள்
விடை:
பாக்டீரியாவைத் தாக்கி தீங்கு பயக்கும் வைரஸ்.
Question 3.
பிரியான்கள்
விடை:
- நோயை உண்டாக்கும் புரதத்துகள்.
- புரதத்தை மட்டுமே கொண்ட வைரஸ்.
Question 4.
நோய் எதிர்ப்பு தடுப்பூசி
விடை:
இவை உயிருள்ள அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளிடமிருந்தோ (அ) அவற்றின் விளைபொருள்களின் உதவியுடனோ நோயினைத் தடுக்கவும் (அ) சிகிச்சை அளிக்கவும் உருவாக்கப்படும் பொருள்.
VIII. சுருக்கமாக விடையளி
Question 1.
விரியான் மற்றும் வீரியாய்டு வேறுபடுத்துக.
விடை:
Question 2.
மலேரியா ஒட்டுண்ணியின் கடத்தியின் பெயர் யாது? தீங்கான மற்றும் சாவுக்கேதுவான மலேரியாவைப் பரப்பும் மலேரியா ஒட்டுண்ணி சிற்றினத்தின் பெயரை எழுதுக.
விடை:
- நோய் கடத்தி – பெண் அனபிலிஸ் கொசுக்கள்
- பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம் சாவுக்கான மலேரியா ஒட்டுண்ணி.
Question 3.
மூவகை ஆண்டிஜென் என்றால் என்ன? இந்த வகை ஆண்டிஜெனைப் பயன்படுத்தி தடுக்கப்படும் நோய்களைக் குறிப்பிடுக.
விடை:
முத்தடுப்பூசி : மூன்று விதமான பாக்டீரிய நோய்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி (DPT)
தடுக்கப்படும் நோய்கள் :
- தொண்டை அடைப்பான்,
- கக்குவான் இருமல்,
- டெட்டானஸ்
Question 4.
சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக.
விடை:
காசநோய், கக்குவான் இருமல், சாதாரண சளி
Question 5.
வாந்திபேதியினை ஏற்படுத்தும் நுண்ணுயிரியின் பெயரென்ன? இதைத் தடுக்கும் ஏதாவதொரு முறையைத் தருக.
விடை:
ரோட்டா வைரஸ்
தடுக்கும் முறை: கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை அருந்துதல். தூய்மையாக உணவை உண்ணுதல்.
Question 6.
இரு சாதாரண கொசுக்கள் மற்றும் அவைகள் பரப்பும் நோய்களின் பெயர்களைத் தருக.
விடை:
IX. விரிவாக விடையளி
Question 1.
பாக்டீரியாவின் வடிவத்தின் அடிப்படையில் அதனுடைய வகைகளைப்பற்றிய ஒரு தொகுப்பினைத் தருக.
விடை:
பாக்டீரியாக்களின் வடிவங்கள்
வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு பாக்டீரியங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்
1. கோல் வடிவம் :
- கோல் வடிவ பாக்டீரியங்கள் “பேசில்லைகள்” எனப்படும்.
- இவை ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் ”பேசில்லஸ்” எனப்படும்.
2. கோள வடிவம் :
- கோள வடிவ பாக்டீரியங்கள் ‘கோக்கைகள்’ எனப்படும்
- இவை ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் ‘கோக்கஸ்’ எனப்படும்.
3. திருகு வடிவம்
- திருகு வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் ‘ஸ்பைரில்லா’ எனப்படும்.
- இவை ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் ‘ஸ்பைரில்லம்’ எனப்படும்.
Question 2.
விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கினை விவரி.
விடை:
I. விவசாயம்:
a) உயிரியக்கட்டுப்பாட்டுக் காரணிகளாக நுண்ணுயிரிகள் :
- தாவரங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் (அ) நோயினை உருவாக்கும் உயிரிகள் மற்றும்
பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பயன்படுகின்றன. - எ.கா. பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் (Bt) – என்ற பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து ‘படிம்’ புரதம் என்ற புரதமானது உற்பத்தியாகிறது.
- இவை பூச்சிகளின் இளம் உயிரிகளுக்கு நச்சுத்தன்மை உடையதாக இருந்து அவற்றைக் கொல்கின்றன.
பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் கருவணுக்கள் (ஸ்போர்கள்) பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இதை நீரோடு கலந்து, பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது தெளிக்கும் போது பூச்சிகளின் இளம் உயிரிகள் கொல்லப்படுகின்றன.
b) உயிரி உரங்களாக நுண்ணுயிரிகள்:
- நிலத்திலுள்ள மண்ணினை சத்துமிக்கதாய் வளப்படுத்தும் நுண்ணுயிரிகள் உயிரி உரங்கள் ஆகும்.
- எ.கா. பாக்டீரியா, சயனோ பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஆகியவை உயிரி உரங்களுக்கான
ஆதாரங்களாகும்.- தனி நிலையில் வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள்.
எ.கா. நைட்ரோசோமோனஸ், நாஸ்டாக், அசட்டோபாக்டர், கிளாஸ்டிரிடியம் - கூட்டியிரியாக வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள்.
எ.கா. ரைசோபியம், ஃப்ரான்கியா, மைக்கோரைசா.
- தனி நிலையில் வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள்.
II. தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகள்:
Question 3.
பல்வேறு வகையான வைரஸ்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
விடை:
Question 4.
புதிதாக பிறந்த குழந்தை முதல் 12 மாத வயது வரை உள்ள குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்ட அட்டவணையை பரிந்துரை செய்க. ஏன் இந்த அட்டவணையைப் பின்பற்றுவது அவசியமாகிறது?
விடை:
அட்டவணையின் அவசியம்
அட்டவணையில் உள்ள தடுப்பூசி மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால், காசநோய், போலியோ மற்றும் தட்டம்மை போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
X. வலியுறுத்தல் மற்றும் காரணம்
சரியான ஒன்றை பதிலாகக் குறிக்கவும்
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
Question 1.
கூற்று : சின்னம்மை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
காரணம் : சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.
விடை:
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
Question 2.
கூற்று : எதிர் உயிர் பொருட்களை உட்கொள்வதால் டெங்கு நோயைக் குணமாக்கலாம்.
காரணம் : நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத் தடுக்கின்றன.
விடை:
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு.
XI. சிந்திக்கும் திறனை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள்
Question 1.
தொற்றக்கூடிய நோய்கள் உனது பள்ளிவளாகத்திலிருந்தால் அதனைக் குறைப்பதற்கு நீவிர் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்க.
விடை:
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
- பள்ளிவளாகம், வகுப்பறை குடிதண்ணீர் தொட்டிகள், விளையாட்டுத்திடல், உணவருந்தும் இடங்கள், கழிவறைகள் ஆகியவற்றைத் தூய்மையாக வைப்பது அவசியம்.
- கொசுக்கள் பெருகும் இடங்கள், தண்ணீர் தேங்கும் இடங்கள், ஆகியவற்றை கண்காணித்து உடனுக்குடன் துப்புரவு செய்தல்.
- மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு போன்றவற்றைப் பரப்பும் கொசுக்கள், கொசுப் புழு (லார்வா) இல்லாமல் பார்த்துக்கொள்ளுதல்.
- தண்ணீர் தொட்டிகள் சரியாக மூடப்பட்டிருக்க வேண்டும். தண்ணீர் ஒழுகும் குழாய்கள் உடனடியாக சரி செய்யப்படவேண்டும்.
- கழிவறைகள் பயன்படுத்திய உடன் ஒரு நாளைக்கு 3 முறையாவது கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
- டெட்டால், பீனாஸில் போன்ற கிருமி நாசினிகளை கலந்து நீரால் சுத்தம் செய்வது அவசியம்.
Question 2.
தேஜஸ் டைபாய்டு என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்; சச்சின் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான். இவ்விரு நோய்களிலும் எந்த நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்? ஏன் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்?
விடை:
அதிகப் பாதிப்பை ஏற்படுத்துவது காசநோய்
காசநோயின் பாதிப்புகள் :
- இந்நோய்க்காரணி மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்
- இது காற்றின் மூலம் பரவக்கூடிய தொற்றுநோய்
- இந்நோய் நுரையீரல் செல்களை தாக்குகிறது.
- இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும் உறுப்பு நுரையீரலாகும்.
- அறிகுறிகள் இருமல், நெஞ்சுவலி, உடல் எடைக்குறைவு மற்றும் பசியின்மை.
- எனவே, டைபாய்டு நோயைவிட காசநோய் கடுமையானது.
9th Science Guide நுண்ணுயிரிகளின் உலகம் Additional Important Questions and Answers
பகுதி – II. கூடுதல் வினாக்கள்
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
Question 1.
விடைகள் சால்மோனெல்லா டைஃப்பியில் காணப்படும் கசையிழை வகை _____ ஆகும்.
விடை:
பெரிடிரைக்கஸ்
Question 2.
பாக்டீரியாவின் செல்சுவர் _____ ஆல் ஆனது.
விடை:
பெப்டிடோகிளைக்கான்
Question 3.
பிளாஸ்மிடு _____ எனப்படும்.
விடை:
குரோமோசோம் சாராத வட்ட
DNA
Question 4.
திராட்சைக் கொத்துக்கள் போல் காணப்படும் பாக்டீரியா _____ எனப்படும்.
விடை:
ஸ்டெபைலோகோக்கை
Question 5.
டிரெப்போனிமா பாலிடியம் _____ வகை பாக்டீரியா.
விடை:
ஸ்பைரோஃகிட்ஸ்
Question 6.
போர்டிடெல்லா பெர்டூசிஸ் உருவாக்குவது _____ நோயாகும்.
விடை:
கக்குவான் இருமல்
Question 7.
பாக்டீரியாலஜியின் தந்தை என அழைக்கப்படுபவர்.
விடை:
ராபர்ட் கோச்
Question 8.
மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸைக் கண்டறிந்தவர் _____ ஆகும்.
விடை:
இராபர்ட் கோச்
Question 9.
வைரஸ் என்ற சொல்லை உருவாக்கியவர் _____
விடை:
M.பெசிரெங்க்
Question 10.
மிகப்பெரிய வைரஸ் என்பது _____ ஆகும்.
விடை:
பெரியம்மை வைரஸ்
Question 11.
வைரஸின் தனித்தன்மை அதன் ____ ஐ பொருத்தது.
விடை:
புரத உறை
Question 12.
மெல்லிய சிக்கலான நுண் இழைகளாலான பூஞ்சைகளின் ஹைபாக்கள் ______ எனப்படும்.
விடை:
மைசீலியம்
Question 13.
பிரியான் என்ற வார்த்தை உருவாக்கியவர் ____ ஆவார்.
விடை:
ஸ்டான்லி B. புருஷ்ஷினர்
Question 14.
உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படும் நாள் _____
விடை:
ஏப்ரல் 25ம் தேதி
Question 15.
குளிர், கடும் சுரம், வாந்தி, குமட்டல், தலைவலி மூட்டுக்களில் வலி, நடப்பதில் சிரமம் இவை எந்த வகை காய்ச்சலின் அறிகுறி
விடை:
சிக்குன்குனியா
Question 16.
கன்ன உமிழ் நீர் சுரப்பி வீக்கம், மற்றும் தாடையை அசைத்தலில் சிரமம் ஏற்படுத்தும் நோய் ____ ஆகும்.
விடை:
பொன்னுக்கு வீங்கி
Question 17.
_____ என்டரிக் நோய் என அழைக்கப்படுகிறது.
விடை:
டைஃபாய்டு
Question 18.
விப்ரியோ காலரா உருவாக்கும் நச்சானது _______ எனப்படும்.
விடை:
குளோரஜென்.
Question 19.
மலேரியாவை உண்டாக்கும் நோய் கிருமி எந்தப் பிரிவைச் சார்ந்தது?
விடை:
புரோட்டசோவா
Question 20.
குயினைன் எந்த நோய்க்கான மருந்து?
விடை:
மலேரியா
Question 21.
கியூலெக்ஸ் வகை கொசுக்கள் கடிப்பதால் பரவும் நோய் _____ ஆகும்.
விடை:
பைலேரியாசிஸ்
Question 22.
இரவு கால நேர பாதிப்பு காணப்படும் நோய் _____ ஆகும்.
விடை:
பைலேரியாசிஸ்
Question 23.
பன்றிக் காய்ச்சல் உலகெங்கும் பரவிக் காணப்படும் நாடுகளின் எண்ணிக்கை _____
விடை:
20
Question 24.
பறவைக்காய்ச்சல் முதலில் கண்டறியப்பட்ட நாடு ______
விடை:
தென்சீனா மற்றும்
ஹாங்காங்
Question 25.
AIDS நோய் முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட மாநிலம் _____
விடை:
தமிழ்நாடு
Question 26.
நுண்ணுயிரிகள் ஒரு செல் உடையவை, பல செல்லுடையவை மற்றும் செல்லமைப்பற்றவை இவை முறையே ………….
விடை:
பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்
Question 27.
நைட்ரோசோமோனஸ் ஒரு ………. பாக்டீரியாவாகும்.
விடை:
கீமோடிராப்பிக் (அ)
வேதிச்சேர்க்கை பாக்டீரியா
Question 28.
ஹெலிபோபாக்டர் பைலோரி ஒரு …….. வடிவ பாக்டீரியம்
விடை:
சுருள் வடிவ பாக்டீரியம்
Question 29.
தன் நுண்ணோக்கியைத் தானே வடிவமைத்த விஞ்ஞானியின் பெயர் …… ஆகும்
விடை:
ஆன்டன் வான் லூவன் ஹிக்
Question 30.
Bt – பருத்தி என்பது குறிப்பது……. ஆகும்.
விடை:
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
Question 31.
ஸ்ட்ரெப்டோபைசிஸ் எரித்திரியஸ் உருவாக்கும் எதிர் உயிரி பொருள் …….. எனப்படும்.
விடை:
எரித்ரோமைசின்
Question 32.
இமயமலை கீழ் பகுதியில் வாழும் மக்களிடையே காணப்படும் ‘காய்ட்டர்’ எனும் நோய் ………… எனப்படுகிறது.
விடை:
எண்டமிக் நோய்
Question 33.
எளிய வைரஸ் சாதாரணமாக ………. எனப்படுகிறது.
விடை:
விரியான்
Question 34.
வீரியாய்டுகள் என்பவை ……….. ஆகும்.
விடை:
வைரஸின் புரத உறை சாரா
நோயுண்டாக்கும் RNA ஆகும்
Question 35.
CJD நோய் ………… நோய் எனப்படும்
Answer;
நரம்புகளை செயலிழக்கச்
செய்யும் நோய்
Question 36.
டியூபர்குலின் தோல் பரிசோதனை ………… எனப்படும்.
Answer;
மான்ஃடாக்ஸ் சோதனை
Question 37.
போலியோ சொட்டு மருந்து (Pulse Polio) வழங்கும் தொடங்கப்பட்ட நாள், வரும் ………. ஆகும்.
விடை:
28 நவம்பர் 1995 ஆம் ஆண்டு
Question 38.
ஹெப்பாடிடிஸிஸ் A ……….. மூலம் பரவும் நோய் ஆகும்
விடை:
நீரினால்
Question 39.
மஞ்சள் காய்ச்ச ல் என அழைக்கப்படுவது …………. ஆகும்.
விடை:
HAV – எனப்படும் –
ஹெப்பாடிடிசிஸ் A வைரஸ்
Question 40.
சிக்குன் குனியா உருவாக்கப்படும் வைரஸ் பிரிவு
விடை:
ஓரிழை RNAT
Question 41.
சாதாரண காய்ச்சல் மற்றும் வலி நிவாரணியாக பயன்படும் மருந்து …….. ஆகும்.
விடை:
பாராசெட்டமால்
Question 42.
பைலேரியாசிஸ் பாதிக்கும் உடலின் மண்டலம்
விடை:
நிணநீர் மண்டலம்
Question 43.
மனித பாப்பிலோமா வைரஸ் உண்டாக்கும் நோய் …….
விடை:
பிறப்புறுப்பில் கொப்பளம்
Question 44.
உயிருள்ள தடுப்பூசி மருந்துகள்………… ஆகும்.
விடை:
BCG மற்றும் போலியோ
தடுப்பூசி
Question 45.
MMR தடுப்பூசி முதலில் போடப்படும் வயது …………. ஆகும்.
விடை:
15 மாதங்கள் முதல் 2 வயது
வரை
Question 46.
DT எனும் ஆண்டிஜென்கள் பாதுகாக்கும் இரண்டு நோய்கள் ……….. மற்றும் ………… ஆகும்.
விடை:
முப்திரியா, டெட்டனஸ்
Question 47.
TAB என்பது எந்த மூன்று நோய்களுக்கான ஒரே தடுப்பூசி மருந்து
விடை:
டைபாய்டு, பாரா டைஃபாய்டு A
மற்றும் பாரா டைஃபாய்டு B
Question 48.
இன்ஃபுளுயன்சா வைரஸ் H5N1 மற்றும் HIN1 உருவாக்கும் நோய்கள் ……… மற்றும் ……..
விடை:
பறவைக்காய்ச்சல் மற்றும்
பன்றிக் காய்ச்சல்
Question 49.
கொளெரியா, HAV, H5N1 இவை பரவுவது முறையே …………., …………. மற்றும் ………. ஆகும்.
விடை:
பாலியல் தொடர்பு,
சுகாதாரமற்ற நீர், வாய்,
கண்கள், சளி
Question 50.
வைரஸ் என்பது …………. இன சொல்
விடை:
லத்தீன்
II. பொருத்துக
III. கூற்று மற்றும் காரண வகை
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; (R) – (A) ஐ சரியாக விளக்குகிறது
ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; காரணம் (R) – (A) ஐ சரியாக விளக்கவில்லை
இ) கூற்று (A) சரியானது; காரணம் (R) தவறானது
ஈ) கூற்று (A) மற்றும் காரணம் (R) தவறானது
Question 1.
கூற்று (A) : டைஃபாய்டு சுகாதாரமற்ற உணவு மற்றும் நீரினால் பரவுகிறது.
காரணம்(R) : நோய் பாதிக்கப்பட்டவரின் கழிவு கலந்த நீர் மற்றும் உணவினால் நோய் பரவுகிறது.
விடை:
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; (R) – (A) ஐ சரியாக விளக்குகிறது
Question 2.
கூற்று (A) : இந்தியாவில் 13 ஜனவரி 2011 முதல் போலியோ நோய் கண்டறியப்படவில்லை
காரணம்(R) : டிசம்பர் மாதம் 1995 முதல் பல்ஸ்-போலியோ – போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு தொடங்கப்பட்டது. விடை:
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; (R) — (A) ஐ சரியாக விளக்குகிறது
Question 3.
உறுதிப்படுத்துதல் (A) : சின்னம்மை வாரிசெல்லா ஜோஸ்டர் வைரஸால் ஏற்படுகிறது.
காரணம் (R) : சிவப்புப் புள்ளி போன்ற வீக்கமுடைய தோற்றம் (அ) தோலில் தடிப்புகள் தோன்றல் இருமல், தும்மல், கண் சிவப்படைதல் காணப்படுகிறது.
விடை:
இ)உறுதிப்படுத்துதல் (A) சரியானது; காரணம் (R) தவறானது
IV. ஒத்த கூற்று தருக
Question 1.
எக்ஸோடாக்சின் – நோய் கிருமியிலிருந்து நேரடியாக உருவாகும் நச்சு.
எண்டோடாக்சின் –
விடை:
நோய் கிருமி சிதைவடைவதால் உருவாகும் நச்சு
Question 2.
டைஃபாய்டு – சுகாதாரமற்ற நீரினால் பரவும் நோய்.
மலேரியா _______
விடை:
மலேரியா – கடத்தி மூலம் பரவும் நோய்
Question 3.
AIDS – பான்டமிக் நோய்
மலேரியா _____
விடை:
மலேரியா – ஸ்போராடிக் நோய்
Question 4.
அனபிலிஸ் – மலேரியக் கடத்தி
கியூலெக்ஸ் _____
விடை:
கியூலெக்ஸ் – பில்லேரியக் கடத்தி
Question 5.
பிரியான் – வைரஸின் புரதம்
விரியான் _____
விடை:
விரியான் – வைரஸின் நியூக்ளிக் அமிலம்
Question 6.
நோய் தடுப்பூசி – நோய் வருமுன் காத்தல்
நோய் எதிர் உயிரி _____
விடை:
நோய் எதிர் உயிரி – நோய் வந்த பின் காத்தல்
V. படத்தைக் கண்டறி – பாகங்களைக் குறித்திடுக
2
VI. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்
Question 1.
நுண்ணுயிரிகள் என்பதன் கீழ் வருவனவற்றை விவரி.
விடை:
நுண்ணுயிரிகள் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, நுண்ணுயிரி ஆல்கா, புரோட்டிஸ்டுகள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. 2. பாக்டீரியாவின் நான்கு வடிவங்கள் யாவை?
- கோக்கை வடிவம் (உருளை வடிவம்)
- பேசில்லஸ் வடிவம் (குச்சி வடிவம்)
- ஸ்பைரில்லம் (சுருள் வடிவம்) iv) விப்ரியோ (கமா, வடிவம்)
Question 3.
உறையுடைய பாக்டீரியா என்றால் என்ன?
விடை:
- சில பாக்டீரியங்களில் செல்சுவரினைச் சுற்றி பல கூட்டுச் சர்க்கரைகளால் (பாலி சாக்கரைடு உருவான கூடுதலான மெல்லிய படலம் போன்ற அமைப்பு காணப்படுகிறது.
- பணி – பாதுகாப்புப்பணி
Question 4.
பாக்டீரியாக்களின் தற்சார்பு ஊட்டமுறையின் 2 வகைகள் யாவை?
விடை:
- தற்சார்பு ஊட்டமுறை – தன் உணவை கனிம ஆதாரங்களிலிருந்து உருவாக்கும். இதற்கு தற்சார்பு ஊட்டமுறை என்று பெயர் – இது இருவகைப்படும்.
- ஒளிச்சார்பு பாக்டீரியங்ள் (சுயஜீவிகள்) – இவை ஒளி ஆற்றலை ஆதாரமாகக் கொண்டு
வாழ்கின்றன. - வேதிச்சார்பு பாக்டீரியங்கள் – இவ்வகை பாக்டீரியங்கள் வேதிப்பொருட்களை (கரிம , கனிம் ஆற்றலை ஆதாரமாகக் கொண்டு வாழ்கின்றன.
Question 5.
உயிரியக் கட்டுப்பாட்டுக் காரணி (அ) உயிரி பூச்சிக் கொல்லி என்றால் என்ன?
விடை:
- பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் என்ற பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து உருவாகும் படிம புரதம், பூச்சிகளின் இனம் உயிரிகளைக் கொல்கிறது.
- இதற்கு உயிரியக்கட்டுப்பாட்டுக் காரணி (அ) உயிரி பூச்சிக் கொல்லி என்று பெயர்.
- பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் (Bt) கருவணுக்கள் (ஸ்போர்கள்) பைகளில் அடைக்கப்பட்டு விற்பனையாகின்றன. அவற்றை நீரோடு சேர்த்து கரைத்து பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது தெளிக்கப்படுகிறது. பூச்சிகளின் இனம் உயிரிகளைக் கொல்கிறது.
VII. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்
Question 1.
கடத்திகளால் பரவும் நோய்களின், நோய்கிருமி, பரவும் முறை அறிகுறிகள், தவிர்க்கும் மற்றும் தடுக்கும் முறைகளை அட்டவணைப்படுத்துக.
விடை:
Question 2.
நோய் எதிர்ப்பு திறனூட்டல் என்றால் என்ன? தடுப்பூசி மருந்துகளின் இரு வகைகள் யாவை?
விடை:
நோய் எதிர்ப்பு திறனூட்டல் என்பது ஆன்டிஜென்களையோ (அ) ஆன்டிபாடிகளையோ (நோய் எதிர் உயிர்பொருள்) கொடுத்து நோய்க்கு எதிராகத் தடுப்பினை ஏற்படுத்தும் செயல் ஆகும். நோய் தடுப்பு மருந்தினை உடலினுள் செலுத்தி நோயினைத் தடுக்கும் செயல் தடுப்பூசி போடுதல் எனப்படும். இது இரு வகைப்படும்.
- உயிருள்ள தடுப்பூசி மருந்துகள் : நோயுண்டாக்கும் உயிரிகளின் நோயுண்டாக்கும் திறன் வலுவிழக்கச் செய்யப்பட்டு இம் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
எ.கா. பிசிஜி தடுப்பூசி – வாய்வழி போலியோ சொட்டு மருந்து - கொல்லப்பட்ட தடுப்பூசி மருந்துகள் : வெப்பம் (அ) வேதிப்பொருள்களால் நோயுண்டாக்கும் நுண்ணுயிரி கொல்லப்பட்டு செயலிழக்கம் செய்யப்படுகிறது. முதன்மையான ஊட்டம் அதைத் (dose) தொடர்ந்து அடுத்தடுத்த வலுவூட்டும் ஊட்டம் வழங்கப்பட வேண்டும்.
எ.கா. டைபாய்டு, காலரா, கக்குவான் தடுப்பூசிகள்