Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 13 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

9th Science Guide அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையினைத் தேர்வு செய்க.

Question 1.
Zn + 2 HCI → ZnCl2 + ………………………….. ↑ (H2, O2, CO2)
விடை :
அ) H2

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Question 2.
ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் அமிலம் ஆரஞ்சில் உள்ள அமிலம் (சிட்ரிக்  ………………………….. அமிலம், அஸ்கார்பிக் அமிலம்)
விடை:
அஸ்கார்பிக் அமிலம்

Question 3.
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் உள்ளது கரிம அமிலங்கள். பாறைகளிலும், கனிமப் பொருள்களிலும் இருக்கும் அமிலம் ………………………….. (கனிம அமிலம், வலிமை குறைந்த அமிலம்)
விடை:
கனிம அமிலம்

Question 4.
அமிலமானது நீல லிட்மஸ் தாளை ………………………….. ஆக மாற்றும் (பச்சை, சிவப்பு, ஆரஞ்சு)
விடை:
சிவப்பு

Question 5.
உலோகக் கார்பனேட்டுகள், உலோக பை கார்பனேட்டுகள் காரத் தன்மை பெற்றிருந்தாலும், அமிலத்துடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தந்து ………………………….. ஐ வெளியேற்றுகின்றன. (NO2, SO2, CO2)
விடை:
CO2

Question 6.
நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம் ………………………….. (சிவப்பு, வெள்ளை , நீலம்)
விடை:
நீலம்

II. சுருக்கமாக விடையளி

Question 1.
சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினை புரியாத இரண்டு உலோகங்களைக் கூறுக.
விடை:

  • காப்பர் (Cu)
  • வெள்ளி (Ag)
  • குரோமியம் (Cr)

Question 2.
அமிலங்களின் பயன்கள் நான்கினை எழுதவும்.
விடை:

  1. கந்தக அமிலம் (H2SO4 – வேதிப் பொருள்களின் அரசன்) பல சேர்மங்கள் தயாரிப்பதற்கும் மற்றும் வாகன மின்கலன்களிலும் பயன்படுகிறது.
  2. ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCI) கழிவறைகளைத் தூய்மைப்படுத்தப் பயன்படுகிறது
  3. சிட்ரிக் அமிலம் உணவுப் பொருள்களைப் பதப்படுத்தப் பயன்படுகிறது.
  4. கார்பானிக் அமிலம் காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படுகிறது.

Question 3.
விவசாயத்தில் மண்ணின் pH மிக முக்கியமானது. சிட்ரஸ் பழங்கள், அரிசி மற்றும் கரும்பு விளைய தேவைப்படும் மண்ணின் தன்மையை எழுதவும்.
விடை:

  • சிட்ரஸ் பழங்கள் – காரத் தன்மையுடைய மண்
  • அரிசி – அமிலத் தன்மையுடைய மண்
  • கரும்பு – நடுநிலைத் தன்மையுடைய மண்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Question 4.
அமில மழை எப்பொழுது ஏற்படும்?
விடை:

  • வளிமண்டல வாயுவானது கந்தக மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகளால் மாசு அடையும் பொழுது அவை நீரில் கரைந்து நீரின் P” மதிப்பை 7-க்கும் குறைவாக மாற்றி வருகின்றன.
  • PH மதிப்பு 7 – ஐ விட குறையும் போது அது அமிலமழை எனப்படுகிறது.

Question 5.
பாரிஸ் சாந்தின் பயன்களைக் கூறு.
விடை:

  • முறிந்த எலும்புகளை ஒட்ட வைப்பதற்குப் பயன்படுகிறது.
  • சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்யப் பயன்படுகிறது.

Question 6.
A மற்றும் B என இரண்டு அமிலங்கள் உன்னிடம் கொடுக்கப்படுகின்றன. A நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியையும், B இரு ஹைட்ரஜன் அயனிகளையும் தருகின்றன.

i) A மற்றும் B ஐக் கண்டுபிடி.
விடை:
ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCI)

ii) வேதிப்பொருள்களின் அரசன் எனப்படுவது எது?
விடை :
கந்தக அமிலம் (H2SO4)

Question 7.
இராஜ திராவகம் வரையறு.
விடை:

  • மூன்று பங்கு அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு அடர் நைட்ரிக் அமிலம் கலந்த கலவை.
  • இதன் மோலார் விகிதம் 3:1. இது தங்கம் மற்றும் பிளாட்டினத்தைக் கரைக்கப் பயன்படுகிறது.

Question 8.
தவறைத் திருத்தி எழுதவும்.

அ) சலவை சோடா, கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்றுகிறது.
விடை:
அ) சமையல் சோடா கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்றுகிறது.

ஆ) கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட் என்பது துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.
விடை:
ஆ) கால்சியம் ஆக்ஸிகுளோரைடு என்பது துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.

Question 9.
நடுநிலையாக்கல் வினை என்றால் என்ன? உதாரணம் கொடு.
விடை:
அமிலங்களும், காரங்களும் வினைபுரிந்து உப்பையும், நீரையும் உருவாக்கும் வினை “நடுநிலையாக்கல் என்று பெயர்.

  • அமிலம் + காரம் → உப்பு + நீர் + வெப்பம். உதாரணம்:
    KOH + HCl → KCl + H2O

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

III. விரிவாக விடையளி.

Question 1.
நீரற்ற மற்றும் நீரேறிய உப்பை விளக்குக?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் 1
நீர் அற்ற உப்பு :

  • படிக நீர் அற்ற உப்புக்கள் நீரேற்றம் அற்ற உப்புக்கள் எனப்படும்.
  • இவை துகள்களாகக் காணப்படும்.

நீரேறிய உப்புக்கள் :

  • சில உப்புக்கள் நீர் மூலக்கூறுகளுடன் சேர்ந்து படிகமாகக் காணப்படும், படிக நீரைக் கொண்ட உப்புக்கள் நீரேற்ற உப்புக்கள் எனப்படும்.
  • இவை பெற்றுள்ள நீர் மூலக்கூறுகள் வேதிவாய்ப்பாட்டிற்கு பின் ஒரு புள்ளி வைத்து அதன் அளவு குறிப்பிடப்படும்.
  • எ.கா. காப்பர் சல்பேட்டில் ஐந்து நீர் மூலக்கூறுகள் உள்ளன. CuSO4, 5H2O

Question 2.
அமிலம் மற்றும் காரம் ஆகியவற்றைக் கண்டறியும் சோதனையை விவரி?
விடை:
அ) லிட்மஸ் தாளுடன் சோதனை

  • அமிலம் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்
  • காரம் சிவப்பு லிட்மஸ் தாளை நீலமாக மாற்றும்

ஆ) நிறங்காட்டி பினாப்தலீனுடன் சோதனை

  • அமிலத்தில் பினாப்தலீன் நிறமற்றது.
  • காரத்தில் இளஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கும்.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் 2

இ) நிறங்காட்டி மெத்தில் ஆரஞ்சுடன் சோதனை

  • அமிலத்தில் மெத்தில் ஆரஞ்சு இளஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கும்.
  • காரத்தில் மெத்தில் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தை உருவாக்கும்.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் 3

அமில கார நிறங்காட்டி
Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் 4

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Question 3.
காரங்களின் பயன்கள் நான்கினை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் 5

Question 4.
உப்புகளின் பயன்களில் ஏதேனும் ஐந்து எழுது.
விடை:
1) சாதாரண உப்பு (NaCl) :

  • நம் அன்றாட உணவிலும், உணவைப் பாதுகாப்பதிலும் பயன்படுகிறது.

2) சலவை சோடா (Na2CO3) :

  • இது கடின நீரை மென்னீராக்கப் பயன்படுகிறது.
  • இது கண்ணாடி, சோப்பு மற்றும் பேப்பர் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.

3) சமையல் சோடா (NaHCO3) :
விடை:

  • இது ரொட்டிச் சோடா (சமையல் சோடா + டார்டாரிக் அமிலம்) தயாரிக்கப் பயன்படுகிறது.
  • இது சோடா – அமில தீயணைப்பான்களில் பயன்படுகிறது.
  • இது கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்றுகிறது.
  • இது வயிற்றிலுள்ள அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்குகிறது.

4) சலவைத் தூள் (CaOCl2) :

  • இது கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.
  • பருத்தி மற்றும் லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.

5) பாரிஸ் சாந்து (Caso4 . 1/2 H2O) :

  • முறிந்த எலும்புகளை ஒட்ட வைப்பதற்கு பயன்படுகிறது.
  • சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்யப் பயன்படுகிறது.

Question 5.
சல்பியூரிக் அமிலம் வேதிப்பொருள்களின் அரசன்” என்றழைக்கப்படுகிறது. ஏன்?
விடை:

  • பல்வேறு வேதிப்பொருள்கள் தயாரிக்க கந்தக அமிலம் அடிப்படை மூலப் பொருளாகும்.
  • வலிமை மிக்கது மற்றும் அதிகமாக அரிக்கக்கூடியது.
  • மருந்துகள் தயாரிப்பு, உரங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
  • பெட்ரோலியம் வடித்துப் பிரித்தலில், உயர் ஆக்டேன் பெட்ரோல் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • குறிப்பாக வாகன மின்கலங்களிலும் பயன்படுகிறது ஒரு நாட்டின் பொருளாதாரம், அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்தக அமிலத்தைப் பொருத்ததாகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

9th Science Guide அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் Additional Important Questions and Answers

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
……………………………….. அமிலம் இரைப்பையில் சுரக்கப்படுகிறது.
விடை:
HCL

Question 2.
அமிலம் நீரில் கரையும் போது ……………………………….. அயனிகளைத் தருகிறது.
விடை:
H+

Question 3.
……………………………….. தேனீயின் கொடுக்கில் இருக்கும் அமிலம்
விடை:
பார்மிக் அமிலம்

Question 4.
வலிமை குறைந்த அமிலங்கள் நீரில் ……………………………….. தன்மை கொண்டவை.
விடை:
பகுதியளவே அயனியுறும்

Question 5.
அமிலங்கள் உலோக கார்பனேட்டுகள் மற்றும் உலோக பை கார்பனேட்டுகளுடன் வினைபுரிந்து ……………………………….. தருகிறது.
விடை:
CO,

Question 6.
……………………………….. கரைப்பானில் அமிலங்கள் அயனியுறுவதில்லை.
விடை:
கரிமக்

Question 7.
இரும்புக் கறைகளை நீக்க ……………………………….. பயன்படுகிறது.
விடை:
ஆக்ஸாலிக் அமிலம்

Question 8.
இராஜதிராவகத்தின் HCl மற்றும் HNO3 ன் மோலார் விகிதம் ………………………………..
விடை:
3:1

Question 9.
நீரில் கரையும் காரங்கள் ………………………………..
விடை:
எரிகாரங்கள்

Question 10.
அலோக ஆக்ஸைடுகள் ……………………………….. தன்மையுடையது.
விடை:
அமிலத்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Question 11.
ஸ்டீயரிக் அமிலத்தின் மூலம் ………………………………..
விடை:
ஆகும்.

Question 12.
கொழுப்புகள் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் பொதுப்பெயர் ………………………………..
விடை:
மியூரியாட்டிக் அமிலம்

Question 13.
அலுமினியம் ஹைட்ராக்ஸைடில் இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ராக்சில் அயனியின் எண்ணிக்கை ………………………………..
விடை:
3

Question 14.
துணிகளில் உள்ள எண்ணெய்க் கறைகளை நீக்குவதற்கு ……………………………….. பயன்படுகிறது.
விடை:
NH4OH

Question 15.
அமிலக் கரைசலில் பினாப்தலீனின் நிறம் ………………………………..
விடை:
நிறமற்றது

Question 16.
திருகுகளின் மீது ……………………………….. முலாம் பூசப்படுகிறது.
விடை:
துத்தநாகம்

Question 17.
கரைசலை, ஹைட்ரஜன் அயனிகளின் செறிவின் அடிப்படையில் அளவிடுதலே ……………………………….. ஆகும்.
விடை:
pH அளவீடு

Question 18.
ஒரு கரைசலின் pH மதிப்பை ……………………………….. பயன்படுத்தி கணக்கிடலாம்.
விடை:
பொது நிறங்காட்டி

Question 19.
நம் பற்களிலுள்ள ……………………………….. என்னும் வெள்ளைப் படலமானது நம் உடம்பிலேயே மிகவும் கடினமான பகுதியாகும்.
விடை:
எனாமல்

Question 20.
கரும்பிற்கு ……………………………….. தன்மை கொண்ட மண் தேவைப்படுகிறது.
விடை:
நடுநிலைத்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Question 21.
மழை பொழியும் போது pH மதிப்பு 7ஐ விட குறையும், அப்போது மழை நீரின் தன்மை ……………………………….. தன்மையுடையது.
விடை:
அமிலத் தன்மை

Question 22.
pb (OH)2 + HCI → ? + H2O
விடை:
pb (OH) CI

Question 23.
பொட்டாஷ் படிகாரம் என்பது ……………………………….. மற்றும் ……………………………….. கலந்த கலவையாகும்.
விடை:
பொட்டாசியம் சல்பேட் மற்றும் அலுமினியம் சல்பேட்

Question 24.
பல உப்புகளின் படிக நிலைக்குக் காரணமான நீர் மூலக்கூறுகள் ……………………………….. எனப்படுகின்றன.
விடை:
படிகநீர்

Question 25.
படிகநீர்காப்பர் சல்பேட்டை நீல நிறமாக மாற்றும், இதனைவெப்பப்படுத்தும் போது நீர் மூலக்கூறுகளை இழந்து ……………………………….. மாறும்.
விடை:
வெண்மையாக

Question 26.
சுடர் சோதனையில் Ca2+ அயனியின் நிறம் ………………………………..
விடை:
செங்கல் சிவப்பு

Question 27.
சோடா அமில தீயணைப்பான்களில் பயன்படுவது ……………………………….. ஆகும்.
விடை:
சமையல் சோடா (NaHCO3)

Question 28.
கிருமி நாசினியாகப் பயன்படுவது ……………………………….. ஆகும்.
விடை:
சலவைத்தூள் (CaOCI2)

Question 29.
ஹைட்ரோ குளோரிக் அமிலம், கார்பனேட் உப்புகளுடன் சேர்க்கும் பொழுது நுரைத்துப் பொங்குதலுடன் ……………………………….. வாயுவைத் தருகிறது.
விடை:
CO2

Question 30.
நீரை ஈர்க்கும் தன்மையுடைய பொருள் ………………………………..
விடை:
ஹைக்ராஸ்கோபிக்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Question  31.
திராட்சையில் உள்ள அமிலம் ………………………………..
விடை:
டார்டாரிக் அமிலம்

Question 32.
வேதிப்பொருள்களின் அரசன் என்றழைக்கப்படுவது ………………………………..
விடை:
கந்தக அமிலம் (H2SO4)

Question 33.
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் அமிலம் ………………………………..
விடை:
கரிம அமிலம்

Question 34.
பாறைகள் மற்றும் கனிமப்பொருள்களிலிருந்து பெறப்படும் அமிலம் ……………………………….. எனப்படும்.
விடை:
கனிம அமிலம்

Question 35.
……………………………….. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்
விடை:
அமிலங்கள்

Question 36.
……………………………….. அமிலம் உணவுப் பொருள்களைப் பதப்படுத்தப் பயன்படுகிறது.
விடை:
சிட்ரிக் அமிலம்

Question 37.
……………………………….. அமிலம் ரொட்டிச் சோடாவின் ஒரு பகுதிப்பொருளாகும்.
விடை:
டார்டாரிக்

Question 38.
……………………………….. சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றும்
விடை:
காரங்கள்

Question 39.
……………………………….. தயாரிக்க சோடியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.
விடை:
சோப்பு

Question 40.
வயிற்றுக் கோளாறுக்கு மருந்தாக ……………………………….. பயன்படுகிறது.
விடை:
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Question 41.
துணிகளில் உள்ள எண்ணெய்க் கறைகளை நீக்குவதற்கு ……………………………….. பயன்படுகிறது.
விடை:
அம்மோனியம் ஹைட்ராக்சைடு

Question 42.
நமது உடம்பின் pH மதிப்பு ……………………………….. ஆகும்.
விடை:
7.0 – 7.8

Question 43.
முறிந்த எலும்புகளை ஒட்ட வைப்பதற்குப் ……………………………….. பயன்படுகிறது.
விடை:
பாரிஸ் சாந்து (CaSO4. 1/2 H2O)

Question 44.
அமிலங்கள் ……………………………….. சுவை உடையவை.
விடை:
புளிப்பு

Question 45.
……………………………….. அமிலம் விவசாயத்தில் உரமாகப் பயன்படும்.
விடை:
நைட்ரிக்

Question 46.
நீரில் கரையும் காரங்கள் ……………………………….. என்றழைக்கப்படுகின்றன.
விடை:
எரிகாரங்கள்

Question 47.
……………………………….. தங்கத்தை சுத்தம் செய்யுவும் சுத்திகரிக்கவும் பயன்படுகிறது.
விடை:
(இராஜதிராவகம்

Question 48.
மஞ்சள் ……………………………….. ஆரஞ்சு நிறமுடைய புகையக்கூடிய திரவம் ஆகும்.
விடை:
(இராஜதிராவகம்

Question 49.
காரங்கள் ……………………………….. சுவை கொண்டவை.
விடை:
கசப்பு

Question 50.
……………………………….. ரொட்டிச் சோடா தயாரிக்கப் பயன்படுகிறது.
விடை:
சமையல் சோடா (NaHCO3).

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் 6
Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் 7

III. கூற்று மற்றும் காரண வகை

Question 1.
கூற்று : அசிட்டிக் அமிலம் இரட்டைக் காரத்துவமுடையது.

காரணம் : அசிட்டிக் அமிலத்தில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தாலும், ஒரு ஹைட்ரஜன் மட்டுமே இடப்பெயர்ச்சி செய்ய முடியும்.

(அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது
விடை :
(ஆ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது

Question 2.
கூற்று : NaCI நீரில் கரைகிறது, ஆனால் CCI, நீரில் கரைவதில்லை .

காரணம் : அயனிச் சேர்மங்கள் முனைவுற்ற கரைப்பான்களில் கரைகின்றன.

(அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது
(ஆ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது
விடை :
(அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
அமிலங்கள் என்றால் என்ன?
விடை:
நீரில் கரையும் பொழுது H+ அயனிகள் அல்லது H3 O+ அயனிகளை தரும் பொருள்கள் அமிலங்கள்

Question 2.
காரங்கள் என்றால் என்ன?
விடை:
நீரில் கரைந்து OH அயனிகளைத் தருபவை காரங்கள்.

Question 3.
எரிகாரங்கள் என்றால் என்ன? உதாரணம் கொடு.
விடை:
நீரில் கரையும் காரங்கள் எரிகாரங்கள். உம். NaOH, KOH.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Question 4.
கரைசல் அமிலமா அல்லது காரமா எனக் கண்டறிய உதவும் பொருள் யாது?
விடை:
கொடுக்கப்பட்டுள்ள கரைசல் அமிலமா (அல்லது) காரமா எனக் கண்டறிய உதவும் பொருள் “நிறங்காட்டிகள்” வரையறு pH அளவீடு கரைசலில் உள்ள ஹைட்ரஜன் அயனிகளின் செறிவைக் கண்டறிய உதவும் அளவீடு “pH அளவீடு” எனப்படும்.

Question 6.
‘ஹைக்ராஸ்கோபிக் ‘ என்று ஏன் அழைக்கப்படுகிறது?
விடை:
நீரை ஈர்க்கும் தன்மையுடைய பொருளை “ஹைக்ராஸ்கோபிக்” என்று அழைக்கப்படுகிறது.

Question 7.
ஹைட்ரஜன் கொண்டுள்ள CH4, NH3 போன்றவை அமிலங்களா? காரணம் தருக.
விடை:
இல்லை, ஏனெனில் CH4, NH3 இரண்டும் ஹைட்ரஜனைக் கொண்டுள்ளன. ஆனால், கரைசலில் H+ அயனிகளை தருவதில்லை.

Question 8.
ஒரு அமிலம் உலோகத்துடன் புரியும் வினைக்கு ஒரு உதாரணம் கொடு.
விடை:
உலோகங்கள் அமிலங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகின்றன.

உம். Zn + 2HCl → ZnCl2 + H2

Question 9.
சலவைத் தூள் – கால்சியம் ஆக்ஸிகுளோரைடு (CaOCI2) பயன்பாடு யாது?
விடை:

  • கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.
  • பருத்தி மற்றும் லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.

Question 10.
சுடர் சோதனையை எழுதுக.
விடை:
உப்புக்களை HCI ல் கலந்து பசையாக்கி, அதனைப் பிளாட்டினக் கம்பியில் எடுத்து சுடரில் காட்ட வேண்டும். இதுவே, சுடர் சோதனை ஆகும்.

உம். இச்சோதனையில் Ca2+ மற்றும் Na+ அயனிகள் முறையே செங்கல் சிவப்பு மற்றும் பொன்னிற மஞ்சள் நிறத்தைத் தருகின்றன.

Question 11.
மூலங்களின் அடிப்படையில் அமிலங்களை வகைப்படுத்துக.
விடை:
கரிம அமிலங்கள் : தாவரங்கள் மற்றும் விலங்குகளில் (உயிரினங்களில்) காணப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள் எ.கா: HCOOH, CH3COOH

கனிம அமிலங்கள் : பாறைகள் மற்றும் கனிமப் பொருள்களிலிருந்து பெறப்படும் அமிலங்கள் கனிம அமிலங்கள் எனப்படும். எ.கா : HCI, HNO3, H4SO4.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Question 12.
இராஜ திராவகத்தின் பயன்களைக் கூறு.
விடை:

  1.  தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற உலோகங்களைக் கரைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
  2. தங்கத்தை சுத்தம் செய்ய பயன்படுகிறது.

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
காரத்துவத்தின் அடிப்படையில் அமிலத்தை வகைப்படுத்துக. உதாரணம் தருக.
காரத்துவத்தின் அடிப்படையில் அமிலம் 3 வகைப்படும்
விடை:
1) ஒற்றைக் காரத்துவ அமிலம்.
இது நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியைத் தருகிறது. (எ.கா.) NCI + HNO3

2) இரட்டைக் காரத்துவ அமிலம்.
இவை நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு இரண்டு ஹைட்ரஜன் அயனிகளைத் தருகின்றன. (எ.கா.) H2SO4, H2CO3

3) மும்மைக் காரத்துவ அமிலம். இவை நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு மூன்று ஹைட்ரஜன் அயனிகளைத் தருகின்றன. (எ. கா.) H3PO4

Question 2.
அமிலத்துவத்தின் அடிப்படையில் காரங்களை வகைப்படுத்துக.
விடை:
அமிலத்துவத்தின் அடிப்படையில் காரங்கள் 3 வகைப்படும்.
1) ஒற்றை அமிலத்துவ காரம்
2) இரட்டை அமிலத்துவ காரம்
3) மும்மை அமிலத்துவ காரம்.

1) ஒற்றை அமிலத்துவ காரம் :
இவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு ஒரு ஹைட்ராக்சைடு அயனியைத் தருபவை. (எ.கா.) NaOH, KOH

2) இரட்டை அமிலத்துவக் காரம் :
இவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு இரு ஹைட்ராக்சைடு அயனியைத் தருபவை. (எ.கா.) Ca(OH)2, Mg(OH)2

3) மும்மை அமிலத்துவக் காரம் :
இவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு மூன்று ஹைட்ராக்சைடு அயனியைத் தருபவை. (எ.கா.) Al(OH)3, Fe(OH)3

Question 3.
உப்பின் வகைகளைக் எடுத்துக்காட்டுடன் விளக்குக.
விடை:
i) சாதாரண உப்புகள் :
ஓர் அமிலம் மற்றும் காரம் இவற்றின் முழுமையான நடுநிலையாக்கலின் போது சாதாரண உப்பு கிடைக்கிறது.
NaOH + HCI → NaCl + H2O

ii) அமில உப்புகள் :
ஓர் உலோகமானது அமிலத்திலுள்ள ஹைட்ரஜன் அணுக்களின் பகுதியளவை வெளியேற்றுவதால் இவை உருவாகின்றன. பல காரத்துவ அமிலத்தை ஒரு காரத்தினால் பகுதியளவு நடுநிலையாக்கி பெறப்படுகின்றன.
NaOH + H2So4 → NaHSO4 + H2O

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

iii) கார உப்புகள் :
இரு அமிலத்துவ அல்லது மூன்று அமிலத்துவக் காரங்களிலுள்ள ஹைட்ராக்சைடு அயனிகளை ஓர் அமிலத்தால் பகுதியளவு வெளியேறச் செய்து பெறப்படுகின்றன.
Pb(OH)2 + HCI → Pb(OH)Cl + H2O

iv) இரட்டை உப்புகள் :
சமமான மூலக்கூறு எடைவிகித அளவுகளில் இரண்டு எளிய உப்புகளின் நிறைவுற்ற கரைசல்களைச் சேர்த்து படிகமாக்கும் போது இரட்டை உப்புகள் உருவாகின்றன.

உதாரணமாக: பொட்டாஷ் படிகாரம் என்பது பொட்டாசியம் சல்பேட் மற்றும் அலுமினியம் சல்பேட் கலந்த கலவையாகும்.
KAI(SO4)2 12H2O

Question 4.
காரங்களின் பண்புகளைக் கூறு.
விடை:

  • காரங்கள் கசப்புச் சுவைக் கொண்டவை.
  • நீர்த்த கரைசலில் சோப்பு போன்ற வழவழப்புத் தன்மையைக் கொண்டவை.
  • சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றுபவை.
  • இவைகளின் நீர்த்த கரைசல்கள் மின்சாரத்தைக் கடத்தும் திறன் உடையவை.
  • காரங்கள், உலோகங்களுடன் வினைபுரிந்து உப்பையும், ஹைட்ரஜனையும் தருகின்றன.
    Zn + 2 NaOH → Na2ZnO2 + H2
  • காரங்கள், அலோக ஆக்சைடுகளுடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தருகின்றன.
    Ca(OH)2 +CO2 → CaCO3 + H2O
  • காரங்கள் அமிலங்களுடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தருகின்றன.
    KOH + HCI → KCI+ H2O
  • அம்மோனியம் உப்புகளுடன், காரங்களை வெப்பப்படுத்தும் போது, அம்மோனியா வாயு உருவாகிறது.
    NaOH + NH4Cl → NaCl + H2O + NH3