Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

9th Science Guide ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
மனித உடலின் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து.
அ) கார்போஹைட்ரேட்
ஆ) புரோட்டீன்
இ) வைட்டமின்
ஈ) கொழுப்பு
விடை:
இ) வைட்டமின்

Question 2.
சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ‘ஸகர்வி’ நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர்.
அ) ஜேம்ஸ் லிண்ட்
ஆ) லூயிஸ் பாஸ்டர்
இ) சார்லஸ் டார்வின்
ஈ) ஐசக் நீயூட்டன்
விடை:
அ) ஜேம்ஸ் லிண்ட்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 3.
வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை
அ) அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல்
ஆ) கதிர் வீச்சு முறை
இ) உப்பினைச்சேர்த்தல்
ஈ) கலன்களில் அடைத்தல்
விடை:
ஆ) கதிர்வீச்சு முறை

Question 4.
மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ) 1964
ஆ) 1954
இ) 1950
ஈ) 1963
விடை:
ஆ) 1954

Question 5.
உணவு கெட்டுப்போவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது
அ) மெழுகுப் பூச்சு
ஆ) சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்கள்
இ) உணவின் ஈரத்தன்மை
ஈ) செயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருட்கள்
விடை:
இ) உணவின் ஈரத்தன்மை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உணவில் _____ எடுத்துக்கொள்வதன் மூலம் குறைபாட்டு நோய்களைத் தடுக்க முடியும்.
விடை:
சரிவிகித உணவு

Question 2.
உணவுப் பொருட்களின் இயல்பான தன்மை மற்றும் அதன் தரத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடு _____ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கலப்படம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 3.
சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு _____ வைட்டமின் என்று பெயர்.
விடை:
சூரிய ஒளி

Question 4.
நீரை வெளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கையானது ____ நீக்குவதாகும்.
விடை:
நீர்

Question 5.
உணவுப் பொருள்களை அவற்றின் _____ தேதி முடிந்த நிலையில் வாங்கக்கூடாது.
விடை:
காலாவதி

Question 6.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ____ மற்றும் ____ பொருட்களுக்கு விவசாயம், அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ் பெற வேண்டும்.
விடை:
கால்நடை உற்பத்திப்

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு அயோடின் சத்து தேவைப்படுகிறது.
விடை:
தவறு

Question 2.
மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில் தேவைப்படுகின்றது.
மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் சிறிய அளவில் தேவைப்படுகின்றது
விடை:
தவறு

Question 3.
வைட்டமின் C நீரில் கரையக்கூடியது.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 4.
உணவில் கொழுப்புச்சத்து போதுமான அளவில் இல்லையென்றால் உடல் எடைக் குறைவு ஏற்படும்.
விடை:
சரி

Question 5.
வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விடை:
தவறு

IV. பொருத்துக
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 30
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 31

V. பொருத்தமான ஒன்றைக் கொண்டு நிரப்புக.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 35
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 36

VI. விரிவாக்கம் தருக

1. ISI,
2. FPO
3. AGMARK
4. FCI
5. FSSAI
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 38

VII. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள். சரியான ஒன்றைத் தேர்ந்தெடு

Question 1.
கூற்று : ஹீமோகுளோபினில் இரும்பு உள்ளது.
காரணம் : இரும்புக் குறைபாடு இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
கூற்று : அக்மார்க் என்பது ஒரு தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்.
காரணம் : ஐஎஸ்ஐ என்பது தரத்தின் குறியீடு
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல

VIII. காரணம் கூறுக

அ) உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது. ஏனெனில் ______
விடை:
உணவிலுள்ள ஈரப்பதத்தை நீக்க

ஆ) காலாவதி தேதி முடிவடைந்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது. ஏனெனில் ______
விடை:
உணவின் தரம் இழக்கப்படுகிறது.

இ) கால்சியம் சத்துக் குறைபாட்டால் எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஏனெனில் _____
விடை:
கால்சியம் எலும்புகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

IX. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
வேறுபடுத்துக
அ) குவாசியோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்
ஆ) மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள்
விடை:
அ) குவாசியோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 69

ஆ) மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள் மேக்ரோ தனிமங்கள்
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 70

Question 2.
உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு பயன்படுத்தப்படுவது ஏன்?
விடை:

  • உணவின் ஈரப்பதம் – சவ்வூடுபரவல் மூலம் நீக்கப்படுகிறது
  • பாக்டீரியாக்களின் வளர்ச்சி – தடுக்கப்படுகிறது
  • நுண்ணுயிரிகளின் நொதிகளின் செயல்பாடு குறைக்கப்படுகிறது

Question 3.
கலப்படம் என்றால் என்ன?
விடை:
உணவில் வேறு பொருட்களைச் சேர்த்தல் அல்லது நீக்குதல்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 4.
உணவில் இயற்கையாகத் தோன்றும் நச்சுப் பொருட்கள் இரண்டினைக் கூறுக.
விடை:

  • ஆப்பிள் விதைகள் – புரூசிக் அமிலம் காணப்படுகிறது
  • மீன்கள் – கடலினை மாசுபடுத்திய ‘மெர்க்குரி போன்ற நச்சுகள்’ காணப்படுகிறது

Question 5.
உணவில் இருந்து உடலுக்கு வைட்டமின் 1-D சிறுக்குடலில் உறிஞ்சப்படுவதற்கு தேவையான காரணிகள் யாவை?
விடை:

  1. கால்சியம்,
  2. வைட்டமின் D
  3. காலை நேர சூரிய ஒளி

Question 6.
கீழ்க்கண்ட தாது உப்புகளின் ஏதேனும் ஒரு செயல்பாட்டை எழுதுக.
அ) கால்சியம்
ஆ) சோடியம்
இ) இரும்பு
ஈ) அயோடின்
விடை:
அ) கால்சியம் – எலும்புகளின் வளர்ச்சி
ஆ) சோடியம் – நரம்பு உணர்த்திறன் கடத்தல்,
இ) இரும்பு – ஹீமோகுளோபினின் முக்கியக் கூறாகச் செயல்படுதல்
ஈ) அயோடின் – தைராய்டு ஹார்மோன் உருவாக்குதல்

Question 7.
ஏதேனும் இரண்டு உணவுப் பாதுகாப்பு முறைகளை விவரி.
விடை:
உப்பினைச் சேர்த்தல் :

  1. உணவில் உள்ள ஈரப்பதம் சவ்வூடு பரவல் மூலம் நீக்கப்படுதல்.
  2. இதன்மூலம் பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடைபடுகிறது.
  3. நுண்ணுயரிகளின் நொதிகளின் செயல்பாடு குறைதல்.

புகையிடுதல் :
இறைச்சி மற்றும் மீனை புகைத்தலுக்கு உட்படும்போது புகையின் உலர் செயல் உணவை பாதுகாக்கிறது.

Question 8.
கலப்படம் செய்யப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:

  1. வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, வாயுக்கோளாறுகள்
  2. நோய் எதிர்ப்புத்திறன் குறைதல்.
  3. கல்லீரல், சிறுநீரகம் பாதிப்படைதல்
  4. மலக்குடல் புற்றுநோய்
  5. குறைபாடுகளுடைய குழந்தை பிறத்தல்

X. விரிவாக விடையளி

Question 1.
நமது உடல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் எவ்வாறு பயன்படுகின்றன? கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் மூலங்கள், அதன் குறைபாட்டு நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகளை அட்டவணைப்படுத்துக.
விடை:
வைட்டமின்களின் பயன்பாடுகள் :

  1. வைட்டமின்களின் மிக முக்கய ஊட்டச்சத்தாகும்.
  2. இவை மிகச்சிறிய அளவில் தேவைப்படுகிறது.
  3. இவை குறிப்பிட்ட உடற் செயலியல் மற்றும் உயிர் வேதியியல் செயல்பாடுகளுக்கு தேவைப்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 80
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 81

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
இந்தியாவிலுள்ள உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்களின் பங்கினை விவரி.
விடை:

  1. நாடு முழுவதும் தானியங்களை விநியோகம் செய்தல்.
  2. சந்தையில் விலையை ஒழுங்குபடுத்துதல்.
  3. விவசாயம் பொருள்களுக்கு சரியான விலை கொடுத்தல்
  4. தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான தானியங்களைக் கொடுத்தல்.

உணவு தரகட்டுப்பாட்டு நிறுவனங்களின் பங்குகள்.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 85

XI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
படத்தைப் பார்த்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி
விடை:
அ) கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நடைபெறும் செயல்முறையின்
பெயரென்ன?
விடை:
பாலை பாஸ்டர் பதனம் செய்யும்முறை (Pasteurisation)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 86
ஆ) மேற்கண்ட செயல்முறையின் மூலம் பாதுகாக்கப்படும் உணவுப்பொருள் எது?
விடை:
பால்

இ) மேற்கண்ட செயல்முறையானது எந்த வெப்பநிலையில் நடைபெறுகிறது?
விடை:
63°C ல் 30 நிமிடங்கள் கொதிக்க வைத்தல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியிடம் இலை வகைக் காய்கறிகள் மற்றும் பேரீச்சம் பழத்தை
அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு மருத்துவர் ஒருவர் அறிவுறுத்துகிறார். அவ்வாறு அவர் சொல்வதற்குக் காரணம் என்ன?
விடை:

  1. இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஏற்படுகிறது.
  2. இலை வகைக் காற்கறிகள் மற்றம் பேரீச்சம் பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்துள்ளது.
  3. ஆதலால் இரும்புக் குறைபாடு நீங்குவதால் இரத்தச் சோகை குணமாகிறது.

Question 3.
சஞ்சனா ஒரு மளிகைக் கடையில் ஜாம் பாட்டில் வாங்க விரும்புகிறாள். அதை வாங்குவதற்கு முன் அந்தப் பாட்டிலில் உள்ள அட்டை குறிப்பானில் (label) எதைக் குறிப்பாகப் பார்த்து வாங்க வேண்டும்?
விடை:

  1. உணவின் பெயர்
  2. காலாவதி நாள்
  3. ISI; AGMARK அல்லது FPO பேன்ற முத்திரைகளை கவனித்து வாங்க வேண்டும்.

9th Science Guide ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
கார்போஹைட்ரேட்டுகள் …………. அளிக்கக் கூடியவை.
விடை:
ஆற்றல்

Question 2.
கிளைகோஜன் ………. மற்றும் ………. சேமித்தல் வைக்கப்படுகிறது.
விடை:
கல்லீரல், தசைகளில்

Question 3.
உடல் திசுக்கள் உருவாக்கத்திற்கு பயன்படுபவை …………
விடை:
தாவரங்களின்

Question 4.
செல்சுவர் ………… ஆல் ஆனது.
விடை:
செல்லுலோஸ்

Question 5.
புரதங்கள் அமினோ அமிலங்களால் இணைக்கப்பட்ட ……. தொடர் ஆகும்
விடை:
பாலிபெப்டைட்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 6.
EAA என்பதன் விரிவாக்கம் ……….
விடை:
Essential Amino acid’s

Question 7.
மனித உடலுக்கு சிறிய அளவில் தேவைப்படும் ஊட்டச்சத்து ……….
விடை:
வைட்டமின்கள்

Question 8.
வைட்டமின் A (ரெட்டினால்) குறைபாடு நோய் …………. மற்றும் …………
விடை:
சீரோப்தால்மியா, நிக்டலோபியா

Question 9.
வைட்டமின் D (கால்கிஃபெரால்) குறைபாடு நோய் ……….
விடை:
ரிக்கெட்ஸ்

Question 10.
மலட்டுத்தன்மை ………… குறைபாட்டு நோய்
விடை:
வைட்டமின் E டோகோ ஃபெரால்

Question 11.
இரத்தப்போக்கு ………… குறைபாட்டு நோய்.
விடை:
வைட்டமின் K

Question 12.
வைட்டமின் B1, (தயமின்) குறைப்பாட்டால் வரும் நோய்
விடை:
பெரி பெரி

Question 13.
வைட்டமின் B, (ரிபோஃபிளேவின்) குறைப்பாட்டால் வரும் நோய் …..
விடை:
எரிபோ பிளாவினோஸிஸ்

Question 14.
பெலாக்ரா நோய் ………… வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படுகிறது.
விடை:
வைட்டமின் B3, (நியோசின்)

Question 15.
வைட்டமின் B, (பைரிடாக்ஸின்) குறைப்பாட்டால் ஏற்படும் நோய் ………….
விடை:
டெர்மாடிட்ஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 16.
உயிரைப்போக்கும் இரத்தச்சோகை ………….. குறைப்பாட்டால் ஏற்படுகிறது.
விடை:
வைட்டமின் B12

Question 17.
ஸ்கர்வி ………….. குறைபாட்டு நோய்
விடை:
வைட்டமின் C

Question 18.
…………. என்பவரால் வைட்டமின் என்றவார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
டாக்டர் ஃபன்க்

Question 19.
முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் ………….
விடை:
வைட்டமின் A

Question 20.
எலும்பிற்கு பலத்தை அளிக்கும் வைட்டமின் …………
விடை:
வைட்டமின் D

Question 21.
மனித தோலினால் உருவாக்கப்படும் வைட்டமின்
விடை:
வைட்டமின் D

Question 22.
தாது உப்பு என்பது ………… தனிமம்.
விடை:
வேதியத்

Question 23.
நீர் ஒரு …………..
விடை:
கரைப்பான்

Question 24.
உலக அயோடின் குறைபாட்டு தினம் ………….
விடை:
அக்டோபர் 21

Question 25.
காய்டர் எனப்படுவது …………..
விடை:
முன் கழுத்துக் கழலை

Question 26.
முன் கழுத்துக் கழலை ………….. குறைப்பாட்டால் ஏற்படுகிறது.
விடை:
அயோடின்

Question 27.
வைட்டமின்களின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய் ……..
விடை:
வைட்டமினோசிஸ்

Question 28.
வழக்கத்தை விட அதிகப்படியான வைட்டமின்களின் அளவு இருப்பது ………….. எனப்படும்.
விடை:
ஹைப்பர் வைட்டமின்னோசிஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 29.
ஊட்டச்சத்துக்கள் சரியான விகிதத்தில் காணப்படும் உணவு ………… எனப்படும்.
விடை:
சரிவிகித உணவு

Question 30.
பற்களில் காணப்படும் கடின பகுதி ……
விடை:
எனாமல்

Question 31.
எலும்புக் குறைப்பாட்டு நோய்கள் ஏற்படக் காரணம் …………..
விடை:
கால்சியம்

Question 32.
தசைப்பிடிப்பு, நரம்புத் தூண்டல்கள் கடத்த இயலாமை தோன்றக் காரணம் ………
விடை:
சோடியம்

Question 33.
பொட்டாசியம் குறைப்பாட்டு நோய் ………..
விடை:
தசைச்சோர்வு

Question 34.
இரும்புச்சத்து குறைப்பாட்டால் உண்டாகும் நோய் ….
விடை:
இரத்தசோகை

Question 35.
உறைய வைத்தலில் உணவானது …………… வெப்பநிலைக்குக் கீழே சேமித்து வைக்கப்படுகிறது.
விடை:
0°C

Question 36.
………….. முறை பால் கெட்டுப் போதலை தவிர்ப்பதற்கு பயன்படுகிறது.
விடை:
பாஸ்டர் பதனம்

Question 37.
நுண்ணுயிரியியலை தோற்றுவித்தவர் ……..
விடை:
லூயிஸ் பாஸ்டர்

Question 38.
வெறிநாய்க்கடி மற்றும் ஆந்த்ராக்ஸ் நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை உருவாக்கியவர் …….
விடை:
லூயிஸ் பாஸ்டர்

Question 39.
வெண்மைப் புரட்சி குறிப்பது ……………
விடை:
பால் உற்பத்தி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 40.
வெண்மைப் புரட்சியின் தந்தை …………
விடை:
வர்கிஸ் குரியன்

Question 41.
உலக உணவு தினம் ………….
விடை:
அக்டோபர் 16

Question 42.
உணவில் வேறு ஏதேனும் பொருள்களை சேர்ப்பதோ அல்லது உணவிலிருந்து நீக்குவதோ …………. எனப்படும்.
விடை:
உணவுக் கலப்படம்

Question 43.
மாம்பழங்கள் மற்றும் வாழைப் பழங்களை பழுக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் …………
விடை:
கால்சியம் கார்பைடு

Question 44.
பச்சைக் காய்கறிகளில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் …………
விடை:
உலோகக் காரீயம்

Question 45.
ஆப்பிள், பேரிக்காய் போன்ற கனிகளில் பளபளப்பிற்காக பூசப்படும் செல்லாக் (அல்லது) செயற்கை மெழுகு …………..
விடை:
கார்னோபா மெழுகு

Question 46.
உப்பில் சேர்க்கப்படும் கலப்பட பொருள்
விடை:
சுண்ணாம்பு

Question 47.
தேயிலைத் தூளில் சேர்க்கப்படும் கலப்பட பொருள் …………
விடை:
நிலக்கரி தார்

Question 48.
ஜஸ்கிரீமில் சேர்க்கப்படும் கலப்பட பொருள் ……..
விடை:
சலவைத்தூள்

Question 49.
பாலித் தூய்மையைக் கண்டறிய ………….. கரைசல் சேர்க்கப்படுகிறது.
விடை:
அயோடின்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 50

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 56

III. வலியுறுத்தல் மற்றும் காரண வகை

Question 1.
வலியுறுத்தல் : 13 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
காரணம் : வளரிளம் பருவத்தினர் குறிப்பாக ஆண்கள் வளர்ச்சிக்கு அதிக இரும்புச் சத்து தேவைப்படுகிறது.
அ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியாக இருந்தது. அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்தது. அதில் அந்தக் காரணம்
வலியுறுத்தலின் சரியான விளக்கம் அல்ல.
இ) வலியுறுத்தல் சரியாக இருந்தது காரணம் மட்டும் தவறு.
ஈ) வலியுறுத்தல் மட்டும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
இ) வலியுறுத்தல் சரியாக இருந்தது காரணம் மட்டும் தவறு.

Question 2.
வலியுறுத்தல் : நீரை வெளியேற்றல் (dehydration) என்பது உணவிலிருந்து நீரை/ ஈரப்பதத்தை வெளியேற்றுதலாகும்.
காரணம் : நம் உடலில் ஏற்படும் நீர் இழப்பை அதிகத் தண்ணீ ரை அருந்துதல் மூலம் சரி செய்யலாம்.
அ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் அல்ல.
இ) வலியுறுத்தல் சரியாக இருந்து காரணம் மட்டும் தவறு.
ஈ) வலியுறுத்தல் மட்டும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்.

Question 1.
உலர்த்துவதால் எவ்வாறு நுண்ணுயிரி களின் வளர்ச்சியைத் தடை செய்ய இயலும்?
விடை:

  • உலர்த்துவதால், உணவுப் பொருளின் ஈரப்பதம் குறைகிறது. பாக்டீரியா, ஈஸ்டு, மற்றும் பூஞ்சைகள் வளர்வதில்லை.
  • அவை வளர்வதற்கு, இனப்பெருக்கம் செய்வதற்கும் ஈரப்பதம் இல்லை.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
சரி விகித உணவு என்றால் என்ன?
விடை:

  • அத்யாவசியமான ஊட்டப் பொருட்கள்’ உணவில் சரியான அளவில் காணப்படுவதற்கு ‘சரி விகித உணவு’ என்று பெயர்.
  • இது இயல்பான உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது.
  • இது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

Question 3.
புரதம் நமது உடலைக் கட்டமைக்கிறது – என்று சொல்வது குறித்த உன் கருத்தைப் பதிவு செய்
விடை:

  • புரதம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்து
  • உடல் திசுக்கள் உருவாக்கத்திற்கு தேவையான அடிப்படைப் பொருள்
  • இது அமினோ அமிலங்களின் தொடர் பெப்டைடு இணைப்பால் உருவாகிறது.
  • இதன் குறைபாட்டினால் மராஸ்மஸ், மற்றும் குவாசியாக்கர் போன்ற உடல் வளர்ச்சிக் குறைபாட்டு நோய்கள் உருவாகிறது.

Question 4.
வைட்டமின் A குறைபாட்டின் ஏற்படும் நோய்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 60

Question 5.
கலன்களில் அடைத்தல் (canning) என்றால் என்ன?
விடை:

  • சில உடனடியாக உண்ணும் உணவுகள் பதப்படுத்தப் பட்டுப் பின்னர் தூய்மையான நீராவி செலுத்தப்பட்டு காற்று புகாத கலன்களில் குறிப்பிட்ட அழுத்தத்தில் அடைக்கப்படுகிறது
  • பின்னர் கலன்கள் அதிக வெப்ப நிலைக்கு உட்படுத்தப்பட்டு குளிருட்டப்படுவதால் நுண்ணுயிரிகள் முழுவதும் அழிக்கப்படுகிறது.

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
நமது வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் எவ்வாறு கலப்படம் உள்ளது என்பதைக் கண்டறிவது?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 65