Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 1.2 தமிழ்மொழி மரபு Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 1.
பறவைகளின் ஒலி மரபுகளை எழுதி வருக.
Answer:
காகம் கரையும்

  • ஆந்தை அலறும்
  • கிளி பேசும்
  • குயில் கூவும்
  • கூகை குழறும்
  • கோழி கொக்கரிக்கும்
  • சேவல் கூவும்
  • புறா குனுகும்
  • மயில் அகவும்
  • வண்டு முரலும்

Question 2.
ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்படும் வேறு பெயர்களை எழுதுக.
Answer:

  • நிலம் – தரை, மண், இடம், பூவுலகு, பூமி, மனை, புவி. நெருப்பு,
  • தீ – கொள்ளி, அக்கினி, கனல், அனல்.
  • நீர் – தண்ணீர், வெள்ளம், புனல். வளி
  • வளி – காற்று, வாயு, தென்றல், புயல்.
  • விசும்பு – ஆகாயம், வானம், விண்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 3.
ஐம்பூதங்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு 1
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு 2

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பறவைகள் ………………… பறந்து செல்கின்றன.
அ) நிலத்தில்
ஆ) விசும்பில்
இ) மரத்தில்
ஈ) நீரில்
Answer:
ஆ) விசும்பில்

Question 2.
இயற்கையைப் போற்றுதல் தமிழர் ……………………..
அ) மரபு
ஆ) பொழுது
இ) வரவு
ஈ) தகவு
Answer:
அ) மரபு

Question 3.
‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………
அ) இரண்டு + திணை
ஆ) இரு + திணை
இ) இருவர் + திணை
ஈ) இருந்து + திணை
Answer:
அ) இரண்டு + திணை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 4.
‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) ஐம் + பால்
ஆ) ஐந்து + பால்
இ) ஐம்பது + பால்
ஈ) ஐ + பால்
Answer:
ஆ) ஐந்து + பால்

சிந்தனை வினா

Question 1.
நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
Answer:
மனிதன் தன் வாழ்நாளில் நல்ல முறையில் வாழ்ந்து, தான் வாழ்ந்ததற்கான அடிச்சுவட்டை விட்டுச் செல்கிறான். அவ்வகையில் பழந்தமிழர் தம் வாழ்வில் கடைப்பிடித்து தமக்கு விட்டுச் சென்ற பண்பாட்டை மரபுகளாகப் பின்பற்றுவது நமது கடமையாகும். அதனால்தான், நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றி வந்தனர். மரபு மாறினால் பொருள் மாறிவிடும் பண்பாடும் அர்த்தமற்று போய்விடும். எனவே, நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் இதுவாகத்தான் இருக்கும் என கருதுகிறேன்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வாழ்வுக்குரிய ஒழுங்குமுறைகள் ……………………… எனப்படும்.
அ) அறிவு
ஆ) செல்வம்
இ) ஒழுக்கம்
ஈ) சிறப்பு
Answer:
இ) ஒழுக்கம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 2.
மொழிக்குரிய ஒழுங்குமுறைகள் ……………….. எனப்படும்.
ஆ) கலாச்சாரம்
இ) பண்பாடு
ஈ) ஒழுக்கம்
Answer:
அ) மரபு

Question 3.
திணை ……………….. வகைப்படும்.
அ) மூன்று
ஆ) இரண்டு
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) இரண்டு

Question 4.
பால் …………………. வகைப்படும்.
அ) நான்கு
ஆ) ஆறு
இ) ஐந்து
ஈ) மூன்று
Answer:
இ) ஐந்து

Question 5.
செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ……………………. கூறுகிறது.
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) சங்கநூல்
ஈ) தொல்காப்பியம்
Answer:
ஈ) தொல்காப்பியம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 6.
இவ்வுலகம் ……………………. ஆல் ஆனவை.
அ) காற்று
ஆ) நீர்
இ) ஐம்பூதங்கள்
ஈ) நெருப்பு
Answer:
இ) ஐம்பூதங்கள்

Question 7.
எழுத்துகள் நீண்டு ஒலிப்பதை …………………. என்பர்.
அ) குறில்
ஆ) ஆய்தம்
இ) அளபெடை
ஈ) உயிர்மெய்
Answer:
இ) அளபெடை

Question 8.
தொல்காப்பியத்தின் ஆசிரியர் …………………….
அ) தொல்காப்பியர்
ஆ) பவணந்தி முனிவர்
இ) கம்பர்
ஈ) பரணர்
Answer:
அ) தொல்காப்பியர்

Question 9.
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் …………………. ஆகும்.
அ) திருக்குறள்
ஆ) தொல்காப்பியம்
இ) நன்னூல்
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
ஆ) தொல்காப்பியம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 10.
தொல்காப்பியம் ……………………….. அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
அ) ஐந்து
ஆ) ஆறு
இ) நான்கு
ஈ) மூன்று
Answer:
ஈ) மூன்று

குறுவினா

Question 1.
“இரு திணைகள்” எவையெனச் சுட்டுக.
Answer:
உயர்திணை, அஃறிணை.

Question 2.
“ஐம்பால்கள் எவையெனச் சுட்டுக.
Answer:

  1. ஆண்பால்
  2. பெண்பால்
  3. பலர்பால்
  4. ஒன்றன்பால்
  5. பலவின்பால்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 3.
உயிரளபெடை என்றால் என்ன?
Answer:
செய்யுளில் ஓசை குறையும்போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துகள் ஏழும் அளபெடுக்கும். இஃது உயிரளபெடை எனப்படும்.

Question 4.
ஐம்பூதங்கள் யாவை?
Answer:
நிலம், தீ, நீர், காற்று, வானம் ஆகியன ஐம்பூங்களாகும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

சொல்லும் பொருளும்

1. விசும்பு – வானம்
2. மயக்கம் – கலவை
3. இருதிணை – உயர்திணை, அஃறிணை
4. வழா அமை – தவறாமை
5. ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
6. மரபு – வழக்கம்
7. திரிதல் – மாறுபடுதல்
8. செய்யுள் – பாட்டு
9. தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)

இளமைப் பெயர்கள்

  • புலி பறழ்
  • சிங்கம் – குருளை
  • யானை – கன்று
  • பசு – கன்று
  • ஆடு – குட்டி

ஒலி மரபுகள்

  • புலி – உறுமும்
  • சிங்கம் – முழங்கும்
  • யானை – பிளிறும்
  • பசு – கதறும்
  • ஆடு – கத்தும்

Leave a Reply