Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Maths Guide Pdf Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Maths Solutions Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.1

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக:

i) x இன் 30% என்பது 150 எனில் x இன் மதிப்பு, ………………….. ஆகும்.
விடை :
x = 500

ii) ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது …………………….. % ஆகும்.
விடை :
3\(\frac{1}{3}\)%

iii) x இன் x % என்பது 25 எனில், x என்பது……………………..ஆகும்.
விடை :
x = 50

iv) ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில், 420 பேர் மாணவிகள் , பள்ளியிலுள்ள மாணவர்களின் சதவீதம் …………………… ஆகும்.
விடை :
70%

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.1

v) 0.5252 என்பது ………………………… % ஆகும்.
விடை :
52.52%

கேள்வி 2.
பின்வரும் ஒவ்வொர் அடிக்கோடிட்ட பகுதியையும் சதவீதத்தில் குறிப்பிடவும்.

i) இனிப்பு ரொட்டியின் (Cake) ஒரு பாதியானது குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
விடை :
50%

ii) ஒரு போட்டியில் அபர்ணா , 10 இக்கு 7.5 புள்ளிகள் பெற்றாள்.
விடை:
75%

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.1

iii) சிலையானது தூய வெள்ளியினால் செய்யப்பட்டுள்ளது.
விடை:
100%

iv) 50 மாணவர்களில் 48 பேர் விளையாட்டுகளில் கலந்து கொண்டனர்.
விடை :
96%

v) 3 நபர்களில் 2 நபர்கள் மட்டும் நேர்முகத்தேர்வில் தேர்வு செய்யப்படுவர்.
விடை :
66\(\frac { 2 }{ 3 }\)%

கேள்வி 3.
48 என்பது எந்த எண்ணின் 32% ஆகும்?
தீர்வு:
அந்த எண் x என்க ,
32% x = 48
\(\frac { 32 }{ 100 }\) x x = 48
x = \(\frac{48 \times 100}{32}\)
x = \(\frac { 300 }{ 2 }\)
x = 150

கேள்வி 4.
400இன் 30% மதிப்பின் 25% என்ன ?
தீர்வு :
400இன் 30%ன் 25% =
25% = (\(\frac{30}{100}\) x 400)
= 25%(120)
= \(\frac{25}{100}\) x 120 = 30

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.1

கேள்வி 5.
₹300000 மதிப்புள்ள ஒரு மகிழுந்தை ₹200000 இக்கு விற்றால், அந்த மகிழுந்தின் விலைக்குறைப்புச் சதவீதத்தைக் காண்க.
தீர்வு:
அசல் விலை =₹3,00,000
விற்றவிலை =₹2,00,000
விலைக்குறைப்பு = வி.வி – அ.வி
= 3,00,000 – 2,00,000
= 1,00,000
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.1 1

கேள்வி 6.
ஒர் எண்ணின் 75% இக்கும் அதே எண்ணின் -GO%இக்கும் இடையேயுள்ள வித்தியாசம் 82.5 எனில், அந்த எண்ணின் 20% ஐக் காண்க.
தீர்வு:
அந்த எண் x என்க
\(\frac{75}{100} \times x-\frac{60}{100} \times x=\) = 82.5 100 – 100 |
\(\frac{75 x}{100}-\frac{60 x}{100}\) = 82.5
\(\frac{15 x}{100}\) = 82.5
15x = 82.5 x 100
15x = 8250
x = \(\frac{8250}{15}\)
x = 550
அந்த எண்ணின் 20%= 20% x x
= \(\frac{20}{100}\) x 550
= 2 x 55 = 110

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.1

கேள்வி 7.
ஓர் எண்ணை 18% அதிகரித்தால் 236 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க.
தீர்வு:
அந்த எண் x என்க
x + \(\frac{18}{100}\) x x = 236
x + \(\frac{18x}{100}\) = 236
\(\frac{100 x+18 x}{100}\) = 236
118 x = 236 x 100
x = \(\frac{23600}{118}\)
x = 200

கேள்வி 8.
ஓர் எண்ணை 20% குறைத்தால் 80 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க.
தீர்வு:
அந்த எண் x என்க
x – \(\frac{20}{100}\) x x = 80
\(\frac{100 x-20 x}{100}\) = 80
\(\frac{80 x}{100}\) = 80
x = \(\frac{80 \times 100}{80}\)
x = 100

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.1

கேள்வி 9.
ஒர் எண்ணானது 25% அதிகரிக்கப் பட்டப் பிறகு 20% குறைக்கப்படுகிறது எனில், அந்த எண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றத்தைக் காண்க.
தீர்வு:
அந்த எண் 100 என்க
25% அதிகரிக்கும் போது
புதிய எண் = 100 + 25% x 100
= 100 + 25 = 125
20% குறையும் போது
புதிய எண் = 125 – 20% x125
= 125 – 25 = 100
எனவே பெறப்பட்ட எண்கள் சமம்
100 = 100
எவ்வித மாற்றமும் இல்லை

கேள்வி 10.
ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 5:3 ஆகும். ஒரு தேர்வில் 16% மாணவர்களும் 8% மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்ச்சி பெற்ற மொத்த மாணவ, மாணவிகளின் சதவீதத்தைக் காண்க.
தீர்வு:
மாணவ மாணவிகளின் எண்ணிக்கை யை 5x மற்றும் 3x என்க.
தேர்ச்சி பெற்றவர்கள் = 84% மாணவர் + 92 % மாணவிகள்
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.1 2
= 87%

கொள்குறி வகை வினாக்கள்

கேள்வி 11.
250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் ……………………. இக்குச் சமமாகும்
அ) 10%
ஆ) 15%
இ) 20%
ஈ) 30%
விடை:
இ) 20%

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.1

கேள்வி 12.
ஒரு பள்ளித் தேர்தலில் A,B மற்றும் C ஆகிய மூன்று வேட்பாளர்கள் முறையே 153, 245 மற்றும் 102 வாக்குகளைப் பெற்றனர் எனில், வெற்றியாளர் பெற்ற வாக்குச் சதவீதம் ………………. ஆகும்.
அ) 48%
ஆ) 49%
இ) 50%
ஈ) 45%
விடை :
ஆ) 49%

கேள்வி 13.
10000 இன் 25% மதிப்பின் 15% என்பது ………………….. ஆகும்.
அ) 375
ஆ) 400
இ) 425
ஈ) 475
விடை :
அ) 375

கேள்வி 14.
ஓர் எண்ணின் 60% இலிருந்து 60 ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண் ………………….. ஆகும்.
அ) 60
ஆ) 100
இ) 150
ஈ) 200
விடை :
ஈ) 200

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.1

கேள்வி 15.
48இன் 48% = x இன் 64% எனில் X இன் மதிப்பு ……………………… ஆகும்.
அ) 64
ஆ) 56
இ) 42
ஈ) 36
விடை :
ஈ) 36