Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 4.1 கல்வி அழகே அழகு Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.1 கல்வி அழகே அழகு

கற்பவை கற்றபின்

Question 1.
கல்வி குறித்து வழங்கப்படும் பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • கல்வி கரையில கற்பவர் நாள் சில.
  • கல்வி அழகே அழகு.
  • கத்த (கற்ற) வித்த(வித்தை) காலத்துக்கு உதவும்.
  • நூறு நாள் கத்தது (கற்றது), ஆறு நாள் விடப்போகும்.
  • கற்க கசடற.
  • இளமையில் கல்.
  • நூல் பல கல்.

Question 2.
கற்றோரின் சிறப்புகளைப் பற்றிப் பிற நூல்களில் இடம் பெற்ற பாடல்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
கண்ணுடையோர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
புண்ணுடையார் கல்லா தவர். – திருக்குறள்

நிறைகுடம் நீர்தளும்பல் இல். – பழமொழி

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கில்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்கு
தன்தேச மல்லால் சிறப்பில்லை
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. – மூதுரை

Question 3.
பின்வரும் நாலடியார் பாடலைப் படித்துச் சுவைக்க.
Answer:
கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கற்றவருக்கு அழகு தருவது ………………………….
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வைரம்
ஈ) கல்வி
Answer:
ஈ) கல்வி

Question 2.
‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
அ) கலன் + லல்லால்
ஆ) கலம் + அல்லால்
இ) கலன் + அல்லால்
ஈ) கலன் + னல்லால்
Answer:
இ) கலன் + அல்லால்

சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. அழகு – கல்வியே உண்மையான அழகு.
2. கற்றவர் – கல்வி கற்றவரே உலகில் உயர்ந்தவர்.
3. அணிகலன் – மனிதனுக்கு உண்மையான அணிகலன் கல்வி ஆகும்.

குறுவினா

Question 1.
யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?
Answer:
கல்வி கற்றவருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை.

சிறுவினா

Question 1.
நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • ஒளிவீசும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலன்களுக்கு மேலும் அழகுபடுத்த வேறு அணிகலன்கள் தேவையில்லை.
  • அதுபோலக் கல்வி கற்றவருக்கு அக்கல்வியே அழகு தரும்.
  • அதனால் அழகுபடுத்தும் அணிகலன்கள் கற்றவருக்குத் தேவையில்லை.

சிந்தனை வினா

Question 1.
கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
Answer:

  • நம்முள் புதைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும்.
  • பகுத்து அறியும் அறிவைத் தரும்.
  • துன்பம் வரும் முன் தடுத்து நிறுத்தும் அறிவைத் தரும்.
  • மெய்ப்பொருள் காணும் அறிவினைத் தரும்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
குமரகுருபரரின் காலம் ……………………..
அ) கி.பி. 15
ஆ) கி.பி. 17
இ) கி.பி. 18
ஈ) கி.பி. 16
Answer:
ஆ) கி.பி. 17

Question 2.
நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்கள் ……………………
அ) 100
ஆ) 102
இ) 103
ஈ) 104
Answer:
ஆ) 102

குறுவினா

Question 1.
நீதிநெறி விளக்கம் – பெயர்க்காரணம் கூறுக.
Answer:
மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால், இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர்பெற்றது.

Question 2.
குமரகுருபரர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:

  • கந்தர் கலிவெண்பா
  • கயிலைக் கலம்பகம்
  • சகலகலாவல்லி மாலை
  • மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
  • முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

சிறுவினா

Question 1.
குமரகுருபரர் பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
Answer:
பெயர் : குமரகுருபரர்
பிறந்த ஊர் : ஸ்ரீவைகுண்டம்
பெற்றோர் : சண்முக சிகாமணி – சிவகாமசுந்தரி
காலம் : கி.பி. 17
இயற்றிய நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை, கந்தர்கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லிமாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் முதலியன.

சொல்லும் பொருளும்

1. கலன் – அணிகலன்
2. முற்ற – ஒளிர
3. வேண்டாவாம் – தேவையில்லை