Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 3 ஒளியியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 3 ஒளியியல்

8th Science Guide ஒளியியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடிகள்
அ) சமதள ஆடிகள்
ஆ) சாதாரண ஆடிகள்
இ) கோளக ஆடிகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை :
இ) கோளக ஆடிகள்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 3 ஒளியியல்

Question 2.
உட்புறமாக எதிரொளிக்கும் பரப்பை உடைய வளைவு ஆடி
அ) குவி ஆடி
ஆ) குழி ஆடி
இ) வளைவு ஆடி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை :
ஆ) குழி ஆடி

Question 3.
வாகனங்களில் பின் காட்சி ஆடியாகப் பயன்படுத்தப்படும் ஆடி
அ) குழி ஆடி
ஆ) குவி ஆடி
இ) சமதள ஆடி
ஈ) எதுவுமில்லை
விடை :
ஆ) குவி ஆடி

Question 4.
ஒரு ஆழயின் ஆழமையத்தையும், வளைவுமையத்தையும் இணைக்கும் கற்பனைக்கோடு …….. எனப்படும்
அ) வளைவு மையம்
ஆ) ஆடி மையம்
இ) முதன்மை அச்சு
ஈ) வளைவு ஆரம் 10
விடை :
இ) முதன்மை அச்சு

Question 5.
முதன்மைக் குவியத்திற்கும், ஆடிமையத்திற்கும் இடையே உள்ள தொலைவு……. என்று அழைக்கப்படுகிறது
அ) வளைவு நீளம்
ஆ) குவிய தொலைவு
இ) முதன்மை அச்சு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை :
ஆ) குவிய தொலைவு

Samacheer Kalvi 8th Science Guide Chapter 3 ஒளியியல்

Question 6.
ஒரு கோளக ஆடியின் குவிய தொலைவு 10 செ.மீ எனில், அதன் வளைவு ஆரம் ……..
அ) 10 செ.மீ
ஆ) 5 செ.மீ
இ) 20 செ.மீ
ஈ) 15 செ.மீ

குவியத்தொலைவு = 10 செ.மீ
ஆரம்(R) = 2 X குவியத்தொலைவு
= 2 x 10 = 20 செ.மீ
விடை :
இ) 20 செ.மீ

Question 7.
பொருளின் அளவும், பிம்பத்தின் அளவும் சமமாக இருந்தால், பொருள் வைக்கப்பட்டுள்ள
இடம் ……..
அ) ஈறிலாத் தொலைவு
ஆ) Fல்
இ) F க்கும் P க்கும் இடையில்
ஈ) Cல்
விடை :
ஈ) Cல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
அழகு நிலையங்களில் அலங்காரம் செய்யப் பயன்படும் கோளக ஆடி………………
விடை :
குழி ஆடி

Question 2.
கோளக ஆடியின் வடிவியல் மையம் ……. எனப்படும்.
விடை :
ஆடி மையம்

Question 3.
குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் தன்மை ……….
விடை :
நேரான மாய பிம்பம்

Question 4.
கண் மருத்துவர் கண்களைப் பரிசோதிக்கப் பயன்படுத்தும் ஆடி ………
விடை :
குழி ஆடி

Samacheer Kalvi 8th Science Guide Chapter 3 ஒளியியல்

Question 5.
ஒளிக்கதிர் ஒன்றின் படுகோணத்தின் மதிப்பு 45° எனில் எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு ……….
விடை :
45°

Question 6.
இணையாக உள்ள இரண்டு சமதள ஆடிகளுக்கிடையே ஒரு பொருளானது வைக்கப்பட்டால், உருவாகும் பிம்பங்களின் எண்ணிக்கை ……………………..
விடை :
முடிவிலா எண்ணிக்கை

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 3 ஒளியியல் 1

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
குவியத்தொலைவு – வரையறு
விடை :
ஆடிமையத்திற்கும் முதன்மைக் குவியத்திற்கும், இடைப்பட்ட தொலைவு குவிய தொலைவு (F) எனப்படும்
Samacheer Kalvi 8th Science Guide Chapter 3 ஒளியியல் 2

Question 2.
குழி ஆடி மற்றும் குவி ஆடிகளின் பயன்களுள் இரண்டினைத் தருக.
விடை :
குழி ஆடி :

  • டார்ச்விளக்குகள், தெருவிளக்குகள் மற்றும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் போன்றவற்றில் குழி ஆடிகள் பயன்படுகின்றன.
  • எதிரொளிக்கும் தொலைநோக்கிகளிலும் குழி ஆடிகள் பயன்படுகின்றன.

குவி ஆடி :

  • வாகனங்களின் பின்புறம் வரும் பிற வாகனங்களை பார்ப்பதற்கு குவி ஆடிகள் பயன்படுகின்றன.
  • சாலைகளின் மிகவும் குறுகிய மற்றும் நுட்பமான வளைவுகளில் குவி ஆடிகள் பயன்படுகின்றன.

Question 3.
ஒளி எதிரொளிப்பு விதிகளைக் கூறுக.
விடை :

  • படுகதிர், எதிரொளிப்புக்கதிர் மற்றும் படு புள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை அனைத்தும் ஒரே தளத்தில் அமைந்துள்ளன.
  • படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் எப்போதும் சமமாக இருக்கும்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 3 ஒளியியல்

Question 4.
ஊடகத்தின் ஒளிவிலகல் எண் வரையறு.
விடை :
காற்றில் ஒளியின் திசைவேகத்திற்கும், ஒரு குறிப்பிட்ட ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும்
இடையே உள்ள தகவு ஒளிவிலகல் எண் எனப்படும். இதனை தனித்த ஒளிவிலகல் எண் எனவும் குறிப்பிடுகிறோம்.
Samacheer Kalvi 8th Science Guide Chapter 3 ஒளியியல் 3

Question 5.
ஒளிவிலகலுக்கான ஸ்நெல் விதியினைக் கூறுக.
விடை :

  • படுகதிர், விலகுகதிர் மற்றும் அவை சந்திக்கும் புள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை அனைத்தும் ஒரே தளத்தில் அமையும்.
  • படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் (i) விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் (r) இடையே உள்ள தகவு, ஒளிவிலகல் எண்ணிற்குச் சமமாகும். இது ஒரு மாறிலி ஆகும்.
    \(\frac{\sin \mathrm{i}}{\operatorname{Sin} \mathrm{r}}=\mu\)

V. விரிவாக விடையளி

Question 1.
குழி ஆடியில் தோன்றும் பிம்பங்களைப் பற்றி விவரிக்கவும்.
விடை :
Samacheer Kalvi 8th Science Guide Chapter 3 ஒளியியல் 4

Question 2.
ஒளி எதிரொளித்தல் என்றால் என்ன? ஒழுங்கான மற்ற ஒழுங்கற்ற எதிரொளிப்புக்களைப் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை :
ஒளி எதிரொளித்தல்:
ஓர் ஒளிக்கதிரானது பளபளப்பான, மென்மையான பரப்பில் பட்டு ஒளி திரும்பும் நிகழ்வே ஒளி எதிரொளித்தல் என்று அழைக்கப்படுகிறது.

ஒழுங்கான எதிரொளிப்பு :

  • வழவழப்பான பரப்பின் மீது ஓர் ஒளிக்கற்றையானது விழும் போது அது எதிரொளிக்கப்படுகிறது.
  • எதிரொளிப்பிற்குப் பின் ஒளிக்கதிர்கள் ஒன்றுக்கொன்று இணையாக உள்ளன.
  • இந்த எதிரொளிப்பில் ஒவ்வொரு கதிரின் படுகோணமும் எதிரொளிப்புக் கோணமும் சமமாக இருக்கும்.
  • எதிரொளிப்பு விதிகள் சரியாக பொருந்துகின்றன.
  • இதில் தெளிவாக பிம்பம் கிடைக்கிறது.
  • (எ.கா) சமதளக் கண்ணாடியில் உருவாகும் எதிரொளிப்பு
    நிலையான தண்ணீ ரில் ஏற்படும் எதிரொளிப்பு
  • இவ்வகை எதிரொளிப்பிற்கு ஒழுங்கான எதிரொளிப்பு’ (அல்லது) ‘ கண்ணாடி எதிரொளிப்பு’ என்று பெயர்.

ஒழுங்கற்ற எதிரொளிப்பு :

  • சொரசொரப்பான அல்லது ஒழுங்கற்ற பரப்பின் மீது ஓர் ஒளிக்கற்றையானது விழும் போது
  • ஒவ்வொரு ஒளிக்கதிரும் வெவ்வேறு கோணத்தில் எதிரொளிக்கிறது.
    ஒவ்வொரு ஒளிக்கதிரின் படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் சமமாக இருக்காது.
  • எதிரொளிப்பு விதிகள் சரியாக பொருந்தாததால் இதில் பிம்பங்கள் தெளிவாக கிடைக்காது.
  • இவ்வகை எதிரொளிப்பிற்கு ஒழுங்கற்ற எதிரொளிப்பு அல்லது பரவலான எதிரொளிப்பு என்று பெயர்.
  • எ.கா. சுவரின் மீது ஏற்படும் எதிரொளிப்பு

Samacheer Kalvi 8th Science Guide Chapter 3 ஒளியியல்

Question 3.
பெரிஸ்கோப் செயல்படும் விதம் பற்றி விவரிக்கவும்.
விடை :
தத்துவம் : ஒளி எதிரொளித்தல் விதிகள் அடிப்படையில் செயல்படுகிறது.

அமைப்பு :

  • நீண்ட வெளிப்பகுதியையும் உட்பகுதியையும் கொண்டது.
  • உட்பகுதியில் 45° கோணச் சாய்வில் ஒவ்வொரு முனையிலும் கண்ணாடி அல்லது முப்பட்டகமானது பொருத்தப்பட்டுள்ளது.

செயல்படும் விதம் :

  • நீண்ட தொலைவில் உள்ள பொருளிலிருந்து வரும் ஒளியானது பெரிஸ்கோப்பின் மேல் முனையில் உள்ள கண்ணாடியில் பட்டு செங்குத்தாக கீழ்நோக்கி எதிரொளிக்கப்படுகிறது.
  • கீழ்ப்பகுதியில் உள்ள கண்ணாடியால் மீண்டும் ஒருமுறை எதிரொளிக்கப்பட்டு கிடைமட்டத் திசையில் சென்று பார்ப்பவரின் கண்களை அடைகிறது.
  • உயர் காட்சித் திறனைப் பெறுவதற்காக, கண்ணாடிகளுக்குப் பதிலாக ஒளியிழைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • தேவைக்கேற்ப பெரிஸ்கோப்பின் உட்பகுதியில் உள்ள கண்ணாடிகளுக்கிடையே உள்ள இடைவெளியானது மாற்றியமைக் கப்படுகிறது.

Question 4.
நிறப்பிரிகை என்றால் என்ன? விவரி.
விடை :
நிறப்பிரிகை : ஒளி உருவாகும் ஊடகத்தின் வழியே வெண்மை நிற ஒளியானது செல்லும் போது ஏழு வண்ணங்களாகப் பிரிகை அடைகிறது. இதனை நிறப்பிரிகை என்கிறோம்.

  • நிறப்பிரிகையின் போது ஏழு வண்ணங்கள் கிடைக்கின்றன.
  • அவை ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு
  • ஏழு வண்ணங்களை VIBGYOR என எளிதாக நினைவில் கொள்ளலாம்
  • நிறப்பிரிகையின் போது சிவப்பு நிற ஒளிக் கதிரானது அதிக நீளத்தையும், குறைந்த விலகலையும் கொண்டுள்ளது.
  • ஊதா நிறக்கதிர் குறைந்த அலைநீளத்தையும் அதிக விலகலையும் கொண்டுள்ளது.

VI. கணக்குகள்

Question 1.
கோள ஆடியின் வளைவு ஆரம் 25 செமீ எனில், அதன் குவியத் தொலைவினைக்
காண்க.
தீர்வு :
ஆரம் (R) = 25 செ.மீ
குவியத் தொலைவு (F) = \(\frac{R}{2}=\frac{25}{2}\) = 12.5 செ.மீ

Question 2.
இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கிடைப்பட்ட கோணம் 45° எனில், தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையினைக் காண்க.
தீர்வு :
இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கு இடைப்பட்ட சாய்வு கோணம் = 45°
தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை = \(\frac{360^{\circ}}{\theta}\) – 1
= \(\frac{360^{\circ}}{45^{\circ}}\) – 1
= 8 – 1
= 7

Samacheer Kalvi 8th Science Guide Chapter 3 ஒளியியல்

Question 3.
காற்றில் ஒளியின் திசைவேகம் 3 x 108 மீவி-1 மற்றும் ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் 1.5 எனில், ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்தினைக் காண்க.
தீர்வு :
காற்றில் ஒளியின் திசைவேகம் (C) = 3 108 மீவி-1
ஒளிவிலகல் எண் (μ) = 1.5
Samacheer Kalvi 8th Science Guide Chapter 3 ஒளியியல் 5

8th Science Guide ஒளியியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஒரு பொருளின் சரியான பிம்பத்தினை உருவாக்குவது
அ) கோளக ஆடிகள்
ஆ) பரவளைய ஆடிகள்
இ) சமதள ஆடிகள்
ஈ) உருளை ஆடிகள்
விடை :
இ) சமதள ஆடிகள்

Question 2.
ஒரு பொருளை பெரிதாக காட்டும் ஆடி
அ) குவி ஆடி
அ) குழி ஆடி
இ) சமதள ஆடி
ஈ) நீள்வட்ட வடிவ ஆடி
விடை :
அ) குழி ஆடி

Question 3.
பிம்பமானது அதன் உண்மைத் தொலைவை விட அருகில் உள்ளது என்ற எச்சரிக்கை
வாசகம் எவ்வகை ஆடியில் எழுதப்பட்டிருக்கும்?
அ) குவி ஆடி
ஆ) குழி ஆடி
இ) சமதள ஆடி
ஈ) கோள ஆடி
விடை :
அ) குவி ஆடி

Question 4.
ஒளிக்கதிர் படும் புள்ளியில் கற்பனையாக வரையப்பட்ட செங்குத்துக் கோடு
அ) கற்பனை கோடு
ஆ) வளைந்த கோடு
இ) செங்குத்துக்கோடு
விடை :
ஈ) குத்துக்கோடு

Samacheer Kalvi 8th Science Guide Chapter 3 ஒளியியல்

Question 5.
கண்ணாடிகளுக்கிடைப்பட்ட கோணத்தின் மதிப்பைக் குறைக்கும் போது தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை அ) அதிகரிக்கும்
ஆ) குறையும்
இ) மாற்றம் இருக்காது
இ) எதுவும் இல்லை
விடை :
அ) அதிகரிக்கும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…….. கருவி மூலம் எண்ணற்ற வியத்தகு பிம்பங்களை உருவாக்கலாம்.
விடை :
கலைடாஸ்கோப்

Question 2.
…… மிகச்சிறந்த ஒளி எதிரொளிப்புப் பொருளாகும்.
விடை :
வெள்ளி

Question 3.
கண்ணாடித் தகட்டின் மீது உருகிய …… அல்லது ……. உலோகத்தினை மெல்லிய படலமாகப் பூசி, அதனை ஆடியாக தற்போது பயன்படுத்தி
வருகிறோம்.
விடை :
அலுமினியம், வெள்ளி

Question 4.
ஆடிகளில் தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை ஆடிகளுக்கிடையே உள்ள ……. சார்ந்தது.
விடை :
சாய்வு கோணத்தைச்

Question 5.
நிறப்பிரிகையின் போது …… ஒளிக்கதிரானது அதிக அலைநீளத்தையும் குறைந்த விலகலையும் கொண்டுள்ளது.
விடை :
சிவப்புநிற

III. சரியா? தவறா? தவறெனில் வாக்கியத்தை சரி செய்க.

Question 1.
வளைந்த பரப்பினை உடைய ஆடிகள் பெரிய மற்றும் சிறிய பிம்பங்களை உருவாக்குகின்றன.
விடை :
சரி

Question 2.
எதிரொளிக்கும் அளவானது எதிரொளிக்கும் பொருளின் வடிவத்தை சார்ந்தது.
விடை :
தவறு – பரப்பைச் சார்ந்தது

Question 3.
நிறப்பிரிகையின் போது ஊதா நிறக்கதிர் அதிக அலைநீளத்தையும் அதிக அளவு விலகலையும் கொண்டுள்ளது.
விடை :
தவறு – குறைந்த அலைநீளம்

Question 4.
முதன்மைக் குவியத்தை குவிய புள்ளி எனவும் அழைக்கலாம்.
விடை :
சரி

Samacheer Kalvi 8th Science Guide Chapter 3 ஒளியியல்

Question 5.
எதிரொளிப்புக்கு வானவில் ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை :
தவறு – நிறப்பிரிகைக்கு

IV. பொருத்துக.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 3 ஒளியியல் 6
Samacheer Kalvi 8th Science Guide Chapter 3 ஒளியியல் 7

V. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று : கண்ணாடி முகவையில் உள்ள நீரின் வழியே பென்சிலைப் பார்க்கும் போது அது வளைவாகத் தெரிகிறது.
காரணம் : அடர்வு மிகுந்த ஊடகத்திலிருந்து அடர்வு குறைவான ஊடகத்திற்குச் செல்லும் ஒளியானது அதன் நேர்கோட்டுப் பாதையிலிருந்து விலகிச் செல்கிறது.
விடை :
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

Question 2.
கூற்று : நிறப்பிரிகைக்கு வானவில் தோற்றம் ஓர் எடுத்துக்காட்டாகும்.
காரணம் : சூரியன் இருக்கும் வலது திசையில் வானவில்லைக் காண முடியும்
விடை :
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
வளைந்த பரப்புடைய ஆடிகள் எவை?
விடை :
கோளக ஆடிகள், உருளை ஆடிகள், பரவளைய ஆடிகள் மற்றும் நீள்வட்ட ஆடிகள் ஆகியவை வளைந்த பரப்புடைய ஆடிகள்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 3 ஒளியியல்

Question 2.
பரவளைய ஆடிகளின் பயன்பாடுகள்?
விடை :
எதிரொளிக்கும் தொலைநோக்கிகள், ரேடியோ தொலை நோக்கிகள், மற்றும் நுண் அலை தொலைபேசிக் கருவிகளிலும் பயன்படுகின்றன.
மேலும் சூரியச் சமையற்கலன் மற்றும் சூரிய வெப்பச் சூடேற்றி ஆகியவற்றிலும் பயன்படுகின்றன.

Question 3.
கோளக ஆடியில் தோன்றும் பிம்பங்களின் வகைகள்?
விடை :
1) மெய்பிம்பம் 2) மாய பிம்பம்
திரையில் பிடிக்க இயலும் பிம்பம் மெய் பிம்பம்
திரையில் பிடிக்க இயலாத பிம்பம் மாய பிம்பம்

Question 4.
ஒளி எதிரொளித்தலில் ஈடுபடும் இரு கதிர்கள்?
விடை :
1. படுகதிர் 2. எதிரொளிப்புக் கதிர்

Question 5.
ஆடிகளை உருவாக்க வெள்ளியை பயன்படுத்த காரணம்?
விடை :

  • வெள்ளியே மிகச்சிறந்த ஒளி எதிரொளிப்புப் பொருளாகும்.
  • ஆகவே கண்ணாடியின் மீது மெல்லிய படலமாக வெள்ளியைப் படிய வைத்து ஆடிகளை உருவாக்குகின்றனர்.

Question 6.
பண்முக எதிரொளிப்பு பயன்படுத்தப்படும் இடங்கள் இரண்டை கூறுக?
விடை :
ஆடையகங்களிலும் மற்றும் சிகை அலங்கார நிலையங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

VII. விரிவான விடையளி

Question 1.
குழி ஆடிகளின் பயன்களை எழுதுக?
விடை :

  • பெரிதான பிம்பத்தை உருவாக்குவதால் அலங்காரக் கண்ணாடியாகவும் முகச் சவரக் கண்ணாடியாகவும் பயன்படுகின்றன.
  • ஒளியை நீண்ட தொலைவு பரவச் செய்வதால் டார்ச் விளக்குகள், தெரு விளக்குகள் மற்றும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் போன்றவற்றில் பயன்படுகின்றன.
  • குழி ஆடிகள் பரந்த பரப்புகளிலிருந்து ஒளியினைச் சேகரித்து, ஒரு புள்ளியில் குவியச் செய்கின்றன. எனவே இவ்வகை ஆடிகள் சூரிய சமையற்கலன்களில் பயன்படுகின்றன.
  • நிழலை ஏற்படுத்தாமல், பொருள்களை தெளிவாக காண்பிப்பதால் மருத்துவர்கள் கண், காது மற்றும் தொண்டைப் பகுதியினை சோதித்துப் பார்ப்பதற்காக அவர்கள் அணிந்திருக்கும் தலைக் கண்ணாடிகளில் குழி ஆடிகள் பயன்படுகின்றன.
  • எதிரொளிக்கும் தொலைநோக்கிகளிலும் குழி ஆடிகள் பயன்படுகின்றன.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 3 ஒளியியல்

Question 2.
குவி ஆடிகளின் பயன்களை எழுதுக?
விடை :

  • குவி அடிகள் வெளிப்புறமாக வளைந்திருப்பதால் நேரான பிம்பத்தைத் தருவதோடு அதிக அளவு பின்புறப் பகுதியையும் காண்பிக்கின்றன.
  • வாகனங்களின் பின்புறம் வரும் பிற வாகனங்களை பார்ப்பதற்கு குவி ஆடிகள் பயன்படுகின்றன.
  • மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், பள்ளிகள் மற்றும் அங்காடிகளில் இவை பயன்படுகின்றன.
  • பெரும்பாலும் கட்டடத்தின் குறுகிய வளைவுகள் உள்ள சுவர்கள் அல்லது கூரைகளில் இந்த ஆடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
  • சாலைகளின் மிகவும் குறுகிய மற்றும் நுட்பமானவளைவுகளில் குவி ஆடிகள் பயன்படுகின்றன.

Question 3.
ஊடகத்தில் ஒளிவிலகல் பற்றியும் சில பொருள்களின் ஒளிவிலகல் எண்ணையும் எழுதுக?
விடை :
ஊடகத்தில் ஒளிவிலகல் :

  • ஒளிவிலகல் எண் ஓர் ஊடகத்தில் செல்லும் ஒளிவிலகல் அந்த ஊடகத்தில் செல்லும் ஒளியின் திசைவேகத்தினைச் சார்ந்தது.
  • ஓர் ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் அதிகமாக இருக்கும் போது, விலகல் குறைவாக இருக்கும்.
  • ஓர் ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும் போது, விலகல் அதிகமாக இருக்கும்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 3 ஒளியியல் 8