Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

9th Science Guide விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை ?
அ) நாவடிச் சுரப்பி
ஆ) லாக்ரிமால்
இ) கீழ்தாடைச் சுரப்பி
ஈ) மேலண்ண ச் சுரப்பி
விடை:
ஆ) லாக்ரிமால்

Question 2.
மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை ____ ஆகும்.
அ) கார்போஹைட்ரேட்கள்
ஆ) புரதங்க ள்
இ) கொழுப்பு
ஈ) சுக்ரோஸ்
விடை:
ஆ) புரதங்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 3.
மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது _____ ஆகும்.
அ) குரல்வளை மூடி
ஆ) குரல்வளை முனை
இ) கடின அண்ண ம்
ஈ) மிருதுவான அண்ண ம்
விடை:
அ) குரல்வளை மூடிகள்

Question 4.
பித்த நீர் ____ செரிக்க உதவுகிறது.
அ) புரதங்கள்
ஆ) சர்க்கரை
இ) கொழுப்புகள்
ஈ) கார்போஹைட்ரேட்டுகள்
விடை:
இ) கொழுப்புகள்

Question 5.
சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு _____ ஆகும்.
அ) குடலுறுஞ்சிகள்
ஆ) கல்லீரல்
இ) நெஃப்ரான்
ஈ) சிறுநீரகக்குழாய்
விடை:
இ) நெஃப்ரான்

Question 6.
கீழ்க்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?
அ) யூரியா
ஆ) புரதம்
இ) நீர்
ஈ) உப்பு
விடை:
ஆ) புரதம்

Question 7.
ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை ஆகும்.
அ) சிறுநீரகக்குழாய்
ஆ) சிறுநீர்ப்புறவழி
இ விந்துக்குழாய்
ஈ) விதைப்பை
விடை:
ஆ) சிறுநீர்ப்புறவழி

Question 8.
கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?
அ) அண்டம்
ஆ) கருப்பை
இ) விந்தகம்
ஈ) அண்டக்குழாய்
விடை:
இ) விந்தகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

Question 1.
சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி ____ ஆகும்.
விடை:
பைலோரஸ்

Question 2.
உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாலான, உணர்வு உறுப்பு ___ ஆகும்.
விடை:
நாக்கு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 3.
கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக ____ ல் சேமித்து வைக்கப்படுகிறது.
விடை:
பித்தப்பை

Question 4.
உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி ____ ஆகும்.
விடை:
சிறுகுடல்

Question 5.
மனித உடலானது ____ வெப்பநிலையில் இயல்பாக செயல்படுகிறது.
விடை:
37°C

Question 6.
பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் ____ ஆகும்.
விடை:
கருமுட்டை

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.
விடை:
தவறு
இரைப்பையில் காணப்படும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.

Question 2.
செரிமானத்தின் போது, புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன.
விடை:
சரி

Question 3.
கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள். உப்புகள். குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 35
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 36

V. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக

அ) கழிவுநீக்கம் மற்றும் சுரத்தல்
ஆ) உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்
இ) உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல்
ஈ) இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்புப் பல்வரிசை
உ) வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

அ) கழிவு நீக்கம் மற்றும் சுரத்தல்:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 40

ஆ) உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 42

இ) உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல் உட்கொள்ளுதல்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 43

ஈ) இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்புப் பல்வரிசை இரட்டைப் பல்வரிசை
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 44

உ) வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள் வெட்டுப் பற்கள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 45

VI. சுருக்கமான விடையளி

Question 1.
செரிக்கப்பட்ட உணவை உட்கிரகிக்க எவ்வாறு சிறுகுடலானது அமைக்கப்பட்டுள்ளது?
விடை:

  1. பின்சிறுகுடலில் மிகச்சிறிய விரல் போன்ற குடல் உறிஞ்சிகள் உள்ளன.
  2. இவை ஒவ்வொன்றும் 1மி.மீ. நீளமுடைய குடல் உறிஞ்சிகள் என அழைக்கப்படும்.
  3. இவற்றில் தான் உணவு உறிஞ்சப்படுகிறது.
  4. இதன் உட்பகுதியில் மெல்லிய இரத்தக் குழாய்களும் நிணநீர் கொண்ட குடற்பால் குழல்களும் உள்ளன.

Question 2.
நமக்கு ஏன் வியர்க்கிறது?
விடை:

  1. மனித உடல் இயங்க 37°C வெப்பநிலை தேவை.
  2. வெப்பம் அதிகரிக்கும் பொழுது வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை சுரக்கிறது. இதனால் நமக்கு வியர்க்கிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 3.
மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டு முக்கிய பணிகளைக் குறிப்பிடுக.
விடை:

  1. மனித உடலில் நீரையும், மின்பகு பொருட்களையும் சமநிலைப்படுத்த உதவுகிறது.
  2. இரத்தத்தில் அமில-கார சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.

Question 4.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எவ்வாறு நடைபெறுகிறது?
விடை:

  1. சிறுநீர்ப்பை சுருக்குத் தசை சுருங்கி மூடிக்கொள்ளும்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
  2. சுருக்குத் தசை சுருங்கி விரியும்போது சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.

Question 5.
முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும் பற்களின் பெயர்களை எழுதி அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 55

Question 6.
நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.
விடை:

  1. ஒவ்வொரு நெஃப்ரானிலும் சிறுநீரக கார்ப்பசல் அல்லது மால்பீஜியன் உறுப்பு மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் ஆகிய இரு பகுதிகள் உள்ளன.
  2. சிறுநீரக கார்ப்பசலில் கிண்ண வடிவில் வெளிசெல் பௌமானின் கிண்ணம் அமைந்துள்ளது.
  3. இரத்தமானது நுண் நாளத் தொகுப்பினுள் உட்செல் நுண் தமனி வழியாக உட்சென்று, வெளிச் செல் நுண் தமனி வழியாக வெளியேறுகிறது.
  4. பௌமானின் கிண்ணம் சிறுநீரக நுண் குழலாக தொடர்கிறது. இதில் மூன்று பகுதிகள் உள்ளன.
  5. இச்சுருள் நுண் குழல் சேகரிப்பு நாளத்தில் திறக்கிறது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 56

VII. விரிவாக விடையளி

Question 1.
மனிதனின் உணவுப் பாதையை விவரி.
விடை:
1. வாய்:

  • வாய் உணவுப் பாதையின் ஆரம்பத் துவாரமாகும்.
  • இது வாய்க்குழிக்குள் திறக்கிறது.
  • இது இரு மென்மையான அசையும் மேல் முன் சிறு குடல் மற்றும் கீழ் உதடுகளால் பிணைக்கப் பட்டுள்ளது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 57

உமிழ் நீர் சுரப்பிகள்:
வாய்க் குழிக்குள் மேலண்ணச் சுரப்பிகள், நாவடிச் சுரப்பி மற்றும் தாடைச் சுரப்பி என்ற இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன.
இவை உமிழ்நீரை சுரக்கின்றன.

நாக்கு:

  • நாக்கு ஒரு தசையாலான உணர்ச்சி உறுப்பு ஆகும்.
  • இது உமிழ் நீருடன் உணவை கலக்க உதவுகிறது.

2. தொண்டை :
தொண்டை என்பது, மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பு ஆகும்.

3. உணவுக்குழல்:

  • இது 22செ.மீ நீளமுடைய தசைப்படலக்குழலாகும்.
  • இது தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் அலை போன்ற இயக்கம் மூலமாக கடத்துகிறது.

4. இரைப்பை :

  • இது உணவுக்குழலுக்கும், சிறுகுடலுக்கும் இடையே ‘J’ போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும்.
  • இரைப்பையின் உள் அடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து இரைப்பை நீர் சுரக்கிறது.

5. சிறுகுடல்:

  • இது உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான 5-7 மீ நீளமுள்ள சுருண்ட குழலாகும் மூன்று பகுதிகளை உடையது.
  • டியோடினம் என்பது சிறுகுடலின் மேல் பகுதியாகும். ‘C’ வடிவத்தில் காணப்படுகிறது.
  • பித்த நாளமும் கணைய நாளமும் இணைந்து டியோடினத்தில் திறக்கின்றது.
  • நடு சிறுகுடல் (அ) ஜூஜிணம் சிறுகுடலின் சிறிய நடுப்பகுதி ஆகும்.
  • பின்சிறுகுடல் (அ) இலியம் சிறுகுடலின் அடிப்பகுதியாக இருக்கும் இது பெருங்குடலில் திறக்கிறது.
    இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்.

6. கல்லீ ரல்:

  • உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி ஆகும்.
  • நாளமுள்ள சுரப்பியின் பகுதியாயிருக்கின்ற கணையத்தின் சுரப்புப்பகுதி லிப்பேஸ், டிரிப்சின், அமைலேஸ் நொதிகளைக் கொண்டுள்ள கணைய நீரைச் சுரக்கின்றது.

7. பெருங்குடல்:

  • இது பின்சிறு குடலிலிருந்து மலவாய் வரை பரவியுள்ளது.
  • இதனுடைய நீளம் சுமார் 1.5மீட்டர் ஆகும்.
  • இது மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை
    (i) முன் பெருங்குடல் (அ) சீக்கம்
    (ii) பெருங்குடல் (அ) கோலன்
    (iii) மலக்குடல் (அ) ரெக்டம்.
  • சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் உள்ள சிறிய முட்டுப்பை போன்ற அமைப்பு சீக்கம் ஆகும்.
  • சீக்கம் மனிதனில் பயனற்ற, பணி ஏதுமற்ற எச்ச உறுப்பாகும்.

8. மலக்குடல்:
இது இறுதியாக மலவாயில் திறக்கிறது.

9. மலவாய்:

  • மலவாயில் வளையங்கள் போன்ற மூடிய நிலையிலிருக்கும் மலச்சுருள் தசை உள்ளது.
  • மலவாய் வழியாக செரிக்காத, தன்மயமாகாத உணவு கழிவாக வெளியேற்றப்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 2.
சிறுநீரகத்தின் அமைப்பினையும், சிறுநீர் உருவாதலிலுள்ள படிநிலைகளையும் விளக்குக.
விடை:
சிறுநீரகத்தின் வெளி அமைப்பு:

  • இது முதுகெலும்பின் இரு பக்கத்திலும் வயிற்றுப் பகுதியின் அடிப்பாகத்திலுள்ள சுவர் பகுதியோடு
    ஒட்டிக் காணப்படுகிறது.
  • ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 11 செ.மீ. நீளம்,
  • சிறுநீரக தூண்க ள் 5 செ.மீ. அகலமும் மற்றும் 3 செ.மீ. பருமனும் கொண்டதாயிருக்கிறது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 76
    சிறுநீரகத்தினுள் கார்டெக்ஸ் என்ற வெளிப் பகுதியும் மெடுல்லா என்ற உட்பகுதியும் உள்ளன.
  • இவ்விரண்டு பகுதிகளிலும் சிறுநீரக நுண்குழல்கள் உள்ளன. இவை சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகுகள் ஆகும்.
  • மெடுல்லா பகுதியில் கூம்பு வடிவில் சிறுநீரக பிரமிடுகள் உள்ளன.
  • ஒவ்வொரு சிறுநீரகத்தின் உட்குழிவுப் பகுதி ஹைலம் எனப்படும். இவ்வழியே இரத்த நாளங்களும் மற்றும் நரம்புகளும் உள்ளே நுழைகிறது.

சிறுநீர் உருவாகும் முறை:
மூன்று படிநிலைகளில் சிறுநீரானது உருவாகிறது.
1. கிளாமருலார் வடிகட்டுதல்
2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்
3. குழல்களில் சுரத்தல்

1. கிளாமருலார் வடிகட்டுதல்:

  • கிளாமருலஸ் மற்றும் பௌமானின் கிண்ணம் அகியவற்றின் எப்பித்தீலிய சுவர்களின் மூலமாக இரத்தம் வடிகட்டப்படுகிறது.
  • இவ்வாறாக வடிகட்டப்பட்ட திரவத்திற்கு கிளாமரூலார் வடி திரவம் என்றுபெயர்.

2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்:

  1. அண்மை சுருள் நுண் குழலில் வடிதிரவத்தில் உள்ள குளூக்கோஸ், அமினோ அமிலங்கள் வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகியவை தேர்ந்தெடுத்து மீண்டும் உறிஞ்சப்படுகின்றன.

VIII. கூற்று மற்றும் காரணம் கீழ்காணும்

ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு கூற்றும் அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.

அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை .
இ) கூற்றும் சரி அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

1. கூற்று: சிறுநீரகங்களின் வழியே யூரியா வெளியேற்றப்படுகிறது. காரணம்: யூரியா ஒரு நச்சுத்தன்மையுடைய பொருள். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக யூரியா குவிந்தால் இறப்புக்கு வழிவகுக்கும்.
விடை:
அ). கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

Question 2.
கூற்று: இரு பாலினங்களிலும் பாலினச் சுரப்பிகள் (gonads) இரட்டை வேலையைச் செய்கின்றன. காரணம்: பாலினச் சுரப்பிகள் (gonads) முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

IX. சிந்திக்க

Question 1.
இரைப்பை நீரில் பெப்சின் குறைவுபட்டால் இரைப்பையில் எச்செயலானது பாதிக்கப்படும்?
அ)ஸ்டார்ச்சிலிருந்து சர்க்கரையாக மாறும் செரிமான மாற்றம்.
ஆ) புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல்
இ) நியூக்ளிக் அமிலங்களின் செரிமானம்
ஈ)கொழுப்புகள் கிளிசராலாகவும், கொழுப்பு அமிலங்களாகவும் உடைதல்.
விடை:
ஆ) புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல்

Question 2.
மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் மற்றும் மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளங்களைப் பெயரிடுக.
விடை:

  1. மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் இரத்தக்குழாய் – உட்செல் நுண்தமனி.
  2. மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளம் – வெளிச்செல் நுண் தமனி

Question 3.
மருத்துவ நோயறிதலில் சிறுநீர் பகுப்பாய்வானது மிக முக்கியமான பகுதியாக இருப்பதாக ஏன் கருதுகிறாய்?
விடை:

  • இது ஒரு நோயாளியில் பொதுவான உடல் ஆரோக்கியம், பற்றி வருடாந்திர ஆய்வு அல்லது அறுவை சிகிச்சைக்கு முன் உடல் நலம் பற்றி அறிதல் அல்லது கருத்தரித்தல் பற்றி ஆராய்தல் போன்றவற்றிற்கு இது உதவுகிறது.
  • சிறுநீரகத்தின் செயல்பாடு, சிறுநீர்பாதை அல்லது சிறுநீர் தொற்று பற்றி அறிய உதவுகிறது.
  • உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்ற குறைபாடுகளான நீரழிவு நோய் மற்றும் மஞ்சட்காமாலை பற்றி அறிய முடிகிறது.
  • ஒரு நோயாளியின் நோய் நிலை பற்றியும் சிகிச்சையின் விளைவு எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் அறிய முடிகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 4.
உனது மருத்துவர் ஏன் அதிக நீர் குடிக்க அறிவுறுத்துகிறார்?
விடை:
காரணங்கள்

  • தீவிர உடற்பயிற்சியின் போதும் அல்லது வெப்பம் அதிகரிக்கும் போதும் உடல் செயல் பாதிக்கப்படாமல் அதிகப்படுத்துவதற்கு நீர் உதவுகிறது.
  • நீர் சத்து நம் உடலில் ஆற்றல் நிலையையும் மூளையின் செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் அதிக நீர் எடுத்துக் கொள்ளாவிட்டால் மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்.
  • மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
  • சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

Question 5.
நமது உள்ளங்கைகளிலும், பாதங்களின் உள்ளங்காலிலும் ஏன் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன என்று உன்னால் யூகிக்கமுடிகிறதா?
விடை:
ஆம், யூகிக்க முடிகிறது.
காரணங்கள்:

  • வியர்த்தல் மூலம் உடல் வெப்பநிலை சீராக பராமரிக்கப்படுகிறது.
  • வியர்த்தல் நிகழ்ச்சி பரிவு நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • உள்ளங்கை மற்றும் பாதங்களில் வியர்ப்பதால் உடலின் வெப்பநிலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
  • பதட்டம் பயம் போன்ற நேரங்களில் இவற்றின் சுரப்பு அதிகரிப்பால் வியர்த்தல் தூண்டப்பட்டு உள்ளங்கால்களிலும், உள்ளங்கைகளிலும் அதிகம் வியர்க்கிறது.

X. கீழ்கொடுக்கப்பட்டுள்ள படத்தின் பாகங்களை சரியான விருப்பத் தேர்விலிருந்து எடுத்து பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 65
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 66
விடை:
ஈ) 1. கருப்பை நாளம்
2. அண்டகம்
3. செர்விக்ஸ்
4. கர்ப்பப்பை
5. யோனி

9th Science Guide விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
அனைத்து உறுப்பு மண்டலங்களின் செயல்களையும் ஒருங்கிணைக்கும் மண்டலம் ______
விடை:
நாளமில்லா சுரப்பி
மண்டலம்

Question 2.
மனிதனில் உள்ள பின்கடைவாய்ப் பற்களின் எண்ணிக்கை _____
விடை:
12

Question 3.
தொண்டை வழியாக விழுங்கப்படும் உணவு _____ எனப்படும்.
விடை:
உணவுக் கவளம்

Question 4.
“இரைப்பை சார் உடற் செயலியலின் தந்தை” என போற்றப்படுபவர் _____
விடை:
வில்லியம் பியூமாண்ட்

Question 5.
உணவுக் கால்வாயில் உள்ள மிகவும் நீளமான பகுதி ______ நீளமுடையது.
விடை:
5-7 மீட்டர்

Question 6.
கல்லீரல் செல்கள் _____ சுரக்கிறது.
விடை:
பித்த நீரை

Question 7.
1.5மீ நீளமுடைய தடித்த குழாயான உணவுப் பாதையின் பகுதி ______
விடை:
பெருங்குடல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 8.
மலவாயிலுள்ள வளையங்கள் போன்ற மூடிய நிலையில் இருக்கும் தசை _______ எனப்படும்.
விடை:
மலச்சுருள் தசை

Question 9.
கார்போஹைட்ரேட்டு, கொழுப்பு, புரதம் செரித்தல் முழுமை அடையும் பகுதி ______
விடை:
சிறுகுடல்

Question 10.
தோலின் மூலம் வளர்சிதை கழிவுகள் வெளியேற்றுதல் ____ எனப்படும்.
விடை:
வியர்த்தல்

Question 11.
நெப்ரான்கள் _____ லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன.
விடை:
1700-1800

Question 12.
பெண்களில் விந்துக்களைப் பெறும் பகுதியாகவும், பிறப்புக் கால்வாயாகவும் செயல்படுவது
விடை:
யோனிக்குழாய்

Question 13.
கிராஃபியன் பாலிக்கிள் சுரக்கும் ஹார்மோன் _____
விடை:
ஈஸ்ட்ரோஜென்

Question 14.
புரத செரித்தல் தொடங்கும் பகுதி _____
விடை:
இரைப்பை

Question 15.
உமிழ் நீரில் உள்ள நொதி _____
விடை:
டையலின்

Question 16.
ஒரு நாளில் சுரக்கப்படும் உமிழ் நீரின் அளவு யாது?
விடை:
1.5லிட்டர்

Question 17.
எந்த உறுப்பு மருந்தும் பொருட்கள் மற்றும் ஆல்கஹாலின் நச்சுத் தன்மைகளை நீக்குகிறது?
விடை:
கல்லீரல்

Question 18.
சக்கஸ் என்ட்ரிக்ஸ் சுரப்பில் உள்ள நொதிகள் எந்த ஊடகத்தில் நன்றாக செயல்படுகின்றன?
விடை:
காரத்தன்மையில்

Question 19.
சிறுகுடலின் ______ பகுதியில் செரிக்கப்பட்ட உணவு உறிஞ்சப்படுகிறது.
விடை:
பின்சிறுகுடல் (அ)
இலியம்

Question 20.
உடலினை சீர்ச்சமநிலையில் (ஹோமியோஸ்பேஸிஸ்) வைக்க உதவும் நிகழ்ச்சி _____
விடை:
கழிவு நீக்கம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 21.
மிகப்பெரிய, மிகச்சிறிய, உமிழ்நீர்ச் சுரப்பிகள் _____, ______
விடை:
நாவடிச் சுரப்பி,
மேலண்ண சுரப்பி

Question 22.
குடல் உறிஞ்சிகள் ஒவ்வொன்றும் _____ நீளமுடையது.
விடை:
1 மி.மீட்டர்

Question 23.
விந்தணுவிற்கு ஆற்றலை அளிக்கும் ஆதாரமாக _____ இருக்கிறது.
விடை:
பிரக்டோஸ்

Question 24.
வெட்டுப்பற்களின் எண்ணிக்கை _____
விடை:
8

Question 25.
உமிழ்நீர்ச்சுரப்பியின் நொதி ______
விடை:
டையலின்

Question 26.
சிறு குடலின் நடுப்பகுதி _____ ஆகும்.
விடை:
நடுசிறு குடல் (அ) ஜிஜீனம்

Question 27.
சிறுகுடல் நீரைச் சுரக்கும் சுரப்பிகள் அமைந்துள்ள பகுதி _____.
விடை:
நடுசிறு குடல் (அ) ஜிஜீனம்

Question 28.
சிறுகுடல் நீரில் உள்ள நொதிகள் _____, _____, ______ மற்றும் ____
விடை:
சுக்ரோஸ், மால்டோஸ், லாக்டோஸ், லிப்பேஸ்

Question 29.
குடலுறிஞ்சியில் காணப்படும் அமைப்புகள் _____ மற்றும் _____
விடை:
மெல்லிய இரத்தக்
குழாய்கள்,
குடற்பால் குழல்கள்

Question 30.
கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் நீர் திவளைகளை வெளியேற்றும் நுரையீரலின் செயல் _____
விடை:
மூச்சு வெளிவிடுதல்

Question 31.
____ சிறுநீரகம் சற்று கீழே காணப்படுகிறது –
விடை:
வலது புறமுள்ள

Question 32.
நம்முடைய புறச்சட்டக மண்டலம் செய்யும் பணி _____ மற்றும் _____
விடை:
பாதுகாத்தல்,
கழிவுநீக்கம்

Question 33.
சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்திலுள்ள சிறிய முட்டுப்பை போன்ற அமைப்பு _____
விடை:
சீக்கம்

Question 34.
முதலில் தோன்றும் தற்காலிக இணைப் பற்களின் எண்ணிக்கை ___ ஆகும்.
விடை:
இருபது

Question 35.
நாக்கு அடியில் ____ என்ற சவ்வு மூலம் இணைக்கப்பட்டுள்ளது
விடை:
ஃப்ருனுலம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 36.
தோல் ஓர் முதிர்ச்சியடைந்த மனிதனின் உடல் எடையில் ____ சதவீ-தத்தைக் கொண்டுள்ளது
விடை:
15%

Question 37.
மனிதனின் சிறுநீர் _____ தன்மையுடைய திரவமாக இருக்கிறது.
விடை:
உயர் உப்படர்வு

Question 38.
முதல் சிறுநீரக மாற்றத்தை செய்தவர்
விடை:
ஜோசப் இ. முர்ரே

Question 39.
பெண் இன ஹார்மோன்கள் ____ மற்றும் ____ ஆகும்.
விடை:
ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான்

Question 40.
குழந்தை பிறப்பின்போது பிறப்புக் கால்வாயாக செயல் ஆற்றுபவை _____
விடை:
யோனி

Question 41.
இரத்தம் உறிஞ்சும் பொருட்கள் _____, ____, ______
விடை:
எளியபொருட்கள், நீர், தாது உப்புகள்

Question 42.
செரிமான மண்டலத்தின் இரண்டு தொகுப்பு உறுப்புகள் ____, _____
விடை:
உணவுப்பாதை, செரிமானச் சுரப்பிகள்

Question 43.
புரதச் செரிமானம் _____ ல் ஆரம்பிக்கிறது
விடை:
வாய்க்குழியில்

Question 44.
_____ ஒரு செரிமான ஊக்கியாகும்
விடை:
ரென்னின்

Question 45.
_____ சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்
விடை:
இலியம்

Question 46.
உடலில் காணப்படும் மிகப்பெரிய செரிமானச் சுரப்பி _____ ஆகும்.
விடை:
கல்லீரல்

Question 47.
______ இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் இடையே அமைந்துள்ளது
விடை:
கணையம்

Question 48.
இரத்தத்தில் அமில – காரச்சமநிலையை ஒழுங்குபடுத்துவது_ ____ ஆகும்.
விடை:
சிறு நீரகம்

Question 49.
பித்த நாளமும் கணைய நாளமும் இணைந்து ____ திறக்கின்றது.
விடை:
டியோடினத்தில்

Question 50.
_____ செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் ஆகிய இரண்டு செயல்களையும் செய்கிறது
விடை:
சிறுகுடல்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 68
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 69

III. கூற்று மற்றும் காரண வகை

கீழ்காணும் ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு வழிகாட்டி கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.
அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.
இ) கூற்று சரி அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு.

Question 1.
கூற்று: பித்த உப்புகள் பால்மமாக்கல் என்ற செயலின் அடிப்படையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.
காரணம்: கல்லீரல் வலது மற்றும் இடது என இரண்டு கதுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
விடை: ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

Question 2.
கூற்று: கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்டிரானைச் சுரக்கிறது. காரணம்: இது கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டையைப் பதிய வைத்தல், நஞ்சுக் கொடி உருவாதல் மற்றும் கர்ப்பத்தினைப் பராமரித்தல் போன்ற வேலைகளைச் செய்கிறது.
விடை:
அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி.

IV. படம் வரைந்து பாகங்களைக் குறித்துக் காட்டவும்.

Question 1.
கீழ்கண்ட படத்தில் (A) சிஸ்டிக் நாளம், (B) பித்தப்பை, (C) முன் சிறு குடல், (D) கணையம் ஆகிய பாகங்களைக் குறி.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 80

Question 2.
சிறுநீரகத்தில் கீழ்கண்ட பாகங்களைக் குறி.
(A) பெருந்தமணி,
(B) சிறுநீர்பை,
(C) சிறுநீர்குழாய்,
(D) சிறு நீரக தமனி.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 88

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
இரத்த ஓட்ட மண்டலம் செய்யும் பணிகள் யாவை?
விடை:
இந்த மண்டலம் சுவாச வாயுக்கள், ஊட்டச் சத்துப் பொருட்கள், கழிவுப் பொருட்கள் போன்ற வற்றைக் கடத்துகிறது.

Question 2.
உமிழ் நீரில் உள்ள நொதிகளின் பெயர்களைக் குறிப்பிடு?
விடை:

  1. டையலின்
  2. லைசோசைம்

Question 3.
பித்த உப்புக்களின் பெயர்களைக் குறிப்பிடு?
விடை:

  1. சோடியம் கிளைக்கோலேட்
  2. சோடியம் டாரோ கிளைக்கோலேட்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 4.
அதிகப்படியான கொழுப்பு உடலில் என்ன மாற்றம் அடைகிறது?
விடை:
அதிகப்படியான கொழுப்புகள் கொழுப்புத் திசுக்களில் அடுக்காக சேமித்து வைக்கப்படுகின்றன.

Question 5.
சிறுநீரகத்தை சுற்றியுள்ள உறைகளை வரிசைப்படுத்தி கூறு.
விடை:

  1. தசை நார் இணைப்புத் திசுக்கள்
  2. சிறுநீரக கேப்சியூல்கள்
  3. கொழுப்பு கேப்சியூல்கள்
  4. இழைகளாலான சவ்வு

Question 6.
சிறுநீரக பழுதடைவு ஏன் ஏற்படுகிறது?
விடை:
சிறுநீரகங்கள் தங்கள் வடிகட்டும் திறனை இழக்கும் போது அதிகப்படியான திரவம் மற்றும் நச்சுக்கழிவுகள் உடலில் குவிகின்றன. இந்த நிலை சிறுநீரக பழுதடைவு எனப்படுகிறது.

Question 7.
மனிதனின் ஆண் பெண்களில் பால் முதிர்ச்சி அடையும் வயதினைக் குறிப்பிடு?
விடை:

  1. ஆண்க ளில் பால் முதிர்ச்சி 13-14 வயதில் ஏற்படுகிறது.
  2. பெண்க ளில் 11-13 வயதில் ஏற்படுகிறது.
  3. இந்த வயது பருவமடையும் வயது எனப்படுகிறது.

Question 8.
எந்த செல்கள் ஆண் இன ஹார்மோனைச் சுரக்கின்றன?
விடை:
விந்தகத்திலுள்ள லேடிக் செல்கள் டெஸ்டோஸ்டீரான் என்ற ஆண் இன ஹார்மோனைச் சுரக்கின்றன.

Question 9.
மாதவிடாய் சுழற்சி வரையறு.
விடை:
ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு கருமுட்டையானது முதிர்ச்சியடைந்து ஏதாவது ஒரு அண்டகத்திலிருந்து ஒவ்வொரு 28 நாட்கள் இடைவெளியில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு பெண் இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் சுழற்சி மாற்றங்கள் மாதவிடாய் சுழற்சி எனப்படும்.

Question 10.
டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனின் பணிகளை பட்டியலிடு.
விடை:

  1. விந்தணு உருவாதலைத் தூண்டுகிறது.
  2. ஆண் தன்மையின் பண்புகளாகிய தாடி, மீசை, உடலிலுள்ள முடி மற்றும் குரலில் ஏற்படும் மாற்றத்தினையும் (கனத்த குரல்) உருவாக்குகிறது.

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
உணவு செரித்தலில் இரைப்பையின் பங்கினை விவரி.
விடை:

  1. இரைப்பையானது உணவுக் குழலுக்கும் சிறுகுடலுக்குமிடையே அமைந்துள்ளது. ‘J’ போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும்.
  2. இரைப்பை நீரில் Hcl, பெப்சின் மற்றும் ரெனின் உள்ளது.
  3. ஹைட்ரோ குளோரிக் அமிலம், செயலற்ற பெப்சினோஜனை செயலாற்றும் பெப்சின் ஆக மாற்றுகிறது.
  4. Hcl உணவோடு விழுங்கப்பட்ட பாக்டீரியாக்களை அழித்து விடுகிறது.
  5. ரெனின் பால் புரதமாகிய கேசின்னை உறைய வைக்கிறது. இரைப்பையில் உள்ள இரைப்பை நீர் மற்றும் செரிக்கப்பட்ட உணவுக்கு இரைப்பை பாகு என்று பெயர்.
  6. இந்த இரைப்பைப் பாகு குடலுக்குள் மெதுவாக குடல்வாய் (அ) பைலோரஸ் வழியாக நகர்கிறது.

Question 2.
கூழ்மப் பிரிப்பு அல்லது செயற்கை சிறுநீரகம் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  1. சிறுநீரகமானது நைட்ரஜன் கழிவுப் பொருட்களை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
  2. சிறுநீரகங்கள் தங்கள் வடிகட்டும் திறனை இழக்கும் போது அதிகப்படியான திரவம் மற்றும் நச்சுக் கழிவுகள் உடலில் சேர்கிறது. இந்த நிலைக்கு சிறுநீரக பழுதடைவு என்று பெயர்.
  3. இதற்காக நோயாளியின் இரத்தத்தை வடிகட்ட ஒரு செயற்கை சிறுநீரகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கூழ்மப் பிரிப்பு (dialysis) என்று பெயர்.
  4. இம்முறையில் செயற்கை சிறுநீரகத்தை பயன்படுத்தி இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. இதற்கு ஹீமோடையலிஸிஸ் என்று பெயர்.
  5. பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை மருந்துகளாலோ அல்லது கூழ்மப் பிரிப்பினாலோ சிகிச்சையளிக்கப்பட முடியாத போது நோயாளிகள் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Question 3.
கல்லீரலின் பணிகளை பட்டியலிடு?
விடை:

  1. இரத்த சர்க்கரை மற்றும் அமினோ அமில அளவைப் கட்டுப்படுத்துதல்.
  2. கருவில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குதல்.
  3. இரத்தம் உறைதலுக்குப் பயன்படும் பைபிரினோஜென் மற்றும் புரோத்ராம்பின் ஆகியவற்றை உருவாக்குதல்.
  4. சிவப்பு இரத்த அணுக்களை அழித்தல்.
  5. இரும்பு, தாமிரம், வைட்டமின்கள் A மற்றும் D ஆகியவற்றை சேமித்து வைத்தல்.
  6. ஹெப்பாரின் தயாரித்தல் (இரத்தம் உறைதலை தடுப்பான்)
  7. நச்சுகள் மற்றும் உலோக நஞ்சினை வெளியேற்றல்.
  8. மருந்துப் பொருட்கள் மற்றும் ஆல்கஹாலின் நச்சுத் தன்மைகளை நீக்குதல்.

கல்லீரல் சுரக்கும் பித்த நீரிலுள்ள பித்த உப்புக்கள் பால்மமாக்கல் முறையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.

Question 4.
அ) நெஃப்ரானின் படம் வரைந்து பாகங்களைக் குறி.
ஆ) முக்கிய பாகங்களின் பணியைக் கூறு.
விடை:
அ) நெஃப்ரானின் படம்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 90

ஆ) பணிகள்:

  1. பௌமானின் கிண்ண ம் : இரத்தமானது வடிகட்டப்படுகிறது.
  2. அண்மை சுருள் நுண்குழல் : வடி திரவத்திலுள்ள குளூக்கோஸ், அமினோ அமிலங்கள் வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகியவை தேர்ந்தெடுத்து மீள உறிஞ்சுகிறது.
  3. சேய்மை சுருள் நுண் குழல் :
    1. ஹைட்ரஜன் அல்லது பொட்டாசியம் அயனி போன்ற பொருள்கள் நுண் நாளங்களுக்குள் சுரக்கின்றன.
    2. பொட்டாசியம், பெனிசிலின் மற்றும் ஆஸ்பிரின் போன்ற பொருள்கள் நுண்குழல்களில் வடிதிரவமாக கடக்கின்றன. இதுவே இறுதியாக சிறுநீர் எனப்படுகிறது.
  4. சேகரிப்பு நாளம் :
    இறுதியாக சேகரிப்பு நாளத்தில் சிறுநீரானது சேர்ந்து பெல்விஸ் பகுதிக்குச் சென்று சிறுநீர்க் குழாய்கள் வழியாக சிறுநீர்பையை அடைந்து பெரிஸ்டால்சிஸ் இயக்கத்தின் மூலம் வெளியேறுகிறது.