Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 4 மக்களின் புரட்சி Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 4 மக்களின் புரட்சி

8th Social Science Guide மக்களின் புரட்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1519
ஆ) 1520
இ) 1529
ஈ) 1530
விடை:
இ) 1529

Question 2.
பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்
அ) பூலித்தேவன்
ஆ) யூசுப்கான்
இ) கட்டபொம்மன்
ஈ) மருது சகோதரர்கள்
விடை:
அ) பூலித்தேவன்

Question 3.
காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?
அ) மதுரை
ஆ) திருநெல்வேலி
இ) இராமநாதபுரம்
ஈ) தூத்துக்குடி
விடை:
இ) இராமநாதபுரம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

Question 4.
வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?
அ) பாஞ்சாலங்குறிச்சி
ஆ) சிவகங்கை
இ) திருப்பத்தூர்
ஈ) கயத்தாறு
விடை:
ஈ) கயத்தாறு

Question 5.
வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?
அ) நாகலாபுரம்
ஆ) சிவகிரி
இ) சிவகங்கை
ஈ) விருப்பாச்சி
விடை:
இ) சிவகங்கை

Question 6.
‘திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது?
அ) மருது பாண்டியர்கள்
ஆ) கிருஷ்ணப்ப நாயக்கர்
இ) வேலு நாச்சியார்
ஈ) தீரன் சின்னமலை
விடை:
அ) மருது பாண்டியர்கள்

Question 7.
கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?
அ) திண்டுக்கல்
ஆ) நாகலாபுரம்
இ) புதுக்கோட்டை
ஈ) ஓடாநிலை
விடை:
ஈ) ஓடாநிலை

Question 8.
ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?
அ) மத்திய இந்தியா
ஆ) டெல்லி
இ) கான்பூர்
ஈ) பரெய்லி
விடை:
அ) மத்திய இந்தியா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
கிழக்குப்பகுதி பாளையங்கள் ___________ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது
விடை:
கட்டபொம்மன்

Question 2.
விஸ்வநாத நாயக்கர் அவரது அமைச்சர் ___________ உடன் கலந்தாலோசித்து பாளையக்கார முறையை ஏற்படுத்தினார்
விடை:
அரியநாதர்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

Question 3.
கட்டபொம்மனின் முன்னோர்கள் _____________ பகுதியைச் சார்ந்தவர்கள்
விடை:
ஆந்திரப்

Question 4.
____________ தமிழர்களால் ‘வீர மங்கை’ எனவும் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்பட்டார்
விடை:
வேலு நாச்சியார்

Question 5.
____________ ‘சிவகங்கையின் சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்
விடை:
சின்ன மருது

Question 6.
1857 ஆம் ஆண்டு புரட்சியை ___________ என்பவர் முதல் இந்திய சுதந்திரப் போர்’ என விவரிக்கிறார்.
விடை:
வி.டி. சவார்க்கர்

III. பொருத்துக.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி 1

IV. சரியா /தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர்
விடை:
சரி

Question 2.
சிவசுப்பிரமணியம் என்பவர் மருது பாண்டியர்களின் அமைச்சர் ஆவார்
விடை:
தவறு

Question 3.
1799 அக்டோபர் 17ஆம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்
விடை:
சரி

Question 4.
திப்பு சுல்தானின் மூத்த மகன் பதேக் ஹைதர் ஆவார்
விடை:
சரி

V. அ) பின்வரும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையைக் குறிப்பிடவும்

I. வேலூர் புரட்சி 1801ம் ஆண்டு ஏற்பட்டது.
II. நான்காம் மைசூர் போருக்குப்பின் திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர்
III. வேலூர் புரட்சியின் போது வில்லியம் பெண்டிங் சென்னையின் ஆளுநராக இருந்தார்
IV. ஆங்கிலேயருக்கு எதிரான வேலூர் கலகத்தின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும்.

அ) I & II சரி
ஆ) II & IV சரி
இ) II & III சரி
ஈ) I, II, & IV சரி
விடை:
இ) II & III சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

ஆ) தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்.
1. மருது பாண்டியர் – எட்டயபுரம்
2. கோபால நாயக்கர் – திண்டுக்கல்
3. கேரளவர்மன் – மலபார்
4. துண்டாஜி – மைசூர்
விடை:
1. மருது பாண்டியர் – எட்டயபுரம்

இ) மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
கட்டப்பொம்மன், ஊமைத்துரை, செவத்தையா, திப்பு சுல்தான்.
விடை:
திப்பு சுல்தான்

VI. பின்வரும் வினாக்களுக்கு ஒரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
பாளையக்காரர்கள் என்பவர் யார்? சிலரின் பெயரைக் கூறுக.
விடை:

  • பாளையக்காரர்கள் என்பவர் ஒரு பிரதேசம் அல்லது பாளையத்தின் உரிமையாளர்கள் ஆவர்.
  • பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார்.

Question 2.
பாளையக்கார புரட்சியில் வேலு நாச்சியாரின் பங்கு என்ன?
விடை:

  • சிவகங்கையின் இராணியான வேலு நாச்சியார் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை மருது சகோதரர்கள் உதவியுடன் எதிர்த்து சிவகங்கையை கைப்பற்றினர்.
  • காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட முதல் இந்திய பெண்ணரசி ஆவார்.

Question 3.
தென்னிந்திய புரட்சியில் பாளையக்கார கூட்டமைப்பின் தலைவர்கள் யாவர்?
விடை:
மருது சகோதரர்கள், கோபாலநாயக்கர், கேரளவர்மன் கிருஷ்ணப்பநாயக்கர் மற்றும் துண்டாஜி ஆவர்.

Question 4.
‘திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் முக்கியத்துவம் யாது?
விடை:

  • ஜீன் 1801ல் மருது சகோதரர்கள் வெளியிட்ட பிரகடனம் ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்கும் முதல் அழைப்பு ஆகும்.
  • இந்த அறிவிப்பின் நகல் திருச்சி கோட்டை சுவரிலும் ஸ்ரீரங்கம் வைஷ்ணவகோவில் சுவரிலும் ஒட்டப்பட்டது.

Question 5.
வேலூர் கலகத்தின் விளைவுகளை எழுதுக?
விடை:

  • புதிய முறைகள் மற்றும் சீருடை ஒழுங்கு முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
  • திப்புவின் குடும்பத்தினர் வேலூரிலிருந்து கல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டனர்.
  • வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் பணி நீக்கப்பட்டார்.

Question 6.
1857ஆம் ஆண்டு புரட்சிக்கான உடனடிக் காரணம் என்ன?
விடை:

  • இராணுவத்தில் என்பீல்டு ரகதுப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பன்றியின் கொழுப்பும், பசுவின் கொழுப்பும் தடவப்பட்ட துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்த இந்து, முஸ்லீம் வீரர்கள் மறுப்பு தெரிவித்தது புரட்சிக்கு உடனடி காரணமாயிற்று.

VII. விரிவான விடையளி.

Question 1.
புலித்தேவரைப் பற்றி நீவிர் அறிந்ததை எழுதுக?
விடை:

  • இந்தியாவில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்த பூலித்தேவர் நெற்கட்டும் செவல் பாளையக்காரர்.
  • ஆற்காடு நவாப் முகமது அலிக்கும் ஆங்கிலேயருக்கும் கப்பம் கட்ட மறுத்த பூலித்தேவரை எதிர்த்து படையெடுத்த கூட்டுப்படையை தோற்கடித்தார்.
  • ஆங்கிலேயருடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய மன்னர் பூலித்தேவர் ஆவார்.
  • 1759ல் யூசுப்கான் தலைமையிலான நவாப் படைகளால் தோற்கடிக்கப்பட்டார்.
  • 1764ல் நெற்கட்டும் செவ்வலை பூலித்தேவர் கைப்பற்றினார்.
  • 1767ல் கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டு தலை மறைவாக வாழ்ந்து இறந்து போனார்.
  • துணிச்சலான அவரது போராட்டம் தென்னிந்திய வரலாற்றில் நிலைத்து நின்றது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

Question 2.
தீரன் சின்னமலைக்கும் ஆங்கிலேயருக்கும் இடையேயான போராட்டாத்திற்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளை விவரி?
விடை:

  • பிரெஞ்சு இராணுவத்தின் நவீன போர்முறை பயிற்சிப் பெற்ற தீரன் சின்னமலை திப்பு சுல்தானுடனிருந்து ஆங்கிலேயரை வென்றார்.
  • திப்பு சுல்தான் இறப்பிற்கு பின் 1800ல் ஆங்கிலேயரைக்தாக்க மராத்தியர் மற்றும் மருது சகோதரர்கள் உதவியை நாடினார்.
  • ஆங்கிலப் படைகள் அக்கூட்டுப்படைகளை தடுத்ததால் தீரன் சின்னமலை தோற்கடிக்கப்பட்டார்.
  • தொடர்ந்து நடைபெற்ற காவேரி, ஓடாநிலை, மற்றும் அரச்சலூர் போர்களில் கொரில்லா போர் முறையில் ஆங்கிலேயரைத் தோற்கடித்தார்.
  • சின்னமலையின் சமையற்காரர் நல்லப்பன் என்பவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு 1805ல் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

Question 3.
1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்களை எழுதுக?
விடை:

  • ஆங்கிலேயரின் பொருளாதார சுரண்டல் புரட்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
  • வாரிசு இழப்புக் கொள்கை, துணைப்படைத்திட்டம் மூலம் முறையற்ற வகையில் அயோத்தியை இணைத்து ஆகியன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
  • மதமாற்ற நடவடிக்கைகள் சமய தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய சமய அறிஞர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.
  • சதி ஒழிப்பு, பெண்சிசுக் கொலை ஒழிப்பு விதவை மறுமணம் மற்றும் பெண் கல்வி ஆதரவு ஆகிய ஆங்கிலேயர் நடவடிக்கைகள் இந்திய கலாச்சாரத்தில் தலையிடுவதாக கருதினர்.
  • இந்திய சிப்பாய்கள் ஆங்கில அதிகாரிகளால் தாழ்வாக கருதப்பட்டதோடு குறைவான ஊதியம் கொடுக்கப்பட்டது. உயர் பதவிகள் ஆங்கில வீரர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டது.

Question 4.
1857 ஆம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணங்களை எழுதுக.
விடை:

  • சரியான ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு பொதுவான திட்டம், மையப்படுத்தப்பட்ட தலைமை, நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவை புரட்சியாளர்களிடையே இல்லை.
  • இராணி லட்சுமிபாய், நானாசாகிப் மற்றும் தாந்தியா தோபே தைரியமானவர்கள் ஆனால் சிறந்த தளபதிகளாகவோ, ஆங்கிலேயர்களுக்கு இணையானவர்களோ இல்லை.
  • வங்காளம், பம்பாய், சென்னை மேற்கு பஞ்சாப் மற்றும் இராஜபுதனம் புரட்சியில் பங்கு கொள்ளவில்லை.
  • நவீன கல்வி கற்ற இந்தியர்கள் புரட்சியை ஆதரிக்கவில்லை .
  • சீக்கியர்கள், ஆப்கானியர்கள் மற்றும் கூர்க்கப்படைப்பிரிவினர் ஆங்கிலேயருக்கு ஆதரவு அளித்தனர்.
  • ஆயுதங்கள், தளபதிகள், ஒருங்கிணைப்பை ஆங்கிலேயர் பெற்றிருந்தனர்.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
1857ஆம் ஆண்டு புரட்சியில் தலைவர்களிடையே ஒருபொதுவான குறிக்கோள் இல்லை – நிரூபி.
விடை:
1857 ஆம் ஆண்டு பெரும்புரட்சியின் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், புரட்சியில் ஈடுபட்ட தலைவர்களிடையே பொதுவான ஒரே நோக்கமும் குறிக்கோளும் இல்லை என்பது வெளிப்படையான உண்மை.

ஆங்கிலேயரை எதிர்ப்பது என்பதைத் தவிர வேறு பொதுவான குறிக்கோள் ஒன்றும் இல்லை.

பொதுவாக ஒரு இடத்தைக் கைப்பற்றியதும், அடுத்து என்ன செய்வது என்பதை அறியாமல் கொள்ளையடிப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தனர்.

தலைவர்களிடையே ஒருமித்த குறிக்கோள் இல்லை. உதாரணமாக இஸ்லாமியர்கள் முகலாய அரசை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் இந்துக்கள் மராத்திய செல்வாக்கை மீண்டும் நிறுவ முயற்சித்தனர்.

சில இந்தியத் தலைவர்கள் புரட்சியில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தனர்.

இவ்வாறு தலைவர்களிடையே ஒரே நோக்கமும் குறிக்கோளும் இல்லாதது புரட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணமாயிற்று.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
பாளையக்காரர்கள் படங்களை சேகரித்து ஒரு செருகேட்டினை (Album) தயார் செய்க.

8th Social Science Guide மக்களின் புரட்சி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு
அ) 1764
ஆ) 1765
இ) 1757
ஈ) 1759
விடை:
இ) 1757

Question 2.
கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டவர்
அ) பூலித்தேவர்
ஆ) கட்டபொம்மன்
இ) வேலுநாச்சியார்
ஈ) தீரன் சின்னமலை
விடை:
அ) பூலித்தேவர்

Question 3.
1792ல் ஏற்பட்ட உடன்படிக்கை
அ) மைசூர் உடன்படிக்கை
ஆ) மலபார் உடன்படிக்கை
இ) மதராஸ் உடன்படிக்கை
ஈ) கர்நாடக உடன்படிக்கை
விடை:
ஈ) கர்நாடக உடன்படிக்கை

Question 4.
தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் சந்திப்பு கோட்டை
அ) கயத்தாறு
ஆ) வேலூர்
இ) சங்ககிரி
ஈ) திருச்சி
விடை:
ஆ) வேலூர்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
மலாயாவின் பினாங் பின்னர் ___________ என அழைக்கப்பட்டது
விடை:
இளவரசர் தீவு

Question 2.
திப்புவின் கொடியில் ____________ உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது
விடை:
புலி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

Question 3.
1857 புரட்சியின் போது ____________ கவர்னர் ஜெனரலாக இருந்தார்
விடை:
கானிங்பிரபு

III. பொருத்துக.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி 2

IV. சரியா? தவறா?

Question 1.
மருது சகோதரர்கள் மூக்கையா பழனியப்பன் மற்றும் பொன்னாத்தாள் இவர்களின் மகன்கள்
விடை:
சரி

Question 2.
வேலூர் கோட்டையானது பெரும்பாலான ஆங்கிலேயர்களைக் கொண்டிருந்தது
விடை:
தவறு

V. கீழ்க்காணும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையை (✓) செய்யவும்

அ) I. ஆங்கிலேயர்களின் ஆட்சியை பெரும்பாலானோர் ஏற்கவில்லை.
II. பொருளாதார சுரண்டல் மற்றும் நிர்வாக புதுமைகள் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தின.
III. அயோத்தியை முறையாக இணைத்துக் கொண்டனர்.
IV. இந்திய சிப்பாய்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டது.

அ) I & III சரி
ஆ) I & II சரி
இ) III & IV சரி
ஈ) IV, & II சரி |
விடை:
ஆ) I & II சரி

ஆ) மாறுபட்ட ஒன்றை கண்டுபிடி. ‘கொங்கு நாடு – சேலம், கோம்புத்தூர், வேலூர், கரூர், மற்றும் திண்டுக்கல்
விடை:
வேலூர்

VI. குறுகிய விடையளி.

Question 1.
வேலூர் கலகத்தின் உடனடிக் காரணம் என்ன?
விடை:

  • ஜூன் 1806 ல் தளபதி அக்னியூ சிலுவை சின்னத்துடன் கூடிய புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தினார்.
  • இந்து, முஸ்லீம் வீரர்கள் எதிர்த்ததால் தண்டிக்கப்பட்டனர். இதுவே உடனடிக் காரணமாயிற்று.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

Question 2.
மங்கள்பாண்டே குறிப்பு வரைக.
விடை:

  • 1857 புரட்சியில் பாரக்பூரில் வங்காள படைப்பிரிவைச் சேர்ந்த இளம் இராணுவ வீரர் மங்கள் பாண்டே ஆவார்.
  • கொழுப்பு தடவிய தோட்டாவை தொட மறுத்து உயர் அதிகாரியை சுட்டு கொன்றதால் தூக்கிலிடப்பட்டார்.

Question 3.
1857 ம் ஆண்டு புரட்சி மிக வேகமாக பரவிய இடங்கள் யாவை?
விடை:
புரட்சி மிக வேகமாக பரவியது லக்னோ கான்பூர், ஜான்சி, பரெய்லி, பீகார், பைசாபாத், மற்றும் வட இந்தியா ஆகும்.

VII. விரிவான விடையளி.

Question 1.
வேலு நாச்சியார் பற்றி ஒரு பத்தியில் விடையளி.
விடை:

  • சிவகங்கையின் இராணி வேலு நாச்சியார் 16 வயதில் முத்து வடுகநாதருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
  • ஆங்கிலப்படை 1772ல் முத்துவடுக நாதரை காளையார் கோயில் போரில் கொன்றதால் வேலு நாச்சியார் தன் மகளுடன் கோபாலநாயக்கர் பாதுகாப்பில் வாழ்ந்தார்.
  • இக்காலகட்டத்தில் ஒரு படையை அமைத்து சகோதரர்கள் உதவியுடன் ஆங்கிலேயரை தோற்கடித்து சிவகங்கை இராணியானார்.
  • பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட முதல் இந்தியப் பெண்ணரசி ஆவார்.
  • இவர் தமிழர்களால் வீரமங்கை தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அழைக்கப்படுகிறார்.

Question 2.
1857 ம் ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை?
விடை:

  • 1857 ம் ஆண்டு புரட்சி இந்திய வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
  • இதனால் நிர்வாக மற்றும் அரசின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டது.
  • 1858 ல் விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை மூலம் இந்திய நிர்வாகம் கம்பெனியிடமிருந்து ஆங்கில அரசுக்கு மாற்றப்பட்டது.
  • இயக்குநர் குழு, கட்டுப்பாட்டு குழு கலைக்கப்பட்டு 15 உறுப்பினர்கள் கொண்ட ஒரு சபை ஏற்படுத்தப்பட்டது.)
  • இராணுவம் மாற்றியமைக்கப்பட்டு அதிகப்படியான ஆங்கிலேயர்கள் பணியிலமர்த்தப்பட்டனர்.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி 3