Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

8th Social Science Guide ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பழங்கால நகரங்கள் எனப்படுவது.
அ) ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ
ஆ) டெல்லி மற்றும் ஹைதராபாத்
இ) பம்பாய் மற்றும் கல்கத்தா
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
அ) ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ

Question 2.
ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நகரம் / நகரங்கள்.
அ) சூரத்
ஆ) கோவா
இ) பம்பாய்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Question 3.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய நகரமயமாக்கலின் ஒரு புதிய நடைமுறை
அ) சூயஸ் கால்வாய் திறப்பு
ஆ) நீராவிப் போக்குவரத்து அறிமுகம்
இ) ரயில்வே கட்டுமானம்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 4.
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது.
அ) வர்த்தகத்திற்காக
ஆ) தங்கள் சமயத்தைப் பரப்புவதற்காக
இ) பணி புரிவதற்காக
ஈ) ஆட்சி செய்வதற்காக
விடை:
அ) வர்த்தகத்திற்காக

Question 5.
புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடம்.
அ) பம்பாய்
ஆ) கடலூர்
இ) மதராஸ்
ஈ) கல்கத்தா
விடை:
இ) மதராஸ்

Question 6.
1744ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது எது?
அ) புனித வில்லியம் கோட்டை
ஆ) புனித டேவிட் கோட்டை
இ) புனித ஜார்ஜ் கோட்டை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) புனித ஜார்ஜ் கோட்டை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இந்தியாவில் இருப்புப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ……………….
விடை:
1853

Question 2.
இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் ……………
விடை:
ரிப்பன்

Question 3.
1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாணங்களில் …………. அறிமுகப்படுத்தியது.
விடை:
இரட்டை ஆட்சி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 4.
நகராட்சி உருவாவதற்குப் பொறுப்பாக இருந்தவர் …………………
விடை:
ஜோசியா சைல்டு

Question 5.
……………………. இல் பிரான்சிஸ்டே மற்றும் ஆண்ட்ரூகோகன் ஆகியோர் மதராசபட்டினத்தில் 1639 ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனத்தை நிறுவுவதற்கு அனுமதி பெற்றனர்.
விடை:
1639

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து நகரங்கள் செழித்து வளர்ந்தன.
விடை:
சரி

Question 2.
பிளாசிப் போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் அரசியல் ஆதிக்கம் பெற்றனர்,
விடை:
சரி

Question 3.
புனித வில்லியம் கோட்டை சென்னையில் அமைந்துள்ளது. .
விடை:
தவறு

Question 4.
குடியிருப்புகளில் இராணுவ வீரர்கள் வாழத் தொடங்கினர்.
விடை:
சரி

Question 5.
மதராஸ் 1998இல் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது.
விடை:
தவறு

V. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
கூற்று : இந்தியா பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது.
காரணம் : பிரிட்டிஷாரின் ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தகக் கொள்கை மற்றும் தொழில்துறை புரட்சி இந்திய உள்நாட்டு தொழில்களை அழித்தன.

அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி,
இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை .
விடை:
இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 2.
பின்வரும் எந்த அறிக்கை / அறிக்கைகள் உண்மையற்றவை?
i) ஸ்ரீரங்க ராயலு ஆங்கிலேயர்களுக்கு மதராசபட்டணத்தை மானியமாக வழங்கினார்.
ii) டே மற்றும் கோகன் ஆகிய இருவரும் புனித ஜார்ஜ் கோட்டை கட்டியதற்கு பொறுப்பானவர்கள்.
iii) 1969ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.

அ) i மட்டும்
ஆ) 1 மற்றும் ii
இ) ii மற்றும் iii
ஈ) iii மட்டும்
விடை:
அ) (i) மட்டும்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 3.
கூற்று : ஆங்கிலேயர்கள் தங்கள் மாற்று தலைநகரங்களை மலைப்பாங்கான பகுதிகளில் அமைத்தனர்
காரணம் : அவர்கள் இந்தியாவில் கோடைக்காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்.

அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி.
இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை .
விடை:
இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
நகர்ப்புற பகுதி என்றால் என்ன?
விடை:
ஒரு நகர்ப்புற பகுதி என்பது அதிக மக்கள் தொகை அடர்த்தியோடு உணவு உற்பத்தியில்லாத தொழில்களில் ஈடுபடுவதும் நன்கு கட்டமைக்கப்பட்ட சூழலில் வாழ்வதும் ஆகும்.

Question 2.
மலைப்பிரதேசங்கள் காலனித்துவ நகர்ப்புற வளர்ச்சியில் தனித்துவமான அம்சமாக இருந்தன. ஏன்?
விடை:

  • குளிர்ந்த கால நிலையிலிருந்து வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கோடை காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்.
  • அவர்களுக்கு இந்திய மலைகளின் குளிர்ந்த காலநிலை பாதுகாப்பானதாக மற்றும் நன்மை அளிப்பதாக இருந்தது.
  • இது வெப்பமான வானிலையிலிருந்தும் தொற்று நோயிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தது. எனவே அவர்கள் மலைப்பிரதேசங்களில் குடியேற ஆரம்பித்தனர்.

Question 3.
மாகாண நகரங்கள் மூன்றின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • மதராஸ்
  • பம்பாய் , கல்கத்தா

Question 4.
19ஆம் நூற்றாண்டில் நகரமயமாக்கலின் புதிய போக்குக்கு ஏதேனும் நான்கு காரணங்களைக் கூறுக.
விடை:

  • சூயஸ் கால்வாய் திறப்பு
  • நீராவிப் போக்குவரத்து அறிமுகம்
  • ரயில்வே சாலைகள் அமைத்தல்
  • தொழிற்சாலைகள் வளர்ச்சி

Question 5.
இராணுவக் குடியிருப்பு நகரங்கள் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
விடை:

  • ஆங்கிலேயர்கள் இராணுவக்குடியிருப்புகளை ஏற்படுத்தினர்.
  • இராணுவக்குடியிருப்புகள் முற்றிலும் புதிய நகர்ப்புற மையங்களாக இருந்தன.
  • இந்த பகுதிகளில் இராணுவ வீரர்கள் வசித்தனர்.
  • மேலும் இப்பகுதிகள் படிப்படியாக நகரங்களாக வளர்ந்தன.
    எடுத்துக்காட்டு: கான்பூர், லாகூர்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 6.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது மதராஸ் மாகாணம் உள்ளடக்கிய பகுதிகள் யாவை?
விடை:
சென்னை மாகாணம் என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் தெற்குப் பகுதியில் பெரிய நிலப்பகுதிகளை உள்ளடக்கி தற்போதைய தமிழ்நாடு, லட்சத்தீவு, வடக்கு கேரளா, ராயலசீமா, கடலோர ஆந்திரா, கர்நாடக மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஒரிசாவின் பல்வேறு மாவட்டங்களைக் கொண்டிருந்தது.

VII. விரிவான விடையளி

Question 1.
காலனித்துவ நகர்ப்புற வளர்ச்சியைப் பற்றி விளக்குக.
விடை:
கிழக்கு மற்றும் மேற்குக் கடலோரப் பகுதிகளிலுள்ள கல்கத்தா, மதராஸ் மற்றும் பம்பாய் போன்ற இடங்களில் பிரிட்டிஷ் புதிய வர்த்தக மையங்களை உருவாக்கியது.

இந்நகரங்களை வலுப்படுத்தினர்.

இவை அனைத்தும் முன்னர் மீன்பிடித்தல் மற்றும் நெசவுத் தொழில் செய்யும் கிராமங்களாகும்.

இங்கு ஆங்கிலேயர்கள் வீடுகள், கடைகள் மற்றும் தேவாலயங்களைக் கட்டினர். மேலும் வணிக மற்றும் நிர்வாகத் தலைமையகத்தையும் அமைத்தனர்.

1757ஆம் ஆண்டு பிளாசிப்போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் படிப்படியாக அரசியல் ஆதிக்கம் பெற்றனர். ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் வர்த்தகம் விரிவடைந்தது.

பின்னர் கல்கத்தா, பம்பாய் மற்றும் மதராஸ் ஆகியவை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மாகாண நகரங்களாக முக்கியத்துவம் பெற்றன.

சூயஸ் கால்வாய் திறப்பு, நீராவிப் போக்குவரத்து அறிமுகம், ரயில்வே சாலைகள் அமைத்தல், கால்வாய்கள், துறைமுகங்கள், தொழிற்சாலைகள் வளர்ச்சி, நிலக்கரிச் சுரங்கம், தேயிலைத் தோட்டம், வங்கிப் பணி, கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீடு வளர்ச்சியினால் நகரமாக்கலில் புதிய போக்கு தொடங்கியது.

வர்த்தக பிணைப்புகளில் ஏற்பட்ட மாற்றம் நகர்ப்புற மையங்களின் வளர்ச்சியில் பிரதிபலித்தது.

இவ்வாறுதோன்றிய நகர்ப்புறமையங்கள் துறைமுக நகரங்கள், இராணுவக்குடியிருப்பு நகரங்கள், மலைவாழிடங்கள், இரயில்வே நகரங்கள் என நான்கு வகையாக வகைப்படுத்தப்பட்டன.

எடுத்துக்காட்டுகள் :
துறைமுக நகரங்கள் : சென்னை , கல்கத்தா மற்றும் பம்பாய்.
இராணுவக் குடியிருப்பு நகரங்கள் : கான்பூர் மற்றும் லாகூர்
மலைவாழிடங்கள் : டார்ஜிலிங், டேராடூன், சிம்லா, கொடைக்கானல் மற்றும் உதக மண்டலம்.
இரயில்வே நகரங்கள் : சென்னை , பம்பாய், கல்கத்தா.

Question 2.
மதராஸின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைப் பற்றி எடுத்துரைக்கவும்.
விடை:

  • ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழு கி.பி. 1600இல் தொடங்கப்பட்டது.
  • பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்குக் கடற்கரையில் சூரத்தில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
  • ஆங்கிலேயர்கள் கிழக்குக் கடற்கரையிலும் தங்களுக்கு ஒரு துறைமுகம் வேண்டும் என விரும்பினர்.
  • சில முயற்சிகளுக்குப் பிறகு ‘ஆங்கிலேயர்கள் மசூலிப்பட்டினத்தில் ஒரு தொழிற்சாலையைக் கட்டும் உரிமையைப் பெற்றனர். இது பருவாக்காற்று பாதிப்பிலிருந்து நன்கு பாதுகாக்கப்பட்டது.
  • ஆனால் மசூலிப்பட்டினம் பஞ்சத்தின் பிடியில் சிக்கியதால், அவ்விடத்தில் ஆங்கிலேயரின் வர்த்தகம் செழிக்க வில்லை.
  • பின்னர் ஆங்கில வணிகர்கள் புதிய தளத்தைத் தேடினர்.
  • இறுதியில் மதராசப்பட்டிணத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
  • அந்த இடம் தொழிற்சாலை அமைப்பதற்கு ஏற்ற இடம் என்பதை பிரான்சிஸ் டே கண்டறிந்தார்.
  • சந்திரகிரி அரசரின் பிரதிநிதியான தமர்லா வெங்கடபதி அவர்களால் அதிகார பூர்வமான மானியமாக நிலம் வழங்கப்பட்டது.
  • அந்த இடம் கூவம் நதிக்கும் எழும்பூருக்கும் இடையில் அமைந்திருந்தது.
  • 1939ஆம் ஆண்டில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரான்சிஸ் டே என்பவரால் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்படி மதராசபட்டிணத்தில் ஒரு கோட்டையை அமைப்பதற்கும், வணிகத்தளத்துடன் கூடிய தொழிற்சாலை அமைப்பதற்கும் அனுமதி கிடைத்தது.
  • இக்கோட்டைக் குடியிருப்பு புனித ஜார்ஜ் குடியிருப்பு எனப் பெயர்பெற்றது. இது வெள்ளைநகரம் என அழைக்கப்பட்டது.
  • இதன் அருகில் உள்ள கிராமங்களில் மக்கள் வசித்த பகுதி கருப்பு நகரம் என அழைக்கப்பட்டது.
  • வெள்ளை நகரம் மற்றும் கருப்பு நகரம் ஆகியவை இணைந்து மதராஸ் என அழைக்கப்பட்டன.

Question 3.
இந்தியா பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது. எப்படி?
விடை:

  • ஆங்கிலேயர்கள் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள் நகரமயமாக்கலுக்கு எதிரானதாக இருந்தது.
  • பின்னர் அவர்களின் கொள்கைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை விரைவாக ஒரு காலனித்துவப் பொருளாதாரமாக மாற்றுவதற்கும் நகரங்களின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தன.
  • பிரிட்டிஷாரின் ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தகத்தின் விளைவாக இந்திய உற்பத்தித் தொழில்கள் அழிக்கப்பட்டன.
  • உற்பத்தித் தொழில்களின் மொத்த அழிவின் விளைவாக லட்சக்கணக்கான கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் நசித்துப்போயினர்.
  • இந்தியாவின் நகர்ப்புற கைவினைத் தொழில்களில் திடீர் சரிவு ஏற்பட்டது.
  • இந்தியப் பொருட்களுக்கான சந்தைகள் குறைந்தன.
  • பழைய உற்பத்தி நகரங்களான டாக்கா, மூர்ஷிதாபாத், சூரத் மற்றும் லக்னோ போன்றவை தங்களது முக்கியத்துவத்தை இழந்தன.
  • இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் கடுமையான போட்டியினால் இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிற்துறையும் செயலிழந்து போனது.
  • அதிகப்படியான இறக்குமதிவரி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பிற கட்டுப்பாடுகளின் காரணமாக இந்தியப் பொருட்கள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் இறக்குமதி செய்யப்படுவது குறையலாயிற்று. இவ்வாறு இந்தியா பிரிட்டனின் வேளாண்மைக் குடியேற்றமாக மாறியது.

VIII. செயல்திட்டம் மற்றும் செயல்பாடுகள்

Question 1.
ஒரு புகைப்படத்தொகுப்பை உருவாக்கவும் சென்னை உருவாகுதல்’ (தொடக்க காலத்திலிருந்து தற்போது வரை).

8th Social Science Guide ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பின்வருவனவற்றுள் உற்பத்தி நகரமல்லாதது எது?
அ) டாக்கா
ஆ) சூரத்
இ) கல்கத்தா
ஈ) மூர்ஷிதாபாத்
விடை:
இ) கல்கத்தா

Question 2.
பொருந்தாததைக் கண்டுபிடி
அ) கல்கத்தா
ஆ) பம்பாய்
இ) மதராஸ்
‘ஈ) லக்னோ
விடை:
ஈ) லக்னோ

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 3.
கல்கத்தாவில் ஆங்கிலக் குடியேற்றம் நிறுவப்பட்ட ஆண்டு.
அ) 1693
ஆ) 1661
இ) 1690
ஈ) 1702
விடை:
இ) 1690

Question 4.
வில்லியம் கோட்டை நிறுவப்பட்ட இடம்.
அ) கல்கத்தா
ஆ) மதராஸ்
இ) டெல்லி
ஈ) பம்பாய்
விடை:
அ) கல்கத்தா

Question 5.
1935ஆம் ஆண்டு இந்திய அரசுச்சட்டம்
அ) மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது
ஆ) மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்தியது
இ) மாகாண சுயாட்சியை ஒழித்தது
ஈ) கல்வி மீதான வரியை நீக்கியது
விடை:
ஆ) மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்தியது

Question 6.
பின்வருவனவற்றில் எந்த துறைமுகம் கிழக்குக் கடற்கரையில் இல்லை ?
அ) சூரத்
ஆ) மசூலிப்பட்டினம்
இ) கல்கத்தா
ஈ) சென்னை
விடை:
அ) சூரத்

Question 7.
பின்வருவனவற்றில் எந்ததுறைமுகம்பருவக்காற்றுபாதிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தது?
அ) சென்னை
ஆ) மசூலிப்பட்டினம்
இ) மும்பை
ஈ) சூரத்
விடை:
ஆ) மசூலிப்பட்டினம்

Question 8.
டல்ஹௌசி சதுக்கம் எங்குள்ளது?
அ) சென்னை
ஆ) பம்பாய்
இ) கல்கத்தா
ஈ) டெல்லி
விடை:
இ) கல்கத்தா

Question 9.
ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையகத்தை சூரத்திலிருந்து ……………….. மாற்றியது.
அ) சென்னைக்கு
ஆ) பம்பாய்க்கு
இ) கல்கத்தாவுக்கு
ஈ) டெல்லிக்கு
விடை:
ஆ) பம்பாய்க்கு

Question 10.
இந்தியாவில் ஆங்கிலேயரின் முதல் தொழிற்கூடம் அமைக்கப்பட்ட இடம்.
அ) சென்னை
ஆ) பம்பாய்
இ) கல்கத்தா
ஈ) சூரத்
விடை:
ஈ) சூரத்

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு …………….
விடை:
1757

Question 2.
இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டு …………………
விடை:
1947

Question 3.
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்ட ஆண்டு ………………..
விடை:
1600

Question 4.
தற்போது புனித …………… கோட்டை தமிழக அரசின் அதிகார மையமாக விளங்குகிறது.
விடை:
ஜார்ஜ்

Question 5.
வெள்ளை நகரம் மற்றும் கறுப்பு நகரம் இணைந்து ……….. என்றழைக்கப்பட்டது.
விடை:
மதராஸ்

Question 6.
டார்ஜிலிங் பகுதியானது …………….. ஆட்சியாளர்களிடமிருந்து 1835இல் கைப்பற்றப்பட்டது.
விடை:
சிக்கிம்

Question 7.
உள்ளாட்சி பற்றிய ரிப்பன் பிரபுவின் தீர்மானம் …………………. என கருதப்படுகிறது.
விடை:
உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம்

Question 8.
1690ஆம் ஆண்டு ஆங்கில வணிகர்கள் குடியேற்றத்தை நிறுவிய இடம் ……………
விடை:
சுதநூதி

Question 9.
மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறு பெயரிடப்பட்ட ஆண்டு …………………
விடை:
1969

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 10.
மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்ட நாள் …………….
விடை:
ஜீலை 17, 1996

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 2

IV. சரியா / தவறா என்று குறிப்பிடுக

Question 1.
டெல்லிக்கு மாற்றுத்தலைநகராக டார்ஜிலிங் செயல்பட்டது
விடை:
தவறு

Question 2.
இராணுவத்தினர் இராணுவக்குடியிருப்பு நகரங்களில் வசித்தனர்.
விடை:
சரி

Question 3.
ஆரம்பத்தில் மதராஸ், பம்பாய் மற்றும் கல்கத்தா ஆகிய நகரங்களில் மீன்பிடிக்கும் தொழில் நடைபெற்றது.
விடை:
சரி

Question 4.
மலைப்பிரதேசங்கள் சுகாதார மையமாக வளர்ச்சி பெற்றன.
விடை:
சரி

Question 5.
இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டதால், கிராமங்களிலுள்ள பாரம்பரிய தொழில்கள் அடியோடு நசிந்தன.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
கூற்று : ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய உற்பத்தித் தொழில்கள் நன்கு வளர்ச்சியடைந்தன.
காரணம் : அத்தொழில்களுக்கு ஆங்கிலேயரின் ஆதரவு இருந்தது.

அ) கூற்று சரி மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றினை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை.
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றினை விளக்கவில்லை .
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை

Question 2.
கூற்று : 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகரமயமாக்கலில் புதிய போக்கு தொடங்கியது.
காரணம் : சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது மற்றும் நீராவிப் போக்குவரத்து அறிமுகம் செய்யப்பட்டது.
அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறானவை
ஆ) கூற்று தவறு, காரணம் சரி.
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் சரியானவை.
விடை:
ஈ) கூற்று மற்றும் காரணம் சரியானவை

Question 3.
பின்வரும் எந்த அறிக்கை / அறிக்கைகள் உண்மையற்றவை?
i) பழங்காலத்தில் சென்னை கிராமங்களின் தொகுப்பாக இருந்தது
ii) பழங்காலத்தில் மன்னர்களின் அரண்மனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நகரங்கள் தோன்றின.
iii) இரயில்வே நகரங்கள் 1835இல் அறிமுகப்படுத்தப்பட்டன.

அ) i மட்டும்
ஆ) 1 மற்றும் ii
இ) ii மற்றும் iii
ஈ) iii மட்டும்
விடை:
ஈ) (iii) மட்டும்

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
பண்டைய கால நகரங்கள் சிலவற்றினைக் குறிப்பிடுக.
விடை:

  • ஹரப்பா
  • மெகாஞ்சதாரோ
  • வாரணாசி
  • அலகாபாத்
  • மதுரை

Question 2.
இடைக்கால நகரங்கள் சிலவற்றினைக் குறிப்பிடுக.
விடை:

  • டெல்லி
  • ஹைதராபாத்
  • ஜெய்ப்பூர்
  • லக்னோ
  • ஆக்ரா
  • நாக்பூர்

Question 3.
வட இந்திய மற்றும் தென்னிந்திய மலை வாழிடங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
விடை:
வட இந்தியா: டார்ஜிலிங், ஸ்ரீநகர், சிம்லா மற்றும் நைனிடால்
தென் இந்தியா: உதக மண்டலம், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு.

Question 4.
இரயில்வேயின் அறிமுகம் எவ்வாறு இந்தியாவில் பாரம்பரிய தொழில்களைப் பாதித்தது?
விடை:
இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக வர்த்தகப் பாதைகள் திசை திருப்பப்பட்டு ஒவ்வொரு இரயில் நிலையமும் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் மையமாக மாறியது.

பிரிட்டிஷ் உற்பத்தியாளர்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சென்றடைய இரயில்வே வழிவகுத்ததால் நாட்டின் கிராமங்களிலுள்ள பாரம்பரிய தொழில்கள் அடியோடு நசிந்தன.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 5.
மாகாண நகரங்களின் நிர்வாகம் பற்றி சிறு குறிப்பு தருக.
விடை:

  • தலைமை ஆளுநர் மாகாண நகரங்களில் நீதிபதிகளை நியமித்தனர்.
  • மூன்று மாகாண நகரங்களில் அரசாங்க அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • அது பெரிய மாநகராட்சிகள் போல தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், சுதந்திரமான வலிமை பெற்ற நிர்வாக அமைப்பு, கணக்குகளை சரிபார்க்கப் போதுமான ஏற்பாடுகள், பாதுகாப்பு போன்ற அம்சங்களைக் கொண்டிருந்தது.

Question 6.
பம்பாய் எவ்வாறு ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிடைத்தது?
விடை:

  • பம்பாய் 1534ல் இருந்து போர்ச்சுக்கீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
  • இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் போர்ச்சுக்கீசிய மன்னரின் சதோதரியை திருமணம் செய்து கொண்டதற்கு பம்பாய் பகுதியை 1661இல் சீதனமாகப் பெற்றார்.
  • மன்னர் அப்பகுதியை கிழக்கிந்திய வணிகக்குழுவிற்கு குத்தகைக்கு அளித்தார்.
  • கிழக்கிந்தியக் கம்பெனி மேற்கிந்தியாவில் பம்பாயை அதன் முக்கியத்துறைமுகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. இதனால் பம்பாய் நகரம் வளரத் தொடங்கியது.
  • 1687ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையகத்தை சூரத்திலிருந்து பம்பாய்க்கு மாற்றியது.

VII. பின்வரும் கேள்விகளுக்கு விரிவான விடை தருக.

Question 1.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் உள்ளாட்சி மன்றத்தின் வளர்ச்சி பற்றி விவரிக்க.
விடை:
இந்தியாவில் உள்ளாட்சி மன்றத்தின் வளர்ச்சியினை மூன்று வெவ்வேறு நிலைகளில் அறியலாம். முதல் கட்டம் (1688 – 1882) இந்தியாவில் 1688இல் மதராஸ் மாநகராட்சி உருவானது. ஒரு மேயரும் நியமிக்கப்பட்டார். மதராஸ் மாநகராட்சி உருவானதற்கு கம்பெனி இயக்குனர்களில் ஒருவரான சர் ஜோசியா சைல்டு காரணமாயிருந்தார்.

1793ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் மூன்று மாகாண நகரங்களில் மாநகராட்சிகள் ஏற்படக் காரணமாயிற்று. வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள், அயோத்தி மற்றும் பம்பாயில் 1850 ஆண்டு சட்டத்தின் படி நகராட்சிகள் அமைக்கப்பட்டது.

மேயோ பிரபுவின் 1870ஆம் ஆண்டு தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கியது.

இரண்டாம் கட்டம் (1882 – 1920)

  • உள்ளாட்சி அரசாங்கம் தொடர்பான ரிப்பன் பிரபுவின் தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக விளங்கியது.
  • எனவே ரிப்பன் பிரபு இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை என அழைக்கப்பட்டார்.
  • அவரது தீர்மானம் ‘உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம்’ எனவும் கருதப்படுகிறது.

மூன்றாம் கட்டம் (1920 – 19250)

  • 1919ஆம் ஆண்டு இந்திய அரசுச்சட்டம் மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
  • 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச்சட்டம் மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்தியது.
  • 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் சுதந்திர இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உள்ளாட்சி அரசாங்கத்தை உருவாக்கி வடிவமைப்பதற்கான சிறப்பான வாய்ப்பை இந்தியா பெற்றது.
  • Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 5

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 4