Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

8th Social Science Guide இந்தியாவில் கல்வி வளர்ச்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
வேதம் என்ற சொல் ____________ லிருந்து வந்தது.
அ) சமஸ்கிருதம்
ஆ) இலத்தீன்
இ) பிராகிருதம்
ஈ) பாலி
விடை:
அ) சமஸ்கிருதம்

Question 2.
பின்வருவனவற்றுள் எது பண்டைய காலத்தில் கற்றலுக்கான முக்கிய மையமாக இருந்தது?
அ) குருகுலம்
ஆ) விகாரங்கள்
இ) பள்ளிகள்
ஈ) இவையனைத்தும்
விடை:
ஈ) இவையனைத்தும்

Question 3.
இந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
அ) உத்திரப்பிரதேசம்
ஆ) மகாராஷ்டிரம்
இ) பீகார்
ஈ) பஞ்சாப்
விடை:
இ) பீகார்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Question 4.
தட்சசீலத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய தளமாக எப்போது அறிவித்தது?
அ) 1970
ஆ) 1975
இ) 1980
ஈ) 1985
விடை:
இ) 1980

Question 5.
இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது?
அ) இங்கிலாந்து
ஆ) டென்மார்க்
இ) பீகார்
ஈ) போர்ச்சுக்கல்
விடை:
ஈ) போர்ச்சுக்கல்

Question 6.
இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் மானியமாக 1 இலட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டினைச் செய்த பட்டய சட்டம் எது?
அ) 1813 ஆம் ஆண்டு பட்டய சட்டம்
ஆ) 1833 ஆம் ஆண்டு பட்டய சட்டம்
இ) 1853 ஆம் ஆண்டு பட்டய சட்டம்
ஈ) 1858 ஆம் ஆண்டுச் சட்டம்
விடை:
அ) 1813 ஆம் ஆண்டு பட்டய சட்டம்

Question 7.
பின்வரும் குழுக்களில் எந்தக் குழு பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப் பரிந்துரைத்தது?
அ) சார்ஜண்ட் அறிக்கை , 1944
ஆ) இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948
இ) கோத்தாரி கல்விக்குழு, 1964
ஈ) தேசியக் கல்விக் கொள்கை, 1968
விடை:
ஆ) இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948

Question 8.
இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
அ) 1992
ஆ) 2009
இ) 1986
ஈ) 1968
விடை:
இ) 1986

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வேதம் என்ற சொல்லின் பொருள் ……………..
விடை:
அறிவு

Question 2.
தட்சசீல இடிபாடுகளை கண்டறிந்தவர் ………….
விடை:
அலெக்சாண்டர் கன்னிங்காம்

Question 3.
டில்லியில் மதரஸாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் ………… ஆவார்,
விடை:
(இல்துத்மிஷ்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Question 4.
புதிய கல்விக் கொள்கை திருத்தப்பட்ட ஆண்டு ……………
விடை:
1992

Question 5.
2009ஆம் ஆண்டு இலவசக் கட்டாய கல்வி சட்டத்தின் விதிகளை அமல்படுத்துகின்ற முதன்மையான அமைப்பு ………….. ஆகும்.
விடை:
அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)

Question 6.
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு …………
விடை:
1956

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியோரின் குறிப்புகள் மருத்துவத்தைக் கற்றுக்கொள்ள ஆதாரங்களாக இருந்தன.
விடை:
சரி

Question 2.
கோயில்கள் கற்றல் மையங்களாக திகழ்ந்ததோடு அறிவைப் பெருக்கிகொள்ளும் இடமாகவும் இருந்தது.
விடை:
சரி

Question 3.
கல்வியை ஊக்குவிப்பதில் அரசர்களும், சமூகமும் தீவிர அக்கறை காட்டியதாக ஜாதகக் கதைகள் குறிப்பிடுகின்றன.
விடை:
சரி

Question 4.
இடைக்கால இந்தியாவில் பெண் கல்வி நடைமுறையில் இல்லை.
விடை:
தவறு

Question 5.
RMSA திட்டமானது பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்டது.
விடை:
தவறு

V. பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு.

Question 1.
i) நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி. (பொ.ஆ) ஐந்தாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது.
ii) பண்டைய இந்தியாவில் மாணவர்களை தேர்ந்தெடுப்பது முதல் அவர்களின் பாடத்திட்டத்தினை வடிவமைப்பது வரை அனைத்து அம்சங்களிலும் ஆசிரியர்கள் முழுமையான சுயாட்சி கொண்டிருந்தனர்.
iii) பண்டைய காலத்தில் ஆசிரியர்கள் கணக்காயர் என்று அழைக்கப்பட்டனர்.
iv) சோழர்கள் காலத்தில் புகழ்பெற்ற கல்லூரியாக காந்தளூர் சாலை இருந்தது.

அ) 1 மற்றும் ii சரி
ஆ) ii மற்றும் iv சரி
இ) iii மற்றும் iv சரி
ஈ) i, ii மற்றும் iii சரி
விடை:
ஈ) i, ii மற்றும் iii சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Question 2.
சரியான இணையைக் கண்டுபிடி.
அ) மக்தப்கள் – இடைநிலைப் பள்ளி
ஆ) 1835 ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு – ஆங்கிலக் கல்வி
இ) கரும்பலகைத் திட்டம் – இடைநிலைக் கல்வி குழு
ஈ) சாலபோகம் – கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்
விடை:
ஆ) 1835 ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு – ஆங்கிலக் கல்வி

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
குருகுலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக.
விடை:
குருகுலத்தின் முக்கியத்துவம் :

  • குருகுலங்களில் கற்பித்தல் வாய் வழியாகவே இருந்தது. கற்பிக்கப்பட்டவைகளை மாணவர்கள் நினைவிலும் ஆழ்சிந்தனையிலும் வைத்திருந்தனர்.
  • பல குருகுலங்கள் முனிவர்களின் பெயரர்லேயே அழைக்கப்பட்டன.
  • நூற்றுக்கணக்கான மாணவர்கள் காட்டில் அமைதியான சூழலில் அமைந்த குருகுலங்களில், ஒன்றாகத் தங்கி கற்றுக் கொண்டனர்.
  • குருவின் குடும்பமானது வீட்டுப்பள்ளி (அல்லது) ஆசிரமமாக செயல்பட்டது. தன்னைச் சுற்றி இருந்த மாணவர்களுக்கு குருவால் கல்வி வழங்கப்பட்டது. மாணவர்கள் குடும்ப உறுப்பினர் போல் வந்து தங்கி கல்வி பயின்றனர்.

Question 2.
பண்டைய இந்தியாவில் உருவான மிகவும் குறிப்பிடத்தக்க பல்கலைக்கழகங்களின் பெயர்களை எழுதுக.
விடை:
பண்டைய இந்தியாவில் உருவான புகழ்மிகு பல்கலைக் கழகங்கள் :

  • தட்சசீலம்
  • நாளந்தா வல்லபி
  • விக்கிரம சீலா
  • ஓடண்டாபுரி
  • ஜகத்தாலா

Question 3.
தட்சசீலம் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
விடை:
தட்சசீலம் :

  • தட்சசீலம் பண்டைய இந்திய நகரமாக இருந்தது. தற்போது இது வடமேற்கு பாகிஸ்தானில் உள்ளது.
  • உலக பாரம்பரியத் தளமாக 1980 ல் யுனெஸ்கோ அறிவித்த இப்பகுதி ஒரு முக்கியமான தொல்பொருள் ஆராய்ச்சிப் பகுதி.
  • சாணக்கியர் இப்பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து தனது அர்த்தசாஸ்திரத்தை தொகுத்தார்.
  • அலெக்சாண்டர் கன்னிங்காம் (தொல்பொருள் ஆராய்ச்சியாளர்) 19ம் நூற்றாண்டின் மத்தியில் பல்கலைக்கழக இடிபாடுகளை கண்டுபிடித்தார்.

Question 4.
சோழர் காலத்தில் தழைத்தோங்கிய கல்வி நிலையங்களை குறிப்பிடுக.
விடை:
சோழர் காலத்தில் தழைத்தோங்கிய கல்வி நிலையங்கள் :

  • இராஜராஜன் சதுர்வேதி மங்கலம் புகழ்பெற்ற வேதக் கல்லூரியின் இருப்பிடம் (எண்ணாயிரம் – முந்தைய தென்னாற்காடு மாவட்டம்).
  • திருபுவனையில் செழித்தோங்கிய வேதக்கல்லூரி (பாண்டிச்சேரி).
  • திருவிடைக்காளை கல்வெட்டு குறிப்பிடும் நூலகம்.
  • திருவாடுதுறைக் கல்வெட்டு குறிப்பிடும் (வீரராஜேந்திரன்) மருத்துவப் பள்ளி.

Question 5.
SSA மற்றும் RMSA விரிவாக்கம் தருக.
விடை:
SSA மற்றும் RMSA விரிவாக்கம் :

  • SSA – அனைவருக்கும் கல்வி இயக்கம்.
  • RMSA -அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம். வரலாறு –

Question 6.
கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) பற்றி நீவிர் அறிவதென்ன?
விடை:
கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) :
கல்வி உரிமைச் சட்டமானது (RTE) 6 முதல் 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க வழி செய்கிறது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் குழந்தைகளின் உரிமையான இலவச மற்றும் கட்டாய கல்வி (RTE – 2009) சட்ட விதிகளை அமல்படுத்துவதற்கான முதன்மை அமைப்பாக தற்போது செயல்படுகிறது.

VII. விரிவான விடையளி

Question 1.
பண்டையகால இந்தியாவின் கல்வி பற்றி அறிய உதவும் ஆதாரங்கள் யாவை?
விடை:
பண்டையகால இந்தியக்கல்வி பற்றி அறிய உதவும் ஆதாரங்கள்.

  • நமது பண்டைய கல்வி முறை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவானது.
  • பாணினி, ஆர்யபட்டா, காத்யாயனா, பதாஞ்சலி ஆகியோரின் எழுத்துக்களும் சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியோரின் மருத்துவ குறிப்புகளும் கற்றலுக்கான ஆதாரங்களாக இருந்தன.
  • வரலாறு, தர்க்கம், பொருள் விளக்கம், கட்டிடக்கலை, அரசியல், விவசாயம், வர்த்தகம், வணிகம், கால்நடை வளர்ப்பு, வில்வித்தை போன்ற பல்வேறு துறைகள் கற்பிக்கப்பட்டன.
  • ஒரு முக்கியமான பாடத்திட்டமாக உடற்கல்வியும் இருந்தது. மாணவர்கள் குழு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயல்களில் பங்கேற்றனர்.
  • குருவும் அவரது மாணவர்களும் கற்றலின் அனைத்து அம்சங்களிலும் வல்லுநராவதற்கு இணைந்து பணியாற்றினர்.
  • மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்கு இலக்கிய விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. கற்றலில் மேம்பட்ட நிலையில் உள்ள மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு வழிகாட்டினர்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Question 2.
ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கல்வி பற்றி ஒரு பத்தி எழுதுக.
விடை:
ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கல்வி :
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் கல்வியை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம்.

ஆங்கிலேய ஆட்சியின் தொடக்கம் முதல் 1813 வரையிலான காலம் :

  • ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி கல்வியில் அலட்சியம் மற்றும் குறுக்கீடு இன்மை என்ற கொள்கையைப் பின்பற்றியது.
  • கம்பெனியின் 1813 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பட்டயச் சட்டம் இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை மிகக் குறைந்த அளவில் ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது.
  • சமயப்பரப்புக் குழு அல்லாதவர்களான இராஜா ராம்மோகன்ராய் (வங்காளம்), பச்சையப்பர் (மதராஸ்), பிரேசர் (டெல்லி) போன்றோர் கல்விக்காக தங்கள் பங்களிப்பைச் செய்தனர்.

1813 முதல் 1853 வரையிலான.
கல்விக் கொள்கை, பயிற்றுமொழி, கல்வியைப் பரப்பும் முறை ஆகியன கருத்து வேறுபாடுகள் கொண்ட பிரச்சனைகள்.

கீழ்த்திசை வாதிகள் கீழ்த்திசை மொழிகளைப் பாதுகாக்கவும், சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளை பயிற்று மொழியாக்கவும் விரும்பினர். ஆங்கிலச் சார்பு கோட்பாட்டு வாதிகள் கீழ்த்திசை வாதிகள் கொள்கைகளை எதிர்த்து ஆங்கில மொழி மூலம் மேற்கத்திய அறிவை பரப்புவதை ஆதரித்தனர். மூன்றாவது பிரிவினர் பயிற்று மொழியாக இந்திய மொழிகளை பயன்படுத்துவதில் நம்பிக்கை கொண்டவர்கள்.

1835 ன் மெக்காலே – வின் குறிப்பினால் இந்த கருத்து வேறுபாடுகள் ஓய்ந்தன.

1854 முதல் 1920 வரையிலான காலம் :

  • ஆங்கிலேயரின் செல்வாக்கு மிக்க கல்வியின், அகில இந்தியக் கல்விக் கொள்கையின் காலம் என இக்காலம் அழைக்கப்படுகிறது.
  • இது 1854 ம் ஆண்டு சர் சார்லஸ் வுட் கல்வி அறிக்கையுடன் தொடங்குகிறது. (ஆங்கிலக் கல்வியின் மகா சாசனம்)

1921 முதல் 1947 வரையிலான காலம் :

  • இக்காலக்கட்டம் மாகாணங்களின் சுயாட்சிக் காலமாகும்.
  • நாடு முழுவதும் கல்வியின் முன்னேற்றத்திற்கான புதிய சகாப்தத்தை 1935ம் ஆண்டு சட்டம் உருவாக்கியது. இது மாகாணங்களின் அமைச்சர்களின் நிலையை வலுப்படுத்தியது.
  • இரண்டாம் உலகப்போருக்குப் பின் சார்ஜண்ட் அறிக்கை (1944) தயாரிக்கப்பட்டது. இது சமகால கல்வியின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Question 3.
தேசியக் கல்விக் கொள்கை பற்றி விவரி.
விடை:
விடுதலைக்குப் பின், 1968ம் ஆண்டின் முதல் தேசியக் கல்விக் கொள்கையானது இந்தியக் கல்வி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இது தேச முன்னேற்றத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துதலை நோக்கமாகக் கொண்டது.

இந்திய அரசு 1986ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையினை அறிமுகப்படுத்தியது. இதன் நோக்கம் ஒரு நிலையான சமுதாயத்தை மேம்பாட்டுடன் கூடிய துடிப்பான சமுதாயமாக மாற்றுவதாகும்.

இப்புதிய கல்விக் கொள்கை நாட்டில் விளிம்பு நிலை மக்களுக்கான சம வாய்ப்புகள் மற்றும் உதவித் தொகைகள், வயது வந்தோர் கல்வி, திறந்த நிலைப் பல்கலைக் கழகங்கள் மூலம் இந்தியாவில் ஏற்றத் தாழ்வுகளை நீக்குதலை வலியுறுத்தியது.

தொடக்கக் கல்வியில் குழந்தைகளை மையமாகக் கொண்ட அணுகு முறைக்கு அழைப்பு விடுத்ததுடன், கரும்பலகைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.

1992ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையானது மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது. இடைநிலைக் கல்வி நிலையில் மதிப்பீட்டு முறைகளை ஒழுங்குப்படுத்துதல், தேசியக் கலைத்திட்டத்தை வடிவமைத்தல், பணியிடைக் கல்வி, வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தியது.

Question 4.
சோழர் காலத்தில் கல்வியின் நிலையைப் பற்றி விரிவாக எழுதுக.
விடை:
சோழர்களின் காலத்தில் தமிழ் வழிக் கல்வியானது கோயில் மற்றும் சமயத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது. மக்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது.

கலைத்திட்டமும் பாடத்திட்டமும் தத்துவத்தின் அடிப்படையைக் கொண்டிருந்தது.

சோழர்கால கல்வெட்டுக்களிலிருந்து ஆசிரியர்களின் தகுதிகள், கற்பித்தல் முறைகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் பள்ளிகளுக்கு அளித்த நிலங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது..

இராஜராஜன் சதுர்வேதி மங்கலம் புகழ்பெற்ற வேதக் கல்லூரியின் இருப்பிடம் (எண்ணாயிரம்

முந்தைய தென்னாற்காடு மாவட்டம்) – திருபுவனையில் செழித்தோங்கிய வேதக்கல்லூரி (பாண்டிச்சேரி) – திருவிடைக்காளை கல்வெட்டு குறிப்பிடும் நூலகம். – திருவாடுதுறைக் கல்வெட்டு குறிப்பிடும் (வீரராஜேந்திரன்) மருத்துவப் பள்ளி.

VIII. உயர் சிந்தனை வினா

பொது தொடக்கக் கல்வியில் முதன்மைத் திட்டமான அனைவருக்கும் கல்வி இயக்கம் எவ்வாறு இலக்கை அடைந்துள்ளது?
விடை:
பொது தொடக்கக் கல்வியில் முதன்மைத் திட்டமான அனைவருக்கும் கல்வி இயக்கம் அடைந்தள்ள இலக்கு :

அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) அனைத்து குழந்தைகளும் தொடக்கக் கல்வியைப் பெறுவதற்காக 2000 – 01 ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய அரசின் முதன்மைத் திட்டமாகும்.

குழந்தைகளின் உரிமையான இலவச மற்றும் கட்டாய கல்வி (RTE – 2009) சட்ட விதிகளை அமுல்படுத்துவதற்கான முதன்மை அமைப்பாக இது தற்போது செயல்பட்டு வருகிறது.

கல்வி உரிமைச் சட்டமானது (RTE) 6 முதல் 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க வழி செய்கிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) பள்ளிகள் தொடர்பான பல்வேறு வகையான புதுமைகளையும், செயல்பாடுகளையும் துவக்கி வைத்துள்ளது.

மதிய உணவு வழங்குதல், மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல், பள்ளி மேலாண்மைக் குழு அமைத்தல், வகுப்பறைக்கான கற்றல் – கற்பித்தல் உபகரணங்களை வழங்குதல் ஆகியன சில முக்கிய செயல்பாடுகளாகும்.

X. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
பண்டைக்காலக் கல்வி மையங்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு ஒன்றினை தயார் செய்க.

Question 2.
நாளந்தா, தட்சசீலம் ஆகிய இடங்களின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கண்டுபிடித்து அதற்கு விளக்கக் காட்சி (Powerpoint) தயார் செய்க.

8th Social Science Guide இந்தியாவில் கல்வி வளர்ச்சி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
காந்தியடிகளின் அடிப்படைக் கல்வித் திட்டத்தின் அச்சாணி __________
அ) இந்தியக் கருத்தியல்
ஆ) கலாச்சாரம்
இ) அகிம்சை
ஈ) மேற்கத்திய அறிவு
விடை:
இ) அகிம்சை

Question 2.
__________ ல் இந்திய அரசு கோத்தாரி கல்விக் குழுவை நியமித்தது.
அ) 1964
ஆ) 1968
இ) 1972
ஈ) 1974
விடை:
அ) 1964

Question 3.
1976 ஆம் ஆண்டு டிசம்பர் வரை கல்வித்துறை ___________ பட்டியலில் இருந்தது.
அ) பொது
ஆ) மாநில
இ) மத்திய
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) மாநில

Question 4.
கல்வி உரிமைச் சட்டம் ___________ அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய கல்வியை வழங்க வழி செய்கிறது.
அ) 2005
ஆ) 2006
இ) 2008
ஈ) 2009
விடை:
ஈ) 2009

Question 5.
_________ பல்கலைக்கழகம் ஆங்கில ஆட்சியின் போது தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகம்.
அ) பாரதியார்
ஆ) அண்ணாமலை
இ) சென்னை
ஈ) மதுரை காமராஜர்
விடை:
இ) சென்னை

Question 6. 1964-65ல் இடைநிலைக் கல்வி அளவில் ___________ அறிமுகப்படுத்தப்பட்டது.
அ) இலவசக்கல்வி
ஆ) மேற்கத்திய கல்வி
இ) மதச்சார்பு கல்வி
ஈ) சமஸ்கிருதகல்வி
விடை:
அ) இலவசக்கல்வி

Question 7.
_____________ ல் தொடங்கப்பட்ட கல்லூரியில் முதலில் பட்டங்கள் வழங்கப்பட்டன.
அ) பம்பாய்
ஆ) கொச்சி
இ) கல்கத்தா
ஈ) கோவா
விடை:
ஈ) கோவா

Question 8.
____________ இந்தியாவில் பெண்கல்வி பரவலாகக் காணப்பட்டது.
அ) பண்டைய கால
ஆ) இடைக்கால
இ) ஆங்கிலேயர்
ஈ) நவீன கால
விடை:
ஆ) இடைக்கால

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பண்டைய இந்தியாவில் …………. மற்றும் ……………… கல்வி இரண்டுமே இருந்தன.
விடை:
முறைசாரா, முறையான

Question 2.
குருவின் குடும்பமானது வீட்டுப்பள்ளி அல்லது ……………. செயல்பட்டது.
விடை:
ஆசிரமமாக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Question 3.
ஜாதகக் கதைகள் தந்த அறிஞர்கள் ……………….. மற்றும் …………………
விடை:
யுவான்சுவாங், இட்சிங்

Question 4.
இடைக்கால இந்தியாவில் கல்விமுறையானது …………. கட்டுப்பாட்டில் இருந்தது.
விடை:
உலேமா

Question 5.
…………………. கொச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார்.
விடை:
பிரான்சிஸ் சேவியர்

Question 6.
1813 ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் இந்தியாவில் கல்வியை மேம்படுத்த ஆண்டு தோறும் ……………… தொகையை வழங்க ஏற்பாடு செய்தது.
விடை:
ஒரு இலட்சம் ரூபாய்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி 2

IV. சரியா தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
பண்டைய இந்தியாவில் முறையான மற்றும் முறைசாரா கல்வி இரண்டுமே இருந்தன.
விடை:
சரி

Question 2.
பண்டைய இந்திய நகரமான தட்சசீலம் தற்போது பங்களாதேஷில் உள்ளது.
விடை:
தவறு

Question 3.
இந்தியத் துணைக்கண்டத்தில் இஸ்லாமிய கல்வியை அறிமுகப்படுத்தியதன் மூலம் இடைக்காலம் ஒரு மாற்றத்தைக் கண்டது.
விடை:
சரி

Question 4.
இந்தியாவில் நவீன கல்வி முறையை தொடங்கிய முதல் ஐரோப்பியர் ஆங்கிலேயர்களாவர்.
விடை:
தவறு

Question 5.
1929ல் உலகளாவிய பெருமந்தம் ஏற்பட்டது
விடை:
சரி

Question 6.
சமக்ர சிக்ஷாவானது SSA மற்றும் RMSA ஆகிய திட்டங்களை உள்ளடக்கியது.
விடை:
சரி

V. பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு.

Question 1.
i) கம்பெனியின் 1813 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பட்டயச் சட்டம் இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது.
ii) கீழ்த்திசை வாதிகள் ஆங்கிலசார்பு கோட்பாட்டு வாதிகளால் எதிர்க்கப்பட்டனர்.
iii) மெக்காலேவின் குறிப்பினால் ஒவ்வொரு மாகாணமும் அதற்கேற்ற கல்விக் கொள்கையைப் பின்பற்ற அனுமதிக்கப்படவில்லை .
iv) 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் மாகாண கல்வி அமைச்சர்களின் நிலையை பலவீனப்படுத்தியது.

அ) 1 மற்றும் ii சரி
ஆ) ii மற்றும் iv சரி
இ) iii மற்றும் iv சரி
ஈ) i, ii மற்றும் iii சரி
விடை:
அ) i மற்றும் ii சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Question 2.
தவறான இணையை கண்டுபிடி.
அ) பட்டயச் சட்டம் – 1831
ஆ) மெக்காலேவின் குறிப்பு – 1835
இ) உடல்கல்வி அறிக்கை – 1854
ஈ) சார்ஜண்ட் அறிக்கை – 1944
விடை:
அ) பட்டயச் சட்டம் – 1831

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளி.

Question 1.
கல்வி என்றால் என்ன?
விடை:
கல்வி :
கல்வி என்பது அறிவு, திறன்கள் மற்றும் மதிப்புகளைப் பெறுதலும், பகிர்தலுமான ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்.

கல்வி ஒரு முற்போக்கான சமுதாயத்தின் அடித்தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.

Question 2.
பண்டைய நமது கல்வி முறை வலியுறுத்திய மதிப்பீடுகள் யாவை?
விடை:
வலியுறுத்தப்பட்ட மதிப்பீடுகள் :

  • பணிவு உண்மை
  • ஒழுக்கம்
  • சுயச்சார்பு
  • அனைத்து படைப்புகளின் மீதும் மரியாதை

Question 3.
இந்தியாவில் உயர்கல்வி கற்றுக் கொள்வதற்காக மடாலயங்களுக்கும் விகாரங்களுக்கும் எந்தெந்த நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்தனர்?
விடை:
உயர்கல்வி பெற வந்த வெளிநாட்டு மாணவர்கள் :

  • சீனா
  • கொரியா
  • திபெத்
  • பர்மா
  • சிலோன்
  • ஜாவா
  • நேபாளம்

Question 4.
பண்டையக் கல்வி முறையில் ஆசிரியரின் பங்கு என்ன?
விடை:
பண்டையக் கல்வி முறையில் ஆசிரியரின் பங்கு :

  • அனைத்து அம்சங்களிலும் ஆசிரியர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. (மாணவர் தேர்வு முதல் பாடத்திட்ட வடிவமைப்பு வரை)
  • மாணவர் திறனில் ஆசிரியர் திருப்தியடையும் போது மாணவர் கல்வி நிறைவடைந்ததாக கருதப்பட்டது.
  • விவாதங்கள் மற்றும் கலந்தாலோசித்தல் ஆகியன கற்பித்தலின் அடிப்படை வழிமுறைகள்.
  • மாணவர் கற்றல் ஆர்வத்திற்கேற்ப போதித்தார். அவர் விருப்பத்திற்கேற்ப மாணவர்களைச் சேர்த்துக் கொண்டார்.

Question 5.
இந்திய இஸ்லாமிய பாரம்பரியங்களுக்கிடையே சிறந்த தொடர்பு இருந்ததால் மேம்பாடு அடைந்த துறைகளைப் பெயரிடு.
விடை:
மேம்பாடடைந்த துறைகள் :

  • இறையியல் சமயம்
  • தத்துவம், நுண்கலை
  • ஓவியம்
  • கட்டடக்கலை
  • கணிதம், மருத்துவம்
  • வானியல்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Question 6.
“மெக்காலே – வின் குறிப்பு ” குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:
மெக்காலே குறிப்புகள் :

  • ஆங்கிலக் கல்வியின் இரண்டாம் கட்டத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவை 1935 ஆம் ஆண்டின் மெக்காலே குறிப்பினால் ஓரளவு ஓய்ந்தது.
  • உயர்கல்வியில் ஆங்கிலக் கல்வியானது உயர்வகுப்பினருக்காக ஊக்கப்படுத்தப்பட்டது.
  • ஒவ்வொரு மாகாணமும் அதற்கேற்ற கல்விக் கொள்கையைப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டன.
  • 1854ல் சர் சார்லஸ் வுட் அறிக்கை தொடங்கும் வரை இந்த கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தன.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
பண்டைய இந்தியாவின் கற்றலுக்கான ஆதாரங்களை விவரி.
விடை:
பண்டைய இந்தியாவின் கற்றலுக்கான ஆதாரங்கள் :

  • பாணினி ஆர்யபட்டா, காத்யாயனா, பதாஞ்சலி ஆகியோரின் எழுத்துக்களும் சரகர், சுஸ்ருதர் ஆகியோரின் மருத்துவ குறிப்புகளும் கற்றலுக்கான ஆதாரங்கள்.
  • வரலாறு, தர்க்கம், பொருள் விளக்கம், கட்டிடக்கலை, அரசியல், விவசாயம், வர்த்தகம், வணிகம், கால்நடை வளர்ப்பு மற்றும் வில்வித்தை போன்ற பல்வேறு துறைகள் கற்பிக்கப்பட்டன.
  • உடற்கல்வியும் ஒரு முக்கியமான பாடத்திட்டமாக இருந்தது. மாணவர்கள் குழு விளையாட்டு மற்றும் பொழுது போக்கு செயல்பாடுகளில் பங்கேற்றனர்.
  • மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்காக இலக்கிய விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. கற்றலில் மேம்பட்ட மாணவர் இளைய மாணவர்களுக்கு வழிகாட்டினர்.
  • கற்றலின் அனைத்து அம்சங்களிலும் வல்லுநராவதற்கு குருக்களும் அவரது மாணவர்களும் இணைந்து பணியாற்றினர்.

Question 2.
நவீன கல்வி முறையில் கிறித்துவ சமயப் பரப்புக் குழுவின் பங்கு குறித்து எழுதுக.
விடை:
நவீன கல்வி முறை – கிறித்துவ சமயப் பரப்புக் குழுவின் பங்கு :

  • ஐரோப்பியர்கள் நிலங்களைப் பெற்று கோட்டைகளைக்கட்டிய பின்னர் தங்கள் கலாச்சாரத்தையும், சமயத்தையும் இந்திய மக்களிடையே பரப்ப விரும்பினர்.
  • மக்களுக்கேற்றவாறு கல்வி நிலையங்களைத் தொடங்கி கல்வி வழங்கினால் தான் நிர்வாகத்தையும் சமய கருத்துக்களையும் நன்கு புரிந்து கொள்வார்கள் என்று கருதினார்கள்.
  • போர்ச்சுகீசியர்கள் :
    • இந்தியாவில் நவீன கல்வி முறையை தொடங்கிய முதல் ஐரோப்பியர்.
    • பிரான்சிஸ் சேவியர் (இயேசு சங்கம்) கொச்சியில் ஒரு பல்கலைக் கழகத்தை தொடங்கினார்.
    • பட்டங்கள் வழங்கிய முதல் கல்லூரி கோவாவில் உள்ளது (1575)
    • ஜான் கிர்ளாண்டர் கிறித்தவர் அல்லாத குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகப்படுத்திய முன்னோடி.
    • தரங்கம்பாடியில், 1812ல் டாக்டர் C.S.ஜான் 20 இலவச பள்ளிகளை நிறுவினார்.
  • பிரெஞ்சுக்காரர்கள் :
    • இந்திய ஆசிரியர்களைக் கொண்டு வட்டார மொழியில் கல்வி கற்பிக்க இந்தியர்களுக்கான கல்வி நிறுவனங்களை துவங்கினர்.
    • பிரெஞ்சு மொழிகள் கற்பிக்க மேல்நிலைப்பள்ளிகள் துவங்கப்பட்டன.
    • சீகன் பால்கு மற்றும் புளுட்சோ (ஜெர்மன் பிஷப்புகள்) திருவிதாங்கூரில் பள்ளிகள் மற்றும் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி தொடங்கினர்.
  • ஆங்கிலேயர்கள் :
    • ஆங்கிலக்கல்வி வழங்குவதற்காக (கி.பி. 1600 ஆங்கில கிழக்கிந்திய வருகைக்குப்பின்) கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன.
    • சமஸ்கிருத கல்லூரிகள் மதராஸ் மற்றும் பனாரஸ் ஆகிய இடங்களில் துவங்கப்பட்டன.
    • டாக்டர் மிடில்டன் (கல்கத்தா முதல் பேராயர்) மிஷனரி கல்லூரியை தொடங்கினார். இது பின்னர் பிஷப் கல்லூரி என அழைக்கப்பட்டது.
    • பம்பாயில், மவுண்ட் ஸ்டுவர்ட் எல்பின்ஸ்ட ன் என்பவரின் ஆதரவாளர்கள் அவர் 1827ல் ஓய்வு பெற்ற பின் எல்பின்ஸ்டன் கல்லூரியை நிறுவினர்.
    • சமயபரப்புக் குழுவினரின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட பல கல்வி நிறுவனங்கள் மேற்கத்திய கல்வியையும் இந்தியக் கல்வியையும் வழங்கின.

Question 3.
சுதந்திர இந்தியாவின் கல்வி வளர்ச்சி குறித்து சுருக்கமாக எழுதுக.
விடை:
சுதந்திர இந்தியாவின் கல்வி வளர்ச்சி :
ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கிய சுதந்திர இந்தியக் கல்வி வரலாறு இந்தியர்களுக்கான ஒரு புதிய நம்பிக்கை, ஒரு புதிய பார்வை, ஒரு புதிய எதிர்காலத்தை கொண்டு வந்தது.

  • 1948 ஆம் ஆண்டு பல்கலைக்கழக கல்வி குறித்த அறிக்கை தயாரிக்க டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக்குழு நியமிக்கப்பட்டது.
  • டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக் குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி உயர்கல்வியின் தரத்தை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக்குழு அமைக்கப்பட்டது.
  • 1952-53ல் அமைக்கப்பட்ட இடைநிலைக் கல்விக் குழு கல்வித்துறையில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வாகும்.
  • இடைநிலைக் கல்விக்குழு கல்வியில் புதிய அமைப்பு முறை, பாடப் புத்தகங்களின் தரம், பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளில் முன்னேற்றங்களை பரிந்துரைத்தது.
  • 1964ல் இந்திய அரசு டாக்டர் D.S.கோத்தாரி தலைமையில் ஒரு கல்விக்குழுவை நியமித்தது.
  • கோத்தாரி கல்விக் குழுவின் முக்கிய பரிந்துரைகள்
  • 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்கக்கல்வி. – நாடு முழுவதும் ஒரே மாதிரியான 10+2+3 கல்வி அமைப்பு.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Question 4.
தமிழகத்தின் நவீன கால கல்வி – விவரி.
விடை:
தமிழகத்தில் கல்வி வளர்ச்சி – (நவீன காலம்) :

  • பெர்னாண்டஸ் (மதுரை- வீரப்ப நாயக்கர் காலம்) ஒரு தொடக்கப் பள்ளியை நிறுவினார்.
  • மராத்திய ஆட்சியாளர் இரண்டாம் சரபோஜி பண்டைய ஆவணங்களை சேகரித்து தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாத்தார்.
  • தஞ்சாவூரில் அவர் தேவநாகரி எழுத்து முறையிலான அச்சுக்கூடத்தை அமைத்தார்.
  • பிரதான் நாட்டின் உயர்கல்வியின் முக்கிய மையமாக விளங்கியது.
  • சர் தாமஸ் மன்றோ (மதராஸ் மாகாண ஆளுநர் 1820 – 1827) மேற்கத்திய கல்வியை அறிமுகப்படுத்தினார்.
  • மன்றோவின் கல்விக்குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு முதன்மைப் பள்ளிகளை (மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் பள்ளிகள்) உருவாக்க பரிந்துரைத்தது.
  • வில்லியம் பெண்டிங் பிரபு (1835) மேற்கத்திய கல்வி அறிமுகத்திற்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்.
  • சர் சார்லஸ் வுட் கல்வி அறிக்கை (1854) மதராஸ் மாகாணத்தில் பொது வழிகாட்டும் துறையை (DPI) ஏற்படுத்தியது.
  • அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி மானியம் வழங்கப்பட்டன.
  • ஆங்கிலேய ஆட்சியின் போது தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம் (1857)
  • உள்ளூர் வாரியச் சட்டம் (1882) புதிய பள்ளிகளைத் திறக்கவும் அரசாங்கத்திடமிருந்து மானியங்களைப் பெறவும் அதிகாரம் வழங்கியது.
  • ஆங்கில மொழிப்பாடம் தவிர அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்பிக்கப்பட்டன. (1938)
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் அமைக்கப்பட்டது (1929).

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி 3