Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

8th Social Science Guide வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
1757 ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்
அ) சுஜா – உத் – தௌலா
ஆ) சிராஜ் – உத் – தௌலா
இ) மீர்காசிம்
ஈ) திப்பு சுல்தான்
விடை:
ஆ) சிராஜ் – உத் – தௌலா

Question 2.
பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
அ) 1757
ஆ) 1764
இ) 1765
ஈ) 1775
விடை:
அ) 1757

Question 3.
பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை
அ) அலகாபாத் உடன்படிக்கை
ஆ) கர்நாடக உடன்படிக்கை
இ) அலிநகர் உடன்படிக்கை
ஈ) பாரிசு உடன்படிக்கை
விடை:
அ) அலகாபாத் உடன்படிக்கை

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 4.
பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி _________ கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) ஏதுமில்லை
விடை:
ஆ) இரண்டாம்

Question 5.
ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு ___________
அ) 1756
ஆ) 1761
இ) 1763
ஈ) 1764
விடை:
ஆ) 1761

Question 6.
மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது.
அ) பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்
ஆ) ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்
இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
ஈ) திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்
விடை:
இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்

Question 7.
மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர்
அ) இராபர் கிளைவ்
ஆ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
இ) காரன்வாலிஸ்
ஈ) வெல்லெஸ்லி
விடை:
இ) காரன்வாலிஸ்

Question 8.
ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் __________
அ) இரண்டாம் பாஜிராவ்
ஆ) தௌலத்ராவ் சிந்தியா
இ) ஷாம்பாஜி போன்ஸ்லே
ஈ) ஷாயாஜி ராவ் கெய்க்வாட்
விடை:
அ) இரண்டாம் பாஜிராவ்

Question 9.
மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா _________
அ) பாலாஜி விஸ்வநாத்
ஆ) இரண்டாம் பாஜிராவ்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) பாஜிராவ்
விடை:
ஆ) இரண்டாம் பாஜிராவ்

Question 10.
துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய சுதேச அரசு எது?
அ) அயோத்தி
ஆ) ஹைதராபாத்
இ) உதய்பூர்
ஈ) குவாலியர்
விடை:
ஆ) ஹைதராபாத்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு
விடை:
1757 – பிப்ரவரி – 9

Question 2.
சிராஜ் உத் – தௌலாவின் தலைமை படைத் தளபதி ___________
விடை:
மீர்ஜாபர்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 3.
இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம் வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் ___________
விடை:
வாரிசுரிமை பிரச்சனை

Question 4.
இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக
விடை:
டல்ஹௌசி பிரபு

Question 5.
திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் __________
விடை:
ஆர்தர் வெல்லெஸ்லி

Question 6.
திப்பு சுல்தான் இறப்புக்கு பின் _________ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது.
விடை:
மூன்றாம் கிருஷ்ண ராஜ உடையார்

Question 7.
1800 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் ____________
விடை:
வெல்லெஸ்லி பிரபு

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
அலிவர்திகான் மறைவுக்கு பின்னர் சிராஜ் – உத் – தௌலா வங்காளத்தின் அரியணை ஏறினார்.
விடை:
சரி

Question 2.
பிளாசிப் போரில் ஆங்கிலேயப் படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்.
விடை:
தவறு

Question 3.
ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது.
விடை:
தவறு

Question 4.
வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 5.
காரன் வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்.
விடை:
சரி

V. கீழ்க்கண்டவைகளுள் சரியாக பொருந்தியுள்ளது எது?

Question 1.
1. அடையாறு போர் – 1748
2. ஆம்பூர்போர் – 1754
3. வந்தவாசிப் போர் – 1760
4. ஆற்காட்டுப் போர் – 1749
விடை:
3. வந்தவாசிப் போர் – 1760

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
இருட்டறை துயரச் சம்பவம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
இருட்டறை துயரச் சம்பவம் – 1756:

  • சிராஜ் – உத் – தௌலாவின் படைவீரர்கள் 146 ஆங்கிலேயர்களை கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஓர் சிறிய காற்றுபுகாத இருட்டறையில் அடைத்தனர்.
  • மறுநாள் காலை அவர்களுள் 123- பேர் மூச்சு திணறி இறந்திருந்தனர். 23 – பேர் உயிர்பிழைத்தனர்.
  • இது வரலாற்றின் இருட்டறை துயரச் சம்பவம்’ என அழைக்கப்படுகிறது.

Question 2.
பிளாசிப் போருக்குபின் ஆங்கிலேயர்கள் பெற்ற சலுகைகள் யாவை?
விடை:

  • வங்காள கருவூலத்தின் மூலம் கிடைத்த பெரும் செல்வத்தைக் கொண்டு இராணுவத்தை பலப்படுத்தியது.
  • பிளாசிப்போரின் வெற்றி ஆங்கிலேய அரசு அதிகாரத்தை இந்தியாவில் தொடங்கி வைத்தது.
  • 2 – நூற்றாண்டுகள் ஆங்கிலேயர் ஆதிக்கம் நீடிக்கச் செய்தது.

Question 3.
பக்சார் போருக்கான காரணங்களை குறிப்பிடுக.
விடை:

  • ஆங்கிலேயர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மீர்ஜாபர் தவறியதால் அவரது மருமகன் மீர்காசிமை வங்காள நவாப் ஆக்கினார்கள்.
  • அவர் வங்காளத்தின் தலைநகரை முர்ஷிதாபாத்திலிருந்து மாங்கீர்க்கு மாற்றினார்.
  • தஸ்தக் என்றழைக்கப்படும் சுங்கவரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது மீர்காசிம் கோபமடைந்து கலகத்தில் ஈடுபட்டார்.
  • ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்ட மீர்காசிம் அயோத்தி சென்று சுஜா – உத் – தௌலா, 2 – ம் ஷா ஆலம் ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு படையை உருவாக்கினார்.

Question 4.
முதல் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள் யாவை?
விடை:
ஹைதர் அலியின் வளர்ச்சியும், பிரெஞ்சுக்காரர்களிடம் அவர் கொண்டிருந்த நட்புறவு ஆகியன கிழக்கிற்றிய கம்பெனியின் எதிர்ப்புக்கு காரணமாயின.

மராத்தியர்கள், ஹைராபாத் நிசாம் ஆங்கிலேயர்கள் இணைந்து ஹைதர் அலிக்கு எதிராக முக்கூட்டணியை ஏற்படுத்தினர் இது முதல் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள் ஆகும்.

Question 5.
மூன்றாம் மராத்திய போரின் விளைவுகள் யாவை?
விடை:

  • போர் முடிவில் மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டு, பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டது.
  • 2-ம் பாஜிராவின் பகுதிகள் பம்பாயோடு இணைக்கப்பட்டது.
  • தோற்கடிக்கப்பட்ட போன்ஸ்லே , ஹோல்கரின் மராத்திய பகுதிகளான நாக்பூர், இந்தூர் ஆகியவை ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டன.
  • மராத்திய ஓய்வூதியமாக ரூபாய் 8-லட்சம் வழங்கப்பட்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 6.
துணைப்படைத் திட்டத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக.
விடை:

  • ஹைதராபாத் – தஞ்சாவூர்
  • அயோத்தி
  • பேஷ்வா
  • போன்ஸ்லே
  • குவாலியர்
  • இந்தூர்
  • ஜெய்பூர்
  • உதய்பூர் மற்றும் ஜோத்பூர்.

VII. விரிவான விடையளி

Question 1.
இரண்டாம் கர்நாடக போர் குறித்து ஒரு கட்டுரை எழுதுக.
விடை:
காரணங்கள்: ஐதராபாத்
1748-ல் ஐதராபாத் நிஜாம் காலமானதால் அவர் மகன் நாசிர் ஜங்- க்கும், பேரன் முசாபர் ஜங்கிற்கும் வாரிசுரிமைப் போர் ஏற்பட்டது.
1) கர்நாடகா:

  • கர்நாடகத்தில் தோஸ்த் அலியின் மருமகனான சந்தாசாகிப் அன்வருதீனுக்கு எதிராக ஆற்காடு அரியணையை அடைய விரும்பினார்.
  • சந்தாசாகிப், முசாபர் ஜங் – பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினர்.
  • அன்வாருதீனும், நாசிஜங்கும் – ஆங்கிலேயர் உதவியை நாடினர்.
  • கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமைப் பிரச்சனையே இப்போருக்கு காரணமாக அமைந்தது.

2) ஆம்பூர் போர் (1749): ஆம்பூர் 1749

  • ஆண்டு 3 -ல் நடைபெற்ற போரில் பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே, சந்தா சாகிப் முசாபர்ஜங் ஆகியோரின் கூட்டுப் படையால் கர்நாடக நவாப் அன்வாருதீன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவரது மகன் திருச்சிக்கு தப்பி ஓடினார்.
  •  சந்தா சாகியை பிரெஞ்சுக்காரர்கள் நவாப் ஆக்கினர். இதற்கு ஈடாக பாண்டிச்சேரியை சுற்றியுள்ள 80 கிராமங்களை வெகுமதியாக வழங்கினார்.
  • தக்காணத்தில் பிரெஞ்சுக்காரர்களால் நாசிர்ஜங் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டதால் முசாபர் ஜங் ஜதராபாத்தின் நிஜாம் ஆனார்.

3) ஆற்காட்டுப் போர் (1751):
டியூப்போ திருச்சி கோட்டையை முற்றுகையிட ஒரு படையை அனுப்பினார். இதனால் சந்தாசாகிப் தன்னை பிரெஞ்சுப் படைகளோடு இணைத்துக் கொண்டு ஆற்காட்டை தாக்க இராபர்ட் கிளைவ் கம்பெனியிடம் அனுமதி கோரினார்.

கவர்னர் சாண்டர்ஸ் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கினார். 200 ஆங்கிலப் படையினர் 300 இந்திய படைவீரர்களுடன் கிளைவ் ஆற்காட்டை தாக்கி கைப்பற்றினார்.

லாரன்ஸ் உதவியுடன் கிளைவ் ஆரணி, காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் பிரெஞ்சுப் படைகளை தோற்கடித்தார். அதே சமயம் சந்தாசாகிப் திருச்சியில் கொலை செய்யப்பட்டார்.

அன்வாருதீனின் மகன் முகமது அலி ஆங்கிலேயரின் உதவியுடன் ஆற்காடு நவாப் ஆனார்.

டியூப்ளேக்கு பின் பிரெஞ்சு ஆளுநராக கோதேயூ ஆங்கிலேயருடன் பாண்டிச்சேரி உடன்படிக்கையை 1755 -ல் செய்து கொண்டார்.

இந்த உடன்படிக்கையின் படி இருநாடுகளும் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது போருக்கு முன் இருந்த பகுதிகளை அவரவரிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறப்பட்டது. இதன்படி ஆங்கிலேயர்கள் மேலும் வலிமை பெற்றனர்.

Question 2.
நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் பற்றி எழுதுக.
விடை:
நான்காம் ஆங்கிலேய – மைசூர் போர் (1799):
திப்பு சுல்தான் 1792 – ல் ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை மூலம் காரன்வாலிஸ் அவமரியாதை செய்ததை மறக்கவில்லை.

காரணங்கள்:

  • திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு எதிரான வெளிநாட்டு கூட்டணிக்காக அரேபியா, துருக்கி ஆப்கானிஸ்தான் மற்றும் பிரான்சு நாடுகளுக்கு தூதர்களை அனுப்பினார்.
  • எகிப்து மீது படையெடுத்த நெப்போலியனுடன் திப்பு தொடர்பு வைத்திருந்தார்.
  • ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு வருகை புரிந்த பிரெஞ்சு அலுவலர்கள் ஜாக்கோபியின் கழகத்தை நிறுவினர். அங்கு சுதந்திரமரம் ஒன்றும் நடப்பட்டது.

போரின் போக்கு:

  • 1799-ல் வெல்லெஸ்லி திப்புவின் மீது போர் தொடுத்தார்.
  • குறுகிய காலத்தில் நடந்த கடுமையான போராக இருந்தது.
  • மேற்கே பம்பாய் இராணுவம் ஆர்தர் வெல்லெஸ்லி தலைமையில் திப்பு சுல்தானை தாக்கியது.
  • திப்பு தலைநகரம் ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு பின் வாங்கினார்.
  • 1799 – மே- 4 – ல் ஸ்ரீரங்கப்பட்டினம் கைப்பற்றப்பட்டது.
  • திப்பு வீரமாக போரிட்டாலும் இறுதியில் கொல்லப்பட்டார்.
  • நான்காம் மைசூர் போர் முடிவில் ஒட்டு மொத்த மைசூரும் ஆங்கிலேயரிடம் சரணடைந்தது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

போருக்கு பின் மைசூர்:

  • கனரா, வயநாடு, கோயமுத்தூர், தாராபுரம் ஆகிய பகுதிகளை ஆங்கிலேயர் இணைத்து கொண்டனர்.
  • இந்து உயர்குடும்பத்தை சேர்ந்த 3 -ம் கிருஷ்ண ராஜா உடையார் மைசூர் அரியணை ஏறினார்.
  • திப்புவின் குடும்பம் வேலூருக்கு அனுப்பப்பட்டது.

Question 3.
பிரிட்டிஷ் ஆட்சியை விரிவுபடுத்த டல்ஹௌசி பிரபு கொண்டு வந்த கொள்கையை பற்றி விவரி.
விடை:
வாரிசு இழப்புக் கொள்கை (1848):

  • டல்ஹௌசி பிரபு இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை உயர்த்துவதில் முதன்மை சிற்பி ஆனார்.
  • ஆங்கிலேய பேரரசை விரிவுப்படுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கை என்ற புதிய கொள்கையை 1848 -ல் கொண்டு வந்தார்.
  • இக்கொள்கையின் படி சுதேச மன்னர்கள் ஆங்கிலேயர் அனுமதியின்றி வாரிசுகளை தத்தெடுக்கும் போது மன்னரின் சொத்துக்கள் தத்தெடுத்த பிள்ளைக்கும் ஆட்சிப்பகுதி ஆங்கில சக்திக்கும் செல்ல நேரிடும் எனப்பட்டது.
  • இந்தியர்கள் இக்கொள்கையை கடுமையாக எதிர்த்தனர்.
  • 1857 – ஆண்டு புரட்சிக்கு இக்கொள்ளை மூலக்காரணமாக அமைந்தது.

Question 4.
வெல்லெஸ்லி பிரபு எவ்வாறு ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியாவில் விரிவுபடுத்தினார்?
விடை:
துணைப்படைத் திட்டம் (1798):
– இந்திய சுதேச அரசுகளை ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் கொண்டுவர வெல்லெஸ்லி பிரபுவால் கொண்டுவரப்பட்ட திட்டம் துணைப் படைத் திட்டம்.

  • ஆங்கில ஆட்சியை விரிவுபடுத்தவும் அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்தவும் இது சிறந்த கருவியாக பயன்படுத்தப்பட்டது.
  • இது பாதுகாக்கப்பட்ட அரசுக்கள் என்றழைக்கப்பட்டது.
  • அவ்வரசுகள் மீது தலையாய அதிகாரம் செலுத்துபவராக ஆங்கிலேயர் இருந்தனர்.
  • அந்நிய படையெடுப்பிலிருந்து சுதேச அரசுகளை காப்பதும் உள்நாட்டு அமைதியை நிலை நாட்டுவதும் ஆங்கிலேயரின் கடமை. ‘

துணைப்படைத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • இத்திட்டத்தில் இணையும் இந்திய அரசர் தன்னுடைய படையை கலைத்துவிட்டு ஆங்கில படையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • சுதேச அரசின் தலைமையகத்தில் ஆங்கில பிரதிநிதி ஒருவர் இருப்பார்.
  • ஆங்கில படையை பராமரிக்கவும், படைவீரர்களுக்கு ஆண்டு சம்பளம் வழங்கவும் நிரந்தரமாக சில பகுதிகளை ஆங்கில அரசுக்கு கொடுக்க வேண்டும்.
  • ஆங்கிலேயரைத் தவிர மற்ற ஐரோப்பியர்கள் யாரும் அந்நாட்டில் இருக்க கூடாது.
  • அயல்நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள கம்பெனியின் அனுமதி பெற வேண்டும். அந்நிய அரசின் தாக்குதல் மற்றும் உள்நாட்டு கலவரம் நடைபெறும் போது கம்பெனி அந்நாட்டை பாதுகாக்கும்.
  • இவ்வாறு ஆங்கில ஆதிக்கத்தை வெல்லெஸ்லி இந்தியாவில் விரிவுபடுத்தினார்.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான காரணங்களை விளக்குக.
விடை:

  • இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகக் கடும் போட்டியிட்டவர்கள் பிரெஞ்சுக்காரர்களே.
  • ஆயினும் இந்தியாவில் தங்களது மேலாண்மையை நிலை நாட்டுவதில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர்.

இந்தியாவில் ஆங்கிலேயரின் வெற்றிக்கான காரணங்கள் பின்வருமாறு:

  • ஆங்கிலேயரிடம் மிகுந்த பண பலமும், படை வலிமையும் இருந்தது.
  • ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குத் தேவையான எல்லா உதவிகளையும் ஆங்கில அரசு செய்தது.
  • ஆங்கிலேயருக்கு சிறந்த வாணிப வசதிகள் இருந்தன.
  • ஆங்கிலேயரிடம் மிக வலிமையான கப்பற்படை இருந்தது.
  • ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் உயர் அதிகாரிகளுக்கிடையே நல்ல புரிந்துணர்வு இருந்தது.
  • நெசவுத் தொழிலில் ஏற்பட்ட முன்னேற்றமும் ஒரு முக்கிய காரணமாகும்.
  • ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பொருளாதார வளமும், இராஜதந்திரமும் அவர்களின் வெற்றிக்கு காரணமாகும்.
  • ஆனால் இந்திய வணிகர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை.
  • இந்திய மன்னர்களின் ஏற்றத்தாழ்வுகளும், அறியாமையும் ஆங்கிலேயரின் வெற்றிக்குக் காரணமாயிற்று.

X. வாழ்க்கைதிறன் பயிற்சி (மாணவர்களுக்கானது)

Question 1.
ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் புகைப்படங்கள், கதைகள், கவிதைகள் மற்றும் தகவல்களை தொகுத்தல்.

XI. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
ஆங்கிலேயர்களால் இந்திய அரசர்கள் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணங்களை விவாதம் – செய்க.

8th Social Science Guide வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
பக்சார் அமைந்துள்ள நதிக்கரை
அ) கங்கை
ஆ) காவிரி
இ) பிரம்மபுத்திரா
ஈ) ஹிக்ளி
விடை:
அ) கங்கை

Question 2.
அடையாறு போரில் கர்நாடக படைத்தளபதி
அ) யூசுப்கான்
ஆ) மாபூஸ்கான்
இ) அன்வாருதீன்
ஈ) சந்தா சாகிப்
விடை:
ஆ) மாபூஸ்கான்

Question 3.
முகமது அலி தஞ்சம் புகுந்த கோட்டை
அ) வேலூர்
ஆ) வில்லியம் கோட்டை
இ) ஜார்ஜ்
ஈ) திருச்சி
விடை:
ஈ) திருச்சி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 4.
டியூப்ளேவை பாரிசுக்கு திரும்ப அழைக்க வைத்த போர்
அ) அடையாறு
ஆ) மாபூஸ்கான்
இ) ஆற்காடு
ஈ) ஆம்பூர்
விடை:
இ) ஆம்பூர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ஐரோப்பாவில் வெடித்த __________ போர் இந்தியாவில் மூன்றாம் கர்நாடகப் போருக்கு வழிவகுத்தது.
விடை:
ஏழாண்டுப்

Question 2.
இரண்டாம் ஆங்கில மைசூர் போரில் ஹைதர் அலி தோற்கடிக்கப்பட்ட இடம் ____________
விடை:
போர்ட் நோவா

Question 3.
1863 – ல் ஐ.சி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் ____________
விடை:
சத்யேந்திரநாத் தாகூர்

Question 4.
போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்பதை ___________ சட்டம் அறிமுகப்படுத்தியது.
விடை:
பட்டயச்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை 2

IV. சரியா? தவறா?

Question 1.
வங்காளத்தில் ஜீரி முறையை கொண்டு வந்தவர் வெல்லெஸ்லி பிரபு.
விடை:
தவறு

Question 2.
துணைப்படைத் திட்டம் சுதேச அரசுகளின் வெளியுறவுக் கொள்கையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 3.
வந்தவாசிப்போர் பாண்டிச்சேரி உடன்படிக்க ைமூலம் முடிவுக்கு வந்தது.
விடை:
சரி

V. கீழ்கண்டவைகளுள் தவறாக பொருத்துயுள்ளது எது?

1. ஹைதர் அலி – மைசூர்
2. டியூப்ளே – ஆங்கில ஆளுநர்
3. வட சர்க்கார் – ஆந்திரா, ஒடிசா
4. இராபர்ட் கிளைவ் – ஆங்கில படைத்தளபதி
விடை:
2. டியூப்ளே – ஆங்கில ஆளுநர்

VI. குறுகிய விடையளி

Question 1.
அய்லா – சப்பேல் உடன்படிக்கை குறித்து எழுதுக?
விடை:

  • ஐரோப்பாவில் நடைபெற்ற் ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் முடிவில் 1748-ல் செய்து கொள்ளப்பட்டது.
  • இதன்படி முதல் கர்நாடகப் போர் முடிவுக்கு வந்தது. மதராஸ் ஆங்கிலேயரிடமும், வட அமெரிக்காவில் சில பகுதிகள் பிரான்சிடமும் ஒப்படைக்கப்பட்டது.

Question 2.
மராத்தா கூட்டமைப்பால் சுதந்திரமான மாநிலங்கள் யாவை?
விடை:

  • புனே
  • பரோடா
  • நாக்பூர்
  • இந்தூர்
  • குவாலியர்

Question 3.
வாரிசு இழப்புக் கொள்கையின் மூலம் டல்ஹௌசி இணைத்துக் கொண்ட பகுதிகள் யாவை?
விடை:

  • சதாரா ஜெய்ப்பூர்
  • சம்பல்பூர்
  • பாகத்
  • உதய்பூர்
  • ஜான்சி மற்றும் நாக்பூர்

VII. விரிவான விடையளி

Question 1.
ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் விவரி.
விடை:

  • ஆங்கிலேயர்கள் மிகப்பெரிய கடல் வலிமை பெற்றிருந்தனர்.
  • நெசவுத் தொழில் வளர்ச்சி அடைந்திருந்தது.
  • அறிவியல் ரீதியாக பிரிக்கப்பட்ட தொழிலாளர்கள்.
  • பொருளாதார வளர்ச்சி மற்றும் திறமைமிக்க இராஜதந்திரம்.
  • இந்திய வணிகர்களிடையே நிலவிய பாதுகாப்பின்மை.
  • இந்திய அரசர்களின் சமத்துவமின்மை மற்றும் அறியாமை இவையே ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் ஆகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 2.
இந்தியாவில் ஆங்கில நிர்வாகத்தில் காணப்பட்ட நீதித்துறை குறித்து விவரி.
விடை:

  • 1772-ல் இரட்டை ஆட்சியை ஒழித்து வரிவசூல் மற்றும் நீதி வழங்கும் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டது.
  • சிவில் நீதிமன்றமான திவானி அதாலத் மற்றும் குற்றவியல் நீதிமன்றமான பௌஜ்தாரி அதாலத் ஏற்படுத்தப்பட்டது.
  • ஒழுங்கு முறை சட்டப்படி கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டு ஒரு முதன்மை நீதிபதியும் மூன்று துணை நீதிபதிகளையும் பிரிட்டிஷார் நியமித்தனர்.
  • இதைப்போன்று 1801-ல் மதராஸிலும் 1823-ல் பம்பாயிலும் உச்ச நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.
  • சட்டங்களை தொகுக்க சட்ட ஆணையம் அமைக்கப்பட்டு நாடு முழுவதும் சட்டத்தின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • 1861-ம் ஆண்டு கல்கத்தா, பம்பாய், மதராஸ் ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றங்களுக்குப் பதில் 3-ல் உயர்நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை 3
Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை 4