Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

9th Science Guide நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
மிக அதிக வேகத்தில் சுழலச் செய்து, கனமான பொருட்களிலிருந்து லேசான பொருட்களைப் பிரித்தெடுக்கும் முறை _________________.

அ) வடிகட்டல்
ஆ) வண்டல்
இ) சாய்த்து வடித்தல்
ஈ) மைய விலக்கம்
விடை:
ஈ) மைய விலக்கம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

Question 2.
பின்வருவனவற்றுள் _________________ ஒரு கலவை

அ) சாதாரண உப்பு
ஆ) தூய வெள்ளி
இ) கார்பன் டை ஆக்ஸைடு
ஈ) சாறு
விடை:
ஈ) சாறு

Question 3.
ஒரு துளி மையினை நாம் நீரில் கலக்கும் போது நமக்குக் கிடைப்பது _________________.

அ) பலபடித்தான கலவை
ஆ) சேர்மம்
இ) ஒருப்படித்தான கலவை
ஈ) தொங்கல்
விடை:
இ) ஒருபடித்தான கலவை

Question 4.
கரைப்பானைக் கொண்டு சாறு இறக்குதல் முறையில் _________________ அவசியம்
அ) பிரிபுனல்
ஆ) வடிதாள்
இ) மைய விலக்கு இயந்திரம்
ஈ) சல்லடை
விடை:
அ) பிரிபுனல்

Question 5.
_________________ மாதிரி முழுவதும் ஒரே பண்புகளைக் கொண்டுள்ளது.

அ) தூயபொருள்
ஆ) கலவை
இ) கூழ்மம்
ஈ) தொங்கல்
விடை:
அ) தூயபொருள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
_________________ விடைகள் கலவையின் இயைபுப் பொருள்களுக்கு வேறுபடுத்தக்கூடிய எல்லைக்கோடு இல்லை.
விடை:
ஒருபடித்தான

Question 2.
பதங்கமாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு _________________.
விடை:
உலர் பனிக்கட்டி

Question 3.
நீரிலிருந்து ஆல்கஹால் _________________ மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது.
விடை:
பின்னக் காய்ச்சி வடித்தல்

Question 4.
பெட்ரோலிய சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படும் பிரித்தெடுத்தல் முறை _________________.
விடை:
பின்னக் காய்ச்சி வடித்தல்

Question 5.
வண்ணப்பிரிகை முறை _________________ தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
விடை:
ஒரே கரைப்பானில் வெவ்வேறாகக் கரையும் திறன்

III. சரியா? தவறா? எனக் தவறெனில் திருத்துக

Question 1.
எண்ணெய் மற்றும் தண்ணீர் இரண்டும் ஒன்றில் ஒன்று கலவாதது
விடை :
சரி

Question 2.
வேதிமுறையில் ஒரு சேர்மத்தை தனிமங்களாக பிரிக்க முடியாது.
விடை :
தவறு. வேதிமுறையில் ஒரு சேர்மத்தை எளிய பொருட்களாக உடைக்க முடியும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

Question 3.
திரவ-திரவ கூழ்மங்கள் களிம்பு எனப்படும்
விடை :
தவறு. திரவம் – திண்ம கூழ்மங்கள் களிம்பு எனப்படும்.

Question 4.
மோர் ஒரு பலபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டாகும்
விடை :
சரி

Question 5.
ஆஸ்பிரின் தனது நிறையில் 60% கார்பன், 4.5% ஹைட்ரஜன் மற்றும் 35.5% ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது. ஆஸ்பிரின் ஒரு கலவை
விடை :
தவறு. ஆஸ்பிரின் நிறையில் 60% கார்பன், 4.5% ஹைட்ரஜன் மற்றும் 35.5% ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது. ஆஸ்பிரின் ஒரு சேர்மம்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் 1

V. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
பரப்புக் கவரப்படும் பொருள் மற்றும் பரப்புக் கவரும் பொருள் என்றால் என்ன?
விடை:
பரப்புக் கவரப்படும் பொருள் :
ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் ஒட்டி கொள்ளும் பொருளாகும்

பரப்புக் கவரும் பொருள் :
ஒரு பொருளை தன் மேற்பரப்பில் கவரப்படும் பொருளாகும்.

Question 2.
பதங்கமாதல் – வரையறு.
விடை:
சில திண்மப்பொருட்களை வெப்பப்படுத்தும் போது, அவை திரவநிலையை அடையாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுதல், எ.கா. உலர் பனிக்கட்டி

Question 3.
டெட்டாலின் சிறு துளிகளை நீரில் கலக்கும்போது கலங்கலாக மாறுகிறது. ஏன்?
விடை:
டெட்டாலில் உள்ள திரவத் துளிகள் நீர் மூலக் கூறுகளுக்கிடையே விரவுவதால் கலவை கலங்கலாகமாறுகிறது.

Question 4.
கீழ்கண்ட கலவைகளின் கூறுகளைப் பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனங்களைப் பெயரிடு.
விடை:
1. ஒன்றாக கலக்கும் திரவங்கள் – விடை – பின்னக் காய்ச்சி வடிக்கும் குடுவை குழாய்
2. ஒன்றாக கலவாத திரவங்கள் – விடை – பிரிபுனல்

Question 5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கலவைகளின் பகுதிப் பொருட்களைப் பெயரிடுக.
i) பனிக்கூழ்
ii) எலுமிச்சை பானம்
iii) காற்று
iv) மண்
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் 2

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
பின்வருவனவற்றுள் எவை தூய பொருட்கள்?
(பனிக்கூழ், பால், இரும்பு, ஹைட்ரோகுளோரிக் அமிலம், பாதரசம், செங்கல் மற்றும் நீரி)
விடை:
தூய பொருட்கள் – பனிக்கூழ், இரும்பு, பாதரசம், ஹைட்ரோகுளோரிக் அமிலம், நீர்.

Question 2.
நாம் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிகவும் முக்கியமானது. அது காற்றில் 21% கன அளவு உள்ளது. அது ஒரு தனிமமா அல்லது சேர்மமா?
விடை:
ஆக்ஸிஜன் ஒரு தனிமம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

Question 3.
22 காரட்தங்கத்திலான ஒரு பதக்கத்தினை நீ வென்றிருக்கிறாய். அதன் தூய்மையை எவ்வாறு கண்டறிவாய்?
விடை:

  • 22 காரட் தங்க பதக்கத்தில் 91.6% தங்கம் மற்றும் 8.4% இதர உலோகங்கள் உள்ளது.
  •  எனவே, இது ஒரு தூய்மையற்ற பொருள்.

Question 4.
மரத்தூள், இரும்புத் துகள் மற்றும் நாப்தலீன் கலந்த கலவையை எவ்வாறு பிரிக்கலாம்?
விடை:

  • காந்தப்பிரிப்பு முறையில் கலவையில் உள்ள இரும்புத் துகள்களை முதலில் பிரிக்க வேண்டும்.
  • மரத்தூள் மற்றும் நாப்தலீனை பதங்கமாதல் முறையில் பிரிக்கலாம்.

Question 5.
ஒரு படித்தானக் கரைசல், பலபடித்தான கரைசலிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் 3

VII. நெடுவினா

Question 1.
தனிமங்களுக்கும், சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதி ஒவ்வொன்றிற்க்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் 12 Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் 13

Question 2.
டிண்டால் விளைவு மற்றும் பிரௌனியன் இயக்கம் ஆகியவற்றை தகுந்த வரை படத்துடன் விளக்குக.
விடை:
1. டிண்டால் விளைவு
வலுவான ஒளிக்கற்றையை கூழ்மக் கரைசலின் வழியே செலுத்தும்போது, ஒளிக்கற்றையின் பாதையைப் பார்க்கமுடிகிறது. இந்நிகழ்வே ‘டிண்டால் விளைவு எனப்படும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் 6
இந்நிகழ்விற்கு காரணம்: கூழ்மத்துகள்களால் ஒளியானது சிதறடிக்கப்படுவதே ஆகும்.

Question 2.
பிரௌனியன் நகர்வு
விடை:
கூழ்மக் கரைசல்களை நுண்ணோக்கி வழியாகப் பார்க்கும்போது, கூழ்மத்துகள்கள் அங்கும் இங்குமாக ஒழுங்கற்ற முறையில் சீராகவும் வேகமாகவும் நகர்வதைக் காணமுடிகிறது. இந்நகர்வே, பிரௌனியன் நகர்வு எனப்படும்.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் 7
காரணம்: பரவல் ஊடக மூலக்கூறுகள் பரவிய நிலைமை மூலக்கூறுகளை சமநிலையற்ற முறையில் தாக்குவதேயாகும்.

Question 3.
எளிய உப்பு, எண்ணெய் மற்றும் நீர் ஆகியவை கலந்த கலவை எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது?
விடை:
(பல்வேறு முறைகளை ஒன்று சேர்த்து நீ பயன்படுத்தலாம்.)

  1. பிரிபுனலில் நீர் மற்றும் எண்ணெய் கலவையை ஊற்றி கலக்கவும்.
  2. சில நிமிடங்களுக்குப் பின் நீர் கீழடுக்காகவும், எண்ணெய் மேல் அடுக்காகவும் மிதக்கிறது.
  3. பிரிபுனலின் நிறுத்துக் குழாயைத் திறந்து நீர் மற்றும் எண்ணெய் தனித்தனி கலன்களில் சேகரிக்கவும்.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் 8

நீரைக்காய்ச்சி உப்பை பிரித்தல் :

Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

  • உப்புக் கலந்த நீரை குடுவையில் எடுத்துக் கொதிக்கும் வரை சூடுபடுத்தவும்.
  • ஆவியானது குளிர்விக்கப்பட்டு தூய நீராக சேகரிக்கப்படுகிறது. 3. உப்பு குடுவையின் அடியில் தங்கிவிடுகிறது.

9th Science Guide நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் Additional Important Questions and Answers

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
பருப்பொருள்களின் நிலைமாற்றத்தின் போது, வெப்ப ஆற்றலானது துகள்களின் _________________ மாற்றப்படுகிறது.
விடை:
இயக்க ஆற்றலாக

Question 2.
தனிமங்கள் இயற்பியல் மற்றும் வேதிக் கூடுகை முறையில் _________________ மற்றும் உருவாக்குகின்றன.
விடை:
கலவை, சேர்மங்களை

Question 3.
டிண்டால் விளைவிற்கு _________________ உட்படாது
விடை:
உண்மைக் கரைசல்

Question 4.
இரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை _________________.
விடை:
மைய விலக்கு முறை

Question 5.
_________________ பின்னக்காய்ச்சி வடித்தல் முறையில் சுத்திகரிக்கப்படுகின்றன.
விடை:
பெட்ரோலியப் பொருட்கள்

Question 6.
_________________ இராபர்ட் பிரௌன் என்ற தாவரவியல் வல்லுனரால் பெயரிடப்பட்டது.
விடை:
பிரௌனியன் இயக்கம்

Question 7.
_________________ மூலம் சிலிக்கான் அணுக்கள் மேற்பரப்பில் பார்க்கப்படுகிறது.
விடை:
அலகீட்டு மின்னணு நுண்னோக்கி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

Question 8.
இயக்கம் என்பது _________________.
விடை:
நகர்வாகும்

Question 9.
திண்மப் பருப்பொருள்களின் துகள்கள் _________________, _________________ அடுக்கப்பட்டுள்ளன.
விடை:
நெருக்கமாகவும், வரிசையாகவும்

Question 10.
_________________, _________________, _________________ துகளின் வரிசை அமைவு, இயக்கம் பற்றி கூறுவது.
விடை:
திட, திரவ, வாயு

Question 11.
திண்மங்களில் துகள்களுக்கு இடையேயுள்ள இடைவெளியானது குறைவாக இருப்பதால் திண்மங்களை _________________ முடியாது.
விடை:
அழுத்த

Question 12.
வாயுக்களை எளிதில் _________________.
விடை:
அழுத்த முடியும்

Question 13.
ஒளி, ஒலி, வெப்பம் ஆகியவைகள் _________________.
விடை:
பருப்பொருள்கள் அல்ல

Question 14.
பருப்பொருளை வெப்பப்படுத்தும் போதோ அல்லது குளிர்விக்கும் போதோ வெப்ப ஆற்றலானது _________________.
விடை:
உறிஞ்சப்படுகிறது

Question 15.
திட உலோகமான _________________ திரவமாக மாறுவதற்கு நமது கரத்தில் உள்ள வெப்பமே போதுமானது
விடை:
காலியம்

Question 16.
ஒரு பொருள் குறிப்பிட்ட வெப்பநிலையில் உருகுவது _________________ எனப்படும்.
விடை:
உருகுநிலை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

Question 17.
ஆக்ஸிஜனின் உருகுநிலை _________________.
விடை:
-219

Question 18.
வைரத்தின் உருகுநிலை _________________.
விடை:
3550

Question 19.
ஒரு பொருள் அதன் கொதிநிலையில் திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறும் செயல் _________________.
விடை:
கொதித்தல்

Question 20.
சோடியத்தின் கொதிநிலை
விடை:
890

Question 21.
இரும்பின் கொதிநிலை
விடை:
2900

Question 22.
ஆவியாதல் நிகழ்வில் திரவத்தின் சராசரி இயக்க ஆற்றல் _________________ அதன் வெப்பநிலை _________________.
விடை:
குறைந்து, குறைகிறது

Question 23.
_________________ என்பது ஓர் இயற்கையான முறையாகும்
விடை:
ஆவியாதல்

Question 24.
உலர் பனிக்கட்டியானது சில சமயங்களில் _________________ என குறிப்பிடப்படுகிறது.
விடை:
கார்ட் ஐஸ்

Question 25.
ஒரு தனிமம் என்பது _________________ வகையான அணுக்களை கொண்டது
விடை:
ஒரே

Question 26.
_________________ தூய்மையற்ற பொருட்கள் என கருதப்படுகிறது.
விடை:
கலவைகள்

Question 27.
சேர்மம் என்பது _________________ அல்லது _________________ மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் கூடியிருப்பது.
விடை:
இரண்டு அல்லது இரண்டிற்கு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

Question 28.
ஒரு தூய பொருளில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் விகிதம் _________________.
விடை:
மாறாதது

Question 29.
கலவையின் பகுதிப்பொருட்களை _________________ முறையில் பிரித்தெடுக்க முடியும்.
விடை:
இயற்பு

Question 30.
_________________ குறிப்பிட்ட கொதிநிலை மற்றும் உருகுநிலையைப் பெற்றுள்ளன.
விடை:
சேர்மம்

Question 31.
கலவைகள் _________________ வகைப்படும்.
விடை:
ஒரு படித்தானவை, பல படித்தானவை

Question 32.
ஒரு படித்தான கலவைகள் _________________ உள்ளது
விடை:
ஒரே நிலைமையில்

Question 33.
பல படித்தான கலவைகள் _________________ தனித்த நிலைமைகளை கொண்டுள்ளது.
விடை:
ஒன்றுக்கு மேற்பட்ட

Question 34.
_________________ என்பது பரவிய நிலைமை மற்றும் பரவல் ஊடகம் கொண்ட கூழ்மக் கரைசல்
விடை:
பலபடித்தான அமைப்பாகும்.

Question 35.
_________________ திரவம் திண்மத்தில் பரவியுள்ள கூழ்மக் கரைசல் ஆகும்.
விடை:
கூழ் களிமங்கள்

II. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

Question 1.
ஆவியாதல் என்பது முழுவதும் நிகழும் நிகழ்வு ஆகும்.
விடை:
தவறு. ஆவியாதல் திரவத்தின் மேற்பரப்பில் நிகழும் நிகழ்வு

Question 2.
வாயுக்கள் என்பவை அழுத்த இயலாத் தன்மை கொண்ட பாய்மம்.
விடை:
தவறு. வாயுக்கள் எளிதில் அழுத்தத்திற்கு உட்படுபவை.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

Question 3.
நீரின் மூன்று நிலைமைகளும் காணப்படும் 0°C முப்புள்ளி எனப்படுகிறது.
விடை:
சரி

Question 4.
நீர்மங்களை ஆவியாக மாற்றும் செயல்முறையின் பெயர் குளிர்தல் ஆகும்.
விடை:
தவறு. வாயுக்களை நீர்மங்களாக மாற்றும் செயல்முறையின் பெயர் குளிர்தல் ஆகும்.

Question 5.
மகரந்தத் துகள்களின் நகர்வு டிண்டால் விளைவு.
விடை:
தவறு. மகரந்தத்துகள்களின் நகர்வு பிரௌனியன் நகர்வு.

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் 14

IV. கூற்று மற்றும் காரண வகை

கூற்று மற்றும் காரணம் என இரு வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கூற்று (காரணம்), முதல் கூற்றிற்கான விளக்கம் ஆகும். கூற்றுகளை நன்கு படித்து உனது விடைகளைக், கொடுக்கப்பட்ட குறியீடுகளைக் கொண்டு குறிப்பிடுக.

Question 1.
கூற்று (A) : திண்மங்களை அழுத்த இயலாது

காரணம் (R) : திண்மத்துகள்களுக்கு இடையேயான இடைவெளி மிகக் குறைவு.

a) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R), (A) க்கு சரியான விளக்கமாகும்
b) (A) மற்றும் (R) இரண்டும் சரி. ஆனால் (R), (A) ன் சரியான விளக்கம் அல்ல.
c) (A) சரி ஆனால் (R) தவறு
d) (A) தவறு ஆனால் ( R) தவறு
விடை :
a) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R), (A) க்கு சரியான விளக்கமாகும்

Question 2.
கூற்று (A) : மலை உச்சியில் நீரின் கொதிநிலை 120°c ம், பிரஷர் குக்கரில் 90°C ம் ஆகும்.

காரணம் (R) : ஒரு திரவத்திலிருந்து வெளியேறும் வாயுவின் ஆவி அழுத்தமும், அத்திரவத்தின் மீது சூழ்நிலை அழுத்தமும் சமமாகும் போது ஒரு திரவம் கொதிக்க ஆரம்பிக்கிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

a) (A) மற்றும் (R) இரண்டும் சரி . மேலும் (R), (A) க்கு சரியான விளக்கமாகும்
b) (A) மற்றும் (R) இரண்டும் சரி. ஆனால் (R), (A)ன் சரியான விளக்கம் அல்ல.
c) (A) சரி ஆனால் (R) தவறு
d) (A) தவறு ஆனால் ( R) தவறு
விடை:
d). (A) தவறு ஆனால் (R) சரி

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
ஆவியாதல் – வரையறு
விடை:
கொதிநிலைக்கு குறைவான எந்தவொரு வெப்பநிலையிலும், ஒரு பொருளானது திரவநிலையிலிருந்து ஆவி / வாயு நிலைமைக்கு மாறும் நிலைமை மாற்றமே ஆவியாதல் எனப்படுகிறது.

Question 2.
பனிக்கட்டி நீரில் மிதக்கிறது. ஏன்?
விடை:
பனிக்கட்டியின் (திண்மம்) அடர்த்தி நீரின் (திரவம்) அடர்த்தியை விட, அதன் உருகு நிலையில் குறைவு. எனவே பனிக்கட்டி நீரில் மிதக்கிறது.

Question 3.
ஆவியாதலைப் பாதிக்கும் காரணிகளைக் குறிப்பிடுக.
விடை:

  • புறப்பரப்பளவு
  • வெப்பநிலை
  • ஈரப்பதம்
  • காற்றின் வேகம்.

Question 4.
கொதித்தல் என்றால் என்ன?
விடை:
ஒரு பொருள் அதன் கொதிநிலையில் திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறும் செயலுக்கு கொதித்தல்” என்று பெயர். வெவ்வேறு திரவங்கள் வெவ்வேறு கொதிநிலைகளைப் பெற்றுள்ளன.

Question 5.
கூழ்மக் கரைசல் என்பது என்ன?
விடை:
கூழ்மக் கரைசல் என்பது பரவிய நிலைமை மற்றும் பரவல் ஊடகம் கொண்ட பல படித்தான அமைப்பு ஆகும்.

Question 6.
பால்மம் என்றால் என்ன?
விடை:
ஒன்றுடன் ஒன்று கலவாத இரண்டு திரவங்களைச் சேர்ப்பதனால் உருவாகும் ஒரு சிறப்பு வகைக் கலவையே பால்மம் எனப்படும்.

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
அ) திண்மங்கள் நிலையான வடிவம், கனஅளவைப் பெற்றுள்ளன. ஏன்?
விடை :
திண்மப் பொருள்களின் துகள்கள் மிக நெருக்கமாகவும், வரிசையாகவும், வலுவான கவர்ச்சி விசையினாலும் இணைக்கப்பட்டுள்ளதால் நிலையான கன அளவைக் கொண்டுள்ளன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

ஆ) கடல் மட்டத்திலுள்ள காற்று அதிக அடர்வுடையது ஏன்.
விடை :
கடல் மட்டத்திலுள்ள காற்றானது, அதற்கு மேலுள்ள காற்றின் நிறையால் அழுத்தப்படுகிறது. எனவே, கடல் மட்டத்திலுள்ள காற்று அதிக அடர்வுடையது.

இ) பனிக்கட்டி உருகும்போது அதன் கனஅளவு அதிகரிப்பதில்லை . மாறாக, குறைகிறது. ஏன்?
விடை :
பனிக்கட்டியின் நீர் மூலக்கூறுகளின் கட்டமைப்பில் வெற்றிடங்கள் உள்ளன. வெப்பப்படுத்தும் போது, நீர் மூலக்கூறுகளுக்கு இடையேயான H-பிணைப்புகள் உடைந்து அவை நெருங்கி வருகின்றன. எனவே, கன அளவு குறைகிறது.

ஈ) ஒரு பொருள் வாயு நிலையிலிருப்பின், சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கு இடையேயான பிணைப்பு விசை எவ்வாறு இருக்கும்?
விடை :
வாயு மூலக்கூறுகளை இணைக்கும் விசை, அவற்றிற்கிடையே செயல்படும் ‘வாண்டர் வால்ஸ்’ விசை ஆகும்.

உ) ஒரே வெப்பநிலையில் H2, CO2 மற்றும் ஈத்தேனின் சராசரி இயக்க ஆற்றல்கள் சமம்.ஏன்?
விடை :
எல்லா வாயுக்களின் சராசரி இயக்க ஆற்றலானது அவற்றின் முழுமையான வெப்பநிலைக்கு நேர்விகிதத்திலிருக்கும். எனவே, ஒரே வெப்பநிலையில் உள்ள அனைத்து வாயுக்களின் சராசரி இயக்க ஆற்றல் மதிப்புகள் சமம்.

Question 2.
கொதித்தல் மற்றும் ஆவியாதலை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் 15

Question 3.
தொங்கல், கூழ்மம், உண்மைக் கரைசல்களை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் 11