Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 18 திசுக்களின் அமைப்பு Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 18 திசுக்களின் அமைப்பு

9th Science Guide திசுக்களின் அமைப்பு Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
உயிருள்ள மெல்லிய சுவருடைய பல கோண வடிவ செல்களைக் கொண்டுள்ள திசு.
அ) பாரன்கைமா
ஆ) கோலன்கைமா
இ) ஸ்கிளிரன்கைமா
ஈ) மேலே கூறிய எதுவும் இல்லை
விடை:
அ) பாரன்கைமா

Question 2.
நார்கள் கொண்டுள்ளது
அ) பாரன்கைமா
ஆ) ஸ்கிளிரன்கைமா
இ) கோலன்கைமா
ஈ) ஏதும் இல்லை
விடை:
ஆ) ஸ்கிளிரன்கைமா

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 3.
துணை செல்கள் ____ வுடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன.
அ) சல்லடைக் கூறுகள்
ஆ) பாத்திரக் கூறுகள்
இ) ட்ரைக்கோம்கள்
ஈ) துணை செல்கள்
விடை:
அ) சல்லடைக் கூறுகள்

Question 4.
கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்?
அ) பாரன்கைமா
ஆ) கோலன்கைமா
இ) சைலம்
ஈ) ஸ்கீளிரன்கைமா
விடை:
இ) சைலம்

Question 5.
ஏரேன்கைமா எதில் கண்டறியப்படுகிறது?
அ) தொற்று தாவரம்
ஆ) நீர்வாழ் தாவரம்
இ) சதுப்பு நில தாவரம்
ஈ) வறண்ட தாவரம்
விடை:
ஆ) நீர்வாழ் தாவரம்

Question 6.
மிருதுவான தசை காணப்படுவது
அ) கர்ப்பப்பை
ஆ) தமனி
இ) சிரை
ஈ) அவை அனைத்திலும்
விடை:
ஈ) அவை அனைத்திலும்

Question 7.
நரம்பு செல்கள் பெற்றிறாதது.
அ) ஆக்சான்
ஆ) நரம்பு நுனி
இ) தசைநாண்கள்
ஈ) டென்ட்ரைட்
விடை:
இ) தசை நாண்கள்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 1

III. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
உள்ளுறுப்புகளுக்கு _____ திசுக்கள் உறுதியை அளிக்கின்றன.
விடை:
கோலன்கைமா

Question 2.
பாரன்கைமா, குளோரன்கைமா கோலன்கைமா, ஸ்கிளிரன்கைமா எளிய ஆகியவை _____ வகை திசுக்களாகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 3.
_____ மற்றும் ____ ஆகியவை கூட்டுத்திசுக்களாகும்.
விடை:
சைலம், புளோயம்

Question 4.
குறுயிலை கொண்ட எபிதீலிய செல்கள் நமது உடலின் _____ பகுதியில் உள்ளன.
விடை:
சுவாச குழாய்

Question 5.
சிறுகுடலின் புறணி ____ ஆல் ஆனது.
விடை:
தூண் எபிதீலியம்

Question 6.
மியாஸிஸ் நிகழ்ச்சியில் குரோமோசோம்கள் ஜோடியுறும் உண்டு ஒத்திசைவான குரோமோசோம் போது, ____ குரோமோசோம்கள்
விடை:
ஒன்றின் பக்கம் ஒன்றாக அமைந்திருக்கும்.

IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
எபிதீலிய திசு விலங்கு உடலின் பாதுகாப்பு திசுவாகும்.
விடை:
சரி

Question 2.
எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை சிற்றிடை இணைப்பு திசுவின் இருவகையாகும்.
விடை:
தவறு
எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை ஆதார இணைப்புத் திசுவின் இரு வகையாகும்.

Question 3.
பாரன்கைமா ஒரு எளிய திசு
விடை:
சரி

Question 4.
ஃபுளோயம் டிரக்கிடுகளால் ஆனது.
ஃபுளோயம் சல்லடைக் குழாயினால் ஆனது.
விடை:
தவறு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 5.
கோலன்கைமாவில் நாளங்கள் காணப்படுகின்றன.
சைலத்தில் நாளங்கள் காணப்படுகின்றன
விடை:
தவறு

V. சுருக்கமாக விடையளி

Question 1.
இடை ஆக்குத்திசுக்கள் என்பவை யாவை? எவ்வாறு அவை மற்ற ஆக்குத் திசுக்களிலிருந்து வேறுபடுகின்றன.
விடை:
விளக்கம் :

  • முதல் நிலை ஆக்குத் திசுவின் ஒரு பகுதி பிரிந்து நிலையான திசுப்பகுதிகளுக்கிடையே இவை காணப்படுகின்றன.
  • இடையில் காணப்படுவதால் இடை ஆக்குத்திசு எனப்படுகிறது. இருப்பிடம் :
    1.  இலையடி – (எ.கா) பைனஸ் தாவரம்
    2.  கணுவிடைப் பகுதியின் அடி (எ.கா) புற்கள்

Question 2.
கூட்டுத்திசு என்றால் என்ன? பல்வேறு வகையான கூட்டுதிசுவின் பெயர்களை எழுது.
விடை:
வரையறை :
ஒன்றுக்கும் மேற்பட்ட பலவகை செல்கள் – ஒன்றாக தொகுப்பாக ஒரு பணியைச் செய்கின்றன.
வகைகள் : இருவகைப்படும்
1) சைலம் – (நீரைக் கடத்தும் திசு)
2) புளோயம் – (உணவைக் கடத்தும் திசு)

1) சைலம் கூறுகள் : –

  1. சைலம் டிரக்கீடுகள்
  2. சைலம் நார்கள்
  3. சைலம் குழாய்கள்
  4. சைலம் பாரன்கைமா

2) புளோயம் கூறுகள் :

  1. சல்லடைக்குழாய்
  2. துணைசெல்கள்
  3. புளோயம் பாரன்கைமா
  4. புளோயம் நார்கள்

Question 3.
அதிக அளவு நமது உடலில் காணப்படும் தசை திசுக்களை குறிப்பிடுக. அவற்றின் செயல்பாட்டினை வகுத்துரை.
விடை:
1. எலும்பு சட்டகத்தசை (வரித்தசை),
2. மென்தசை (வரியற்ற தசை)

1. எலும்பு சட்டகத்தசை (வரித்தசை)

  • நம் உடலில் அதிகம் காணப்படுகிறது.
  • இவை எலும்புடன் ஒட்டி உடலின் அசைவிற்குக் காரணமாக உள்ளதால் எலும்புச் சட்டகத்தசை எனப்படுகிறது.
  • இவை நம் உடலின் உணர்வுகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால். இவை இயக்க (தன்னிச்சை) தசைகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • இவைகளில் இருண்ட மற்றும் இருளற்ற பட்டைகள் மாறி மாறி காணப்படுவதால் இவை வரித்தசை-கள் எனப்படுகிறது.
    எ.கா. கை, கால்களில் காணப்படும் மூட்டுத் தசைகள்

2. மென்தசை (வரியற்ற தசை)

  • இத்தசைகள் கதிர் வடிவில் உள்ளது. மையப்பகுதி அகன்றும் முனைப் பகுதி சுருங்கியும் உள்ளது.
  • இத்தசைகளில் கோடுகள் மற்றும் வரிகள் கிடையாது.
  • இவை நம் இச்சைகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதில்லை. எனவே இவை இயங்கு தசைகள் என அழைக்கப்படுகிறது.
    எ.கா. இரத்த நாளம், இரப்பை, சுரப்பிகள், சிறுநீர்ப்பை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 4.
எலும்பு இணைப்புத்திசு என்றால் என்ன? எப்படி அவை நமது உடல் செயல்பட உதவுகின்றன?
விடை:
எலும்புத் திசு :
இது திடமான விறைத்த மற்றும் உறுதியான இளக்கமற்ற எலும்பு சட்டக இணைப்புத் திசு.

செயல்பாடுகள் :

  • உடலுக்கு வடிவத்தையும், கட்டமைப்பையும் கொடுக்கிறது.
  • மென்மையான திசுக்களுக்கும், உள் உறுப்புகளுக்கும் ஆதாரத்தையும், பாதுகாப்பையும் கொடுக்கிறது.

Question 5.
பாலினப் பெருக்கத்தின் போது ஏன் கேமிட்டுகள் மியாஸிஸ் மூலம் உருவாக வேண்டும்?
விடை:

  • பாலினப் பெருக்கம் செய்யும் உயிரினங்களில் இருமய நிலை டிப்ளாய்டு) செல்கள் காணப்படுகிறது.
  • கேமீட்டுகள் உருவாக்கம் மைட்டாசிஸ் முறையில் நடைபெற்றால், குரோமோசோம் எண்ணிக்கை இரட்டிப்படையும் – அப்போது அந்த உயிரினம் அசாதாரணமானதாகக் காணப்பட வாய்ப்புள்ளது.

குன்றல்பகுப்பு (மியாசிஸ்) முக்கியத்துவம் :

  • குன்றல் பகுப்பின் (மியாசிஸ்) போது குரோமோசோம் எண் சரி பாதியாக குறைக்கப்படுகிறது. (n)
  • கருவுறும் போது, ஆண் மற்றும் பெண் கேமீட்டுகள் இணைந்து டிப்ளாய்டு (2n) (இருமைய) நிலையைப் பெறுகிறது.
  • இவ்வாறு குரோமோசோம் எண்ணிக்கையை நிலையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

Question 6.
மைட்டாசிஸின் எந்த நிலையில் குரோமோசோம்கள் செல்லின் மையப்பகுதியில் அமைகின்றன?
எப்படி?
விடை:

  • மெட்டா நிலையில் குரோமோசோம்கள் செல்லின் மையத்தில் உள்ளது.
  • குரோமோசோமில் உள்ள சென்டிரோமியர்கள் ஸ்பிண்டில் இழைகளால் இணைக்கப்பட்டிருப்பதால், குரோமோசோம் செல்லின் மையத்தில் உள்ளது.

VI. விரிவாக விடையளி

Question 1.
நிலைத்த திசுக்கள் யாவை? வெவ்வேறு வகையான எளிய நிலைத்த திசுக்களை விவரிக்க.
விடை:
வரையறை :

நிலைத்த திசுக்கள், பகுப்படையும் திறனை நிரந்தரமாகவோ (ஆ) தற்காலிகமாகவோ இழந்த திசுக்கள்.
இவை இருவகைப்படும்
1. எளியத்திசு,
2. கூட்டுத்திசு

1. எளியத்திசு
ஒத்த அமைப்பு மற்றும் செயல்களையுடைய செல்களால் ஆன திசு, இவை மூன்று வகைப்படும்.
அ) பாரன்கைமா,
ஆ) கோலன்கைமா,
இ) ஸ்கிளீரன்கைமா

அ) பாரன்கைமா
சம அளவுடைய, மெல்லிய சுவருடைய முட்டை
(அ) பலகோண அமைப்புடைய செல் இடைவெளிகளுடன் கூடிய திசுவாகும்.
(i) ஏரன்கைமா,
(ii) குளோரன்கைமா
(i) ஏரன்கைமா
நீர்வாழ் தாவரங்களில் பாரன்கைமா காற்றிடைப் பகுதிகளைக் கொண்டுள்ளதால் – ஏரன்கைமா எனப்படும்.

(ii) குளோரன்கைமா
பாரன்கைமா திசு மீது ஒளிபடும் போது – பசுங்கணிகங்களை உற்பத்தி செய்து – குளோரன்கைமாவாக மாறும்.

பணி :

  1. நீரை, உணவைச் சேமித்தல்
  2. உறிஞ்சுதல், சுரத்தல்
  3. மிதத்தல் etc,.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 65

ஆ) கோலன்கைமா

  • நீண்ட சதுர அல்லது சிறுத்த முனையுடைய உயிருள்ள செல்கள்.
  • சீரற்ற தடித்த லிக்னின் இல்லாத செல்சுவர் கொண்டது.

பணி : புறத்தோலுக்கடியில் காணப்படுகிறது. தாவர உறுப்புகளுக்கு வலிமை அளிக்கிறது.
இ) ஸ்கிளீரன்கைமா

  • லிக்னினால் ஆன தடித்த செல்சுவரை கொண்டது.
  • முதிர்ந்த நிலையில் புரோட்டோபிளாசம் அற்று காணப்படுகிறது. இருவகைப்படும்.
    1. நார்கள்,
    2. ஸ்கீளிரைடுகள்

1) நார்கள்

  • நீண்ட ஸ்கிளீரன்கைமா செல்களால் ஆனது. செல்சுவர் லிக்னின் பொருளால் ஆனது.
  • 1-3 mm சில தாவரங்களில் 20 மிமீ முதல் 550 மிமீ வரை நீளமுடையவை.
  • கன்னாபினஸ் சட்டைவா (சணல்)
  • கார்கோரஸ் காப்சுலரிஸ் (ஜீட் வகை) சணல்
  • லின்னம் யுசிட்டாஸ்ஸிமம் (ஆளி)
    பணி – வலுதரும் திசு – எ.கா. சைலம் நார்கள்

2) ஸ்கிளீரைடுகள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 66

  • இது அகன்று ஒற்றையாகவோ (அ) தொகுப்பாகக் காணப்படும்.
  • இதன் செல்சுவர் லிக்னின் என்னும் பொருளால் ஆனது
  • குழிகள் நிலைத்த தோற்றத்துடன் காணப்படுகின்றது.

பணி – பழங்கள் மற்றும் விதைகளின்
உறைகளில் காணப்படுகிறது.
வலுதரும் திசுவாகும். எ.கா. – பட்டாணி விதையுறை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 2.
சைலக்கூறுகளைப் பற்றி எழுதுக.
விடை:
சைலம் : நீரைக் கடத்தும் திசு – தாவர உடலுக்கு இயந்திர உதவியை அளிக்கிறது.
கூறுகள்
இவற்றின் கூறுகள் :
1). சைலம் டிரக்கீடுகள்,
2). சைலம் வெஸல்கள் (குழாய்கள்),
3). சைலம் நார்கள்,
4). சைலம் பாரன்கைமா

சைலம் டிரக்கீடுகள்

  • நீண்ட அல்லது குழாய் போன்றவை.
  • தடித்த மற்றும் லிக்னின் சுவரைக் கொண்ட இறந்த செல்களாகும்.
  • செல்களின் முனைப்பகுதி – மழுங்கியது. சிறுத்த (அ) உளி போன்ற அமைப்புடையது.
  • பலவகை இரண்டாம் நிலைத் தடிப்புகளைக் கொண்டுள்ளது.

சைலம் நார்கள்

  • நீண்ட செல்கள் – முனைகள் கூரானவை.
  • நீரையும் கனிமங்களையும் கடத்துவதோடு, தாவரத்திற்கு வலிமையும் தருகிறது.

சைலக்குழாய்கள்

  • நீண்ட குழாய் வடிவம் – அகன்றது நீள் அச்சுக்கு இணையானது
  • செல்சுவர் – லிக்னின் காணப்படும் – அகன்ற மையக் குழிகளைக் கொண்டுள்ளது – இறந்தவை
  • நீரையும் கனிமங்களையும் கடத்துவதோடு, தாவரத்திற்கு வலிமையும் தருகிறது.

சைலம் – பாரன்கைமா

  • செல்கள் மெல்லிய சுவரை உடையவை – உயிருள்ளவை
  • பணி – கடத்துதலில் உதவுவதோடு, ஸ்டார்ச் மற்றும் கொழுப்புகளைச் சேகரிக்கிறது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 70

Question 3.
மைட்டாஸிஸ் மற்றும் மியாசிஸ்க்கு இடையேயுள்ள வேறுபாட்டினை பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 78

VII. மதிப்பு அடிப்படை கேள்விகள்

Question 1.
இரத்தத்திலிருந்து அனைத்து இரத்தத்தட்டுகளையும் நீக்கும் போது என்ன விளைவு ஏற்படும்?
விடை:

  • இரத்த தட்டுகளின் முக்கிய பணி காயம்பட்ட இடத்தில் இரத்த உறைவு ஏற்படுத்தி இரத்த இழப்பை தடுத்தல்.
  • இரத்தத்திலிருந்து இரத்தத் தட்டுகளை நீக்கிவிட்டால் காயம்பட்ட இடத்தில் இரத்த உறைவு நிகழாது. மாறாக, இரத்த இழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடும்.

Question 2.
இரத்தத்தில் எவை உண்மையான செல்கள் இல்லை? ஏன்?
விடை:

  • இரத்தத்தில் RBC, WBC, இரத்த தட்டுகள் காணப்பட்டாலும், RBC, மற்றும் இரத்தத்தட்டுகள் இவற்றில் உட்கருக்கள் இல்லை எனவே இவை உண்மையான செல்களாகக் கருதப்படவில்லை.
  • WBC மட்டுமே இரத்தத்தில் காணப்படும் உண்மையான செல்கள் ஆகும்.

9th Science Guide திசுக்களின் அமைப்பு Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண்வினாக்கள்.

Question 1.
லிக்னின் காணப்படும் எளிய வலிமை தரும் திசு _______
விடை:
கோலன்கைமா

Question 2.
ஒரு தாவரத்தில் பொதுவாகக் காணப்படும் எளியத்திசு ______
விடை:
பாரன்கைமா

Question 3.
திசுக்களைப் பற்றி அறிகிற அறிவியல் பிரிவு _____
விடை:
ஹிஸ்டாலஜி (Histology)

Question 4.
தென்னையின் மட்டையில் காணப்படும் திசு _____
விடை:
ஸ்கிளிரன்கைமா

Question 5.
எந்தத்திசு தாவரத்தின் நீள் வளர்ச்சிக்காக காரணமாக உள்ளது?
விடை:
நுனி ஆக்குத்திசு

Question 6.
____ முதிர்ந்த பின்பும் தன் உட்கருவை இழக்காமலுள்ளது?
விடை:
துணை செல்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 7.
புளோயம் திசுவில் காணப்படும் உயிரற்ற கூறு ______
விடை:
புளோயம் நார்கள்

Question 8.
வயலிலுள்ள ஒரு கரும்பு, தாவரத்தின் நுனிப்பகுதி நீக்கப்பட்டாலும் அது தொடர்ந்து நீளமாக வளர்வதற்குக் காரணம் ______
விடை:
இடை ஆக்கு திசு

Question 9.
லிக்னினை தனது இரண்டாம் செல்சுவரில் கொண்டுள்ள திசு _______
விடை:
ஸ்கிளிரன்கைமா

Question 10.
ஜீட் என்பது ______
விடை:
இரண்டாம் பாஸ்ட் நார்கள்

Question 11.
இரத்தம் உறைதலுக்கு காரணமான வைட்டமின் _______
விடை:
வைட்டமின் K

Question 12.
தசை நாரின் சைட்டோபிளாசம் _____ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
சார்கோஃபிளாசம்

Question 13.
எந்த விலங்கில் கொழுப்புத்திசு அதிக அளவில் காணப்படுகிறது?
விடை:
திமிங்கலம்

Question 14.
இரத்தம் மற்றும் எலும்பு _____ திசுவிலிருந்து தோன்றுகிறது?
விடை:
மீசோடெர்ம்

Question 15.
நமது உடலில் 60% கரிம பொருட்கள் காணப்படும் உறுப்பு ______
விடை:
எலும்பு

Question 16.
இரத்தக் குழாய்களின் உள் அடுக்கு ______ திசுவினால் ஆனது?
விடை:
எபிதீலிய திசு

Question 17.
இரத்தத்திற்கும் உடல் திரவங்களுக்கு மிடையே இணைப்பாக செயல்படுவது _______
விடை:
நிணநீர்

Question 18.
சுருங்கும் புரதம் காணப்படுவது _______
விடை:
எலும்பின் மஜ்ஜை

Question 19.
சுருங்கும் புரதம் காணப்படுவது ______
விடை:
தசை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 20.
எலும்பு மேட்ரிக்ஸில் அதிகம் காணப்படுவது ______
விடை:
கால்சியம் மற்றும்
பாஸ்பரஸ்

Question 21.
இரு நியூரான்களை இணைப்பது ______
விடை:
சினாப்ஸ்

Question 22.
தண்டின் குறுக்களவு அதிகரிக்கக் காரணம் ______
விடை:
பக்க ஆக்குத் திசு

Question 23.
இரத்தக் குழாய்களின் உள்பூச்சாகக் காணப்படுவது ____ ஆகும்
விடை:
தட்டு எபிதீலியம்

Question 24.
சிறுகுடலில் உள் பூச்சாகக் காணப்படும் திசு _____ ஆகும்.
விடை:
எளிய தூண் எபிதீலியத்திசு

Question 25.
சிறுநீரக நுண்குழலின் உள்பூச்சாகக் காணப்படுவது _____ ஆகும்
விடை:
கனசதுர எபிதீலியத்திசு

Question 26.
பெலோபியன் நுண்குழலின் உள்பூச்சாகக் காணப்படுவது ______
விடை:
குறுயிழை எபிதீலியத்திசு

Question 27.
மனித உடலில் அதிகபட்சமாகக் காணப்படும் திசு _____ ஆகும்.
விடை:
இணைப்புத் திசு

Question 28.
குரோமோசோம்கள் பூங்கொத்து போன்ற அமைப்பு நிலையைப் பெற்று லெப்டோடீன் காணப்படும் நிலை _____ ஆகும்.
விடை:
லொயோலா

Question 29.
கயாஸ்மா உருவாக்கம் மற்றம் குறுக்கெதிர் மாற்றம் நடைபெறும் புரோநிலையின் துணை நிலை _____ ஆகும்.
விடை:
பேக்கிடீன்

Question 30.
வெள்ளை நாரால் ஆன தசையையும் எலும்பையும் இணைக்கும் திசுவிற்கு _____ என்று பெயர்.
விடை:
தசை நாண்

Question 31.
சல்லடை செல்களில் _____ காணப்படுவதில்லை.
விடை:
துணை செல்கள்

Question 32.
உடலின் வெப்பநிலையை சீராக வைப்பது _____ திசுவாகும்
விடை:
கொழுப்புத்திசு

Question 33.
மைட்டாசிஸை முதன் முதலில் கண்டறிந்தவர் _______
விடை:
ஃப்ளம்மிங்

Question 34.
ஆளி தாவரவியல் பெயர் ______ ஆகும்
விடை:
லின்னம் யுசிட்டாஸ்ஸிமம்
(ஆளி)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 35.
தோலை தசையுடன் இணைக்கும் திசு ______
விடை:
சிற்றடைவிழையம்

Question 36.
சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படுவது _____
விடை:
கொழுப்புத்திசு

Question 37.
செல்பிரிதலின் உட்கரு பிரிதலுக்கு _____ என்று பெயர்
விடை:
கேரியோகைனசிஸ்

Question 38.
வெள்ளையணுக்களில் சைட்டோபிளாசத்தில் துகள்கள் அற்றவை _____ எனப்படும்
விடை:
ஏகிராணுலோசைட்ஸ்

Question 39.
இலை உருவாக்கத்திற்குக் காரணமான ஆக்குதிசு ____ எனப்படும்
விடை:
தட்டு ஆக்குத்திசு

Question 40.
உருளைக் கிழங்கின் பாரன்கைமாவின் வெற்றிடத்தில் காணப்படும் பொருள் _____ எனப்படும்.
விடை:
ஸ்டார்ச்

Question 41.
சைலம் குழாய்கள் காணப்படும் இம்னோஸ்பெர்ம் ____ ஆகும்
விடை:
நீட்டம்

Question 42.
டெரிடோபைட்டாவிலும் ஜிம்னோஸ்பெர்ம்களிலும் மட்டும் காணப்படும் புளோயம் கூறு ____ ஆகும்
விடை:
சல்லடை செல்

Question 43.
கொலாஜன் நார்கள், மீள்நார்கள் மற்றும் ஃபைரோப்ளாஸ்ட் செல்களாலான முறையான இணைப்புத்திசு ____ ஆகும்
விடை:
சிற்றிடைவிழையம்

Question 44.
மனித உடலின் மிகவும் நீளமான செல் _____ ஆகும்.
விடை:
நியூரான்

Question 45.
_____ செல் சுவரில் துளைகள் காணப்படுவதில்லை
விடை:
துணை செல்கள்

Question 46.
ஆப்பிளில் பாரன்கைமா ______ சேமித்து வைத்துள்ளது
விடை:
சர்க்கரையை

Question 47.
_____ தாவர உறுப்புகளுக்கு வலிமை அளிக்கிறது
விடை:
கோலன்கைமா

Question 48.
_____ ஒரு கடத்தும் திசுவாகும்
விடை:
சைலம்

Question 49.
ஃபுளோயத்தின் கடத்தும் கூறுகள் ______ கூறுகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
சல்லடைக்குழாய்

Question 50.
_____ கழிவுப் பொருள்களை நீக்கும் பணியில் ஈடுபடுகின்றன
விடை:
எபிதீலியத் திசுக்கள்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 60

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 61

III. கூற்று மற்றும் காரண வகை

உறுதிபடுத்துதல் : A காரணம் : R
விவரிப்பு :
பின்வரும் கேள்விகளில் ஒரு கூற்று (A) தரப்பட்டுள்ளது. அதற்குரிய காரணம் (R) அதன் கீழ் தரப்பட்டுள்ளது. இவற்றிற்குக் கீழாகத் தரப்பட்டுள்ளவற்றிலிருந்து கேள்விக்கான சரியான விடையைத் தெரிவு செய்க.
a) A மற்றும் R சரி. R – A ஐச் சரியாக விளக்குகிறது.
b) A மற்றும் R சரி. R – A ஐச் சரியாக விளக்கவில்லை.
c) A சரி R தவறானது
d) A மற்றும் R இரண்டும் தவறானது

Question 1.
உறுதிபடுத்துதல் (A) : காது மடல்கள் மென்மையான வளையும் தன்மையுடையவை
காரணம் (R) : காது மடல்களில் ஹையலின் எனப்படும் குருத்தெலும்புத்திசு காணப்படுகிறது.
விடை:
c) A சரி R தவறானது

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 2.
உறுதிபடுத்துதல் (A): ஆதார இணைப்புத் திசுவில் அதிக அளவு உயிரற்ற செல்லிடைவெளி செல்லிற்கு புறம்பான மேட்ரிக்ஸ் காணப்படுகிறது.
காரணம் (R) : செல்லிடை வெளிகளில் புரத நார்கள் காணப்படுகிறது.
விடை:
b) A மற்றும் R சரி. R-A ஐச் சரியாக விளக்கவில்லை.

Question 3.
உறுதிபடுத்துதல் (A) : இரத்த வெள்ளையணுக்கள் தெளிவான உட்கரு கொண்டவை. அமீபா போன்று நகரும் தன்மை கொண்டவை. காரணம் (R) : இதில் கிராணுலோசைட்ஸ் ஏகிராணுலோசைட்ஸ் எனும் இருவகைகள் உள்ளன.
விடை:
b) A மற்றும் R சரி. R-A ஐச் சரியாக விளக்கவில்லை.

IV. பின்வரும் வரைபடம் என்னவென்று காண் அதன் பாகங்களைக் கண்டறி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 75

Question 2.
3 வகையான தசைத்திசுக்கள் யாவை? அவற்றின் படம் வரைக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 79

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
கோலன்கைமா திசு – சைலம் மற்றும் புளோயத்தில் காணப்படுவது இல்லை. ஏன்?.
விடை:

  • கோலன்கைமா உயிருள்ள வலு தரும் திசு.
  • ஆனால் சைலத்திலும், புளோயத்திலும் நிறைய உயிரற்ற செல்களே காணப்படுகின்றன.
  • ஸ்கிளிரன்கைமா நார்களில் லிக்னின் படிந்து காணப்படுவதால் அது வலு தருகிறது.
  • எனவே சைலம், புளோயம் திசுக்களில் கோலன்கைமா திசுக்கள் காணப்படுவதில்லை.

Question 2.
கோலன்கைமா மற்றம் ஸ்கிளீரன்கைமா வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 80

Question 3.
கூட்டு எபிதீலியம் (அ) அடுக்கு எபிதீலியம் குறிப்பு வரைக.
விடை:
அமைப்பு :

  • பல அடுக்குகளாக செல்கள் காணப்படுகிறது.
  • எனவே பல் அடுக்கு எபிதீலியம் என்று அழைக்கப்படுகிறது.
  • சுரத்தல் மற்றும் உறிஞ்சுதலில் குறைந்த அளவே பங்கு வகிக்கின்றன.
  • இது அடித்தளத் திசுக்களுக்கு இயந்திர மற்றும் இரசாயன அழுத்தங்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகும்.

Question 4.
நமது உடலின் நீர் பாதுகாப்பு உறையாகச் செயல்படுவது எது?
விடை:
நமது தோலில் அமைந்துள்ள எபிதீலியத் திசுக்களே, நீர் பாதுகாப்பு உறையாகச் செயல்பட்டு நீர் உட்புகாமல் உடலை பாதுகாக்கிறது.

Question 5.
மைக்ரோகிலியா என்றால் என்ன?
விடை:

  • வேறுபாடடைந்த நரம்பு செல்கள் மைக்ரோகிலியா எனப்படும்.
  • இவை விழுங்கு தன்மை கொண்டவை.
  • இவை ஆஸ்ட்ரோகிலியா, ஆலிகோடென்ரோகிலியா என்று அழைக்கப்படுகின்றன.

Question 6.
ஏமைட்டாசிஸ் செல் பகுப்பு நடைபெறும் உயிரினங்களின் பெயர் தருக.
விடை:

  • ஏமைட்டாசிஸ் ஒரு பாலிலா இனப்பெருக்க முறையாகும்.
  • இது பாக்டீரியா, புரோட்டோசோவா, ஈஸ்ட் (மொட்டிடுதல்), நோயுற்ற செல்கள், வயதான செல்கள், பாலூட்டிகளில் குருத்தெலும்பு செல்கள் மற்றும் கரு உறைகளில் நடைபெறுகிறது.

Question 7.
கொழுப்புத் திசுவின் பணிகள் யாவை?
விடை:

  • உடல் உறுப்புகளை அதனதன் இடத்தில் நிலை நிறுத்துகிறது.
  • சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை அதிர்ச்சியில் இருந்து பாதுகாக்கும் அதிர்ச்சி உறிஞ்சியாக உள்ளது.
  • பாதுகாப்பு உறையாகச் செயல்பட்டு உடலின் வெப்பநிலையைச் சீராக வைக்கிறது.

Question 8.
சைலம் வெஸல்கள் மற்றும் டிரக்கீடுகளில் காணப்படும் தடிப்புகள் யாவை?
விடை:

  • ஆம், சைலம் வெஸல்கள் மற்றும் டிரக்கீடுகளில் இரண்டாம் செல்சுவரில் தடிப்புகள் காணப்படுகின்றன.
  • அவையாவன, ஏணி வடிவ, வலைப்பின்னல் தடிப்பு, ஏணி வடிவ சுருள் தடிப்பு, குழி தடிப்பு மற்றும் வளையத் தடிப்பு ஆகும்.

Question 9.
மைட்டாசிஸ் அனாநிலை, மியாசிஸ் அனாநிலை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 86

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
சல்லடை செல் மற்றும் சல்லடை குழாய் வேறுபடுத்து.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 87
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 88

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 2.
பல்வேறு வகை எபிதீலியத் திசுக்களின் அட்டவணை தருக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 89
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 90

Question 3.
மைட்டாசிஸ் – மியாசிஸ் முக்கியத்துவம் தருக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 93