Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

8th Social Science Guide கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?
அ) மகல்வாரி முறை
ஆ) இரயத்துவாரி முறை
இ) ஜமீன்தாரி முறை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஈ) இவற்றில் எதுவுமில்லை

Question 2.
எந்த கவர்னர் – ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?
அ) ஹேஸ்டிங்ஸ் பிரபு
ஆ) காரன்வாலிஸ் பிரபு
இ) வெல்லெஸ்லி பிரபு
ஈ) மிண்டோ பிரபு
விடை:
ஆ) காரன்வாலிஸ் பிரபு

Question 3.
மகல்வாரி முறையில் ‘மகல்’ என்றால் என்ன?
அ) வீடு
ஆ) நிலம்
இ) கிராமம்
ஈ) அரண்மனை
விடை:
இ) கிராமம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Question 4.
மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்துகொள்ளப்பட்டது?
அ) மகாராஷ்டிரா
ஆ) மதராஸ்
இ) வங்காளம்
ஈ) பஞ்சாப்
விடை:
ஈ) பஞ்சாப்

Question 5.
கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) ஹேஸ்டிங்ஸ் பிரபு
ஆ) காரன்வாலிஸ் பிரபு
இ) வெல்லெஸ்லி பிரபு
‘ஈ) வில்லியம் பெண்டிங் பிரபு
விடை:
ஈ) வில்லியம் பெண்டிங் பிரபு

Question 6.
ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?
அ) பம்பாய்
ஆ) மதராஸ்
இ) வங்காளம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) வங்காளம்

Question 7.
இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?
அ) மகாத்மா காந்தி
ஆ) கேசப் சந்திர ராய்
இ) திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்
ஈ) சர்தார் வல்லபாய் பட்டேல்
விடை:
இ) திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்

Question 8.
பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?
அ) சர்தார் வல்லபாய் பட்டேல்
ஆ) மகாத்மா காந்தி
இ) திகம்பர் பிஸ்வாஸ்
ஈ) கேசப் சந்திர ராய்
விடை:
அ) சர்தார் வல்லபாய் பட்டேல்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
__________ என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்.
விடை:
மகல்வாரி

Question 2.
மகல்வாரி முறை __________ என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம் ஆகும்.
விடை:
ஹோல்ட் மெகன்சி

Question 3.
இண்டிகோ (அவுரி) கிளர்ச்சில் __________ ல்நடைபெற்றது.
விடை:
செப்டம்பர் 1859

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Question 4.
மாப்ளா கலகம் ___________ ல் நடைபெற்றது.
விடை:
ஆகஸ்ட் 1921

Question 5.
‘சம்பரான் விவசாயச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு _________
விடை:
மே – 1918

III. பொருத்துக.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 1

IV. சரியா /தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
வாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாண்டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்
விடை:
சரி

Question 2.
இரயத்துவாரி முறை, தாமன் மன்றோவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
சரி

Question 3.
குஜராத்தின் யூ சுப்ஷாகி என்ற பர்கானாவில் பாப்னா கலகம் ஏற்பட்டது
விடை:
தவறு

Question 4.
‘பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம் 1918ல் நிறைவேற்றப்பட்டது
விடை:
தவறு

V. கீழ்க்காணும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை (✓) செய்க

Question 1.
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தாரி முறைப் பற்றிய தவறான கூற்றாகும்.
அ) இந்த முறை 1793 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆ) ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர் ஆவர்.
இ) விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.
ஈ) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
விடை:
இ) விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்டவருவாய் நிலையாக கிடைத்தது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Question 2.
கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாய புரட்சி பற்றிய சரியான கூற்று எது?
அ) சந்தால் கலகம் வங்காளத்தில் நடைபெற்றது.
ஆ) நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.
இ) தக்காண கலகம் 1873ல் பூனாவில் உள்ள கிராமம் ஒன்றில் துவங்கியது.
ஈ) மாப்ளா கலகம் தமிழகத்தில் நடைபெற்றது.
விடை:
ஆ) நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.

VI. பின்வரும் வினாக்களுக்கு ஒரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
நிரந்தர நிலவரி திட்டத்தின் சிறப்புக்கூறுகள் ஏதேனும் இரண்டினை குறிப்பிடுக.
விடை:

  • ஆங்கில கம்பெனிக்கு வரி செலுத்தும் வரை ஜமீன்தார்கள் நில உடைமையாளர்களானார்கள்.
  • வரி வசூல் செய்யும் அரசின் முகவர்களாக செயல்பட்டனர்.

Question 2.
இரயத்துவாரி முறையின் சிறப்புக் கூறுகள் யாவை?
விடை:

  • விவசாயிகளுடன் வருவாய் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
  • நில அளவு மற்றும் விளைச்சலின் மதிப்பீடு கணக்கிடப்பட்டது.
  • விளைச்சலில் 45 லிருந்து 50% வரை வரி நிர்ணயிக்கப்பட்டது.

Question 3.
மகல்வாரி முறையின் விளைவுகளைக் கூறுக.
விடை:

  • கிராமத் தலைவர் சலுகைகளை தவறாக பயன்படுத்தினார்.
  • விவசாயிகளுக்கு இலாபம் இல்லை .
  • இது ஜமீன்தாரி முறையின் திருத்தியமைக்கப்பட்ட வடிவம், மேலும் கிராம உயர் வகுப்பினருக்கு இலாபமாக அமைந்தது.

Question 4.
1859 – 60ல் நடைபெற்ற இண்டிகோ (அவுரி) கலகத்திற்கு காரணம் என்ன?
விடை:

  • இண்டிகோ (அவுரி) வளர்க்க குத்தகை விவசாயிகளை கட்டாயப்படுத்தியது.
  • ஆள்கடத்தல், கொள்ளையடித்தல், கசையடி கொடுத்தல் எரித்தல் ஆகியவையும் 1859 – 60 ல் நடைபெற்ற இண்டிகோ கலகத்திற்கு காரணம் ஆகும்.

Question 5.
சம்பரான் சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியின் பங்கினை குறிப்பிடுக?
விடை:

  • மகாத்மா காந்தி சம்பரான் விவசாயிகளுக்கு உதவ முன்வந்தார்.
  • அரசு விசாரணைக்குழுவில் மகாத்மா காந்தியை உறுப்பினராக சேர்த்துக் கொண்டது.
  • (மே – 1918ல் சம்பரான் விவசாயத் சட்டம் நிறைவேற்றப்பட்டது)

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Question 6.
பர்தோலி சத்தியாகிரகத்தில் வல்லபாய் பட்டேலின் பங்கு பற்றி எழுதுக.
விடை:

  • 1928 ல் 30% அரசு நிலவருவாயை உயர்த்தியது.
  • பர்தோலி (குஜராத்) விவசாயிகள் உயர்த்தப்பட்ட நிலவரியை செலுத்த மறுப்பு தெரிவித்து சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் வரிகொடா இயக்கத்தில் ஈடுபட்டனர்.
  • (பெண்களும் இதில் கலந்து கொண்டனர்)

VII. விரிவான விடையளி

Question 1.
நிலையான நிலவரி திட்டத்தின் நிறை, குறைகளை விவாதிக்க.
விடை:
நிலையான நிலவரி திட்டத்தின் நிறைகள் :

  • தரிசு நிலங்கள், காடுகள் விவசாய நிலமாக்கப்பட்டது.
  • ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர்களாயினர்.
  • ஜமீன்தார்கள் நீதி வழங்குவதிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
  • ஆங்கில அரசுக்கு நம்பிக்கைக்குரியவர்களாயினர்.
  •  ஆங்கில அரசுக்கு நிலையான வருவாய் கிடைக்கச் செய்தது.

குறைகள் :

  • அரசுக்கும், விவசாயிகளுக்கும் நேரடித் தொடர்பு இல்லை.
  • விவசாயிகள் உரிகைள் மறுக்கப்பட்டு ஜமீன்தார் பொறுப்பில் விடப்பட்டனர்.
  • விவசாயிகள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.
  • ஜமீன்தார்கள் சோம்பேறிகளாகவும், ஆடம்பர பிரியர்களாகவும் மாறினர்.
  • வங்காள கிராமங்களில் ஜமீன்தார்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது.

Question 2.
ஆங்கிலேயர்களின் நிலவரி திட்டங்கள் இந்திய விவசாயிகள் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன ?
விடை:
விவசாயிகளின் மீது ஆங்கில நிலவருவாய் முறையின் தாக்கங்கள் :

  • அனைத்து வரிகளும் அதிகபட்ச வருமானம் பெறுவதாக இருந்தது. இது நில விற்பனை, விவசாய அழிவிற்கு வழிவகுத்தது.
  • விவசாயிகள் அதிக வரிச்சுமை, பஞ்சம், வறுமை கடன்சுமையால் பாதிக்கப்பட்டனர். எனவே இவர்கள் நிலம், வாங்குவோர், வட்டிக்கு பணம் தருபவர்களை தேடிச் சென்றனர். நிலத்தை வாங்கியவர்கள் செல்வந்தாராயினர்.
  • ஜமீன்தார்கள், வட்டிக்காரர்கள், வழக்கறிஞர்களால் விவசாயிகள் சுரண்டப்பட்டனர்.
  • கிராமங்களுக்கான நிலைப்புத்தன்மை அசைக்கப்பட்டன.
  • ஆங்கில பொருட்களால் இந்திய குடிசைத்தொழில்கள் மறைந்தன.
  • புதிய சட்ட அமைப்பு, பழமையான பழக்கங்களை மாற்றியது.
  • விவசாயிகளின் உழைப்பின் பலன் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் நன்மையளிப்பதாக இருந்தது.

Question 3.
மாப்ளா கிளர்ச்சி பற்றி ஒரு பத்தியில் எழுதுக.
விடை:
மாப்ளா கிளர்ச்சி : 1921

  • மாப்ளா விவசாயிகள் (கேரளா) இந்து ஜமீன்தார்கள் (ஜென்மிஸ்) ஆங்கில அரசால் அடக்கப்பட்டு சுரண்டப்பட்டனர்.
  • ஏப் – 1920 ல் நடைபெற்ற மலபார் மாநாடு புரட்சிக்கு உத்வேகம் அளித்தது.
  • இம்மாநாடு நிலக்கிழார் – குத்தகைகாரர் இடையிலுள்ள உறவை ஒழுங்குப்படுத்த சட்டம் இயற்ற கோரியது.
  • 1921 ல் கிளர்ச்சியின் ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்கள் காவல் நிலையங்கள், பொது அலுவலகங்கள், செய்தி தொடர்பு சாதனங்கள் நிலக்கிழார், வட்டிக்கடைக்காரர்களை தாக்கினர்.
  • பின்னர் அரசு தலையீட்டின் மூலம் 2337 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். 1650 பேர் காயமடைந்தனர். 45,000 க்கும் மேற்பட்டோர் சிறை பிடிக்கப்பட்டு 1921 டிசம்பரில் கிளர்ச்சி அடக்கப்பட்டது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
வரிகள் மட்டும் அல்லாமல் வேறு எந்த வகைகளில் ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகளின் நிலங்களை சுரண்டினர்.
விடை:

  • ஆங்கிலேயர்கள் இந்தியப் பொருளாதாரத்தைச் சுரண்டும் கொள்கையைப் பின்பற்றினர்.
  • அவர்கள் அறிமுகப்படுத்திய வாரிசு இழக்கும் கொள்கை இந்தியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
  • கிறிஸ்தவப் பாதரியார்கள் கிருஸ்தவ மதத்தைப் பரப்பினர்.
  • ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் சமூக பழக்கவழக்கங்களில் தலையிட்டனர்.
  • இந்திய சிப்பாய்கள் இழிவாக நடத்தப்பட்டனர்.
  • நாட்டின் பொருளாதாரச் சுரண்டலில் ஏராளமான செல்வம் வெளியேற்றப்பட்டது. இயந்திரத்தினால் செய்யப்பட்ட ஆங்கிலப் பொருட்கள் இந்தியத் தொழிற்சாலைகளைப் பெரிதும் பாதித்தது. எனவே வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டது.
  • இந்தியர்களுக்கு அரசியலிலும், இராணுவத்திலும் உயர் பதவிகள் மறுக்கப்பட்டன.
  • பாரசீக மொழிக்குப் பதிலாக ஆங்கில மொழி புகுத்தப்பட்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

IX. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
காந்தியின் அகிம்சை மற்றும் சத்தியாகிரகத்தை வடிவமைப்பதில் செல்வாக்கு பெற்றது எது என்பது குறித்து எழுதுக.

Question 2.
உனது பள்ளியில் கடந்த கால மற்றும் தற்கால விவசாயிகளுக்கிடையே காணப்படும் ஒருமித்த சிறப்புகளை விளக்கும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்க.

8th Social Science Guide கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
1765 ல் இராபர்ட் கிளைவ் வரிவசூலிக்கும் உரிமையை பெற்ற பகுதி எது?
அ) வங்காளம், பீகார், ஒரிசா
ஆ) பீகார், பஞ்சாப்
இ) வங்காளம், ஒரிசா, பாட்னா
ஈ) வங்காளம், பூனா, கேரளா
விடை:
அ) வங்காளம், பீகார், ஒரிசா

Question 2.
விவசாயிகளிடமிருந்து வரியை வசூலிக்கும் முகவர்களாக செயல்பட்டவர்கள்
அ) அரசர்கள்
ஆ) பிரபுக்கள்
இ) ஜமீன்தார்கள்
ஈ) நிலக்கிழார்கள்
விடை:
இ) ஜமீன்தார்கள்

Question 3.
ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச் சென்றது எது?
அ) இண்டிகோ கலகம்
ஆ) சந்தால் கலகம்
இ) தக்காண கலகம்
ஈ) பாப்னா கலகம்
விடை:
ஆ) சந்தால் கலகம்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
_________ என்ற செய்தித்தாள் அவுரி சாகுபடியாளர்கள் துயரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது
விடை:
இந்து தேசபக்தன்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Question 2.
1937_________ ஆட்சிக்கு வந்தபோது விவசாயிகள் நிலம் திருப்பி தரப்பட்டது
விடை:
காங்கிரஸ்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 2

IV. சரியா? தவறா?

Question 1.
காலனி ஆதிக்கத்திற்கு முன் இந்தியப் பொருளாதாரமானது நெசவுத்தொழிலை கொண்டிருந்தது.
விடை:
தவறு

Question 2.
பீகாரில் உள்ள ராஜ்மகால் குன்றுகளுக்கு அருகில் சந்தால் மக்கள் வேளாண்மை செய்து வந்தனர்.
விடை:
சரி

V. கீழ்க்காணும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையை (✓) செய்யவும்

Question 1.
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சம்பரான் சத்தியாகிரகம் பற்றிய தவறான கூற்றாகும்.
அ) பீகார் மாநிலத்தில் சட்டத்திற்கு புறம்பான அவுரி சாகுபடி செய்தனர்.
ஆ) மொத்த நிலத்தில் 20ல் 10 பங்கில் அவுரியை சாகுபடி செய்தனர்.
இ) ஐரோப்பிய தோட்டக்காரர்கள் சம்பரான் தீன்கதியா என்ற நடைமுறையின் கீழ் பிணைக்கப்பட்டிருந்தனர்.
ஈ) அரசு மகாத்மா காந்தியை விசாரணைக் குழு உறுப்பினராக சேர்த்துக் கொண்டது.
விடை:
ஆ) மொத்த நிலத்தில் 20ல் 10 பங்கில் அவுரியை சாகுபடி செய்தனர்.

VI. குறுகிய விடையளி.

Question 1.
நிலையான நிலவரி திட்டத்தின் பிற பெயர்கள் யாவை?
விடை:

  • ஜமீன்தாரி
  • ஜாகீர்தாரி
  • மல்குஜாரி
  • பிஸ்வேதாரி

Question 2.
இரயத்துவாரி முறை யாரால் எந்தப்பகுதிகளில் கொண்டு வரப்பட்டது?
விடை:

  • இரயத்துவாரி முறை 1820ல் தாமஸ்மன்றோ மற்றும் கேப்டன் ரீட் என்பவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மதராஸ். பம்பாய், அசாம்பகுதிகள் மற்றும் கூர்க் ஆகிய இந்திய மாகாணங்களில் கொண்டுவரப்பட்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Question 3.
கேடா சத்யாகிரகம் சிறு குறிப்பு வரைக.
விடை:

  • 1918ல் குஜராத்தின் கேடா மாவட்டத்தில் பஞ்சத்தால் விவசாயம் பொய்த்தது.
  • அரசு வரி செலுத்த அறிவுறுத்தியதால் உள்ளூர் விவசாயிகள் காந்தியடிகள் தலைமையில் வரிகொடா இயக்கம் தொடங்கினர்.

VII. விரிவான விடையளி.

Question 1.
விவசாயிகளின் புரட்சிகள் ஏற்பட காரணங்களை விவரி?
விடை:

  • ஆங்கில ஆட்சி இந்திய வேளாண்மையில் பல மாற்றங்களை கொண்டு வந்தது.
  • ஜமீன்தார்கள் நில உரிமையாளர்களாக மாறினர்.
  • விவசாயிகளின் உழைப்பு சுரண்டப்பட்டு, அவர்கள் வாழ்க்கை துயரமானது.
  • எனவே 19,20ம் நூற்றாண்டுகளில் ஜமீன்தார்களையும் ஆங்கிலேயர்களையும் எதிர்த்து புரட்சியில் ஈடுபட்டனர்.

Question 2.
பஞ்சாப் விவசாயிகள் இயக்கம் பற்றி விவரி?
விடை:

  • நகர்ப்புற வட்டிக்காரர்களிடமிருந்து பெற்ற கடனை திரும்ப செலுத்த இயலவில்லை.
  • வட்டிக்கடைக்காரர்களின் ஒடுக்கு முறையை தடுக்க புரட்சியில் ஈடுபட்டனர்.
  • ஆங்கில அரசு புரட்சியை விரும்பவில்லை. ஏனென்றால் இராணுவ வீரர்கள் அப்பகுதியில் தேர்வு செய்யப்பட்டனர்.
  • 1900ல்பஞ்சாப்நில உரிமைமாற்று சட்டம் நிறைவேற்றப்பட்டுமற்றபகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டது.
  • இச்சட்டப்படி மக்கள் விவசாயிகள், வட்டிக்கடைக்காரர்கள், இதர மக்கள் என பிரிக்கப்பட்டனர்.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 3
Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 4