Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

8th Social Science Guide இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
மக்கள் __________ லிருந்து ____________ க்கு நல்ல வேலை வாய்ப்பினைத் தேடி குடிபெயர்கின்றனர்.
அ) கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு
ஆ) நகர் புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு
இ) மலையிலிருந்து சமவெளிக்கு
ஈ) சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு
விடை:
அ) கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு

Question 2.
ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் ________ எனப்படுகிறது.
அ) குடிபுகுபவர்
ஆ) அகதி
இ) குடியேறுபவர்
ஈ) புகலிடம் தேடுபவர்
விடை:
இ) குடியேறுபவர்

Question 3.
வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது. ___________
அ) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு
ஆ) கிராமத்தில் இருந்து நகரத்திற்கு
இ) நகரத்தில் இருந்து கிராமத்திற்கு
ஈ) நகரத்தில் இருந்து நகரத்திற்கு
விடை:
அ) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 4.
போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு ___________ ஐ சார்ந்தது.
அ) மக்களியல்
ஆ) சமூக மற்றும் கலாச்சாரம்
இ) அரசியல்
ஈ) பொருளாதாரம்
விடை:
இ) அரசியல்

Question 5.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் ____________
அ) மிகையான உணவு தானிய உற்பத்தி
ஆ) கால்நடை வளர்ப்பு
இ) மீன் பிடித்தல்
ஈ) வேட்டையாடுதல்
விடை:
அ) மிகையான உணவு தானிய உற்பத்தி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
நகரமயமாதல் …………………… எண்ணிக்கையிலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன
விடை:
மூன்று

Question 2.
…………………… என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணியாகும்
விடை:
வேலையின்மை .

Question 3.
இந்தியாவின் …………… மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தொகையைக் கொண்டது.
விடை:
புதுதில்லி

Question 4.
ஒரு நபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்ல வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் ………….. இடம்பெயர்வு எனப்படும்.
விடை:
தன்னார்வ

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 5.
நவீன காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி ……………….. வளர்ச்சியால் அதிகரிக்கிறது.
விடை:
தொழில்புரட்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
குடிசைப்பகுதிகள் பொதுவாக பெருநகரங்களில் காணப்படுகிறது.
விடை:
சரி

Question 2.
நவீன காலத்தில், ஒரே சமயத்தில் அதிக மக்களின் இடம்பெயர்வு நடைபெறுவதில்லை .
விடை:
சரி

Question 3.
நகரமயமாக்கம் குறுகியக் கால வரலாறுடையது.
விடை:
தவறு

Question 4.
பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு அதிக அளவு காரணமாக உள்ளன.
விடை:
சரி

Question 5.
மேய்ச்சலுக்காக கால்நடைகளை இடமாற்றம் செய்வது, பருவகால இடம் பெயர்வு எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
சரி

V. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும் காரணத்தையும் ஆராய்க.

கூற்று : நகரமயமாதல் முக்கியமாக கிராமப்புற மக்கள் நகர்புறத்திற்கு இடம் பெயர்வதால் ஏற்படுவதாகும்.
காரணம் : கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயர்தல் முதன்மையான ஒன்றல்ல.

அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
விடை:
அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
‘இடம் பெயர்தல்’ – வரையறு.
விடை:
“ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தூரத்திற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல்” எனப்படும்.

ஐ.நா. அமைப்பின் வரையறை : “இடம்பெயர்வு என்பது இரு புவியியல் பிரதேசங்களுக்கிடையே நடைபெறும் ஒரு வகையான மக்கள்தொகை நகர்வாகும். இது பொதுவாக இருப்பிடத்தில் ஒரு வகையான நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துகிறது”.

Question 2.
கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள் யாவை?
விடை:
கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள்:

  • வேலைவாய்ப்பு
  • கல்வி
  • பொழுதுபோக்கு வசதிகள்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 3.
சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்களைக் கூறுக.
விடை:
சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்கள் :

  • எரிமலை வெடிப்பு
  • நில அதிர்வு
  • வெள்ளம்
  • வறட்சி

Question 4.
இடம்பெயர்வுக்கான இழுகாரணிகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
விடை:
இடம்பெயர்வுக்கான இழுகாரணிகள்:

  • பொருளாதாரக் காரணிகள்
  • வேலைவாய்ப்பிற்கேற்ற சூழல்கள்
  • மக்கள்தொகை காரணிகள்
  • குறைவான மக்கள்தொகை

Question 5.
நகரமயமாக்கம் என்றால் என்ன?
விடை:
நகரமயமாதல்:
“நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வாழும் மக்கள் தொகையின் விகிதாச்சாரம் அதிகரிப்பதை நகரமயமாதல் என்கிறோம்.”

Question 6.
உலகில் அதிக மக்கள் தொகைக் கொண்ட நான்கு பெருநகரங்களைப் பட்டியலிடுக.
விடை:
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட பெருநகரங்கள்:

  • டோக்கியோ (ஜப்பான்) – 37 மில்லியன்
  •  புதுதில்லி (இந்தியா) – 29 மில்லியன்
  • சாங்காய் (சீனா) – 26 மில்லியன்
  • மெக்சிகோ நகரம் (மெக்சிகோ) – 22 மில்லியன்
  • சா பாலோ (பிரேசில்) – 22 மில்லியன்

VII. விரிவான விடையளி

Question 1.
இடம் பெயர்தலின் பல்வேறு வகைகள் யாவை? அவைகளை விளக்குக.
விடை:
I. நிர்வாக எல்லை அடிப்படையில் இடம் பெயர்வுகள் :
உள்நாட்டு இடம்பெயர்வு : ஒரு நாட்டின் எல்லைக்குள் நிகழும் மக்களின் இடம்பெயர்வு உள்நாட்டு இடம் பெயர்வு என அழைக்கப்படும்.

  • ஊரகத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம்பெயர்தல்.
  • நகர்ப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம்பெயர்தல்.
  • ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு இடம்பெயர்தல்.
  • நகர்ப்புறத்திலிருந்து ஊரகத்திற்கு இடம்பெயர்தல்.
  • சர்வதேச இடம்பெயர்வு : ஒரு நாட்டின் எல்லைகளைக் கடந்து நடக்கும் இடம்பெயர்தல் சர்வதேச இடம் பெயர்தல் என அழைக்கப்படும்.

II. இடம் பெயர்பவரின் விருப்பத்தின் அடிப்படையில் இடம் பெயர்தல் :

  • தன்னார்வ இடம்பெயர்வு (தனிநபரின் விருப்பம், முயற்சி மற்றும் முன்னெடுத்தல்)
  • தன்னர்வமில்லா / கட்டாய இடம்பெயர்வு (இடம் பெயர்பவரின் விருப்பத்திற்கு மாறாக)

III. இடம்பெயர்ந்த இடத்தில் தங்கும் கால அளவின் அடிப்படையில் இடம்பெயர்தல் :

  • குறுகிய கால இடம்பெயர்வு (இடம்பெயர்பவர்கள் குடிபெயர்ந்த இடத்தில் சில நாட்கள் முதல் சில மாதங்கள் மட்டுமே தங்குவர்)
  • நீண்டகால இடம்பெயர்வு (இடம் பெயர்பவர்கள் குடிபெயர்ந்த இடத்தில் சில வருடங்களாவது தங்குவர்)
  • பருவகால இடம்பெயர்வு (இடம் பெயர்பவர்கள் குறிப்பிட்ட பருவகாலத்தின் போது குடிபெயர்ந்து அப்பருவத்தின் முடிவில் மீண்டும் திரும்பி விடுவர்) – கோடைகாலத்தில் மலைவாழ் இடங்களுக்கு குடியேறுதல், வேளாண் தொழிலாளர்கள் விதைக்கும் பருவங்களில்
    இடம்பெயர்தல் மற்றும் ‘மந்தை இடமாற்றம்’ (Transhumance) ஆகியவை பருவகால இடம்பெயர்வுகளாகும்.

Question 2.
இடம் பெயர்தலுக்கான பல்வேறு காரணங்களை விரிவாக விளக்குக.
விடை:

  1. சூழியல் (அல்லது) இயற்கை காரணங்கள் :
    • சூழியல் இடம்பெயர்வுக்கு எரிமலை வெடிப்பு, நில அதிர்வு, வெள்ளம், வறட்சி போன்றவை முக்கிய காரணிகளாகும்.
    • இக்காரணிகள் மக்களை தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறி புதிய பகுதிகளில் குடியேற உந்துகின்றன. (நீர்வளம், பிரச்சனைகளற்ற நிலப்பகுதிகள், மாசற்ற நிலைகள் இடம்பெயர்பவர்களை ஈர்க்கும் சக்திகள்)
  2. பொருளாதார காரணங்கள் :
    • வளமான வேளாண் நிலம், வேலைவாய்ப்பு, தொழில் நுட்ப வளர்ச்சி போன்ற பொருளாதார காரணிகள் புலம் பெயர்வோரை ஈர்க்கின்றன.
    • பெருந்திரள் ஏழ்மை மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்றவை மக்களை பூர்வீக இடத்திலிருந்து சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ள இடங்களுக்கு வெளியேற வைக்கின்றன.
  3. சமூக – பண்பாட்டுக் காரணங்கள் :
    • பெண்களின் திருமணத்திற்கு பின் இடம்பெயர்வு, புனித யாத்திரைகளுடன் தொடர்புடைய இடம்பெயர்தல் ஆகியவை சமூக பண்பாட்டுப் பழக்கத்தினை அடிப்படையாகக் கொண்டவை.
  4. மக்கள்தொகை சார்ந்த காரணங்கள் :
    • மக்கள் தொகையின் உட்கூறு பண்புகளான வயது, பாலினம், அதிக மற்றும் குறைந்த மக்கள் தொகை போன்றவை இடம்பெயர்வுக்கான முக்கிய காரணங்களாகும்.
    • பிற பிரிவினரை விட இளையோர் இடம்பெயர்வு அதிகம். திருமணத்திற்கு பின் பெண்கள் புலம் பெயர்கிறார்கள். அதிக மக்கள் தொகை ஓர் உந்து காரணி. குறைவான மக்கள்தொகை ஓர் இழுகாரணி.
  5. அரசியல் காரணங்கள் :
    • காலங்காலமாக காலனி ஆதிக்கம், போர்கள், அரசாங்கக் கொள்கைகள் போன்றவை இடம்பெயர்தலில் முக்கிய பங்குவகிக்கின்றன. பழங்காலத்திலிருந்தேபோர்கள் இடம்பெயர்வுக்கான குறிப்பிடத்தக்க காரணமாகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 3.
நகரமயமாக்கலினால் ஏற்படும் சவால்களை ஆராய்க.
விடை:
குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதிகள் :
நகர்ப்புற மக்கள்தொகை அதிகரிப்பால் குடியிருப்பு இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. தரமற்ற குடியிருப்புகள் உருவாகின்றன. விரைவான நகரமயமாக்கலால் குடிசைப்பகுதிகள் உருவாகின்றன.

மக்கள் நெரிசல் :
அதிக மக்கள் நெரிசல் சுகாதாரமற்ற சுற்றுப்புறச் சூழலுக்கு வழிவகுக்கிறது. மக்கள் நெரிசல் பல நோய்கள் மற்றும் கலவரங்களுக்கு காரணமாகிறது.

தண்ணீ ர் விநியோகம், வடிகால் மற்றும் சுகாதாரம் :
எந்த ஒரு நகரத்திலும் நாள் முழுவதும் நீர் விநியோகம் இல்லை. வடிகாலமைப்பு மோசமாக உள்ளது. குப்பைகளை அகற்றுதல் கடினமான பணியாக உள்ளது.

போக்குவரத்து மற்றும் நெரிசல் :
இருசக்கர வாகனங்கள் மற்றும் மகிழுந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. போதுமான திட்டங்களும், கட்டமைப்புகளும் இல்லை .

மாசடைதல் :
பல நகரங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர், தொழிலகங்களிலிருந்து வெளியேற்றப்படும் சுத்தகரிக்கப்படாத கழிவுநீர் ஆகியன அருகில் உள்ள நீர்நிலைகளில் கலக்கின்றன. நகர்ப்புற மையங்களைச் சுற்றியுள்ள தொழிலகங்கள் புகை மற்றும் நச்சு வாயுக்களை வெளியிட்டு வளிமண்டலத்தை மாசுபடுத்துகின்றன.

IX. செயல்பாடுகள்

Question 1.
உனது பகுதியில் உள்ள மக்கள் இடம் பெயர்தலுக்கான காரணங்களை ஆராய்ந்து பட்டியலிடுக.
விடை:
எனது பகுதியில் மக்கள் தங்கள் பூர்வீக இடங்களிலிருந்து வளர்ந்து வரும் நகரம் மற்றும் மாநகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். பல ஆண்டுகள் தொடர்ந்து பருவமழை பொய்த்துப் போவதால் வேலை தேடியும் குழந்தைகளின் கல்விக்காகவும் புலம் பெயர்கின்றனர். (உள்நாட்டு இடம்பெயர்வு – ஊரகத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு)

எனது பகுதி வறட்சி பாதித்த பகுதி என்பதால் மக்கள் செழிப்பான பகுதியை நோக்கி நல்ல ஊதியம், நல்ல வேலைவாய்ப்பு தேடி நகர்கின்றனர். (உள்நாட்டு இடம்பெயர்வு – ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு)

திருமணத்தின் காரணமாக, மக்கள்தொகை காரணி அடிப்படையில், பெண்கள் திருமணத்திற்குப்பின் இடம் பெயர்கிறார்கள்.(உள்நாட்டு இடம்பெயர்வு – ஊரகத்திலிருந்து நகர்ப்புறத்துக்கு மற்றும் ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு)

பருவகால இடம்பெயர்வு, முதுமை, பணி நிறைவு, பணி ஓய்வு காரணமாக மக்கள் பூர்வீக இடங்களுக்கு அமைதியான வாழ்க்கை வாழவும், நகர்ப்புற பிரச்சனைகளிலிருந்து மீளவும் இடம்பெயர்கின்றனர். (உள்நாட்டு இடம்பெயர்வு – நகர்ப்புறத்திலிருந்து ஊரகத்திற்கு)

Question 2.
நகரமயமாக்கலின் விளைவுகள் சார்பான தகவல்கள் மற்றும் படங்களைச் சேகரித்து தொகுப்பு படம் (Album) ஒன்றைத் தயார் செய்க. (மாணவர்களுக்கானது)

8th Social Science Guide இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நகரமயமாக்கலின் உலக சராசரி சதவீதம் …………
அ) 55
ஆ) 60
இ) 65
ஈ) 70
விடை:
அ) 55

Question 2.
…………………. ஆம் ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக உலகளாவிய நகர்ப்புற மக்கள் தொகை ஊரக மக்கள் தொகையைவிட அதிகமானது.
அ) 2005
ஆ) 2007
இ) 2009
ஈ) 2011
விடை:
ஆ) 2007

Question 3.
வரலாற்றுக்கு முந்தைய நகரங்களான உர் மற்றும் பாபிலோன் அமைந்த பகுதி …………..
அ) இந்தியா
ஆ) கிரீஸ்
இ) எகிப்து
ஈ) மெசபடோமியா
விடை:
ஈ) மெசபடோமியா

Question 4.
2017 ஆம் ஆண்டில் ………….. புலம் பெயர்வில் இந்தியா மிகப்பெரிய நாடு.
அ) உள்நாட்டு
ஆ) பருவகால
இ) சர்வதேச
ஈ) கட்டாய
விடை:
இ) சர்வதேச

Question 5.
உலக மக்கள் தொகையில் அதிக சதவீதம் மற்றும் சர்வதேச புலம் பெயர்ந்தோர் அதிக சதவீதம் கொண்ட மண்டலம்
அ) ஆப்பிரிக்கா
ஆ) ஆசியா
இ) ஐரோப்பா
ஈ) லத்தீன் அமெரிக்கா
விடை:
ஆ) ஆசியா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பின்தங்கிய நாடுகளைச் சார்ந்த தொழிற்திறன் கொண்ட மக்கள் சிறந்த வேலை வாய்ப்புகளைத் தேடி வளர்ந்த நாடுகளுக்குச் செல்லுதல் ………….. எனப்படும்.
விடை:
அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 2.
அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல் காரணமாக பூர்வீக பகுதிகள் பின்தங்கிய நிலையை அடைதல் ……….. என அழைக்கப்படுகிறது.
விடை:
அறிவுசார் வெளியேற்ற விளைவு

Question 3.
ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நகரங்கள் …………… அருகில் காணப்பட்டன
விடை:
ஏஜியன் கடல்

Question 4.
பாரிஸ், லண்டன், வெனிஸ் ……………. ல் காணப்படும் நகரங்கள்
விடை:
ஜரோப்பா

Question 5.
பொதுவாக அதிகம் நடைபெறக்கூடிய இடம் பெயர்வு ……………….. ஆகும்
விடை:
ஊரகப்பகுதியிலிருந்து நகர்ப்புறம் நோக்கி

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் 2

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
குடிபெயர்பவர் என்பவர் சர்வதேச எல்லைக்கு வெளியிலிருந்து ஒரு புதிய நாட்டில் குடி புகுபவர்கள் ஆகும்
விடை:
சரி

Question 2.
குடியேறுபவர் என்பவர் தன்னுடைய நாட்டிலிருந்து வோறாடு நாட்டிற்கு குடியேறுபவர் ஆவர்
விடை:
சரி

Question 3.
மக்கள் அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து வேறு இடங்களுக்குச் செல்ல காரணமாக அமையும் காரணிகள் உந்துகாரணிகள் எனப்படும்
விடை:
சரி

Question 4.
பிறபகுதிகளில் இருந்து ஓர் இடத்தைநோக்கி மக்களை ஈர்க்கும் காரணிகள் இழ காரணிகள் எனப்படும்.
விடை:
சரி

Question 5.
கால்நடையுடன் இடம் பெயர்வு பருவகால இடம் பெயர்வு அல்ல
விடை:
தவறு

V. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும் காரணத்தையும் ஆராய்க.

Question 1.
கூற்று : இடம் பெயர்வு என்பது இருபுவியியல் பிரதேசங்களுக்கிடையே நடைபெறும் ஒருவகையான மக்கள் தொகை நகர்வாகும்.
காரணம் : ஊரகத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்தல் விளைவு நகரமயமாக்கல் ஆகும்.

அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
விடை:
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மக்கள் எவ்வாறு நிரந்தர குடியிருப்புகளில் வாழத் தொடங்கினர்?
விடை:
நாடோடி மக்கள் காடுகளில் வாழ்வதை தவிர்த்து நாகரிக வாழ்க்கையைப் பின்பற்றத் தொடங்கியபோது வளமான நிலம் மற்றும் வளர்ப்பு விலங்குகளுடன் உறவை மேம்படுத்திக் கொண்டனர்.

இதன் விளைவாக மனிதகுலம் குறிப்பிட்ட அளவு மாற்றமடைந்தது. நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு நிரந்தர குடியிருப்புகளில் வாழத் தொடங்கினர்.

Question 2.
அரசியல் காரணங்களுக்கான இழுகாரணிகள் மற்றும் உந்து காரணிகள் யாவை?
விடை:
அரசியல் காரணங்களுக்கான இழுகாரணிகள் :

  • அரசியல் பாதுகாப்பு
  • தனித்துவம் மற்றும் சுதந்திரம்
    குறைந்த செலவு மற்றும் எளிதில் கிடைக்கும் சேவைகள்

அரசியல் காரணங்களுக்கான உந்து காரணிகள் :

  • போர், சமூக அமைதியின்மை பாதுகாப்பு சார்ந்தவை
  • குறைவான அல்லது பற்றாக்குறையான சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு

Question 3.
ஆண்களைவிட பெண்கள் அதிகமாக புலம்பெயரும் பகுதிகளைப் பெயரிடு.
விடை:
ஆண்களைவிட பெண்கள் அதிகம் புலம் பெயரும் பகுதிகள் :

  • ஐரோப்பா
  • வட அமெரிக்கா
  • ஆஸ்திரேலியா
  • லத்தீன் அமெரிக்கா
  • கரீபியன்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 4.
இடம் பெயர்தலின் முக்கிய விளைவுகள் யாவை?
விடை:
இடம் பெயர்தலின் முக்கிய விளைவுகள் :

  • மக்கள் தொகை விளைவுகள்
  • சமூக விளைவுகள்
  • பொருளாதார விளைவுகள்
  • சுற்றச் சூழல் விளைவுகள்

Question 5.
நகரமயமாக்கலை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
விடை:
நகரமயமாக்கலின் மூன்று காரணிகள் :
இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சி ஊரகத்திலிருந்து நகர்புறங்களுக்கு இடம் பெயர்தல் ஊரகப் பகுதிகளை நகர்புறங்களாக மறுசீரமைப்பு செய்தல்

Question 6.
உலக நகரமயமாக்கலில் முதல் ஐந்து பகுதிகளின் % ஐ பட்டியலிடு.
விடை:
உலக நகரமயமாக்கல் சதவீதம் :

  1. வட அமெரிக்கா (82%)
  2. இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள்(81%)
  3. ஐரோப்பா (74%)
  4. ஓசியானியா (68%)
  5. ஆசியா (50%)

VII. விரிவான விடையளி

Question 1.
நவீனகால துரித நகரமயமாக்கம் எவ்வாறு மக்கள் தொகையை மறுபரவலுக்கு உட்படுத்துகிறது?
விடை:
நவீன காலம் 17 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. இது நகரமயமாக்கலின் மூன்றாம் கட்டமாகும்.

  • 19ஆம் நூற்றாண்டின்தொழிற்புரட்சிநகரங்கள் மற்றும்மாநகரங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்தியது.
  • நகர்புற நாகரிகத்தினால் வட அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனில் அதிக எண்ணிக்கையிலான புதிய நகரங்கள் உருவாயின.
  • நவீன தொலைத்தொடர்பு, போக்குவரத்து, புதிய வணிக கடல் வழித் தடங்களின் வளர்ச்சி வணிகத்தளங்களையும், நகர்புற பகுதிகளையும் வலுப்படுத்தின.
  • ஆப்பிரிக்காவில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. 1930க்கு பின் ஐம்பது நகரங்கள் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக்கொண்டுள்ளன.
  • கெய்ரோ, நைரோபி, மும்பசா, புலவையோ, டூலா, அபிடியான், லாகோஸ், அக்ரா, அடிஸ் அப்பா, லிப்போல்டுவில், லவுண்டா, கேப்டவுன், நட்டால், பிரிட்டோரியா போன்றவை ஆப்பிரிக்காவின் முக்கிய நகரங்கள்.
  • நவீனகால துரித நகரமயமாக்கம் உலகம் முழுவதிலும் மக்கள் தொகையை மறு பரவலுக்கு உட்படுத்துகிறது.

Question 2.
உலக நகரமயமாக்கலின் வளர்ச்சி (பண்டையகாலம்) வரலாற்றை சுருக்கமாக எழுது.
விடை:
பண்டைய காலத்தில் நகரமயமாக்கலின் வளாச்சி :
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே நகர மையங்கள் உருவாகத் தொடங்கின (10000 ஆண்டுகளுக்கு முன்) தொடக்க கால மனிதர்கள் நிரந்தரக் குடியிருப்புகளை உருவாக்கத் தொடங்கினர்.

  • எகிப்து, கிரேக்கம் மற்றும் இந்திய ஆற்றுப்பள்ளத்தாக்கு பகுதிகளில் வேளாண் சார்ந்த சமூகங்கள் தோன்றி அவை நகர்புறம் சார்ந்த சமூகம் மற்றும் நகரமையங்களாக உருவாயின.
  • உணவுதானிய மிகை உற்பத்தியே நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம்.
  • உலக வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அமைந்த நகரங்கள்.
    உலக வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அமைந்த நகரங்கள் :

    • உர் மற்றும் பாபிலோன்(மெசபடோமியா)
    • தீப்ஸ் மற்றும் அலெக்சாந்திரியா (எகிப்து)
    • ஏதென்ஸ் (கிரேக்கம்)
    • ஹரப்பா மற்றும் மொகஞ்சதரோ (இந்தியா)
  • கிரேக்க மற்றும் ரோமானிய காலனியாதிக்க காலங்களில் நகர்ப்புற மையங்களின் அளவு மற்றும் எண்ணிக்கை அதிகரித்தது.
  • 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏஜியன் கடலுக்கு அருகில் பல நகரங்கள் காணப்பட்டன.
  • கிரேக்க காலனியாதிக்க காலங்களில் வர்த்தக விரிவாக்கம் பல நகரங்கள் மற்றும் மாநகரங்களை தோற்றுவித்தது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 3.
இடம் பெயர்தலின் முக்கிய விளைவுகளை விளக்குக.
விடை:
இடம் பெயர்வானது குடியேற்றம் மற்றும் குடியிறக்கம் ஆகிய இரு பகுதிகளையும் பாதிப்படையச் செய்கிறது.

அ) மக்கள் தொகை விளைவுகள் :
திருமணத்திற்கு பிறகு நடைபெறும் பெண்களின் இடம் பெயர்வு அவர்களின் பூர்வீக பகுதியில் பாலின விகிதம் குறையவும் திருமணமாகி செல்லுமிடங்களில் பாலின விகிதம் அதிகரிக்கவும் வழி வகுக்கிறது.

வேலைதேடிச் செல்லும் ஆண் தொழிலாளர்களின் இடம் பெயர்வு அவர்களின் பூர்வீக பகுதிகளில் சார்ந்து இருப்போரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகின்றது.

ஆ) சமூக விளைவுகள் : பல்வேறு பகுதிகளிலிருந்து நடைபெறும் இடம் பெயர்வு பன்முக சமுதாயம் உருவாக வழி வகுக்கின்றது. மக்கள் குறுகிய மனப்பான்மையை விட்டு தாராள மனப்பான்மைக்கு மாற ஏற்ற சூழலை உருவாக்குகிறது.

இ) பொருளாதார விளைவுகள் :
அதிக மக்கள் தொகை பகுதிகளிலிருந்து குறைந்த மக்கள் தொகை பகுதிகளை நோக்கி நகரும் இடம் பெயர்வு மக்கள் வள விகிதம் சமநிலையற்றதாகி விட காரணமாகிறது. சில வேளை இருபகுதிகளும் உகந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளாக மாறவும் செய்யலாம்.

அறிவுசார்ந்த மக்கள் வெளியேறுதல் (Brain Drain) நடைபெறுகிறது (பின்தங்கிய நாடுகள் → வளர்ந்த நாடுகள்) பூர்வீக பகுதிகள் பின்தங்குகின்றன. (அறிவுசார் வெளியேற்ற விளைவு)

ஈ) சுற்றுச்சூழல் விளைவுகள் :

  • நகரங்களில் மக்கள் நெரிசல் மற்றும் வளங்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.
  • காற்று, நீர், நிலம் மாசு அடைய வழி வகுக்கிறது.
  • குடி நீர் பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல், மோசமான வடிகால் அமைப்பு மற்றும் போதிய குடியிருப்பின்மை பிரச்சனைகள் ஏற்படுகிறது.
  • குடிசை வாழ் பகுதிகள் உருவாகின்றன.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் 3