Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Maths Guide Pdf Chapter 1 எண்கள் Ex 1.5 Textbook Questions and Answers, Notes.
TN Board 8th Maths Solutions Chapter 1 எண்கள் Ex 1.5
கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
i) 73 இன் கனத்திலுள்ள ஒன்றுகளின் இலக்கம் ………………….. ஆகும்.
விடை:
7
ii) ஓர் ஈரிலக்க எண்ணின் கனத்தில் அதிகபட்சமாக ………………….. இலக்கங்கள் இருக்கும்
விடை :
6
iii) 3333 உடன் மிகச்சிறிய எண்ணான ………………….. ஐ கூட்டினால், அது ஒரு முழு கன எண்ணாகும்.
விடை:
42
iv) 540 × 50 இன் கன மூலம் ………………….. ஆகும்.
விடை :
90
v) 0.000004913 இன் கனமூலம் ………………….. ஆகும்.
விடை :
0.017
கேள்வி 2.
சரியா? தவறா? எனக் கூறுக:
i) 24 இன் கனமானது 4 என்ற இலக்கத்தில் முடியும்
விடை:
சரி
ii) 1729 இலிருந்து 103 ஐ கழித்தால் 93 கிடைக்கும்
விடை :
சரி
iii) 0.0012 இன் கனமானது 0.000001728 ஆகும்.
விடை :
தவறு
iv) 79570 என்ற எண்ணானது ஒரு முழு கன எண்ணல்ல
விடை :
சரி
v) 250047 இன் கன மூலமானது 63 ஆகும்.
விடை :
சரி
கேள்வி 3.
1944 ஒரு முழு கன எண்ண ல்ல என நிருபிக்க
தீர்வு :
1944 = 2 × 2 × 2 × 3 × 3 × 3 × 3 × 3
1944 ஐ பகா காரணிகளை
மூன்றின் தொதிகளாக பிரித்தால்
3 x 3 மட்டும் மீதமாக இருக்கும்
ஆகவே அதை முழு கன எண்ணாக
ஆக்க நமக்கு மேலும் ஒரு 3 தேவை
எனவே 1944 ஆனது முழு கன
எண்ணல்ல
கேள்வி 4.
10985 ஐ எந்த மிகச் சிறிய எண்ணால் வகுக்க, ஈவு ஆனது ஒரு முழு கன எண்ணாகும் எனக் காண்க.
தீர்வு :
10985 = 13 × 13 × 13 × 5
10985 ஐ 5 ஆல் வகுத்தால் முழு கன எண் கிடைக்கும்.
கேள்வி 5.
200 உடன் எந்த மிகச் சிறிய எண்ணைப் பெருக்க, ஒரு முழு கன எண் கிடைக்கும் எனக் காண்க.
தீர்வு :
200 = 2 × 2 × 2 × 5 × 5
200 ஐ முழு கன எண்ணாக்க ஒரு 5 தேவை.
மிகச்சிறிய எண் 5 ஆகும்.
கேள்வி 6.
24 × 36 × 80 × 25 இன் கனமூலம் காண்க.
தீர்வு :
= \(\sqrt[3]{24 \times 36 \times 80 \times 25}\)
= \(\sqrt[3]{2 \times 2 \times 2 \times 3 \times 3 \times 3 \times 2 \times 2 \times 2 \times 2 \times 2 \times 2 \times 5 \times 5 \times 5}\)
= 2 × 3 × 2 × 2 × 5
= 12 × 10
= 120
கேள்வி 7.
பகாக் காரணிப்படுத்தல் மூலம் 729 மற்றும் 6859 ஆகியவற்றின். கன மூலத்தைக் காண்க.
தீர்வு :
கேள்வி 8.
46656 இன் கனமூலத்தின் வர்க்க மூலம் என்ன ?
தீர்வு :
கேள்வி 9.
ஓர் வர்க்க எண்ணின் கனமானது 729 எனில், அந்த எண்ணின் வர்க்க மூலத்தைக் காண்க.
தீர்வு :
அந்த எண்
x என்க
(x2)3 = 729
x6 = 729
3 × 3 × 3 × 3 × 3 × 3
x6 = 36
x = 3
√3 = 1.732
கேள்வி 10.
எந்த இரு மிகச் சிறிய முழு வர்க்க எண்களைப் பெருக்கினால் ஒரு முழு கன எண் கிடைக்கும் எனக் காண்க.
தீர்வு :
1=12
4 = 22
9 = 32
16 = 42
25 = 52
22 × 42 = 4 × 16 = 64 = 43
∴ அந்த எண்கள் 4 மற்றும் 16.