Students can Download Tamil Chapter 2.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை …………..
அ) 40
ஆ) 42
இ) 44
ஈ) 46
Answer:
ஆ) 42

Question 2.
எழுதினான்’ என்பது ………………..
அ) பெயர்ப் பகுபதம்
ஆ) வினைப் பகுபதம் இ) பெயர்ப் பகாப்பதம்
ஈ) வினைப் பகாப்பதம்
Answer:
ஆ) வினைப் பகுபதம்

Question 3:
பெயர்ப்ப குபதம் ……………… வகைப்படும்.
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) ஏழு
Answer:
இ) ஆறு

Question 4.
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு ……………….
அ) பகுதி
ஆ) விகுதி
இ) இடைநிலை
ஈ) சந்தி
Answer:
இ) இடைநிலை

பொருத்துக

1. பெயர்ப் பகுபதம் – வாழ்ந்தான்
2. வினைப் பகுபதம் – மன்
3. இடைப் பகாப்பதம் – நனி
4. உரிப் பகாப்பதம் – பெரியார்
Answers:
1. பெயர்ப் பகுபதம் – பெரியார்
2. வினைப் பகுபதம் – வாழ்ந்தான்
3. இடைப் பகாப்பதம் – மன்
4. உரிப் பகாப்பதம் – நனி

சரியான பகுபத உறுப்பை எழுதுக
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் - 7

1. போவாள் – போ + வ் + ஆள்
போ – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆள் – படர்க்கைப் பெண்பால் வினைமுற்று விகுதி

2. நடக்கின்றான் – நட + க் + கின்று + ஆன்
நட – பகுதி
க் – சந்தி
கின்று – நிகழ்கால இடைநிலை
ஆன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி

பின்வரும் சொற்களைப் பிரித்துப் பகுபத உறுப்புகளை எழுதுக

1. பார்த்தான் – பார் + த் + த் + ஆன்
பார் – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
ஆன்- படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி

2. பாடுவார் – பாடு + வ் + ஆர்
பாடு – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆர் – படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி

குறுவினா

Question 1.
ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன?
Answer:
(i) ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தரும் சொல்லாக அமைவதே ஓரெழுத்து ஒரு மொழி ஆகும்.
(ii) எ.கா. (தீ, நீ, வா, போ).

Question 2.
பதத்தின் இரு வகைகள் யாவை?
Answer:
பதம் இரண்டு வகைப்படும். அவை, பகுபதம், பகாப்பதம்.

Question 3.
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
Answer:
அவை யாவை? பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை, பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.

சிறுவினா

Question 1.
விகுதி எவற்றைக் காட்டும்?
Answer:
சொல்லின் இறுதியில் நிற்கும் உறுப்பே விகுதி ஆகும். இது திணை, பால், எண், இடம்,
முற்று, எச்சம் போன்றவற்றைக் காட்டும். (எ.கா.) படித்தான் = ஆன் – விகுதி

Question 2.
விகாரம் என்பது யாது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை இவற்றில் ஏற்படும் மாற்றமே விகாரம் எனப்படும்.
(எ. கா.) வந்தான் = வா – பகுதி வா ‘வ’ எனக் குறுகியது விகாரம்.

Question 3.
பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
பெயர்ப் பகுபதம் ஆறு வகைப்படும். அவை
(i) பொருள் – பொன்னன் (பொன் + அன்)
(ii) இடம் – நாடன் (நாடு + அன்)
(iii) காலம் சித்திரையான் (சித்திரை + ஆன்)
(iv) சினை கண்ண ன் (கண் + அன்)
(v) பண்பு இனியன் (இனிமை + அன்)
(vi) தொழில் – உழவன் (உழவு + அன்)

கற்பவை கற்றபின்

Question 1.
பாடப்பகுதியில் இடம்பெற்ற சொற்களில் பகுபதம், பகாப்பதம் ஆகியவற்றைக் கண்டறிந்து தனித்தனியே தொகுக்க.
Answer:
பகுபதம்
பெயர்ப்பகுபதம் :
பொருள் – பொன்னன் (பொன் + அன்)
இடம் – நாடன் (நாடு + அன்)
காலம் – சித்திரையான் (சித்திரை + ஆன்)
சினை – கண்ண ன் (கண் + அன் )
பண்பு – இனியன் (இனிமை + அன்)
தொழில் – உழவன் (உழவு + அன்)
வினைப்பகுபதம் : உண்கின்றான் – உண் + கின்று + ஆன்

பகாப்பதம் :
பெயர்ப் பகாப்பதம் – நிலம், நீர், நெருப்பு, காற்று
வினைப் பகாப்பதம் – நட, வா, படி, வாழ்.
இடைப் பகாப்பதம் – மன், கொல், தில், போல்
உரிப் பகாப்பதம் – உறு, தவ, நனி, கழி.

Question 2.
உங்கள் வகுப்பு மாணவ – மாணவிகளின் பெயர்களைப் பகுபதம், பகாப்பதம் என வகைப்படுத்துக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

Question 1.
தே என்பதன் பொருள் ………….. எனப்படும்.
Answer:
கடவுள்

Question 2.
நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியர் ………….
Answer:
பவணந்தி முனிவர்

ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் - 1

மொழியை ஆள்வோம்

கேட்க.

Question 1.
சிறந்த கல்வியாளர்களின் சொற்பொழிவுகளை இணையத்தில் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக

Question 1.
கல்வியின் சிறப்பு
Answer:
அனைவருக்கும் வணக்கம்!
நான் கல்வியின் சிறப்பு என்ற தலைப்பில் பேசவிருக்கிறேன். இன்றைய உலகின் தே இன்றியமையாத ஒன்றாகத் திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். அனைவருக்கும் பகுத்தறிவு தேவைப்படுகிறது. அவர்களுக்குப் பகுத்தறியும் சக்தியைக் கொடுப்பதே கல்வியின் சிறப்பாகும்.

கல்வியின் சிறப்பு என்றாலே கல்வி கற்றவன் எங்குச் சென்றாலும் சிறப்பிக்கப்படுபவன் – என்பதே நினைவுக்கு வரும். அவனுக்கு எல்லா நாட்டினரும் உறவினர்கள் ஆவார்கள். எல்லா நாடும் சொந்த நாடாகும். கல்வி கற்கவில்லையெனில் வாழ்நாள் முழுவதும் அனைவராலும் அவமதிக்கப்படுவான். இதனையே வள்ளுவர்.

“யாதானும் நாடாமல் ஊர்ஆமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு. என்று கூறுகிறார்.
அதுமட்டுமா? கற்றவரைக் கண்ணுடையார்’ என்றும் கல்லாதவரை முகத்தில் இரண்டு புண்ணுடையவர் என்றும் இடித்துரைக்கிறார் வள்ளுவர்.

கற்றோர்க்கு அணிகலன் கல்வியே; கற்றோரே கண்ணுடையவர்; கற்றாரே தேவர் எனப் போற்றப்படத்தக்கவர்; கற்றோரே மேலானவர் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
“கல்வி வந்தது எனில் கடைத்தேறிற்று உலகே!” என்று புரட்சிக்கவி கூறுகின்றார். கல்வியால் எல்லா வளங்களும் கிடைக்கும் என்பதே இதன் பொருளாகும்.

கல்வி உடையவர் எல்லா மக்களிடமும், நன்றாக பழகிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்வதையே விரும்புவர்.

மனிதன் வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகின்றான். கல்வி என்னும் விளக்கால் வாழ்க்கையில் எதிர்ப்படும் இருள்களையெல்லாம் நீக்க முடியும். கல்வி போல மனப்பயத்தைப் போக்கும் மருந்து வேறொன்றுமில்லை. கல்வித் துணை வறுமையில் கை கொடுக்கும். கல்வியின் பயனே மனித வாழ்வின் பெரும்பேறாகும்.

கல்வி, தொழிலுக்கு வழி காட்டும். கல்வி என்பது வாழ்வதற்கு உதவும் கருவியாகும். வாழ்க்கையின் வெற்றிக்குக் கல்வி மிகவும் இன்றியமையாததாகிறது. வாழ்க்கையை நெறிப்படுத்தவும் மேம்படுத்தவும் கல்வி பயன்படுகிறது. கல்வி கற்ற பண்பு, நீதி, நேர்மை இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்படும்.

கல்வியினால் மட்டுமே உலக அறிவினை வளர்த்துக் கொள்ள முடியும். உலகை முழுமையாகப் படிக்கவும் முடியும். கல்வி மனிதனுக்கு ஓர் உன்னதமான தேவையாகும்”
“கற்கை நன்றே! கற்றை நன்றே! பிச்சைப் புகினும் கற்கை நன்றே!” என்ற கூற்றினை மனதில் நிறுத்தி அள்ள அள்ளக் குறையாதக் கல்வியை அள்ளிப் பருகுவோம்.
கல்வி என்பது பலமே !
கற்றல் என்பது சுகமே!

Question 2.
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு
Answer:
ஒரு குழந்தை கூலிக்காக வேலை பார்ப்பது மிகவும் தவறு. இளமைக் காலம் கல்வி கற்பதற்கே. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலை உருவாக வேண்டும்.
பள்ளி செல்லாத குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர் ஆகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க; வேலைவாய்ப்புக்காக இடம்பெயர்ந்து மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் என்று செல்கின்றனர். இவ்விரண்டு நிலைகளில் ஒரு சிலர் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து வேலை செய்வார்கள் அல்லது தனியாகச் செல்வார்கள்.

மூன்றாவது நிலையில் உள்ளவர்கள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள். கொத்தடிமை முறையில் வேலைக்குச் செல்கிறார்கள். பெற்றோர் வாங்கிய கடனை ஈடுகட்டுவதற்காக பிள்ளைகள் வேலைக்குச் செல்கிறார்கள்.

குழந்தைத் தொழிலாளர்கள் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள். உளவியல் ரீதியான பாதிப்பு, உணர்வு மற்றும் சமூக ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது.

கொடிய வறுமை, ஊட்டச்சத்துக் குறைவு, கல்வியறிவு பெற முடியாத நிலை, உடல் நலனைப் பாதிக்கக் கூடிய ஆபத்தான சூழல், காற்றோட்டம் இல்லாத குறுகிய அறை போன்றவை குழந்தைகளின் உடல் நலனைப் பெரிதும் பாதிப்பதால் ஆஸ்துமா, காசநோய் போன்ற நோய்கள் தாக்குகிறது. இதனைத் தடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தலாம்.

சொல்லக் கேட்டு எழுதுக

1. இளமைப் பருவத்திலேயே கல்வி கற்க வேண்டும்.
2. கல்வியே அழியாத செல்வம்.
3. கல்வி இல்லாத நாடு விளக்கு இல்லாத வீடு.
4. பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்.
5. நூல்களை ஆராய்ந்து ஆழ்ந்து படிக்க வேண்டும்.

கீழ்க்காணும் சொற்களை அறுவகைப் பெயர்களாக வகைப்படுத்துக

நல்லூர், வடை, கேட்டல், முகம், அன்னம், செம்மை, காலை, வருதல், தோகை, பாரதிதாசன், பள்ளி, இறக்கை, பெரியது, சோலை, ஐந்து மணி, விளையாட்டு, புதன்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் - 8
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் - 2

அறிந்து பயன்படுத்துவோம்

மூவிடம் :

இடம் மூன்று வகைப்படும். அவை 1. தன்மை, 2. முன்னிலை, 3. படர்க்கை
தன்னைக் குறிப்பது தன்மை.
(எ.கா.) நான், நாம், நாங்கள், என், எம், எங்கள்.
முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை.
(எ.கா.) நீ , நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள்.
தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது – படர்க்கை .
(எ.கா.) அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, இவன், இவள், இவை.

சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக

(அது, நீ, அவர்கள், அவைகள், அவை, நாம், உன்)

Question 1.
……… பெயர் என்ன ?
Answer:
உன்

Question 2.
ஏழாம் வகுப்பு மாணவர்கள்.
Answer:
நாம்

Question 3.
………….. எப்படி ஓடும்?
Answer:
அது

Question 4.
………………என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
Answer:
நீ

Question 5.
…. வந்து கொண்டு இருக்கிறார்கள்.
Answer:
அவர்கள்

பின்வரும் தொடர்களில் மூவிடப் பெயர்களை அடிக்கோடிடுக. அவற்றை வகைப்படுத்துக.

1. எங்கள் வீட்டு நாய்க்குட்டி ஓடியது.
2. இவர்தான் உங்கள் ஆசிரியர்.
3. நீர் கூறுவது எனக்குப் புரியவில்லை
4. எனக்கு, அது வந்ததா என்று தெரியவில்லை , நீயே கூறு.
5. உங்களோடு நானும் உணவு உண்ணலாமா?
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் - 9
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் - 3

கடிதம் எழுதுக

உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத் தர வேண்டி நூலக ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர் :
ஊர்ப் பொதுமக்கள்,
மறைமலை நகர்,
காஞ்சிபுரம் மாவட்டம்

பெறுநர் :
நூலக ஆணையர்,
பொதுநூலகத் துறை,
சென்னை – 600 002.

மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : நூலகம் அமைத்துத் தர வேண்டுதல் தொடர்பாக

எங்கள் ஊர் மறைமலைநகர். இங்கு இரண்டாயிரம் பேருக்கு மேல் வாழ்கிறோம். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுக்குப் படிக்கும் இளைஞர்கள், அன்றாடச் செய்தியை அறிந்து கொள்ளும் ஆர்வலர், பணி ஓய்வு பெற்றவர்கள் எனப் பலரும் உள்ளனர்.

அவரவர்களுக்குத் தேவையான நூல்கள், செய்தித்தாள்கள், இதழ்கள் போன்றவை இங்குக் கிடைப்பதற்கரிதாக உள்ளது. இவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நூலகம் ஒன்றை எங்கள் ஊரில் அமைத்துத்தர ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி!
இடம் : மறைமலை நகர்,
தேதி : 5-2-2020

இப்படிக்கு ,
தங்கள் உண்மையுள்ள,
ஊர்ப் பொதுமக்கள்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் - 4

மொழியோடு விளையாடு

கீழே உள்ள குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டத்தில் எழுத்துகளை நிரப்புக.
1. காலையில் பள்ளி மணி……………………
2. திரைப்படங்களில் விலங்குகள் ……………………… காட்சி குழந்ை தகளுக்குப் பிடிக்கும்.
3. கதிரவன் காலையில் கிழக்கே ………………
4. நாள்தோறும் செய்தித்தாள் ………………. வழக்கம் இருக்க வேண்டும்.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் - 10
Answer:

1. காலையில் பள்ளி மணி அடிக்கும்.
2. திரைப்படங்களில் விலங்குகள் நடிக்கும் காட்சி குழந்ை தகளுக்குப் பிடிக்கும்.
3. கதிரவன் காலையில் கிழக்கே உதிக்கும்.
4. நாள்தோறும் செய்தித்தாள் படிக்கும் வழக்கம் இருக்க வேண்டும்.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் - 5

ஓர் எழுத்துச் சொற்களால் நிரப்புக

Question 1.
…………………… புல்லை மேயும்.
Answer:

Question 2.
……………………… சுடும்.
Answer:
தீ

Question 3.
……………….. பேசும்.
Answer:
நா

Question 4.
…………………… பறக்கும்.
Answer:

Question 5.
…………….. மணம் வீசும்
Answer:
பூ

பின்வரும் எழுத்துகளுக்குப் பொருள் எழுதுக

(எ.கா.) தா – கொடு
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் - 11
Answer:

1. தீ – நெருப்பு
2. பா – பாடல்
3. தை – தை மாதம்
4. வை – புல், வைக்கோல்
5. மை – அஞ்சனம்

பின்வரும் சொற்களை இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக

(ஆறு, விளக்கு, படி, சொல், கல், மாலை, இடி)
(எ.கா.) ஆறு – ஈ ஆறு கால்களை உடையது.
தஞ்சாவூரில் காவிரி ஆறு பாய்கிறது.

விளக்கு : இலக்கணப் பாடத்தை விளக்கிக் கூறு.
அறியாமை என்னும் இருளைப் போக்குவது கல்வி என்னும் விளக்கு.

படி : காலையில் தினமும் படி.
மாடிப்படி ஏறி வா.

சொல் : சொற்கள் சேர்ந்தால் பாமாலை.
பெரியோர் சொல் கேட்டு சிறியோர் நடக்க வேண்டும்.

கல் : கற்களால் ஆனது கோபுரம்.
இளமையில் கல்.

மாலை : நேற்று மாலை பூங்காவிற்குச் சென்றேன்.
பூ மாலை நல்ல மணம் வீசியது.

இடி இடிக்கும் சப்தம் கேட்டது.
தவறுகளைக் கண்டால் இடித்துரைத்தல் வேண்டும்.

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்

  1. பாடப்புத்தகங்கள் மட்டுமன்றிப் பிற புத்தகங்களையும் படிப்பேன்.
  2. பெற்றோர், ஆசிரியர், மூத்தோர் இவர்களை எப்போதும் மதித்து நடப்பேன்.

கலைச்சொல் அறிவோம்Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் - 6