Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

8th Social Science Guide குடிமக்களும் குடியுரிமையும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?
அ) பிறப்பின் மூலம்
ஆ) சொத்துரிமை பெறுவதன் மூலம்
இ) வம்சாவழியின் மூலம்
ஈ) இயல்பு குடியுரிமை மூலம்
விடை:
ஆ) சொத்துரிமை பெறுவதன் மூலம்

Question 2.
அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?
அ) பகுதி II
ஆ) பகுதி II பிரிவு 5-11
இ) பகுதி II பிரிவு 5-6
ஈ) பகுதி I பிரிவு 5-11
விடை:
ஆ) பகுதி II பிரிவு 5-11

Question 3.
இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) முதலமைச்சர்
ஈ) இந்திய தலைமை நீதிபதி
விடை:
ஆ) குடியரசுத் தலைவர்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
ஒரு நாட்டின் _____________, அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறத் தகுதியுடையவர் ஆவார்.
விடை:
குடிமக்கள்

Question 2.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் _____________ குடியுரிமையை மட்டும் வழங்குகிறது.
விடை:
ஒற்றைக்

Question 3.
இந்தியக் கடவுச் சீட்டினைப் பெற்று (Passport) வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன் ______________ என அழைக்கப்படுகிறார்.
விடை:
வெளிநாட்டு வாழ் இந்தியன்

Question 4.
மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் __________ யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர்.
விடை:
குடிமை பொறுப்பை

Question 5.
_____________ என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும்.
விடை:
உலகளாவிய குடியுரிமை

III. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது.
விடை:
தவறு

Question 2.
வெளிநாட்டுக் குடியுரிமையை கொண்டு இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை வைத்திருப்பவருக்கு வாக்குரிமை உண்டு.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

Question 3.
அடிப்படை உரிமைகளை இந்தியக் குடிமகன் அனுபவிக்க நமது அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம் அளிக்கிறது.
விடை:
சரி

Question 4.
நாட்டுரிமையை மாற்ற இயலும். ஆனால் குடியுரிமையை மாற்ற இயலாது.
விடை:
தவறு

IV. கீழ்க்கண்ட கூற்றுகளில் பொருத்தமான விடைகளை தேர்வு செய்க

Question 1.
ஒரு இந்தியக் குடிமகனின் குடியுரிமை கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது.
i) ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை பெறும் போது
ii) பதிவு செய்வதன் மூலம்
iii) தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது
iv) போரின் போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும் போது

அ) i மற்றும் ii சரி
ஆ) i மற்றும் iii சரி
இ) i, ii, iv சரி
ஈ) i, ii, iii சரி,
விடை:
ஆ) i மற்றும் iii சரி

Question 2.
கூற்று : 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினர்.
காரணம் : 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்லல
இ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஈ) காரணம், கூற்று இரண்டும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

V. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்ததைகளில் விடையளி

Question 1.
குடியுரிமையின் வகைகளை குறிப்பிடுக.
விடை:
குடியுரிமை இரண்டு வகைப்படும்
இயற்கை குடியுரிமை:
ஒருவர் பிறப்பால் இயற்கையாக பெறக்கூடிய குடியுரிமையே இயற்கை குடியுரிமையாகும்.

இயல்புக் குடியுரிமை:
இயல்பாக விண்ணப்பித்து ஒருவர் பெறும் குடியுரிமையை இயல்புக் குடியுரிமை என்பர்.

Question 2.
ஓர் இந்தியக் குடிமகன் நமது நாட்டில் அனுபவிக்கும் உரிமைகள் யாவை?
விடை:
ஓர் இந்தியக் குடிமகன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் கீழ்க்கண்ட உரிமைகளை அனுபவிக்கிறார்.

  • அடிப்படை உரிமைகள்
  • மக்களவை தேர்தலுக்கும், மாநில சட்ட மன்ற தேர்தலுக்கும் வாக்களிக்கும் உரிமை
  • இந்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உரிமை
  • இந்திய பாராளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களில் உறுப்பினராவதற்கான உரிமை

Question 3.
நற்குடிமகனின் மூன்று பண்புகளை குறிப்பிடுக
விடை:

  • அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடத்தல்
  • சட்டத்துக்கு கீழ்படிதல்
  • சமுதாயத்திற்கு தன் பங்களிப்பை ஆற்றுதல் மற்றும் குடிமைப் பணியை செயலாற்றுதல்.

Question 4.
இந்தியக் குடிமகனாவதற்குரிய ஐந்து வழிமுறைகளை எழுதுக?
விடை:
1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம் இந்திய குடிமகனாவதற்கு ஐந்து வழிமுறைகளை பரிந்துரைக்கிறது.

  • பிறப்பால் குடியுரிமை பெறுதல்
  • வம்சாவளியால் குடியுரிமை பெறுதல்
  • பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்
  • இயல்பாக விண்ணப்பித்து குடியுரிமை பெறுதல்
  • பிரதேசங்களை இணைத்தல் மூலம் குடியுரிமை பெறுதல்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

Question 5.
1955 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்டம் பற்றி நீவிர் அறிவது யாது?
விடை:
1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம் குடியுரிமை பெறுவதற்கான ஐந்து வழிமுறைகளை பரிந்துரைக்கிறது. மேலும் இச்சட்டம் இந்தியக் குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறுதலையும், நீக்குதலையும் பற்றிய விதிகளை கூறுகிறது.

VI. விரிவான விடையளி

Question 1.
ஒருவருக்கு எதன் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை இரத்து செய்யப்படுகிறது?
விடை:
குடியுரிமை ரத்து பற்றிய மூன்று வழிமுறைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது பகுதியின் 5 முதல் 11 வரையிலான விதிகள் குறிப்பிடுகின்றன.

  1. குடியுரிமையை துறத்தல் (தானாக முன் வந்து குடியுரிமையைத் துறத்தல்)
    • ஒருவர் வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்தியக் குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது.
  2. குடியுரிமை முடிவுக்கு வருதல் (சட்டப்படி நடைபெறுதல்)
    • ஓர் இந்தியக் குடிமகன் தாமாக முன்வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்தியக் குடியுரிமை தானாகவே முடக்கப்டுகிறது.
  3. குடியுரிமை மறுத்தல்: (கட்டாயமாக முடிவுக்கு வருதல்)
    • மோசடி, தவறான பிரதிநிதித்துவம் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் முதலியவற்றின் மூலம் இந்தியக் குடியுரிமையை பெறும் ஒருவரின் குடியுரிமையை இந்திய அரசு ஓர் ஆணை மூலம் இழக்கச் செய்கிறது.

VII. மாணவர்களுக்கான செயல்பாடு (மாணவர்களுக்கானது)

அட்டவணைப்படுத்துக:
அ. நல்ல குடிமகனாக வகுப்பறையிலும், வகுப்பறைக்கு வெளியிலும் நீவிர் எவ்வாறு நடந்து கொள்வாய் என அட்டவணைப்படுத்துக.
ஆ. நல்ல குடிமகனாக உன்னுடைய பொறுப்புகள் எவை (ஏதேனும் மூன்று கருத்துக்களை எழுதுக)

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும் 1

8th Social Science Guide குடிமக்களும் குடியுரிமையும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நற்பண்புகளுடன் இந்திய அரசியமைப்பில் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளுள் ஏதேனும் ஒன்றில் போதிய அறிவினைப் பெற்று __________ குடியினம
அ) வம்சாவளி குடியுரிமை
ஆ) பதிவு செய்தல்
இ) இயல்பு
ஈ) பிறப்பால் பெறுதல்
விடை:
இ) இயல்பு

Question 2.
இந்திய அரசியலமைப்பு _____________ சட்டத்திருத்தத்தின்படி இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
அ) 55-வது
ஆ) 46-வது
இ) 44-வது
ஈ) 42-வது
விடை:
ஈ) 42-வது

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

Question 3.
இந்தியக் குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் _____________ ஆண்டுகள் இந்தியாவில் வசித்தவராக இருத்தல் வேண்டும்.
அ)6
ஆ) 7
இ) 5
ஈ) 3
விடை:
ஆ) 7

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
குடிமகன் என்ற சொல் ____________ என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது
விடை:
சிவிஸ் (CIVIS)

Question 2.
ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் பொருட்டு, இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் நமது _____________ ஊக்கவிக்கிறது.
விடை:
அரசியலமைப்பு

Question 3.
இந்திய ஒற்றைக் குடியுரிமை இந்திய மக்கள் அனைவருக்கும் ________________ வழங்குகிறது.
விடை:
சம உரிமையை

Question 4.
_____________ ஆம் நாள் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் இந்திய அரசால் கொண்டாடப்படுகிறது.
விடை:
ஜனவரி 9

III. சரியா? தவறா?

Question 1.
2015 ஜனவரி 9 முதல் PIO முறை இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டு OCI முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
விடை:
சரி

Question 2.
பூர்வீகம், பிறப்பு மற்றும் இனம் முதலியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாக பெறும் நிலை குடியுரிமை எனப்படும்.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

Question 3.
இந்திய அரசியலமைப்பில் எட்டாவது அட்டவணையில் தற்போது 22 மொழிகள் உள்ளன.
விடை:
சரி

IV. கீழ்க்கண்ட கூற்றுகளில் பொருத்தமான விடைகளை தேர்வு செய்க

Question 1.
இந்திய குடியுரிமைச் சட்டம் குடியுரிமை பெறுவதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை கூறுகிறது.
i) நற்பண்புகளுடன் இந்திய மொழிகளுள் ஏதேனும் ஒன்றில் போதிய அறிவினைப் பெற்று குடியுரிமை பெறுதல்
ii) 1985-ல் ஜப்பான் தம்பதிகளுக்கு இந்தியாவில் ஒர் குழந்தை பிறந்து, அது பிறப்பால் இந்திய குடியுரிமை பெறுதல்
iii) பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்
iv) சொத்துரிமை பெற்று குடியுரிமை பெறுதல்

அ) i மற்றும் ii சரி)
ஆ) ii மற்றும் iii சரி
இ) ii, iii, மற்றும் iv சரி
ஈ) i, சரி iii
விடை:
ஆ) ii மற்றும் iii சரி

V. கீழ்கண்ட வினாக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி

Question 1.
ஒற்றைக் குடியுரிமை பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது. அதுவே இந்தியக் குடியுரிமை எனப்படுகிறது.
  • ஒற்றைக் குடியுரிமையில் இந்திய மக்கள் அனைவரும் மாநில வேறுபாடின்றி சம உரிமையை பெறுகின்றனர்.
  • அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற கூட்டாட்சி அமைப்பு கொண்டுள்ள நாடுகளில் இரட்டைக் குடியுரிமை (தேசிய மற்றும் மாநில குடியுரிமை) வழங்கப்படுகிறது.

Question 2.
உலகளாவிய குடியுரிமை பற்றி எழுதுக
விடை:

  • ஒரு குறிப்பிட்ட நாட்டின் குடிமகன் என்பதை விட உலகளாவிய சமுதாயத்தில் ஒவ்வொருவரும் அங்கம் என்பதே உலகளாவிய குடியுரிமை ஆகும்.
  • உலக மக்கள் அனைவருக்கும் உரிமைகளும், குடிமைப் பொறுப்புகளும் இயற்கையாகவே உள்ளன
  • புதிய சமூகத்தை உருவாக்குவதில் இன்றைய இளைஞர்களின் ஈடுபாட்டையும், பங்களிப்பையும் பெறுவதே உலகளாவிய குடியுரிமையின் அடிப்படையாகும்.

Question 3.
ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களைப் பற்றி எழுதுக
விடை:
ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்கள் இரண்டு வகையினராக அழைக்கப்டுகிறார்கள்

  1. அந்நியர் (Alien)
    • ஒரு நாட்டில் வசிக்கும் குடிமகனாக அல்லாத அனைவரும் அந்நியர் எனப்படுவர்.
    • எ.கா வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு மாணவர்கள்
  2. குடியேறியவர் (immigrant)
    • ஒரு நாட்டில் எவ்வித தடையும் இன்றி நிரந்தரமாக வசிப்பதற்கும், பணி புரிவதற்கும் உரிமை பெறும் அந்நியர் குடியேறியவர் எனப்படுகிறார்.

VI. கீழ்க்கண்டவைகளுக்கு விடையளி

Question 1.
இந்தியக் குடிமகனாவதற்குரிய ஐந்து வழிமுறைகளை விளக்குக.
விடை:
1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம் குடியுரிமை பெறுவதற்கான ஐந்து வழிமுறைகளை பரிந்துரைக்கிறது. அவைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.

I. பிறப்பால் குடியுரிமை பெறுதல்:
இக்குடியுரிமை பிறப்பிடத்தால் தீர்மானிக்கப்படுகிறது. 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜீலை வரை

  • இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் எந்த நாட்டவராக இருப்பினும் அவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர்.
  • 1987 ஜீலை 1 மற்றும் அதற்குப் பின் இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் அச்சமயத்தில் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 2004 டிசம்பர் 3 மற்றும் அதன் பிறகு இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாகவும், மற்றவர் சட்டவிரோதமின்றி இந்தியாவிற்குள் இடம் பெயர்ந்து இருந்தால் குடியுரிமை பெறுகின்றனர்.

II. வம்சாவளியால் குடியுரிமை பெறுதல்:

  • 1950 ஜனவரி 26 முதல் 1992 டிசம்பர் 10க்கு முன்னர் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் அவருடைய
  • தந்தை இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் அவர் வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமையை பெறுகிறார்.
  • 2004 டிசம்பர் 3 ம் நாள் முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை ஒரு வருடத்திற்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனில் இந்திய வம்சாவளிக் குடிமகனாக முடியாது.

III. பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்:
இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு நபர் எந்த ஒரு நாட்டில் வசித்தாலும் அல்லது பிரிக்கப்படாத இந்தியாவிற்கு வெளிப்பகுதியில் வசிப்பவராக இருந்தாலும் பதிவு செய்தலின் மூலம் குடியுரிமை பெறலாம்.

இந்தியக் குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் 7 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தவராக இருத்தல் வேண்டும்.

IV. இயல்புக் குடியுரிமை :
ஒருவர் விண்ணப்பிப்பதன் மூலம் மத்திய அரசு அவருக்கு இயல்பு குடியுரிமைக்கான சான்றிதழை வழங்குகிறது.
எந்த ஒரு நாட்டிலும் குடிமகனாக இல்லாத ஒரு இந்தியர் அவர் வசிக்கும் நாட்டின் குடிமகனாவதை தடுக்கும் பொருட்டு இயல்பு குடியுரிமை வழங்கப்படுகிறது.

வெளிநாட்டுக் குடியுரிமையை ஒருவர் துறக்கும் பட்சத்திலும், ஒருவர் இந்தியாவில் வசிக்கும் பட்சத்தில் அல்லது இந்திய அரசுப் பணியில் இருக்கும் பட்சத்திலும் மற்றும் நற்பண்புகளோடு இந்திய முக்கிய மொழிகளுள் ஏதேனும் ஒன்றில் போதிய அறிவினை பெறும் பொழுதும் இயல்புக் குடியுரிமையைப் பெற தகுதியுடையவராவர்.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

V. பிரதேசங்களை இணைத்தல் மூலம் பெறும் குடியுரிமை:
எந்தவொரு வெளிநாட்டுப் பகுதியும் இந்தியாவுடன் இணையும் போது, இந்திய அரசு, அப்பகுதி மக்களை இந்திய குடிமக்களாக ஏற்றுக் கொள்கிறது. அந்த குறிப்பிட்ட நாளில் இருந்து அவர்கள் இந்திய குடிமக்களாகின்றனர்.

VII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும் 2