Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Questions and Answers, Notes.
TN Board 8th Social Science Solutions Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)
8th Social Science Guide கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை ……………….
அ) கேப்பிளாங்கா
ஆ) அகுல்காஸ் முனை
இ) நன்னம்பிக்கை முனை
ஈ) கேப்டவுன்
விடை:
இ) நன்னம்பிக்கை முனை
Question 2.
எகிப்திற்கும் சினாய் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு நிலச்சந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய் ……………..
அ) பனாமா கால்வாய்
ஆ) அஸ்வான் கால்வாய்
இ) சூயஸ் கால்வாய்
ஈ) ஆல்பர்ட் கால்வாய்
விடை:
இ) சூயஸ் கால்வாய்
Question 3.
மத்திய தரைக்கடல் காலநிலையோடு தொடர்புடைய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்க.
(i) சராசரி மழையளவு 15 சென்டிமீட்டர்.
(ii) கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டதாகவும் குளிர்காலம் மழையுடனும் இருக்கும்.
(iii) குளிர்காலம் குளிர்ச்சியாகவும், வறண்டும், கோடை வெப்பமாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.
(iv) சிட்ரஸ் வகை பழங்கள் வளர்க்கப்படுகின்றன.
அ) i சரியானது
ஆ) ii மற்றும் iv சரியானவை
இ) iii மற்றும் iv சரியானவை
ஈ) அனைத்தும் சரியானவை
விடை:
ஆ) ii மற்றும் iv
Question 4.
சரியானவை ஆஸ்திரேலியாவின் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளை பிரிக்கும் மலைத்தொடர் ………………
அ) பெரிய பிரிப்பு மலைத்தொடர்
ஆ) இமய மலைத்தொடர்
இ) பிளிண்டர்கள் மலைத்தொடர்
ஈ) மெக்டோனெல் மலைத்தொடர்
விடை:
அ) பெரிய பிரிப்பு மலைத்தொடர்
Question 5.
கல்கூர்லி சுரங்கம் ………………… கனிமத்திற்குப் புகழ்பெற்றது.
அ) வைரம்
ஆ) பிளாட்டினம்
இ) வெள்ளி
ஈ) தங்கம்
விடை:
ஈ) தங்கம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
அட்லஸ் மலை ………………… கண்டத்தில் அமைந்துள்ளது.
விடை:
ஆப்பிரிக்கா
Question 2.
ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் ………………….. ஆகும்.
விடை:
கிளிமஞ்சாரோ
Question 3.
ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் மரம் ……………….
விடை:
யூக்கலிப்டஸ்
Question 4.
ஆஸ்திரேலியாவில் உள்ள மிதவெப்ப மண்டல புல்வெளிகள் …………………… என அழைக்கப்படுகின்றன.
விடை:
டவுன்ஸ்
Question 5.
அண்டார்டிகாவில் நிறுவப்பட்ட முதல் இந்திய ஆய்வு நிலையம் ……………………
விடை:
தட்சின் கங்கோத்ரி
III. பொருத்துக
IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
Question 1.
கூற்று : அரோரா என்பது வானத்தில் தோன்றும் வண்ண ஒளிகள் ஆகும்.
காரணம் : அவை வளிமண்டலத்தின் மேலடுக்குக் காந்த புயலால் ஏற்படுகின்றன.
அ) கூற்று மற்றும் காரணம் உண்மை . கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் உண்மை . கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் உண்மை ஆனால் கூற்று தவறு.
விடை:
இ) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு
Question 2.
கூற்று : ஆப்பிரிக்காவின் நிலவியல் தோற்றங்களில் ஒரு முக்கிய அம்சம் பெரிய பிளவுப் பள்ளத்தாக்கு ஆகும்.
காரணம் : புவியின் உள்விசை காரணமாக புவியின் மேற்பரப்பில் உண்டான பிளவு.
அ) கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுகான காரணம் சரியான விளக்கம்.
ஆ) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் கூற்றுகான காரணம் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுகான காரணம் சரியான விளக்கம்
V. சுருக்கமாக விளையளி
Question 1.
ஆப்பிரிக்கா ‘தாய் கண்டம்’ என அழைக்கப்படுவது ஏன்?
விடை:
புவியில் மனித இனங்கள் வாழ்ந்த பழமையான கண்டம் என்பதால் ஆப்பிரிக்கா ‘தாய் கண்டம்’ என அழைக்கப்பட்டது.
Question 2.
ஆப்பிரிக்காவின் முக்கியமான ஆறுகள் யாவை?
விடை:
- நைல் நதி
- காங்கோ நதி
- நைஜர் நதி
- ஜாம்பசி நதி
- லிம்போபோ நதி
- ஆரஞ்சு நதி
Question 3.
ஆஸ்திரேலியாவின் நிலத்தோற்ற பிரிவுகள் யாவை?
விடை:
- மேற்கு ஆஸ்திரேலிய பெரிய பீடபூமி
- மத்திய தாழ் நிலங்கள்
- கிழக்கு உயர் நிலங்கள்
Question 4.
அண்டார்டிகா கண்டத்தின் தன்மை குறித்து எழுதவும்.
விடை:
- அண்டார்டிகா கண்டம் ஒரு தனித்துவம் வாய்ந்த கண்டமாகும். இது பூர்வீக மக்களைக் கொண்டிருக்கவில்லை.
- அண்டார்டிகாவில் எந்த ஒரு நாடும் இல்லை.
- இது துருவப் பகுதியில் அமைந்துள்ளதால், நிரந்தர பனியுடன் மிகக் குளிர்ந்த பிரதேசமாக உள்ளது.
- இது மலைத்தொடர்கள், சிகரங்கள், பள்ளத்தாக்குகள், பனியாறுகள், பீடபூமிகள் மற்றும் எரிமலைகளை உள்ளடக்கியதாகும்.
Question 5.
ஆஸ்திரேலியாவின் பொருளாதார நடவடிக்கைகள் ஏதெனும் நான்கினைக் குறிப்பிடுக.
விடை:
வேளாண்மை , வளம் சார்ந்த தொழில்கள், மீன்பிடித்தல், உற்பத்தித் தொழில்கள், வணிகம் மற்றும் சேவைப்பிரிவு ஆகியவை ஆஸ்திரேலியாவின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் ஆகும்.
VI. வேறுபடுத்துக
Question 1.
சாஹேல் மற்றும் சகாரா
விடை:
Question 2.
மேற்கு அண்டார்டிகா மற்றும் கிழக்கு அண்டார்டிகா
விடை:
Question 3.
பெரிய பவளத் திட்டு மற்றும் ஆர்டீசியன் வடிநிலம்.
விடை:
VII. காரணம் கூறு
Question 1.
எகிப்து நைல் நதியின் நன்கொடை என அழைக்கப்படுகிறது ஏன்?
விடை:
நைல் நதி எகிப்தின் வாழ்வாதாரமாக விளங்குகிறது, நைல் நதி எகிப்தில் இல்லையென்றால் இந்நாடு பாலைவனமாக இருந்திருக்கும். இதனால் எகிப்து நைல் நதியின் நன்கொடை எனப்படுகிறது.
Question 2.
வெப்ப பாலைவனங்கள் கண்டங்களின் மேற்கு விளிம்புகளில் அமைந்துள்ளன.
விடை:
மேற்கு விளிம்புகள் மணல் மற்றும் பாறைகளால் ஆன பகுதியாக உள்ளது. எனவே இப்பகுதி வறண்ட வெப்ப பாலைவனமாக உள்ளது.
Question 3.
அண்டார்டிகா ஆராய்ச்சியாளர்களின் கண்டம் என அழைக்கப்படுகிறது.
விடை:
உலகின் எந்த ஒரு நாட்டின் மக்களும் அண்டார்டிகாவில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், தரவுகள் சேகரிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே இக்கண்டம் ‘ஆராய்ச்சியாளர்களின் கண்டம் என அழைக்கப்படுகிறது.
VIII. விரிவான விடையளி
Question 1.
ஆஸ்திரேலியாவின் கனிம வளங்கள் குறித்து விரிவாக எழுதவும்.
விடை:
- ஆஸ்திரேலியா பாக்சைட், லைமோனைட், ரூட்டில் மற்றும் சிர்கான் உற்பத்தியில் முன்னணி நாடாக உள்ளது.
- தங்கம், ஈயம், லித்தியம், மாங்கனீசு தாது மற்றும் துத்தநாகம் உற்பத்தியில் இது இரண்டாவது இடம் வகிக்கிறது.
- இரும்புத்தாது மற்றும் யுரேனிய உற்பத்தியில் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது.
- நிலக்கரி உற்பத்தியில் நான்காவது இடம் வகிக்கிறது.
- மேற்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் நிலக்கரி வயல்கள் உள்ளன.
- மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் இரும்புத் தாது கிடைக்கிறது.
- கார்பென்டேரியா வளைகுடா, பெர்த் மற்றும் டாஸ்மேனியாவை சுற்றியுள்ள பகுதிகளில் பாக்சைட் கிடைக்கிறது.
- பாஸ் நீர்ச்சந்தி மற்றும் மேற்கு பிரிஸ்பேன் பகுதிகளில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கிடைக்கிறது.
- வட யூனியன் பிரதேசம் மற்றும் குயின்ஸ்லாந்து பகுதிகளில் யுரேனியம் கிடைக்கிறது.
- கால் வாலி மற்றும் க..ல் கார்லி பகுதிகளில் தங்கம் கிடைக்கிறது.
- காரியம், துத்தநாகம், வெள்ளி, டங்ஸ்டன், நிக்கல் மற்றும் செம்பு ஆகியவை ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் கிடைக்கின்றன.
Question 2.
அண்டார்டிகா கண்டத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றி விவரி.
விடை:
தாவரங்கள்:
- அண்டார்டிகாவில் வெப்பநிலையானது ஆண்டு முழுவதும் உறை நிலைக்குக் கீழே இருப்பதால் புவியியல் பெரிய தாவரங்கள் எதுவும் காணப்படவில்லை.
- சிறுவகை தாவரங்களான பாசிகள், படர்பாசிச் செடிகள், நுரைப்பாசிகள். மரப்பாசிகள், நுண்ணிய பூஞ்சைகள் போன்றவை பனியை தாங்கி வளர்கின்றன.
- பிளாங்டன். பாசிகள் மற்றும் மரப்பாசிகள் நன்னீர் மற்றும் உவர் நீர் ஏரிகளில் காணப்படுகின்றன.
விலங்கினங்கள்:
- சிறிய வகை செம்மீன்களான கிரில்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.
- நீலத்திமிங்கலம், கடற்பசு மற்றும் கடல்பறவைகளான பென்குவின், அல்பட்ராஸ். போலார் ஸ்குவா மற்றும் ஸ்டவுட் ஆகியவையும் காணப்படுகின்றன.
- இங்குள்ள பறவைகள் மற்றும் விலங்கினங்கள் குளிர்கால நிலையை எதிர்கொள்ள தங்கள் உடலில் புளூபர் எனப்படும் அடர்த்தியான கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன.
- பென்குயின் பறவைகள் இறக்கைகளுக்குப் பதிலாக நீந்துவதற்குப் பயன்படும் பிலிப்பர் மற்றும் அகலமான பாதங்களைப் பெற்றுள்ளன. இப்பறவைகளால் பறக்க இயலாது.
- சிறிய முதுகெலும்பற்ற உயிரினங்கள் இங்குள்ள நிலவாழ் விலங்கினங்களாகும்.
Question 3.
ஆப்பிரிக்காவின் இயற்கைப் பிரிவுகளை எழுதி அவற்றில் ஏதேனும் ஒன்றினை விளக்கவும்.
விடை:
ஆப்பிரிக்காவின் இயற்கைப் பிரிவுகள்:
- சஹாரா
- சாஹேல்
- சவானா
- பெரிய பள்ளத்தாக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் பெரிய ஏரிகள்
- கிழக்கு ஆப்பிரிக்க உயர் நிலங்கள்
- சுவாலி கடற்கரை
- காங்கோ வடிநிலம் / ஜையர் வடிநிலம்
- தென் ஆப்பிரிக்கா
சஹாரா:
- ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உலகப் புகழ்ப்பெற்ற சகாரா பாலைவனம் அமைந்துள்ளது.
- இது உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டல பாலைவனமாகும்.
- சகாராவின் மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், கிழக்கில் செங்கடலும், வடக்கில் மத்திய தரைக்கடலும் தெற்கில் சாஹேல் ஆகியன இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
- இது 11 நாடுகளில் பரவியுள்ளது.
- சகாரா பாலைவனம் மலைகள், பீடபூமிகள், எர்க்ஸ், பாலைவனச் சோலை, மணல், உப்பு ஏரி, ஆற்றுக் கொப்பரைகள் மற்றும் ஊதுபள்ளங்கள் போன்ற பல்வேறு நிலத்தோற்றங்களை உள்ளடக்கியது.
- மௌண்ட் கௌசி எனப்பட்ட செயலிழந்த எரிமலை சஹாரா பாலைவனத்தின் மிக உயரமான பகுதியாகும்,
X. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)
Question 1.
கீழ்க்கண்ட நாடுகளில் டிசம்பர் மாத பருவநிலை மற்றும் அது எந்த கோளத்தில் அமைந்துள்ளது என்பதனைக் கண்டறியவும்.
Question 2.
ஆஸ்திரேலிய அரசியல் புவிவரைபடத்தில் உள்ள மாநிலங்களின் பெயர்களை எழுதவும்.
8th Social Science Guide கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
கடகரேகை, புவி நடுக்கோடு மற்றும் மகரரேகை போன்ற மூன்று முக்கிய அட்ச ரேகைகளும் கடந்து செல்லும் கண்டம்.
அ) தென் அமெரிக்கா
ஆ) ஆப்பிரிக்கா
இ) ஆஸ்திரேலியா
ஈ) அண்டார்டிகா
விடை:
ஆ) ஆப்பிரிக்கா
Question 2.
ஆப்பிரிக்காவின் முக்கியத் தீவு
அ) டாஸ்மேனியா
ஆ) நியூசிலாந்து
இ) மடகாஸ்கர்
ஈ) சார்டினியா
விடை:
இ) மடகாஸ்கர்
Question 3.
உலகின் ஆழமான மற்றும் அதிக நீளம் கொண்ட நன்னீர் ஏரி
அ) விக்டோரியா ஏரி
ஆ) சுப்பீரியர் ஏரி
இ) ஒண்டேரியோ ஏரி
ஈ) டாங்கனிக்கா ஏரி
விடை:
ஈ) டாங்கனிக்கா ஏரி
Question 4.
உலகின் மிக நீளமான நதி
அ) நைல்
ஆ) சிந்து
இ) அமேசான்
ஈ) வோல்கா
விடை:
அ) நைல்
Question 5.
நைல் நதி கலக்கும் கடல்
அ) இந்திய பெருங்கடல்
ஆ) பசிபிக் பெருங்கடல்
இ) மத்திய தரைக்கடல்
ஈ) செங்கடல்
விடை:
இ) மத்திய தரைக்கடல்
Question 6.
உலகப்புகழ் பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி உருவாகியுள்ள ஆறு
அ) நைல்
ஆ) காங்கோ
இ) ஜாம்பசி
ஈ) நைஜர்
விடை:
இ) ஜாம்பசி புவியியல்
Question 7.
உலகின் மிகப்பெரிய தீவு
அ) கிரீன்லாந்து
ஆ) ஆஸ்திரேலியா
இ) மடகாஸ்கர்
ஈ) இந்தோனேஷியா
விடை:
ஆ) ஆஸ்திரேலியா
Question 8.
ஆஸ்திரேலியா கண்டத்தைக் கண்டுபிடித்தவர்
அ) லிவிங்ஸ்டோன்
ஆ) ஸ்டான்லி
இ) ஜேம்ஸ் குக்
ஈ) டார்வின்
விடை:
இ) ஜேம்ஸ் குக்
Question 9.
வெள்ளைக் கண்டம் என அழைக்கப்படுவது
அ) ஆஸ்திரேலியா
ஆ) அண்டார்டிகா
இ) தென் அமெரிக்கா
ஈ) வட அமெரிக்கா
விடை:
ஆ) அண்டார்டிகா
Question 10.
ஆஸ்திரேலியா கண்டத்தை இரு சம பாகங்களாகப் பிரிப்பது
அ) புவிநடுக்கோடு
ஆ) கடகரேகை
இ) மகரரேகை
ஈ) ஆர்டிக் வட்டம்
விடை:
இ) மகரரேகை
Question 11.
ஆப்பிரிக்காவின் ………….. உலகின் பெரும் மருந்தகம் என்று அழைக்கப்படுகின்றன.
அ) வெப்ப மண்டல மழைக்காடுகள்
ஆ) சஹாரா
இ) பாபோ மரம்
ஈ) சாஹேல்
விடை:
அ) வெப்ப மண்டல மழைக்காடுகள்
Question 12.
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி
அ) ஆல்பர்ட் ஏரி
ஆ) எட்வர்ட் ஏரி
இ) கிவ் ஏரி
ஈ) விக்டோரியா ஏரி
விடை:
ஈ) விக்டோரியா ஏரி
II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்
Question 1.
உலகின் இரண்டாவது பெரிய கண்டம் …………………………
விடை:
ஆப்பிரிக்கா
Question 2.
மத்திய தரைக்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலை சகாரா பாலைவனத்திலிருந்து பிரிப்பது …………………..
விடை:
அட்லஸ் மலை
Question 3.
உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ……………… ஏரி ஆகும்.
விடை:
சுப்பீரியர்
Question 4.
தென் ஆப்பிரிக்காவின் அரை வறண்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் செம்மறி ஆடு வளர்ப்பு …………… என்று அழைக்கப்படுகிறது.
விடை:
காரூஸ்
Question 5.
ஆப்பிரிக்க ஆறுகளின் தந்தை என அழைக்கப்படுவது ……………..
விடை:
நைல் நதி
Question 6.
தென் ஆப்பிரிக்காவின் வாழ்வாதார நதி எனப்படுவது ……………
விடை:
ஜாம்பசி நதி கண்ட
Question 7.
ங்களில் மிகச்சிறியது …………………
விடை:
ஆஸ்திரேலியா
Question 8.
ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மலைக்காடுகள் …………… என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
புவியின் அணிகலன்
Question 9.
உலகில் இரண்டாவது மக்கள் தொகையைக் கொண்ட கண்டம் …………….
விடை:
ஆப்பிரிக்கா
Question 10.
ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு – ………………….
விடை:
நைஜீரியா
Question 11.
ஆஸ்திரேலியாவின் தலைநகர் ………………….
விடை:
கான்பெரா
Question 12.
உலகின் மிகப்பெரிய ஒற்றை சிற்ப பாறை ………………….
விடை:
அயர்ஸ் பாறை (அ) உலுரு பாறை
Question 13.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பாலைவனம் …………………..
விடை:
பெரிய விக்டோரியா பாலைவனம்
Question 14.
ஆஸ்திரேலியாவின் மிக நீளமான நதி ……………….
விடை:
முர்ரே நதி
Question 15.
ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு …………………
விடை:
கங்காரு
Question 16.
ஆப்பிள் தீவு எனப்படுவது ………………
விடை:
டாஸ்மேனியா
Question 17.
ஆஸ்திரேலியாவின் பணப்பயிர் எனப்படுவது ………………….
விடை:
ஆட்டு உரோமம்
Question 18.
அண்டார்டிகாவிலுள்ள ……………. பனியாறு உலகின் மிகப்பெரிய பனியாறாகும்.
விடை:
லாம்பர்ட்
Question 19.
கடல் வாழ் உயிரினங்களில் மிகப்பெரியது ………………
விடை:
நீலத்திமிங்கலம்
Question 20.
ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் ……………………
விடை:
கனிமங்கள்
Question 21.
சாஹேல் என்றால் ……………. அல்லது ………………. என்று பொருள்படும்.
விடை:
எல்லை, விளிம்பு
Question 22.
இருண்ட கண்டம் எனப்படுவது ………………..
விடை:
ஆப்பிரிக்கா
Question 23.
நைல் நதியின் நன்கொடை எனப்படுவது ……………..
விடை:
எகிப்து
Question 24.
புவியின் மேற்பரப்பில் காணப்படும் மிகப்பெரிய பனித் தொகுப்பு ………………
விடை:
அண்டார்டிகா
III. பொருத்துக
IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
Question 1.
கூற்று : ஆஸ்திரேலியாவின் கிழக்கு உயர் நிலங்கள் பெரும்பரப்பு மலைத்தொடர் என்றும் அழைக்கப்படுகிறது.
காரணம் : இவை ஆஸ்திரேலியாவை வடக்கு தெற்காகப் பிரிக்கின்றன.
அ) கூற்றும், காரணமும் தவறு
ஆ) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றினை விளக்குகிறது.
இ) கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை விளக்கவில்லை .
ஈ) கூற்று சரி, காரணம் தவறு.
விடை:
ஈ) கூற்று சரி, காரணம் தவறு.
Question 2.
கூற்று : ஆஸ்திரேலியாவின் ஆறுகளில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
காரணம் : ஆஸ்திரேலியாவின் அனைத்து பகுதிகளும் ஆண்டு முழுவதும் கனமழை பெறுகிறது.
அ) கூற்றும், காரணமும் தவறு
ஆ) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றினை விளக்குகிறது.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை:
அ) கூற்றும், காரணமும் தவறு
V. ஓரிரு வாக்கியங்களில் விடையளி
Question 1.
ஆப்பிரிக்கா இருண்ட கண்டம் எனப்படுவதேன்?
விடை:
ஆப்பிரிக்காவின் உட்பகுதியின் பெரும்பகுதியின் தன்மை குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. எனவே ஆப்பிரிக்கா ஒரு இருண்ட கண்டம்’ என்றழைக்கப்படுகிறது.
Question 2.
ஆப்பிரிக்க நாடுகளை புவியியல் அமைவிட அடிப்படையில் வகைப்படுத்துக.
விடை:
- மேற்கு ஆப்பிரிக்கா
- வட ஆப்பிரிக்கா
- மத்திய ஆப்பிரிக்கா
- கிழக்கு ஆப்பிரிக்கா
- தென் ஆப்பிரிக்கா
Question 3.
நைல் நதி பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:
- உலகின் மிக நீளமான நதி நைல் ஆகும்.
- நைல் நதி எகிப்தில் இல்லையெனில் இந்நாடு பாலைவனமாக இருந்திருக்கும்.
- வெள்ளை நைல் மற்றும் நீல நைல் ஆகியவை நைல் நதியின் துணை ஆறுகளாகும்.
- இவ்விரண்டும் சூடானிலுள்ள கார்ட்டும் என்ற இடத்தில் இணைந்து நைல் நதியைத் தோற்றுவிக்கின்றன.
- நைல் நதி மத்தியத்தரைக்கடலில் கலக்கிறது.
- இது ஆப்பிரிக்க ஆறுகளின் தந்தை எனப்படுகிறது.
Question 4.
புவி நடுக்கோட்டுக் காலநிலை பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:
- காங்கோ வடிநிலம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க உயர்நிலங்களில் புவி நடுக்கோட்டுக் காலநிலை நிலவுகிறது.
- இங்கு ஆண்டு முழுவதும் வெப்பம் மற்றும் மழைப்பொழிவு இரண்டும் மிகுந்து காணப்படும்.
Question 5.
ஆப்பிரிக்காவின் கனிம வளம் பற்றி ஒரு விளக்கம் தருக.
விடை:
- ஆப்பிரிக்கா, சில கனிம வளங்களை அதிகம் கொண்டுள்ளது.
- தென் ஆப்பிரிக்கா, காங்கோ, போஸ்ட்வானா, சியராலியோன் மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளில் வைரச் சுரங்கங்கள் காணப்படுகின்றன.
- கிம்பர்லி ஒரு முக்கியமான வைர உற்பத்தி மையமாகும்.
- அங்கோலா, நைஜீரியா, காபன் மற்றும் காங்கோ நாடுகளில் அதிக எண்ணெய் வளங்கள் காணப்படுகின்றன.
- தென் ஆப்பிரிக்கா, நமீபியா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் கானா ஆகிய நாடுகளில் தங்கம் காணப்படுகிறது.
- குரோமியம், கோபால்ட், தாமிரம், இரும்பு தாது, மக்னீசியம், துத்தநாகம் மற்றும் நிக்கல் ஆகியவையும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப்படுகின்றன.
Question 6.
ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து அமைப்புகள் பற்றி கூறு.
விடை:
- ஆஸ்திரேலியாவில் பல வகையான போக்குவரத்து அமைப்புகள் காணப்படுகின்றன.
- இந்நாடு சாலைப்போக்குவரத்தை பெரிதும் நம்பியுள்ளது.
- இந்நாட்டில் 30க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன.
- இந்நாட்டின் நகரங்களில் பயணிகள் இரயில் போக்குவரத்து நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.
Question 7.
அண்டார்டிகாவின் தாதுவளம் பற்றி உமக்கு என்ன தெரியும்?
விடை:
அண்டார்டிகா கண்டத்தில் தங்கம், பிளாட்டினம், நிக்கல், தாமிரம் மற்றும் பெட்ரோலியம் நிறைந்து இருக்கலாம் என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குரோமியம், ஈயம், மாலிப்டினம், தகரம், யுரேனியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை இருப்பதற்கான தடயங்கள் காணப்படுகின்றன.
மேலும் வெள்ளி, பிளாட்டினம், இரும்புத்தாது, கோபால்ட், மாங்கனீசு, டைட்டானியம் ஆகியவை இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
Question 8.
நீர்ச்சந்தி என்றால் என்ன?
விடை:
இரண்டு பெரிய நீர்ப்பரப்புகளை இணைக்கும் ஒரு குறுகிய நீர்ப்பகுதி, நீர்ச்சந்தி எனப்படுகிறது.
Question 9.
நிலச்சந்தி என்றால் என்ன?
விடை:
இரு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கும் ஒரு குறுகிய பகுதி மற்றும் இருநீர்ப் பகுதியைப் பிரிப்பது நிலச்சந்தி எனப்படுகிறது.
Question 10.
வளைகுடா என்றால் என்ன?
விடை:
வளைகுடா என்பது நிலப்பரப்பை ஊடுருவி நீண்டு காணப்படும் கடல் நீர்ப்பரப்பு ஆகும்.
VI. வேறுபடுத்துக
Question 1.
வெப்பமண்டல பருவக்காற்றுக் காலநிலை மற்றும் மித வெப்ப மண்டலக் காலநிலை.
விடை:
Question 2.
புவி நடுக்கோட்டுக் காலநிலை மற்றும் மத்திய தரைக்கடல் காலநிலை.
விடை:
VII. காரணம் கூறு
Question 1.
கிழக்கு ஆப்பிரிக்க உயர் நிலங்கள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது.
விடை:
இப்பகுதி வளமான புல்வெளிகள், காடுகள், நீரோடைகள் மற்றும் நீர் வீழ்ச்சிகள் போன்ற இயற்கை காட்சிகளைக் கொண்டுள்ளது. இம்மலைப் பகுதிகளில் காணப்படும் பனி சூழ்ந்த காலைப்பொழுதும், மலைத்தென்றலும் மிகவும் இனிமையானவை. இவை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்கின்றன.
Question 2.
அண்டார்டிகாவில் உறைநிலைக் காலநிலை நிலவுகிறது.
விடை:
அண்டார்டிகா புவிநடுக்கோட்டிற்கு வெகு தொலைவில் அமைந்துள்ளது. இதனால் உறைநிலைக் காலநிலை நிலவுகிறது.
Question 3.
அண்டார்டிகா கண்டத்தில் பெரிய தாவரங்கள் எதுவும் காணப்படவில்லை.
விடை:
அண்டார்டிகா கண்டத்தில் வெப்பநிலையானது ஆண்டு முழுவதும் உறைநிலைக்குக் கீழே இருப்பதால் தாவரங்கள் காணப்படவில்லை .
VIII. பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக
Question 1.
ஆப்பிரிக்காவின் போக்குவரத்து அமைப்பினை விவாதி.
விடை:
ஒரு பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்து முக்கிய பங்கினை வகிக்கிறது. பாதகமான இயற்கை நிலத்தோற்ற அமைப்பும், மந்த பொருளாதார வளர்ச்சியும் ஆப்பிரிக்க நாடுகளின் போக்குவரத்து வளர்ச்சியைப் பாதிப்படையச் செய்கின்றன.
நிலவழிப் போக்குவரத்து:
பாலைவனம் மற்றும் அடர்ந்த காடுகள் மிகுந்துள்ளதால் சாலைகள் மற்றும் இருப்புப் பாதைகளை அமைப்பது மிகவும் கடினம். இது பெரிய தடையாக உள்ளது.
தென் ஆப்பிரிக்கா, கென்யா, எகிப்து, லிபியா, மொராக்கோ, மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் ஓரளவிற்கு சாலை மற்றும் இருப்புப்பாதை போக்குவரத்து வளர்ச்சி அடைந்துள்ளன.
நீர்வழிப் போக்குவரத்து:
ஆப்பிரிக்காவின் கடல் போக்குவரத்துப் பாதைகள் ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றோடு இணைந்துள்ளன.
டர்பன், தர்-இ-சலாம், மொஹாபு, அலெக்சாந்திரியா, கேப்டவுன், அல்ஜியஸ் மற்றும் அபிட்ஜன் ஆகியவை முக்கிய துறைமுகங்களாகும்.
வான்வழிப் போக்குவரத்து:
வான்வழிப் போக்குவரத்து ஆப்பிரிக்காவின் முக்கிய தலைநகரங்களையும் உலகின் பிற பகுதிகளையும் இணைக்கிறது. கெய்ரோ, ஜோகன்னஸ்பர்க், நைரோபி, டாக்கா, அடிஸ் அபாபா, காஸாபிளாங்கா, டர்பன் ஆகியவை முக்கிய பன்னாட்டு விமான நிலையங்களாகும்.
VIII. மனவரைபடம்