Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 2.1 ஓடை Text Book Back Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.1 ஓடை
கற்பவை கற்றபின்
Question 1.
மலை, அருவி, ஓடை, மரங்கள், வயல்கள் ஆகியன இடம்பெறுமாறு ஓர் இயற்கைக் காட்சியை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்க.
Answer:
பாடநூல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
பள்ளிக்குச் சென்று கல்வி ……………………. சிறப்பு.
அ) பயிலுதல்
ஆ) பார்த்தல்
இ) கேட்டல்
ஈ) பாடுதல்
Answer:
அ) பயிலுதல்
Question 2.
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது …………………….
அ) கடல்
ஆ) ஓடை
இ) குளம்
ஈ) கிணறு
Answer:
ஆ) ஓடை
Question 3.
‘நன்செய்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) நன் + செய்
ஆ) நன்று + செய்
இ) நன்மை + செய்
ஈ) நல் + செய்
Answer:
இ) நன்மை + செய்
Question 4.
‘நீளுழைப்பு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
அ) நீளு + உழைப்பு
ஆ) நீண் + உழைப்பு
இ) நீள் + அழைப்பு
ஈ) நீள் + உழைப்பு
Answer:
ஈ) நீள் + உழைப்பு
Question 5.
‘சீருக்கு + ஏற்ப’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) சீருக்கு ஏற்ப
ஆ) சீருக்கேற்ப
இ) சீர்க்கேற்ப
ஈ) சீருகேற்ப
Answer:
ஆ) சீருக்கேற்ப
Question 6.
‘ஓடை + ஆட’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) ஓடைஆட
ஆ) ஓடையாட
இ) ஓடையோட
ஈ) ஓடைவாட
Answer:
ஆ) ஓடையாட
குறுவினா
Question 1.
ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?
Answer:
ஓடை கற்களில் உருண்டும், தவழ்ந்தும், நெளிந்தும், சலசல என்று ஒலியெழுப்பியும் அலைகளால் கரையை மோதியும், இடையறாது ஓடுகிறது.
Question 2.
ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?
Answer:
ஓடை எழுப்பும் ஒலி, பெண்கள் பாடும் வள்ளைப்பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்குவதற்கு உவமையாக வாணிதாசன் கூறுகிறார்.
சிறு வினா
Question 1.
ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?
Answer:
(i) நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.
(ii) விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது. கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது. குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.
(iii) நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.
சிந்தனை வினா
Question 1.
வள்ளைப்பாட்டு என்பது நெல் குத்தும் பொழுது பாடப்படும் பாடலாகும். இதுபோல் வேறு எந்தெந்தச் சூழல்களில் என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?
Answer:
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
மனிதர் வாழ்வு …………………. யோடு இயைந்தது.
அ) செயற்கை
ஆ) இயற்கை
இ) அறிவியல்
ஈ) விளையாட்டு
Answer:
ஆ) இயற்கை
Question 2.
நெல் குத்தும்போது பாடப்படும் பாட்டு ……………………
அ) வள்ளை
ஆ) கும்மி
இ) ஒயில்
ஈ) தெம்மாங்கு
Answer:
அ) வள்ளை
Question 3.
நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம் …………………..
அ) புன்செய்
ஆ) நன்செய்
இ) செம்மண் நிலம்
ஈ) பாலைநிலம்
Answer:
ஆ) நன்செய்
Question 4.
குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம் ………………….
அ) புன்செய்
ஆ) வண்ட ல் நிலம்
இ) நன்செய்
ஈ) செழிந்த நிலம்
Answer:
அ) புன்செய்
Question 5.
‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று புகழப்படுபவர் …………………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) வண்ணதாசன்
Answer:
இ) வாணிதாசன்
Question 6.
அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர் ……………………..
அ) கண்ண தாசன்
ஆ) வண்ண தாசன்
இ) செல்லிதாசன்
ஈ) வாணிதாசன்
Answer:
அ) வாணிதாசன்
Question 7.
பாவலர்மணி என்று அழைக்கப்படுபவர் …………………
அ) வாணிதாசன்
ஆ) சுரதா
இ) கண்ண தாசன்
ஈ) பாரதியார்
Answer:
ஈ) வாணிதாசன்
Question 8.
வாணிதாசனுக்குச் செவாலியர் விருது வழங்கிய அரசு …………………
அ) இந்தியா
ஆ) சீனா
இ) பிரெஞ்சு
ஈ) தமிழ்நாடு
Answer:
இ) பிரெஞ்சு
Question 9.
தமிழச்சி என்னும் நூலை எழுதியவர் …………………
அ) பாரதியார்
ஆ) வாணிதாசன்
இ) பாரதிதாசன்
ஈ) கவிமணி
Answer:
ஆ) வாணிதாசன்
Question 10.
தொடுவானம் என்னும் நூலின் ஆசிரியர் ……………………
அ) கம்பன்
ஆ) மீரா
இ) வைரமுத்து
ஈ) வாணிதாசன்
Answer:
ஈ) வாணிதாசன்
குறுவினா
Question 1.
வாணிதாசன் அறிந்த மொழிகள் யாவை?
Answer:
வாணிதாசன் அறிந்த மொழிகள் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகும்.
Question 2.
வாணிதாசன் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
வாணிதாசன் இயற்றிய நூல்கள் தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பனவாகும்.
Question 3.
வள்ளைப் பாட்டு என்றால் என்ன?
Answer:
பெண்கள் நெல்குத்தும்போது பாடும் பாட்டு வள்ளைப் பாட்டு ஆகும்.
Question 4.
நன்செய், புன்செய் நிலம் குறித்து எழுதுக.
Answer:
- நன்செய்: நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்.
- புன்செய் : குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்.
சிறுவினா
Question 1.
வாணிதாசன் குறிப்பு எழுதுக.
Answer:
பெயர் : வாணிதாசன்
இயற்பெயர் : அரங்கசாமி என்ற எத்திராசலு
ஊர் : புதுவையை அடுத்த வில்லியனூர்
பெற்றோர் : அரங்க. திருக்காமு – துளசியம்மாள்
சிறப்பு : ‘கவிஞரேறு’, ‘பாவலர்மணி’ என்னும் பட்டங்கள் பெற்றுள்ளார். தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்’ என இவரைத் தமிழுலகம் புகழ்கிறது. உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர்தம் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
நூல்கள் : தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் முதலியன.
காலம் : 22.07.1915 – 07.08.1974
சொல்லும் பொருளும்
1. தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்
2. ஈரம் – இரக்கம்
3. முழவு – இசைக்கருவி
4. நன்செய் – நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
5. புன்செய் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
6. வள்ளைப்பாட்டு – நெல் குத்தும்போது பாடப்படும் பாடல்
7. பயிலுதல் – படித்தல்
8. நாணம் – வெட்கம்
9. செஞ்சொல் – திருந்திய சொல்