Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Maths Guide Pdf Chapter 2 மெய்யெண்கள் Ex 2.9 Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Maths Solutions Chapter 2 மெய்யெண்கள் Ex 2.9

பலவுள் தெரிவு வினாக்கள் :
கேள்வி 1.
n என்பது ஓர் இயல் எண் எனில் √n என்பது
(1) எப்போதும் ஓர் இயல் எண்.
(2) எப்போதும் ஒரு விகிதமுறா எண்.
(3) எப்போதும் ஒரு விகிதமுறு எண்
(4) ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்
விடை :
(4) ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்

கேள்வி 2.
பின்வனவற்றுள் எது உண்மையல்ல?
(1) ஒவ்வொரு விகிதமுறு எண்ணும் மெய்யெண்.
(2) ஒவ்வொரு முழுக்களும் விகிதமுறு எண்.
(3) ஒவ்வொரு மெய்யெண்ணும் விகிதமுறா எண்.
(4) ஒவ்வோர் இயல் எண்ணும் ஒரு முழு எண்.
விடை:
(3) ஒவ்வொரு மெய்யெண்ணும் விகிதமுறா எண்.

கேள்வி 3.
இரு விகிதமுறா எண்களின் கூடுதல் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது உண்மை ?
(1) எப்போதும் ஒரு விகிதமுறா எண்.
(2) ஒருவிகிதமுறு அல்லது விகிதமுறா எண்ணாக இருக்கலாம்.
(3) எப்போதும் ஒரு விகிதமுறு எண்.
(4) எப்போதும் ஒரு முழுக்களாகும்.
விடை:
(2) ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்ணாக இருக்கலாம்.

கேள்வி 4.
பின்வனவற்றுள் எது முடிவுறு தசமத் தீர்வு?
(1) \(\frac{5}{64}\)
(2) \(\frac{8}{9}\)
(3) \(\frac{14}{15}\)
(4) \(\frac{1}{12}\)
விடை :
(1) \(\frac{5}{64}\)

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 2 மெய்யெண்கள் Ex 2.9

கேள்வி 5.
பின்வனவற்றுள் எது விகிதமுறா எண்?
(1) \(\sqrt{25}\)
(2) \(\sqrt{\frac{9}{4}}\)
(3) \(\frac{7}{11}\)
(4) π
விடை:
(4) π

கேள்வி 6.
2 மற்றும் 2.5 என்ற எண்களுக்கிடையே உள்ள ஒரு விகிதமுறா எண்
(1) \(\sqrt{11}\)
(2) √5
(3) \(\sqrt{2.5}\)
(4) √8
விடை:
(2) √5

கேள்வி 7.
\(\frac{1}{3}\) ஐ எந்த மிகச் சிறிய விகிதமுறு எண்ணால் பெருக்கினால் அதன் தசம விரிவு ஓர் இலக்கத்தோடு முடிவுறு தசம விரிவாக அமையும்?
(1) \(\frac{1}{10}\)
(2) \(\frac{3}{10}\)
(3) 3
(4) 30
விடை:
(2) \(\frac{3}{10}\)

கேள்வி 8.
\(\frac{1}{7}\) = \(0 . \overline{142857}\) எனில் \(\frac{5}{7}\) இன் மதிப்பு என்ன?
(1) \(0 . \overline{142857}\)
(2) \(0 . \overline{714285}\)
(3) \(0 . \overline{571428}\)
(4) 0.714285
விடை :
(2) \(0 . \overline{714285}\)

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 2 மெய்யெண்கள் Ex 2.9

கேள்வி 9.
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைக் காண்க.
(1) \(\sqrt{32} \times \sqrt{2}\)
(2) \(\frac{\sqrt{27}}{\sqrt{3}}\)
(3) \(\sqrt{72} \times \sqrt{8}\)
(4) \(\frac{\sqrt{54}}{\sqrt{18}}\)
விடை:
(4) \(\frac{\sqrt{54}}{\sqrt{18}}\)

கேள்வி 10.
\(0 . \overline{34}+0.3 \overline{4}\) =
(1) \(0.6 \overline{87}\)
(2) \(0 . \overline{68}\)
(3) \(0.6 \overline{8}\)
(4) \(0.68 \overline{7}\)
விடை:
(1) \(0.6 \overline{87}\)

கேள்வி 11.
கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறு?
(1) 25 இன் வர்க்க மூலம் 5 அல்லது – 5
(2) \(-\sqrt{25}=-5\)
(3) \(\sqrt{25}=5\)
(4) \(\sqrt{25}=\pm 5\)
விடை :
(4) \(\sqrt{25}=\pm 5\)

கேள்வி 12.
கீழ்க்காண்பவற்றுள் எது விகிதமுறு எண் அல்ல?
(1) \(\sqrt{\frac{8}{18}}\)
(2) \(\frac{7}{3}\)
(3) \(\sqrt{0.01}\)
(4) \(\sqrt{13}\)
விடை:
(4) \(\sqrt{13}\)

கேள்வி 13.
\(\sqrt{27}+\sqrt{12}=\)
(1) \(\sqrt{39}\)
(2) 5√6
(3) 5√3
(4) 3√5
விடை:
(3) 5√3

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 2 மெய்யெண்கள் Ex 2.9

கேள்வி 14.
\(\sqrt{80}=\mathrm{k} \sqrt{5}\) எனில் k = ?
(1) 2
(2) 4
(3) 8
(4) 16
விடை :
(2) 4

கேள்வி 15.
\(4 \sqrt{7} \times 2 \sqrt{3}=\)
(1) \(6 \sqrt{10}\)
(2) \(8 \sqrt{21}\)
(3) \(8 \sqrt{10}\)
(4) \(6 \sqrt{21}\)
விடை:
(2) \(8 \sqrt{21}\)

கேள்வி 16.
\(\frac{2 \sqrt{3}}{3 \sqrt{2}}\) இன் பகுதியை விகிதமுறு எண்ணாக மாற்றிய பின் சுருங்கிய வடிவம்
(1) \(\frac{\sqrt{2}}{3}\)
(2) \(\frac{\sqrt{3}}{2}\)
(3) \(\frac{\sqrt{6}}{3}\)
(4) \(\frac{2}{3}\)
விடை:
(3) \(\frac{\sqrt{6}}{3}\)

கேள்வி 17.
(2√5 – √2)2 இன் சுருங்கிய வடிவம்
(1) 4√5 + 2√2
(2) \(22-4 \sqrt{10}\)
(3) \(8-4 \sqrt{10}\)
(4) \(2 \sqrt{10}-2\)
விடை :
(2) \(22-4 \sqrt{10}\)

கேள்வி 18.
\((0.000729)^{\frac{-3}{4}} \times(0.09)^{\frac{-3}{4}}\) = ……………………
(1) \(\frac{10^{3}}{3^{3}}\)
(2) \(\frac{10^{5}}{3^{5}}\)
(3) \(\frac{10^{2}}{3^{2}}\)
(4) \(\frac{10^{6}}{3^{6}}\)
விடை:
(4) \(\frac{10^{6}}{3^{6}}\)

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 2 மெய்யெண்கள் Ex 2.9

கேள்வி 19.
If \(\sqrt{9^{\mathrm{X}}}=\sqrt[3]{9^{2}}\) எனில் x = ?
(1) \(\frac{2}{3}\)
(2) \(\frac{4}{3}\)
(3) \(\frac{1}{3}\)
(4) \(\frac{5}{3}\)
விடை:
(2) \(\frac{4}{3}\)

கேள்வி 20.
ஒரு செவ்வக வடிவ வீட்டு மனையின் நீளம் மற்றும் அகலங்கள் முறையே 5 × 105 மற்றும் 4 x 104 மீட்டர் எனில், அதன் பரப்பளவு என்ன?
(1) 9 × 101 மீ2
(2) 9 × 109 மீ2
(3) 2 × 1010 மீ2
(4) 20 × 1020 மீ2
விடை:
(3) 2 × 1010 மீ2