Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 1 அளவீடு Textbook Questions and Answers, Notes.
TN Board 9th Science Solutions Chapter 1 அளவீடு
9th Science Guide அளவீடு Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
Question 1.
சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
அ) மி.மீ < செ.மீ மீ கி.மீ
ஆ) மி.மீ > செ.மீ > மீ > கி.மீ
இ) கி.மீ<e <செ.மீ < மி.மீ
ஈ) மி.மீ > மீ > செ.மீ > கி.மீ
விடை :
அ) மி.மீ < செ.மீ.<l < கி.மீ
Question 2.
அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?
அ) நிறை
ஆ) எடை
இ) காலம்
ஈ) நீளம்
விடை:
ஈ) நீளம்
Question 3.
ஒரு மெட்ரிக் டன் என்பது
அ) 100 குவின்டால்
ஆ) 10 குவின்டால்
இ) 1/10 குவின்டால்
ஈ) 1/100 குவின்டால்
விடை:
ஆ) 10 குவின்டால்
Question 4.
கீழ்க்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல ?
அ) சுருள் தராசு
ஆ) பொதுத் தராசு
இ) இயற்பியல் தராசு
ஈ) எண்ணியல் தராசு
விடை:
அ) சுருள் தராசு
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
_____________ ன் அலகு மீட்டர் ஆகும்.
விடை:
நீளம்
Question 2.
1 கி.கி அரிசியினை அளவிட _____________ தராசு பயன்படுகிறது.
விடை:
பொதுத்
Question 3.
கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிடப் பயன்படுவது _____________ கருவியாகும்.
விடை:
வெர்னியர் அளவி
Question 4.
மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட _____________ பயன்படுகிறது
விடை:
திருகு அளவி
Question 5.
இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக் கூடிய துல்லியமான நிறை _____________ ஆகும்.
விடை:
10 மில்லி கிராம்
III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.
Question 1.
மின்னோட்டத்தின் SI அலகு கிலோகிராம்
விடை :
தவறு – மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர்
Question 2.
கிலோமீட்டர் என்பது ஒரு SI அலகு முறை
விடை :
தவறு – மீட்டர் என்பது ஒரு SI அலகு முறை
Question 3.
அன்றாட வாழ்வில், நாம் நிறை என்ற பதத்திற்குப் பதிலாக எடை என்ற பதத்தைப் பயன்படுத்துகிறோம்.
விடை:
சரி
Question 4.
இயற்பியல் தராசு, பொதுத் தராசை விடத் துல்லியமானது. அது மில்லிகிராம் அளவிற்கு நிறையைத் துல்லியமாக அளவிடப் பயன்படுகிறது.
விடை:
சரி
Question 5.
ஒரு டிகிரி செல்சியஸ் என்பது 1K இடைவெளி ஆகும். பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் என்பது 273.15k
விடை:
சரி
Question 6.
வெர்னியர் அளவியின் உதவியால் 0.1 மிமீ அளவிற்கும், திருகு அளவியின் உதவியால் 0.01 மி.மீ அளவிற்கும் துல்லியமாக அளவிட முடியும்.
விடை:
சரி
IV. பொருத்துக
1.
2.
V. கூற்று மற்றும் காரண வகை
பின்வருமாறு விடையளி :
Question 1.
கூற்று (A) : ஒரு பையின் நிறை 10கி.கி என்பது அறிவியல் பூர்வமாக சரியான வெளிப்படுத்துதல் ஆகும். காரணம்
(R) : அன்றாட வாழ்வில் நாம் நிறை என்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.
அ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
விடை:
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம். கூற்று
Question 2.
(A) : 0°c = 273.16 K நாம் அதை முழு எண்ணாக 273 K என எடுத்துக் கொள்கிறோம். காரணம்
(R) : செல்சியஸ் அளவை கெல்வின் அளவிற்கு மாற்றும் போது 273 ஐக் கூட்டினால் போதுமானது.
அ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் சரி
விடை:
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்
Question 3.
கூற்று (A) : இரண்டு வான் பொருட்களுக்கு இடையே உள்ள தொலைவு ஒளி ஆண்டு என்ற அலகினால் அளக்கப்படுகிறது. காரணம்
(R) : ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு செல்லக்கூடிய தொலைவு ஓர் ஒளி ஆண்டு எனப்படும்.
அ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
விடை:
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்
VI. மிகச் சுருக்கமாக விடையளிக்க
Question 1.
அளவீடு என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளின் பண்பு அல்லது நிகழ்விற்கு அளவு மற்றும் எண்மதிப்பை வழங்கும் முறை.
Question 2.
SI அலகு – வரையறு.
விடை:
- SI அலகு முறை என்பது பண்டைய அலகு முறைகளைவிட நவீன மயமான மற்றும் மேம்படுத்தப்பட்ட அலகு முறை.
- உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை.
Question 3.
SI அலகின் விரிவாக்கம் என்ன?
விடை:
International system of units. (பன்னாட்டு அலகு முறை)
Question 4.
மீச்சிற்றளவு – வரையறு.
விடை:
ஒரு அளவுகோலினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அளவு.
Question 5.
திருகு அளவியின் புரிக்கோல் பற்றி உனக்கு என்ன தெரியும்.
விடை:
திருகு அளவியில், திருகின் அச்சுக்கு இணையாக மில்லி மீட்டர் அளவுகள் குறிக்கப்பட்ட அளவுகோல்.
Question 6.
2 மீட்டர் நீளம் கொண்ட ஒரு மெல்லிய கம்பியின் விட்டத்தை உனது கருவிப் பெட்டியிலிருக்கும் அளவுகோலால் உன்னால் கண்டறிய முடியுமா?
விடை:
- முடியாது. அளவுகோலால் கம்பியின் விட்டத்தை கண்டறிய முடியாது.
- கம்பியின் விட்டத்தை திருகு அளவி கொண்டு கண்டறிய முடியும்.
VII. சுருக்கமாக விடையளி
Question 1.
SI அலகுகளை எழுதும் போது கவனிக்க வேண்டிய விதி முறைகள் யாவை?
விடை:
- அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் அலகு குறிப்பிடும் போது முதல் எழுத்து பெரிய எழுத்தாக இருக்கக்கூடாது. (எ.கா) newton, henry
- அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிக்கப்படும் போது அலகுகளின் குறியீடுகளை பெரிய எழுத்தால் எழுத வேண்டும். (எ.கா) newton என்பது N, henry என்பது H.
- குறிப்பிட்ட பெயரால் வழங்கப்படாத அலகுகளின் குறியீடுகளை சிறிய எழுத்தால் (Small Letter) எழுத வேண்டும். (எ.கா) metre என்பது m மற்றும் kilogram என்பது kg.
- அலகுகளின் குறியீடுகளுக்கு இறுதியிலோ அல்லது இடையிலோ நிறுத்தம் குறிகள் போன்ற எந்தக் குறிகளும் இடக்கூடாது (எ.கா) 50m என்பதை 50m. என்றோ 50Nm என்பதை N.m என்றோ குறிப்பிடக் கூடாது.
- அலகுகளின் குறியீடுகளை பன்மையில் எழுதக் கூடாது. (எ.கா) 10kg என்பதை 10kgs என எழுதக்கூடாது.
Question 2.
நிலையான அலகு முறையின் தேவை என்ன?
விடை:
- பழங்கால அளவீட்டு முறைகளில் பெரும்பாலானவை மனித உடல் பரிமானங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன.
- அளவீடுகளின் அலகுகள் நபருக்கு நபர் இடத்திற்கு இடமும் மாறுபடுகிறது.
- இதனால் நிலையான அலகு முறை தேவைப்பட்டது.
Question 3.
நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக.
விடை:
Question 4.
வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவை எவ்வாறு கணக்கிடுவாய்?
விடை:
VIII . விரிவாக விடையளி – 5 மதிப்பெண்கள்
Question 1.
ஒரு உள்ளீடற்ற தேநீர் குவளையின் தடிமனை எவ்வாறு கண்டறிவாய்?
விடை:
- உள்ளீடற்ற தேநீர் குவளையின் தடிமனை வெர்னியர் அளவி கொண்டு அளவிடலாம்.
- முதலில் மீச்சிற்றளவு, சுழிப்பிழை, சுழித்திருத்தம் ஆகியவற்றை கண்டறியவும்.
- தேநீர் குவளையை கீழ் நோக்கிய தாடைகளுக்கு இடையில் பொருத்தி முதன்மைக் கோல் அளவு, வெர்னியர் ஒன்றிப்பு ஆகியவற்றை அட்டவணையில் குறிக்கவும்.
- இதே சோதனையை குவளையின் வெவ்வேறு இடத்தில் வைத்து 2 (or) 3 அளவுகளை அட்டவணையில் குறிக்கவும்.
- இதே போல் தேனீர் குவளையை மேல்நோக்கிய தாடைகளில் வைத்து உள்விட்டம் கணக்கிடவும்.
- வெளிவிட்டம் – உள்விட்டம் = தேனீர் குவளையின் தடிமனாகும்.
Question 2.
ஒரு ரூபாய் நாணயத்தின் தடிமனை எவ்வாறு கணக்கிடுவாய்?
- திருகு அளவி உதவியுடன் ஒரு ரூபாய் நாணயத்தின் தடிமனை கணக்கிடலாம்.
- முதலில் மீச்சிற்றளவு, சுழிப்பிழை, சுழிதிருத்தம் ஆகியவற்றை கணக்கிடவும்.
- திருகு அளவியின் இரு சமதளப் பரப்புகளுக்கு இடையே மெல்லிய நாணயத்தை வைத்து புரிக்கோல் அளவு (PSR) மற்றும் தலைக்கோல் பிரிவு (HSC) ஆகியவற்றை குறிக்கவும்.
- நாணயத்தின் தடிமன் = PSR + (HSC ± ZC) X LC
- நாணயத்தின் வெவ்வேறு பகுதிகளைத் திருகு அளவியின் சமதளப் பரப்புகளுக்கிடையே வைத்து சோதனையைத் திரும்பச் செய்யவும்.
சராசரி மதிப்பே நாணயத்தின் தடிமன் ஆகும்.
IX. கணக்கீடுகள்
Question 1.
இனியன் ஒரு ஒளி ஆண்டு என்பதனை 9.46 x 1015 மீ எனவும் எழிலன் 9.46 x 1012 கி.மீ எனவும் வாதிடுகின்றனர். யார் கூற்று சரி? உன் விடையை நியாயப்படுத்து.
விடை:
இனியன் கூற்று சரி
ஆண்டு என்பது = 9.46 x 1015 மீ
ஒரு ஆண்டு = 365 x 24 x 60 x 60 = 3.153 x 107
அதாவது ஒரு ஒளி ஆண்டு = (3.153 x 107) x (3 x 108)
= 9.46 x 1015 மீ
Question 2.
ஒரு இரப்பர் பந்தின் விட்டத்தை அளவிடும் போது முதன்மை அளவு கோலின் அளவு 7செ. மீ , வெர்னியர் ஒன்றிப்பு 6 எனில் அதன் ஆரத்தினைக் கணக்கிடுக.
தீர்வு :
முதன்மை அளவு MSR = 7 செ.மீ = 70 மி.மீ
வெர்னியர் ஒன்றிப்பு (VC) = 6
ஆரம் = ?
இரப்பர் பந்தின் விட்டம் = முதன்மை அளவு + (வெர்னியர் ஒன்றிப்பு x மீச்சிற்றளவு) – சுழிப்பிழை
Question 3.
ஐந்து ரூபாய் நாணயத்தினை திருகு அளவியால் அளக்கும் பொழுது அதன் புரிக்கோல் அளவு 1.மி.மீ அதன் தலைக்கோல் ஒன்றிப்பு 68 எனில், அதன் தடிமனைக் காண்க.
தீர்வு :
புரிக்கோல் அளவு = 1 மி.மீ
தலைக்கோல் ஒன்றிப்பு = 68
தடிமன் = ?
தலைக்கோல் அளவு = (தலைக்கோல் ஒன்றிப்பு x மீச்சிற்றளவு)
68 x 0.01
60.68 மி.மீ
தடிமன் = புரிக்கோல் அளவு + தலைக்கோல் அளவு
= 1 + 0.68
= 1.68 மி.மீ
Question 4.
98 நியூட்டன் எடையுள்ள ஒரு பொருளின் நிறையைக் காண்க.
எடை = 98 நியூட்டன்
நிறை = ?
எடை = நிறை x புவிஈர்ப்பு விசை
எடை = நிறை x 9.8
நிறை x 9.8 = 98
நிறை (m) = \(\frac{98}{9.8}\) = 10 கி.கி
நிறை (m) = 10 கி.கி
9th Science Guide அளவீடு Additional Important Questions and Answers
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
Question 1.
இயற்பியல் அளவுகோளின் இரு வகைகள் ……………….. , ………………..
விடை:
அடிப்படை. அளவுகள், வழி அளவுகள்
Question 2.
வேறு எந்த ஒரு அளவினாலும் குறிப்பிட முடியாத அளவுகள் ……………………………….. எனப்படும்.
விடை:
அடிப்படை அளவுகள்
Question 3.
வேறு அளவுகளினால் குறிப்பிடக்கூடிய அளவுகள் ………………………………..
விடை:
வழி அளவுகள்
Question 4.
அடிப்படை அளவுகளுக்கு உதாரணம் ………………………………….
விடை:
நீளம், நிறை, காலம்
Question 5.
வழி அளவுகளுக்கு உதாரணம் …………………………….., …………………………….., ……………………………..
விடை:
பரப்பளவு, கன அளவு, அடர்த்தி
Question 6.
பன்னாட்டு அலகுமுறை ………………………… எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
அலகுமுறை
Question 7.
தெரியாத அளவு ஒன்றுடன் ஒப்பிடக்கூடிய படித்தரமான அளவு ……………………………… ஆகும்.
விடை:
அலகு
Question 8.
ஒளிச்செறிவின் SI அலகு …………………………..
விடை:
கேண்டிலா
Question 9.
அடிப்படை அலகுகளின் எண்ணிக்கை …………………………………
விடை:
ஏடடி
Question 10.
ஃபோர்ட் நைட் என்பது ……………………………. நாட்கள்
விடை:
14
Question 11.
ஒரு ஆட்டோமஸ் = ……………………………. வினாடி
விடை:
16.25 வினாடி அல்லது
160 மில்லி வினாடி
Question 12.
கழுதைத்திறன் என்பது குதிரைத்திறனில் ……………………….. மடங்கு
விடை:
1’3
Question 13.
ஒரு கழுதைத் திறன் = ……………………………….. வாட்
விடை:
250
Question 14.
விசையின் SI அலகு …………………………….
விடை:
கி.கி/M2 அல்லது நியூட்டன் (n)
Question 15.
ஒளி வெற்றிடத்தில் ஓராண்டு பயணம் செய்யும் தொலைவு. …………………………… ஆகும்
விடை:
ஒளியாண்டு
Question 16.
ஒரு ஒளியாண்டு ………………………. மீ
விடை:
946 x 1015 மீ
Question 17.
ஆற்றலின் SI அலகு ……………………………..
விடை:
நீயூட்டன் மீட்டர் (அல்லது) ஜீல் (J)
Question 18.
புவியின் மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் உள்ள சராசரித் தொலைவு …………..
விடை:
வானியல் அலகு
Question 19.
ஒரு வானியல் அலகு 1 AU = ………… மீ
விடை:
1.496 x 1011 மீ
Question 20.
ஒரு விண்ணியல் ஆரம் = ………………………………
விடை:
3.26 ஒளி ஆண்டு
Question 21.
நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் ……………………………..
விடை:
ஆல்ஃபா கென்டாரி
Question 22.
ஒரு மைக்ரான் = ……………………………… மீ
விடை:
10-6
Question 23.
ஒரு ஆங்ஸ்ட்ர ம் (1 A°) ……………………………… மீ
விடை:
10-10
Question 24.
மனித உடலில் இரத்தக் குழாய்களின் மொத்த நீளம் ………………………….
விடை:
96000 கி.மீ
Question 25.
பச்சோந்தியின் நாக்கின் நீளம் அதன் உடம்பின் நீளத்தை விட …………………………. மடங்கு அதிகம்
விடை:
இரு மடங்கு
Question 26.
புரோட்டான், நியூட்ரான்களின் நிறை ………. என்ற அலகால் அளவிடப்படுகிறது.
விடை:
அணு நிறை அலகு
Question 27.
1 TMC = ……….
விடை:
2.83 x 1010 லிட்டர்
Question 28.
1 மெட்ரிக் டன் = …………. கிகி
விடை:
1000
Question 29.
1 சூரிய நிறை …………. கிகி
விடை:
2 x 1030
Question 30.
வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு = ………..
விடை:
0.01 செ.மீ
Question 31.
ஒரு நாணயத்தின் தடிமனை கண்டறிய …………. பயன்படுகிறது.
விடை:
திருகு அளவி
Question 32.
திருகு அளவியின் மீச்சிற்றளவு
விடை:
0.01 மிமீ
Question 33.
வெர்னியர் அளவியை வடிவமைத்தவர்
விடை:
பியரி வெர்னியர்
Question 34.
தலைக்கோலில் பிரிவுகளின் எண்ணிக்கை ………..
விடை:
100
Question 35.
வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு முதன்மை அளவு கோலின் சுழிப்பிரிவிற்கு இடப்புறம் அமைந்தால் அது ……… எனப்படும்
விடை:
எதிர் சுழிப்பிழை
Question 36.
திருகு அளவியில் தலைக்கோலின் சுழிப்பிரிவு புரிக்கோலின் வரைகோட்டுக்கு கீழ் அமைந்தால் அது ……….. ஆகும்.
விடை:
நேர்பிழை
Question 37.
திருகு அளவியில் தலைக்கோலின் சுழிப்பிரிவு புரிக்கோலின் வரைக்கோட்டுக்கு மேல் அமைந்தால் அது ……… பிழை எனப்படும்
விடை:
எதிர்பிழை
Question 38.
படித்தர நிறைகளோடு பொருட்களை ஒப்பிட்டு அளவீடு செய்யப்பயன்படும் கருவி ………… ஆகும்.
விடை:
பொதுத்தராசு
Question 39.
சுருள்வில்தராசு பொருளின் …… ஐ கணக்கிடப் பயன்படுகிறது.
விடை:
எடை
Question 40.
சுருள்வில் தராசு……….. விதிப்படி செயல்படுகிறது.
விடை:
ஹீக்விதி
Question 41.
தற்காலத்தில் பொருளின் நிறையை மிகத் துல்லியமாக கணக்கிடப் பயன்படும் தராசு.
விடை:
எண்ணியல் தராசு
Question 42.
ஆய்வகங்களில் பயன்படுவது ………
விடை:
இயற்பியல் தராசு
Question 43.
பொதுத்தராசைக் கொண்டு துல்லியமாக அளவிடக்கூடிய நிறை ……..
விடை:
5 கி.கி.
Question 44.
ஒரு பொருளின் உள்ள பருப்பொருளின் அளவு ………. எனப்படும்
விடை:
நிறை
Question 45.
ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை…….. ஆகும்.
விடை:
எடை
Question 46.
நீரின் முப்புள்ளியில் வெப்ப இயக்கவியலின் வெப்பநிலையில் 1/273.16 பங்கு ………… ஆகும்.
விடை:
கெல்வின் (K)
Question 47.
மின்னோட்டத்தின் அடிப்படை அலகு ……..
விடை:
ஆம்பியர் (A)
Question 48.
சீசியம் 133 அணுவில் ஏற்படும் 9192631770 அதிர்வுகளுக்கு எடுத்துக் கொள்ளும் காலம் ……… எனப்படும்.
விடை:
ஒரு வினாடி
Question 49.
மின் தடையின் அலகு ……………
விடை:
ஓம் (Ω)
Question 50.
வேலை செய்யும் வீதம் ………… எனப்படும் இதன் அலகு ………..
விடை:
திறன், வாட் (W)
II. சரியா? துவறா? தவறெனில் திருத்துக.
Question 1.
காலத்திற்கான அலகு ஒளி ஆண்டு ஆகும். (வினாடி
காலத்திற்கான அலகு வினாடி (S) ஆகும்.
விடை:
தவறு
Question 2.
புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்களின் நிறையை அணு நிறை அலகால் அளவிடலாம்.
விடை:
சரி
Question 3.
27°C வெப்பநிலைக்கு சமமான கெல்வின் வெப்பநிலை 300 ஆகும்.
விடை:
சரி
Question 4.
குறிப்பிட்டபெயரால் வழங்கப்படாத அலகுகளின் குறியீடுகளை பெரிய எழுத்தால் (Capital தவறு letter) எழுத வேண்டும்
குறிப்பிட்ட பெயரால் வழங்கப்படாத அலகுகளின் குறியீடுகளை சிறிய எழுத்தால் எழுத வேண்டும்
விடை:
தவறு
Question 5.
இயற்பியல் தராசு பொருளின் எடையைக் கணக்கிடப் பயன்படுகிறது. இயற்பியல் தராசு ஆய்வகங்களில் பயன்படுகிறது.
விடை:
தவறு
III. பொருத்துக
IV. கூற்று மற்றும் காரணம் வகை
Question 1.
கூற்று (A) : வேறு எந்தவொரு அளவினாலும் குறிப்பிட முடியாத அளவுகளை அடிப்படை அளவுகள் என்கிறோம்.
காரணம் (R) : பரப்பளவு, கன அளவு மற்றும் அடர்த்தி போன்றவை அடிப்படை அளவு ஆகும்.
அ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
விடை:
இ) A சரி ஆனால் R தவறு
Question 2.
கூற்று (A) : பழங்கால அளவீட்டு முறைகளில் பெரும்பாலானவை மனித உடல் பரிமானங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன.
காரணம் (R) : இதன் விளைவாக, அளவீடுகளின் மதிப்பு நபருக்கு நபர் மாறுபட்டன.
அ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
V. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
அடர்த்தி : நிறை முடுக்கம் ; விசை : __________________
விடை:
நிறை X முடுக்கம்
Question 2.
அழுத்தம்: பாஸ்கல்; ஆற்றல் : __________________
விடை:
జాడు
Question 3.
புரோட்டான் : அணு நிறை அலகு, வானியல் பொருட்கள் : __________________
விடை:
சூரிய நிறை
Question 4.
300 கெல்வின் : 27° செல்சியஸ் 104 பாரன்ஹீட்’ செல்சியஸ் __________________
விடை:
40
Question 5.
வெர்னியர் அளவி : 0.01 செ.மீ திருகு அளவி : __________________
விடை:
0.01 மி.மீ
VI. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்
Question 1.
ஒளி ஆண்டு என்றால் என்ன?
விடை:
ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓராண்டு காலம் பயணம் செய்யும் தொலைவு ஆகும்.
Question 2.
வானியல் அலகு என்றால் என்ன?
விடை:
வானியல் அலகு என்பது புவி மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் இடையேயான சராசரி தொலைவு ஆகும்.
Question 3.
அடிப்படை அளவுகள் என்றால் என்ன? சில எ.கா எழுதுக.
விடை:
வேறு எந்தவொரு அளவினாலும் குறிப்பிட முடியாத அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும். எ.கா. நீளம், நிறை, காலம்.
Question 4.
ஆட்டோபஸ் என்றால் என்ன?
விடை:
கற்பனை செய்து பார்க்கக்கூடிய மிகக் குறைந்த கால அளவாகிய கண் இமைக்கும் நேரமாகும்.
Question 5.
எடை என்றால் என்ன?
விடை:
எடை என்பது ஒரு பொருளின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையை சமன் செய்வதற்காக அந்தப் பொருளின் பரப்பினால் செலுத்தப்படும் எதிர்விசை ஆகும்.
VII. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்
Question 1.
SI அலகு முறையில் உள்ள அடிப்படை அளவு அதன் அலகு ஆகியவற்றை அட்டவனைப்படுத்துக.
விடை:
Question 2.
இயற்பியல் தராசு பற்றி குறிப்பு எழுதுக.
விடை:
- இயற்பியல் தராசு ஆய்வகங்களில் பயன்படுத்தப்படுகிறது.
- இத்தராசு அதிகத் துல்லியத் தன்மை பெற்றுள்ளது.
- இயற்பியல் தராசினைப் பயன்படுத்தி மில்லி கிராம் அளவில் துல்லியமாக அளவிட முடியும்.
- இயற்பியல் தராசில் பயன்படுத்தப்படும் படித்தர நிறைகள் முறையே 10மிகி, 20கி.கி, 50மிகி, 100 மிகி, 200 மிகி, 500மிகி.
- இயற்பியல் தராசு பொருளின் நிறையை அளவிட பயன்படுகிறது.