Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

8th Social Science Guide பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி …………..
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதம அமைச்சர்
இ) ஆளுநர்
ஈ) முதலமைச்சர்
விடை:
அ) குடியரசுத் தலைவர்

Question 2.
இந்திய இராணுவப் படையின் முதன்மை நோக்கமானது
அ) தேசிய பாதுகாப்பு
ஆ) தேசிய ஒற்றுமை
இ) அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைக் காத்தல்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

Question 3.
இராணுவ தினம் அனுசரிக்கப்படும் நாள்
அ) ஜனவரி 15
ஆ) பிப்ரவரி 1
இ) மார்ச் 10
ஈ) அக்டோபர் 7
விடை:
அ) ஜனவரி 15

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 4.
அஸ்ஸாம் ரைபிள்ஸ் எதன் கீழ் செயல்படுகிறது?
அ) பாதுகாப்பு அமைச்சகம்
ஆ) தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இ) திட்ட மேலாண்மை நிறுவனம்
ஈ) உள்துறை அமைச்சகம்
விடை:
ஈ) உள்துறை அமைச்சகம்

Question 5.
இந்தியக் கடலோரக் காவல்படை நிறுவப்பட்ட ஆண்டு
அ) 1976
ஆ) 1977
இ) 1978
ஈ) 1979
விடை:
இ) 1978

Question 6.
இந்திய வெளியுறவுக் கொள்கையானது பல்வேறு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. அவைகளுள் ஒன்று
அ) சத்தியமேவ ஜெயதே
ஆ) பஞ்சசீலம்
இ) மேற்கூறிய இரண்டும்
ஈ) மேற்கூறிய எவையுமில்லை
விடை:
ஆ) பஞ்சசீலம்

Question 7.
பின்வருவனவற்றுள் எந்த தீவுகள் இந்தியாவிற்கு சொந்தமானவை?
அ) அந்தமான் மற்றும் மாலத்தீவு
ஆ) அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்
இ) இலங்கை மற்றும் மாலத்தீவு
ஈ) மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள்
விடை:
ஆ) அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவின் மையம் அமைந்துள்ள இடம் ……………….
விடை:
வெல்லிங்டன்

Question 2.
இந்திய கடற்படையின் தலைமை தளபதி ………….. ஆவார்.
விடை:
அட்மிரல்

Question 3.
இந்திய விமானப்படையிலிருந்து ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் மற்றும் ஒரே அதிகாரி …………………. ஆவார்.
விடை:
அர்ஜுன் சிங்

Question 4.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினை வடிவமைத்த முதன்மைச் சிற்பி ……………..
விடை:
ஜவஹர்லால் நேரு

Question 5.
அணிசேராமை என்ற சொல்லை உருவாக்கியவர் ………………..
விடை:
வி.கே. கிருஷ்ணமேனன்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPF) பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது
விடை:
தவறு

Question 2.
மெட்ராஸ் ரெஜிமென்ட் பழமையான காலாட்படைப் பிரிவுகளில் ஒன்று.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 3.
விரைவு அதிரடிப் படையானது, மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) ஒரு சிறப்பு பிரிவு ஆகும்.
விடை:
சரி

Question 4.
NCC மாணவர்களுக்கு அடிப்படை இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
விடை:
சரி

Question 5.
வங்காளதேசம் இந்தியாவின் ஒரு பகுதி ஆகும்.
விடை:
தவறு

Question 6.
இந்தியாவிற்கும், ASEAN என்ற கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் மியான்மர் ஒரு நிலப்பாலமாக செயல்படுகிறது.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
ஆயுதப்படைகள் தொடர்பான பின்வரும் கூற்றினை ஆராய்க.
I. இந்திய இராணுவப் படை ஆயுதப்படைகளின் நிலஅடிப்படையிலான பிரிவு ஆகும்.
II. இந்திய இராணுவப் படையின் நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் மனித மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது.

அ) மட்டும் சரி
ஆ) II மட்டும் சரி
இ) 1 மற்றும் II சரி
ஈ) | மற்றும் II தவறு
விடை:
இ) 1 மற்றும் II சரி

Question 2.
கூற்று : குடியரசுத் தலைவர் இந்திய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி ஆவார்.
காரணம் : குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும் மிக உயர்ந்த பதவி நிலையையும் வகிக்கிறார்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

Question 3.
கூற்று : பன்னாட்டு கூட்டுறவை இந்தியா ஆதரிக்கிறது.
காரணம் : நட்பு – கூட்டுறவு மூலம் நாடுகளுக்கிடையே உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்று இந்தியா நம்புகிறது.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல –
விடை:
இ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

Question 4.
இனவெறிக்கொள்கை பற்றி பின்வரும் எந்த கூற்று சரியானவை அல்ல?
I. நிறவெறிக் கொள்கை என்பது இனப்பாகுபாட்டின் ஒரு மோசமான வடிவம்.
II. இது மனிதாபிமானத்திற்கு எதிரானது.
III. இனப்பாகுபாட்டுக் கொள்கை இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.

அ) 1 மற்றும் II
ஆ) II மற்றும் III
இ) II மட்டும்
ஈ) III மட்டும்
விடை:
ஈ) III மட்டும்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 5.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
அ) மாலத்தீவு
ஆ) இலங்கை
இ) மியான்மர்
ஈ) லட்சத்தீவுகள்
விடை:
இ) மியான்மர்

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
தேசிய பாதுகாப்பு மிக அவசியமானது ஏன்?
விடை:

  • ஒவ்வொரு நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் தேசிய பாதுகாப்பு மிகவும் அவசியமானது ஆகும்.
  • நாட்டின் அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

Question 2.
பின்வருவனவற்றிற்கு விரிவாக்கம் தருக.
அ) SFF
ஆ) ICG
இ) BSF
ஈ) NCC
விடை:
அ) SFF – சிறப்பு எல்லைப்புறப் படை
ஆ) ICG – இந்தியக் கடலோரக் காவல்படை
இ) BSF – எல்லை பாதுகாப்புப் படை
ஈ) NCC – தேசிய மாணவர் படை

Question 3.
மத்திய ரிசர்வ் காவல் படை பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
விடை:
அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும். தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பதற்கும். சமூக நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு உதவுவதே மத்திய ரிசர்வ் காவல்படையின் நோக்கமாகும்.

மேலும். சட்டம். ஒழுங்கு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பினை பராமரிப்பதற்கும் இது உதவுகிறது.

மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு சிறப்பு பிரிவு விரைவு அதிரடிப்படை ஆகும். இது கலவரம். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல். மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அமைதியற்ற சூழ்நிலைகள் ஆகியவற்றை திறம்பட எதிர்கொள்கிறது.

Question 4.
அணிசேரா இயக்க நிறுவனத் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • இந்தியாவின் ஜவஹர்லால் நேரு
  • யூகோஸ்லாவியாவின் டிட்டோ
  • எகிப்தின் நாசர்
  • இந்தோனேசியாவின் சுகர்ணோ
  • கானாவின் குவாமே நிக்ரூமா

Question 5.
இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கொள்கைகளை எழுதுக.
விடை:

  • தேசிய நலனைப் பாதுகாத்தல்
  • உலக அமைதியினை அடைதல்
  • ஆயுதக்குறைப்பு
  • காலனித்துவம். இனவெறி மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றை நீக்குதல்
  • நட்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
  • பொருளாதார வளர்ச்சி

Question 6.
சார்க் உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • இந்தியா
  • வங்காளதேசம்
  • பாகிஸ்தான்
  • நேபாளம்
  • பூடான்
  • இலங்கை
  • மாலத்தீவு
  • ஆப்கானிஸ்தான்

VII. விரிவான விடையளி

Question 1.
இந்திய இராணுவப் படையின் அமைப்பு மற்றும் நிர்வாகத்தினை விவரி.
விடை:
அமைப்பு:

  • இந்திய இராணுவப் படை என்பது நில அடிப்படையிலான ஒரு பிரிவு ஆகும்.
  • இது உலக அளவில் மிகப்பெரிய தன்னார்வப் படைப் பிரிவு ஆகும்.
  • இது ஜெனரல் எனப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட இராணுவப் படைத் தளபதியால் வழி நடத்தப்படுகிறது.
  • இந்திய இராணுவம் “ரெஜிமென்ட்” என்ற ஒரு அமைப்பு முறையைக் கொண்டது.
  • இது செயல்பாட்டு ரீதியாகவும். புவியியல் அடிப்படையிலும் ஏழு படைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம்:

  • தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய ஒற்றுமையைப் பேணுகிறது.
  • அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைப் பாதுகாத்தல். உள்நாட்டு அச்சுறுத்தல்கள் மற்றும் நாட்டின் எல்லைக்குள் அமைதியையும். பாதுகாப்பையும் பேணுதல் ஆகியவை இதன் பணிகளாகும்.
  • மேலும் இயற்கைப் பேரழிவு மற்றும் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளையும் செய்கிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 2.
துணை இராணுவப் படை பற்றி எழுதுக.
விடை:

  • உள்நாட்டு பாதுகாப்பைப் பராமரிக்கவும், கடலோரப் பகுதியைப் பாதுகாக்கவும், இராணுவத்திற்கு உதவும் படைகள் துணை இராணுவப் படைகள் என்றழைக்கப்படுகின்றன.
  • இவை இரயில் நிலையங்கள், எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் ஆகிய முக்கியமான பகுதிகளைப் பாதுகாக்கும் பணியைச் செய்கின்றன.
  • இயற்கை மற்றும் மனித பேரழிவுகளிலிருந்து மக்களை மீட்கும் பணிகளையும் செய்கின்றன.
  • அமைதி காலங்களில் இத்துணை இராணுவப் படைகள் சர்வதேச எல்லைகளைப் பாதுகாக்கும் பணியையும் செய்கின்றன.

அஸ்ஸாம் ரைபிள்ஸ்:

  • இது 1835ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • இது அஸ்ஸாம் பகுதியில் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது.
  • இது இராணுவ பயிற்சி பெற்ற மக்கள் படை ஆகும்.
  • இதில் தற்போது 46 படைப் பிரிவுகள் உள்ளன.
  • இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

சிறப்பு எல்லைப்புறப் படை:

  • இது ஒரு துணை இராணுவ சிறப்புப் படை ஆகும்.
  • இது 1962இல் உருவாக்கப்பட்டது.
  • இது இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் கீழ் செயல்பட்டு வருகிறது.

Question 3.
பஞ்சசீலத்தின் ஐந்து கொள்கைகளை எழுதுக.
விடை:

  • ஒவ்வொரு நாட்டின் எல்லையையும், இறையாண்மையையும் பரஸ்பரம் மதித்தல்
  • பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை
  • பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்
  • பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்
    அமைதியாக இணைந்திருத்தல்

Question 4.
இந்தியா தனது அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. எப்படி?
விடை:

  • அண்டை நாடுகளுடன் இந்தியாவின் நிலைப்பாடு தனித்துவமானது.
  • இந்தியா சர்வதேச மற்றும் பிராந்திய நாடுகளுடன் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது,
  • ஏனெனில் ஒத்துழைப்பு மூலமே நாடுகளிடையேயான பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்க்க முடியும் என்று இந்தியா நம்புகிறது.
  • இந்தியா தன் அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்துகிறது.
  • வள ஆதாரங்கள், கருவிகள் மற்றும் பயிற்சி ஆகிய வடிவில் அண்டை நாடுகளுக்குத் தேவையான ஆதரவினை இந்தியா அளித்து வருகிறது.
  • பொருட்கள். மக்கள் ஆற்றல். மூலதனம் மற்றும் தகவல்கள் ஆகியவற்றின் தடையில்லா பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்காக அதிக இணைப்பும் ஒருங்கிணைப்பும் அளிக்கப்படுகிறது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
பாதுகாப்பு படைப்பிரிவுகளில் பணிசெய்வது நாட்டின் மிக மதிப்பு மிக்க மற்றும் மரியாதைக்குரிய நிலையை உறுதிப்படுத்துகிறது. அதன் முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக.

IX. செயல்திட்டம் மற்றும் செயல்பாடுகள்

Question 1.
நமது பாதுகாப்பு அமைப்புப் பற்றி ஒரு படத்தொகுப்பு தயார் செய்க.

Question 2.
இந்திய இராணுவத்தில் வழங்கப்படும் விருதுகள் குறித்த தகவல்களைச் சேகரி. (உ.ம். பரம்வீர் சக்ரா )

Question 3.
வகுப்பில் உள்ள மாணவர்களை எட்டு குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு குழுவும் ஒரு சார்க் நாட்டின் பிரதிநிதியாகும். ஒவ்வொரு குழுவும் அந்த நாட்டின் பெயர் மற்றும் தேசியக்கொடியினைக் காட்சிப்படுத்தவும். பின்வரும் தலைப்புகளில் குழு கலந்துரையாடல் அல்லது வினாடி வினா நடத்தவும்.
i) நிலம் மற்றும் மக்கள்
ii) அரசாங்கத்தின் அமைப்பு
iii) மூலதனம்
iv) நாணயம்
v) இந்தியாவுடனான உடன்பாட்டு அம்சங்கள்

8th Social Science Guide பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்திய ஆயுதப் படைகள் எதன் கீழ் செயல்படுகின்றன?
அ) பாதுகாப்பு அமைச்சகம்
ஆ) வெளியுறவுத் துறை அமைச்சகம்
இ) உள்துறை அமைச்சகம்
ஈ) தேசிய பாதுகாப்பு அமைச்சகம்
விடை:
அ) பாதுகாப்பு அமைச்சகம்

Question 2.
சீன-இந்தியப் போர் நடைபெற்ற ஆண்டு,
அ) 1963
ஆ) 1962
இ) 1965
ஈ) 1959
விடை:
ஆ) 1962

Question 3.
இந்திய கடலோர காவல் படை எதன் கீழ் செயல்படுகிறது?
அ) பாதுகாப்பு அமைச்சகம்
ஆ) வெளியுறவுத் துறை அமைச்சகம்
இ) உள்துறை அமைச்சகம்
ஈ) கடற்படைத் தளபதி
விடை:
அ) பாதுகாப்பு அமைச்சகம்

Question 4.
இனவெறிக் கொள்கை பின்பற்றப்பட்ட நாடு.
அ) தென் அமெரிக்கா
ஆ) தென் ஆப்பிரிக்கா
இ) ஸ்ரீலங்கா
ஈ) இந்தியா
விடை:
ஆ) தென் ஆப்பிரிக்கா

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 5.
இந்தியா எந்த நாட்டோடு பொதுவான நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளவில்லை?
அ) நேபாளம்
ஆ) பர்மா
இ) ஆப்கானிஸ்தான்
ஈ) ஸ்ரீலங்கா
விடை:
ஈ) ஸ்ரீலங்கா

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
உலக அளவில் மிகப்பெரிய தன்னார்வப் படைப்பிரிவு ………… ஆகும்.
விடை:
இந்திய இராணுவப்படை

Question 2.
இந்தியக் கடற்படை …………. பிரிவுகளைக் கொண்டது.
விடை:
மூன்று

Question 3.
இந்திய இராணுவத்தின் மிக உயர்ந்த பதவி …………. ஆகும்.
விடை:
பீல்டு மார்ஷல்

Question 4.
இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் ………….. ஆவார்.
விடை:
சாம் மானக்ஷா

Question 5.
இந்தியாவின் இரண்டாவது பீல்டு மார்ஷல் ………….. ஆவார்.
விடை:
கே.எம். கரியப்பா

Question 6.
இனவெறிக் கொள்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆண்டு
விடை:
1990

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை 2

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
சிறப்பு எல்லைப்புறப் படை இந்திய கடற்படையின் ஒரு பிரிவு ஆகும்.
விடை:
தவறு

Question 2.
விரைவு அதிரடிப் படை இயற்கை பேரழிவு மற்றும் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளைச் செய்கிறது.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 3.
முதலாம் இராஜேந்திரன் இலங்கையின் மீது கடற்படையெடுப்பை நிகழ்த்தினார்.
விடை:
தவறு

Question 4.
இந்தியா பி.பி.ஐ.என். என்ற கூட்டமைப்பில் ஒரு உறுப்பு நாடாகும்.
விடை:
சரி

Question 5.
அணிசேராமை என்பது நடுநிலைமையும் அல்ல. ஈடுபாடின்மையும் அல்ல.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
அஸ்ஸாம் ரைபிள்ஸ் தொடர்பான பின்வரும் கூற்றினை ஆராய்க.
I. அஸ்ஸாம் ரைபிள்ஸ் 1835 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
II. இது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

அ) 1 மட்டும் சரி
ஆ) II மட்டும் சரி
இ) 1 மற்றும் II சரி
ஈ) மற்றும் II தவறு
விடை:
அ) மட்டும் சரி

Question 2.
கூற்று : தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிகச்சிறந்த வெற்றியாகும்.
காரணம் : இந்தியா அனைத்து வகையான இனப்பாகுபாட்டிற்கும் எதிராகப் போராடியது.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றினை விளக்கவில்லை
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

Question 3.
ஊர்க்காவல் படை பற்றிய பின்வரும் எந்த கூற்று / கூற்றுகள் சரியானது அல்ல?
I. இந்திய ஊர்க்காவல் படை இந்திய இராணுவத்திற்குத் துணையான ஒரு தன்னார்வப் படை ஆகும்.
II. 20 முதல் 35 வயதுடைய இந்தியக் குடிமக்கள் ஊர்க்காவல் படையில் சேரலாம்.
III. ஊர்க்காவல் படையில் சேரும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.

அ) 1 மற்றும் II
ஆ) II மற்றும் III
இ) II மட்டும்
ஈ) III மட்டும்
விடை:
அ) 1 மற்றும் II

Question 4.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
அ) மத்திய ரிசர்வ் காவல் படை
ஆ) இந்தோ -திபெத்திய எல்லைக் காவல்
இ) எல்லை பாதுகாப்புப் படை
ஈ) சிறப்பு எல்லைப் புற படை
விடை:
ஈ) சிறப்பு எல்லைப் புற படை

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
இந்திய கடற்படை பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக.
விடை:

  • இந்திய கடற்படையின் முதன்மை நோக்கம் நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதாகும்.
  • இது நாட்டின் பிற ஆயுதப்படைகளுடன் இணைந்து செயல்படுகிறது.
  • இந்திய நிலப்பகுதி. மக்கள். கடல்சார் நலன்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அல்லது ஆக்கிரமிப்புகளைத் தடுக்க அல்லது தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுகிறது.
  • இது அட்மிரல் என்றழைக்கப்படும் கடற்படைத் தளபதியால் வழிநடத்தப்படுகிறது.
  • இது மூன்று கடற்படைப் பிரிவுகளைக் கொண்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 2.
எல்லை பாதுகாப்புப் படையின் பணிகளைக் கூறு.
விடை:
எல்லை பாதுகாப்புப் படை இந்திய நில எல்லைப் பகுதிகளைக் காப்பது மற்றும் நாடு கடந்த குற்றங்களைத் தடுப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது.

Question 3.
ஊர்க்காவல் படை பற்றி உமக்கு யாது தெரியும்?
விடை:

  • ஊர்க்காவல் படை ஒரு தன்னார்வப் படை ஆகும்.
  • இது இந்தியக் காவல்துறைக்கு துணையாக பணியாற்றுகிறது.
  • இப்படையின் உறுப்பினர்கள் சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளான தொழில்சார் வல்லுநர்கள், கல்லூரி மாணவர்கள், விவசாய மற்றும் தொழில்துறை பணியாளர்கள் ஆகியோர்களிடமிருந்து நியமிக்கப்படுகிறார்கள்.
  • 15 முதல் 50 வயதுடைய அனைவரும் உறுப்பினராகலாம்.
  • உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.

Question 4.
இந்தியாவுடன் பொது எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் யாவை?
விடை:

  • பாகிஸ்தான்
  • ஆப்கானிஸ்தான்
  • நேபாளம்
  • சீனா
  • பூடான்
  • வங்காளதேசம்
  • மியான்மர்

Question 5.
இந்தியாவின் அண்டை நாடுகள் யாவை?
விடை:

  • வடமேற்கில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்
  • வடக்கில் சீனா, நேபாளம், பூடான்
  • கிழக்கில் வங்காளதேசம்
  • தூரகிழக்கில் மியான்மர்
  • தென்கிழக்கில் இலங்கை
  • தென்கிழக்கில் மாலத்தீவு

VII. பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக

Question 1.
அணிசேராமை பற்றி விவரிக்க.
விடை:
அணிசேராமை என்ற சொல் வி.கே. கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

அறிவியல் அணிசேராமை என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கிய அம்சமாக விளங்குகிறது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் தலைமையிலான இராணுவக் கூட்டில் இணையாமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தலே அணி சேராதிருத்தலின் நோக்கமாகும். அணிசேராமை என்பது நடுநிலைமையும் அல்ல, ஈடுபாடின்மையும் அல்ல.

அணிசேராமை என்பது எந்தக் கூட்டணியிலும் சேராமல் சர்வதேச பிரச்சனைகளில் சுதந்திரமாக தீர்மானிக்கும் நிலைபாட்டைக் குறிக்கும்.

அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள்:
இந்தியாவின் ஜவஹர்லால் நேரு, யுகோஸ்லாவியாவின் டிட்டோ, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ரூமா ஆகியோராவர்.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை 3