Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

8th Social Science Guide மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் …………………… மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அ) ஐ.நா.சபை
ஆ) உச்ச நீதிமன்றம்
இ) சர்வதேச நீதிமன்றம்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) ஐ.நா.சபை

Question 2.
1995ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் …………… இல் கூடினர்.
அ) பெய்ஜிங்
ஆ) நியூயார்க்
இ) டெல்லி
ஈ) இவைகளில் எதுவுமில்லை
விடை:
அ) பெய்ஜிங்

Question 3.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு
அ) 1990
ஆ) 1993
இ) 1978
ஈ) 1979
விடை:
ஆ) 1993

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 4.
ஐ.நா. சபை 1979 ஆம் ஆண்டை ……………………… சர்வதேச ஆண்டாக அறிவித்தது.
அ) பெண்குழந்தைகள்
ஆ) குழந்தைகள்
இ) பெண்கள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) குழந்தைகள்

Question 5.
உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
அ) டிசம்பர் 9
ஆ) டிசம்பர் 10
இ) டிசம்பர் 11
ஈ) டிசம்பர் 12
விடை:
ஆ) டிசம்பர் 10

Question 6.
மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது?
அ) மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)
ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)
இ) மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC)
ஈ) சர்வதேசப் பெண்கள் ஆண்டு
விடை:
அ) மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHR)

Question 7.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?
அ) ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி
ஆ) ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
இ) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஏதேனும் ஒருவர்
ஈ) ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி
விடை:
ஆ) ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Question 8.
உலக மனித உரிமைகள் அறிவிப்பில் உள்ள சட்டப்பிரிவுகளின் எண்ணிக்கை யாவை?
ஆ) 20
ஆ) 30
இ) 40
ஈ) 50
விடை:
ஆ) 30

Question 9.
தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் பதவிக் காலம் என்ன?
அ) 5 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை
ஆ) 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
இ) 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
ஈ) 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை
விடை:
ஈ) 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை

Question 10.
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
அ) புது டெல்லி
ஆ) மும்பை
இ) அகமதாபாத்
ஈ) கொல்கத்தா
விடை:
அ) புது டெல்லி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒவ்வொரு தனிமனிதனும் கண்ணியமான வாழ்க்கை வாழ ………………. உண்டு .
விடை:
உரிமை

Question 2.
மனித உரிமைகள் என்பது ……………. உரிமைகள்.
விடை:
இயல்பான அடிப்படை

Question 3.
மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு …………………
விடை:
1997

Question 4.
இந்திய அரசியலமைப்பின் 24 வது சட்டப்பிரிவு ……………. ஐ தடைசெய்கிறது.
விடை:
குழந்தைத் தொழிலாளர் முறை

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 5.
ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட ஆண்டு ……………..
விடை:
1945

III. பொருத்துக.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகள் ஒரே மாதிரியானவை.
விடை:
தவறு

Question 2.
மனித மற்றும் குடிமகனின் உரிமைகள் அறிவிப்பு இந்தியாவில் அறிவிக்கப்பட்டது.
விடை:
தவறு

Question 3.
1993ஆம் ஆண்டு மனித உரிமைச் சட்டம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உருவாக வழிவகுத்தது.
விடை:
சரி

Question 4.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது.
விடை:
தவறு

Question 5.
மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய, மாநில அளவிலான மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
தவறான கூற்றை கண்டறியவும்
அ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.
ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓர் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்.
இ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.
ஈ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு பலதரப்பு நிறுவனங்களைக் கொண்டதாகும்.
விடை:
ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓர் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்

Question 2.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்து பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல.
அ) இது 1993 இல் நிறுவப்பட்டது.
ஆ) மனித உரிமை மீறல் வழக்குகளில் குற்றவாளியைத் தண்டிக்க ஆணையத்திற்கு எந்த உரிமையும் இல்லை .
இ) இந்த ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.
ஈ) இந்த ஆணையம் தனது ஆண்டு அறிக்கையை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்புகிறது.
விடை:
இ) இந்த ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்

Question 3.
கூற்று : டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
காரணம் : இது எலினார் ரூஸ்வெல்டின் பிறந்த நாளை நினைவு கூர்கிறது.

அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
ஆ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்று காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 4.
பின்வரும் கூற்றை ஆராய்க.
1) மாநில மனித உரிமைகள் ஆணையம் பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு ஆகும்.
2) மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒரு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக்

கொண்டதாகும். மேற்கூறிய கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1,2
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) 1 மட்டும்

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
மனித உரிமைகள் என்றால் என்ன?
விடை:
மனித உரிமைகள் என்பது இனம், பாலினம், தேசிய இனம், இனக் குழுக்களின் தன்மை, மொழி மற்றம் சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான இயல்பான உரிமைகள் ஆகும்.

Question 2.
மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பின் (UDHR) முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:
மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பின் (UDHR) முக்கியத்தும் :

  • உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா பொதுச்சபையால் 1948ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இந்த அறிவிப்பு பாரிஸ் நகரில் (பிரான்ஸ்) 1948ம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. (பொதுச்சபை தீர்மானம் 217 A)
  • இது மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என்று அழைக்கப்படுகிறது.
  • இதன் கொள்கைகள் 185க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. உலக மனித உரிமைகள் அறிவிப்பு 500க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

Question 3.
இந்திய அரசியலமைப்பின் 45 வது சட்டப்பிரிவு எதனை அறிவுறுத்துகிறது?
விடை:
இந்திய அரசியலமைப்பின் 45வது சட்டப்பிரிவு :
பிரிவு 45 ஆறு (6) வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க அரசு முயல்கிறது.

Question 4.
கல்வி உரிமைச் சட்டம் பற்றி எழுதுக.
விடை:
கல்வி உரிமைச் சட்டம் :
சட்டப்பிரிவு 21A அரசாங்கம் 6 முதல் 14வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது.

Question 5.
பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்களைக் குறிப்பிடுக.
விடை:
பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் :

  • இந்து விதவை மறுமணச் சட்டம் 1856 (விதவைகள் மறுமணத்தை சட்ட பூர்வமாக்கியது)
  • வரதட்சணைத் தடைச் சட்டம் 1961
    (வரதட்சணை என்ற பெயரில் மோசமாக நடத்துவதற்கு கடுமையான தண்டனை வழங்குகிறது.
  • வன்கொடுமை தடுப்பு சட்டம் 2005 (கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் பெண்கள் துன்புறுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது)

Question 6.
அரசியல் உரிமைகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
விடை:
அரசியல் உரிமைகள் :

  • கருத்துச் சுதந்திரம்
  • அமைதியாக கூட்டம் நடத்துதல்
  • தன் நாட்டின் அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் உரிமை
  • வாக்களிக்கும் உரிமை
  • பேச்சுரிமை
  • ந தகவல்களைப் பெறும் உரிமை

Question 7.
மனித உரிமைகளின் ஐந்து முதன்மைப் பிரிவுகளை குறிப்பிடுக.
விடை:
மனித உரிமைகளின் முதன்மைப் பிரிவுகள் :

  1. வாழ்வியல் உரிமைகள்
  2. அரசியல் உரிமைகள்
  3. சமூக உரிமைகள்
  4. பொருளாதார உரிமைகள் 5.கலாச்சார உரிமைகள்

VII. விரிவான விடையளி

Question 1.
மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகளை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 2
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 3

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 2.
மனித உரிமைகளின் ஏதேனும் ஐந்து அடிப்படைப் பண்புகளை விவரி.
விடை:
மனித உரிமைகளின் அடிப்படைப்பண்புகள் :
இயல்பானவை : மனித உரிமை எந்த ஒரு நபராலும் அதிகாரத்தாலும் வழங்கப்படுவதில்லை.

அடிப்படையானவை : மனிதனின் வாழ்க்கையும் கண்ணியமும் இந்த அடிப்படை உரிமைகள் இல்லையென்றால் அர்த்தமற்றதாகிவிடும்.

மாற்றமுடியாதவை : மனித உரிமைகள் தனிநபரிடம் இருந்து பறிக்கமுடியாதவை

பிரிக்க முடியாதவை : பிற உரிமைகளை ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருந்தாலும் இந்த அடிப்படை மனித உரிமைகளை மறுக்க முடியாது.

உலகளாவியவை: ஒருவரின் தோற்றம் (அல்லது) நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இந்த உரிமைகள் பொருந்தும். தேசிய எல்லையைத் தாண்டி அனைத்து நாடுகளிலும் இந்த உரிமைகள் அமல்படுத்தப்படுகின்றன.

உலகளாவியவை : ஒருவரின் தோற்றம் (அல்லது) நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இந்த உரிமைகள் பொருந்தும். தேசிய எல்லையைத் தாண்டி அனைத்து நாடுகளிலும் இந்த உரிமைகள் அமல்படுத்தப்படுகின்றன.

சார்புடையவை : ஒரு உரிமையைப் பயன்படுத்தும் போது மற்றொன்றை உணராமல் இருக்க முடியாது. இவை ஒன்றுக்கொன்று சார்புடையவை

Question 3.
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அரசு மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள் யாவை?
விடை:
குழந்தைகள் பாதுகாப்புக்காக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் :
இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

கல்வி உரிமைச் சட்டம் :
சட்டப்பிரிவு 21A அரசாங்கம் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது.

குழந்தைத் தொழிலாளர் சட்டம் (தடை மற்றும் சீரமைப்புச் சட்டம் 1986)
15 வயது பூர்த்தியடையாத எந்த ஒரு குழந்தையையும் வேலைக்கு அமர்த்த தடை செய்கிறது.

சிறார் நீதிச் சட்டம் 2000 (குழந்தைகளை பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்)
பொதுவான கவனிப்பு இல்லாமல் இருக்கும் குழந்தைகளை நட்பு ரீதியில் அணுகி அவர்களை சீர்திருத்த முயற்சி மேற்கொள்கிறது.

போக்சோ (POSCO) சட்டம் 2012
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம். குழந்தைகளின் நலனே மிக முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டிய அம்சம் எனக் கருதுகிறது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
உலகளாவிய மனித உரிமைகள் அறிவிப்பு யாருக்கு பொருந்தும்? இது உங்களுக்கு ஏன் மக்கியமாக இருக்கிறது?
விடை:
உலகளாவிய மனித உரிமைகள் அறிவிப்பு அனைவருக்கும் பொருந்தும்.
குற்றவாளிகள், நாட்டுத் தலைவர்கள், குழந்தைகள், ஆண்கள், பெண்கள், ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், அகதிகள், நாடற்றோர், வேலையற்றோர், வேலையிலுள்ளோர், வங்கியாளர்கள், தீவிரவாதிகள், ஆசிரியர்கள், நடனக்கலைஞர்கள் விண்வெளிவீரர்கள் …..

IX. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு

Question 1.
நீங்கள் அனுபவிக்கும் பத்து உரிமைகள் மற்றும் உங்களுக்கான பொறுப்புகளைப் பட்டியலிடுக.
விடை:
நான் அனுபவிக்கும் உரிமைகள் :

  • வாழ்வுக்கான உரிமை
  • கல்விக்கான உரிமை
  • தனிநபர் சுதந்திர உரிமை
  • சமயச் சுதந்திர உரிமை
  • கருத்துச் சுதந்திர உரிமை
  • இயங்குவதற்கான உரிமை
  • சமத்துவ உரிமை
  • நீதிபெறும் உரிமை கழக அமைப்புகள் நிறுவுவதற்கான உரிமை காலச்சார சுதந்திர உரிமை

எனக்கான பொறுப்புகள் :

  • அரசியலமைப்பை ஆதரிக்க, பாதுகாக்க வேண்டிய கடமை.
  • ஜனநாயக முறைகளில் பங்கேற்றல்
  • மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி சட்டங்களை மதித்தல் மற்றும் கீழ்ப்படிதல்
  • மற்றவர்களின் உரிமைகள், நம்பிக்கைகள், கருத்துக்களை மதித்தல்.
  • தல சமூகத்தில் பங்கேற்றல்
  • மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புக்களுக்கான வருமானவரி மற்றும் பிறவரிகளை நேர்மையுடன் குறிப்பிட்ட காலவரையரையில் செலுத்துதல்.
  • தேவை ஏற்பட்டால் நாட்டைப் பாதுகாத்தல்
  • சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சனைகளை அறிந்து கொள்ளுதல்.

8th Social Science Guide மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் Additinal Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஹேபியஸ் கார்பஸ் சட்டம் (இங்கிலாந்து) ____________
அ) 1628
ஆ) 1679
இ) 1689
ஈ) 1789
விடை:
ஆ) 1679

Question 2.
மனித உரிமைகள் பற்றிய சிந்தனை வலுவாக எழுச்சி பெறக் காரணம் ____________.
அ) பிரெஞ்சுப் புரட்சி
ஆ) முதல் உலகப்போர்
இ) அமெரிக்க விடுதலைப் போர்
ஈ) இரண்டாம் உலகப் போர்
விடை:
ஈ) இரண்டாம் உலகப் போர்

Question 3.
மனித உரிமைகள் பிரகடனத்தில் __________ சட்டப்பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன.
அ) 20
ஆ) 30
இ) 40
ஈ) 50
விடை:
ஆ) 30

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 4.
சமயச் சுதந்திரம் ஒரு __________
அ) வாழ்வியல் உரிமை
ஆ) சமூக உரிமை
இ) கலாச்சார உரிமை
ஈ) அரசியல் உரிமை
விடை:
இ) கலாச்சார உரிமை

Question 5.
____________ ஒரு வாழ்வியல் உரிமையாகும்.
அ) வாழ்வதற்கான உரிமை
ஆ) வாக்களிக்கும் உரிமை
இ) சொத்துரிமை
ஈ) கல்வி உரிமை
விடை:
அ) வாழ்வதற்கான உரிமை 6

Question 6.
மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியவற்றின் கீழுள்ள துறைகள் இந்திய அரசியலமைப்பின் ___________ அட்டவணையில் உள்ளது.
அ) ஐந்தாவது
ஆ) ஆறாவது
இ) ஏழாவது
ஈ) எட்டாவது
விடை:
இ) ஏழாவது

Question 7.
சர்வதேச பெண்கள் ஆண்டு ________
அ) 1975
ஆ) 1976
இ) 1977
ஈ) 1978
விடை:
ஈ) 1978

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
முக்கியமான தேசியச் சொத்தாகக் கருதப்படுவது ___________
விடை:
குழந்தை

Question 2.
முதுமை காலத்தில் ___________ மனித உரிமைகளாக கருதப்படுகின்றன.
விடை:
பாதுகாப்பும் ஆதரவும்

Question 3.
__________ பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் சமமான உரிமைகளை உறுதி செய்கிறது.
விடை:
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம்

Question 4.
___________ 1997 பெண்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.
விடை:
பெண்களை கேலி செய்வதற்கு எதிரான சட்டம்

Question 5.
அனைத்து வகையான __________ மற்றும் தவறான பயன்பாட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது சமூகத்தின் முக்கிய நோக்கம்.
விடை:
சுரண்டல்கள்

Question 6.
சிவில் உரிமைகள் ____________ உருவாக்கப்படுகின்றன.
விடை:
சமூகத்தினால்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 4

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
ஒரு தனிநபர் சமுதாயத்தில் முழுமையாக பங்கேற்பது அவசியமானது அல்ல.
விடை:
தவறு

Question 2.
எந்த ஒரு தேசமும் தனிநபருக்கான மனித உரிமைகளை பறிக்க இயலும்.
விடை:
தவறு

Question 3.
குழந்தைத் தொழிலாளர் சட்டம் 15 வயது பூர்த்தியடையாத எந்த ஒரு குழந்தையையும் வேலைக்கு அமர்த்த வழி செய்கிறது.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 4.
ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் ஒரு அரசு சார்பு நிறுவனம்.
விடை:
தவறு

Question 5.
அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் தொகுப்பானது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வேரூன்றியிருந்தது.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
தவறான கூற்றைக் கண்டறியவும்
அ) பிரிவு 39 (F) ஆரோக்கியமாக குழந்தைகள் வளர வழிவகை செய்கிறது.
ஆ) பிரிவு 45 – 18 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க முயல்கிறது.
இ) சட்டப்பிரிவு 21A கல்வி உரிமைச் சட்டம்.
ஈ) போக்சோ சட்டம் – பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்.
விடை:
ஆ) பிரிவு 45 – 18 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க முயல்கிறது.

Question 2.
‘குழந்தைகள் உரிமை’ குறித்து பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல.
அ) பதினான்கு வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தை எனப்படுவர்.
ஆ) குழந்தைகளின் உரிமைகள் ஐ.நா. சபையால் வெளியிடப்பட்டது.
இ) குழந்தை ஒரு முக்கியமான தேசிய சொத்து.
ஈ) தேசத்தின் எதிர்காலம் அந்நாட்டின் குழந்தைகள் எவ்வாறு வளர்ந்து முதிர்ச்சியடைகிறார்கள் என்பதை பொறுத்தது.
விடை:
அ) பதினான்கு வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தை எனப்படுவர்.

Question 3.
கூற்று: UDHR உலகில் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட ஆவணம் ஆகும்.
காரணம்: உலக மனித உரிமைகள் அறிவிப்பு (UDHR) 500க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
ஆ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது
இ) கூற்று காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று சரி காரணம் தவறு
விடை:
ஆ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது

Question 4.
பின்வரும் கூற்றை ஆராய்க
1) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) பல உறுப்பினர்களைக் கொண்ட ஆணையம்.
2) NHRC ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது.

மேற்கூறிய கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?
அ) ஐந்தாவது
ஆ) ஆறாவது
இ) 1 மற்றும் 2
ஈ) எதுவுமில்லை
விடை:
இ) 1 மற்றும் 2

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
“மனித உரிமைகளுக்கான உலகளாகவி அறிவிப்பு (UDHR)” கூறுவது என்ன?
விடை:
மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHR) முகவுரை :
“மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும், உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் அறிவாற்றலையும் மனசாட்சியையும் இயற்பண்பாகச் கொண்டவர்களாகவும் எல்லா மக்களிடையேயும் பொதுவான சகோதரத்துவத்தின் உணர்வை வளர்க்க கடமைப்பட்டவர்களும் ஆவர்.

Question 2.
“சைரஸ் சிலிண்டர் கி.மு. 539” குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
சைரஸ் சிலிண்டர் கி.மு. 539 :

  • பண்டைய பாரசீகத்தின் முதல் மன்னரான மகா சைரஸ் அடிமைகளை விடுவித்தார். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்று அறிவித்தார். இன சமத்துவத்தை நிலை நாட்டினார்.
  • ஆணைகள் அக்காடியன் மொழியில், கியூனி பார்ஃம் எழுத்துக்களில் சுட்ட களிமண் சிலிண்டரில் பதிவு செய்யப்பட்டன.
  • ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு அலுவல்மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

Question 3.
மனித உரிமைகள் கொண்டுள்ள அடிப்படை மதிப்புகள் யாவை?
விடை:
மனித உரிமைகள் கொண்டுள்ள அடிப்படை மதிப்புகள்:

  • கண்ணியம் (வாழ்வதற்கான மற்றும் ஒருமைப்பாட்டிற்கான உரிமை)
  • நீதி (நேர்மையான விசாரணைக்கான உரிமை)
  • சமத்துவம் (சட்டத்தின் முன் அனைவரும் சமம், பாகுபாடின்மை )

Question 4.
“மனித உரிமைகள் தினம்” எப்பொழுது கொண்டாடப்படுகிறது? ஏன்?
விடை:

  • மனித உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
  • உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா. பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.

Question 5.
“மனித உரிமைகள் ஆணையம்” குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஓர் ஆணையத்தை அமைக்க ஐ.நா. சபையின் முக்கிய அங்கமான பொருளாதார மற்றும் சமூக சபை (ECOSOC) அதிகாரம் பெற்றது.

மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக தேசிய மற்றும் மாநில அளவிலான மனித உரிமை ஆணையங்கள் நிறுவப்பட்டன.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 6.
மனித உரிமை நிறுவனங்கள் – விளக்குக.
விடை:
மனித உரிமை நிறுவனங்கள் :
அரசு சாரா நிறுவனங்கள் அரசாங்கங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன் மனித உரிமைக் கொள்கைகளின்படி செயல்படுமாறு வலியுறுத்துகின்றன.

ஆன்ஸ்டி இண்டர்நேஷனல், குழந்தைகள் பாதுகாப்பு நிதியம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவை சில அரசு சாரா நிறுவனங்களாகும்.

Question 7.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம் என்றால் என்ன ?
விடை:
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம் :

  • இச்சட்டத்தின் மூலம் மூத்த குடிமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாரிசுதாரர்களின் சட்ட பூர்வ கடமையாகிறது.
  • முதுமை காலத்தில் பாதுகாப்பும் ஆதரவும் மனித உரிமைகளாக கருதப்படுகின்றன.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
“எழுதப்பட்ட ஆவணங்களின் முன்னோடி” எனக் கருதப்படுபவை யாவை?
விடை:
எழுதப்பட்ட ஆவணங்களின் முன்னோடி:

  • மகாசாசனம் 1215 (இங்கிலாந்து)
  • உரிமை மனு 1628 (இங்கிலாந்து)
  • ஹேபியஸ் கார்பஸ் சட்டம் 1679 (இங்கிலாந்து)
  • ஆங்கில உரிமைகள் மசோதா 1689
  • மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய பிரான்சின் அறிவிப்பு 1789
  • அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா 1791

Question 2.
“தேசிய மனித உரிமைகள் ஆணையம்” குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
தேசிய மனித உரிமைகள் ஆணையம்:

  • இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) 1993 அக்டோபர் 12 அன்று நிறுவப்பட்டது.
  • இது சுதந்திரமான, சட்டபூர்வமான, அரசியலமைப்பு சாராத ஓர் அமைப்பாகும்.
  • பல உறுப்பினர்கள் கொண்ட இது ஒரு தலைவரையும் பிற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
  • குடியரசுத் தலைவர் ஆணைய தலைவரையும் பிற உறுப்பினர்களையும் நியமிக்கிறார். அவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை. இதில் எது முன்னதாக வருகிறதோ அது வரை பதவியில் நீடிப்பர்.
  • ஆணையம் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை சட்டம், புலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் திட்டம், பயிற்சி அளித்தல், நிர்வாகம்.
  • இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

Question 3.
பெண்கள் உரிமைகளை விவரி.
விடை:
பெண்கள் உரிமைகள் :
பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளும் மனித உரிமைகளாகும். பெண்களுக்கு தங்களது உரிமைகளை முழுமையாகவும், சமமாகவும் அனுபவிக்கவும், அனைத்து பாகுபாடுகளிலிருந்தும் விடுபடவும் உரிமை உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் சமமான உரிமைகளை உறுதி செய்கிறது.

1979 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மசோதாவை ஐ.நா. பாதுகாப்பு சபை ஏற்றுக் கொண்டது. இது பெண்களுக்கான சர்வதேச உரிமைகள் மசோதா என அழைக்கப்படுகிறது.

1995 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற நான்காவது உலக மகளிர் மாநாடு, பெண்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கும், உலகளவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான ஒரு தளத்தை உருவாக்கியது.

யுனிபெம் (UNIFEM) என்றழைக்கப்படும் பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதி அமைப்பு 1995 முதல் செயல்பட்டு வருகிறது. இது பெய்ஜிங் மாநாட்டின் முடிவுகளை நடைமுறைப்படுத்த ஏற்படுத்தப்பட்டது.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 5