Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Maths Guide Pdf Chapter 2 மெய்யெண்கள் Ex 2.3 Textbook Questions and Answers, Notes.
TN Board 9th Maths Solutions Chapter 2 மெய்யெண்கள் Ex 2.3
கேள்வி 1.
கீழ்க்கண்ட விகிதமுறா எண்களை எண்கோட்டில் குறிக்கவும்
(i) \(\sqrt{3}\)
(ii) \(\sqrt{4.7}\)
(iii) \(\sqrt{6.5}\)
தீர்வு
(i) \(\sqrt{3}\)
- ஒரு நேர்கோடு வரைந்து அதில் A என்ற புள்ளியைக் குறிக்கவும்.
- AB = 1.732 செ.மீ. எனுமாறு B என்ற புள்ளியைக் குறிக்கவும்
- BC = 1 என்ற அலகுக்கு ஒரு கோடு வரைந்து அதை ‘C’ எனக் குறிக்கவும்.
- AC இக்கு மையக் குத்துக்கோடு வரைந்து அதன் மையப் புள்ளியை O எனக் குறிக்கவும்.
- O ஐ மையமாகவும் OC = OA ஐ ஆரமாகவும் கொண்டு அரை வட்டம் வரையவும்.
- BD இக்குச் செங்குத்தாக B இல் AB என்ற கோடு வரையவும்.
- இப்போது, BD = \(\sqrt{3}\) இதை எண்கோட்டில் BE = BD = \(\sqrt{3}\) எனக் குறிக்கலாம்.
(ii) \(\sqrt{4.7}\)
- ஒரு நேர்கோடு வரைந்து அதில் A என்ற புள்ளியைக் குறிக்கவும்.
- AB = 4.7 செ.மீ. எனுமாறு B என்ற புள்ளியைக் குறிக்கவும்
- BC = 1 என்ற அலகுக்கு ஒரு கோடு வரைந்து அதை C எனக் குறிக்கவும்.
- AC இக்கு மையக் குத்துக்கோடு வரைந்து அதன் மையப் புள்ளியை O எனக் குறிக்கவும்.
- O மையமாகவும் OC = OA ஐ ஆரமாகவும் கொண்டு அரை வட்டம் வரையவும்.
- BD இக்குச் செங்குத்தாக B இல் AB என்ற கோடு வரையவும்.
- இப்போது, BD = \(\sqrt{4.7}\) இதை எண்கோட்டில் BE = BD = \(\sqrt{4.7}\) எனக் குறிக்கலாம்.
(iii) \(\sqrt{6.5}\)
- ஒரு நேர்கோடு வரைந்து அதில் A என்ற புள்ளியைக் குறிக்கவும்.
- AB = 6.5 செ.மீ. எனுமாறு B என்ற புள்ளியைக் குறிக்கவும்
- BC = 1 என்ற அலகுக்கு ஒரு கோடு வரைந்து அதை ‘C’ எனக் குறிக்கவும்.
- AC இக்கு மையக் குத்துக்கோடு வரைந்து அதன் மையப் புள்ளியை O எனக் குறிக்கவும்.
- O ஐ மையமாகவும் OC = OA ஐ ஆரமாகவும் கொண்டு அரை வட்டம் வரையவும்.
- BD இக்குச் செங்குத்தாக B இல் AB என்ற கோடு வரையவும்.
இப்போது, BD = \(\sqrt{6.5}\) இதை எண்கோட்டில் BE = BD = \(\sqrt{6.5}\) எனக் குறிக்கலாம்.
கேள்வி 2.
கீழ்க்காணும் எண்களுக்கு இடையே உள்ள எவையேனும் இரு விகிதமுறா எண்களைக் காண்க.
(i) 0.3010011000111 மற்றும் 0.3020020002
விடை:
0.3010011000111 மற்றும் 0.3020020002 இடையேயுள்ள இரு விகிதமுறா எண்கள்
0.301202200222 3.301303300333
(ii) \(\frac{6}{7}\) மற்றும் \(\frac{12}{13}\)
விடை:
\(\frac{6}{7}\) = 0.8571428571
\(\frac{12}{13}\) = 0.9230769231
\(\frac{6}{7}\) மற்றும் \(\frac{12}{13}\) உமற்றும் 2 க்கு இடையேயுள்ள இரு விகித முறா எண்க ள்
0.8616611666111 0.8717711777111
(iii) \(\sqrt{2}\) மற்றும் \(\sqrt{3}\)
விடை:
\(\sqrt{2}\) = 1.414….
\(\sqrt{3}\) = 1.732……
\(\sqrt{2}\) மற்றும் \(\sqrt{3}\) இடையேயுள்ள இரு விகிதமுறா எண்க ள் 1.515511555….1.616611666…..
கேள்வி 3.
2.2360679 மற்றும் 2.236505500 இவ்வெண்களுக்கிடையே எவையேனும் இரு விகிதமுறு எண்களை எழுதுக.
விடை:
2.2360679 மற்றும் 2.236505500 இடையேயுள்ள இரு விகிதமுறு எண்கள் 2.2362 மற்றும் 2.2363